வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

26.3.11

குள்ளநரி கூட்டம்

                               நேற்று இரவு காட்சியாக குள்ளநரி கூட்டம் படம் பார்க்க நேர்ந்தது ,வெகு நாட்களுக்கு பிறகுவெளிவந்துள்ள  ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம் ,காதலில் வெற்றி பெறுவதற்கு கதாநாயகன் காவல்த்துறையில் சேர ,முயற்ச்சிக்கிறார் ,அதில் ஏற்ப்படும் தடங்கல்கள் ,இன்னல்கள் ,எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை ,இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும் ,சும்மா ஒரு ரீசார்ஜ் மேட்டரை வைத்து ஒரு ,காதல் டெவலப் செய்திருக்கிறார் ,இப்படி ஒரு பிகரு சிக்கும்னா ,ஆயிரத்தி ஐநூருரூவாய்க்கென ஐயாயிர ரூவாய்கே ரீசார்ஜ் பன்னுவேனே ,அப்படின்னு தியேட்டர்ல ஒரு கொரலு கேட்டுச்சு (ஆனா சத்தியமா அந்த கொரலு என்னோடது இல்லீங்க ),

ஹிரோயன் :ரம்யா நபீசன் ,டிபிகல் தமிழ் பொன்னா ,நல்ல தல நெறைய மல்லிக பூவோட ,தலைய தலைய    நல்ல தாவனியில நல்லாதான் இருக்காங்க ,அவுங்க பிரெண்டுதான் ?

மதுரை அண்ணாநகரில் முதல் பாதி முழுவதும்  வளைத்து எடுத்திருக்கிறார்கள் ,அண்ணாநகர் பஸ் ஸ்டாப் தான் முதல் சீன்னு,அந்த ஸ்டாப் பில்தான் நான் பள்ளி பேருந்துக்காகவும், கல்லூரிப்பேருந்துக்காகவும் ,காத்திருப்பேன் ,பக்கத்தில் மாரியம்மன் தெப்பக்குளத்தை காட்டுவார்கள் ,அங்குதான் நான் கிரிக்கெட் விளையாடுவோம் ,பௌலிங் போடுகிறேன் என்று ,புல்லு தடுக்கி (மன்னிக்கவும் )வழுக்கி விழுந்து ,காலு பெசகி ,யானைக்கால் போல் வீங்கி ,ஒரு மாதாமாக "சோளம் வெதேக்கேயில சொல்லிபுட்டு போனபுள்ள " என்று நடந்திருக்கிறேன் 
                                                            

ஒரு பிரபல பதிவர் ," இந்த படத்தில் தான் ஒரு போலீஸ் செலேக்சன் எப்படி இருக்கும் என்று விரிவாக காட்டிருக்கிறார்கள் " என்று அவர் பொய் சொல்லுகிறார் நம்பாதீர்கள் ,இதை விட கேவலமாக இருக்கும் .அவர் இதற்க்கு கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் ,முன்ன பின்ன போலீஸ் செலேக்சனுக்கு போயிருந்தா தெரியும் .(இப்படி ஒரு பிரபல பதிவரை போட்டு தாக்குனாதன் நாமளும் பிரபலம் ஆகா முடியும் என்று வியட்நாமிலிருந்து போன் வந்தது )

ஒரு மதுரைகாரனாக பெருமைபடுகிறேன் இந்த படத்தை பார்த்து , ஒரு அருவா இல்ல ,டாட்ட சுமோ  இல்ல ,ஒத்த கை சித்தப்பேன் இல்ல ,அழிசாட்சியமா பேசும் பொம்பள இல்ல ,அப்பாடி ,இப்பதாங்க நிம்மதியா இருக்கு ,ஒரு ரெண்டு மூணு வருசமா போட்டு ,மதுரைய கொண்டு எடுத்தாய்ங்க ,

க்ளைமேக்ஸ் வழக்கம் போல தமிழ் சினிமாவுக்கே உண்டான க்ளைமேக்ஸ்தான் ,ஆனாலும் ரசிக்க முடிந்தது ,சும்மா போகிற போக்கில் அப்படியே நகைச்சுவையை அள்ளித்தெளித்திருப்பார்கள், தொகுதி பக்கமே அஞ்சு வருசமா போகாத ஒரு எம்.எல்.ஏ அடிப்பாருங்க பாருங்க காமெடி ,சூப்பர்

ரொம்ப நாள்கழிச்சு  ஒரு யதார்த்தமான படம் ,படம் பார்த்து விட்டு நிம்மதியாக தூங்கினேன்

டிஸ்கி : ஹீரோ பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்லேன்னு லாம் யாரும் கேக்ககூடாது ,பிகாஸ் ஒரு ஹீரோவே இன்னொரு பத்தி பெருமையா சொன்ன என்னோட இமேஜ் ஸ்பாயில் ஆயடும்ல


Read More

25.3.11

பிசினஸ் மேன்

                                    சென்ற புதன் கிழமை காலையில் சாப்பிட்ட பதினைந்து தோசை நெஞ்சை கரித்துகொண்டே இருந்ததால் மதியம் ஆட்டு ரத்தம் ,ஈரல் ,புதைத்து வைக்கப்பட்ட இரு கோழி கால்களின் பிரியானி ,சிக்கன் 65  , இரண்டு தட்டு சோறு , ஒரு அவித்த முட்டை ,சில பொறித்த முட்டைகளும் என அளவாக உணவருந்திவிட்டு ,தீக்குச்சியின் உதவியுடன் பல்லிடுக்களை குத்தி கொண்டிருந்தபொழுது எனது செல்போன் நண்பன் அழைப்பதாக காட்டியது 

" என்னடா ரஞ்சித் "
" டே  எங்கிருக்க "
"வீட்ல "
"டே உடனே கிளம்பி ரயில்வே ஸ்டேஷனுக்கு போ "
"எதுக்கு "
"ஒருத்தர ரிசீவ் பண்ணனும் "
"போடா பொங்கலு வேலை இருக்குடா "
"டே வர்றவன் ஒரு பிசினஸ் மேன்ரா ,திருவனந்தபுரத்தில இருந்து  வர்றான் ,  அவன் மதுரைக்கு  புதுசுடா ,அவன கூட்டிட்டு வந்து நல்ல லாட்ஜா பார்த்து தங்க வை , சாயங்காலம் வந்து நா பாத்துக்கிறேன் "
"எதுக்கு இங்க வந்திருக்கான் "
"அந்த பிசினச கத்து குடுக்கத்தான் வந்திருக்கான் ,நீயும் வா கத்துக்குலாம் ,அவன் எட்டு நாடுல பிசினஸ் பண்றாண்டா "
" அப்படியா "
மைன்ட் கால்க்குலேசன் 'ஆகா இந்த பிசினச எப்படியாவுது கத்துகிட்டு ,வெளிநாட்டுல பிசினெஸ் பண்ணி ,பில் கேட்ஸ் பின்னுக்கு தள்ளீடனும்'
"ஓகே டா ,அவன் பேரு என்ன "
"அச்சுகோபன் "
                                                                       =================
" மிஸ்டர் அச்சுகோபன் "
" வெல் ,நீங்கள் ரஞ்சித் சார் பிரெண்டோ "
"ஆமாம் ,மணிவண்ணன் "
" ஹாங் ,மணிவண்ணன் ,ஹி செட் ,ஹி செட் . போலாமா ,எனக்கு தமிழ் கொறச்சு கொறச்சு வரும் "
" ஹி ஹி ,இங்கயும்  நெறைய பேருக்கு தமிழ் கொறச்சு கொறைச்சு தான் வரும் "நீங்கள் என்ன பிசினஸ் பண்றீங்க "
"ஞான பண்ணும் பிசினஸ் ஒரு வல்லிய பிசிநெசானு,ஈ பிஸ்னெஸ் செய்வதற்கு வயது முக்கியமில்லா ,ஆண் ,பெண் ,முக்கியமில்லா ,ஈ பிசினெஸ் செய்வதை பற்றி இந்தியாவின் நம்பர் ஒன யுனிவெர்சிட்டி யில் பாடாமே உண்டெங்கில் நீங்கள் நம்புவீர்களா "
" ஈ பிசினெஸ் செய்த பிறகு ஞான்  ஒரு காரே வாங்கியது , டாட்டா இண்டிகா , இன்னும் சொந்தாமாக வீடு ஒன்று   வாங்கும் "
"எனக்கு என்ன வயசாயிட்டு என்று நீங்கள் அறியுமோ "
"தெரியலையே "
"21 " 
ஆஆஆஆஆ வென வாயை பிளந்தவன் தான் ,
மைன்ட் கால்குலேசன் 'மணி இவன விட்டுதாத ,பில்கேட்ச பின்னுக்கு தள்ளனும் '
அவரை ஒரு நல்ல ஹோட்டலாக பார்த்து தங்க வைத்து விட்டு ,மீண்டும் மாலை வந்து சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு வந்தேன் ,ஆனால் என்னாலும் என் நண்பானாலும் அன்று மாலை செல்ல முடியவில்லை ,

வியாழக்கிழமை :
"சாரி ,நேற்று என்னால் வர முடியவில்லை "
"இட்ஸ் ஓகே ,ரஞ்சித் சாரு ,இப்ப வரமுடியாது ,ஜோலி உண்டுன்னு போன் செய்து    "
"அப்படியா "
"இங்க பக்கத்துல  மீனாக்ஷி அம்மன் டெம்பில் இருக்கு ,கூட வருமோ "
வேலை இருந்தாலும் வருகிறேன் என்று தலையாட்டினேன்,போகிற வழியில்  கிளி ஜோசியம் பார்த்தார் ,,கிளி வந்து ஒரு கார்டை எடுத்தது ,படத்தை பார்த்துவிட்டு பலன் கூறினார் கிளிஜோசியாக்காரர்
"தம்பிக்கு கைக்கெட்டுனது வாய்க்கெட்டாது "
"i don't understand" என்று என்னை பார்த்தார்
"thatmeans, hand taking but mouth not catching" என்று கிளி ஜோசியர் கூற கூற ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை செய்தேன் ,கடைசியாக
ஒரு எலுமிச்சம்பழம் வேண்டும் என்று கூறினார் கிளி ஜோசியக்காரர் ,சரிஎன்று  வாங்கி வர சென்றேன் ,அதை தலையை மூன்று முறை சுற்றி எச்சி துப்பி தூக்கி எரிய சொன்னார் ,150 /- பீஸ் வாங்கினார் ,தம்பி நீங்க ஜோசியம் பார்க்கலையா என்றார் என்னிடம் ,ஹி ஹி ,நானும் மதுரக்காறேன்தானே
கோயிலில் கூட்டமாக இருந்தது ,கோயில் அருமை பெருமைகளை விளக்கினேன் ,ஆச்சிரியமாக எல்லாவற்றையும்  கேட்டார் ,ஸ்பெஷல் தரிசன டிக்கெட் 200/- குடுத்து வாங்கினேன் ,ஒரு கால்மணிநேரம் கண்ணை மூடியவாறு வேண்டினார் ,சரி என்று நானும்  " அம்மா ,தாயே ,ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கிருக்கேன் ,ஸ்பெஷலா நல்லது பண்ணனும் ஆமா சொல்லிபுட்டேன் " வேண்டினேன்
அவரை ஹோட்டலில் டிராப் செய்துவிட்டு மீண்டும் நண்பனோடு மாலைவந்து சந்திப்பதாக கூறி  விடைபெற்றேன்
                                                    =======================

மாலை வந்தது ,நண்பனுடன் சந்திக்க சென்றேன் ,சில வழக்கமான விசாரிப்புகள் ,பேச்சுகளை முடித்து பிறகு ,பிசினெஸ் பற்றி விளக்குவதாக கூறி லேப்டாப்பை எடுத்தார் ,இந்த  பிசினஸ் எப்படி செய்வது ,அதன் கூறுகள் என்று விளக்கினார் ,முடித்தார்
நண்பனை பார்த்தேன் ,அவன் கொட்டாவி விட்டான் ,எனக்கு தூக்கம் வருவது போல் இருந்தது ,

இத பத்தி சொல்றதுக்குதான் அங்கிருந்து வந்தியா , e-commerce ' பில்ட் அப் குடுத்தியடா ,

கடைசில பாத்தா ஆளு செத்து விடுற வேலையா , இந்த  ஆளு புடிக்கிற வேலைக்குதான் இங்க ஆயரம் பேரு சுத்துரான்களே

இப்பகூட மூணு பேரு என்னைய தொறத்தோ தொரத்துன்னு தொரத்துறாய்ங்களே

இந்த எம்.எல் ,எம் பிசினஸ் பண்றவுவிங்க தொலை தாங்க முடியலைங்க ,இந்த பிசினெஸ் செய்யும் நண்பர்கள் கண்டாலே அலறியடித்து ஓடி ஒளியிறேன்,
மீட்டிங் என்று அழைத்து செல்வார்கள் , இந்த பிசினெஸின் சிறப்புகளை எவராவுது  விளக்கோ விளக்கென்று விளக்குவார்கள் ,அதன் பிறகு இதில் சாதனை புரிந்தவர்கள் வரிசையாக வருவார்கள் ,இந்த பிசினெஸ் அவர்கள் ஏன் செய்கிறோம் காரணம் கூறுவார்கள்

கஞ்சிக்கு வழியிலாம கிடேந்தேங்க,குடும்பத்தோட மருந்த குடிக்கலாம்னு இருந்தேங்க ,மருந்து மூடிய தெறக்க போறேன் ,ஒரு நண்பர் வந்து தட்டிவிட்டாருங்க ,அடப்பாவி ஏன்டா மருந்த குடிக்க போற ,உனக்கு நா நல்ல வழிய காட்டுறேண்டானு இந்த பிசிநெசுல சேத்துவிட்டாருங்க ,இன்னிக்கி நா நெலையில இருக்கேங்க ,பொண்டாட்டி பிள்ளையோட சந்தோசமா இருக்கேங்க

உடனேகூடி இருக்குறவுங்க  கையி தட்டுவாங்க பாருங்க பில்டிங்கே இடிஞ்சு விழுந்துடும்

அன்று இரவு 11 மணி ,போன்அடித்தது எடுத்தால்
"ஹலோ "
" மணி , அச்சு கோபன் ஸ்பீகிங் "
"என்ன மணி டீம் பார்ம் பண்ணிடலாம "
போடா பொங்கி





Read More

22.3.11

அவள் பெயர் ரம்யா


இன்று :
               மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ,மக்கள் பேருந்துகளில் ஏறுவதும் ,உதிருவதுமாய் இருந்தனர் ,நான் தூத்துக்குடி பஸ் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன் ,குமித்து வைக்க பட்ட பூரிகள் ,இட்லிகளை  , காட்டி கையை பிடித்து அழைக்காத குறையாக சிறிய மெஸ்க்காரர்கள் வருவோர் போவோர்களைஎல்லாம்  அழைத்து கொண்டிருந்தார்கள் ,ஒரு சி .டி கடையை கடந்த போது 'சார் நேத்து ரிலிஸ் ஆனா காவலன் இருக்கு சார் வாங்க சார் 'என்றான்  அந்த கடையின் சிப்பந்தியாளன்.அவனை அலட்சியபடுத்தினேன் '   திருச்செந்தூர் ,தூத்துக்குடி ' என நடத்துனர் கூவிகொண்டிருந்தார் ,உள்ளே ஏறி இருவர் அமரும் சீட்டில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தேன் , அந்த இருக்கை பேருந்தின் நடுப்பகுதியில் இருந்தது , சிறிது சிறிதாக பயணிகள் இருக்கையை ஆக்கிரமித்து கொண்டிருந்தார்கள் ,பேருந்து தொலைக்காட்சியில் ரஜினி அண்ணாமலையாக மாறி பால் விற்று கொண்டிருந்தார் 
"அஸ்வின் பேசாமா  ஆடாம வா ," என்ற குரல் கேட்டு தலையுயர்த்தி பார்த்தேன் ,இவள் இவள் 
........அவளுக்கு பின்னால் அவளுடைய கணவனாக இருக்க வேண்டும் ,அவள் தோளில் ஒரு பெண் குழந்தை , 

"மம்மி  நா ஜன்னல் ஓரத்துலதான் உக்காருவேன் "
"அஸ்வின் அடம் பிடிக்க கூடாது ,மம்மிக்கு கோவம் வரும் "
 மூன்று பேர் அமரும் சீட்டில் எனக்கு நேராக அமர்ந்தார்கள் ,அவள் கணவன் கடைசியாக அமர்ந்தான் ,அவள் எதேச்சையாக இடது புறம் திரும்பி என்னை பார்த்தாள் ,அவள் கண்களில் மெலிதான ஆச்சிரியம் பரவியது என்னால் உணர முடிந்தது ,கிட்ட தட்ட பத்து ஆண்டுகளுக்கு பின்னால் இப்பார்வை சந்திப்பு நிகழ்கிறது ,அவள் பெயர் ரம்யா
                                                


அன்று 

          அப்போது நான் 10 ம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன் ..அது ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளி 
" டேய் மாப்ளே என்னடா வண்டில வந்துருக்க " நவீன்
"அண்ணே வண்டி டா ஊருக்கு போய்ட்டான் அதன் கொஞ்சம் கெத்தா  இருக்கட்டும்னு வண்டில வந்தேன் "

"என்னடா டெய்லி லேட்டா வர்ற  அந்த மாநகராட்சி ஸ்கூல் பொண்ண விரட்டிக்கிட்டு போனியாக்கும் " விஜய்

"டேய் இவன் வேஸ்ட்ரா  இவானவுது அந்த பிள்ளையை கரெக்ட் பண்றதாவுது " நவீன்

"டேய் மாமா  அனிதா போறடா "
"ஏய் அனிதா " 

"என்ன  கண்டுக்காம போற ஓம் மேட்டர வெளியில சொல்லவா,சரி உன் டிபன் பாக்ச  குடு  "
முறைத்தாள்

"அதெல்லாம் கொடுக்க முடியாது "அனிதா
"என்னது குடுக்க முடியாதா நேத்து ஓம் பேக்ல பாத்த மேட்டர ஸ்கூல் புல்லா பரப்பி விட்ருவேன் " 
கோபமாக என்னிடம் டிபன் பாக்சை குடுத்தாள்
"இன்னிக்கும் அதே வறட்டு சப்பாத்தி தானா , சரி நீ  போ நாங்க சாப்பிட்டு கிளாஸ்ல டிபன் வந்து குடுக்கிறோம் "
"என்னடா அது பேக்ல பாத்த " நவீன்
"என்னடா விஜய் சொல்லிடுவோம "
"வேணாம்டா இவன் ஊரெல்லாம் பரப்பி விட்ருவான் "விஜய்
"சும்மா சொல்லுங்கடா "நவீன்
"டேய் அதாண்டா அந்த பொம்பளைங்க சமாச்சாரம்"விஜய்
"ஒ அதுவா "நவீன் 
"சரிஇன்னிக்கு முத பிரியட் யாரு "
"அந்த மூக்கு நோண்டி வாத்திடா  "விஜய்
"அந்தாளு பொண்டாட்டி ஓடிபோனதுக்கு நம்ம உயிரை வாங்ராண்டா "
"ஏன்டா அந்தாளு பொண்டாட்டி ஓடி போச்சு "விஜய்
"ம்ம் இந்த ஆளு  தெனமும் நைட் மூக்க மட்டுமே நோண்டிட்டு இருந்திருக்கான் அதான் ஓடிபோயடுச்சு "
கூட்டாக சிரித்தபடி வகுப்பறைக்குள் நுழைந்தோம் ,நான் நேராக சென்று அனிதாவிடம் டிபன் பாக்சை குடுத்தேன் ,மௌனமாக வாங்கிகொண்டாள்

இன்று 

"சார் டிக்கெட் "
கலைந்த நினைவுகளுடன் திரும்பினேன் ,நடத்துனர் நின்றுகொண்டிருந்தார்
" தூத்துக்குடி ஒன்னு "

அன்று 

இங்கிலீஷ் மாஸ்டர் உள்ளே வந்தார்

" வந்துட்டாண்டா மூக்கு நோண்டி "
" ஐ நீட் சைலென்ஸ் "

"பாய்ஸ் அண்ட் கால்ஸ் ,பப்ளிக் எக்ஸாம் ஸ்டார்ட்டாக போகுது ,எல்லாரும் நல்ல ப்ரிபேர் பண்றீங்களா "

கோரசாக எல்லோரும் எஸ் சார் என்றாகள் 
"உங்க எல்லோருக்கும் இன்னொரு அனௌன்ஸ் மென்ட் வந்திருக்கு "
"பக்கத்தில இருக்கிற அருள் மலர் கான்வென்ட்தான்  உங்க எல்லாத்துக்கும் சென்ட்ரா போட்ருக்கு "
"என்னடா அங்க போட்ருக்காங்க"
"டேய் அங்கதாண்டா ஓம் முன்னால் டைவா படிக்குது "விஜய்
"யாருடா "நவீன்
"டேய் எய்த் ஸ்டான்டர்ட்ல படிச்சுச்சுள்ள அதாண்டா ரம்யா "விஜய்
"ஓ அவளா அவ அங்கையா படிக்கிறா அவ அப்பயே  ஆளு கும்முன்னு இருப்பா ,அவ அங்கதான்  படிக்கிறாளா " என்றேன் 

இன்று 

பேருந்து ஒரு மோட்டலில் நின்றது , " வண்டி ஒரு பத்து நிமுசம் நிக்கும் ,காபி ,டீ,டிபன் பண்றவுங்க ,பத்துநிமுசத்துக்குல வந்துடுங்க "
நான் வேகமாக கீழிறங்கி ஒரு சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி பற்றவைத்தேன்

அன்று 

பப்ளிக் எக்ஸாம் தொடங்கியது அருள் மலர் கான்வென்ட்
"டேய் மாப்ள என்னைய அந்த கடேசில தூக்கி  போட்டாங்க  டா  நீ எங்கடா  "நவீன்
"டேய் அதுகெடக்கட்டும் டா .... எங்கடா அவளா காணோம் "
"டேய் அப்படியே மெதுவா திரும்பி பாரு படில வந்துட்டு இருக்கறா பாரு "விஜய்
நான் மெதுவாக திரும்பி பார்த்தேன் முன்னைக்கு இப்போது கொஞ்சம் பெருத்திருந்தாள்
நான் அவளிடம் நேராக சென்று
"ஹாய் "என்றேன்
அவள் என்னை யாரென்று தெரியாத மாதிரி பார்த்தாள்
"ஹேய் ரம்யா என்னை ஞாபகமில்லையா "
" ஹேய் ரகு நீயா இப்ப மீசை வச்சு பெரியாளு மாதிரி இருக்கியா அதான் அடையாளம் தெரியல ,எப்படி இருக்க ,சரி எங்க ஸ்கூல்ல  என்ன பண்ற "ரம்யா
"இங்க தான் எக்ஸாம் செண்டர் "
"ஒ அப்படியா எக்ஸாம் லாம் எப்படி பிரிப்பர் பன்னிரிக்க "ரம்யா
"அது பண்ணீருக்கேன் "
" ஏய் ரம்யா இப்ப முன்ன விட  நீ ரொம்ப அழகா இருக்க "
"ம்ம் அப்படியா நா அழகா இருக்கென இல்லியா லாம் எக்ஸாம் ல கேட்டுகிட்டு இருக்க மாட்டாங்க ஒழுங்கா எக்ஸாம் எழுதி பாஸ் பண்ற வழிய பாரு "முறைத்தபடி சென்றாள் 
"என்ன டா மாமா கிளி சிக்காது போல "நவீன்

"டேய் பொண்ணுங்க எப்பவுமே ஆரம்பத்துல்ல இப்படிதாண்டா  பிகு பண்ணுவாளுக  பாத்துக்குவோம் "

இன்று 

பேருந்து இருமியது ,என் இருக்கைக்கு முன்னேறினேன் ,அமரும் பொழுது மீண்டும் பார்வை சங்கமித்தது

அன்று 

"ரம்யா "
"என்ன "
"நா ஸ்ட்ரைட்டாவே விசயத்துக்கு வரேன் நா உன்னைய லவ் பண்றேன்

 I  LOVE  YOU "

"இந்த மாதிரில்லாம் என்கிட்டே பேசாத....... இதன் உனக்கு லாஸ்ட் வார்னிங் இனிமே இந்த மாதிரி டார்ச்சர் பண்ண எங்க ஸ்கூல்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் "ரம்யா 
இரண்டு நாள் ஆனது 
"டே  நாள களிச்சோட எக்ஸாம் முடியுது அவ என்னடா சொல்றா "விஜய் 
"இன்னைக்கு எக்ஸாம் முடியட்டும் "
எக்ஸாம் முடிந்ததது 
"டேய் சைக்கிள் எடுற அவ பின்னாடிய போவோம் "
"போயி "நவீன் 
"டேய் வாடா தம்மு வாங்கி குடுக்கிறேன் கூட வர்ற ஜெயசங்கரியை வேணும்னா நீ கரெக்ட் பண்ணுடா "
"டேய் என்னக்குனு ஒரு டேஸ்டே இல்லேன்னு நெனச்சிகிட்டியா அதெல்லாம் போய் எவனவுது பாப்பானாடா "நவீன் 
"சரி சரி வா அவளுக கெளம்பீட்டாலுக  பாரு "
பின்னாலே சென்றோம்  சென்றோம் திடிரென்று ரம்யா சைக்கிளை நிறுத்தினாள்
"எதுக்கு ஏன் பின்னாடியே வர்றீங்க " என்றாள் ரம்யா கோபமாக 
"நீதான் ஓகே சொல்ல மாட்டேன்கிறேல அதான் "
"அதுக்கு இப்படி பின்னாடியே வந்தா ஓகே சொல்லீடுவேனா "
"ஏன் என்னைய உனக்கு புடிக்கைலையா  "சில நிமிட முறைப்புக்கு பிறகு மெலிதாக ஒரு புன்னகை 
"சரி நாளைக்கு எங்க வீட்டுக்கு வா யாரும் இருக்கமாட்டாங்க "போய்விட்டாள்

"டேய் மாப்ள சிக்கீடுச்சுபோல தம்ம மட்டும் வாங்கி கொடுத்து டென்சன் ஆக்காத ஒழுங்கா பீர் வாங்கி குடு "
"சரி வா போவோம் "
அடுத்த நாள் 

சுசுகி சமுராய்யில்    ஜம்பமாக சென்றேன் அவளது வீட்டின் முன் நிறுத்தி ஹாரன் அடித்தேன் வெளியில் வந்தாள் 
கேட்டை திறந்து என்னை உள்ளே அழைத்தாள் அவள் வீட்டு  நாய் என்னை பார்த்து குரைத்தது.வீட்டில் யாரும் இல்லையா என்றேன் யாரும் இல்லை என்றாள்.
சோபாவில் அமர சொன்னாள் .அமர்ந்தேன் .
"அப்பறம் என்ன சாப்பிடுற "ரம்யா
" ம்ம் bournvita  இருக்கா"
மாடி படியில் இருந்து யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்டது .
"யாரும்மா இது "
"என் கிளாஸ் மேட ப்பா"
"உன் பேரென்னப்பா "
"ரகுநாதன்  அங்கிள்  " என் கால்கள் லேசாக நடுங்கியது
"சரி நா வரேம்மா தம்பிக்கு  ஏதாவுது சாப்பிட குடு "
வீட்டுல யாரும் இருக்க மாட்டார்கள் என்று கூறினாளே
"எங்க அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர்"   ரம்யா 
"வீட்ல யாரும் இல்லைன்னு சொன்னியே "
"ஆமா சொன்னேன் இங்க பாரு எனக்கு அம்மா கிடையாது போன வருசத்தான் இறந்தாங்க .அவுங்களோட ஆசை நா எப்படியவுது படிச்சு நல்ல பெரிய  டாக்டர் ஆகணும்க்ரதுதான் .எங்கம்மா ஆசை தான் என் ஆசையும் .உன்ன மாதிரி பொறம்போக்கு எல்லாம் என்னால லவ் பண்ண முடியாது .என்ன புரிஞ்சுச்சா"   ரம்யா 
"இல்லை ரம்யா என்ன சொல்ல வர்றேனா "
"பொறம்போக்குனு  திட்டியும் உனக்கு புத்திவர்லேல  அண்ணா"என்றாள்
கடா மாடு மாதிரி ஒருத்தர் உள்ளேருந்து வந்தார் 
"இவருதான் எங்க அண்ணா ரமேஷ் மிலிடரிலருந்து  லீவுல வந்திருக்கார் "
"அண்ணா இவன் என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கறான் "என்றாள் 

வந்தார் என் சட்டையை பிடித்து கொத்தாக தூக்கி கன்னத்தில் மாறிமாறி ஐந்து முறை அடித்தார் .எனக்கு தலை சுற்றுவது போல் இருந்தது ரம்யாவும்  அவள்  அண்ணனும் எனக்கு மங்கலாக தெரிந்தனர். என் வலது  கையை தூக்கினேன் கையோடு சேர்ந்து ஐந்து கை வந்த மாதிரி இருந்தது .ஐந்து நிமிடத்திற்கு பிறகு தெளிந்தேன் என்று நினைக்கிறேன் .என்னை வெளியில் போக சொன்னாள் .வெளியில் வந்தேன் நாய் குரைத்தது .நல்ல வேளை நாயை விட்டு கடிக்கவிடவில்லை என்று சந்தோசப்பட்டு தலையை தொங்க போட்டு கொண்டு வெளியில் வந்தேன்

இன்று 

"தூத்துக்குடி புது பஸ்டாண்ட் லாம் எறங்குங்க " என்றார் கண்டக்டர் ,எங்கே பார்வை சங்கமித்து விடுமோ என்று பதறி வேகமாக இறங்கினேன் 


டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு(நாங்களும் மீள் பதிவு போடுவோம்ல ) ,கிட்டத்தட்ட ஒரு உண்மை கதையின் நகல் ,ஆங்காங்கே பட்டி ,டிங்கரிங் வேலைகள் பார்த்திருக்கிறேன் 





Read More

18.3.11

சோப்பு,சீப்பு ,கண்ணாடி -4

இனிய நட்புகளுக்கு வணக்கம் 

                                               தமிழக தேர்தல் நிலவரம் நாளுக்கு நாள் கலவரமாக மாறிக்கொண்டுவருகிறது ,அரசியல் நாடகத்தில் அனைவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடிக்கின்றனர் (ஆனா பிச்சை எடுக்க போறது நாம),சிறிது  நாட்களுக்கு முன்னால்தான் 'ஸ்பெக்ட்ரம் அணி  ' ஒரு நாடகத்தை நடத்தியது , இப்பொழுது 'அம்மா அணி ' ,(நடத்துங்க நடத்துங்க .......இதை எல்லாம் நம்புவதற்கும் உங்களுக்கு ஒட்டு போடுவதற்கும் நாங்கள் இருக்குறோம்)

சோப்பு :
நேற்று ஒரு வார இதழில் இரு  செய்தி படித்தேன் 


குஷ்பு - ஸ்பெக்ட்ரம் லாம் ஒரு பிரச்சனையே கிடையாது 
                                                        

ஆமாமா ,

மேடம் ஒரு சிறு ஆலோசனை 
 நீங்க 'கலாச்சார காவலர்களான ' விடுதலை சிறுத்தைகள் ,அய்யா தமிழ் குடிதாங்கி ,இவர்களோடு சேர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும்  ,அப்போது நீங்கள் 'ஜாக்பாட் ஜாக்கெட்டுடன் ' பிரச்சார மேற்கொண்டால் உங்கள் அணி அதிக ஒட்டு வாங்கும் என்று நினைக்கிறேன் 

சீமான் - விஜய் கொடுக்கு சும்மா விடாது கலைஞரே 

 கர்ர்ர்ர்ர்ர்ர் தூ ஊஊஊஉ ,சீமான் கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்க ,நாகபட்டினத்துல மீனவர்கள் கூட்டத்துல கலந்துகொண்டு ஆறுதலா நாலு வார்த்தை பேச சொன்னா ,என்ன பேசுனாரு இவரு ,நீங்க கொத்து கொத்தா செத்து போங்க ,உங்களுக்கு வேலாயுதத்துல ரெண்டு குத்து பாட்டு வைச்சுருக்கேன்னு  சொல்றாரு ,
மேலும் எஸ்.ஏ.சியின் 'சட்டப்படி குற்றம் ' பட பாடல் வெளியீட்டு விழாவில் 


"விஜய் மாதிரி நல்லவங்களை ஏன் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு தடுக்கிறீங்க? அவர் வரலைன்னா மொள்ள மாரிகளும், முடிச்சவிக்களும்தான் அரசியலுக்கு வருவாங்க. நல்லவங்க ஒதுங்கி போறதுதான் கெட்டவங்களுக்கு வசதியா போவுது என்று கொதித்தார் சீமான். சத்யராஜ், செல்வமணி போன்றவர்களும் இதே கருத்தை வலியுறுத்த எஸ்.ஏ.சி முகத்தில் கொள்ளாத சந்தோஷம் கரை புரண்டு ஓடியது."

இவரு ஒரு ஆளுப்.............. இவருக்கு ஓட்டுப்....... போடனுமாக்கும் 


சீப்பு :

பொதுவாக நாயன்மார்கள் பட்டைதான் அடிப்பார்கள் ,ஆனால் இந்த புதிய '63 நாயன்மார்களுக்கு ' நாமாம் போட்டுவிடவேண்டும் 

கண்ணாடி :

                                   
.பன்மோகன் :எனக்கெதுவும் தெரியாது எனக்கெதுவும் தெரியாது 

உதவியாளர் : சார் சார் இது நீங்க எந்திருச்சு பல்லு வெளுக்குற டைம் சார் .அதான் சார் உங்களை எழுப்புனேன் 

மக்கள் : சார் உங்களுக்கு என்னதான் சார் தெரியும் 


....................................................................................................................................................................

NEW MATRIC SYSTEM IN INDIA

100 CRORE       =1 YEDI
100YEDI            = 1 REDDY
100REDDY        = 1 RADIA
100 RADIA        = 1KALMADI
100 KALMADI  =1 PAWAR
100 PAWAR      =1 RAJA
100 RAJA          = 1 SONIA

JAIHIND

....................................................................................................................................................................

சூப்பர் கவிதை :

உன்வலியில் பிறந்ததாலோ 
என்னவோ 
 வலிக்கும் 
போதெல்லாம் 
'அம்மா அம்மா '
என அழைக்கிறேன் 



....................................................................................................................................................................

மொக்கை  :

அவளுக்கும் என்னை 
பிடிக்கவில்லை 
எனக்கும் என்னை 
பிடிக்கவில்லை 

அதனால் நாங்கள் இருவரும் 


என்னை இல்லாமல் 
தோசை சுட்டு 
சாப்பிட்டோம் 

....................................................................................................................................................................




ம்ம்ம் பெருமூச்சு 






Read More

7.3.11

அடிச்சிட்டோம்ல அரைசதம்

                                .50 வது பதிவு .வாழ்க்கையை இன்னும் பரிசோதனை முயற்சியாகவே மேற்கொண்டு வருகிறேன் 

அழுத்தி வைக்க பட்ட 
மெளனங்களோடும் (உள்ளே )

அள்ளி தெளிக்க பட்ட 
மகிழ்ச்சியோடும் (வெளியே )

வளைய வருபவன்

ஏட்டு சுரக்காய் கரிக்கு உதவாது என்பது போல ,என் ஏட்டு படிப்பு எதற்கும் உதவவில்லை ,படித்த முடித்த கையேடு வேலைக்காக ,சென்னை ,பெங்களூர் ,கேரளா ,ஹைதரபாத் என்று ஏழு வருடத்தில் அதிக படியாக பயணங்களிலே வாழ்க்கை கழிந்திருக்கிறது ,பலவிதமான வேலைகள் பார்த்திருக்கிறேன் ,அப்படி பார்த்ததிலே மிகவும் கஷ்டமான வேலை செல்போன் டவரில் ஏறி வேலை செய்தது......... என்பதடி டவரின் உச்சியில் ஏறி டிஷ் ஆன்ட்டெனா, GSM மை பிட் செய்வது ,கேபிளை கீழிருந்து மேல் உச்சிக்கு இழுத்து பிறகு மேலிருந்து கீழாக ரூட் செய்து கொண்டு வந்து உஸ்ஸ் அப்பா ............. ட்டவ்சர் கிழிந்துவிடும்(உண்மைலே பல முறை கிழிந்திருக்கிறது )   நல்ல பணிதான்  ஆனால் சரிவர சம்பளம் குடுக்காத காரணத்தினால் தெறித்து ஓடி வந்துவிட்டேன் 

தமிழ் நாடு முழுவதும் சுற்றி இருக்கிறேன் ,இனிமேல்ஊர்  சுற்றியது போதும் என்று நம் மாண்புமிகு மின்சாரத்துறைஅமைச்சர்  ஆற்காட்டாரின்  மறைமுக உதவியோடு பிழைத்து வருகிறேன் ,அதாவுது , யு.பி.எஸ் ,இன்வெர்டர்ஸ் ,பாட்டரி என்று சுயமாக தொழில் செய்து வருகிறேன் ,வேறு சில தொழில்களும் செய்து வருகிறேன் ,வாழ்க்கை வண்டியை தள்ளி வருவது கடினமாக இருந்தாலும் பழகிவிட்டது

வாசிப்பு எனக்கு சிறுவயது முதலே பிடித்தாமானதாய் இருந்தது ,ஆனால் பள்ளி பாடம் புத்தகம் மட்டும் உஉவ்வே................. வெறும் காதல் கதைகள் ,க்ரைம் கதைகள் என்று மட்டும் தான் வாசிப்பை நிறுத்தி வைத்திருந்தேன் ,பிறகு அது சலித்து போய்விட்டது எளிதாக முடிவை யூகிக்கும் அளவிற்கு வாசிப்பானுவபம் வளர்ந்து விட்டது ,பிறகுதான் இலக்கிய தரமான கதைகளை நாடினேன் ,அப்படி படித்ததுதான் கா.நா.சுவின் பொய்த்தேவு ,சோமு என்கிற மனிதனின் வாழ்க்கை பின்னாலே சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது ,இலக்கிய சூழலில் வெகுவாக கவனிக்க பட்ட நாவல் ,பிறகு
ஜெயகாந்தனின் சிறுகதைகள்
சுஜாதாவின் கதைகள் ,அவர் இறந்த பின்புதான் அதிகமாக அவரை வாசிக்க ஆரம்பித்தேன் ,இப்படியாக முக்கிய தலைவர்களின் வரலாறுகள் படிப்பது ,ஆய்வு நூல்கள் படிப்பது என்று என் வாசிப்பின் திசையை மாற்றி கொண்டேன்

எனது கல்லூரிக்காலத்திலே ப்ளாக் என்று ஒன்று இருப்பதை அறிந்திருக்கிறேன் ,ஆனாலும் தீவிர கவனம் பெறவில்லை ,இரண்டு வருடத்திற்கு முன்பே இப்பொழுதைய பெருந்தலைகளின் பதிவுகளை படித்து வந்தேன் ,இவர்கள் எப்படி இவ்வளவு பிரபலம் ஆனார்கள் என வியந்தேன் ,போன வருடம் மே மாதத்தில் முன்பு வேலை பார்த்த கம்பெனியில்  அக்கௌன்ட் செக்சனில் வேலை பார்த்த பெண் தமிழ்மணத்தை ஓபன் செய்து பார்த்து கொண்டிருந்தார் ,அதை பார்க்க நேர்ந்தது ,இதன் மூலமாக எல்லோரும் பிரபலாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது

ஆஹா மணி ஓபன் பண்றா  ப்ளாக்க  நாமளும் நாலு பேருக்கு இம்சைய குடுப்போம் ,இப்படியாக எனது வலைப்பதிவு  வரலாறு தொடர்கிறது ,தொடருமா என்றால் சந்தேகமே ?

நேற்று பகலில் வீட்டிற்கு உணவருந்த சென்ற பொழுது வீட்டில் இரு பெரியவர்களை உபசரித்து கொண்டிருந்தார்கள் எங்கள் வீட்டு பெரியவர்கள் ,நான் அவர்களை இதுவரை பார்த்ததில்லை ,என் அப்பத்தா வெகு இயல்பாக உரையாடி கொண்டிருந்தார் .நான் அவர்களிடம் "வாங்க " என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டேன் ,மீண்டும் வெளியில் வந்த பொழுது அவர்கள் கிளம்பி கொண்டிருந்தார்கள் ,அப்பாட போயிட்டாய்ங்க என்று டிவி பார்க்க ஆரம்பித்தேன்

உணவருந்தும் பொழுது அம்மாவிடும்
"வந்தைவிங்க யாரு "
"உன்னைய மாப்பிளை கேட்டு வந்தாங்கடா "
"என்னயாவா"
மீண்டும் "என்னைவா "(ப்பாரா நம்மலகூட மாப்பிள கேட்டு வர்றாய்ங்கலே)
"நீங்க என்ன சொன்னீங்க "
"இப்போதைக்கு பொண்ணு பார்க்கிறமாதிரி இல்லைன்னு உங்க அப்பா சொல்லீட்டாருடா "
அப்பாடி த்தப்பிச்சேண்டா சாமி ,எல்லாம் எங்கப்பத்தா பண்ணுகிற வேலை எனக்கு சீக்கிரம் திருமணம் செய்து விட வேண்டும் ,முயற்ச்சிக்கிறார்

திருமணம் என்பது ஒரு சரியான கமிட்மென்ட் ,திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை வேறு ஒரு திசையில் செல்லும் ,ஆனால் என் பள்ளி நண்பர்கள் ,கல்லூரி நண்பர்கள் நிறைய பேருக்கு திருமணம் ஆகி குழந்தை கூட இருக்கிறது ,அதற்காக இவனுக்கு வயாதகிவிட்டது என்று நினைத்து விடாதீர்கள் , எனக்கு இப்பொழுதான் 26 வயதே நடக்கிறது ,இந்த மே 6 வந்தால்தான் எனக்கே 27 வயதே தொடங்கும் ,இன்னும் ஒன்றை வருடமாவது செல்லும் திருமணம் செய்து கொள்ள 

ஓவர் மொக்கையா இருக்கா............ வேண்டுமென்றால் எனது பள்ளிகாலத்தில்  இறுதியில் நடந்த இரு சம்பவங்கள் கூறுகிறேன் சிரித்து விட்டு போங்க 

  1. அன்று பதினொன்றாம்வகுப்பு என்று நினைக்கிறேன் ,வகுப்பு தொடங்கியது ,முதல் பீரியட் ஆங்கிலம் ,ஆங்கில ஆசிரியர் வந்தார் ,மிகவும் நல்ல ஆசிரியர் படம் நடத்துவதற்கு பதிலாக அதிகமாக கதை சொல்லுவார் ,ரோமியோ ஜூலிஎட்,ஹாம்லெட் , ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் குறித்த உலகின் முதல் கிரேக்க நாடக கதை (ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் கிட்ட தட்ட அதன் பின்னணியில் பாலுமகேந்திரா படம் எடுப்பதற்காக ஜெயமோகனால் எழுதப்பட்ட "அனல்காற்று ",  நாவல் சமீபத்தில் தான் படித்தேன் ,காமத்தின் மன அதிர்வளைகளுடன் போராடும் ஒருவனின் அவனது பார்வையில் கூறப்படுவதாக இருக்கும் )ஆனால் அன்று என்ன நினைத்தாரோ பாடம் எடுக்க போகிறேன் என்று கூறினார் ,ஆங்கில துனைபாட பாட நூலை வாங்கினார் ,அந்த புத்தகம் முழுவதும் கதைகளாகத்தான் இருக்கும் வில்லியம் ஷேக்ச்பியரின் " Twelth night"
எடுக்க போவதாக அறிவித்து "twelth night" போர்டில் எழுதினார் ,அப்பொழுது கீழே ஆபீசில் இருந்து அழைப்பு வரவே ,அப்படியே நிறுத்தி விட்டு சென்று விட்டார் 
முதல் இரண்டு பெஞ்ச்களில் பெண்கள் அமர்ந்திருப்பர் ,நான் அதற்க்கு பின்னால் அமர்ந்திருப்பேன் ,எழுந்தேன் ,போர்டு அருகே சென்றேன் ,"twelth" அழித்து "first" என்று மாற்றினேன் ,வகுப்பறையே சிரிப்பலையில் ஆழ்ந்தது ,அந்நேரம் பார்த்து மீண்டும் ஆபிசில் இருந்து ஒருவர் வந்தார் ,டெர்ம் பீஸ் கட்டாதவர்களை correspondent அழைப்பதாக கூறினார் ,சில மாணவர்களில் கூட்டமாக சென்றோம் ,அந்த பள்ளியில் குறித்த தேதியில்  பீஸ் கட்டவில்லைஎன்றால் வீட்டிற்கு அனுப்பி விடுவர் ,வீட்டிற்கு சென்று  பணத்தை வாங்கி வரவேண்டும் என்று கூறுவார் ,இதற்காகவே நான் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியே பீஸ் கட்டுவேன் ,அப்பொழுதானே நன்றாக ஊர் சுற்றலாம் ஹி ஹி ஹி ,ஆனால் நான் சென்றவுடன்  பிரின்சிபால் ரௌண்ட்ஸ் வந்திருக்கிறார் ,எல்லா வகுப்பறையும் அமைதியாக இருக்க இந்த வகுப்பறையில் சத்தம் வருகிறதே என்று எட்டி பார்த்திருக்கிறார். கட் .........அடுத்தநாள் நான் வழக்கம்போல்  பள்ளி சென்றேன் ,வகுப்பறைக்கு சென்றதுதான் தாமதம் ,உன்னை கீழே அழைக்கிறார்கள் என்று செய்தி வந்தது , கீழே சென்றேன் ,பிரின்சிபால் ரூமிற்கு அழைத்து சென்றார்கள் ....correspondent டின் மூத்த மகன்தான் ப்ரின்சிப்பால் ,இளைய மகன் ,அந்த பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களை அடிப்பதற்காகவே அவர்களின் சொந்தக்காரர் ஒருவர் வந்து போவார் (லிட்டில் லிட்டில் பண்ணியாரம் ,குட்டி குட்டி இடியாப்பம்  என்று குனியவைத்து முதுகிலே தன்னுடைய கர்லாக்கட்டை கைகளினால் அடிப்பார் பாருங்கள் ,மூச்சே நின்றுவிடும் )இவர்கள் நால்வரும் கையில் பிரம்புடன் நின்று கொண்டிருந்தார்கள் ,உள்ளே சென்றதுதான் தாமதம் ,உங்க வீட்டு அடியா ,எங்க வீட்டு அடியா ,மூச்சு தெனற தெனற அடித்துவிட்டு ............கிரௌண்டில் மணலில் முட்டிங்கால் போடவிட்டாகள் .பெண்கள் எல்லோரும் பார்த்து வாய்க்குள்ளே சிரித்து சென்றது இன்னும் வலிக்கிறது 

2. எங்கள் வீட்டில் ஒரு ஆறு தெரு தள்ளி நடந்த சம்பவம் அந்த சிறய தெருவை அடைத்த  மாதிரி சைக்கிளை நிறுத்தி நானும் என் நண்பனும் அமர்ந்து பேசிகொண்டிருந்தோம் ,நண்பனின் 'ஆள் ' சற்று நேரத்தில் இந்த பாதை வழியாக வருவார் ,வந்து சென்றவுடன் போகலாம் என்று கூறினான் ,இயல்பிலே எனக்கு உதவி மனப்பான்மை அதிகம் (உண்மை காரணம் :நண்பனின் 'ஆள் ' லின் தோழி )திடீரென்று அந்த இடத்தில் இருவர் பிரசனமானார்கள் .இருவரும் கைகளில் லத்தி போல் உருண்டையாக ,நீளமாக ,குச்சி வைத்திருந்தார்கள் ,வந்தசோறில் , என் நண்பனின் தோள்பட்டையில் ஒரு அடி வைத்திருந்தார்கள் ,"ஏண்டா சந்த அடைச்சு போட்ட மாதிரி சைக்கிள நிறுத்தி டாப் அடிக்கிறீங்களா ம்ம்ம் " இன்னொருவர்" சைக்கிள எடுங்கடா " ஆஹா போலிசு மப்ப்ட்டீள வந்திருக்காய்ங்க மீண்டும் என் நண்பனின் முதுகில் அடிவைத்து ,பிறகு என்னை கவனிக்க வந்தனர் ,நான் என் நண்பனை பார்த்தேன் அவன் அதற்குள் சைக்கிளை எடுத்து காத தூரம் சென்று விட்டான் (ஐயையோ சிங்கம் தனியா சிக்கிடிச்சே அசிங்கமா போய்டுமே என்று அந்த தெருவாசிகள் நினைத்திருப்பார்கள் )அந்த இருவரும் மாற்றி மாற்றி முட்டிங்காலிலே அடிக்கிறார்கள் ,நான் சற்று முன்நகர்ந்தால் முதுகில் அடிக்க ஏதுவாகி  விடும் என்ற  காரணத்தினால் அந்த இடத்திலே பரதநாட்டியம் ,கதக்களி ,குச்சுபுடி என கலவையாக நடனமாடி கொண்டிருக்கிறேன் அந்த இடத்தில ,தெரு முழுக்க கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்தனர் ,அதில் நண்பனின் 'ஆள் ' 'ஆளின் ' தோழி , 
அப்படியே அடியை வாங்கி கொண்டு சற்று நகர்ந்து நகர்ந்து ,சைக்கிளில் ஏறி விரட்டி சென்றேன் ,சிறிது தூரத்தில் என் நண்பா இஈஈஈ இளித்தவாறு நின்று கொண்டிருந்தான் 'டேய் உன் கூட வரப்பெல்லாம் யாருக்கிட்டையாவுது அடிவாங்கி குடிக்கிரியடா ,அப்பிடி நா என்னடா துரோகம் செஞ்சேன் " இன்னைக்கு மிஸ்சா ஆய்டுச்சு நாளைக்கு வருவோம் ," என்றான் ,என்னது நாளைக்கு வேறையா "அடப்பாவி முட்டிங்காலுக்கு கீழ விண்ணு விண்ணுனு தெரிக்குதுடா ,இதுல நாளைக்கு வேறையா......... டே அப்படியே ஓடி போய்டு கல் எடுத்து மண்டைய ஒடேச்சே புடுவேன்  " 
பிறகென்ன........... வலியோடு சைக்கிளை ஒட்டி சென்றேன் .ம்ம்ம் இப்பொழுது அந்த தெருப்பக்கம் செல்வதில்லை 

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான்போல வந்தவன யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ ...............................................................ரோ

                                               

Read More

4.3.11

புத்தர்-பௌத்தம் -சில புரிதல்கள்

            
   இந்திய துனைகண்டத்தில் தோன்றிய மிக முக்கிய நான்கு சமயங்களில் மிக முக்கியமான சமயம் பௌத்த சமயம். மற்றவை, சமணம் ,இந்து ,சீக்கியம் .கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது போதனைகள் இந்திய துனைகண்டத்தில் முழுவதும் தழைத்தோங்கியது, ஆனால் இந்தியாவில் கி .பி .பதிமூன்றாவுது நூற்றாண்டிற்குள் சிதைவுற ஆரம்பித்தது ,அதற்குள் அதன் ஆதிக்கம் திபெத்,மத்திய ஆசியா,சீனா,கொரியா.ஜப்பான் ,இலங்கை என பரவி விட்டது 

நான் இங்கு கூறவிருப்பது என்னவென்றால் புத்தரின் தோற்றம் ,போதனைகள் ,பௌத்தம் குறித்த சில புரிதல்கள் .அவ்வளவே .இதில் வரும் பிழைகள் யாவும் என்னையே சாரும் 

                                                                 

புத்தரின் வரலாற்றை படித்த பொழுது ஒன்றை எளிதாக புரிந்து கொண்டேன் ,புத்தர் சோதனைகூடமாக தன்னையே ஆராய்ச்சி செய்து கொண்டார் ,அதன் மூலம் தான் கண்டவற்றை மக்களுக்கு எளிமை படுத்தினார் 

உண்மையென்று நீ உறுதி கூறும் விஷயம் நீயே உனக்காக உணர்ந்திருக்கும் ,பார்த்திருக்கும் ,அறிந்திருக்கும் ஒரு விசயமாக இருக்கவேண்டும் 

இந்திய ஞான மரபில் புத்தரின் போதனைகள் மறுக்க முடியாதவை ,எதையும் பக்குவட்ட பார்வையில் பார்க்கவேண்டும் என்று உணர்த்திய புத்தரை கடவுளாக பார்ப்பது பக்குவமற்றதே

இந்திய துணைக்கண்டத்தின் வடக்கத்திய பகுதியில் பல இனத்தை  சேர்ந்த மக்கள் பரவியிருந்தனர் ,அவர்களுள் சாக்கியர்கள் ஒரு இனம் ,அந்த இனத்தில் தான் புத்தர் பிறந்தார் ,அவர்களின் தலைநகரான கபிலவஸ்த்துவில் ,இது இப்போதைய நேபாளத்தின் lowland terai பகுதியில் உள்ள லும்பினி நகரமாகும் .

நான்கு வர்ணங்கள் :

பிராமணர் : சமய குருமார்களாகவும்  அறிவு ஜீவிகளாகவும் தங்களை நிலைநிறுத்தி கொண்டவர்கள்

சத்திரியர்கள் : ஆட்சிபுரிபவர்கள் ,போரிடுபவர்கள் ,அதிகாரமிக்கவர்கள்

வைசியர்கள் : பொதுமக்கள் ,உற்பத்தியாளர்கள் ,விவசாயிகள்

சூத்திரர்கள் :மற்ற மூன்று வர்ணத்திற்கும் அடிமைகளாகவும் ,வேலைக்காரர்களாக நிர்பந்திக்க பட்டவர்கள்

இதில் இரண்டாம் வர்ணத்தை சேர்ந்தவர்களாக சாக்கியர்கள் தங்களை காட்டிகொண்டார்கள் ,அந்த காலத்திலிருந்தே வர்ணங்களுக்குரிய கருத்தாக்கம் அழுத்தமாக இருந்து வந்திருக்கிறது .புத்தர் மன்னரின் மகனாக பிறந்தார் ,அவரது தந்தையார் பெயர் சுத்தோதனா,தாயார் பெயர் மாயா ,அவர் செலவம் ,இன்பம் ,அதிகாரம் போன்ற மனிதர்களின் இயல்பான ஆசைகளுடனே வளர்ந்திருக்கிறார் ,பதினாறாவுது  வயதிலே அவருக்கு திருமணம் நடந்தேறி இருக்கிறது ,மனைவியின் பெயர் யசோதரா ,சாட்சியாக ரகுலா என்றொரு பிள்ளை

அவருக்கு குறிப்பிட்ட வயதிற்கு மேல்தான் வெளியுலகை வேறு விதமாக பார்க்கநேர்ந்தது ,பாதுகாப்பான வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வந்திருக்கிறது ,ஒரு நோயாளி ,ஒரு முதியவர் , ஒரு பிணத்தை நேருக்கு நேர் சந்தித்த பிறகுதான் அந்த எண்ணம் வலுவடைந்திருக்கிறது

எந்த ஒரு செயலுக்கு ஒரு மாற்று கண்டிப்பாக உண்டு ,ஆனால் மரணத்திற்கு இல்லை .அதை முழுமையாக ஏற்றுகொள்ள வேண்டும் ,அதற்குரிய பக்குவம் காலத்தால் அளிக்க முடியும்

நோய் ,முதுமை ,மரணம் இவற்றை எந்தவொரு பாதுகாப்பான ,செல்வமான ,அதிகாரமான வாழ்க்கையால் தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர்ந்த பின்புதான்  வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் ,பின்பு பரதேசிகளுக்குரிய பரவச நிலையை அடையும் தியானங்களை முயற்ச்சித்திருக்கிறார் ,அப்போது வழக்கத்திலுருந்தவைகள் தான் அவை ,ஆனாலும் சிறிதுகாலத்திலே  இவை பயனற்றது என்பதை உணர்து கொண்டார்

" இந்த என் சான் சதைபிண்டத்தில் அதன் மனமும் அபிப்ராயங்களும் சேர்ந்த நிலையில்தான் உலகமும் உலகத்தின் தோற்றமும் உலகத்தின் முடிவுறுதலும் உலகத்தின் முடிவுகளுக்கு இட்டு செல்கிற வழியும் உள்ளன " 

பிறப்பு வேதனை ,முதுமை வேதனை .நோயும் வேதனை இது போன்ற வேதனைகளுக்கான முடிவுறுதலை அவர் பொது படையாக மனிதனின் கதி பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்

துறவுக்கு ஒரு திட்டவட்டமான நோக்கம் கூட இருந்திருக்கிறது

" எனக்கு தோன்றியது - வீட்டு வாழ்க்கை இறுக்கமானது .அசுத்தமானது ,அதே சமயத்தில் வீடற்ற நிலைக்கு உரிய வாழ்க்கை ,அகண்ட வெட்டவெளி வகைப்பட்டது என்று ,பொந்துக்குள் அடைப்பட்ட நிலையில் ,ஆன்மீக வாழ்க்கையை அதன் ஒவ்வொரு அம்சத்திலும் முற்றிலும் முழுமையாகவும் 
தூய்மையாகவும் வாழ்வது கடினம் "


புத்தர் தன் மூலமாக இந்த உலகத்தை ஒரு பார்வையாளனாகவே பார்த்தார் ,துறவிகளுக்கே உரியது

"ஒரு தாமரை மலர் நீரில் பிறக்கிறது ,நீரில் வளர்கிறது ,நீரிலிருந்து எழுந்து அதற்கு மேல் நீண்டு தரையில் படாமல் நிற்கிறது .நானும் அவ்வாறுதான் .உலகத்தில் பிறந்து உலகில் வளர்க்கப்பட்டு ,உலகை வெற்றிகொன்டாலும்  உலகத்தை மாசுபடுத்தாமல் வாழ்கிறேன் "


                                                                                                         ...............            தொடரும் 




பிழைகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்  


நட்புடன் -
நா.மணிவண்ணன் 







Read More

3.3.11

வாங்குவோமா வரதட்சனை

வரதட்சனை கொடுமை சட்டம் :
    
            இந்திய பாராளுமன்றத்தில் 1983 ம் கொண்டு வரப்பட்டது 

    Passed by Indian Parliament in 1983, Indian Penal Code 498A, is a criminal law (not a civil law) which is defined as follows,

" whoever ,being the husband or the relative of the husband of a woman. subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years 
and shall also be liable to fine. The offence is Cognizable, non-compoundable and non-bailable. "                                                    
நீதியா ? அநீதியா ?
                                                          

       
ஆதிகாலத்தில் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவே திருமண முறை நிருவபட்டிருக்க வேண்டும் ,ஒரு பெண் என்பவள் தனக்கு மட்டுமே உரித்தானவளாக ,தன் ஆளுமைக்கு உட்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற பார்வையே திருமண முறை உருவாக காரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் 

பெண்கள் மீதான வன்முறை காலம் காலமாகவே ஆண்களாலும் ,பெண்களாலுமே பெண்களுக்கு நடந்து வருகிறது ,அது இன்றளுவும் தொடர்வது வருத்தத்துக்குரியதே ,புராணத்திலும் ,வரலாற்றுகாலத்திலும் பெண்களை கடத்தி செல்வது நடந்திருக்கிறது ,அதிலும் குறிப்பாக வரலாற்றுகாலத்தில் தான்   பெண்களை கடத்தி செல்வது அதிகமாக நடந்திருக்கிறது .அதன் பின்தான் பெண்களை வீட்டிற்குள் அடைக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது .பின்பு வந்த சமுகம் பெண்கள் என்றால் வீட்டிற்க் குள்ளேதான் அடைந்து கிடக்க வேண்டும் என்று நிலையை  உருவாக்கி விட்டது 


இது  பெண்கள் மீதான வன்முறைக்கெதிராக கொண்டு வரப்பட்ட சட்டமே 


498-a law


ஒரு பெண் மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ துன்புறத்தபட்டால் ,அவள் புகார் அளிக்கும் பட்சத்தில் அவன் கணவன் மற்றும் கணவனின் உறவினர்கள் மீது இச்சட்டத்தின் கீழ் எந்த விசாரணையும் இல்லாமல் கைது செய்யப்படுவர்  ,அந்த உறவினர்கள் கர்பிணிபெண்ணாகவோ அல்லது குழந்தையாகவோ இருந்தாலும் கூட அந்த கைது நடக்கும்

இந்த சட்டம் ஒரு நல்ல நடைமுறை சட்டமே ,ஆனால் இந்த சட்டம் சரியான 
முறையில் பின்பற்றபடுகிறதா என்றால்  சத்தியமாக இல்லை 

யாருக்கு இந்த சட்டம் நன்றாக பயன்படுகிறது என்றால் 

பேராசைக்கார பெண்களுக்கு, தன்குடும்பம் நன்றாக இருப்பதற்கு பிறர் குடும்பத்தை கெடுத்தாலும் தவறில்லை என்று நினைக்கும் வக்கீல்களுக்கு  ,
லஞ்சம் லாவண்யத்தின் உறைவிடமாக இருப்பவர்கள், தொப்பையை வளர்ப்பதற்கு மிக கஷ்ட படுபவர்கள் ,ஒண்ணா நம்பர் கூஜா தூக்கிகளான போலிஸ் காரர்களுக்கு இச்சட்டம் மிக பயனுள்ளதாக இருக்கிறது 

சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் விளக்கு ,அப்படின்னு பெரியவர்கள் எல்லாம் கூறியிருக்கிறார்கள் 

ஆனால் அதுவல்ல உண்மை 

கொஞ்சம் காசு இருந்தால் சட்டத்தின் ஓட்டைகள் மூலமாக தப்பித்து விடலாம்,நிறைய காசு இருந்தால் ஓட்டைகளை பெருசாக்கி சட்டைத்தையே தூக்கி அதில் வைத்து விடலாம் 

பெண்கள் எடுக்கும் நிலைபாடுகளே அவர்களுக்கெதிராக நடக்கும் வன்முறைகளாக மாறுகின்றன 

இன்று   ஆண்களுக்கு இணையானவர்களாக பெண்கள் வந்து விட்டார்கள் 
,ஆண்கள் செய்யும் தப்புகள் அனைத்தையும் பெண்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் ,அப்படி இருக்க ஆண்களுக்கு எதிராக பேராசைக்கார பெண்கள் பழிவாங்கும் செயலாக இச் சட்டம் பயன்படுத்த படுகிறது இது எந்தவிதத்தில் நியாயம் ,காசு பார்க்க நினைக்கும் வக்கீல் இதற்கு துணை புரிகிறார்கள் 


நேற்று ஒரு தொழில் முறை நண்பர் ஒருவரை  சந்திக்க நேர்ந்தது .அவரின்  குடும்பம் இச்சட்டத்தினால் மிகவும் பாதிக்க பட்டிருக்கிறது என்று மிகவும் வருத்த பட்டார் 


தவறு செய்தது அவர் அண்ணன் ,அதற்க்கு இவரின் வயதான பெற்றோரையும் கைது செய்து ,இவரையும் கைது செய்ய அலைகிறார்களாம் போலீஸ்காரர்கள் 
அதனால் இவர் anticipatory bail உடன் சுற்றி கொண்டிருக்கிறார் 

இது வரை ஒன்றலட்சம் செலவு செய்திருக்கிறார் 

இச்சட்டம் இன்று பணம் கொழிக்கும் சட்டமாக மாறிவிட்டது நீதித்துறைக்கு பெருமையே 



வரதட்ச்சனை வாங்கியவர்களுக்கு இச்சட்டம் வழங்கும் நீதியை விட வரதட்சனை வாங்கதவர்களுக்கு இச்சட்டம் அதிகமாக அநீதியை இழைக்கிறது, அந்த பெண் கொடுத்த வழக்கு உண்மை இல்லை என்று நிருபணமானால் கூட அந்த பெண்ணின் மீது கணவனாலோ அல்லது அவனின் குடும்பத்தாலோ  மான நஷ்ட வழக்கு தொடுக்க முடியாது 


அந்த பெண் வரதட்சனை கொடுவில்லை ஆனாலும் வரதட்சனை குடுத்ததாக புகார் அளித்தால் அந்த கொடுக்காத வரதட்சணையை இவர்கள் குடுக்க வேண்டும் 


கல்யாணம் ஆகாதவர்கள் இனிமேல் பெண்பார்க்கும் பொது இனி இப்படி செய்யலாம் 


பெண் வகையாராவில் எவரேனும் வக்கீலாகவோ ,வக்கிலுக்கு படித்து கொண்டிருந்தாலோ ,போலிசாகவோ,போலிசாக முயற்சித்து கொண்டிருந்தாலோ ,அரசியல்வாதியாகவோ அல்லது அரசியல் வாதியாக முயற்சித்து கொண்டிருந்தாலோ 


அப்படியே பஜ்ஜி சாப்பிட்ட கையோடோ அல்லது வாயோடோ பின்னங்கால் பிடரியில் தெறிக்க  ஓடி வந்துவிட வேண்டும் என்று பாதிக்க பட்ட நண்பர் கூறுகிறார் (எப்படிலாம் தப்பிக்க வேண்டியாத இருக்கிறது )


இனிமேல் வரதட்சனை வாங்குவோமா நாம 








Read More

2.3.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -3

 இனிய நட்புகளுக்கு வணக்கம்

                         தொடர் ஆணிகள் ,பதிவு எழுத முடியவில்லை ,நண்பர்களின் பதிவுகள் படிக்க முடியவில்லை ,வருத்தம் , பதிவுலகத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை தொடங்கிவிட்டது போல ,பெருந் 'தலைகள்' உருள்வதால் நாம் அதை பற்றி கருத்து கூற விரும்ப வில்லை 

சோப்பு :

           1 . தமிழக  தேர்தல் தேதி அறிவிக்க பட்டுவிட்டது ஏப்ரல் பதிமூன்று ,ஆனால் முடிவை தெரிந்து கொள்ள ஒரு மாதம் வரை  மக்கள் காத்து கொண்டிருக்க வேண்டுமா(புதுசால இருக்கு ) ,இங்கு இன்னும் பல கட்சிகள் கூட்டணி குறித்த குழப்பத்தில் வேறு   
உள்ளன . பாவம் அரசியல் வியாபாரிகள்,சீட்டுக்கு அலையும் சில்லரைகள்   என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை ,நமக்கு அந்த கவலை எல்லாம் வேண்டாம் ,வாங்கின காசிற்கு ஓட்ட போட்டமா ,வெரல கரையாக்குனோமா, வந்தோமான்னு இருக்கலாம் 

         பெட்ரோல் மீதான விற்பனை வரி குறைப்பு: முதல்வர் கருணாநிதி 
           
ஐயா எவ்வளவு கோடி நஷ்டம் வந்தா என்ன ,எவன் அப்பன்  வீட்டு  சொத்தோ  ,,தேர்தல் வேற வந்துடுச்சு ,நீங்க நடத்துங்க நடத்துங்க 


சீப்பு :

        இன்று பிளஸ் -டூ தேர்வுகள் தொடங்கி விட்டன ,சில நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு அருகே நடந்த சம்பவம் ,ஒரு பதினெட்டு வயது மாணவனை ஓட ஓட விரட்டி வெட்டியது  ஒரு கும்பல் ,அந்த கும்பலில் ஒருவன் இன்று பிளஸ் -டூ பரிட்ச்சை எழுதவேண்டிய மாணவன் 
      
      
கண்ணாடி :

    சுமார் மூன்று வருடத்திற்கு முன்பு சென்னை கீழ்பாக்கத்தில் சில காலம் வாசம் செய்திருந்தேன் ,(நண்பனின் அறையில் தாங்க நீங்க வாட்டுக்கு வேற எதாவுது கற்பனைக்கு போய்டாதீங்க ) ,அந்த அறைக்கு பக்கத்தில் ஒரு சலூன் கடை இருக்கும் ,நண்பனுக்கு நன்கு பரிச்சியமானவர் ,அன்று வேலை தேடுதல் வேட்டையில் சலித்து போய் அந்த கடைக்கு வந்தேன் ,நண்பன் அங்கு இருப்பதை அறிந்து

என்னடா வேலை என்னாச்சு

அட ஏண்டா நீ வேற

உடனே சலூன் கடைக்காரர்
ஏன் தம்பி வேலை கெடைக்கலையா

கெடச்சிச்சு.............. சம்பளம் கம்மினே

எவ்வளவு........கூறினேன்

ஏந்தம்பி கம்மியான சம்பளத்துக்கு போக மாட்டீங்களா

கொஞ்ச தள்ளி ஒரு ஸ்டாப் இருக்கும் ,அங்க காலைல பார்த்தீங்கனா துணை நடிகைகளா நிப்பாளுக ,அதுகள அள்ளீட்டு போறதுக்கு ஒரு டெம்போ வரும் பார்த்திருக்கீங்களா

பார்த்திருக்கேனே

சும்மா ஏழு வருசத்துக்கு முன்னாடி அந்த கூட்டத்தில ஒருத்தி நின்னா ,இன்னைக்கு அவ லட்சம் லட்சமா சம்பாரிக்கிறா ,ஆனா அன்னைக்கு டெய்லி நூத்தம்பது ரூவா சம்பளத்துக்கு தான் வேலைக்கு போனா ,அவ யாருன்னு தெரியுமா தம்பி

யாருனே அது ....ஆவலானேன்

திரிஷா -அப்படிப்பட்ட திரிஷாவுக்கு குழந்தை புறந்துடுச்சுனு புரளிய
கெளப்பிட்டாய்ங்கலே.............ம்ம்ம் ரொம்ப வருத்தமா இருக்கு


சில பொன்மொழிகள் :

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை

என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை -தோல்வி

புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இருக்கலாம்

எதிர்பார்ப்பதைவிட
எதிர்கொள்ளுவதை
கற்று கொள்ளுங்கள்

ஏனென்றால்

இங்கு
எதிர்பார்க்கும் வாழ்க்கை
கிடைப்பதில்லை

எதிர் கொள்ளும் வாழ்க்கையே
கிடைக்கிறது




சும்மாக்காச்சு :










                                                                                                                                                                                              






நட்புடன் -
நா.மணிவண்ணன்                                             



         
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena