."ஸ்ட்ரிக்ட்லி பார் யூத்ஸ் " டைப் படம் ,படம் முழுவதும் இளமை துள்ளல் ,முக்கால் வாசி அரங்கமே நிரம்ப படம் தொடங்க நேரமாகியது ,அதிலும் பாதி பேர் தல 'ரசிகர் போல,மனிதக்கடவுள் அஜித் ,அல்டிமேட் ஸ்டார் அஜித் , வாழ்க வாழ்க, இதில் ஹைலைட்டாக டாக்டர் அஜித் குமார் என்று ஒரு பிரகஸ்பதி கூறினார் ,அஜித் எந்த பல்கலைக்கும் சென்று காசு குடுத்து வாங்கியதாக செய்தி வரவில்லையே என்று யோசிக்க முனைந்த போது ,அடுத்த நொடியே அதற்க்கான காரணம் தெரிந்தது ,டாக்டர் அஜித்குமார் ,நர்ஸ் வி............,பெசிகாகவே நான் ரொம்ப நல்லவன் ,ஆனா இந்த ஒரு விசயத்துல மட்டு தரடிக்கெட் ரேஞ்சுக்கு போறோமே ,மனம் சில நேரங்களில் உறுத்தத்தான் செய்கிறது
" கொழந்தைக்கு அவ அம்மானா நான் அப்பா .கொழந்தைக்கு அவ தாய்ப்பால் குடுத்திருக்கலாம் ,ஆனா நான் என் குழந்தைக்கு குண்டி கழிவி விட்டிருக்கேன் "என படம் முழுவதும் சிம்புவின் அலப்பறை பல ,கலாச்சாரத்தை காப்ப்ற்றுகிறேன் பேர்வழியென்று கணவனே மனைவியுடன் நடன நிகழ்ச்சியில் ஆடுவதுதான் "போடா போடி " யின் ஒன்லைன்
,கதைப்படி'போடா போடி'இருவரும் லண்டன் வாழ் தம்ளர்கள்\\/// ச்ச் ச்சே இது தமிழர்கள் இரண்டு மூன்று சந்திப்புகளிலேயே ,காதல் என தொடங்கி ,கல்யாணம் முடிந்து , மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுப்பது ,(யூடுபில் ஏத்தவா போகிறேன் என்று நக்கல் வேறு) ,இடைவேளை ,குழந்தை பிரிவு ,ஊடல் பிரிவு ,மீண்டும் இணைதல் ,மீண்டும் பிரசவம் ,ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் அபா ,இந்த படத்தை எப்படி அனுகுவதென்றே தெரியவில்லை ,கலாச்சரீதியாக அணுகுவதா ?ஆனால் கலாச்சாரத்தை பற்றி சிம்பு வசனமாக பேசுவதுதான் ,பாஸ் தாங்கள் அதற்க்கு இந்த படத்தில் விரலை வைத்து வித்தையாவது காட்டிருக்கலாம் ,பொறுத்திருப்போம் ,சிம்புவிற்கு தோதாக வசதியான கேரக்டர்தான் ,கூடவே நடனம் வேறு ,பிரித்து மேய்ந்திருக்கிறார் ,சரத்குமார் மகள் வரலட்சுமி ,வித்தியாசமான குரல்,நடிப்பு ,காதல் மோதிரத்தை கழிவறைக்குள் போட்டுவிட்டு கையைவிட்டு தொழாவி எடுத்து நம்மை பரிதாப கொள்ளவைக்கிறார் ,இவரின் நடனத்திறமைக்காகவே தேர்வு செய்யபட்டிருக்கிறார் போல , என்ன வாய்தான் கொஞ்சம் அகலம் .இருவருக்குமான வேதியியல் நெருக்கம் நன்றாக இருக்கிறது
சிம்புவின் சித்தப்பாவாக கணேஷ் வழக்கம்போல் ,திக்குஇல்லாமல் அலையும் கதையில் ஓரளவுக்கு நம்மை சிரிக்கவைக்கிறார் ,நீண்ட கால தயாரிப்பில் இருந்ததாலோ என்னவோ இயக்குனருக்கு சலிப்பு தட்டிவிட்டது போல ,பரதநாட்டிய தாரகை சோபனா எதற்கென்றே தெரியவில்லை
லவ் பண்ணலாமா வேணாமா ,லவ் பண்ணலாமா வேணாமா ,லவ் பண்ணலாமா வேணாமா ,(இந்த படத்த தயாரிக்கலாமா வேணாமா ,இந்த படத்த தயாரிக்கலாமா வேணாமா )மிஸ்டர் தயாரிப்பாளர் இப்படித்தான் யோசித்திருப்பார் ,பாடல்கள் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது ,தனியாக கேட்பதற்கு நன்றாக இருக்குமா என்று தோன்றவில்லை ,பின்னணி இசை பரவாயில்லை ,இதே ரீதியில் போனால் சிம்பு ,பிரசாந்த் ,ஹம்சவிருதன் வகையறாக்களுடன் இனைந்து விடுவார் என்பது உறுதி .
மொத்தத்தில் போடா போடி -நடனநிகழ்ச்சி