டாக்டர் குஜய் நடிக்கும் "சில்றபய " நேற்று உலகமெங்கும் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது ,டாக்டர் குஜயின் தந்தையார் திரு .எஸ்.ஏ.தந்திரசேகர் இயக்கத்திலும் , டாக்டர் குஜய் நடிப்பில் இது வரைஇல்லாதஅளவு பிரமாண்டமான படமாக வெளிவந்துள்ளது ,ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது
![]() | ||||
சில்றபய |
டாக்டர் குஜயின் வழக்கமான அளப்பரையுடனும் ,குத்துபாட்டுடனும் தொடங்குகிறது ,கவிஞர் தபிலன் எழுதிய " நாந்தான் சில்றபய ,நாந்தான் சில்றபய " என்ற பாடல் வரிகளும் ,இசைஅமைப்பாளர் டேவிட் ஆண்டனியின் இசையும் ரசிகர்களை குத்தாட்டம் போடவைக்கிறது
படத்தின் கதை எளிமையானது ,ஆனால் அதை சொன்ன விதமும் ,டாக்டர் குஜயின் நடிப்பும் ,ஒவ்வொரு காட்சியிலும் தான் ஒரு ' சில்றபய ' என்று நிருபிப்பதிலும் டாக்டர் குஜய் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்
படம் முழுக்க அரசியல் வசனங்கள் பட்டையை கிளப்புகிறது ,ஆனால் 'பன்ச் ' வசனங்களில் ஒன்றில் கூட அரசியல் கலக்காதது 'டாக்டர் குஜயின் 'சில்றதனத்தை ' காட்டுகிறது
படத்தில் தேசிய அரசியில் நுழைவதற்காக எடுக்கும் முயற்சியும் அதுமுடியாமல் போகுபோது அவர் கலங்கும் காட்சியில் தியேட்டரே அழுதது ,அந்த காட்சியில் ,பாகுல் பாந்தி " ரத்தம் வராமா நல்ல ஊம குத்தா அடிச்சு அனுப்புங்க " என்ற போது ரசிகர்களை நோக்கி அவர் பார்க்கும் பார்வை சான்சே இல்ல 'he is a
தமிழக அரசியலில் அதுவரை எதிர்கட்சியாக இருந்தவர்கள் ,ஆளும்கட்சியாக வந்தவுடன் முதல் ஆளாக சென்று வாழ்த்து தெரிவிப்பதில் தான் சில்றபய என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார் ,அப்படியே அவர்களுடன் சேர்ந்து தன் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார் .
க்ளைமாக்சில் ஐந்தாண்டுகள் முடிந்து மீண்டும் எதிர் கட்சி ஆளும் கட்சியாக ஆட்சிக்குவர ,இனி இவர்களுடன் இருந்தால் தன் நிறுவனத்தை நடத்த முடியாது என்று தெரிகிறது ,ஓடிசென்று முதல் அமைச்சர் ச்காலினுக்கு பொன்னாடைபோர்த்துவதும் அப்போது அவர் டாக்டர் குஜய் மீது எச்சிலை காரி துப்புவதும் ,படத்தின் மிக ஹைலைட்டானா சீன்,
ஆனாலும் அதை அவர் அனாயசமாக எடுத்துகொண்டு ,தன் கர்சீப்பை சுழற்றி கன்னத்தை துடைத்து விட்டு அப்படி முதலமைச்சார் காலில் விழுந்து கதறுவது ,தேசிய விருது அல்ல ஆஸ்காரை அள்ளி கொண்டுவரும் என்றால் அது மிகையாகாது
![]() |
ண்ணா கஞ்சா ஏத்தி அடிக்கலைங்க்னா வெறும் தம்மு மட்டும்தாங்க்னா |
மொத்தத்தில் சில்றபய -ஒரிஜினல் சில்றபய