வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

10.4.13

பத்தினி தினசரி பக்கங்கள் தீர்ந்த பிறகு சிறிது நேரம் மாடியில் உலாத்தலாம் என்று எழுந்தேன் .காலை காபியும் சிறிது நேர நடையும் வயிற்று சங்கடங்களை தீர்க்க வல்லது.  ஐந்து குடித்தனங்கள்  இருக்கும் காம்பௌன்ட் வீட்டில் அதிகாலை வெயிலேரத்தொடங்கியது.

"நீ தேவ...........ங் கொம்மா தேவ........ உன் குடும்பமே தேவ............... குடும்பம்டி,.....
 நா தேவ............. வா,நா தேவ............. வா ம்ம் அப்பறம் என்ன மயித்துக்குயா என் வயித்துல புள்ளைய குடுத்த ,ஆட்டோக்காரன் குடும்பம் காலையிலே ஹாரன் அடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க போல.முதலில் வீட்டை மாத்தணும்

மாடி திருப்பத்தில் சுடிதார் டாப்சும் தலையில் கொண்டையுமாக கையில் பிளாஸ்டிக் வாளியுடன் ஒதுங்கி நின்ற தீபிகாவை பார்த்து மனத்தில் எழுந்த எண்ணத்தையும் மற்றதையும் அடக்க கஷ்டப்பட்டேன். கடைசி வீட்டு அரசாங்க பேருந்து கண்டக்டரின்  மூத்த பெண் ,என்னை விட கொஞ்சம் உயரம். சற்றே கருப்பு என்றாலும் கவர்ச்சியான முகவெட்டு ,அடிக்கடி  வீட்டு வாசலில் வந்து நின்று ,அண்ணா அத்தையை கூப்பிடுங்களேன் ,என புதிய உறவுமுறையை உருவாக்குபவள்.

பல் விளக்குதல் ,குளித்தல் , காலை உண வருந்துதல் என இத்தியாதி கடமைகளை முடித்தபொழுது ,மணி பதினொன்றுனென அறிவித்தது .கண்ணாடியை பார்த்து தடவியதில் நான்கு நாள் கன்னம் சொர சொரத்தது ,என்ன பொன்னா பாகக போறோம் .செல்போன் சங்கர் அழைப்பதாக  சிணுங்கியது .
"சொல்றா போலிசு "
"எங்க இருக்க "
"வெளிய வா "
வெளியில் வந்தேன் மாமனார் வீட்டு சீதனத்தை முறுக்கி கொடிருந்தான் .அவனது வண்டியில் பின்னால் அமர்ந்தேன் " இன்னிக்கு லீவா " என்ற படியே  வண்டியை முறுக்கினான் .நேராக தமிழ்நாடு பாரில்  நிறுத்தினான்
"ஏ காலைலே வா "
"இன்னிக்கு லீவுதானே "
"அதுக்காக..... சாயிங்காலம் வருவோம்டா "
"டெண்சென்டா "
"உன் டெண்சன்பு ..............காலைலே அடிக்க முடியுமாடா   "
"அடேங்கப்பா  இதுவரைக்கும் காலைல குடுச்சதே இல்லாத மாதிரி நாடகக்கூ .........போடாத "
மெல்லிய குளிர் பரவ ,அந்த வேளையிலும் இரண்டு டேபிள்களில் சிலர் ஒதிங்கிருந்தார்கள் .சர்வர் "என்ன சாப்பிடுறீங்க "
"உனக்கு என்ன வேணும் "
"ஏதாவுது சொல்றா "
"எரிக்ஸ்டப் இருக்கா ?நாலு லார்ஜ் ,ரெண்டு டானிக் வாட்டர் ,கூலிங் இல்லாத வாட்டர் கேன் ஒன்னு ,அப்பறம் ஸ்நாக்ஸ்ல பொறி மட்டும் கொஞ்சம் ஜாஸ்த்தியா கொண்டு வாங்க
"தண்ணியே அடிக்காதவன்  மாறியே  வெளியே ஆகட்ட போட்டு எப்படி ஆர்டர் பண்ற "
"அதுக்காக மோந்து பாத்துட்டா போக முடியும் "

சங்கரை பற்றி இங்கே ஒன்றை சொல்லியேயாக வேண்டும் ,சங்கர் ஆண்ட்டிகளை மடுக்குவதில் தீரன்  ,ஆண்ட்டிகளை மடக்கி என்ன செய்வான் என்று நீங்கள்  யோசித்திதால் அப்படியே பின்வாங்கி கொள்ளுங்கள். .ஒரு முறை லிப்ட் கேட்டு வந்த ஆண்ட்டியை முள்ளு முருங்க  காட்டில் வைத்து  முடித்'தவன் .சங்கர் தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ்சில்  பணிபுரிகிறான் .ஆண்ட்டிகளை மடக்குவதில் ஒரு வகையான டெக்னிக் கையாள்பவன்.சிறு சிறு காகிதங்களை வெட்டி வைத்து கொண்டு அதில் அவனுடைய  செல் நம்பரை எழுதி வைத்திருப்பான் ,மடக்கப்பட வேண்டிய ஆண்ட்டிகளிடம் அவை தரப்படும் .ஆண்ட்டிகள் மிக இயல்பானவர்கள் ,தேவயானி போல் ஒரு குடும்பத்தலைவியாக என்னை உணரவைப்பது என்று 'பொம்மிஸ்' அணிந்தவராக இருக்கலாம் , அல்லது நைட்டியுடன் மேலே துண்டை போட்டு கொண்டு   காலையில் பால்பாக்கெட் வாங்க வருபவர்களாக இருக்கலாம் .

காலேஜுக்கு போகிற பெண்களை விட கல்யாணமான பெண்களை மடக்குவது மிக எளிது என்பது அவன் சித்தாந்தம் .

 இரண்டு லார்ஜ் அடித்து முடித்திருந்தோம் "என்னா டென்சன் உனக்கு அப்படி "என்றேன் .மேலும் ஒருலார்ஜில் மிக்சிங் செய்து ஒரே கல்பாக அடித்து விட்டு ,"ங்கொம்மா............. நம்ம்பி போனேண்டா  ஏமாத்தி அனுப்ச்சுட்டா "

"யாரு "
"எங்க வீட்டு சைடுல ஒருத்தி இருந்தாள ,நான் கூட சொல்லிருகேன்ல ,ஆளு கூட முத்துன சதா மாதிரி இருப்பான்னு "
"அவளா? ஆமஆமா  , என் புருசனகூட விட்டுட்டு உங்ககூட ஓடியாந்திறேன் சொன்னவதானே , அன்னைக்கு சிவகங்கைக்கு ஜென்டானவந்தானே  நீ "

"ஆமாமா அவளேதான் "

"ஏன் ரீஎன்ட்ரி வொர்க் ஆகலையா "

"அட்ரஸ் லாம் கண்டுபுடுச்சு விசாரிச்சு வீட்டுக்கே போயிட்டேன் .கதவ தொரன்தவ கொஞ்சம் அதிர்ச்சியாகிட்டா ,அப்படியே நைசா கதவ பூட்டிட்டு கட்டுலு வரைக்கும் கூட்டிட்டு போயிட்டேன் .முதுக தடவுனேன் பாரு
ச்ச்ச்சச்ச்ஸ் உதட்ட கடிச்சிகிட்டே ஒதுங்கி போனா "

'ஆஆங் "

"எந்திரிச்சு போயி முந்தானைய இழுக்கலாம்னு போனேன் பாரு .நீங்க தயவு செஞ்சு போயிடுங்க,நா இப்பலாம் அப்படி கெடையாது ,என் புருஷன் கூட உண்மையா சந்தோசமா இருக்கேன் .திரும்பவும் என் வாழ்க்கைல கொழப்பத்த ஏற்ப்படுத்தாதீங்க கெஞ்சுனா .

"அப்பறம் "

"அப்பறம் என்ன பண்ண அப்படியே மூஞ்சிய தொங்க போட்டு வந்துட்டேன் "

"இதலாம் ஒரு கதைன்னு வேற வெக்க பொச்சு இல்லாம வேற சொல்றியேடா .முதல்ல என்னைய வீட்டுல கொண்டு போயி விடுடா ......."

மதிய மூன்று மணி வீட்டிற்கு வரும்போது .என்னை இறக்கி விட்டு யு டர்ன் அடித்தான்

"ஏன் யு டர்ன் அடிக்கிற  இப்படியே போக வேண்டியதுதானே "

"தெற்க்குவாசளுக்கு போறேன்  ,பொண்டாட்டி முத பிரசவத்துக்கு போனது இன்னும் வீட்டுக்கு கூட்டிட்டு வல்லைலே ,கொழந்தையும் பாத்து நாலு நாள் இருக்கும் அதான் "

"ஓ ரொம்ப நாளா சூட்ட தணிக்க முடியாம அவதி பட்டிருக்க ,அதான் சான்ஸ் கெடச்ச அவள மறுபடியும் அமைக்கலாம்னு பாத்திருக்க ....க்காளி.... அவ உன்  மூஞ்சில எச்சி காரி துப்பாத கொறையா "

"சரி இன்னொரு நாளைக்கு பாப்போம் "என அவசரமாக அகன்றான்

வீட்டு காம்பவுண்டிற்குள் நுழைந்தேன் ".இங்காரு ஒங்கொப்பேன் மாறியே கத்திகிட்டே கெடந்த ,வெயில்ல தூக்கி படுக்க போட்டுடுவேன் ,கத்தாம கெடடா " என்று ஆட்டோ காரரின் மனைவி தன ஆறு மாத குழந்தைய கொஞ்சிக்கொண்டிருந்தாள் .
13 கருத்துகள்:

Anonymous said...

யோவ் மணி ராசா, இதுதான்யா ரைட்அப். நான் எவ்வளவு முக்கியும் எனக்கு வரமாட்டேங்குது. சூப்பரோ சூப்பர். ஆனா 18+ அப்படின்னு போட்டுருக்கலாம். கவுச்சி தூக்கலா இருக்கு,

சக்தி கல்வி மையம் said...

மாப்ள செம ரைப்...

சீனு said...

சமீபத்தில் படித்த வித்தியாசமான கதை...

Unknown said...

@ஆரூர் மூனா செந்தில்

நன்றி அண்ணே ,கவுச்சி தூக்கலாக இருக்க காரணம் அவர்கள் குடித்து கொண்டே பேசுவதால் இருக்கலாம் .

@வேடந்தாங்கல் - கருண்
@சீனு

மிக்க நன்றி நண்பர்களே

முத்தரசு said...

பத்தினி தான்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_3791.html) சென்று பார்க்கவும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

Once Again...

Visit : http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_7197.html

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்பதிவு :

http://jokkaali.blogspot.com/2013/07/blog-post_998.html

தொடர வாழ்த்துக்கள்...

Unknown said...

தொடர் பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன் ....http://jokkaali.blogspot.com/2013/07/blog-post_998.html

Anonymous said...

http://www.starstudentproject.com/

Unknown said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News

Vignesh said...

I would highly appreciate it if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News

Vignesh said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let's keep on sharing your stuff.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena