பனி பெய்த காலை ,மேகத்திற்குள்ளிருந்து வர துடித்துகொண்டிருக்கும் மழை,சூரியனை தேட வேண்டும் போல ,இரவு முழுவதும் ஒத்திகை பார்த்ததை அசைப்போட்ட படியே மொட்ட மாடியில் நடந்து கொண்டிருந்தேன் , இன்று அவளிடம் எப்படியாவுது ஒருவார்த்தையாவுது பேசிவிட வேண்டும்,அவள் பேருந்து நிறுத்தத்தில் நான் தினமும் தரிசிக்கும் தேவதை அவள் பெயர் நந்தினி என் காதலியின் பெயரை தெரிந்து கொள்வதற்காக பகல் நேர கூர்க்காவாக அவள் குடி இருந்த தெருவில் சுற்றி சுற்றி திரிந்திருக்கிறேன் , ஒரு பத்து நாள் பயணத்திற்கு பின் என்னவளின் பெயரை தெரிந்து கொள்ள முடிந்தது ,அதுவும் என் எதிர்கால அத்தையின் (என் தேவதையின் தாய்) உபயத்தில் "அடியே நந்தினினினி ............. சனியன் வருதான்னு பாரு எல்லாம் அந்தாளு குடுக்கற செல்லம் " உள்ளே மின்னலே வசீகரா பாட்டு கேட்டது நான் அவள் வருகைக்காக மெதுவாக சைக்கிளளை கடத்தி கொண்டிருந்தேன் வந்தாள் கடைக்கண் பார்வை வீசி சென்றாள் ,ஆஅ நந்தினி இப்படியாக முடிந்தது என்னவளின் பெயரை தெரிந்து கொண்ட வரலாறு . எங்கள் இருவரின் சந்திப்பும் நிகழும் இடம் சுகுணா ஸ்டோர் பஸ் ஸ்டாப் . அது மதுரையில் அண்ணாநகரில் உள்ள பஸ் ஸ்டாப் . அப்பொழுது அந்த இடத்தில ஒரு மரமிருந்தது .அந்த மரத்தின் பின்னால் நான் அவளின் வருகைக்காக காத்துகொண்டிருந்தேன் .அவள் வந்தாள். நான் அவளின் வடபுறமாக சென்று நின்று கொண்டேன் . காற்றுவாக்கிலும் பஸ் வருகிறதா இல்லையா என்று பார்பது போலவும் நான் அவளை பார்க்கிறேனா இல்லையா ஓரகண்ணில் பார்த்தாள் நான் மெதுவாக அவளை நோக்கி முன்னேறினேன் அவள் பார்க்கும்பொழுது பல் தெரிவது போலவும் தெரியாதது போலவும் புன்னகைத்தேன் . அவளும் ஒரு புன்சிரிப்பை பல் தெரியாமல் வெளியிட்டாள் அந்த நிமிடம் எறும்பூற கல்லும் தேயும் எவ்வளவு சத்தியமான பழமொழி என்று நினைத்துகொண்டேன் ( ஆகா சிக்கீடுச்சுடா ) அந்த நேரம்பார்த்து அவள் வழக்கமாக செல்லும் பஸ் வர அவளும் ஏறிவிட்டாள் "டேய் கேனக்............நீனும் மூணுமாசமா சுத்திரியே இன்னைக்குதான் அவளே ஏதோ போனபோகுதுன்னு சிரிச்சிருக்கா போடா போய் பேசுடா " என்று மனது கட்டளைஇட்டது . நானும் அந்த பஸ்சில் செல்லலாம் என்று காலை தூக்கி பஸ்சில் வைக்க போனேன் . ஆனால் கால் வரவில்லை அந்த பஸ்சும் நகர்ந்துகொண்டிருந்தது அவள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து மீண்டும் ஒரு சிரிப்பை சிந்தினாள் " என்னது அவசரத்துக்கு கூப்பிட்டா நம்ம காலு கூட வர மாட்டேங்குது " என்று குனிந்து பார்த்தேன்
என் வலது கால் அந்த இடத்தில் ஏதோ ஒரு மாட்டினால் இட பட்ட மாட்டு சாணத்தில் புதைந்திருந்தது.
அவளின் சிரிப்பிற்கான காரணத்தை என்னால் அறிந்துகொள்ளமுடிந்த்தது .என்னைமில்லாமா இன்னைக்கு மட்டும் சிரிக்கிராலேன்னு பார்த்தா
வம்பா போயி வாங்கு ஆகுறதே பொழப்பா போச்சே நமக்கு ச்சே .
டிஸ்கி : சரக்கு தீர்ந்து போச்சு அதனால ஒரு மீள் பதிவு
|
16 கருத்துகள்:
புன்னகை....
சீக்கிரம் சரக்க ஏத்திட்டு வாங்க மணி, இல்லைன்னா சிவா வந்து ஸ்பெசல் மீல்ஸ் போட்டுட போறாரு...
மீள்பதிவா இருந்தா என்ன அசத்தல இருக்குல்ல..
சரக்கு தீர்ந்து போச்சா...
பக்கத்தில் ஏதாவரது கடையிருந்தா போயிட்டு வாங்க...
மாப்ள ஓகே ஓகே ஹிஹி ஹோஹோ ஹை ஹை!
என் காதலியின் பெயரை தெரிந்து கொள்வதற்காக பகல் நேர கூர்க்காவாக அவள் குடி இருந்த தெருவில் சுற்றி சுற்றி திரிந்திருக்கிறேன்//
அஃதே...அஃதே....
இதே போலத் தான் நாங்களும் ஒரு காலத்தில்..
அவளின் சிரிப்பிற்கான காரணத்தை என்னால் அறிந்துகொள்ளமுடிந்த்தது .என்னைமில்லாமா இன்னைக்கு மட்டும் சிரிக்கிராலேன்னு பார்த்தா//
அவ்...நீங்க சாணியை மிதிச்சதைப் பார்த்ததும் வாய் ஓயாமல் வயிறு வலிக்கும் வரை சிரிச்சிருப்பாளே;-))
அருமையான குறுங் கதை சகோ.
மீள் பதிவென்றாலும், எம் போன்ற புதியோருக்கு இது புதுப் பதிவு தானே சகோ.
அப்புறம்...?
சொல்லவே இல்ல?
ஹா ஹா ஹா! அட்டகாசம் மணி! அதான் சாணம்னு சொல்லிட்டீங்கள்ல? அப்புறம் எதுக்கய்யா போடோ வேற? :-)
sema aappu pola...:)
enna panrathu eppadi neengalum pala vidama try pannituthaan erunthu erukeenga polla...:
nice one..
விடுங்க பாஸ் அந்த மரதடிலே
மறுபடியும் வெயிட் பண்ணுங்க
கண்டிப்பா வரும் சிக்னல் ..:)
ஹா ஹா ஹா.. செம..
செம..ஹிஹி
செம டமாசு. சாணி.. வறட்டி ஆகுறதுக்கு முன்ன உங்கள யாரு கால வக்க சொன்னா?
ஹா ஹா ...:)
Post a Comment