எனக்கும் என் அத்த பொண்ணுக்கும் ஒரு வாரந்தான் வயசு வித்யாசம் .என் அத்த பொண்ணு பேரு ரத்தினகுமாரி .அவள நானு ரத்தினுதான் கூப்பிடுவேன் எங்க அப்பாவோட கூட பிறந்த தங்கச்சி மவ .எனக்கு ரத்தினத்த ரெம்ப புடிக்கும் .அவளுக்கும் தான். .ரத்தினத்துக்கு ரெண்டு அக்காவும் ஒரு அண்ணே இருக்கான் .நாங்க எல்லோரும் ஒன்னா சேந்து விளையாடுவோம் .நான்தான் ராஜா ரத்தினம்தான் ராணி.அந்த ரெண்டு அக்காவும் சேந்து ரத்தினத்தா தூக்கிட்டு போய்டுவாங்க .நா போய் அவுங்க கூட சண்ட போட்டு என் ராணியை தூக்கிட்டு வந்துடுவேன் . எனக்கு இந்த விளையாட்டு ரொம்ப புடிக்கும்
நா குழந்தைய இருக்கறப்பவே மதுரைக்கு வந்துட்டோம் .எங்க அப்பாவுக்கு இங்க தான் வேல .இப்போ நானு நாலாப்பு படிக்கிறேன். அரபரிச்சைலீவுக்கு எங்க அத்த ஊருக்கு போயிட்டு இருக்கேன் .எங்க அத்தபொன்னு ஊர சுத்தி ஒரே மலையா இருக்கும் . பஸ்ல போறப்ப மலை கூடவே வர்ற மாதிரி இருக்கும் .அந்த மலை முடியவே முடியாது .
போன காபரிச்ச லீவுக்கு போனப்ப எங்க அத்த எனக்கு பணியாரம் சுட்டு குடுத்தாங்க .அதை அத்த மகேன் குமரேசன் புடிங்கிட்டு ஓடிட்டான்.எனக்கு அழுகை வர்ற மாதிரி இருந்துச்சு.அப்பறம் ரத்தினம் அதோட பணியாற த்த குடுத்துச்சு .நா பாதி அவ பாதினு கடிச்சு சாப்பிட்டோம் ,ரொம்ப நல்லா இருந்துச்சு ,
அடுத்த நாள் காலைல குளிக்க ஆத்துக்கு போனோம் , நா சின்ன பய்யன் தானே அப்படின்னு எனைய பொம்பளைங்க குளிக்கிற எடத்துக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க ,ரத்தினமும் கூடவே வந்துச்சு ,எங்க அத்த எனைய டிரஸ் கழட்டிட்டு வந்து குளிக்க சொன்னாங்க,நானும் வேக வேகமா ட்ரெஸ்ஸ கழட்டிட்டு குளிக்க போனேன் ,நீ சட்டி போட மாட்டியானு ரத்தினம் எனைய பாத்து விழுந்து விழுந்து சிரிச்சுச்சு ,எனக்கு வெக்கமாவும் அழுகையா வந்துச்சு .ஆனா இந்த வட்டமும் அப்படி ஆககூடதுனு நா புதுசா சட்டி போட்டு வந்துட்டேன்
இப்ப போன உடனே ஏய் ரத்தினம் உம் புருஷன் வந்துட்டான்டி சொல்லுவாங்க .அதுவும் ஓடி வரும் .நாங்க ரெண்டு பெரும் சேந்து வெளயாட போவோம் ஜாலியா இருக்கும்
இந்தா எங்க அத்த வீடு வந்துடுச்சு ,நா எங்க அப்பா கைய ஒதறிட்டு
ரத்தினு ரத்தினு கூப்பிட்டு கிட்டே ஓடறேன்
பளீரென்று முகத்தில் தண்ணீர் பட்டது ,படீரென்று எழுந்தமர்ந்தேன்
என் மனைவி ரத்தினு கையில் கரண்டியுடன் நின்று கொண்டிருந்தாள்
"அடச்சீ எழுந்திரியா உன்னைய எத்தன தடவதான் எழுப்புறது "
"ஏ சனியனே எந்திருச்சு தொலை எப்ப பாத்தாலும் படுக்கைல மூத்திரம் போறதே வேலையா வச்சிருக்கு "என்று மகனை மண்டையில் அடித்து எழுப்பி னாள் பின்பு
"இந்த ஆள கல்யாணம் பண்ணி என்னத்த சொகத்த கண்டேன் " என்று கூறிக்கொண்டே அடுக்களைக்குள் சென்றாள்
ஒரு கனவு கலைக்க பட்டது .
கனவு வாழ்க்கையாகவும் வாழ்க்கை கனவாகவும் இருக்க கூடாதா?
குறிப்பு :
இது ஒரு மீள் பதிவு ,என்னுடைய முதல் கற்பனை கதை .(நம்புங்கப்பா ) பல எழுத்தாளர்களால் எழுதி தேய்ந்து போன கருதான் , ஆனாலும் இந்த சின்ன கதையை நிறைய பேர் வந்து படித்து செல்கிறார்கள் ,மிக முக்கியமாக search keywords செக் செய்து பார்த்தால் அத்த என்று வருகிறது .
|
18 கருத்துகள்:
///////
நா போய் அவுங்க கூட சண்ட போட்டு என் ராணியை தூக்கிட்டு வந்துடுவேன் . எனக்கு இந்த விளையாட்டு ரொம்ப புடிக்கும்///////
இவரு.. பெரிய ராஜா தேசிங்கு...
//////
இந்தா எங்க அத்த வீடு வந்துடுச்சு ,நா எங்க அப்பா கைய ஒதறிட்டு
ரத்தினு ரத்தினு கூப்பிட்டு கிட்டே ஓடறேன்///////
யோவ்.. எல்லா தமிழ் படத்திலும் இதைதான்ாய காட்றாங்க...
/////
கனவு வாழ்க்கையாகவும் வாழ்க்கை கனவாகவும் இருக்க கூடாதா?//////
ஏக்கம்...
மீள் பதிவு என்றாலும் நல்லாயிருந்துச்சி மாப்ள...
அப்படியே அம்மனிக்கிட்டே பார்த்து நடத்துங்க...
இது கற்பனை நான் நம்பனும்?
முதல் கற்பனைக் கதையே கலக்கலாக இருக்கே..
கவி கலந்த உரை நடை அருமை.
சுவாரஸ்யத்துடன் கூடிய எழுத்து நடையில் படிப்போரை ஒரு கணம் உள் இழுத்து வாசிக்க வைக்கிறீங்க.
மணி, அவங்க தேடுனது வேற அத்தையை..என்னன்னு டீடெயிலா இன்னைக்குப் பதிவுல போட்டிருக்கேன்..வாங்க!
இது ஒரு மீள் பதிவு ,என்னுடைய முதல் கற்பனை கதை .(நம்புங்கப்பா )>>>>>
நம்பிட்டோம்,
ஆனா, ஏம்பா மணி... அந்த பக்கத்து வீட்டு முனியம்மா பிகரை லவ் பண்ணியே என்னாச்சு?
தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
என்னுடைய முதல் கற்பனை கதை .(நம்புங்கப்பா )
நம்பிட்டோம்
ஆனா இந்த வயசில நடந்த நிஜ கதைய சொல்லுங்கப்பா
இந்தக்கதையை ஏற்கனவே உங்கள் வலைப்பூவில் படித்துவிட்டு அதன் பின்னூட்டத்தில் ஒரு ஒலகமகா ரகசியத்தையும் கக்கிவிட்டுப் போனேன்... இப்பொழுது மீண்டும் படித்தாலும் சேம் ஃபீலிங்...
enaku erukira mams ellam waste...
ellam pasangala pethu vitturainga..
unga mama theivam...
:)))
vaalga valamudan..
கதையாஆஆஆ.... பாராட்டுக்கள்.
கதை மிக நன்றாக இருந்தது.
எலேய் மாப்ள இது கதையல்ல காதை ஹிஹி!
நன்றாக உள்ளது..
nallayitukkunka...........
arumai............
!!namma pakkam kaaththirukku unkalukkaaka!!
கற்பனை கதையா நம்பிட்டோம் நம்பிட்டோம்... ஹா ஹா... செமையா எழுதி இருக்கீங்க... :))
செம மணி நீங்க பெரிய எழுத்தாளர் தான் போங்க, என்ன ஒரு சொல்லாடல், அருமை அருமை
Post a Comment