வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

31.12.10

கனவுக்கன்னி - தொடர் பதிவு

                இந்த வருடத்தின்  எனது கடைசி பதிவு .ப்ளாக் தொடங்கி ஐந்து மாதங்கள் கூட ஆகவில்லை . ஏதோ போனா போகட்டும்னு என்னையும் ஒரு பதிவராக ஏற்றமைக்கு நன்றி .இந்த கனவு கன்னி -தொடர் பதிவு ஒரு பிரபல " ஜொள்ளு -லொள்ளு" பதிவர் அழைப்பிற்கிணங்க எழுதப்படுகிறது ( ஒரு ஒன்னும் தெரியாத அப்பாவி பையன   என்னலாம் எழுத சொல்றாங்கனு பாருங்க ) முதல இந்த தொடர் பதிவ கண்டுபிடிச்சது யாருப்பா ?
                இந்த வருடத்தில் வந்த படங்களில் நடித்த நடிகைகளில் சிறந்த நடிப்பிற்க்காக (மனம் : ஒ நீங்க நடிப்பையெல்லாம் ரசிப்பீங்களோ ) என்னுடைய தெரிவாக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்கள் என்பதை கூறி கொள்வதில் பெருமை அடைகிறேன்


5 .அஞ்சலி :
                 
 அங்காடி தெரு படத்தில் அருமையாக நடித்திருப்பார் .மகிழ்ச்சி படத்தில் கிளு குளு பாட்டு ஒன்று வருவதாக சொல்கிறார்கள் பார்க்கவில்லை ( அட நம்புங்கப்பா ).அப்பறம்  பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்காங்க . இவருடைய சம்பளத்தை வைத்து வரும் வருடத்தில் படாதிபதிகள் இவருடைய எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள்
4 . சமந்தா :
 இவர்தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கடைசி காட்சியில் வருகிறார்என்று இந்த பதிவை எழுத அழைத்தாரே அவருடைய பதிவில் படித்துதான் தெரிந்துகொண்டேன் .(உண்மைய்லே நான் அப்பாவி பையன்னு தெரிஞ்சுதா ). மாஸ்கோவில் காவேரி மண்ணை கவ்வினாலும் .நம்ம முரளி சார் பையன் கூட நடிச்ச படம் ஏதோ கொஞ்சம் நல்ல பெயர் வாங்கி குடுத்திருக்கும்னு  நினைக்கிறேன் .வரும் வருடம் சமந்தாவிற்கு சமத்தான வருடமாக இருக்கும் என நம்புவோமாக


3 . ஓவியா :
 இவருடைய உண்மையான பெயர் ஹெலனாம் . அந்த பெயரில் பழைய ஹிந்தி நடிகை ஒருத்தவுங்க இருந்திருக்காங்க அந்த காலத்து குத்தாட்ட நடிகைன்னு கூகிள் இமேஜ் சொல்லுது  . இவுங்க கிட்ட அந்த மாதிரி எல்லாம் யாரும் எதிர்ப்பாக்க கூடாது . அந்த மாதரியான பேஸ் கட்டும் இவுங்ககிட்ட இல்லை . களவாணி படத்தில் நடித்து என் மனத்தை களவாடி சென்றவர் என்ற எதிர்ப்பார்ப்புடன் மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளார் என்று கேள்வி பட்டு போனேன் ( அட பாவிகளா உங்களுக்கு வேற நடிகையே கிடைக்கலையா )

 2 . சுனைனா :
            வம்சத்துள்ள அம்சமா நடிச்சிருக்காங்க எல்லோரும் சொல்றாங்க . ஆனா என்னவோ நமக்கு அந்த படமே புடிக்கல . முகத்தில் தெலுங்கு வாடை அடித்தாலும் அவ்வப்போது தமிழில் நடிப்பார் என்று எதிர்ப்பார்ப்போம்


 1 . ஜெனிலியா :


            ஒரு க்யுட்டான நடிகைனா அது இவுங்கலாதான் இருக்கா முடியும்  அட அட சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் என்னமா நடிச்சிருப்பாங்க . பெண்கள் சிலபேருக்கு இந்த பொண்ணு  என்ன லூசு மாதிரி நடிக்குதுனு  நினைப்பாம் . நினைச்சுட்டு போங்க .
நம்ம சுள்ளான் நடிகர் கூட நடிச்ச படம் சரியா போகலைனாலும் அம்மணி நம்ம டாக்டரு விஜய் படத்ல கலக்கு வாங்கனு நம்புவோமாக

 இனி வர்ற லிஸ்ட் எனக்கு ரெம்ப புடுச்சவங்க 


ஸ்ருதி :




   உன்னைப்போல் ஒருவனில் நாணநானனு  பாடுவாங்களே  அப்படியே ஒடனே  அவுங்களுக்கு நான் ரசிகன் ஆகிட்டேங்க .இவுங்க நடிப்பில் வரும் வருடத்தில் வரவுள்ள சூர்யா உடனான படத்திற்கு  கண்டிப்பா ஒபெனிங் ஷோ போய்டணும் . ஆள் நல்ல அழகுங்க ( கமல் ரசிகர்கள் மன்னிப்பார்களாக )

இலியானா:


                                             

ஒரே ஒரு தமிழ் படத்தில மட்டும் நடிச்சிருக்காங்க .வரும்  வருடத்திலாவுது தமிழ் படத்தில் தரிசனம் தருவார்களா
.இப்படிக்கு -பொறுமையுடன் காத்திருக்கும் உங்கள் ரசிகன்.

           அழகு என்பது நாம் பார்க்கும் பார்வையில்தான் உள்ளது என்று கூறி இந்த வரலாற்று பதிவை இத்துடன் முடித்து கொள்கிறேன் .


இந்த பதிவை படித்து விட்டு கமெண்ட் போடுபவர்களுக்கு ,கமென்ட் போடாமல் போகிறவர்களுக்கு ,ஒட்டு போடு பவர்களுக்கு  மற்றும் ஒட்டு போடாமல்  போகிறவர்களுக்கு எனது

                                       
                                
                 
                       " இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் " 













                                                                  






                                           

  



Read More

26.12.10

பொற்கைப்பாண்டியன்

முதலாம்    பாகம் : இரண்டாம் ஜாமம்
இரண்டாம் பாகம் : விடிந்த பொழுது

முற்பகல் நேரம் . ஆயிரம் யானைகள் ஒன்று கூடி வந்து மோதினாலும் ஒன்றும் ஆகாத கோட்டை மதில் சுவற்றில் பூனை ஒன்று அமர்ந்திருந்தது .அரண்மனையில்  உள்ள அரசவை கூடத்தில்  அரசவை கூட  போவதற்கான அறிவிப்பு அறிவிக்க பட்டது .

   ஆன்றோர்களும் , சான்றோர்களும்  , புலவர்களும் நிறைந்த சபையில் மாமன்னர் கடுங்கோன் பாண்டியர் நடுநாயகமாக தன்னுடைய ஆசனத்தில் கம்பீரமாக வீற்றுந்தார்  .
ஒவ்வொரு கோட்ட தலைவர்களும் தாங்கள் மக்களிடமிருந்து பெற்ற நிறை குறைகளை அரசரிடம் கூறி கொண்டிருந்தனர்

அப்பொழுது வேகமாக வாயிற் காப்போன் அரசவைக்குள் வந்தான் . நேராக அரசிடம் சென்று தாழ் பணிந்து வணங்கி

" மன்னர் மன்னா வணிகர் தெருமக்கள் எல்லோரும் ஒன்று கூடி ஒருவனை கட்டி இழுத்து வந்திருக்கின்றனர் .தங்களை பார்க்க வேண்டுகின்றனர் "

" எதற்க்காக அவனை கட்டி இழுத்து வந்திருக்கின்றனர் " பிறகு

" சரி அனைவரையும் உள்ளே அனுமதி " அரசர்

  அந்த தெருவில் வசிக்கும் மக்கள் எல்லோரும்  ஒன்று திரண்டு வந்திருப்பார்கள் போல .ஆண்களுக்கு நிகராக பெண்களும் சரிசமமாக இருந்தனர் .அந்த கூட்டத்தில் ஒருவன் மட்டும்  கூட்டத்தினரையும் ,அரசரையும் மலங்க மலங்க விழித்து  பார்த்துகொண்டிருந்தான் . அவனுடைய உடல் முழுவதும் புழுதி படிந்திருந்தது கைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து கயிற்றினால் கட்ட பட்டிருந்தன . எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அரசருக்கு வாழ்த்தொலிகளும் வணக்கங்களையும் கூறினர்.

அரசர் கையை தூக்கி வாழ்த்தொலிகளையும் அவர்களின் வணக்கங்களை  ஏற்றார் . பிறகு என்ன பிரச்சனை என்று கேட்டார் .
கூட்டத்தில் இருந்து ஒருவன் முன்னே வந்தான்
கூட்டத்தில் கைகள் கட்ட பட்டிருந்தவனை சுட்டி காட்டி
" அரசே இவன் நேற்று இரவு எங்கள் தெருவில் பூட்டி இருந்த ஒரு வீட்டு திண்ணையில் படுத்திருந்தான் .நேற்று இரவு எல்லோருடைய வீட்டு கதவும் பட பட வென்று  தட்ட பட்டது. அந்த செயலை செய்தது இவனாகத்தான் இருக்க வேண்டும் .கேட்டால் தான் ஒரு ஊமைஎன்பது போல்  நடிக்கிறான் .அடித்தும் கேட்டு பார்த்து விட்டோம் பதிலே கூறுகிறான் இல்லை .ஒரு வேளை இவன் ஒற்றறிய வந்தவனாக இருக்கலாம் என் சந்தேகிக்கிறோம் .அதனால் தான் இவனை தங்களிடம் இழுத்து வந்தோம் .

அரசர் அவனை பார்த்தார்
" நீ யார் ? எந்த நாட்டை சேர்ந்தவன்? எதற்கு இங்கு வந்தாய் "

அதற்கு அவன்
" பே பா பே பே " என்று கூறி கட்ட பட்ட கைகளை வாய்க்கருகே கொண்டு செல்ல முடியாமல் திணறினான்

" நடிக்கிறான் அரசே நடிக்கிறான் " கூட்டதில்லிருந்து ஒருவன் கூறினான்

" இங்கு பார் உண்மையை ஒத்துகொண்டால் தண்டனைகள் குறைய வாய்பிருக்கிறது " என்றார் அரசர்
அதற்கும் அவன்  " பே பே " என்றான்
" என்ன நெஞ்சழுத்தம் உனக்கு , அரசே  கட்டளை இடுங்கள்  நம் மக்களின் வீடுகளை தட்டி தூக்கத்தை கெடுத்த இவன் கைகையும் அதற்க்கும் மேலாக தாங்கள் கேட்டும் பதில் உரைக்காமல் இருப்பதற்கு இவனுடைய தலையையும் வெட்டு வதற்கு ஆணை இடுங்கள் மன்னா " என்று தளபதியார் வாளை உருவினார் 
அதை வழி மொழிவதுபோல்
கூட்டத்தில் இருந்த அனைவரும் இவன் கைகளை வெட்ட வேண்டும் என்று ஒன்றாக கூறினர்

அரசர் " இதற்கு மேல் பொறுக்க முடியாது நீ எந்த நாட்டை சேர்ந்தவன் என்றாவது கூறு என் சினத்திற்கு ஆளாகாதே  "

அரசவை மொத்தமும் அவனை பார்த்து கொண்டிருந்தது அப்பொழுதும் அவன் கைகளை கஷ்ட்ட பட்டு உயர்த்தி தான் ஒரு ஊமை என்றும்
கூட்டத்தினரை சுட்டி காட்டி இவர்கள் கூறுவதற்கும் தனக்கும் யாதொரு சம்பந்தம் இல்லை என்பது போல்  கைகளால் செய்கை செய்து அனைவருக்கும் புரியவைக்க முயற்ச்சித்தான்

" அரசே இவன் நடிப்பது நன்றாக தெரிகிறது, இவன் கண்டிப்பாக ஒற்றறிய வந்தவனாக இருக்க வேண்டும் ,மாட்டி கொண்டதால் இவன் இவ்வாறு நடிக்க வேண்டும் " என்றார் தளபதி
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவன்
" ஆம் இவன் நடிக்கிறான்  இந்த வேசிமகனை கொல்லுங்கள் " என்றான்
அரசர் சிறிது நேரம் அவனையே பார்த்தார் .பின்பு தளபதியிடம்

" முதலில் அவன் கையை வெட்டுங்கள் " என்றார்

வீரர்கள் அவனை கூட்டத்திலிருந்து தனியே இழுத்து வந்தனர் .வீரர்கள் அவனுடைய கட்ட பட்ட கைகளை அவ்வாறே தூக்கி பிடிக்க .தளபதியார் தன்னுடைய வாளை அவனுடைய கைகளை நோக்கி இரக்க. அப்போது இன்னொரு வாள் ஒன்று அவனுடைய கைகளுக்கு அரணாக வந்து அவ்வாளை தடுத்தது .தளபதி நிமிர்ந்து பார்க்கிறார்

அது இளவரசன் மணிவண்ணனுடைய வாள்


எதிரே இளவரசன் மணிவண்ணன் நிற்கிறான் .
"நிறுத்துங்கள்  தளபதியாரே ஒரு அப்பாவி மனிதனை அதுவும் வாய் பேசமுடியாதவனை கொல்லுவது உங்களுடைய வீரத்துக்கு இழுக்கு "  தொடர்கிறான்
"மக்களே உங்களில் ஒருவன் அவனுடைய தாயை பற்றி விமர்சித்த பொழுதும் அந்த மனிதனுக்கு கோபம்  வந்திருக்க வேண்டும் அவன் நடிக்கிறான் என்றால்  அப்பொழுது இயல்பாகவே அவன் வாய் பேசி இருக்கும் ஆனால்  அவன் பேசவே இல்லையே இது போதாதா அவன் உண்மையிலேயே  ஊமை என்று உணர்வதற்கு . "

கூட்டம் தலை குனிய 
"மக்களே

இப்பொழுது தங்களுக்கு என்ன வேண்டும்  உங்கள் அனைவரின் வீட்டையும் இரவினில்  தட்டியவனின் கைகள் வெட்ட பட வேண்டும் அவ்வளவுதானே "


 என்று கூறி  வலது கைகளில் இருக்கும் வாளினால் ஓங்கி தன்னுடைய இடது கையினை தானே வெட்டி கொள்கிறான்

....... சதக் .,        ரத்தம் தெறிக்க ,
 மக்கள் வியக்க ,  தளபதி திகைக்க , அவையில் உள்ள மொத்த கூட்டமும் எழ ,

மன்னர் கடுங்கோன் பாண்டியர் இளவரசனை நோக்கி  ஓடிவர


" மகனே மணிவண்ணா நாஆஆஆஆஆஅ "


இளவரசன் மணிவண்ணணை அரசர் தாங்கி பிடிக்கிறார்
" என்ன காரியம் செய்தாய் மகனே உன் தாய்க்கு என்ன பதில் கூறுவேன் "

" தந்தையே நீதி வலுவாத  தங்களுடைய ஆட்சியில் நீதிக்கு பங்கமெனில் அதற்காக என் தலையை கொடுக்க கூட தயங்க மாட்டேன் , வெறும் கைதானே "

" அது மட்டும் அல்லாமல் அந்த தவறை செய்தவன் நான்தான் தந்தையே  ,நீங்கள் அன்று அதிகாலை கூறுனீர்கள் அல்லவா தினமும் இரவு மாறு வேடத்தில் நகர் வலம் செல் முக்கியமாக வணிகர் தெருவில் உள்ள  ஒரு வீட்டை கண்காணிக்க தவறாதே .நானும் தினமும் இரவு கண்காணித்தேன் நேற்று இரவு அந்த வீட்டில் ஒரு ஆடவனுடைய சத்தம் கேட்டது அவளுடைய கணவன் இல்லாத சமயம் பார்த்து எவனோ ஒருவன் உள்ளே புகுந்து விட்டான் போல என்று நினைத்து அவ்வீட்டின் கதவை  தட்டினேன் .பிறகு அப்பெண்ணின் குரலை வைத்து வந்திருப்பது அவள் கணவன் என்றும் இப்பொழுதான் வந்தான் என்றும்  தெரிந்து கொண்டேன் . இந்த சமயத்தில்   நான் வேறு கதவை தட்டி இருப்பதால் அக்கணவன் அப்பெண்ணின் நடத்தையில் சந்தேகிக்கலாம் .அதனால் தான் அத்தெருவினில் உள்ள அனைத்து வீட்டின் கதவையும் தட்டி விட்டு புரவியில் ஏறி புயலென வந்துவிட்டேன்  ."

நீதிக்காக உயிரை விடுபவர்கள் அல்லவா  நாம். நான் செய்த செயல் தவறே இல்லைதானே தந்தையே"


" தவறு இல்லை மகனே தவறு இல்லை " என்று கண்ணீர் வடித்தார்  அரசர். வைத்தியர் வர , அவையோர் களைய ,மக்கள் விடைபெற நாமும் விடைபெறுவோம்


பின்னாளில் பொன்னாலான கை ஒன்றை செய்து அதை மாட்டி கொண்டு நீதி தவறாது ஆட்சி புரிந்து   ' பொற்கைப்பாண்டியன் ' என பெயர் பெற்றார்


 பின்னுரை : பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 முதல் 120 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி  தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான். அவன் ஆட்சியில் இரவினில் நகர் வலம்   செல்லும் பொழுது நடந்த ஒரு தவற்றுக்காக .தன் கையை தானே வெட்டி கொண்டு பொற்கை ஒன்று வைத்து கொள்கிறான் .அவ்வரலாறு என்னை கவர்ந்ததால் அது குறித்த என்னுடைய கற்பனை சிலந்தியின் வலை பின்னலே இக்கதை .பிழைகள் படிப்பவர் கண்களுக்கு நிறைய தென்பட்டிருக்கலாம் .பொறுத்தாள்க . பெயர்கள் முழுவதும் கற்பனையே .இந்த கதைக்கும் கண்ணகி சிலைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை . நீதி என்ற சொல்லுக்காக பயன் படுத்தப்பட்டுள்ளது.வெகுநாட்களாக ஒரு சரித்திர கதை எழுத வேண்டும் என்று ஆசை

             
Read More

24.12.10

விடிந்த பொழுது

        முதலாம் பாகம் : இரண்டாம் ஜாமம்

.அதிகாலை நேரம் . அரசர்க்கரசர் கடுங்கோன்பாண்டியர்  அரண்மனையின் மேன்மாடத்தில் நின்று கொண்டிருந்தார் .மதுரை மாநகரத்தின் மொத்த எழிலும் அந்த மாநகரத்தின் மத்தியில் உள்ள அன்னை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களும்  அழகாக தெரிந்தன .அப்படியேஇரண்டு கைகளையும் உயரே தூக்கி
                                      

" தாயே என் நாட்டு மக்கள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்றென்றும் பாத்திரமானவனாக இருப்பதற்கு நல்ல மனத்தை  கொடு " என்ற போது

ஒரு பணியாளன் பணிந்து வருகிறான்
அரசர் என்ன என்பது போல் திரும்பி பார்க்கிறார்
"மன்னர்மன்னா தங்களை காண அமைச்சர் வரதராஜேந்திரர்  வந்திருக்கிறார் "

" வரச்சொல் "

அரசர் ஆசனத்தில் அமர்கிறார்

" வாரும் அமைச்சரே என்ன இது அதிகாலை தரிசனம் தருகிறீர்கள் " பாண்டியர்

" மன்னருக்கு என்னுடைய இனிய காலை வணக்கங்கள் ஆனாலும்  இந்த அதிகாலை வேளையில் தங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி கூற வந்துள்ள அபாக்கியசாலியானேன்"

" பீடிகை பலமாக உள்ளதே அப்படி என்ன செய்தி அமைச்சரே " என்கிறார் அரசர்

"நமது ஒற்றர் படைத்தலைவர் சமுத்திரசிங்கம் செய்தி அனுப்பி உள்ளார் "

" என்னவென்று "

" களப்பிரர்கள் படைதிரட்டி கொண்டிருக்கிறார்களாம் அவர்களுடைய குறி சோழநாடாகவும் அல்லது நாமாகவும் இருக்கலாம் என்கிறது செய்தி "

"வெறும் யூக மாகத்தானே  கூறி இருக்கிறார் "

" இல்லை மன்னா இதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது .வடக்கில் அவர்கள் பல குறுநில மன்னர்களுடன் போரிட்டுஅந்நாடுகளை எல்லாம்  தங்கள் ராஜ்யங்களுக்கு உட்பட்டதாக   மாற்றி திறை பெற்று கொண்டிருக்கிறார்கள் "

அரசர் சிந்தனையில் ஆள்கிறார்
" சரி அமைச்சரே இன்று இரவே தளபதியாரையும் அனைத்து கோட்ட தலைவர்களையும் அழைத்து மந்திர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் "

" அப்படியே ஆகட்டும் மன்னா "
               அமைச்சர் வரத ராஜேந்திரர்  எழுந்து செல்கிறார்
உப்பரிகையில் செல்லும் பொழுது எதிரே இளவரசர் மணிவண்ணன் வருகிறான் .
" அமைச்சருக்கு என்னுடைய வணக்கம் "

நிமிர்ந்து பார்க்கிறார் அப்படியே இளமையில் கடுங்கோன் பாண்டியர் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறானே இந்த இளைஞன்  என எண்ணுகிறார்
" என்ன அமைச்சர் பெருமானே  இப்பொழுதுதான் என்னை புதியதாய் பார்ப்பது போல் பார்க்கிறீரே "

" இளவரசருக்கு காலை வணக்கங்கள் "

" என்ன அமைச்சர் பெருமானே என்னை போய் மரியாதையாக விளிக்கிறீர்கள் உங்கள் மடியில் வளர்ந்த பிள்ளை அல்லவா நான் "

" அப்படி இல்லை இளவரசே நமக்கும் களப்பிரர்களுக்கும்  போர்மூளலாம் அப்பொழுது உங்களது தலைமையிலே நம் படை செல்லும்  . அது குறித்த விவாதம் இன்று இரவு மந்திர ஆலோசனை கூட்டத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன் "

"ஆஹா வெகு நாட்களாக  வாளுக்கு வேலை இல்லாமல் இருக்கிறதே என ஏக்கத்துடன் இருந்தேன் , கட்டளை இடுங்கள் அமைச்சரே இப்பொழுதே சென்று களபிரர்களின் தலைகளை கொய்து வருகிறேன் "

"  பொறுமை இளவரசே .அக் கட்டளையை நான் இடமுடியாது மன்னர் பிரான் தான் இடமுடியும் "

" நான் தந்தையிடமே கேட்டு கொள்கிறேன் . வருகிறேன் அமைச்சரே " இளவரசர்

இளவரசன்  மணிவண்ணன் மேன்மாடத்திற்க்குள் நுழைந்த பொழுது அரசர் கடுங்கோன் பாண்டியர் தன்னுடைய வாளின் கூர்மையை பரிசோதித்து கொண்டிருந்தார்

" தந்தையே வணக்கம் "

"வா மணிவண்ணா , உனக்காகத்தான் காத்திருக்கிறேன்
உனக்கொரு முக்கியமான வேலை இருக்கிறது  அதை இங்கு அமர்ந்து பேச வேண்டாம் ,வா என் அறைக்கு சென்று விடுவோம் "

" களபிரர்களை பற்றியா தந்தையே "
புன்னகைக்கிறார்
" அவர்களுக்கும் நமக்கும் போர் மூளாது சோழர்களை வென்று தான் அவர்கள் இங்கு வரமுடியும் . ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல "

அப்போது ..............


பின் குறிப்பு : இது முழுக்க கற்பனை கதையே
Read More

22.12.10

இரண்டாம் ஜாமம்

பின்னிரவு நேரம் .பெண்டீர்களின் கருமை நிற கூந்தலிற்கு ஒப்பான வானம் .ஆங்காங்கே எரிந்து போன எருவாட்டியின் நிறத்தில் மேகங்கள் .அதற்கு ஊடாக ஒளிந்து ,மறைந்து ,அஞ்சி அஞ்சி பார்த்துகொண்டிருக்கும் நிலவு .எதனை பார்க்கிறது? .இந்நாட்டின் பாவையர்களும் பரதர்களும் கூடுவதை ,கொஞ்சுவதை ,விளையாடுவதை ஒளிந்து ஒளிந்து பார்க்குமோ .ஒரு வேளை பாண்டியமன்னன் தன்னை சிறைசேதம் செய்து விடாலாம் என்ற  பயத்தின் காரணமாக இருக்குமோ?இருக்கலாம் . இதையெல்லாம் பைங்கிளிகளின் மோகன புன்னகை போல் விண்மீன்கள் பார்த்து கொண்டிருந்தன

குடகு மலையில் இருந்து தோன்றும் வற்றாத  நதியாம் வைகை நதி.அது  செல்லும் இட மெல்லாம் ஆட்சி செய்பவர்கள் பாண்டியர்களே .அவர்களின் தலை நகரும் வரலாற்று தொன்மையுடைய நான்மாடக்கூடல் ஆகிய மதுரை மாநகரில் உள்ள வணிகர் தெருவில் ஒரு உருவம் நுழைகிறது ,நிமிர்ந்த நடையும் ,கையில் ஒரு கம்புடனும் ,தலையை சுற்றி முக்காடு போல் ஒரு கருப்பு துணியை அணிந்திருக்கிறது .அந்த தெரு முக்கில் நின்று அந்த தெருவை முழுவதுமாக பார்க்கிறது அவ்வுருவம் .
பின்பு அந்த தெருவின் மத்தியில் உள்ள வீட்டின்  திண்ணையில் சென்று அமர்கிறது .அவ்வுருவம் நிமிர்ந்து பார்க்கையில் தான் தெரிகிறது அவ்வுருவம் வேறு யாரும் அல்ல .இப்பாண்டிய நாட்டின் சக்கிரவர்த்தி ,மன்னாதி மன்னர் ,கடுங்கோன் பாண்டியன் ஆவார்

அவ்வீட்டின் உள்ளே இருந்து சிணுங்கள் ஒலியாகவும் அல்லாத அழுகை ஒலியாகவும் அல்லாத ஒரு பெண்ணின் குரல் கேட்க்கிறது 

" கண்ணே கலங்காதே நமக்கு திருமணம் ஆகி ஒரு வாரம் ஆன நிலையில் உன்னை விட்டு பிரிவதற்கு எனக்கு மட்டும் விருப்பமா என்ன "

" அத்தான்  இந்த உடம்பு மட்டுமே இங்கிருக்கும் , என்னுடைய மனம் உங்கள் கூடவே வரும் "

" அப்படியென்றால் என்னுடைய மனத்தை இங்கேயே விட்டு செல்கிறேன் "

" ஐயையோ பிறகு எப்படி அங்கு போய் வியாபாரம்  செய்வீர்கள் "

" அடி பெண்ணே வியாபாரம் செய்வதற்கு மனம் தேவை இல்லை மூளை தான் தேவை "
வியாபாரத்தில் ஒருவன் வயிற்றில் தான் அடிக்ககூடாது மூளையை அடிக்கலாம் "

" சரிதான் ஒரு வியாபாரியிடம் பேசி வெற்றி பெறமுடியுமா, என்ன ஒன்று தாங்கள் இல்லாத நிலையை அறிந்து கொண்டு கள்வர் கூட்டம் புகுந்து விடுமோ என்ன அஞ்சுகிறேன் "

ஒரு  பலமான நகைப்பு பின் கூறுகிறான்
" நம் கடுங்கோன் சக்கரவர்த்தி ஆட்சியில் கள்வர்களா , பெண்ணே நீ வீட்டை  திறந்துவிட்டு தூங்கலாம் ,உன்னை நம் அரசரின் செங்கோல் காக்கும்  "

இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த அரசர் கடுங்கோன்பாண்டியர்  நாட்டு மக்கள் தம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை எண்ணி பெருமிதம் கொள்கிறார் .மானசீகமாக அந்த கணவனிடம் கூறுகிறார்

ஆடவனே நீ போய் வா உன் கண்மணிக்கு சிறந்த காவல்க்காரனாக   நான் இருப்பேன்
          ---------------------------------------------------------------------------------------------------

அரண்மனை வாயிலில் வேகமாக ஒரு குதிரை புளிதி கிளப்ப வந்து நிற்கிறது . அந்த குதிரையில் அமர்ந்திருந்த ஆடவன் ஒரு இலேச்சினை எடுத்து வாயிர்க்காப்போரிடம் தருகிறான் .
 வாயிற்காப்போன் அந்த இலேச்சினை பார்த்தான் . இது மந்திரி வரதராஜேந்திரரை சந்திப்பதற்கான இலேச்சினை ஆயிற்றே என்று எண்ணுகிறான் .அந்த ஆடவனை பொருத்திருக்குமாறு கூறிவிட்டு மந்திரியாரை பார்க்கசெல்கிறான்

       ------------------------------------------------------------------------------------------------------




தொடரும் .......

பின்குறிப்பு : இது முழுக்க முழுக்க  ஒரு கற்பனை கதையே.
Read More

18.12.10

நண்பேன்டா

             ஏரியா டீக்கடையில் நானும் என் நண்பன் விஜய்யும் தேநீர் பருகிகொண்டிருந்தோம்.

" டே நவீன் வர்றாண்டா " விஜய்

"வாடா மச்சான்  ஒரு  தம்மு சொல்றா " நான்

"டே வாங்க டா சரக்கே வாங்கித்தரேன் " நவீன்
நேரம் காலை 10 மணி .வெயில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்தது

"என்னடா செழும்பா இருக்க  போல " நான்

" உங்கப்பாரு பைய்ல அதிகமா அடிச்சிட்டியோ " விஜய்

" இல்லடா எக்ஸாம் பீஸ்னு எக்ஸ்ட்ராவா மீட்று போட்டேன் " நவீன்
ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்தோம்


" என்ன பீர் சொல்லலாம் " நவீன்

" அதுக்கு பதிலா மு ................... குடிக்கலாம் , எதுவாது ஹாட் சொல்லு " நான்

" அவ்வளவு காசு இல்லடா " நவீன்

" அவ்வளவு காசு இல்லைனா என்ன வெளக்கனைக்குடா  எங்கள தள்ளீட்டு வந்த " நான்

" சரி விடுறா இதையே அடிச்சுட்டு போவோம் " விஜய்
ஆளாளுக்கு ஒவ்வொரு பீர் வந்தது . அடிக்க ஆரம்பித்தோம்

" டே மணி பக்கத்து டேபிளுக்கு அடியில பாரு ஒரு குவாட்டர் இருக்கு " விஜய்

" மணி எவனையும் ஆளக்காணோம் எடுத்து சீக்கிரம் பாகெட்டுக்குல வச்சுக்க வெளிய போய் அடிச்சுக்குவோம் " நவீன்

அதே போல் செய்தேன்

பீர் அடித்து முடிக்கும் தருவாயில் பக்கத்து டேபிளுக்கு ஒரு வந்தான் ,நல்ல கட்டுமஸ்தான உடம்பு ,டேபிளுக்கு அடியில் கையை அலைத்தான்.
" தம்பிகளா இங்க ஒரு குவாட்டர் இருந்துச்சு பாத்தீங்களா "

" அண்ணே இவன் தானே பாக்கெட்ல எடுத்துவச்சான் " நவீன்

கைநடுக்கத்துடன் அவனிடம் எடுத்து குடுத்தேன்

" காக்கா தூக்கிட்டு போயிடுமேன்னு தாண்ணே பாக்கெட்ல எடுத்துவச்சேன் "
" காக்கா தூக்கிட்டு போறதுக்கு இதென்ன வடையா குட்றா முதல  நானே என் பொண்டாட்டி பக்கத்து வீட்டுகாறேன் கூட ஓடி போய்ட்டாளேனு கடுப்புல இருக்கேன் "

வெளியில் வந்தோம்
" ஏண்டா நாக்க தொங்க வந்தேன் பாரு என் புத்திய செருப்பாலே அடிக்கனும்டா" நான்

" சரி வாடா கோவிச்சுக்காதடா அந்தாள பாத்தேலஅதான்  பயத்துல உண்மைய உளறிட்டேன் "நவீன்

"வாட போறவரைக்கும் என்னால வீட்டுக்கு போகமுடியாது வா வேற எங்கியாவது போவோம் " நான்

 "சரி வாங்க என் ஆளு இப்ப டியுசன் விட்டு வர்ற நேரம்தான் அங்க போவோம் " நவீன்


" என்னது ஆளா யாருடா " நான்

" வாங்கடா காட்டுறேன் " நவீன்

" நா வல்லப்பா நா வீட்டுக்கு போறேன் " விஜய்

" டே அவன் கெடக்காண்டா வாடா நம்ம போவோம் " நவீன்
சந்து சந்தாக கூட்டிசென்றான் , ஒரு மரநிழலில் நின்றோம்

" டே என்னடா அரை மணிநேரமா நிக்கிறோம் ஆளையே காணோம் " நான்

" இந்த இப்ப வந்துடுவாடா " நவீன்
வந்தாள் லேடி பேர்ட் சைக்கிளில். எங்கள் இருவரையும்  கடந்து சென்றாள் ,மெலிதான ஒரு புன்னகை சிந்துனமாதிரியும் சிந்தாதமாதிரியும் இருந்தது

" எப்படி  இருக்கு " நவீன்

" பாத்தாச்சுல வா வீட்டுக்கு போவம் "

நண்பனின் வீடு வந்தது "சரி சாய்ங்காலம்  பாப்போம் " நவீன்

என் வீட்டை நோக்கி நடந்தேன் , அந்த மரநிழலை தாண்டி சென்றுகொண்டிருந்தேன்
ஒருவர் என்னை  கை மறைத்து  அழைத்தார்
" தம்பி கொஞ்சம் வாங்களேன் ஒரு கையி கொறையுது ,ஒன்னு தூக்கணும் "

" என்னது தூக்கணும் " நான்

" பீரோ "

" அப்படியா சரி வாங்க போவோம் " நான்
அந்த வீடு வந்தது வீட்டிற்கு வெளியில் நாலைந்து ஆண்களும் இரண்டு பெண்களும் நின்றுகொண்டிருந்தார்கள் .
" என்னனே அதான் இவ்வளவு பேரு இருக்கீங்களே அப்பறமெதுக்கு என்னைய கூப்பிட்டீங்க " நான்

" இரு தம்பி "

" அண்ணே  இவன்தானாம்னே "நின்றுகொண்டிருந்தா ஆண்களில் ஒருவன் கூறினான்

" ஏன்டா ரோட்ல தனியா போற பொண்ண கைய வா  புடுச்சா இழுக்கிற " என் அழைத்து வந்தவர் கூறினார்

அதன் பின்
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம் 
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம்
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம் 

தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம்
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம்

கூட்டம் விலகியது அந்த லேடி பேர்ட் பெண் தெரிந்தாள்

" எந்திருச்சு ஓட்ரா அடுத்து உன்ன இந்த ஏரியா வுல பாத்தேன் " எழுதமுடியாத கெட்டவார்த்தையாக  கூறினார் .

அடிச்ச போதைஎல்லாம் எறங்கி போச்சே ஐயையோ ஒத்த கால் செருப்ப வேற காணோம்
நடந்து கொண்டே திரும்பிப்பார்த்தேன் ,ஜன்னலில் அவள் தெரிந்தாள்
அடிப்பாவி நா வாட்டுக்க ஓரமாத்தானடி நின்னுட்ருந்தேன்

அடுத்தநாள் நண்பன் நவீன் வீட்டிற்கு வந்தான்

" டே எனக்கே இப்பதான் டா மேட்டர் தெரியும் விஜயை இப்பதாண்ட வழியில பார்த்தேன்
அடி ரொம்ப ஓவராடா "  நவீன்

" பரவால்லடா நீயும் வந்திரு தேனா அடி பிரிச்சிருப்பாயிங்க ஏதோ  என்னோட போச்சுல விடு

" டே சாரிடா சரி வா சரக்கடிக்க  போவம் ,அடிச்சா கொஞ்சம் வலி  தெரியாது " நவீன்

" ஆமாடா ரொம்ப ஒடம்பு வலிக்குது   " சந்தோசத்துடன் எழுந்தேன்
அதே ஒயின் ஷாப்

" அப்பறம் மாப்ள என்ன சொல்ல " நவீன்


" ஏதாவுது சொல்றா " நான்
அடித்தோம் முடித்தோம்
வெளியில் வந்தோம்

" மச்சான் பக்கத்துல போலீஸ் குவாட்டர்ஸ் இருக்குல அங்க வரைக்கும் போயிட்டு வந்துடுவோம் "  நவீன்

" ஏன்டா தெரிஞ்ச போலீஸ் எவனும் இருக்காங்களா கம்ப்ளைன் லாம் ஒன்னும் குடுக்கவேண்டாம்டா " நான்


" டே கம்ப்ளைன் குடுக்க இல்லடா "

" அப்பறம் "    நான்

" அங்க புதுசா ஒரு பிகர இப்போ தான் ரூட்டு விட்ருகேன் ,கொஞ்சம் கூட மட்டும் வாடா " நவீன்

" என்னாது "
Read More

15.12.10

பாவ மன்னிப்பு (Highlights)

எனது பள்ளி காலங்களில் நான் செய்த தவறுகளே தப்புகளே இந்த பாவ மன்னிப்பு

1 . மூன்றாம் வகுப்பு படிக்கும் போது முன்னால் அமர்ந்திருந்த பெண்ணின் ஸ்லேட்டில்  I love you என்று எழுதிவைத்தது(அப்போ நீ குழந்தை யடா என்று நீங்கள் கூறுவது கேட்கிறது)

2 . அதே ஆண்டில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பனிடம் சின்ன பென்சிலை மூக்கில் ஒரு ஓட்டையில் உள்ளே வைத்து இழுத்தால் இன்னொரு ஓட்டை வழியாக வந்து விடும் என்று நம்ப வைத்து அவனை அதே போல் செய்ய வைத்தது

3 .ஐந்தாம் வகுப்பில் எப்பொழுதுமே நான் எதிரியாக நினைக்கும் (அதாங்க நல்லா படிக்கிற பயபுள்ள )மாணவன் உட்காரும் பொழுது ஆணியை வைத்தது

4 .ஆறாம் வகுப்பில் மாணவி ஒருவரை  மண்டையில் கொட்ட செய்த ஆசிரியை .அவர் சென்றவுடன் அந்த மாணவியை கேவலமான கெட்டவார்த்தையால் திட்டி அழ வைத்தது

5 . எல்லா பள்ளிகளிலும் ஒவ்வொரு கிளாசிலும் ஒரு அம்மாஞ்சி மாணவன் இருப்பான் .(மிகவும் குள்ளமாக இருப்பார் ).நான் படித்த  பள்ளியில் வியாழக்கிழமை ஒரு track-shut உடன் கூடிய ஒரு டி.ஷர்ட் அணியவேண்டும் . pant யை  இழுத்தால் உடனே அவிழ்ந்து விடும் .அந்த அம்மாஞ்சி  மாணவன் மாணவிகள் முன்னால்  நின்றிருந்த சமயம் பார்த்து பான்ட்யை அவிழ்த்து விட்டேன் (பய புள்ள  உள்ள சட்டி போடாம வந்துட்டான் ) .பின்பு அவன் தேமித்தேமி   அழுதது இன்றும் என் நினைவில் உள்ளத.இது நடந்தது எட்டாம் வகுப்பில் 

6 .பத்தாம் வகுப்பில்  botany  டீச்சர்   ரம்பா மாதிரி இருக்காங்கள    -       அந்த மிஸ்ஸுக்கு இடுப்புல மச்சமிருக்குடா என்று நண்பர்களுடன் பேசியதை  என் எதிரி நண்பன் அந்த மிஸ்ஸிடம் போட்டு கொடுத்ததன் விளைவாக . அந்த மிஸ் கடைசி வரைக்கும் என் சப்ஜெக்டில் நீ பெயில் தாண்டா  ஆவ, பாத்துகிறேண்டா  என்று  என்னிடம் சபதமிட்டதை  .நினைத்தால்

7 .பதினொன்னாம் வகுப்பில் chemistry  மிஸ் monthly  டெஸ்டில் மார்க் குறைத்து போட்டு விட்டார்  என என்  நண்பன் வருத்தபட்டான் அதெற்கென மிஸ் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க சொல்லு  மார்க் நிறைய போடுவார்கள்.அப்பறம் அந்த மிஸ்ஸுக்கு  நைட் புல்லா தூக்கமே வராது  என்று கூறிய பொழுது கிளாஸ் மொத்தமும் அமைதியாகி விட்டது .அன்று அந்த மிஸ் முறைத்த முறைப்பு இன்றும்என்னை எரிக்கிறது

8 . அதே மிஸ்ஸை இன்னொரு நண்பன்chemistry  லேப் இருக்கும் பொழுது விளையாட்டாக மிஸ் நீங்க இப்படி ஒவ்வொரு தடவையும் வெளியில் நிற்கவைத்தால் நாங்கள் என்னைக்காவது உங்க மேல ஆசிட ஊத்திடுவோம் என்றான் . அதற்கு நண்பனின் காதில் மெதுவாக தான் கூறினேன் ஏற்கனவே ஊத்தினமாதிரி தாண்டா இருக்கு என்று .அந்த வார்த்தை எப்படித்தான் கேட்டுச்சோ தெரியவில்லை .அதற்கடுத்து இரண்டொரு நாளில் அந்த மிஸ் வேலையை  ரிசைன் செய்து போய்விட்டார்

9 . அதே பதினொன்றாம் வகுப்பில் படித்த பொழுது பனிரெண்டாம் வகுப்பு படித்த பெண்ணிற்க்காக நானும் எனது எதிரி நண்பனும்  .டே அது என் ஆளுடா என்று  பள்ளிக்கு வெளியில் சண்டை போட்டோம் .  அப்பொழுது அந்த நண்பரின் சைக்கிள் tyre  யை கிழித்தது

10 . பனிரெண்டாம் வகுப்பில் வேறு ஸ்கூலில் லேப் எக்ஸாம் எழுத சென்ற போது .அந்த ஸ்கூலில் படிக்கும் பெண் ஒருவர்  எனக்கு முன்னால் அமர்ந்திருந்தார் .அவரிடம் கொஞ்சம் காட்டு எழுதிக்கொள்கிறேன் என்று தான் கூறினேன் .அந்தமாணவி  என்ன அர்த்தத்தில் புரிந்துகொண்டாரோ தெரியவில்லை .அந்த பள்ளியின் ஆசிரியை  அழைத்து என்னவோ கூறினார் .அவர் எங்கள் பள்ளி ஆசிரியரிடம் என்னவோ கூறினார் .எங்கள் பள்ளி ஆசிரியர் என்னை வெளியில் அழைத்து வந்து மண்ணை அள்ளி தூத்தி நீ நாசமா போய்டுவடா என் மானத்த வாங்கிட்டடா .என்றதை நினைத்தால்


இவ்வளவு கேவலமான ஆளா நீ என்று தானே நினைகிறீர்கள் தானே  இப்பலாம் அப்படி கிடையாதுங்க ரெம்ப திருந்திடேங்க

 ஸ்கூல் லைப் லே இவ்வளவு தப்பு பண்ணிற்கானே காலேஜ் லைப் என்னென பண்ணிருப்பான் ?

டிஸ்கி1 :அந்த " அப்பாலஜி பைல்" காலேஜ்ல  இருக்கு எடுத்துட்டு வந்து எழுதிறேங்க .என்ன ஒன்னு பாகம் பாகமா எழுதணும்

டிஸ்கி 2 : இதையெல்லாம் நம்ப மாட்டீர்கள் என்னை நேரில் பார்த்தால்
Read More

10.12.10

மறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)

                                       தலைப்பை பார்த்து விட்டு ஏதோ "அஜால் குஜால் " கதைகள் போல என்று வருபவர்களுக்கு முதலிலே சொல்லி கொள்கிறேன். உங்கள் ஆவல் பூர்த்தி செய்யப்படும் .அதே போல் ஒரு உறுதிகூறுகிறேன் இதில் எந்த ஒரு கெட்டவார்த்தையும் பயன்படுத்தபடாது
நான் கொஞ்சம் அதிகமாக புத்தகம்,கதைகள் ,நாவல்கள் ,முக்கிய எழுத்தாளர்களின் கட்டுரைகள்  படிப்பவனாக இருந்தேன்  .ஆனால் இப்பொழுது ஆணிகள் காரணமாகவும் நேரமின்மையாலும் படிக்க முடிவதில்லை .இருந்தும் உறங்க செல்லும் முன் சில பக்கங்கள் படிப்பதுண்டு ஆனால் அப்படியே படித்த மாதிரியே தூங்கிவிடுவேன் . அவ்வாறு நான் ரசித்த புத்தகங்கள் ,சிறுகதைகள் , நாவல்கள் , இன்னும் நிறைய ..,    அவைகளில் முதலில் ஒரு புத்தகத்தை  பதிவாக இங்கே பகிர்கிறேன் .உங்கள் ஆதரவை பொறுத்து தொடர்வேன்
            நான் ஒரு கஞ்சன்.  புத்தகங்களை  பணம் குடுத்து வாங்கி படிக்க மாட்டேன் . ஒரு அரசாங்க லைப்ரரிலும் தனியார் லைப்ரரிலும்  கணக்கு வைத்திருக்கிறேன் ,நான் எல்லா "விதமான" புத்தகங்கள் படிப்பேன். மூன்று  மாதத்திற்கு முன் மூன்று புத்தகங்கள் எடுத்தேன் காந்தியின் சுயசரிதையான "சத்தியசோதனை" வாமு கோமு அவர்களின் "கள்ளி "    கி.ராஜநாராயணன், கழனியூரன்  இருவரும் தொகுத்துள்ள" மறைவாய் சொன்ன   கதைகள் " இதில் "மறைவாய் சொன்ன கதைகள் " உடனே படித்துவிட்டேன்  மிச்சமிரண்டு புத்தகத்தில்  காந்தியின் சுயசரிதை "சத்தியசோதனை "முதல் பாகம் வரைக்கும்தான் படித்திருக்கிறேன். இன்னொன்று இன்னும் படிக்கவே ஆரம்பிக்கவில்லை,இந்த"மறைவாய்சொன்னகதைகள் "   குறித்து நீங்கள் முன்பே அறிந்திருக்கலாம் அல்லது படித்திருக்கலாம் . இருந்தும் என்னுடைய பார்வைகள் இங்கே சில வார்த்தைகளாய்
                              

கி.ராஜநாராயணன் ஒரு மூத்த கதை சொல்லி அவரை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை  .நான்  அவரது கதைகளை அதிகம் படித்ததில்லை ஏனென்றால் க்ரைம் கதைகளும் ,காதல்கதைகளும் படித்துகொண்டிருந்த எனக்கு  இரண்டு வருடத்திற்கு முன்தான் இலக்கிய தரமான கதைகளிடமும் கட்டுரைகளிடமும் அறிமுகம் ஏற்ப்பட்டது .ஆனால் இப்பொழுது அவரது கதைகளை அதிகமாக  தேடிகொண்டிருக்கிறேன்

100 நாட்டுப்புறப் பாலியல் கதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு இது! இதில் இடம்பெற்றுள்ள கதைகள், 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'(1992, நீலக்குயில் பதிப்பகம், கி.ரா), 'நாட்டுப்புறப் பாலியல் கதைகள்' (1994, நீலக்குயில் பதிப்பகம், கழனியூரன்) ஆகிய புத்தகங்களிலிருந்தும், 'இறக்கை' மற்றும் 'வாசுகி' இதழ்களில் கழனியூரன் எழுதிய பாலியல் கதைகளில் இருந்தும் தொகுக்கப்பட்டவை.
கிராமங்களில் இருந்த  நம் பாட்டன் முப்பாட்டன்களிடமும் பாட்டி முப்பாட்டிகளிடமும் சர்வசாதாரனமாய்  புழங்கிய உலவிய கதைகள்தான் இவைகள் .பள்ளிகாலங்களிலும் ,கல்லூரிக்காலங்களிலும் பேசி சிரித்த கெட்டவார்த்தை கதைகளுக்கு(ஜோக்ஸ்) முற்பட்டவடிவம் .இது மாதிரியான கதைகள் கிராமங்களில் இயல்பானவை .அந்த கரிசல் கிராமத்திற்கே உரிய எள்ளலும் ,எழுத்தும் அந்த நடையும்  நம்மை அந்த கிராமத்து சூழலுக்கே அழைத்து செல்லும்
சில கதைகள் நமக்கு தெரிந்தவைகளாக இருக்கலாம் .பாலியல் கல்வி அவசியமான ஒரு கல்வி என்று கூறும் இந்த காலத்தில் அது குறித்த ஒரு சிறு விழிப்புணர்வு இந்த கதைகள் ஏற்படுத்தலாம்.
 அதிலிருந்து ஒரு கதையை கூறுகிறேன்  .வெத்தலை ஒரு தேவலோகத்து பொருள் .அது  பூமிக்கு வந்தது எப்படி? அதனுடைய வாசமும் இன்னொன்றின் வாசமும் ஒன்று போல் இருக்குமாம் 
ஒரு முறை இந்திரன் தன் மகனான அர்ஜுனனை தேவலோகத்திற்கு அழைத்து  வந்தானாம் .அவனின் அழகை பார்த்து ரம்பையோ ,திலோதமையோ சரியாக நினைவில் இல்லை .இவர்களில் எவரோஒருவர்  அவனது அழகில் மயங்கி விடுகிறாள் . .அவனிடம் எப்படியாவது உறவு கொள்ளவேண்டும் நினைக்கிறாள் .ஆசையாக அவனிடம் செல்கிறாள் .ஆனால் அவன் மறுக்கிறான் .பின்பு அவன்  பூலோகம் சென்றுவிடுகிறான் .எப்படியாவது .பூலோகத்திற்கு சென்று தன்னுடைய வேட்கையை  தீர்த்து கொள்ளவேண்டும் என்று முடிவெடுக்கிறாள் .அவனை கவர்வதற்கு தேவலோகத்தின் உயரிய பொருளான வெத்தலையை கொண்டுசெல்கிறாள் .ஆனால் வாயிர்காப்போர்கள் கொண்டுசெல்லவிட விடமாட்டார்கள்  ஆடைக்குள் ஒளித்துவைத்தாலும் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் அந்தரங்கமான பகுதிக்குள் ஒளித்து கொண்டுசெல்கிறாள் .அங்கு சென்றும் அவளை அவன் ஏற்காததால் கடுப்பில் அந்த வெத்தலை கொடியை தூக்கி போட்டு விடுகிறாள் .அதை பார்த்த ஒரு விவசாயி அதை பயிரிட ஆரம்பிக்கிறான் .இது தான் வெத்தலை பூமிக்கு வந்த கதையாம் .இதையே அந்த கரிசல் கிராமத்து நடையில் படித்து பாருங்கள.அருமையாக இருக்கும் 
அந்த வெத்தலை வாசமும் இன்னொன்றின் வாசமும் ஒன்றாக இருக்கும் என்று கூறினாயே அது என்ன? என்று கேட்காதீர்கள் .புரிந்துகொள்ளுங்கள் புரிந்தவன்தான் பிஸ்தா

சில கதைகளை நினைத்து நினைத்து சிரிக்கலாம் ,திருவிதாங்கூர் சமஸ்த்தானத்திற்கு உட்டபட்ட அரசாங்கத்தின் உறவினர்கள் அல்லாத பெண்கள் மேலாடை அணியகூடாதாம் . 140  வருடத்திற்கு முன் வரையே இந்த வழக்கம் இருந்ததாக வரலாறு கூறுகிறது  .அது குறித்த ஒரு கதை நம்மை அதிர்ச்சி அடையச்செயலாம் 
வித்தியாசமான ஒரு உருவ அமைப்புள்ள  பெண்ணை திருமனம் செய்து கொள்ள நினைக்கும்  ஒரு இளைஞன் கதை .தன் வயலில் நடக்கும் தவறான செயல்களை தடுக்கஒரு விவசாயி எடுக்கும் நடவடிக்கைகள்

அப்போதே சைவம் வைணவம் குறித்த ஒரு வெகுகிண்டலான ஒரு கதை.
என் பள்ளி காலங்களில்  அதை வேறு ஒரு பரிணாமத்தில் கேட்டிருக்கிறேன் .ஒரு "குருவி" கதையும் உண்டு. அதை நாம் அனைவரும் அறிந்திருப்போம் இருந்தாலும் அந்த கரிசல் நடையில் சுவையாக இருக்கும் .ஆணாதிக்கத்தின் அடக்கு முறையை நகைச்சுவையோடு எழுதி இருப்பார்கள்.
இது போல் இன்னும் நிறைய கதைகள் நம்மை விலா நோக சிரிக்கவைக்கும் 

இந்த மாதிரியான கதைகளை படிப்பதனால் நம் ஒழுக்கம் கெட்டு விடும் என்று நினைத்தால் நாம் பரிதாபத்துக்குரியவர்களே.பாலியல் குறித்த புரிதல்கள் இங்கே வெட்கங்களாகவும் மவுனங்களாவும் இருக்கின்றன
இந்த பதிவுலகத்தில் பல டாக்டர்கள் பதிவர்களாக   உருமாறி தங்கள் பணியை செவ்வனே செய்கிறார்கள் அவர்களுக்கு  என் நன்றியோடு .வணக்கத்தையும் கூறிகொள்கிறேன் .

Read More

7.12.10

கமல் ஒரு கலைவியாபாரி







மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எதற்க்காக நோட்டீஸ் அனுப்பினார்கள் ? இந்த பாடல் வரிகளுக்காகதான் 

கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்... களங்கம் உள்ளவள் எச்சரிக்கை. உடனே கையுடன் கைகோர்த்தாளா... ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை. ஆடை களைகையில் கூடுதல் பேசினால்... அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை. கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்... காதலாய் மாறலாம் எச்சரிக்கை. உன்னுடன் இருப்பது சுகமென்றாளா... உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம் அமைவது பொதுவே நலமாகக் கொள் கூட்டல் ஒன்றே குறியென்றான பின் கழிப்பது காமம் மட்டும் எனக்கொள் உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர் யோசிக்காமல் வருவதை எதிர்கொள் முன்னும் பின்னும் ஆட்டும் சகடை ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள் காமமெனப்படும் பண்டைச் செயலில் காதல் கலவாது காத்துக்கொள்

கலவி செய்கையில் காதில் பேசி கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும் வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும் குழந்தை வாயை முகர்ந்தது போலக் கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்"

காமக் கழிவுகள் கழுவும் வேளையில் கூட நின்று உதவிட வேண்டும்

இப்படிக் கணவன் வரவேண்டும் என ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன் வரந்தருவாள் என் வரலட்சுமியென கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு
வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி? நீ கேட்ட வரங்கள் 

எதுவரை பலித்தது? உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி? பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ? அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ?"

மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட அக்காளில்லா வேளையில் அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்

  இது  முழுமையான பாட்டு கிடையாது என் நியாபகத்தில் உள்ள சிலவரிகள்

பொதுவாக அரசியல் வாதிகளும் நடிகர்களும் தங்களுடைய சுயலாபத்திற்கு  என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் .அதற்கு கமலும் விதிவிலக்கு அல்ல .
இந்த பாடல் கலைஞர் கருணாநிதி  அவர்களை வேண்டுமானால்  சந்தோசப்படுத்தலாம் ,

படத்திற்கு படம் கமல் படம் ஏன்  இந்த அளவிற்கு சர்ச்சைகுள்ளாகிறது .இது திட்டமிட்ட செய்லா இல்லை தற்செயலா?
என் படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கிவிட்டு என் வாழ்க்கையை ஏன் விமர்சிக்கிறீர்கள் என்றவர் தானே நீங்கள் இப்போது எப்படி எங்கள் வீட்டு பூஜை அறையை எட்டி பார்க்கலாம் என்கிறார்கள் இந்து மக்கள் .அவர்கள் கேட்பது ஒரு பக்கம் நியாயம் என்றாலும் .

இந்த இந்து மக்கள் கட்சிகாரர்களுக்கு வேலைவெட்டி கிடையாதோ என்னவோ ? எப்போதும்  போல் ஒன்றுக்கும் உதவாத பிரச்னையை கையில் எடுத்துகொண்டு அந்த படத்திற்கு இலவசமாக விளம்பரம் தேடித்தருகிறார்கள் .நாட்டில் தீர்க்க படவேண்டிய பிரச்சனைகள் எவ்வளோ உள்ளது .அதற்க்கெலாம் போராடாமல் .படத்தில் ஒரு பாட்டு வந்துவிட்டதாம் .அதற்கு போய் என்னவோ

சின்ன பிள்ளைகளை போல் என் நாமத்தை  அழித்துவிட்டான் ,என் பட்டையை பறித்து விட்டான் என்று அங்கலாய்க்கிறார்கள்
அரங்கநாதர் எழுந்து வந்து அறைந்தால் கூட இவர்களுக்கு புத்தி வராது .

கடவுள் நம்பிக்கையும்   மூடநம்பிக்கையையும்  குழப்பி கொண்டிருக்கிருக்கும் ஒரு சந்தர்ப்பவாதிகள் 

என் பார்வையில் -  கமல் ஒரு கலைவியாபாரி   
Read More

6.12.10

சீட்டு கம்பனிகளின் சில்லரைத்தனம்

                    நம்முடைய அவசரம் பணத்தேவை  இங்கே வியாபாரம் ஆக்கபடுகிறது .சகமனிதனை கடன்காரர்களாக்குவதற்கு நிறைய படித்த பட்ட தாரிகளும் தாரர்களும் பணியமர்த்த படுகின்றனர் .இன்னும் சொல்லப்போனால் தேனினும் இனிய குரலினால் கஸ்டமர்களை கவர்வதற்கு அதிகமாக பெண்களே நியமிக்க படுகின்றனர்.
நம் நாட்டில் இப்போது அதிகமாக சீட்டு கம்பனிகளும், பைனான்ஸ் .மைக்ரோ பைனான்ஸ் கம்பனிகளும் பெருகி வருகிறது .ஏழை   , மிடில் கிளாஸ் மக்கள்  அரும்பாடு பட்டு தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் கலந்த  சொத்தையும் அவர்களுடைய பேங்க் பாலன்சையும் புடுங்குவதற்கு அரசாங்க ஆதரவுடன்  கூட்டம்கூட்டமாக கிளம்பி கொண்டிருக்கின்றனர் .
நம்முடைய அவசர பணத்தேவை நம்மை இந்த வலையில்சிக்க  வைக்கிறது .நாம் என்றைக்குதான் விழிப்புணர்வு அடைவோம்
சமீபத்தில் என் இரு நண்பர்கள் இந்த வலையில் சிக்கியுள்ளனர் .அவர்களுடைய அனுபவம்  நமக்கு ஒரு சிறு பாடமாக அமையலாம்
அந்த இரு நண்பர்களுமே நாட்டின் பிரபலாமான பைனான்ஸ் கம்பெனியில் கடன் பெற்றனர் ஒருவர் சுமார் ஐந்து வருடத்திற்கு முன்னால் இரு சக்கரம் வாகனம் வாங்குவதற்காக கடன் பெற்றார் . இரண்டரை வருடதவனையில்  கடைசி ஆறுமாத தவணையை கட்டாமல் விட்டுவிட்டார் .  ஒரிஜினல் ஆர்.சி .புக் அவர்களிடமே இருந்துள்ளது .இப்போது வண்டியை விற்க உள்ளார் அதற்கு ஒரிஜினல் ஆர்.சி.புக் தேவை
அந்த பைனான்ஸ் கம்பனியை அணுகி உள்ளார்   .நீங்கள் ஆறுமாத தவணையை வட்டியுடன் சேர்த்து கட்டிவிடுங்கள் ஒரிஜினல் ஆர்.சி .புக்கை உடனடியாக குடுத்துவிடுவோம் என்று கூறி உள்ளார்கள் .இவரும் உடனடியாக வட்டியுடன் சேர்த்து பணத்தை கட்டி  உள்ளார் .இது நடந்து சுமார்மூன்று மாதமாகிவிட்டது  ஆனால் இன்று வரை அந்த ஆர்.சி .புக்கை குடுத்த பாடில்லை கேட்டால் ஆபீஸ் ஷிப்ட் செய்ததில் தொலைந்து போயிருக்கலாம்  என்கிறார்களாம் அங்கே வேலை பார்க்கும் யுவதிகள் சர்வ சாதாரணமாக  . 
அவர்களுக்கு அங்கே உள்ள யுவன்களிடம் கடலை போடுவதற்கே நேரம் பத்தாது . அதில் எங்கே இந்த வேலையையும் சேர்த்து செய்யமுடியும் .அது என்னமோ தெரியவில்லை பொதுவாக இந்தமாதிரியான கஸ்டமர்ரிலேசன்சிப்பாக வேலைபார்க்கும்  பெண்கள் கொஞ்சம் அழகாக இருப்பதால் நாமும் பல்லிளித்துகொண்டு 'அப்படீங்கள சரிங்க "என்று வந்துவிடுவோம் .அந்த பெண்களின் அழகை  அந்த கம்பெனி முதலாளிகள் சம்பளம் கொடுத்து பயன்படுத்திகொள்கின்றனர் .இதற்கு பெயர் என்னவென்று தெரியவில்லை

இன்னொருவர் மூன்று மாதத்திருக்கு முன்தான் மடிகணினி வாங்குவதற்காக அதே நிறுவனத்தில் கடன் பெற்றார். 28000 /- மடிகணினிக்காக 17000 /- ருபாய் கடனாக வாங்கினார் .அதற்கு டாகுமென்ட் சார்ஜ் தனியாக 1500 /- ருபாய் வாங்கினார்கள் .மாததவனையாக ருபாய் 2500 /- வீதமாக எட்டு மாதம் கட்டிவிட்டார் .இதற்கு வட்டி 3000 /- ருபாய் .இப்பொழுது என்ன பிரச்சனை என்றால் என் நண்பர் குடுத்த செக் இரண்டு முறை பவுன்ஸ் ஆகயுள்ளது அதனால் அவர் 1000  ருபாய் பெனால்டி கட்டவேண்டுமாம் .அதற்க்கும்  அவர் சரி வந்து வாங்கிகொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார் .ஆனால் அவர்கள் வரவே இல்லை . இப்போது வக்கீல்  நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள் . அந்த ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து இன்னும் 2318 .00 /- கட்டவேண்டுமாம் .
ஒரு படித்த இளைங்கனுக்கே இந்த அளவுக்கு பிரச்சனை என்றால் .
ஒரு படிக்காத பாமரன் சிக்கினால் இவர்கள் எந்த அளவுக்கு வட்டியை போட்டு தாளிப்பார்கள் .இந்த மாதிரியான நிதி நிறுவனங்களின் முதலாளிகள் குடும்பம் குட்டியுடன் அல்லது குட்டிகளுடன் குலாவுவதர்க்கும்  ஏமாளி ஆகிய,இளிச்சவாயன் ஆகிய ,நாம் வட்டிக்குவட்டி யாக கட்டவேண்டும் அவர்கள் வக்கணையாக .......................(அநியாயத்திற்கு  கெட்ட வார்த்தையாக வாயில் வருவதால் நிறுத்திகொள்கிறேன் )

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றும் கூட்டம் கூட்டம் கூட்டமாகத்தான் வரும்

அந்த நிதி நிறுவனம் ஒரு சுந்தரமான நிறுவனம்
Read More

5.12.10

விஜய் அ.தி.மு.க சேரபோவது ஏன் ?

             இன்னைக்கு காலையில் செய்திதாளில் வந்த செய்தி


காவலன் பட வெற்றிக்காக 300  குடும்பத்திற்கு இலவசமாக அரிசி வழங்கி உள்ளாராம்
 
மதுரையிலும் கோயம்புத்தூரிலும் இவர் படத்தை வெளியிட மாட்டோம் .முன்னர் இவர் படத்தை எடுத்து  நஷ்டம் அடைந்ததற்கு  நஷ்டஈடு வேண்டும் என்கிறார்கள்  .அதற்கு அவரும் சரி அவர் அப்பாவும் சரி ஒரு பதிலையும் கூறகாணோம் .இந்த ஆட்சியிலே ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகிறார்கள் அதையே வாங்கி இலவசமாக கொடுப்பதற்கு என்ன செலவாகி விட போகிறது . என்ன பொன்னி அரிசியா குடுத்திர்க்க போறாரு
நாம்தான் இலவசமாக இஞ்சி மிட்டாய் குடுத்தாலே இடித்துபிடித்துகொண்டு வாங்க செல்வோமே. இங்கே நாம் எந்தளவுக்கு முட்டாள் ஆகிகொண்டிருக்கிறோம் என்பதற்கு இதுதான்  தான் சாட்சி

முதலில் எஸ்.ஏ .சந்திரசேகரும் ,விஜய்யும்  திமு.க ஆதரவாளார்களாக தான் இருந்தார்கள் .நாங்கள் கட்சி தொடங்கினாலும் திமு.க ஆதரவாகத்தான் செயல் படுவோம் என்றார்கள் .பின்னர் காங்கிரஸ் ராகுல் காந்தியை சந்தித்து அவர்களுடன் இணைவதற்கான முயற்சி நடந்தது அது பலிக்கவில்லை ஏனென்றால் எஸ்.ஏ .சந்திரசேகருக்கு தமிழக கவர்னர் பதவி கேட்கபட்டிருக்கிறது .

தி.மு.க கொடுத்த எதிர்ப்பின்காரனமாக அவர்கள் அங்கிருந்து அசிங்கப்பட்டு காரி துப்பாதகுறையாக வெளியில் வந்து அந்த ஆசையை ஒத்திவைக்கபட்டுளதாக கூறினார்கள் .இப்போது அந்த ஆசை மீண்டும்  துளிர்விட்டு இருப்பதால் நேரடியாக தி.மு.க வை சென்று அணுகினால்
அவர்களுடைய மானத்திற்கு இழுக்கு ஏற்படலாம் என்ற காரணத்தினால் இந்த மாதிரி பச்சோந்தி தனமான   வேலைசெய்கிறார்கள் .
அதுமட்டும் அல்லாமல் தி.மு.க வில் ஏகப்பட்ட அடுத்தகட்ட தலைவர்கள் உள்ளார்கள் இதனாலும் இவர்கள் ஓரம்கட்ட பட வாய்ப்பிருப்பதால் அங்கே அம்மா கட்சிக்கு  செல்கிறார்கள் .ஒரு நல்ல தேர்ந்த அரசியல்வாதி இவ்வாறுதான் செய்வான் .அதைத்தான் நடிகர் விஜயும் செய்கிறார்.
அ.திமு.க விழும்  அடுத்த கட்ட தலைவர்கள் இருந்தாலும் அவர்களைஎளிதாக  ஏய்த்து இவரால் முன்னுக்கு வரமுடியும் . (ஏனென்றால் அவர்களுக்கு படிப்பும் இல்லை அறிவும் இல்லை) .அப்படி வந்து விட்டால் எதிர்காலத்தில் அ.தி.மு.க கட்சிக்கு தலைவர் பதவிக்கு வந்துவிடலாம் .வந்துவிட்டால் எதிர்காலத்தில் இவரும் ஒரு முதல் அமைச்சராக வாய்பிருக்கிறது. ஒரு இளைய எம்.ஜி.ஆர் .ஆகவும் வாய்ப்பிருக்கிறது
 .
இவரெல்லாம் முதல் அமைச்சர் ஆகி நம்மளை ஆள போகிறார் .நாமும் நம்முடைய பிள்ளைகளும்  அவருக்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டு திரிவோம்  .
எதிர் காலத்தில் தமிழகம் அழிவதற்கான சூழல் என் ஞானதிருஷ்டியில்  தெரிகிறது.

இவர்கள் சில்லறைகள் பார்பதற்கு நாம் கல்லறையில் முடங்கவேண்டும்

எல்லாம் கால கொடுமைங்க 
Read More

3.12.10

முத்தம்

அடிக்கிற மழைல மூளைகொளம்பி போச்சுன்னு நெனைக்கிறேங்க அதாங்க தெரியாத்தனமா எழுதிபுட்டேங்க  ஏதாவுது தப்பிருந்தா  மன்னிச்சுக்குங்க

முத்தம் 

சில்லென்ற காற்று 
இதமான வானிலை 
கொஞ்சுகின்ற மழை
இவை எல்லாவற்றை
விடவும் 
அழகானது 
சுகமானது 
ரம்யமானது
நான் காலையில் வேலைக்கு 
கிளம்பிசெல்கையில்
அவள் தந்த 
இதழ் 
முத்தம் 

Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena