வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

26.5.11

டாக்டர் குஜய் நடிக்கும் " சில்றபய "

             டாக்டர் குஜய்  நடிக்கும் "சில்றபய "  நேற்று உலகமெங்கும் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது ,டாக்டர் குஜயின் தந்தையார் திரு .எஸ்.ஏ.தந்திரசேகர் இயக்கத்திலும் ,  டாக்டர் குஜய்  நடிப்பில் இது வரைஇல்லாதஅளவு  பிரமாண்டமான  படமாக வெளிவந்துள்ளது ,ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது 

 
சில்றபய 
 டாக்டர் குஜயின் வழக்கமான அளப்பரையுடனும் ,குத்துபாட்டுடனும் தொடங்குகிறது ,கவிஞர் தபிலன் எழுதிய  " நாந்தான் சில்றபய ,நாந்தான் சில்றபய " என்ற பாடல் வரிகளும் ,இசைஅமைப்பாளர் டேவிட் ஆண்டனியின்  இசையும் ரசிகர்களை குத்தாட்டம் போடவைக்கிறது

படத்தின் கதை  எளிமையானது ,ஆனால் அதை சொன்ன விதமும் ,டாக்டர் குஜயின் நடிப்பும் ,ஒவ்வொரு காட்சியிலும் தான் ஒரு ' சில்றபய ' என்று நிருபிப்பதிலும் டாக்டர் குஜய் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்

படம் முழுக்க அரசியல் வசனங்கள் பட்டையை கிளப்புகிறது ,ஆனால் 'பன்ச் ' வசனங்களில் ஒன்றில் கூட அரசியல் கலக்காதது 'டாக்டர்  குஜயின் 'சில்றதனத்தை ' காட்டுகிறது 

 படத்தில் தேசிய அரசியில் நுழைவதற்காக எடுக்கும் முயற்சியும் அதுமுடியாமல் போகுபோது அவர் கலங்கும் காட்சியில் தியேட்டரே அழுதது ,அந்த காட்சியில் ,பாகுல் பாந்தி " ரத்தம் வராமா நல்ல ஊம குத்தா அடிச்சு அனுப்புங்க " என்ற போது ரசிகர்களை நோக்கி அவர் பார்க்கும் பார்வை சான்சே இல்ல 'he  is  a  porn born  actor "

தமிழக அரசியலில் அதுவரை எதிர்கட்சியாக இருந்தவர்கள் ,ஆளும்கட்சியாக வந்தவுடன் முதல் ஆளாக சென்று வாழ்த்து தெரிவிப்பதில் தான் சில்றபய என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார் ,அப்படியே அவர்களுடன் சேர்ந்து தன் நிறுவனத்தை  வெற்றிகரமாக நடத்திவருகிறார் .

க்ளைமாக்சில் ஐந்தாண்டுகள் முடிந்து மீண்டும் எதிர் கட்சி ஆளும் கட்சியாக ஆட்சிக்குவர ,இனி இவர்களுடன் இருந்தால் தன் நிறுவனத்தை நடத்த முடியாது என்று தெரிகிறது  ,ஓடிசென்று முதல் அமைச்சர் ச்காலினுக்கு பொன்னாடைபோர்த்துவதும் அப்போது அவர் டாக்டர் குஜய் மீது எச்சிலை  காரி துப்புவதும் ,படத்தின் மிக ஹைலைட்டானா சீன்,

ஆனாலும் அதை அவர் அனாயசமாக எடுத்துகொண்டு ,தன் கர்சீப்பை சுழற்றி கன்னத்தை துடைத்து விட்டு அப்படி முதலமைச்சார் காலில் விழுந்து கதறுவது ,தேசிய விருது அல்ல ஆஸ்காரை அள்ளி கொண்டுவரும்   என்றால் அது மிகையாகாது

ண்ணா கஞ்சா ஏத்தி அடிக்கலைங்க்னா   வெறும் தம்மு மட்டும்தாங்க்னா
       மொத்தத்தில் சில்றபய -ஒரிஜினல் சில்றபய  

                                                       
Read More

25.5.11

காட்டு தர்பார்-1

    
காட்டு  தர்பார் 
  ஓநாய் சேவகர்கள் முகமன் கூற சிங்க ராஜா தர்பாரை நோக்கி நடந்து வர ,மந்திரி நரி ,புலவர்கள் கரடி ,தளபதி சிறுத்தை என அவையோரில் உள்ள அனைவரும் எழுந்து நிற்க ,சிங்கராஜா தனது சிம்மாசனத்தில் அமர்கிறார் ,எல்லோரையும் அமரசொல்கிறார் ,

சிங்கராஜா : ம்ம்ம் மந்திரி அவர்களே 

மந்திரி நரி : மன்னர்மன்னா 



சிங்கராஜா : மாதம் மும்மாரி பொழிகிறதா 

மந்திரி நரி : ம்ம்ம் (பொழியிது பொழியிது ) 

சிங்கராஜா : என்ன சொல்கிறீர்கள் 

மந்திரி நரி :  பொழிகிறது மன்னா ,தங்கள் ஆட்சி அல்லவா 

சிங்கராஜா : ம்ம்ம் நிரம்ப சந்தோஷம் ,நிரம்ப சந்தோஷம் ....... ம்ம்ம் தர்பார் கூடியதற்கான காரணம் என்ன

மந்திரி நரி : தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு நம் காட்டில் நிறைய பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன 

சிங்கராஜா : அதற்க்கும் நமக்கும் என்ன சம்பந்தம் ,தமிழகத்தில்  இப்போது யார் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள் 

மந்திரி நரி : ஓயாமல் ஓய்வு எடுத்து கொண்டிருந்தவர் ஆட்சியை பிடித்திருக்கிறார் ,ஓயாமல்  தமிழக மக்களுக்காக உழைக்கிறேன் என்று 
 ஓயாமல் கூறிகொண்டிருந்தவரை தமிழக  மக்கள் இன்று ஓய்வெடுக்க வைத்திருக்கிறார்கள் 

சிங்கராஜா : அப்படியா ....காமெடி பீஸ் கடிவேலு என்ன ஆனார் 

மந்திரி நரி : அதற்குதான் நமக்கு கேப்டன் குஜைகாந்திடமிருந்து செய்தி வந்துள்ளது 

சிங்கராஜா : என்னவாம் 

மந்திரி நரி : பன்னிபோல் போல் வேடமிட்டு இங்கு பதிங்கிருக்கலாம் என்று செய்தி கூறுகிறது 

சிங்கராஜா : விசாரித்தீர்களா 

மந்திரி நரி : இரவோடு இரவாக தளபதியார் சிறுத்தை விசாரித்து விட்டார் மன்னா அப்படி ஏதுமில்லை 

சிங்கராஜா : அப்படியா பாவம் கைப்புள்ள ,சரி தமிழக முன்னாள் முதல்வரின் மகளை சிறையில் அடைத்து விட்டார்களாமே ,அப்படியா 

மந்திரி நரி : ஆமாம் மன்னா ,நேற்று கூட மகளை  சிறையில் சென்று சந்தித்து ,கலங்காதே கலைமகளே என்று ஆறுதல் கூறி வந்திருக்கிறார் ,அவர்கள் வம்சத்தில் உள்ள ஓவ்வொரு குடும்பமும் குடும்பம் குடும்பமாக சந்தித்து கொண்டிருக்கிறார்கள் 

சிங்கராஜா : கண்கள் பனித்தன இதயம் புளித்தன என்று தலைப்பு மாறி இருக்கிறது ,சரி இந்த பக்ட்ரம்  ஊழலை பற்றி என்ன பேசி கொள்கிறார்கள் தமிழக மக்கள் 

மந்திரி நரி : அதுவா மன்னா ,என்னதான் சி .பீ .ஐ  விசாரித்தாலும் பக்ட்ரம்  ஊழலில் கூசா அடித்த காசு  கவுண்டமணி வடக்குபட்டி ராமசாமியிடம் குடுத்த காசுபோல் ஊ ஊ ஊ ஊ என்று பேசி கொள்கிறார்கள் மன்னா 

சிங்கராஜா : ம்ம் தெளிவான மக்கள்தான் 

மந்திரி நரி : ஆமாம் மன்னா ,அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஐந்து வருடத்துக்கொருமுறை மாற்றி குத்துவது 

சிங்க ராஜா : வேறு என்ன செய்தி

மந்திரி நரி : தமிழக தேர்தல் தொடங்கியதிலிருந்தே நம் காட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை வந்துவிட்டது இப்போது இன்னும் அதிகமாகி விட்டது 

சிங்கராஜா : அப்படியா என் ஆட்சியிலா ,அப்படியென்ன பிரச்சனை 

மந்திரி நரி : ஆங்காங்கே குரங்குகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றன 

சிங்கராஜா : ஏன் 

மந்திரி நரி : குரங்குகளை எல்லாவற்றையும் மீதி மிருகங்கள் டாக்டர் குஜை ,எஸ் .எ .பொந்திரசேகர் என்று அழைக்கின்றனவாம் அதனால் மனமுடைந்த சில குரங்குகள் மருந்தை குடித்தும் ,தூக்கு போட்டும் தற்கொலை செய்துகொள்கின்றனவாம்

சிங்கராஜா : ஆஅ  என்ன செய்யலாம் ,இனி அப்படி கேலி பேசுபவர்களை சிறையில் அடையுங்கள் ,save the  monkey  என்று பிரச்சாரம் செய்யுங்கள் 

மந்திரி நரி : அப்படியே ஆகட்டும் மன்னா ,ஆனால் இன்னொரு பிரச்சனை வந்துள்ளது மன்னா 

சிங்கராஜா : என்ன 

மந்திரி நரி : பச்சோந்தி இனத்தலைவர் தங்களுக்கு ஒரு ஓலை அனுப்பி உள்ளார் 

சிங்கராஜா : ம்ம் படியுங்கள் 

மந்திரி நரி :பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா எடுக்க போகிறார்களாம் 
 அதற்க்கு தாங்கள்தான் தலைமை தாங்க வேண்டுமாம் 

சிங்கராஜா : அவர்தான் இப்போது ஆட்சியில் இல்லையே 

மந்திரி நரி : அவருக்கு இல்லை மன்னா டாக்டர் குஜைக்கு ,அதுவும் நீங்கள்தான் 
அவருக்கு பட்டம் கொடுக்க வேண்டுமாம் 

சிங்கராஜா : என்ன பட்டம் 

மந்திரி நரி : பச்சோந்தி பகலவன் 

சிங்கராஜா : ஐயகோ அவருக்கு அது சரியான பட்டம்தான் ,ஆனால்  நாம்  அப்படி கலந்து கொள்ளாவிட்டால் 

மந்திரி நரி :  அடுத்த ஆட்சிக்கு புலியை ஆட்சிகட்டிலில் ஏற்றுவதற்கு துணை போவார்களாம் 

சிங்கராஜா : ஆகா எப்படியெல்லாம் மிரட்டுகிறார்கள் ,அப்படி கலந்து கொண்டால் குரங்குகள் ஒட்டு சிதறுமே 

மந்திரி நரி : அவர்களை விட  இவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள் 

சிங்கராஜா : அப்படியா சரி கலந்து கொள்கிறேன் என்று ஓலை அனுப்பிவிடுங்கள் 

மந்திரி நரி : ஆகட்டும் மன்னா 

சிங்கராஜா : அரசவை கலையட்டும் மீண்டும் சந்திப்போம் ,ம்ம்ம் யாரங்கே அந்தப்புரத்தில் ராணிகளை தயாராக இருக்க சொல்லுங்கள்





Read More

22.5.11

விடுகதையா இந்த வாழ்க்கை ?


 இந்த வீடியோ என்னுடைய ஆக்கம் இல்லை ,முகபுத்தகத்தில் தோழி ஒருவர் பகிர்ந்தது


Read More

15.5.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -6

 இனிய நட்புகளுக்கு வணக்கம் 
                                               தமிழக தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது .ஆனால் இந்த மாற்றம் ,நிலையான மாற்றமாக இருக்குமா ,அல்லது வரும்காலத்தில் தமிழக மக்களின் நிலை மாறுமா ? (எலி கறி சாப்பிட்டது ஞாபகம் இருக்குல )என்றால் அடுத்த ஐந்து வருட ஆட்சி காலத்திற்கு பிறகு வரும் தேர்தலில் தெரியும் .மொத்தத்தில் ஒரு குடும்ப குடியாட்சி முறையை ஒழிப்பதற்கு உதவிய தேர்தல் கமிசனுக்கு நன்றி உரைப்போம் .அவர்கள் போய் இவர்கள் ,அவ்வளவே .இவர்களால் நம் வாழ்வில் எந்த ஒரு மாற்றம் ஏற்பட போவதில்லை ,நாம் அன்றாடம் உழைத்தால் நமக்கு உணவு 
                            வெற்றியை நாம் கொஞ்சம் அளவுக்கதிகமாக கொடுத்து விட்டோமோ ? 

சோப்பு : 
                        இன்றைய தமிழக சூழலில் இதை விட மிக பெரிய சோப்பு என்னவாக இருக்க முடியும் ,ஜெயா ஊடகங்கள்  மொத்தத்தையும் குத்தகை எடுத்தது போல் டாக்டர் இளைய தளபதி விஜய் அவர்களின் வேலாயுதம் படம் ட்ரைலர் ஓட்டபடுகிறது ,வேட்டைக்காரன் பார்ட் டூ போல் தெரிகிறது ,இந்த படத்தின் வசனகர்த்தா சுபா அவர்கள் ட்விட்டர் தளத்தில் டாக்டர் அவர்களின் வித்யாசமான காமெடி ,ஆக்சன், பாடல்கள் நிறைந்த படம் என்று கூறுகிறார் ,

சுபா அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக கூறிகொள்கிறேன் 
நாங்கள் ஒன்றும் கேனையர்கள் அல்ல 

சீப்பு :

  தமிழக மக்கள் எனக்கு ஓய்வு அளித்து உள்ளார்கள் -முன்னாள் தமிழக  முதல்வர் 

கிராமத்தில் ஒரு சொல்வாடை உள்ளது " கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும் கெழவன தூக்கி மனைல வையி " 

அநேகமாக இனி இவர் கடிதம் எழுதுவதற்க்கானா வாய்ப்பு இல்லை என்று எல்லோரும் கூறுகிறார்கள் ,ஆனால் நான் வாய்ப்பு இருக்கு என்று கருதுகிறேன் ,ஆமாம் 

கடிதத்தின் தலைப்பு இவ்வாறாக இருக்கும் 
மகளுக்கு அப்பா எழுதிய கடிதம் 

போங்ரெஸ் 
பரிதாப நிலையில் மண்டியிட்ட கட்சி 
வீட்டிற்கு அனுப்ப பட்ட சிறுத்தைகள் 

எல்லோரும் ஒன்றாக சேர்ந்து 'மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் 'என்கிறார்கள் 

உங்க சங்காத்தப் .............. வேண்டானுதானே  பொடனில அடிச்சு வீட்டுக்கு அனுப்ச்ருக்கோம் ,இதுல மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்ன்னு பேட்டி வேற ,போங்கையா போயி மருத்துவரோட தைலாபுரத்துல நல்ல தைலம் ஒன்னு தயாரிச்சு நல்லா தடவிக்கோங்க ,முக்கியமா அந்த தொங்க பாலுக்கு நல்லா தடவி விடுங்கையா ,ஒடம்பெல்லாம் ஊமை குத்தாம் 

கண்ணாடி :
           இனி நடக்க முடிகிற தூரத்துக்கு நடப்பது என்றும் ,நடக்க முடியாத தூரத்திற்கு வண்டியில் செல்ல வேண்டும் தீர்மானித்திருக்கிறேன் 

பின்ன பெட்ரோல் என்ன வெல விக்கிது  ,இன்றைய தினசரியில் பிற நாட்டினில் பெட்ரோல் என்ன என்ன விலையில் விற்க்கபடுகிறது என்று கூறி இருந்தார்கள் ,அதில் ஒன்றை மட்டும் கூறுகிறேன் 

வென்னிசுல நாட்டில் வெறும் ரெண்டு ஓவாதானாம் .நம் நாட்டிலும் பெட்ரோல் லிட்டருக்கு 24  ரூபாய்க்கு விற்க முடியுமாம் ,ஆனால் உலகத்தில் இருக்கும் மொத்த வரிகளை கொண்டு தீட்ட பட்டு ,பின்னர் பெட்ரோல் விற்க படுகிறதாம் ,அதனால் தான் இந்த விலை ,இன்னும் வேறு கூடுமாம் 

 வென்னிசுலாவில்  பிறந்திருக்கலாம் போல ,பெட்ரோல் விலையும் குறைவு , கூடவே ஏதாவுது வெளிநாட்டு குஜிலியை கரெக்ட் செய்து............. !@#$%$^&*()_)(*&^%$#@!................ (நான் ஒன்னும் தப்பாக எதுவும் டைப் அடிக்கவில்லையே ,குண்டக்க மண்டக்க எழுத்து விழுகுதே ம்ம்ம்ம்ம்ம்ம் )

கில்மானந்தாஸ்  தத்துவம் 001 :
நண்பர்கள் இல்லாமல் சரக்கடிப்பது   வானொலியில் நீல படம் பார்ப்பதற்கு ச்சே இது .........கேட்பதற்கு சமமானது 

ரசிப்பதற்கு மட்டும் :


 
Read More

7.5.11

எங்கேயும் காதல் -விமர்சனம்

                     சுமார் ஒரு மாதாத்திற்கு முன் " குயன்" தாரா வீடு .

என்னங்க உங்க பொண்டாட்டி ப்போன்ல  என்னைய ரொம்ப மிரட்டுறாங்க

அப்படியா

'எங்க 'யாவது வெளிநாட்டுக்கு போய் ஜாலியா இருந்துட்டு வருவோம்ங்க


ஓகே ஒரு மொக்க கதைக்கு ஒரு மொக்க ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வச்சிருக்கேன் ,உனக்கு பாரிஸ் ஓகேயா?

டபுள் ஓகே டார்லிங்


ஸ்டார்ட் ,கேமரா ,ஆக்சன் 

நாதிர்தின  நாதிர்தின தினனா ,நாதிர்தின  நாதிர்தின தினனா  நாதாரிதின நாதாரிதின நாதரிதின நாதாரித்தனம்  நாதாரித்தனம் 

அப்பப்ப  கொஞ்சம்  படமும் எடுக்கனும்ங்க இல்லைனா தயாரிப்பாளருக்கு சந்தேகம் வந்துடும்ங்க

அப்படிங்கற

'இச்' மிச்சத்த நைட்டு பாத்துக்குலாம் , ம்ம் போயிட்டுவாங்க
                       ******************************************************
இதுவரை படம் உருவான கதையை பார்த்தீர்கள் - இனி விமர்சனம்

 ஒரு அக்மார்க் பாரிசில் வளர்ந்த 'தமிழ் ' கலாச்சார  பெண்ணுக்கும் ,  ஒரு அக்மார்க் இந்தியாவில் வளர்ந்த  'மேற்கத்திய ' கலாச்சார பையனுக்கும் ,ஏற்படுகிற 'லவ்வுதாங்க ' எங்கேயும் காதலு

முதல் காட்சியிலே இவுங்களுக்குல காதல் வரபோகுதுன்னு ஒரு டான்ஸ் ஆடிட்டு சொல்லீடுராருங்க படத்தோட இயக்குனரு ,.......................அப்ப பிரகாஷ்ராஜ் வந்தாருங்க ' யோவ் நீ இந்த படத்துலையே கிடையாதுயானு சொல்லி அவர தொரத்தி விட்டுடுராருங்க' இயக்குனரு

அது என்னமோ தெரியலைங்க இந்த ஹீரோயின்களுக்கும் மட்டும் ஹீரோவா பாத்தோடன காதல் எப்படி வந்துடுதுன்னு  தெரியல ,........................ஹீரோ ஒரு சென்னை பிசினஸ்மேனுங்க ,...............................வருஷம் புல்லா வேல பாப்பாப்புல ,கடேசி மாசம் மட்டும் வெளி நாட்டுக்கு 'ஜென்டாய்டுவாப்புல ' (ரிலாக்ஸ்சேசனாம் ), வந்து ......வெளிநாட்டு பிகருங்களோட ஒரே  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் .................................

முதல் பார்வைய்லே ஹீரோயினிக்கு ஹீரோமேல லவ் பிச்சிக்குது ,அவரு பின்னாடியே சுத்துறாங்க ...................... ஆனா இண்ட்ரவல் ப்லோக்ல அவருவாட்டுக்க இந்தியாவுக்கு போயிடுறாரு , இண்ட்ரவலுக்கு அப்பறம் அதாவுது ஒரு வருசத்துக்கப்பறம் திரும்பவும் ................ பாரிஸ் வர்றாரு ஹீரோ .அப்ப ஹீரோயினி ..................ஹீரோவ தன் மேல் உள்ள பொசசிவ்நெஸ்ஸ கெளப்பிவிட சில பல முயற்சி மேற்'கொல்றாங்க .................. இப்படியே செகண்ட் ஆப் புல்லா காட்டுறாங்க ,அப்பறம் கடேசி ஒரு புறாவந்து ரெண்டுபேத்தையும் சேத்துவச்சிடுது ,அதுயேன் சேத்துவைக்கிதுனா இவுங்க ரெண்டு பேரும் கூண்டுல இருந்து அத  வெளில வரவச்சு பறக்கிறதுக்கு ட்ரைனிங் குடுப்பாங்க ,அதான் சேத்து வைக்கிது

சுமன்- ஹீரோயினி அப்பா,டிடேக்ட்டிவ்வு ஆபீசெராம் (ஆனா கேசு பைலே எங்க வச்சேன்னு கண்டுபுடிக்க முடியல அவரால ) ,ஹீரோட்ட போயி கெஞ்சுவாப்புல................................ 'என் பொண்ண விட்டுடுன்னு '


காமெடிக்கு ராஜுசுந்தரம் -  ஒரே நாத்தம் 'சகிக்கல '

இன்னும் ரெண்டு பேரு அப்பப்ப வந்து காமெடி அடிப்பாங்க

அவன் அவன் ராப்பகலா ,விடிவிடிய ஒக்காந்து சூப்பர் கதையெல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்காங்க ,அவங்களுக்கெலாம் 'சப்பாத்தி ' புஸ் அகோரம் மாதிரி தயாரிப்பாளர் கிடைக்க மாட்டிங்கிறாங்க

படத்தோட மெயின் ஹீரோ யாருன்னா, ஒளிப்பதிவாளருங்க ,சும்மா பாரிஸோட  ( வேகமா படிக்காதீங்க அப்பறம் டங்கு ஸ்லிப்பாய்டும் )சந்து பொந்து இண்டு இடுக்கு ,டாப் வ்யு ,சைட் வ்யு, பிரன்ட் வ்யு என அனைத்து வ்யுகளிலும் கேமிராவை நுழைத்து எடுத்துள்ளார் ( நமக்கு கேமெர ஆங்கில பத்தி ஒன்னும் தெரியாதுங்க எல்லா விமர்சகர்களும் இத பத்தி எழுதிருக்காங்க ,அதான் நானும் ஹி ஹி ஹி ஹி ),ஒரு ஒலக சீனு இருக்குங்க 'கோவத்துல ஹீரோயினிய ஹீரோ காருல இருந்து எறக்கி விட்டுட்டு போய்டுவாரு ' நைட்டு நேரம் .நாலஞ்சு காலிப்பசங்க தண்ணிய போட்டுட்டு ஹீரோயினிய 'அது 'பண்ண வந்துடுவாங்க ,என்னக்குலாம் செம டென்சன் ஆய்டுச்சு (ஐயையோ சில 'நல்லவுங்க ' இந்த லைன படிச்சுபுட்டு டபுள் மீனிங்ளா திங்க்  பண்ணுவாங்களே ) அப்பறம் வழக்கம் போல ஹீரோ வந்து காப்பாத்திடுவாரு ,புஸ்ஸுன்னு போச்ச்சா ......எனக்கும்தான் ( நோ நோ திங்கிங்  ஆப்  டபுள் மீனிங் )

அப்பறம் பாட்டுங்க- ரெண்டு மூணு பாட்டு சும்மா சொல்லகூடதுங்க நல்லாவே இருந்துச்சு
அப்பறம் ரொம்ப ரொம்ப முக்கியமானவுங்க வேற யாரு நம்ம (இல்ல இல்ல) என் லோலிட்டாதான்

அடியே சக்கரவல்லியே 





நடிப்பாங்க முக்கியம் ,குதிக்கிறாங்க ,ஓடுறாங்க ,ஆடுறாங்க அது போதாது
நல்ல சேட்டுவீட்டு பிகருபோல ( ஆங் ஸ்டேட்டவிட்டு ஸ்டேட்டு ,ஸ்டேட்டவிட்டு ஸ்டேட்டு ,சேட்டவிட்டு சேட்டவிட்டு )கும்முன்னு க்ளோப் ஜாமுன்னு மாதிரி ( அப்படியே சாப்பிடாலாமுங்க )இருந்தாலும்

தென்னாட்டு பெண்களைப்போல அழகின்பூர்ணத்துவம் இல்லாதகாரனத்தினால் ( என்ன இருந்தாலும் நம்மூரு பொண்ணுங்க போல வருமா )

ஆகமொத்தம் எங்கேயும் காதல் - சன் பிச்சர்சின் முக்கியமான மொக்க படம்

டிஸ்கி : ஆங்காங்கே விட பட்டுள்ள கோடிட்ட இடங்களை நீங்கள் கொட்டாவி விட்டு நிரப்பி கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது  ம்ம்ம்ம் படம் பாத்தா நா எத்தன தடவ கொட்டாவி விட்டேன் தெரியுங்களா ,செகண்ட் ஷோ  வேற ................






Read More

1.5.11

காதல்

                   உனக்கு தெரியுமா மெர்சி .உன்னை நான் முதன் முதலாய் எப்போது பார்த்தேன் என்று ,அன்று நீ நீலவண்ண சுடிதார் அணிந்திருந்தாய் ,பூ போட்ட வெள்ளை துப்பட்டா ,உனது மேஜை முன்னால் ஒரு திறந்த  காலேஜ் நோட்புக் ,அதில் எதையோ எழுதி கொண்டிருந்தாய் ,என்ன எழுதிகொண்டிருந்தாய் ,உனது பெயர் தானே ,அந்த வகுப்பறையில் ஒரு ஓரமாக அமந்திருந்தாய் ,அருகில் உனது ஆருயிர் தோழி ரோஸ்லின் , அன்று கல்லூரியின் முதல் நாள் முதல் வகுப்பு ,நான் உள்ளே நுழைந்தேன் உனது விழிகளை சந்திக்க போகிறேன் என்று தெரியாமலே ,ஆனால் அப்போது அந்த விழிகள் என்னை ஒன்றும் செய்யவில்லை ,ஆனால் இப்போது ஒவ்வொரு நொடியும் அந்த விழிகள் என்ன இம்சித்து கொண்டிருக்கின்றன
                                         நான் உன்னுடன் பேசிய முதல் வார்த்தையை நினைத்து பார்க்கிறேன் ,என்ன சொல்லு பார்ப்போம் ' ஹலோ ' ஆம் நாம் முதலில் பேசிகொண்டது செல் போனில் தானே ,செல்போனும் இரவும் நம் இரவின் வெறுமையை போக்கின ,அன்று வகுப்பறையில் ஆனந்த் ," நான் மெர்சியிடம் நம்பர் வாங்கினேன் ,எல்லோரிடமும் குடுக்கலாமா என்று கேட்டேன் ,வேண்டாம் என்றாள் ,கடைசியாக உன்னிடம் மட்டும் குடுக்கலாம் என்று கூறினாள் " என்றான் ,நானும் உன் செல் நம்பரை வாங்கி கொண்டேன் ,ஆனால் உடனடியாக உன்னிடம் பேச தயக்கமாக இருந்தது ,ஆனால் என் செல் நம்பரை நீயும் வாங்கிக்கொண்டே என அறிந்து கொண்டேன் ,அப்போது விஜய் டிவியில் 'யாரு மனசில் யாரு ' என்ற ப்ரோக்ராம் மிக பிரபலம்

" ஹாய் " என்று மெசேஜ் அனுப்பினேன்
" நீங்க யாரு " என்று பொய்யாய் நடித்தாய்
" என்னைய உண்மைலே உங்களுக்கு யாருன்னு தெரியலையா "
" தெரியலையே " நடித்ததை ரசித்தேன்
" சரி நாம் அப்படினா ஒரு கேம் வெளியாடலாமா  "
" ம்ம் வெளையாடலாம் "
" ஓகே விஜய் டிவில 'யாரு மனசுல யாரு ' ப்ரோக்ராம் பார்த்திருக்கீங்களா
" பார்த்திருக்கேன் "
" நான் ஒவ்வொரு கேள்வியா அனுப்புறேன் ,நீங்க கண்டுபிடிங்க "
நான் ஒவ்வொரு கேள்வியாக அனுப்பினேன் ,நீ வேண்டுமென்றே தவறான பதிலே அளித்தாய் ,நேரங்கள் நீண்டன ,கடைசியாக 'என் ' பெயரை டைப் செய்து அனுப்பினாய்
நான் " கண்டுபிடுச்சுட்டீங்களே"
நீ " நாங்களும் கண்டுபுடிப்போம்ல "
பின்பு சில மெசேஜ் போக்குவரத்துகளுக்கு பின் " நான் உங்களுக்கு கால் செய்யவா என்றாய் "
" ஓகே "
நீ கால் செய்தாய் ,முதல் ரிங்கிலே எடுத்தேன்  'ஹலோ ' உன்னிடம் பேசிய முதல் வார்த்தை ,இதே ரீதில் அப்படியே நம் நட்பு தொடர்ந்து கொண்டுதானே இருந்தது ,ஆனால் எப்போது காதலாக மாறியது ,உனக்கு தெரியுமா மெர்சி

                       உன்னை நான் எப்போது விரும்ப ஆரம்பித்தேன்  , இப்படி நீ கூறினாயே அப்போதுலிருந்துதான் "  அமைதியா வர்றீங்க அமைதியா போறீங்க ,கடைசி பெஞ்ச்சில  அமைதியா உட்க்கார்ந்திருக்கீங்க எந்த பொன்னுககிட்டையும் போய் வழிய பேசமாற்றீங்க ,அவுங்களா வந்து பேசுனா கூட அப்பிடியான்ட்டு போயிடுறீங்க ,இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு  "

அன்று இரவு நீ எனக்கு இரவு இரண்டு மணிக்கு குட் நைட் மெசஜ் அனுப்பினாய் ,உடனே நான் ரிப்ளை செய்தேன் "உம்மா " என்று ,நீயும் 'உம்மா ' என்றால் என்ன வென்று ரிப்ளை செய்தாய் ,நான் ரிப்ளை செய்யவில்லை ,நீ ரிப்ளை செய்து கொண்டே இருந்தாய்

நான் கடைசியாக உனக்கு ரிப்ளை செய்தேன் அப்படியென்றால் 'முத்தமென்று ' .நீ சிறிது நேரம் கழித்து 'செருப்பு பிஞ்ச்சிடும் ' என்று அனுப்பினாய் ,அதன் பிறகு அந்த இரவு முழுவதும் நீயும் மெசேஜ் அனுப்பவில்லை ,நானும் அனுப்பவில்லை .

                                                             
                                                                                                                           தொடரும் .......




Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena