வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

15.7.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -8

இனிய  நட்புகளுக்கு வணக்கம்
                                                   தொடர் வேலைகள் பலரது பதிவுகளுக்கு வர முடியவில்லை ,இதை விட தொடர்ந்து பதிவுகள் எழுதவும் முடியவில்லை ,உண்மையை சொல்ல வேண்டுமென்றால் " சரக்கு தீந்து போச்சு " ,

ஆடி மாசமே சீக்கிரம் வருக ,பின்ன ...மொய்,செய்முறை
செஞ்சு மாளல ,அண்ணன் கல்யாணம் ,மாமா பொண்ணு வயசுக்கு வந்துடுச்சு ,அக்கா பொண்ணுக்கு காதுகுத்து ,இது பத்தாதுன்னு ஏதாவுது சொந்தத்தில்லுள்ள   பெருசுக அப்பப்ப  மண்டைய போட்டுதுக, (நீயும் ஒருநாள் கெழட்டு பயலாவன்னு வயதானவர்கள் மனத்திற்குள் வைகிறீர்கள்  ... . மன்னிக்கவும் ) ம்ம்ம்ம்ம்ம்ம் முடியல ,வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் சொல்றாங்க , ஆனா ஆயிரம் ஆயிரமாக அல்லவா செலவழிகிறது ,சரி வாருங்கள் நாட்டு நடப்பிற்கு செல்வோம்

சோப்பு :

" அன்பே  "
" சுவாமி "
" நம் பகைவர்களை பழி வாங்குவதற்கு சரியான நேரம் "
" ஆமாம் சுவாமி நானும் இதற்க்காகதான் காத்திருந்தேன் ,நானே இது குறித்து உங்களிடம் விவாதிக்கலாம்மென்று இருந்தேன்  "
" இங்கு வைத்து வேண்டாம்  எனது மஞ்சத்திற்கு வா,நாம் இது குறித்து சயன நிலையில் விவாதிப்போம் "

லைட்ஸ் ஆப்,நோ கேமரா

சீப்பு :
                                      
 இந்தியாவில் தொடர்ந்து ஒரு நகரம் தீவிரவாதிகளால் தாக்கப்படுவது என்றால் அது மும்பையாகத்தான் இருக்க முடியும் ,காரணம் வணிகம் . நமது மாண்புமிகு உள்த்துறை அமைச்சர் ,தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் ,நமது பாரத பிரதமர் ,அன்னை சோனியா காந்தி காயம் அடைந்தவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்கள்

இந்தியாவில் தொடர்ந்து ஒரு நகரம் தீவிரவாதிகளால் தாக்கப்படுவது என்றால் அது மும்பையாகத்தான் இருக்க முடியும் ,காரணம் வணிகம் . நமது மாண்புமிகு உள்த்துறை அமைச்சர் ,தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் ,நமது பாரத பிரதமர் ,அன்னை சோனியா காந்தி காயம் அடைந்தவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்கள்

இந்தியாவில் தொடர்ந்து ஒரு நகரம் தீவிரவாதிகளால் தாக்கப்படுவது என்றால் அது மும்பையாகத்தான் இருக்க முடியும் ,காரணம் வணிகம் . நமது மாண்புமிகு உள்த்துறை அமைச்சர் ,தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் ,நமது பாரத பிரதமர் ,அன்னை சோனியா காந்தி காயம் அடைந்தவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்கள்

இது ஒரு தொடர்கதை ....................... ஆனால் முடிவு கிடையாது

கண்ணாடி :

"லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வரக்கூடாது' : ராகுல்

  சார் நீங்க தான் அடுத்த பிரதமர் ,ஆமா இங்க என்ன பண்றீங்க ,மும்பைக்கு போகலையா , அப்படியே அங்கயும் ஒரு நடைபயணத்த போட்ர வேண்டியதானே,யோவ் யாருயா அது..... மைக்குக்கு பதிலா பீடிங் பாட்டில நீட்றது

              என்னதான் இருந்தாலும் இந்த சூரிய குடும்பத்தோட  ஓரண்டைய இழுத்தாதான் நல்ல தூக்கமே வருது ,என்ன நான் சொல்றது 

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் - இது பழமொழி

கரண்ட் உள்ளபோதே தூங்கி கொள் - இது கருணாநிதியின் 'பொன் ' மொழி


                 
சீக்கிரம் மொத்த குடும்பமும் உள்ளே செல்வதற்கு ப்ராப்திரஸ்து..............


கில்மானந்தாஸ்  தத்துவம் 002 :

வறுமை வந்தால் வாடாதே ,அதே போல் வசந்தி வந்தால் ச்சே இது.... வசதி வந்தால் ஆடாதே



29 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நீண்ட இடைவேளைக்கு பிறகு..
பரபரப்புடன் சோப்பு சீப்பு கண்ணாடி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
என்னதான் இருந்தாலும் இந்த சூரிய குடும்பத்தோட ஓரண்டைய இழுத்தாதான் நல்ல தூக்கமே வருது ,என்ன நான் சொல்றது

///////

ஏதோ அவர்களால் முடிஞ்சது..

Unknown said...

Why blood same blood!

MANO நாஞ்சில் மனோ said...

மும்பையில் வெடித்த குண்டு நம்ம உள்துறையே வச்சதுன்னு பேசிக்கிறாங்க...!!! ஏன்னா பாகிஸ்தான்'காரன் அவனே குண்டு போட்டுட்டு இந்தியா பெயரை சொல்றதில்லையா அதே கதைதான் இங்கே நடந்துருக்கு கொஞ்சம் யோசிங்க மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

சூரிய குடும்பத்தை பற்றி பேசாத [[எழுதாத]] பதிவர்களுக்கு சூன்யம் வச்சிருவேன்னு நாதாரி ராஸ்கல் அந்த சிபி பய மிரட்டுரான்ய்யா....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
Why blood same blood!//

டேய் அண்ணா மரியாதையா தமிழ்ல எழுது, ம்ஹும் தம்பி எனக்கு இங்கிளிபீசு தெரியாதுன்னு உனக்கு தெரியுமில்ல அவ்வ்வ்வ்வ்வ்வ் பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்.....

Yaathoramani.blogspot.com said...

இன்றுதான் சோப்பு சீப்பு கண்ணாடிக்குள் வந்தேன்
அருமையான பதிவு
அலங்காரம் துவங்கும் முன் அழுக்குப் போக சோப்பு வேண்டும்
தலைதானே பிரதானம் அதை அலங்கரிக்க சீப்பு வேண்டும்
சரியாகச் செய்திருக்கிறோமா எனப் பார்க்க கண்ணாடி வேண்டும்
அப்படி மூன்றுமே இதில் இருப்பதால் பதிவு ரசிக்கும் படியாக உள்ளது
தொடர்ந்து பதிவு தரவும் தொடர்ந்து வர சம்மதம்

Riyas said...

சோப்பு சீப்பு நல்லாருக்கு

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அடிக்கடி எழுதுங்க

Yoga.s.FR said...

MANO நாஞ்சில் மனோ said...
சூரிய குடும்பத்தை பற்றி பேசாத [[எழுதாத]] பதிவர்களுக்கு சூன்யம் வச்சிருவேன்னு நாதாரி ராஸ்கல் அந்த சிபி பய மிரட்டுரான்ய்யா....///சூரிய குடும்பமா??????,த்தூ.............................!இடம்,பொருள்,ஏவல் தெரிய வேண்டாம்!"சூரியன்" யார்?உலகுக்கே ஒளியூட்டும் சூரியனைப் போய்???????????

Yoga.s.FR said...

விக்கியுலகம் said...
Why blood same blood!////ஹி!ஹி!! புரியல!!!!!!!!!

Yoga.s.FR said...

லைட்ஸ் ஆப்,நோ கேமரா.///ஐயோ!கொல்லுறாங்களே,கொல்லுறாங்களே!!!!!!!!!(நாங்களாவே ஆப்பை தேடிப் போய் குந்திக்கிட்டோமில்ல?இப்போ என்ன செய்வீங்க?இப்போ என்ன செய்வீங்க?)

Unknown said...

கலக்கல் சோப்பு சீப்பு !!

test said...

வழக்கம் போலவே கலக்கல் மணி! :-)

Yoga.s.FR said...

நீயும் ஒருநாள் கெழட்டு பயலாவன்னு வயதானவர்கள் மனத்திற்குள் வைகிறீர்கள் ... . மன்னிக்கவும்!///அதனாலென்ன,யாரும்(பன்னிக்குட்டி,செந்தில்குமார்,நிரூபன் போன்றோர்)கோச்சுக்க மாட்டாங்க!எனக்கென்ன???????????????????(நான் மார்க்கண்டேயராக்கும்!)

test said...

சோப்பு....செம்ம!:-)

செங்கோவி said...

வசந்தி யாரு மணி?

Yoga.s.FR said...

என்ன மைந்தன் தம்பி,சவுக்கியமா?மலரோடு தனியாக "ஏதோ செய்தாப்" பிறகு ஆளக் காணயில்ல?"இவரு" ஒத்துக்கிட்டாரு,சரக்கு தீந்து போச்சுன்னு!நீங்க?????

Yoga.s.FR said...

செங்கோவி said...

வசந்தி யாரு மணி?///சும்மாருங்க!அது ஒரு எழுத்து(ந்) அதிகமா தட்டிட்டாரு!இதப் போயி?????

Yoga.s.FR said...

நாய்க்குட்டி மனசு said...
அடிக்கடி எழுதுங்க!///சரி,சரி எழுதுவாரு!கொரைக்காதீங்க!!!!!!!!!!!!!!!!

Yoga.s.FR said...

ஆடி மாசமே சீக்கிரம் வருக!////இன்னும் ரெண்டெ நாளு பொறுத்துக்குங்க!

Yoga.s.FR said...

சரி வாருங்கள் நாட்டு நடப்பிற்கு செல்வோம்!///நல்ல வேள தப்பிச்சேன்!ஏதோ "நாற்று" நடத் தான் கூப்பிடுறாரோன்னு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Yoga.s.FR said...

கரண்ட் உள்ளபோதே தூங்கி கொள் - இது கருணாநிதியின் 'பொன் ' மொழி.///"அப்போ கரண்ட் இல்லாதப்போ சுருட்டிக் கொள்" அப்பிடீன்னு சிம்பாலிக்கா குடும்பத்துக்கு சொல்லியிருப்பாரோ?

நிரூபன் said...

இங்கு வைத்து வேண்டாம் எனது மஞ்சத்திற்கு வா,நாம் இது குறித்து சயன நிலையில் விவாதிப்போம் "

லைட்ஸ் ஆப்,நோ கேமர//

சூப்பரோ சூப்பர் பாஸ்

நிரூபன் said...

சீப்பு ://

வேதனைக்குரிய விடயம், மும்பையோடு நிறைவு பெற்றால், சந்தோசமே.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நிரூபன் துருவி துருவி கேட்ட மாமா பொண்ணு வசந்தியா?

Unknown said...

helo 1 2 3 mike testing

athai ponnu vasanthi engu erunthalum varavum....

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நிறைய படியுங்கள். உங்களை சுற்றி நடக்கும் நிகழ்சிகளே உங்களுக்கு ஓராயிரம் செய்திகள் தரும்.
நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் மணிவண்ணன்.

Unknown said...

வருகைபுரிந்து கருத்துரைத்த அனைவருக்கும் என் அன்பும் நன்றியும் ,தொடர்ந்து வருகை தாருங்கள்

@Yoga.s.FR

ம்ம்ம் கலக்கிட்டீங்க போங்க ,நான் கூற வேண்டிய பதில்களை எல்லாம் நீங்களே கூறிவிட்டீர்கள் ,நன்றி

@செங்கோவி

அண்ணே உண்மையை எல்லாம் இப்படி பொதுவுல கேக்க கூடாது

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena