பல பேர் முன்னிலையில் ஒரு பெண்ணிடம் பளீரென்று கன்னத்தில் அரை வாங்கிருக்கிறீர்களா ,நான் சற்று முன்னர்தான் வாங்கினேன் ,அந்த கூட்டமான பேருந்தில் அடியும்வாங்கிவிட்டு ,அவமானத்தை மறைத்தும்கொண்டு எல்லோரையும் 'பேந்த' 'பேந்த' விழித்து பார்த்துகொண்டு ,அடுத்து கூடி நின்று கும்முவார்களே அதற்க்கு என்ன செய்யலாம் ,எப்படி சமாளிக்கலாம் என்று மிக அவசரமாக யோசித்து கொண்டிருக்கிறேன்
ரவுத்திரம் பழகு என்பதற்கு எடுத்து காட்டாய் அவள் ரவுத்திரம் பழகிவிட்டாள் போலும் . என்னை முறைத்தாள் ,கூட்டம் என்னை நெருங்கி கொண்டிருந்தது
" நானும் அப்போதிலிருந்து பார்த்துகொண்டு வருகிறேன் ,முதலில் நான் கம்பியில் பிடித்திருந்த கை மேல் உன் கையை வைத்து அழுத்தினாய் ,சரி தெரியாமல் பட்டிருக்கும் நினைத்தால் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என முன்னேறி என் இ.. ச்சீ ஏன் உன் அக்கா தங்கைகள் போய் இப்படி தொடவேண்டியதுதானே "
" இல்ல மேடம் நீங்கள் தப்பாக என்னை நினைத்து விட்டீர்கள் நான் இல்லை அது "
" பொண்ணுகள ஓரசரதுக்குனே வர்ரானுங்க " கூட்டத்தில் ஒரு பாட்டி
" இவனுங்க மாதிரி ஆளையெல்லாம் ரோட்ல கட்டி வச்சு அடிக்கணும் " கூட்டம்
கூட்டத்தில் இருவர் என்னை அடிக்க கை ஓங்கினார்கள் ,சார் நா இல்ல சார் என அவர்களை தடுத்தேன் ம்ம்ம்ம்ம்ம் கேட்டார்களா ,புகார் கூறியது பெண் அல்லவா,மடார் மடார் ,கும் கும் , விஸ்க் விஸ்க் ,கடைசியாக வயிற்றில் ஒரு குத்து
" சரி விடுங்கப்பா செத்துகித்து தொலைஞ்சுட போறான் " கூட்டம்
" கண்டக்டர் பஸ்ஸ போலீஸ் ஸ்டேசனுக்கு விடுங்க " என்றாள் அவள்
கூட்டத்தில் இருந்து ஒரு பெரியவர் முன்னே வந்தார் " அம்மா இப்ப போலீஸ் ஸ்டேசனுக்கு போனோம்னா ரொம்ப லேட் ஆய்டும் , அதான் அடிச்சுட்டோம்ல விட்டுடுவோம் ,எல்லாருக்குமே வேலை இருக்கு இல்ல . கூட்டம் ஆமோதிக்க தப்பித்தேன் ,இங்க பத்தாதுன்னு போலீஸ் ஸ்டேஷன்லையும் அடிவாங்கிருக்கணும் , பஸ்சிலிருந்து என்னை தள்ளி விட்டார்கள் .நான் கிள்ளவில்லை அந்தளவிற்கு தைரியம் கிடையாது அவளோட இடுப்ப புடுச்சு கிள்ளுனது அந்த கூட்டத்தில எவனா இருப்பான்? , யாரு கண்டது கிள்ளுனவனும் சேர்ந்து அடிச்சாலும் அடித்திருக்கலாம் , பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று எடுத்து பார்த்தேன் ,இருந்தது ,ஆனால் பணம்தான் இல்லை ,ஏனென்றால் வேலை இல்லை , சட்டை பையில் ஒரு ஐந்து ரூபாய் இருந்தது ,இதைவைத்துதான் வீடு போய் சேரவேண்டும் ,என்ன பொழப்புடா இது ,என்னை தள்ளி விட்ட இடத்திலிருந்து சற்று தள்ளி ஒரு பேருந்து நிறுத்தம் இருந்தது ,நிறுத்தத்தை நோக்கி நடக்க துவங்கினேன் ,சமீபித்தேன் , ஐயையோ அங்கே ஒரு பெண் நிற்ப்பது போல் தெரிகிறதே , எதற்கும் கொஞ்சம் தள்ளியே நிற்ப்போம் , பதினைந்து நிமிடமாது ஆகிருக்கும் இன்னும் பேருந்து வந்தபாடு இல்லையே ,அந்த பெண்ணிற்கும் எனக்குமான இடைவெளி குறைந்ததுபோல் இருந்தது ,ஒரு வேளை எனக்குதான் அப்படி தோன்றுகிறதா ,அந்த பேருந்து நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோக்கள் கூவி கூவி ஆள் ஏற்றி கொண்டிருந்தார்கள் ,உடம்பெல்லாம் வலிக்கிறது ,சீக்கிரம் பஸ் வந்தால் தேவலை.
என் அருகில் நிழலாடியது ,திரும்பினேன் ,ஐயையோ நாம் ஒன்றும் செய்யவில்லையே ,இவளும் அடிக்க போகிறாளா ,
" போகலாமா "
" எங்கே "
" சும்மா எங்கையாவுது போவம் "
" எதுக்கு "
" எல்லாம் அதுக்குதான் "
" என்ட்ட காசு இல்லீங்க "
" என்னாது காசு இல்லையா ,துத்தேறி .........." நல்ல வேளை மூஞ்சியில் துப்பவில்லை .

|
12 கருத்துகள்:
அனுபவக் கதையா பாஸ்?
மணி, கதையா..நான்கூட மணியைப் பிடிச்சு அடிச்சுட்டாங்களோன்னு பயந்து போய் வந்தேன்.
பெண்ணின் இரண்டு முகத்தையும் பார்த்து விட்டீர்கள்...
முதலில் திட்டியது இலவசமாக உரசியதற்காக இருக்கலாம்...
இரண்டாது பெண் திட்டியது உன்னிடம் பணம் இல்லையென்பதால்...
பொதுவாக பேருந்தில் இதுப்போல போர்வழிகள் நிறைஇருக்கின்றனர்..
ஆனால் அதற்க்கு சில அப்பாவிகள் பலியாடாகிவிடுகிறார்கள்...
சின்ன கதை இருந்தாலும் நச்...
எல்லாம் சொன்னீங்க ஆனா அடிவாங்குனத மட்டும் மறைச்சிட்டீங்களே மணி ????????
நல்ல பதிவு.
வித்தியாசமாக இருக்கிறது.
நல்ல மொத்திட்டன்களா பாஸ்
ஏலே என்ன இது???ஹிஹி சீரியஸ் விஷயத்தை காமெடியாய் சொல்லி இருக்கீங்க...
ஹிஹி அடி வாங்கேக்க கூலிங் கிளாஸ் பாக்கட்டில் இல்லியே???
ஆண் பாவம் பொல்லாதது!
June 24, 2011 5:52 AM//
Nanbarey apo pen paavam???
nice story...
VAalga Ilam Kavi Eluthalalar..
அண்ணன் உண்மைய கதை மாதிரியே அருமையா சொல்றாரில்ல! :-)
alakaaka sonninka
arumai
valththukkal
Post a Comment