இனிய நட்புகளுக்கு வணக்கம்
டெர்ரர் கும்மியில் வந்த தமிழ்மணம் பயங்கர டேட்டாவும் அதை தொடர்ந்து வந்த பெயரிலி என்பவரின் கேவலமான கமென்ட்டுகளும் .இஸ்லாமிய சகோதரர்களின் முகமனை மிக மட்டமான முறையில் கேலிசெய்யும் விதமாக இடப்பட்ட கமெண்ட்டும் கண்டிக்கத்தக்கவை .எனது வன்மையான கண்டங்களை பதிவு செய்கிறேன்
சில வருடத்திற்கு முன்னால் தான் தமிழ்மணம் பற்றி அறிந்தேன் .அதன் மூலமாக பலரது பதிவுகள் படிக்கலாம் என்று தெரிந்தது .பின்பு நாமும் வலைப்பூ எழுதலாம் என்று முடிவெடுத்தேன் .தமிழ்மணத்திலும் இணைத்தேன் .அதன் மூலமாக எனது பதிவுகள் நிறைய பேர் படித்தார்கள் .அந்த வகையில் தமிழ்மணத்திற்கு என் நன்றி
சில நாட்களுக்கு முன்னால் தமிழ்மணம் சில நல்ல செயல் செய்திருக்கிறார்கள் என்று எண்ணினேன் ,ஆனால் அதற்க்கெல்லாம் மொத்தமாக திரிஷ்டி பூசணிக்காய் முச்சந்தியில் உடைத்தது போல் ரமணிதரன் என்கிற பெயரிலி பொங்கிய பொங்கலின் தரம் -நிறம் -குணம் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு வேண்டுமானால் செரிக்கலாம் .ஆனால் எங்களுக்கு தமிழ்மணம் என்கிற பொங்கல் வேண்டாம்
சில நாட்களுக்கு முன்னால் தமிழ்மணம் குலுக்கிய உண்டியலில் காசு சேரவில்லையோ என்னவோ ? அதனால்தான இப்படி பதிவர்கள் மீது வசை பாடிருக்கிறார்கள் போல .உலகத்திலே நீங்கள் ஒருவர்தான் திரட்டி வைத்து நடத்துகிறீர்கள் போலவும் .வேறு திரட்டிகளே இல்லையா என்ன ?
நீர் என்னையா எங்க வலைப்பூவை நீக்குவது நாங்கள் நீக்குகிறோம் உங்களை .உங்களது சேவை எங்களுக்கு தேவை இல்லை