அந்த காலை நேர காற்று ஓட்டு வீட்டு ஜன்னல் வழியாக பிரவேசித்து சண்முகத்தை தழுவியது ,ஆனால் சண்முகம் இன்னும் பத்து நாள் கழித்து முதல் இரவில் ஈஸ்வரியை தழுவலாம் என்று நினைத்து கொண்டான் . பொண்ணு பார்க்க சென்ற பொது அவள் நடந்து வந்த அழகும் ,அந்த கருமை நிறகூந்தலும், மாநிறமாக இருந்தாலும் சட்டென திரும்பி பார்க்க வைக்கும் அந்த கலையான முகமும் அவனை கிறங்கடித்தன ,நமக்கு இது போதும் என்று நினைத்து கொண்டான் ,சில சமயம் இவளே நமக்கு அதிகம் என்று கூட தோன்றியது ,அந்த கிறக்கதோடே வெளியில் வந்தான் ,அவன் ஆத்தா பாண்டியம்மா முற்றத்தில் பாத்திரங்களை பரப்பி போட்டு சாம்பலை வைத்து விளக்கி கொண்டிருந்தாள்
அறியப்படா ராமாயணம்.-நாடக உரையாடல்
2 days ago