வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

23.6.11

உலகம்

               பல பேர் முன்னிலையில் ஒரு பெண்ணிடம் பளீரென்று கன்னத்தில் அரை வாங்கிருக்கிறீர்களா ,நான் சற்று முன்னர்தான் வாங்கினேன் ,அந்த கூட்டமான பேருந்தில் அடியும்வாங்கிவிட்டு ,அவமானத்தை மறைத்தும்கொண்டு எல்லோரையும் 'பேந்த' 'பேந்த'  விழித்து பார்த்துகொண்டு ,அடுத்து கூடி நின்று கும்முவார்களே அதற்க்கு என்ன செய்யலாம் ,எப்படி சமாளிக்கலாம் என்று மிக அவசரமாக யோசித்து கொண்டிருக்கிறேன்

ரவுத்திரம் பழகு என்பதற்கு எடுத்து காட்டாய்  அவள்  ரவுத்திரம்   பழகிவிட்டாள் போலும் .  என்னை முறைத்தாள்  ,கூட்டம் என்னை நெருங்கி கொண்டிருந்தது
Read More

19.6.11

நெல்லை பதிவர்கள் சந்திப்பு

          நெல்லை பதிவர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெரும்  மகிழ்ச்சி அடைகிறேன் 


எல்லோருக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துகளும் ,நெல்லை பதிவர்கள் இதை முன்னின்று நடத்தி உள்ளார்கள் ,குறிப்பாக உணவுஉலகம் திரு ,சங்கரலிங்கம் அவர்கள் பெரும் முயற்சியில் சாத்தியமானது என்றால் அது மிகை அல்ல .நன்றி சார் 
சீனா அய்யா, பலாபட்டறை சங்கர், தண்டோரா மணிஜி, நாஞ்சில் மனோ, இம்சை அரசன் பாபு,பெயர் சொல்ல விரும்பவில்லை,மனதோடு மட்டும் கௌசல்யா, கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா, நாய் குட்டி மனசு ரூபினா, அறிவியல்-கல்பனா ராஜேந்திரன், சுவாமியின் மன அலைகள் டாக்டர்  கந்தசாமி,ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்துரத்னவேல்நடராசன்,ஜெயவேல்சண்முகவேலாயுதம், ,கோல்ட் சிவம், தமிழ்வாசி பிரகாஷ், ரசிகன் - ஷர்புதீன், அட்ரா சக்க- சிபி செந்தில்குமார், கோமாளி செல்வா, வெடிவால்-சகாதேவன்,உணவுஉலகம்சங்கரலிங்கம்,அன்புடன்அ.மு.ஞானேந்திரன்,
 வெறும்பய-ஜெயந்த்,நிலாஅதுவானத்துமேல!-ஸ்டார்ஜான்,அட மனிதா காதர் அலி ,மற்றும் பலர் 

காலையில் ஐந்தரை மணிக்கு நான் .திரு சீனா ஐயா, திரு தமிழ்வாசி பிரகாஷ் ,மாட்டுதாவணியில் திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறினோம் ,பேருந்து நகர்ந்து சிறிது தூரத்திலே டயர் பஞ்சாராகி தடை அறிவித்தது ,சரி சந்திப்பு தொடங்கி சிறிது நேரம் கழித்துதான்  செல்வோம் என நினைத்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை ,பிறகு பேருந்தில் செல்லும் பொழுது பதிவர்  நிருபன் அவர்கள் தமிழ்வாசி பிரகாஷுக்கு  அலைபேசியில் தொடர்பு கொண்டார் ,என்னிடமும் கதைத்தார். நான் எழுதிய அத்தமக என்று  காவியத்தை குறித்து கேட்டறிந்தார் ,நான் அது உண்மைகதையல்ல அது ஒரு கற்பனை கதை ,அது போக எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று உரைத்தேன் ,அப்படியா நான் வேண்டுமானால் தங்களுக்கு யாழ்ப்பாணத்தில் பெண் பார்கவா என்று கேட்டார் .நான் ம்ம்மம்மம்ம்ம்ம்

இந்த சந்திப்பில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் : 



கோமாளி செல்வா அவர்கள் நடத்திய நாடகம் ,நான் வேறு அவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன் ,அந்த நாடகம் முடிந்ததிலிருந்தே எனக்கு ஒரு பக்க காது கொஈஈஈஈஈஇ  என்று கேட்க்கிறது ஏன் என்று தெரிவில்லை .

என்னது என்னிடம் சரக்கு தீந்து போச்சா என்று அண்ணன் சி.பி.செந்தில்குமார் ஆக்ரோசமாக பதில் அளிக்கிறார்


சி .பி செந்தில்குமாரின் தன்னிலை விளக்கங்கள் , மன்னிப்பு படலங்கள் தொடங்கியது , எல்லோருமே அவரை  கடுமையாக தாக்கினார்கள் ,தனி ஒருஆளாக பதிலளித்தார் , ஒரு கட்டத்துக்கு மேல் மிக கோவமாக பேச ஆரம்பித்து விட்டார் ,அதுமட்டுமல்லாமல் இதுவரை  தன்னை  தாக்கி எழுதியவர்களை எண்ணி வைத்திருக்கிறேன்  என்ற உண்மையை நவின்றார் ,அதனால் சி.பி யை தாக்கி எழுதுபவர்களே உங்களுக்கு ஒன்று கூறிகொள்கிறேன் ,அவர் பேசிய பேச்சை வைத்து கூறுகிறேன்

அவர் ஒன்றும்  காமெடி பீஸ் அல்ல ( அண்ணே ஓகே வா )

சகோதிரி  ஜோசபின்பாபா- ஜோசபினோடு கதையுங்கள் ,தான் எழுதிய பதிவுகள் குறித்து மிக நன்றாக பேசினார் 

 நாய் குட்டி மனசு ரூபினா மேடம் - தான் எழுதிய பதிவு மூலம் நடந்த நெகிழ்ச்சியாக சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார் 


கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா மேடம் -கருத்து குறித்த தனது கருத்தை எடுத்துரைத்தார் .அனைவராலும் ஏற்றுகொள்ளகூடியதே


நிலாஅதுவானத்துமேல!-ஸ்டார்ஜான்- தான் பதிவு எழுத வந்ததை குறித்தும் பதிவர்கள் தங்களது கருத்தை பிறரது மனம் கோணாதபடி எடுத்துரைக்கவேண்டும் என எடுத்துரைத்தார் 


பெயர் சொல்ல விருப்பமில்லை பதிவர் தனது பெயரை விருப்பத்துடன் கூறினார் ,மற்றும் ஊடாக ஊடாக நகைச்சுவையாக பேசி சந்திப்பை கலகலப்பாக்கினார் 

பலா பட்டறை -  திரு.சங்கர் அவர்கள்  கட் காப்பி பேஸ்ட் பதிவர்கள் பற்றி தனது கருத்தை எடுத்துரைத்தார்


இன்னும் பல நினைவில் நிற்கும் சம்பவங்கள் நிறைய ,பிறகு இத்தனை நேரம் பேசி கலைத்து போனபடியால் .சிறிது வயிற்றுக்கு உணவிட சென்றோம் ,நான் ,பன்னீர் மசாலா ,சாப்பாடு  ,ரசம் ,கொழம்பு ,அப்பளம் ,ஐஸ்கிரீம் மற்றும் பீடா(ஸ்வீட்) என அளவாக உண்டோம் . பிறகு எல்லோரும் ஒன்றாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தோம் ,சி.பி .செந்தில்குமார் குற்றாலத்துக்கு ஆள் தேத்திகொண்டிருந்தார்.என்னையும் அழைத்தார் ,தாங்கள் முழு செலவை ஏற்று கொள்கிறீர்களா என்று கேட்டேன் ,அதற்க்கப்பறம் ஆளே காணவில்லை . .
  


மீண்டும் எல்லோருக்கும் எனது  வணக்கங்களும் ,நன்றிகளும்
Read More

10.6.11

அத்தமக


                எனக்கும் என் அத்த பொண்ணுக்கும் ஒரு வாரந்தான் வயசு வித்யாசம் .என் அத்த பொண்ணு பேரு ரத்தினகுமாரி .அவள நானு ரத்தினுதான்  கூப்பிடுவேன் எங்க அப்பாவோட கூட பிறந்த தங்கச்சி மவ .எனக்கு ரத்தினத்த ரெம்ப புடிக்கும் .அவளுக்கும் தான். .ரத்தினத்துக்கு ரெண்டு அக்காவும்  ஒரு அண்ணே இருக்கான் .நாங்க எல்லோரும் ஒன்னா சேந்து விளையாடுவோம் .நான்தான் ராஜா ரத்தினம்தான் ராணி.அந்த ரெண்டு அக்காவும் சேந்து ரத்தினத்தா தூக்கிட்டு போய்டுவாங்க .நா போய் அவுங்க கூட சண்ட போட்டு என் ராணியை தூக்கிட்டு வந்துடுவேன் . எனக்கு இந்த விளையாட்டு ரொம்ப புடிக்கும்
நா குழந்தைய இருக்கறப்பவே மதுரைக்கு வந்துட்டோம் .எங்க அப்பாவுக்கு  இங்க தான் வேல .இப்போ நானு நாலாப்பு படிக்கிறேன். அரபரிச்சைலீவுக்கு எங்க அத்த ஊருக்கு போயிட்டு இருக்கேன் .எங்க அத்தபொன்னு ஊர சுத்தி ஒரே மலையா இருக்கும் . பஸ்ல போறப்ப மலை கூடவே வர்ற மாதிரி இருக்கும் .அந்த மலை முடியவே முடியாது .
போன காபரிச்ச லீவுக்கு போனப்ப எங்க அத்த எனக்கு பணியாரம் சுட்டு குடுத்தாங்க .அதை அத்த மகேன் குமரேசன் புடிங்கிட்டு ஓடிட்டான்.எனக்கு அழுகை வர்ற மாதிரி இருந்துச்சு.அப்பறம் ரத்தினம் அதோட பணியாற த்த குடுத்துச்சு .நா பாதி அவ பாதினு கடிச்சு சாப்பிட்டோம் ,ரொம்ப நல்லா இருந்துச்சு ,
அடுத்த நாள் காலைல குளிக்க ஆத்துக்கு போனோம் , நா சின்ன பய்யன் தானே அப்படின்னு  எனைய பொம்பளைங்க குளிக்கிற எடத்துக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க ,ரத்தினமும் கூடவே வந்துச்சு ,எங்க அத்த எனைய  டிரஸ் கழட்டிட்டு வந்து குளிக்க சொன்னாங்க,நானும் வேக வேகமா ட்ரெஸ்ஸ கழட்டிட்டு குளிக்க போனேன் ,நீ சட்டி போட மாட்டியானு ரத்தினம் எனைய பாத்து விழுந்து விழுந்து சிரிச்சுச்சு ,எனக்கு வெக்கமாவும் அழுகையா வந்துச்சு .ஆனா இந்த வட்டமும் அப்படி ஆககூடதுனு நா புதுசா சட்டி போட்டு வந்துட்டேன்
 இப்ப போன உடனே ஏய் ரத்தினம் உம் புருஷன் வந்துட்டான்டி சொல்லுவாங்க .அதுவும் ஓடி வரும் .நாங்க ரெண்டு பெரும் சேந்து வெளயாட போவோம் ஜாலியா இருக்கும்
இந்தா எங்க அத்த வீடு வந்துடுச்சு ,நா எங்க அப்பா கைய ஒதறிட்டு 
ரத்தினு ரத்தினு கூப்பிட்டு கிட்டே ஓடறேன்

பளீரென்று முகத்தில் தண்ணீர் பட்டது ,படீரென்று எழுந்தமர்ந்தேன்
என் மனைவி ரத்தினு  கையில் கரண்டியுடன்  நின்று கொண்டிருந்தாள்

"அடச்சீ எழுந்திரியா உன்னைய எத்தன தடவதான் எழுப்புறது "

"ஏ சனியனே எந்திருச்சு தொலை எப்ப பாத்தாலும் படுக்கைல மூத்திரம் போறதே வேலையா வச்சிருக்கு "என்று மகனை மண்டையில் அடித்து எழுப்பி னாள் பின்பு

"இந்த ஆள கல்யாணம் பண்ணி   என்னத்த சொகத்த கண்டேன் " என்று கூறிக்கொண்டே அடுக்களைக்குள் சென்றாள்

ஒரு கனவு கலைக்க பட்டது .

கனவு வாழ்க்கையாகவும் வாழ்க்கை கனவாகவும் இருக்க கூடாதா?

குறிப்பு : 
இது ஒரு மீள் பதிவு ,என்னுடைய முதல் கற்பனை கதை .(நம்புங்கப்பா ) பல எழுத்தாளர்களால் எழுதி தேய்ந்து போன கருதான் , ஆனாலும் இந்த சின்ன கதையை நிறைய பேர் வந்து படித்து செல்கிறார்கள் ,மிக முக்கியமாக  search keywords செக் செய்து  பார்த்தால் அத்த என்று வருகிறது .


Read More

8.6.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -7

இனிய நட்புகளுக்கு வணக்கம்
                                  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் தி.மு,க  வின் குடும்ப வாரிசுகள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர் ,அடுத்து யாரு கம்பி என்ன போவது என்று ?மத்திய ஜவுளித்துறை  தயாநிதி மாறன் கதறி கொண்டிருக்கிறார் " அடுத்து நம்மள உள்ள தூக்கி வச்சுடுவாய்ங்களோ"  ஊடங்களின் ஏகபோக உரிமைகளை தம்பி தாரைவார்த்து  அண்ணன் கையில் கொடுக்க ,கேடி அண்டகோ பிரதர்ஸ்  ஆடிய ஆட்டம் என்ன ,பாடிய பாட்டு என்ன ? 


சோப்பு : 

கண்கள் பனித்தன இதயம் இனித்தன நாடகத்தை நடத்தாமலே இருந்திருக்கலாம் போல
 நாடாளுமன்ற கூட்டு குழு  விசாரிக்க உள்ளதால் இவர் விரைவில் மத்திய அமைச்சர் பதிவியை ராஜினாமா செய்யலாம்    

சீப்பு : 
          
 1 .     அண்ணல் காந்திஜி சமாதியில் நடனமாடி தொண்டர்களை குசிப்படுத்துகிறாராம் ,இதே போன்று தற்போது தோய்ந்து போய் உள்ள தி.மு.க தொண்டர்களை குசிப்படுத்த அண்ணா சமாதியில் தானை தலைவி குசுப்பு நடனமாடுவாரா ?

2 . 
சும்மா இருந்திருக்கலாமோ ?
அரசியல்வாதியாகிவிடலாம் என்ற ஆசையில் இப்படி மண்ணள்ளி கொட்டிவிட்டார்களே ,ஆயிரம் கோடி எப்படி வந்தது என்று அமலாக்க பிரிவினர் விசாரிக்க போகிறார்களாம் ,ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை ,ஆசிரமத்திற்கு வெளில நாலு பந்தகால நட்டு அங்க உண்ணாவிரதம் இருக்க வேண்டியதுதான ,உண்ணாவிரதம் இருக்க பதினெட்டு கோடி செலவழிச்சா .

கண்ணாடி :
                          
3 .
                 

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு
மகளின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை கேட்ட கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், கோர்ட் வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார். 
 தங்களின் வருத்தத்தை உணரமுடிகிறது எனக்கு ஒரு மகளிருந்து அவளை சிறையிலடைத்து ,ஜாமீன் வழங்க மறுத்தால் எப்படி இருக்குமோ , அப்படித்தானே உங்களுக்கும்  இருக்கிறது ,என்னால் உணரமுடிகிறது ,உணரமுடிகிறது ,அழாதீர்கள் அழாதீர்கள்

4 . 
அழகிரிக்கு ஜாமீன் 
மத்திய அமைச்சர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரி தேர்தலின் போது மதுரை மேலூரில் நடந்த பிரச்சனைக்காக கோர்ட்டில் தன் பரிவாரங்களுடன்  ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் 

                                      ஐயா என்னய்யா இது காலகொடுமையா இருக்கு ஒரு புள்ளைக்கு ஜாமீன் குடுக்குறாய்ங்க இன்னொரு புள்ளைக்கு குடுக்க மாட்டேங்கிறாய்ங்க ,கூடா நட்பு கேடாய்  முடிஞ்சுபோச்சே ,ஓவர் நைட்ல  இப்படி உங்கள ஒச்சுபுட்டாய்ங்கலே ,அதான்யா ஒரு தமிழனா  எனக்குரொம்ப வருத்தமா இருக்கு 
 5.
                                                             
சமச்சீர் கல்வி திட்ட குறைபாடுகளை மறுக்கவில்லை: ராமதாஸ்

பல்ட்டி பரமானந்தன் விருதுக்கு தங்கள் பெயர் பரிந்துரைக்க படுகிறது 

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்!
                           
நடிகர் விஜய்க்கு வரும் 22ம்தேதி பிறந்த நாள். என் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவதை விட்டு விட்டு, ஏழை - எளிய மக்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்து சமூக நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்,

தமிழ்நாட்டின் இனமான தலைவர் ,எதிர்கால முதல்வர் ,டாக்டர் இளைய தளபதி விஜய் அவர்களின்  ரசிகர்களே புரிந்துகொள்ளுங்கள் ,அவரின் பிறந்தநாளை கொண்டாடதீர்கள்


லாஸ்ட் பட்நாட் லீஸ்ட்


விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!
தமிழக மக்கள் கடும் சித்திரவதைக்கு உள்ளாக போகிறார்கள் என்று தெரிகிறது


நட்புடன்

நா.மணிவண்ணன் 


Read More

4.6.11

புன்னகை

பனி பெய்த காலை ,மேகத்திற்குள்ளிருந்து வர துடித்துகொண்டிருக்கும் மழை,சூரியனை தேட வேண்டும் போல ,இரவு முழுவதும் ஒத்திகை பார்த்ததை அசைப்போட்ட படியே மொட்ட  மாடியில் நடந்து கொண்டிருந்தேன் ,  இன்று அவளிடம் எப்படியாவுது ஒருவார்த்தையாவுது பேசிவிட வேண்டும்,அவள் பேருந்து நிறுத்தத்தில் நான் தினமும் தரிசிக்கும் தேவதை  அவள் பெயர் நந்தினி   என் காதலியின் பெயரை தெரிந்து கொள்வதற்காக பகல் நேர கூர்க்காவாக  அவள் குடி இருந்த தெருவில் சுற்றி சுற்றி திரிந்திருக்கிறேன் ,  ஒரு பத்து நாள் பயணத்திற்கு பின் என்னவளின் பெயரை தெரிந்து கொள்ள முடிந்தது ,அதுவும்   என் எதிர்கால அத்தையின்  (என் தேவதையின் தாய்) உபயத்தில்   "அடியே நந்தினினினி ............. சனியன் வருதான்னு பாரு எல்லாம் அந்தாளு குடுக்கற செல்லம் "  உள்ளே மின்னலே வசீகரா பாட்டு  கேட்டது   நான் அவள் வருகைக்காக மெதுவாக சைக்கிளளை கடத்தி கொண்டிருந்தேன்   வந்தாள் கடைக்கண் பார்வை வீசி சென்றாள் ,ஆஅ நந்தினி   இப்படியாக முடிந்தது என்னவளின் பெயரை தெரிந்து கொண்ட வரலாறு .  எங்கள் இருவரின் சந்திப்பும் நிகழும் இடம் சுகுணா ஸ்டோர் பஸ் ஸ்டாப் .  அது மதுரையில் அண்ணாநகரில் உள்ள பஸ் ஸ்டாப்  . அப்பொழுது அந்த இடத்தில ஒரு மரமிருந்தது .அந்த மரத்தின் பின்னால் நான் அவளின் வருகைக்காக காத்துகொண்டிருந்தேன் .அவள்     வந்தாள். நான் அவளின் வடபுறமாக சென்று நின்று கொண்டேன் .  காற்றுவாக்கிலும் பஸ் வருகிறதா இல்லையா என்று பார்பது போலவும்   நான் அவளை பார்க்கிறேனா  இல்லையா ஓரகண்ணில் பார்த்தாள்  நான் மெதுவாக அவளை நோக்கி முன்னேறினேன் அவள் பார்க்கும்பொழுது பல் தெரிவது போலவும் தெரியாதது போலவும் புன்னகைத்தேன் . அவளும் ஒரு புன்சிரிப்பை பல் தெரியாமல் வெளியிட்டாள்  அந்த நிமிடம் எறும்பூற கல்லும் தேயும் எவ்வளவு சத்தியமான பழமொழி என்று நினைத்துகொண்டேன் ( ஆகா சிக்கீடுச்சுடா ) அந்த நேரம்பார்த்து அவள் வழக்கமாக செல்லும் பஸ் வர  அவளும் ஏறிவிட்டாள்  "டேய்  கேனக்............நீனும் மூணுமாசமா சுத்திரியே  இன்னைக்குதான் அவளே ஏதோ போனபோகுதுன்னு சிரிச்சிருக்கா  போடா போய் பேசுடா   " என்று மனது கட்டளைஇட்டது . நானும் அந்த பஸ்சில் செல்லலாம் என்று காலை தூக்கி பஸ்சில் வைக்க போனேன் .  ஆனால்  கால் வரவில்லை   அந்த பஸ்சும்  நகர்ந்துகொண்டிருந்தது அவள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து மீண்டும் ஒரு சிரிப்பை சிந்தினாள்  " என்னது அவசரத்துக்கு கூப்பிட்டா நம்ம காலு கூட வர மாட்டேங்குது  " என்று  குனிந்து  பார்த்தேன் 

என் வலது கால்  அந்த இடத்தில் ஏதோ ஒரு மாட்டினால் இட பட்ட மாட்டு சாணத்தில் புதைந்திருந்தது.

அவளின் சிரிப்பிற்கான காரணத்தை என்னால் அறிந்துகொள்ளமுடிந்த்தது .என்னைமில்லாமா இன்னைக்கு மட்டும் சிரிக்கிராலேன்னு பார்த்தா

  









வம்பா போயி வாங்கு ஆகுறதே பொழப்பா போச்சே நமக்கு ச்சே .


டிஸ்கி : சரக்கு தீர்ந்து போச்சு அதனால ஒரு மீள் பதிவு
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena