தமிழ் நாடு முழுவதும் சுற்றி இருக்கிறேன் ,இனிமேல்ஊர் சுற்றியது போதும் என்று நம் மாண்புமிகு மின்சாரத்துறைஅமைச்சர் ஆற்காட்டாரின் மறைமுக உதவியோடு பிழைத்து வருகிறேன் ,அதாவுது , யு.பி.எஸ் ,இன்வெர்டர்ஸ் ,பாட்டரி என்று சுயமாக தொழில் செய்து வருகிறேன் ,வேறு சில தொழில்களும் செய்து வருகிறேன் ,வாழ்க்கை வண்டியை தள்ளி வருவது கடினமாக இருந்தாலும் பழகிவிட்டது
வாசிப்பு எனக்கு சிறுவயது முதலே பிடித்தாமானதாய் இருந்தது ,ஆனால் பள்ளி பாடம் புத்தகம் மட்டும் உஉவ்வே................. வெறும் காதல் கதைகள் ,க்ரைம் கதைகள் என்று மட்டும் தான் வாசிப்பை நிறுத்தி வைத்திருந்தேன் ,பிறகு அது சலித்து போய்விட்டது எளிதாக முடிவை யூகிக்கும் அளவிற்கு வாசிப்பானுவபம் வளர்ந்து விட்டது ,பிறகுதான் இலக்கிய தரமான கதைகளை நாடினேன் ,அப்படி படித்ததுதான் கா.நா.சுவின் பொய்த்தேவு ,சோமு என்கிற மனிதனின் வாழ்க்கை பின்னாலே சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது ,இலக்கிய சூழலில் வெகுவாக கவனிக்க பட்ட நாவல் ,பிறகு
ஜெயகாந்தனின் சிறுகதைகள்
சுஜாதாவின் கதைகள் ,அவர் இறந்த பின்புதான் அதிகமாக அவரை வாசிக்க ஆரம்பித்தேன் ,இப்படியாக முக்கிய தலைவர்களின் வரலாறுகள் படிப்பது ,ஆய்வு நூல்கள் படிப்பது என்று என் வாசிப்பின் திசையை மாற்றி கொண்டேன்
எனது கல்லூரிக்காலத்திலே ப்ளாக் என்று ஒன்று இருப்பதை அறிந்திருக்கிறேன் ,ஆனாலும் தீவிர கவனம் பெறவில்லை ,இரண்டு வருடத்திற்கு முன்பே இப்பொழுதைய பெருந்தலைகளின் பதிவுகளை படித்து வந்தேன் ,இவர்கள் எப்படி இவ்வளவு பிரபலம் ஆனார்கள் என வியந்தேன் ,போன வருடம் மே மாதத்தில் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் அக்கௌன்ட் செக்சனில் வேலை பார்த்த பெண் தமிழ்மணத்தை ஓபன் செய்து பார்த்து கொண்டிருந்தார் ,அதை பார்க்க நேர்ந்தது ,இதன் மூலமாக எல்லோரும் பிரபலாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது
ஆஹா மணி ஓபன் பண்றா ப்ளாக்க நாமளும் நாலு பேருக்கு இம்சைய குடுப்போம் ,இப்படியாக எனது வலைப்பதிவு வரலாறு தொடர்கிறது ,தொடருமா என்றால் சந்தேகமே ?
நேற்று பகலில் வீட்டிற்கு உணவருந்த சென்ற பொழுது வீட்டில் இரு பெரியவர்களை உபசரித்து கொண்டிருந்தார்கள் எங்கள் வீட்டு பெரியவர்கள் ,நான் அவர்களை இதுவரை பார்த்ததில்லை ,என் அப்பத்தா வெகு இயல்பாக உரையாடி கொண்டிருந்தார் .நான் அவர்களிடம் "வாங்க " என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டேன் ,மீண்டும் வெளியில் வந்த பொழுது அவர்கள் கிளம்பி கொண்டிருந்தார்கள் ,அப்பாட போயிட்டாய்ங்க என்று டிவி பார்க்க ஆரம்பித்தேன்
உணவருந்தும் பொழுது அம்மாவிடும்
"வந்தைவிங்க யாரு "
"உன்னைய மாப்பிளை கேட்டு வந்தாங்கடா "
"என்னயாவா"
மீண்டும் "என்னைவா "(ப்பாரா நம்மலகூட மாப்பிள கேட்டு வர்றாய்ங்கலே)
"நீங்க என்ன சொன்னீங்க "
"இப்போதைக்கு பொண்ணு பார்க்கிறமாதிரி இல்லைன்னு உங்க அப்பா சொல்லீட்டாருடா "
அப்பாடி த்தப்பிச்சேண்டா சாமி ,எல்லாம் எங்கப்பத்தா பண்ணுகிற வேலை எனக்கு சீக்கிரம் திருமணம் செய்து விட வேண்டும் ,முயற்ச்சிக்கிறார்
திருமணம் என்பது ஒரு சரியான கமிட்மென்ட் ,திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை வேறு ஒரு திசையில் செல்லும் ,ஆனால் என் பள்ளி நண்பர்கள் ,கல்லூரி நண்பர்கள் நிறைய பேருக்கு திருமணம் ஆகி குழந்தை கூட இருக்கிறது ,அதற்காக இவனுக்கு வயாதகிவிட்டது என்று நினைத்து விடாதீர்கள் , எனக்கு இப்பொழுதான் 26 வயதே நடக்கிறது ,இந்த மே 6 வந்தால்தான் எனக்கே 27 வயதே தொடங்கும் ,இன்னும் ஒன்றை வருடமாவது செல்லும் திருமணம் செய்து கொள்ள
ஓவர் மொக்கையா இருக்கா............ வேண்டுமென்றால் எனது பள்ளிகாலத்தில் இறுதியில் நடந்த இரு சம்பவங்கள் கூறுகிறேன் சிரித்து விட்டு போங்க
1. அன்று பதினொன்றாம்வகுப்பு என்று நினைக்கிறேன் ,வகுப்பு தொடங்கியது ,முதல் பீரியட் ஆங்கிலம் ,ஆங்கில ஆசிரியர் வந்தார் ,மிகவும் நல்ல ஆசிரியர் படம் நடத்துவதற்கு பதிலாக அதிகமாக கதை சொல்லுவார் ,ரோமியோ ஜூலிஎட்,ஹாம்லெட் , ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் குறித்த உலகின் முதல் கிரேக்க நாடக கதை (ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் கிட்ட தட்ட அதன் பின்னணியில் பாலுமகேந்திரா படம் எடுப்பதற்காக ஜெயமோகனால் எழுதப்பட்ட "அனல்காற்று ", நாவல் சமீபத்தில் தான் படித்தேன் ,காமத்தின் மன அதிர்வளைகளுடன் போராடும் ஒருவனின் அவனது பார்வையில் கூறப்படுவதாக இருக்கும் )ஆனால் அன்று என்ன நினைத்தாரோ பாடம் எடுக்க போகிறேன் என்று கூறினார் ,ஆங்கில துனைபாட பாட நூலை வாங்கினார் ,அந்த புத்தகம் முழுவதும் கதைகளாகத்தான் இருக்கும் வில்லியம் ஷேக்ச்பியரின் " Twelth night"
எடுக்க போவதாக அறிவித்து "twelth night" போர்டில் எழுதினார் ,அப்பொழுது கீழே ஆபீசில் இருந்து அழைப்பு வரவே ,அப்படியே நிறுத்தி விட்டு சென்று விட்டார்
முதல் இரண்டு பெஞ்ச்களில் பெண்கள் அமர்ந்திருப்பர் ,நான் அதற்க்கு பின்னால் அமர்ந்திருப்பேன் ,எழுந்தேன் ,போர்டு அருகே சென்றேன் ,"twelth" அழித்து "first" என்று மாற்றினேன் ,வகுப்பறையே சிரிப்பலையில் ஆழ்ந்தது ,அந்நேரம் பார்த்து மீண்டும் ஆபிசில் இருந்து ஒருவர் வந்தார் ,டெர்ம் பீஸ் கட்டாதவர்களை correspondent அழைப்பதாக கூறினார் ,சில மாணவர்களில் கூட்டமாக சென்றோம் ,அந்த பள்ளியில் குறித்த தேதியில் பீஸ் கட்டவில்லைஎன்றால் வீட்டிற்கு அனுப்பி விடுவர் ,வீட்டிற்கு சென்று பணத்தை வாங்கி வரவேண்டும் என்று கூறுவார் ,இதற்காகவே நான் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியே பீஸ் கட்டுவேன் ,அப்பொழுதானே நன்றாக ஊர் சுற்றலாம் ஹி ஹி ஹி ,ஆனால் நான் சென்றவுடன் பிரின்சிபால் ரௌண்ட்ஸ் வந்திருக்கிறார் ,எல்லா வகுப்பறையும் அமைதியாக இருக்க இந்த வகுப்பறையில் சத்தம் வருகிறதே என்று எட்டி பார்த்திருக்கிறார். கட் .........அடுத்தநாள் நான் வழக்கம்போல் பள்ளி சென்றேன் ,வகுப்பறைக்கு சென்றதுதான் தாமதம் ,உன்னை கீழே அழைக்கிறார்கள் என்று செய்தி வந்தது , கீழே சென்றேன் ,பிரின்சிபால் ரூமிற்கு அழைத்து சென்றார்கள் ....correspondent டின் மூத்த மகன்தான் ப்ரின்சிப்பால் ,இளைய மகன் ,அந்த பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களை அடிப்பதற்காகவே அவர்களின் சொந்தக்காரர் ஒருவர் வந்து போவார் (லிட்டில் லிட்டில் பண்ணியாரம் ,குட்டி குட்டி இடியாப்பம் என்று குனியவைத்து முதுகிலே தன்னுடைய கர்லாக்கட்டை கைகளினால் அடிப்பார் பாருங்கள் ,மூச்சே நின்றுவிடும் )இவர்கள் நால்வரும் கையில் பிரம்புடன் நின்று கொண்டிருந்தார்கள் ,உள்ளே சென்றதுதான் தாமதம் ,உங்க வீட்டு அடியா ,எங்க வீட்டு அடியா ,மூச்சு தெனற தெனற அடித்துவிட்டு ............கிரௌண்டில் மணலில் முட்டிங்கால் போடவிட்டாகள் .பெண்கள் எல்லோரும் பார்த்து வாய்க்குள்ளே சிரித்து சென்றது இன்னும் வலிக்கிறது
2. எங்கள் வீட்டில் ஒரு ஆறு தெரு தள்ளி நடந்த சம்பவம் அந்த சிறய தெருவை அடைத்த மாதிரி சைக்கிளை நிறுத்தி நானும் என் நண்பனும் அமர்ந்து பேசிகொண்டிருந்தோம் ,நண்பனின் 'ஆள் ' சற்று நேரத்தில் இந்த பாதை வழியாக வருவார் ,வந்து சென்றவுடன் போகலாம் என்று கூறினான் ,இயல்பிலே எனக்கு உதவி மனப்பான்மை அதிகம் (உண்மை காரணம் :நண்பனின் 'ஆள் ' லின் தோழி )திடீரென்று அந்த இடத்தில் இருவர் பிரசனமானார்கள் .இருவரும் கைகளில் லத்தி போல் உருண்டையாக ,நீளமாக ,குச்சி வைத்திருந்தார்கள் ,வந்தசோறில் , என் நண்பனின் தோள்பட்டையில் ஒரு அடி வைத்திருந்தார்கள் ,"ஏண்டா சந்த அடைச்சு போட்ட மாதிரி சைக்கிள நிறுத்தி டாப் அடிக்கிறீங்களா ம்ம்ம் " இன்னொருவர்" சைக்கிள எடுங்கடா " ஆஹா போலிசு மப்ப்ட்டீள வந்திருக்காய்ங்க மீண்டும் என் நண்பனின் முதுகில் அடிவைத்து ,பிறகு என்னை கவனிக்க வந்தனர் ,நான் என் நண்பனை பார்த்தேன் அவன் அதற்குள் சைக்கிளை எடுத்து காத தூரம் சென்று விட்டான் (ஐயையோ சிங்கம் தனியா சிக்கிடிச்சே அசிங்கமா போய்டுமே என்று அந்த தெருவாசிகள் நினைத்திருப்பார்கள் )அந்த இருவரும் மாற்றி மாற்றி முட்டிங்காலிலே அடிக்கிறார்கள் ,நான் சற்று முன்நகர்ந்தால் முதுகில் அடிக்க ஏதுவாகி விடும் என்ற காரணத்தினால் அந்த இடத்திலே பரதநாட்டியம் ,கதக்களி ,குச்சுபுடி என கலவையாக நடனமாடி கொண்டிருக்கிறேன் அந்த இடத்தில ,தெரு முழுக்க கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்தனர் ,அதில் நண்பனின் 'ஆள் ' 'ஆளின் ' தோழி ,
அப்படியே அடியை வாங்கி கொண்டு சற்று நகர்ந்து நகர்ந்து ,சைக்கிளில் ஏறி விரட்டி சென்றேன் ,சிறிது தூரத்தில் என் நண்பா இஈஈஈ இளித்தவாறு நின்று கொண்டிருந்தான் 'டேய் உன் கூட வரப்பெல்லாம் யாருக்கிட்டையாவுது அடிவாங்கி குடிக்கிரியடா ,அப்பிடி நா என்னடா துரோகம் செஞ்சேன் " இன்னைக்கு மிஸ்சா ஆய்டுச்சு நாளைக்கு வருவோம் ," என்றான் ,என்னது நாளைக்கு வேறையா "அடப்பாவி முட்டிங்காலுக்கு கீழ விண்ணு விண்ணுனு தெரிக்குதுடா ,இதுல நாளைக்கு வேறையா......... டே அப்படியே ஓடி போய்டு கல் எடுத்து மண்டைய ஒடேச்சே புடுவேன் "
பிறகென்ன........... வலியோடு சைக்கிளை ஒட்டி சென்றேன் .ம்ம்ம் இப்பொழுது அந்த தெருப்பக்கம் செல்வதில்லை
 |
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான்போல வந்தவன யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ ...............................................................ரோ
|