நெல்லை பதிவர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்
எல்லோருக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துகளும் ,நெல்லை பதிவர்கள் இதை முன்னின்று நடத்தி உள்ளார்கள் ,குறிப்பாக உணவுஉலகம் திரு ,சங்கரலிங்கம் அவர்கள் பெரும் முயற்சியில் சாத்தியமானது என்றால் அது மிகை அல்ல .நன்றி சார்
சீனா அய்யா, பலாபட்டறை சங்கர், தண்டோரா மணிஜி, நாஞ்சில் மனோ, இம்சை அரசன் பாபு,பெயர் சொல்ல விரும்பவில்லை,மனதோடு மட்டும் கௌசல்யா, கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா, நாய் குட்டி மனசு ரூபினா, அறிவியல்-கல்பனா ராஜேந்திரன், சுவாமியின் மன அலைகள் டாக்டர் கந்தசாமி,ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்துரத்னவேல்நடராசன்,ஜெயவேல்சண்முகவேலாயுதம், ,கோல்ட் சிவம், தமிழ்வாசி பிரகாஷ், ரசிகன் - ஷர்புதீன், அட்ரா சக்க- சிபி செந்தில்குமார், கோமாளி செல்வா, வெடிவால்-சகாதேவன்,உணவுஉலகம்சங்கரலிங்கம்,அன்புடன்அ.மு.ஞானேந்திரன்,
வெறும்பய-ஜெயந்த்,நிலாஅதுவானத்துமேல!-ஸ்டார்ஜான்,அட மனிதா காதர் அலி ,மற்றும் பலர்
காலையில் ஐந்தரை மணிக்கு நான் .திரு சீனா ஐயா, திரு தமிழ்வாசி பிரகாஷ் ,மாட்டுதாவணியில் திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறினோம் ,பேருந்து நகர்ந்து சிறிது தூரத்திலே டயர் பஞ்சாராகி தடை அறிவித்தது ,சரி சந்திப்பு தொடங்கி சிறிது நேரம் கழித்துதான் செல்வோம் என நினைத்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை ,பிறகு பேருந்தில் செல்லும் பொழுது பதிவர் நிருபன் அவர்கள் தமிழ்வாசி பிரகாஷுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டார் ,என்னிடமும் கதைத்தார். நான் எழுதிய அத்தமக என்று காவியத்தை குறித்து கேட்டறிந்தார் ,நான் அது உண்மைகதையல்ல அது ஒரு கற்பனை கதை ,அது போக எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று உரைத்தேன் ,அப்படியா நான் வேண்டுமானால் தங்களுக்கு யாழ்ப்பாணத்தில் பெண் பார்கவா என்று கேட்டார் .நான் ம்ம்மம்மம்ம்ம்ம்
இந்த சந்திப்பில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் :
கோமாளி செல்வா அவர்கள் நடத்திய நாடகம் ,நான் வேறு அவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன் ,அந்த நாடகம் முடிந்ததிலிருந்தே எனக்கு ஒரு பக்க காது கொஈஈஈஈஈஇ என்று கேட்க்கிறது ஏன் என்று தெரிவில்லை .
 |
என்னது என்னிடம் சரக்கு தீந்து போச்சா என்று அண்ணன் சி.பி.செந்தில்குமார் ஆக்ரோசமாக பதில் அளிக்கிறார் |
சி .பி செந்தில்குமாரின் தன்னிலை விளக்கங்கள் , மன்னிப்பு படலங்கள் தொடங்கியது , எல்லோருமே அவரை கடுமையாக தாக்கினார்கள் ,தனி ஒருஆளாக பதிலளித்தார் , ஒரு கட்டத்துக்கு மேல் மிக கோவமாக பேச ஆரம்பித்து விட்டார் ,அதுமட்டுமல்லாமல் இதுவரை தன்னை தாக்கி எழுதியவர்களை எண்ணி வைத்திருக்கிறேன் என்ற உண்மையை நவின்றார் ,அதனால் சி.பி யை தாக்கி எழுதுபவர்களே உங்களுக்கு ஒன்று கூறிகொள்கிறேன் ,அவர் பேசிய பேச்சை வைத்து கூறுகிறேன்
அவர் ஒன்றும் காமெடி பீஸ் அல்ல ( அண்ணே ஓகே வா )
சகோதிரி
ஜோசபின்பாபா- ஜோசபினோடு கதையுங்கள் ,தான் எழுதிய பதிவுகள் குறித்து மிக நன்றாக பேசினார்
நாய் குட்டி மனசு ரூபினா மேடம் - தான் எழுதிய பதிவு மூலம் நடந்த நெகிழ்ச்சியாக சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்
கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா மேடம் -கருத்து குறித்த தனது கருத்தை எடுத்துரைத்தார் .அனைவராலும் ஏற்றுகொள்ளகூடியதே
நிலாஅதுவானத்துமேல!-ஸ்டார்ஜான்- தான் பதிவு எழுத வந்ததை குறித்தும் பதிவர்கள் தங்களது கருத்தை பிறரது மனம் கோணாதபடி எடுத்துரைக்கவேண்டும் என எடுத்துரைத்தார்
பெயர் சொல்ல விருப்பமில்லை பதிவர் தனது பெயரை விருப்பத்துடன் கூறினார் ,மற்றும் ஊடாக ஊடாக நகைச்சுவையாக பேசி சந்திப்பை கலகலப்பாக்கினார்
பலா பட்டறை - திரு.சங்கர் அவர்கள் கட் காப்பி பேஸ்ட் பதிவர்கள் பற்றி தனது கருத்தை எடுத்துரைத்தார்
இன்னும் பல நினைவில் நிற்கும் சம்பவங்கள் நிறைய ,பிறகு இத்தனை நேரம் பேசி கலைத்து போனபடியால் .சிறிது வயிற்றுக்கு உணவிட சென்றோம் ,நான் ,பன்னீர் மசாலா ,சாப்பாடு ,ரசம் ,கொழம்பு ,அப்பளம் ,ஐஸ்கிரீம் மற்றும் பீடா(ஸ்வீட்) என அளவாக உண்டோம் . பிறகு எல்லோரும் ஒன்றாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தோம் ,சி.பி .செந்தில்குமார் குற்றாலத்துக்கு ஆள் தேத்திகொண்டிருந்தார்.என்னையும் அழைத்தார் ,தாங்கள் முழு செலவை ஏற்று கொள்கிறீர்களா என்று கேட்டேன் ,அதற்க்கப்பறம் ஆளே காணவில்லை . .
மீண்டும் எல்லோருக்கும் எனது வணக்கங்களும் ,நன்றிகளும்