வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

14.2.11

டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விஜய்

எச்சரிக்கை : இப்பதிவு முழுக்க 'தல ' ரசிகன் பார்வையில் எழுத படுவது

இனிய நட்புகளுக்கு :
                 வணக்கம் , திரு .இளைய தளபதி விஜய் அவர்களின் பிடித்த பத்து படங்கள் தொடர் பதிவிற்கு நண்பர் திரு .பிலாசபி பிரபாகரன் அழைத்திருந்தார் .டாக்டர் விஜய் அவர்களை  பற்றி
அடுத்த முதல்வருக்கான அனைத்து தகுதியும் உள்ள ஒரே தமிழர் என்றால் அது மிகையாகாது ,மேடையில் நமது முதல்வர்கலைஞர்  முன்னிலையில் " எங்களை மிரட்டு கிறார்கள் என்று கூறிய அஜித் எங்கே ,மேடையில் ஏறினாலே புல்ஸ்டாப் ,கமா ,இருக்கும் இன்ன பிற குறி ஈடுகளின் உதவியுடன் பேசும் நமது எதிர்கால முதல்வர் டாக்டர் விஜய் எங்கே ? அரசியல் என்னும் பழத்தை தின்று போட்ட கொட்டைகள் மூலமாக கோட்டையில் அமர்ந்திருக்கும் நமது முதல்வர் ,மதியூக மந்திரி , சிறந்த ராஜதந்திரி என்றெல்லாம் பெயர் பெற்றவர்,இருந்தாலும்  இவரிடம் கண்டிப்பாக படம் கற்று கொள்ள வேண்டும் ,இவருடைய படம்  மொக்க படமாக இருந்தாலும் அதையெல்லாம் முதல் இடத்தில் வைத்து பார்த்த பெருமை சன் டிவி நிருவனத்தாருக்கே சேரும் ,ஏறி வந்த ஏணியை சுலபமாக எட்டி உதைத்து எதிர் அணியில் சரண்டர் ஆனவர் ,இது போல் இன்னும் பல புகழுரைகளை அள்ளி தெளிக்கலாம் ஆனால் பதிவின் நீளம் கருதி ,முடித்து கொள்கிறேன்

ஷாஜகான் :
                          
              இந்த படத்தில் கடைசியாக படம் ஓடிய திரையை ஒரு திரை மூடியது ,அந்த காட்சி உண்மையிலே எனக்கு மிகவும் பிடித்த காட்சி ,அதற்க்கான காரணத்தை எனது முந்தைய பதிவான " எனது சைக்கிளும் டாக்டர் விஜய்யும் " தெரிந்து கொள்ளலாம் , ஹீரோயினை ஓட்டி வருவதற்கு ஒரு மாஸ்டர் பிளான் போடுவது போல் காட்சி வைத்திருப்பார்கள் ,கிளாஸ் .......பின்னர் ரெஜிஸ்டர் ஆபீஸ் வாசலில் தன் கன்னத்தில் பளீர் பளீர் என்று அறைந்து கொண்டு அழும் காட்சியில்  ,நானும் அழுதேன் முடியல ,ஒரு வேளை உண்மையான அனுபவமாக கூட இருக்கலாம் என்று ஐயம் வந்தது .கடைசியில் " உண்மை காதல்னா சொல்லு உயிரையும் கொடுப்பேன் " என்று உரைக்கும் வசனம் காதலர்கள் மத்தியில் கடுப்பேற்றியது

புதிய கீதை :
            இந்த படத்தின் கடைசி காட்சியில் அமரர் மகாகவி பாரதியின் " நல்லதோர் வீணை செய்தே " என்ற பாட்டை இணைத்திருப்பார்கள் ,சூப்பர் .பாரதியார் இருந்திருந்தால் மருந்தை வாங்கி மடக் மடக் என்று குடித்திருப்பார் ,அதாவுது எதற்கு அந்த பாட்டை இணைத்தார்கள் 'தல ' வீங்கும் அளவிற்கு யோசித்தேன் பிறகு தான் தெரிந்தது பாரதியாரும் அல்பாயுசுல புட்டாரு அதே போல இவரும் அந்த படத்துல அல்பாயுசுல போவாரா ,அப்பறம் கடைசில பிழைத்து கொள்வாரா ,காலத்தின் கொடுமைதனை காலனிடம் உரைக்க சென்றேன் ஆனால் நானே காலமாகி போனேன் ,ஐயையோ என்னனென்னமோ உளறுரேனே ,இன்னொரு குவாட்டர் சொல்லுங்கப்பா முடியல

யூத்து :
         இந்த படத்தில் வசனங்கள் அருமையாக இருக்கும் ,குறிப்பெடுத்து என்னால் கூறமுடியவில்லை ,ஏனென்றால் மண்டையில் எதுவும் ஏற வில்லை ,ஜஸ்ட் ஏ மினிட் வந்து விடுகிறேன் .........................................ஒரு சிறு கடமையை முடித்து விட்டு வந்தேன் தொடர்கிறேன் ,என்னை போன்ற யூத்துகள் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான  படம் ,வில்லனிடம் " இத நா உன்னைய பார்க்கிற கடேசி நாளா இருக்கணும் மீறி உன்னைய பார்த்தேன் அது உனக்கு கடேசி நாளா இருக்கும் " என்ற வசனத்தில் டயலாக் டெலிவரி அருமையாக அமைந்திருக்கும் ,அந்த மாடுலசன் சான்சே இல்ல இளைய தளபதிக்கே உண்டான ஒரு ஒரு ஒரு ஒரு ஒரு............... மன்னிக்கணும் என்ன சொல்லறதுனு தெரியல

திருமலை :
       இந்த படத்தில் ஒரு மிக பெரும் புரட்ச்சி செய்திருப்பார் விஜய் அவர்கள் ,நண்பன் தனது காதலியை கல்யாண மண்டப்பதிலிருந்து தள்ளி கொண்டு வாந்தி இருப்பார் ,விஜய் அவர்கள் அந்த நண்பனின் காதலியை தள்ளி கொண்டு மீண்டும் மண்டபத்திற்க்கே சென்று மாப்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க்கவைப்பார் ................................................................................................................................................................................................. மயக்கம் அடைந்து விட்டேன் , தண்ணி அடித்து எழுப்பி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் , மூஞ்சி எல்லாம் ஈரமாக இருக்கிறது

அழகிய தமிழ் மகன் :
      அழுகிப்போன தமிழ் மகன் என்ற படத்தில் மிக மிக மிக அருமையான கட்சி ஒன்று இருக்கும் , ஸ்ரேயா     விஜய் அவர்களை தனது அப்பாவின் அப்பாவின் அப்பாவின் ஐயையோ மறந்து போச்சே ,சரி விடுங்கள் எங்கையோ ஸ்ரேயா அவர்கள் குறிபெடுத்து கொல்லுங்கள் ஸ்ரேயா அவர்கள் விஜய் தள்ளி கொண்டு வந்திர்ப்பார் ,அப்பொழுது நடக்கும் ஒரு களேபரத்தில் ................ யா அவர் ................ அப்ப ........................
மன்னிப்பு ...................        

சாரி இதற்கு மேல் என்னால் தொடர முடியவில்லை வாயெல்லாம் கோனுகிறது , கையெல்லாம் இழுத்து கொள்கிறது ,முன்பு முடித்து வந்த சிறு கடமை இப்பொழுது பெரிய கடமையாகி விட்டது , வயிறெல்லாம் கடமுட என்கிறது , நான் -ஸ்டாப்பாக நிற்காமல் செல்கிறது

அண்ணே  பன்னி குட்டி அண்ணே ....................உங் ......................க நிலைமையும் இதே போல் ஆஐடும்நெ................................. தொடாரதீங்கன்னே

அம்புலன்ஸ் வந்துடுச்சா

தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இப்படி வாழ்க்கையை தொடர முடியாமா பண்ணிட்டாங்களே ....................

எவ்வளோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா




 
                                            
          
Read More

10.2.11

மாநகர பேருந்தில்

                     அந்த சூழல் அவனுக்கு அற்ப்பமானதாய் இருந்தது .பேருந்தின் கடைசி முன் இருக்கைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான் .முகமறியா முகங்களின் முகரேகைகளை படித்து கொண்டிருந்தான் .அந்த பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது .ஒரு பள்ளி மாணவனாக இருக்க வேண்டும் ,ஏறி படிக்கட்டில் நின்று கொண்டான்
" அண்ணே இந்த பஸ் வாணி மஹால் போகுமா "

" எனக்கு தெரியாது " என்றான் அவன்
அவனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த பெரியவர் சற்று முன்னால் வந்து

" தம்பி இந்த பஸ் அதுக்கு முன்னால பாண்டி பஜார்ரோட கட்டாயிடுமே"
" ஐயையோ அப்படியா அங்க எறங்கி ரொம்ப தூரம் நடக்கணுமா சார் "
" இல்லப்பா பக்கந்தான் ......நீ என்ன பண்ற பாண்டி பஜாருல எறங்கி அப்படியே நெட்டுக்க நடந்தேனா ஒரு ப்ளை ஓவர் வரும் அந்த எடத்துலாதான் இருக்கு வாணிமஹால் "
" சரி சார் ,சரி சார் " என்று தலை ஆட்டினான்

பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது. பிறர் ஏறுவதற்காக படிகளில் இருந்து கீழிறங்கினான் அந்த பள்ளி மாணவன் .அப்படியே ஜன்னல் பக்கம் வந்து நின்று கொண்டான் , அவன் மூலமாக அந்த பெரியவரை அழைக்க வைத்தான் ,பெரியவர் அந்த மாணவனை ஜன்னல் வழியாக குனிந்து  நோக்கினார்

" பெருசு வர்ட்டா ,இங்க பக்கத்துல தான் எங்க வூடு அடுத்த ஸ்டாப்பிங்க்காக அஞ்சுரூவா குடுக்கனுமேனு பாத்தேன் ,அதான்........நாடகம் நல்லாருக்கா  " என்றவாறு திரும்பி  ஓடினான் ,பெரியவர் நிமிர்ந்து எல்லாரது முகத்தையும் பார்த்தார் ,சிலர்  பல்லை காட்டி கொண்டும் ,பல பேர் பல்லை மறைத்து கொண்டும் சிரித்து கொண்டனர் ,அவனாலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை ,கண்டக்டர் அமர்ந்தவாறு அப்படியே வாசல் வழியே தலையை நீட்டி
" ங்கோ......... பாடு நீ மட்டும் கையில கெடச்ச டாருதாண்டி மவனே "
இவன் நின்று கொண்டிருந்தஇடத்துக்கு  பக்கத்துக்கு இருக்கை காலியாகி விட்டிருந்தது,அமரலாம என்று நினைத்தான் , வேண்டாம் பிறகு பெண்மணிகள் வந்து ," இது லேடீஸ் சீட் " என்று எழுத்திரிக்க சொல்லுவார்கள் ,எதற்கு  நின்று கொண்டே வந்தான் ,மேல்புறம் கம்பிகளை பிடித்து கொண்டே வந்ததாலே என்னவோ அவனுக்கு கை வலித்தது ,கையை மாற்றி மாற்றி பிடித்து கொண்டான்


" excuse me "
அவன் திரும்பினான் ,அவள் இவன் விலகுவதற்காக நின்று கொண்டிருந்தாள் , இவன் விலக காலியாக இருக்கையை நிரப்பினாள் . அடர் கருப்பு ரசக்களியில்   வெளுத்த தேவதையாக தெரிந்தாள் ,அவ்வப்போது முன் புறம் விழுந்த சில முடிகற்றைகளை காதோரமாக ஒதுக்கி திருப்பி விட்டாள் ,இவன் சில நிமிடம் அவளையே பார்த்தவண்ணம் இருந்தான் ,வெகு எதேச்சையாக அவளும் அவனை அசுவாரசியத்தோடு பார்த்தாள் ,இவன் சட்டென்று திரும்பி கொண்டான் ,பேருந்து அடுத்தடுத்து நிறுத்தங்களில் நின்று நின்று சென்றது ,பின்புறத்தில் கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது
" பின்னாடி இருக்கரவுங்கலாம் டிக்கெட் வாங்குங்க " என்ற கண்டக்டரின் ஒலியை பேருந்தின் ஜன்னல் வழியாக நுழைந்த காற்று தள்ளி கொண்டு அனைவரது காதுகளிலும் சேர்த்தது
இவனுக்கு அருகில் ஒரு செம்பட்டை தலையன் நின்று கொண்டிருந்தான் ,அவனிடமிருந்து பாண் பராக் வாடை எரிச்சலை குடுத்தது இவனுக்கு, அந்த செம்பட்டை  தலையனுக்கு அருகில் ஒரு கனத்த சரீரத்துடன் ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தாள்

கொஞ்ச காற்றுவந்தையும் மனித கூட்டங்கள் நிரம்பியதால் காற்று கோபித்து கொண்டு சென்று விட்டததோ என்று நினைத்தான் அவன்  , வெக்கையினால் புழுக்கம் அதிகரித்தது  ,கண்டக்டர் நீண்ட விசில் ஊத பேருந்து ஒரு ஓரமாக அந்த பிரதான சாலையில் ஒதுங்கி நின்றது

" டிக்கெட் எடுக்காதவங்கலாம் டிக்கெட் எடுத்துக்கோங்க ,பாஸ் பன்னி விட்டாவுது எடுத்துகோங்க ,அப்பறம் செக்கிங் வந்தா என்னைய சொல்லகூடாது "  என்று கண்டக்டர் கூறியவுடன் தான் எடுத்து டிக்கெட் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டான்

" excume  me "
 இவன் திரும்பினான் , அவள் ஐம்பது ரூபாயை நீட்டி " ஓன்  தேனாம்பேட்  ப்ளீஸ் " இவனுக்கு அது புதியதாய் இருந்தது ஒரு பெண் அவனிடம் பேசி டிக்கெட் வாங்க சொல்வது .அந்த பணத்தை வாங்கினான் ,பாஸ் பண்ணு வதற்கு அந்த செம்பட்டை தலையணை அணுகலாம என்று நினைத்தான்  ,அவன் மறுத்து விட்டால் அசிங்கமாகி விடுமே என்று நினைத்தான்
இவனே கூட்டத்திற்குள்  முண்டியடித்து முன்னேறினான் ,கண்டக்டரிடம் ஐம்பது ரூபாயை நீட்டி " ஒரு தேனாம்பேட்டை " என்றான் 
" அஞ்சு ஓவா டிக்கெட்டுக்கு அம்பது ரூவாய நீட்டுற ,சில்லறையா குடுயா  "
" இல்ல னே "
" அதுக்கு நா என்ன பண்ண முடியும் " என்றவாறே டிக்கெட் கிழித்து குடுத்து " மிச்ச சில்லரைய    கொஞ்ச நேரம் கழிச்சு வந்து வாங்கிக்கோ "

இவன் திரும்பி வந்து அவளிடம் டிக்கெட்டை நீட்டினான் ,மெலிதாக புன்னைகத்தாள் .அந்த புன்னகையில் இளக்காரம் தெரிந்தது அவனுக்கு ,அப்பொழுதான் தோன்றியது நாம் வெகுவேகமாக வேலைசெய்துருக்கிறோம் என்று .டிக்கெட்டை  வாங்கி வைத்து கொண்டு   " பாலன்ஸ் " என்றாள்
" தர்றேன்னு சொல்லீர்க்காரு "
" ஐயையோ அடுத்த ஸ்டாப்பிங்ல   நா எறங்கனுமே " என்று அழகாக வாயை சுளித்தாள்
வேகமாக அவனது பர்சை எடுத்தான் ,அதில் ஐந்து ஆயிரம் ரூபாய்  தாள்களும் சில நூறு ரூபாய்களும் ,சில பத்துரூபாய் தாள்களும் இருந்தது
சரியாக நாப்பது ரூபாயும் ,ஒரு ஐந்து ரூபாய் காசையும் எடுத்து குடுத்தான்
" நா அவருக்கிட்ட வாங்கிக்கிறேன்  "என்றான்
" தாங்க்ஸ் " என்றாள் இவன் புன்னைகையோடு அமோதித்தான்
இவன் பக்கத்திலிருந்த செம்பட்டை தலையன் அருகினில் இருந்த பெண்மணியை இடித்திருப்பான் போல
" அப்பயே புடிச்சு நானும்  பாத்துகிட்டே இருக்கேன் இடிச்சு கிட்டே இருக்க ,கொஞ்சம் தள்ளி நில்லுயா  " என்றாள்
" அய்யே உன்னிய போய் எவன் இடிப்பான், பாட்டிக்கும் பாவனாக்கும் வித்தியாசம் தெர்யாத எனக்கு ,வந்துட்டா அங்க இருந்து பெருசா ஆட்டிக்கிட்டு " என்றான் செம்பட்டை தலையன்
இந்த சம்பவம் குறித்து  யாரும் எதுவும் உரைக்காதது அவனுக்கு வியப்பாய் இருந்தது .செம்பட்டை தலையனின் முரட்டு உருவம் காரணமாக இருக்கலாம் என்று நினைத்தான்.அப்போது  .அந்த ரசக்களி பெண்ணை பார்த்தான் ,அவளும் இவனை பார்த்தாள் ,பேருந்து நின்றது ,கண்டக்டர் " தேனாம்பேட்டைலாம் எறங்கிக்கோ " அவள் இவனை கடந்து படிகளில் இறங்கி சென்றாள் ,மறைந்தாள்

அந்த இருக்கையில் ஒரு கிழவி சென்று அமர்ந்து " வா ராசா ஒக்காரு சும்மா ஒக்காரு " என்றாள் .இவன் அந்த பெண் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தான் . அந்த ரசக்களி பெண் அமர்ந்திருந்த சூட்டை இவன் உணர்ந்தான் ,அப்படியே ஜன்னலை நோக்கினான் ,எதிர்த்த பிளாட் பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாள்ரசக்களி பெண் ,பேருந்து கிளம்பியது

தீடீரென்று தான் இன்னும் மிச்ச சில்லரை வாங்கவில்லை என்பது உரைத்தது அவனுக்கு  ,முன்னேறி  சென்று கண்டக்டரிடம் " மிச்ச்ச சில்லரை " என்றான்.  கண்டக்டர் சில வினாடிகள் இவனை உற்றுநோக்கி விட்டு "எவ்வளுவு தரனும் " என்றார்
" நாப்பத்தஞ்சு ரூபா " அவன் அந்த சில்லறையை வாங்கியபொழுது ஒரு ஐந்து ரூபாய் காயினை தவற விட்டான் ,அந்த கூட்டத்தினுள் விழுந்த காசை தேடிஎடுப்பதற்க்கு மிகவும் சிரம  பட்டான்  ,மீண்டும் அதே இடத்தில் அமரலாம் என்று வந்தான் ,வேறு ஒரு பெண்மணி அமர்ந்திருந்ததை  கண்டான்.

பேருந்து நிறுத்தத்தில் நின்றது ,அந்த செம்பட்டை தலையன் இறங்கி சென்றான் ,பேருந்து கிளம்பியது ,ஒவ்வொரு நிறுத்ததிலும் பேருந்து நின்று செல்ல கூட்டம் குறைய ஆரம்பித்தது ,நன்றாக காற்றும் வர ஆரம்பித்தது ,இவனுக்கு ஜன்னல் ஓர சீட் கிடைத்தது அங்கு சென்று அமர்ந்தான்

சிறிது நேரத்தில் " லாஸ்ட் எல்லாரும் எறங்குங்க " என்றார் கண்டக்டர்
எல்லோரும்  இறங்கினார்கள் .இவன் அந்த கனத்த பெண்மணியின்  பின்னாலே இறங்கினான் , அவன் இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இந்தியன் பாங்க் இருப்பதை கண்டான் .அம்மாவிற்கு பணம் அனுப்பி வெகு நாட்களாக ஆகிவிட்டதை உணர்த்தியது .வெகு இயல்பாக அவனது கைகள் பின் பாக்கெட்டிற்கு சென்றது ,ஆனால் பை கிழிந்து தொங்கியது ,சைடு பாக்கெட்டிற்குள் கைகளை விட்டு பார்த்தான் ,பிறகு சட்டை பாக்கெட்டிற்குள் விட்டு பார்த்தான் ,வெறும் நாற்ப்பது ரூபாயும் ஒரு ஐந்து ரூபாய் காயினும் வந்தது ,கண்களை மூடி திறந்தான் , பேருந்தினில் விழுந்த ஐந்து ருபாய் காயினை எடுப்பதற்கு குனிந்து நிமிர்ந்த போது பின் புறத்தில் அந்த செம்பட்டை தலையன் நின்று கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது




Read More

7.2.11

பழிவாங்கிட்டோம்ல

                      மதுரை கோரிப்பாளையத்திலிருந்து  அண்ணா பஸ் ஸ்டான்ட் செல்லும் சாலையில் நேராக வந்து இடது புறம் திரும்பி சிறிது தூரம் பயணித்தால் ,உடகு கற்களால் ஆன  அந்த காலத்திய   வெள்ளைக்காரகள் கட்டிய கட்டிடம் ஒன்று தென்படும் .அந்த கட்டிடம்தான் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். காக்கைகள் எச்சமாக நிறைந்த வேப்பமரத்தின் நிழலில் எனது இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தினேன்

" என்னது ஒன்னவர் பெருமிசனா ....போன மாசம் உன் டார்கெட்டை இன்னும்  நீ காட்டல இதுல உனக்கு பெருமிசன் குடுக்கணுமா ? " என்று போனில் எகிறிய மேனேஜரின் நெளிந்து போன பெருங்காய டப்பா முகம் மனத்திற்குள் வந்து போனது

சீக்கிரம் ரேஷன் கார்டு அட்ரஸ் மாத்திட்டு போகணும் , என் வாகனத்தில் வைத்திருந்த பழைய ரேஷன் கார்டையும் அட்ரஸ் மாற்றுவதற்கான அத்தாட்சிகளையும் எடுத்து கொண்டேன்  ,நடந்தேன் ,அப்படியே வழியில் செல்போனில் செம்மொழியாம் தமிழ் மொழியை செல் மொழியாக்கி கொண்டிருந்தவரிடம்

" அண்ணே இந்த வடக்கு மண்டலம்  எங்கிருக்குனே" அவர் செல்போனில் காதில் வைத்தபடியே " இப்படியே நேர போங்க அங்க மஞ்ச சுவரு இருக்கும் அந்த செவத்தமுட்டி நொட்டாங் கை பக்கம் திரும்பி பார்த்தீங்கனா  " (என்னது செவத்த முட்டனுமா )" அங்கனுக்குல வடக்கு மண்டலம்னு போர்டு மாட்டிருப்பாங்க ,அங்க போங்க "

" சரினே " 
" அங்க யார பாக்கபோறீங்க "  என்றார்
' ஆங் ஓம் மச்சினிச்சிய ' வாய் வரைக்கும் வந்துவிட்டது " ரேஷன் கார்டு அட்ரஸ் மாத்தணும் "
"அப்படியா "

நேரம் சரியாக காலை   பத்துமணி , அது பதினாறுக்கு பதினாறு என்ற அளவில் அறையாக இருக்க வேண்டும் உட்புறமாக ஒரு கதவு அந்த கதவு வழியாக அறை அறையாக நீண்டன  , ஆங்காங்கே திட்டு திட்டாய் மரடேபிள் சேர் (கள்) , அதில் மந்தகாசமாய் ,மவுனமாய் அமர்ந்திருந்த சில ஆண்கள் ,பெண்கள் .எல்லோரது முன்னிலையிலும் கணினி இடம் பிடித்திருந்தது , அதில் ஒருவரிடம் சென்றேன்

நிமிர்ந்து பார்த்தார் ,கண்ணாடி சிறைக்குள் இருந்த  கண்களை இடிக்கினார் (பார்வையாலே என்னவென்று கேக்குறாராம் )

ரேஷன் கார்டை நீட்டினேன் " அட்ரஸ் மாத்தணும் " அவரதுஇடது  கை இடது பக்க மூலையில் அமர்ந்திருந்த ஒருவரை நோக்கி நீண்டது (இரவு அவர்  மனைவியிடம் !@#$%^&* மச திட்டு வாங்கிருப்பாரோ?)

" நீங்க வெளியில போய் ரேஷன்கார்டு அட்ரஸ்  மாத்துறதுக்கு  ஒரு பாரம் விப்பாங்க.... அத வாங்கி பில் அப் பன்னி , ஸ்டாம்ப் ஒட்டி கொண்டுவாங்க " என்றார் அந்த மூலையில் அமர்ந்திருந்தவர்
அந்த பார்ம் பில் அப் பண்ணுவதற்கே அரைமணிநேரம் சென்று விட்டது ,மீண்டும் உள்ளே சென்றேன் .பெண்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் காலியாக இருந்தன .
" இந்த மாதிரி தீட்சித் அதான்யா  ஹிந்தி காரி அவ பாட்டு ஒன்னு பார்த்தேன் நல்ல சீனு,அந்த நேரம் பார்த்து  சனி புடிச்ச மூதேவி பொண்டாட்டி காரி வந்து தொலைச்சுட்டா "
" அப்பறம் என்ன ஆச்சு "
" என்ன பண்ண சேனல   மாத்திட்டேன்  ..ஆனாலும் சும்மா சொல்லகூடாது செம கட்ட "
" யாரு உன் பொண்டாட்டியா"
" போயாங்கு ................" அவர்களின் சம்பாசனைகளுக்கு ஊடாக நான் நுழைந்தேன்
நான் உள்ளே நுழைவதை கண்டவுடன் என்ன என்பது போல் இருவரும்  பார்த்தார்கள் .அந்த பாரத்தையும் பழைய ரேஷன் கார்டையும் வாங்கிவைத்து கொண்டார்கள்
"  தம்பி நீங்க போயிட்டு ஒரு வாரம் கழிச்சு இதேநாள் வாங்க "
" சார் அவ்வளவு நாள் ஆகுமா "
" நாங்க என்ன சும்மாவா ஒக்கார்ந்திருக்கோம் உங்க ரேஷன் கார்டு அட்ரஸ் மாத்துறது மட்டும்தான் எங்க வேலையா "
" போயிட்டு வாங்கனு  சொன்னா  பேசாம போகணும் .......... அதுவிட்டு புட்டு ஆயிரத்தெட்டு கேள்விலாம் கேக்ககூடாது ......போயிட்டு அடுத்த வாரம் வாங்க " என்று ஒன்றன் பின் ஒன்றாக பதில் உரைத்தார்கள்

அடுத்தவாரம் :
 " உங்க பேரு "
சொன்னேன்
" உங்க கார்டு இன்னும் வரல அடுத்த வாரம் வாங்க  "
" சார் அடுத்தவாரமா ?"
" என்னங்க நாங்க என்னமோ வச்சுகிட்டா இல்லேன்றோம் வந்த குடுக்க மாட்டோமா ,போங்க சார்
உங்களுக்கு என்னமா வேணும் " என்று மிளாகாய் பொடி நெடியுடன் பேசினார்

அதற்கடுத்த வாரம் :
அதே " உங்க பேரு "
சொன்னேன்
"உங்க கார்டு வந்துடுச்சு ஆனா இதுல கடேசியா சைன் போடவேண்டிய ஆபீசர் லீவுல போய் இருக்காரு அடுத்தாவரம் வந்துடுவாரு ,அடுத்தவாரம் வாங்களேன்
" சார் அடுத்த வாரம்னு அடுத்த வாரம்னு சொல்லி அடுத்த மாசமே வந்துடுச்சு சார் "
" சரி சார் அதற்கு நாங்க என்ன பண்ண முடியும் ,சரி இந்தாங்க உங்க ரேஷன் கார்டு புடிங்க ,இத வச்சு ரேஷன் கடைல உங்களால எந்த பொருளும் வாங்க முடியாது ,புரிஞ்சுக்கோங்க "

அதற்கடுத்த அடுத்த வாரம் :
அரசாங்கத்தின் புன்னியத்திற்க்காக வேலை செய்பவர்கள் கடைசியாக அருள் கூர்ந்து எனக்கு ரேஷன் கார்ட் அளித்தனர் ' ,அந்த ரேஷன் கார்டில் அந்த 'அடுத்த வாரம் ' வந்துடுவாரு ஆபீசரின்கையெழுத்து  இடப்பட்டு விட்டதா என்று விளித்தேன் .அதே பழைய  ரேஷன் கார்டின் பின் அட்டையில் முன் பக்கத்தில் 'நான்கு கோடுகள் கீச்சபட்டு அதில் இரண்டு 'எட்டை ' படுக்க வைத்திருந்தார்
" இதான் சார் கையெழுத்து " முன் பக்க அட்டையின் பின் புறத்தில் அட்ரஸ் மாற்றம் செயப்பட்டதை   காட்டினார்
" சரிங்க சார் "

அப்பாடி ஒரு தொல்லை முடுஞ்சதுடா  சாமி ,வீட்டிற்க்கு வாகனத்தை விரட்டினேன் .வழியில் ஒரு நடுவயது காரர் ,வண்டியை வழிமறித்தார்
" சார் அண்ணாநகர் போறிங்களா "
" ஆமா "
"சார் நானும் அண்ணா நகர்தான் போகணும் ,கொஞ்சம் "
" சரி ஏறிக்கோங்க "
அவரின் செல் போன் 'ரிங்கியது '
" இந்தா வந்து கிட்டே இருக்கேமா ,கெளம்புற நேரத்துல கலெக்டர் கூபிட்டாரு அதான் கொஞ்சம் லேட் ஆய்டுச்சு அதுமட்டுமில்லாம வண்டி வேற பஞ்சரு....... கடைல விட்டிருக்கேன்...............
எப்படி வர்றேனா ஒருத்தர்கிட்ட  லிப்ட் கேட்டு வந்துட்டு இருக்கேன் "
வண்டியை ஓரமாக நிறுத்தினேன்
" எதுக்கு சார் வண்டிய நிறுத்திறீங்க "
" சார் கொஞ்சம் எறங்குங்க "
" என்ன சார் "
" சார் நீங்க கவெர்மென்ட் ஆபிசரா "
" ஆமா "
" மன்னிக்கணும் நான் அரசாங்கத்துல வேலை பார்ப்பவர்களுக்கு எந்த உதவியும் பண்ண கூடாதுன்னு கொள்கையாவே வச்சுருக்கேன் ..........
அப்படியே கியரை ஏற்றி சீறினேன் .முதுகில் பார்வை துளைப்பதை உணர்ந்தேன் .என் ஆற்றாமையை தீர்ப்பதற்கு வேறு வழி தெரியவில்லை

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------                                                                                                                                நட்புடன் -
 நா.மணிவண்ணன் 
                                                                                          




 
               


Read More

2.2.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -2

இனிய நட்புகளுக்கு : 


                            வணக்கம் ,டில்லியில் நடந்த கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய நமது முதல்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியை முதல் கேள்வியை பாருங்கள் 


உங்கள் டில்லி பயணம் எப்படி இருந்தது?
வானம் நிர்மூலமாக இருந்தது. வழியில் தடைகள் ஏதுமில்லை. பொதுவாக நன்றாக அமைந்தது
.



அட அட 


சோப்பு : 


                      ஆட்சியை காப்பாற்றுவதற்கு அரசியல்வாதிகள்  அடிக்கும்  ஸ்டுண்ட்டிற்கு நாம் 'அரசியலில் இதலாம் சாதாரணமப்பா ' என்று எடுத்து கொள்வோம் .ஆனால் ஆட்சியை காப்பாற்றுவதற்கு ஆடையை துறந்த 'தியாக செம்மலை இன்றுதான் பார்க்கிறேன் '
தனக்கு வைக்க பட்ட ' பில்லி சூனியத்திற்கு '  அதை தகர்க்கிறேன் என்று எதிர் 'சூனியமாய் ' கட்டாந்தரையில் நிர்வாணமாய் படுத்துறங்குகிறாராம் ,அவரது ஆன்மீக ஆலோசகரான 'சர்மா' இவ்வாறு பரிகாரம் செய்தால் ஆட்சி காப்பாற்றி கொள்ளலாம் என்று கூறி உள்ளாராம் , பனிரெண்டு நாட்களுக்கு இதே போல் பூஜை செய்துவிட்டு பிறகு ஆற்றுக்கு சென்று 'அதே போஸில் ' சூரிய நமஸ்க்காரம் செய்ய வேண்டுமாம் 


பொதுவாக இது போன்ற  வேலைகளை 'கன்னி பெண்களை வைத்துதானே செய்வார்கள் சாமியார்கள் ' ஒரு வேளை கருநாடக முதல்வருக்கு வைத்த பில்லி சூனியம் உண்மையாக இருக்குமோ 


கர்நாடக மக்கள் பாவம் செய்தவர்கள் போல ஆனால் எடுயுரப்பா 'புண்ணியம் செய்தவராக இருக்க வேண்டும் ' பின்ன அவரு மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் 


முதல்வர்கள் வரலாற்றில் இனி இப்படி கூறி கொள்வார்கள் 


' ஏ நாங்க ஆட்சிக்காக அம்மணமாக திருஞ்சவிங்கடா '


சீப்பு : 


அ .தி .மு. க மற்றும் தே.மு.தி.க கூட்டணி உறுதி ஆகிவிட்டது போல 


ஒரு ரிவைண்ட் : 


ஜெயலலிதா : அவரு சட்ட சபைக்கே ஊத்திட்டு வருவாரு 
விஜயகாந்த் : ஆமா இவுங்க தான் ஊத்திகுடுத்தாங்க 


கூட்டணி உறுதியானால் 'கண்டிப்பாக இருவரும் சந்திப்பார்கள் அப்போது ' முன்னால் பாராட்டுக்களை ' குறித்து பேசுவார்களா ?


கண்ணாடி : 


மறந்த ஊழல் : 


               ஒன்றரைவருடத்திற்கு முன்னால் என்று நினைக்கிறேன் வடக்கே 'மதுகோடா ' என்று ஒரு முதல்வர் இருந்தார் ,அவருகூட ஏதோ எத்தனையோ கோடி அடிச்சிட்டாருனு  சொல்லி டிவி ல காமிச்சாங்க ,அந்த கோடிக்கணக்கான பணத்த என்னுவதற்க்காகவே பல பண என்னுர மெசின் கூட வாங்கி வச்சிருந்தாரு ,அது என்னா ஊழல்னே  




காதல் மாசம் :
 இது காதல் மாசமா ?ம்ம்ம்ம்  ரொம்ப கடுப்பா இருக்கு 


சிவாஜி படம் டயலாக் : 


இன்னும் நிறைய பாய்ஸ்க்கு
 கேர்ள் பிரெண்ட் இல்ல 


அந்த வருமைய ஒழிக்க 
"figure foundation னு 
ஒன்னு ஆரம்பிச்சி 


நாட்டுல இருக்கிற 
சூப்பர் பிகர்ஸ 
அவங்களுக்கு பிரெண்டாக்கிறோம்


நீங்க செய்ய வேண்டியதெல்லாம் 
ஒன்னே ஒண்ணுதான் 
 உங்க கிட்ட இருக்கிற 
 கேர்ள்ஸ் நம்பெர மெசேஜ் ல 
அனுப்பி வைங்க 


முடியாது சொல்றவுங்க 
OFFICE ROOM'LA வெயிட் 
பண்ணுங்க 


by 


FOSS
(FIGURE OF SOCIAL SERVICE)


சற்று முன் வந்த ஒரு மொக்க  எஸ்.எம்.எஸ் 




Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena