சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் ,வந்தேறிகளின் நகரம் ,கெட்டும் பட்டணம் போய் சேர் என்ற பழமொழிகேற்ப ,ஒரு ஐந்து வருடத்துக்கு முன்னால் மதுரையை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை மட்டும் அறிந்த
நான் ,காய்ந்த ஒரு மாலை பொழுதினில் சென்னை சென்று வேலை தேடுவதென முடிவெடுத்தேன்
நான் ,காய்ந்த ஒரு மாலை பொழுதினில் சென்னை சென்று வேலை தேடுவதென முடிவெடுத்தேன்
" டே அங்கையா போறே தவிச்ச வாய்க்கு தண்ணி குடுக்கமாட்டாய்ங்க டா ,"
என நண்பர்கள் வாழ்த்த ,பேருந்தில் பயணித்தேன் சென்னைக்கு .
சினிமா ஏற்படுத்திய சென்னை மாய பிம்பங்கள் விட சென்னையை அடைந்த போது அந்த பிரமாண்டம் என்னை பயமுறுத்தவே செய்தது , அதனால் என்னவோ தெரியவில்லை ,இல்லை பயண களைப்பினாலோ நண்பனது அறையில் பேதியாகி கிடந்தேன் ,பேதியினால் காய்ச்சல் ,அருகிலிருந்த மருத்துவரை அணுகினேன் ,சோதனை செய்யப்பட்டது ,பின்புறம் ஊசி( நான் வேண்டாம் வேண்டாம் என மறுக்க நர்ஸ் கட்டாய படுத்தினார் ) ,சிறிது தேவலாம் போல் இருந்தது , நண்பனது அறையை அடைந்தேன் ,வீட்டுக்கார அம்மா என்னை அனுமதிக்கவில்லை ,நண்பன் வேறொரு நண்பன் அறைக்கு அழைத்து சென்றான் , அங்கு இரவு பதினொரு மணி தொடங்கி காலை ஏழு மணி வரை தான் எனக்கு தங்க அனுமதி ,இப்படியே ஒரு வாரம் கழிந்தது ,பிறகு அதற்க்கும் ஆப்பு . வேறொரு நண்பன் மூலமாக காரப்பாக்கத்தில் அவனது நண்பர்கள் அறையில் தங்கினேன் ,அங்குதான் கிட்டத்தட்ட இரண்டு வருடம் களித்தேன் , ஒரு மாதம்தான் எனக்கு சென்னை பழகி விட்டது

காலையில் தொடங்கி இரவு வரை ஒரு மனிதன் எதையுமே நான் வாங்க மாட்டேன் என்று இருக்க முடியாது .வாழ்க்கையின் மிக எளிமையான சூத்திரம் விற்பதும் வாங்குவதும் .
கிட்ட தட்ட இது போன்ற நிலையில் இருக்கும் மனிதர்களே 'எதாவுது செஞ்சு பொலச்சுக்குலாம்யா' என்று சென்னையை நோக்கி படை எடுக்க தொடங்கிறார்கள் .
சரியாக ஒரு மாதம் இருக்கும்
காலையில் ஒன்பது மணிக்கு மெரினாவை அடைவது இரவு பத்து மணிவரை கடலின் மணலோடு மணலாக படுத்து கிடப்பது .பிறகு நண்பனது அறையை அடைவது .மீண்டும் காலையில் மெரினாவை அடைவது ......................'
இருந்தும் சலிப்புற்றதில்லை .கடல் அலைகள் என பொய் சொல்ல விரும்பவில்லை .பல்வேறு நிலைகளில் இருக்கும் காதலர்களும் காரணமாய் இருக்கலாம்
அடேங்கப்பா என்னமா லவ்வு பண்றாய்ங்க
மொட்ட வெயில்லயும் முக்காடு போட்டுக்கிட்டு அப்படி என்னதாண்டா உள்ள பண்றாய்ங்க
எப்படித்தான் மடக்குறாய்ங்களோ
ஒக்காமக்கா
ஆஆஆஆஆ
யே என்னடா லட்டு லட்டா திரியிறாலுக
யே அங்க பாருடா மவுத் கிஸ்ஸ போடுறாயிங்க
யே இதுகளோட அப்பன் ஆத்தா பார்த்த அப்படியே கடல்ல குதிச்சு தற்கொல பண்ணிக்கிவாய்ங்கடி
என்று உள்ளுக்குள் புழங்கிய காலங்கள் அவை.(ஒரு மாசம் சுத்தியும் ஒன்னும் சிக்கலல)
மெரினா _ சென்னையை அடையாளபடுத்துவது ,,'மெயின் ரோட்டுல இருந்து கடல தொடுரதற்க்கு ஒரு கிலோமீட்டர் நடக்கனும்டா '.ஊர்களிலிருந்து ஓடிவரும் சிறுவர்கள் தங்கள் பிழைப்புக்காக சுண்டல் ,வாட்டர் பாக்கெட்கள் விற்பது ,தன் மகனையும் மருமகளையும் அவமான படுத்துவதற்க்காக பிச்சைடுக்கும் பெரியவர் ,பின்னர் திருந்தி சிறுவர்களிடம் அழுவது .குதிரை ஒட்டி , 'பீச்ச வாடகைக்கு விற்றுக்கேன் ' என்று தன்னை அறிமுகபடுத்தி கொள்ளும் மனநிலை சரியில்லாதவர் .இவர்களோடு சிவகார்த்திகேயன் ஓவியா காதல் என மெரீனா முழுவதும் நம்மை பயணிக்க வைத்திருக்கிறார்
வெளியில் சொல்ல முடியாத பல காரியங்கள் நடந்து கொண்டிருக்கும் மெரினாவில் அவற்றையெல்லாம் படத்தில் காட்ட முடியாததுதான் .அதனால்தான் என்னவோ படம் பார்த்து விட்டு எழுந்தால் தட்டி விடவேண்டிய அளவிற்கு மண் ஒட்டவில்லை
மெரினா -பசங்க அளவில் ஒரு பரிணாமத்தை ஏற்ற முடியாது ,ஆனாலும் பார்க்கலாம்
டிட்பிட்ஸ் : இடைவேளையில் மரணம் என்னை துரத்துது சாரு என் முப்பொழுதும் உன் கற்பனைகள் ட்ரைலர் ஓடிகொண்டிருந்தது அதில் பலபேர் சாருவை துரத்தி கொண்டிருந்தார்கள் ,நானும் துரத்துறேன் ,துரத்தி நைட்டு போறேன் ,போயி (i mean to say when the film is release i will go night show why this english means on that day also i had seen film nanban (night show) the sathyan character resemblance has overcome me so that i am also going to search kosaki pasapupugazh (என்ன பேருடா இது )
|
9 கருத்துகள்:
அடுத்த ஜாக்கி ரெடி ....மெரினா ....ஒரு சொர்க்கம்....அதை உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்
அண்ணன் களத்துல இறங்கிட்டாரு, அப்படியே டெவலப் பண்ணி கொண்டு போங்கண்ணே.... நல்லாருக்கு.....!
வணக்கம் சார்!ஒவ்வொருவர் ஒவ்வொரு ரசனையில் விமர்சிக்கிறீர்கள்!அகசியம் வரோ ஒரு டைப்!சி.பி ஒரு டைப்!:நீங்க ஒரு டைப்!மொத்தத்துல மூணு படம் பாத்தாச்சு,நன்றி!!!!!
//அங்குதான் கிட்டத்தட்ட இரண்டு வருடம் களித்தேன்//
களித்தேன். மோசமான ஆளுங்க நீங்க...
சிங்கம் களத்துல இறங்கிடுச்சி டோய்..
சிவகார்த்திகேயன் எபிசொட் இல்லையென்றால் படம் ஒரு ஆவணப்படம் போலவே இருந்திருக்கும். மோசமில்லை.
நல்ல விமர்சனம் ! படம் பரவாயில்லை ! நன்றி நண்பரே !
வணக்கம் சகோ ! இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகையை அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்
நன்றி
சம்பத்குமார்
மனம் கவர்ந்த பதிவுகள்
கலக்குங்க போங்க..,
Post a Comment