வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

19.7.11

சொல்லால் அடித்த சுந்தரி


அந்த காலை நேர காற்று ஓட்டு வீட்டு ஜன்னல் வழியாக பிரவேசித்து சண்முகத்தை தழுவியது ,ஆனால் சண்முகம் இன்னும் பத்து நாள் கழித்து முதல் இரவில் ஈஸ்வரியை  தழுவலாம் என்று நினைத்து கொண்டான் . பொண்ணு பார்க்க சென்ற பொது அவள் நடந்து வந்த அழகும் ,அந்த கருமை நிறகூந்தலும், மாநிறமாக இருந்தாலும் சட்டென திரும்பி பார்க்க வைக்கும் அந்த கலையான முகமும் அவனை  கிறங்கடித்தன ,நமக்கு இது போதும் என்று நினைத்து கொண்டான் ,சில சமயம் இவளே நமக்கு அதிகம் என்று கூட தோன்றியது ,அந்த கிறக்கதோடே வெளியில் வந்தான் ,அவன் ஆத்தா பாண்டியம்மா முற்றத்தில் பாத்திரங்களை பரப்பி போட்டு சாம்பலை வைத்து விளக்கி கொண்டிருந்தாள்

அவள் அருகே தூசியை தட்டியவாறே அமர்ந்தான்
" எம்மோய் இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கு அப்பறம் நீ இந்த வேலையெல்லாம் பாக்கவேண்டாம் ,உம் மருமக வந்து எல்லாத்தையும் பாத்துக்குவா "
" இப்ப எல்லாம் இப்படித்தாண்டா பேசுவீங்க  ,பாக்கத்தான போறேன் "

" உன்ட்ட வந்து பேசினேன் பாரு . " எழுந்தான் " ஆமா அய்யன எங்க "
" அவரு வெள்ளனமே பரளச்சிக்கு கெளம்பி போயிட்டாரு ,போயி மொத வேலையா நம்ம வடக்கு நத்தம் கொலசாமி கோயில்ல பத்திரிக்கையை வச்சு சாமி கும்பிட்டு அப்படியே அங்க ஆரம்பிச்சு பரளச்சி ,தொப்பலாக்கரை ,பெருநாளிக்கு போயி நாம சொந்த பந்தத்துக்கெலாம் பத்திரிக்கைகுடுத்துட்டு
வருவாரு "
" நீ என்ன பண்ற இங்க நம்ம பக்கத்துல இருக்கிற சொந்தத்துக்கெல்லாம் ராசேந்திரன் மாமா கூட போயி பத்திரிக்கை வச்சுட்டு வந்துடுற "
" எங்க ராசு மாமவ இன்னும் காணோம் மணி இப்பவே பத்தாச்சு "
" வந்துடுவான் " என்ற போது

" எக்கா சவுக்கியமா ,என்ன மாப்ள ,கல்யாணம் ஆக போகுது ,ஆனாலும் கலையே இல்லாம இருக்கியே   "
" ஏலே ராசு உனையெல்லாம் ஆளுமேல ஆளு கூப்பிட வேண்டியதா போச்சு ,நீயும் உம் பொஞ்சாதியும் அவ்வளவு தாட்டியமா பொழைக்க ஆரம்பிச்சிட்டீங்களா "

" அக்கா அதான் வந்துட்டேன்ல ,இன்னிமே இங்க தான் மருமகன் கல்யாணத்த நடத்தி குடுத்துட்டுதான் வீட்டைவிட்டே நகலுவேன் ,போதுமா "
" அது சரி உம் பொஞ்சாதிய எங்க "

" அந்த சீக்கு முண்டைய அவ அத்தா வீட்டு வெரட்டி அடிச்சிட்டேன் ,எப்ப பார்த்தாலும் எதாவுது நோக்காடு வந்து சுருண்டு படுத்துக்குறா ,கீரமுண்ட "
" நான்தான் அப்பவே புடுச்சு சொன்னேன் அந்த கடும்பூர்காரி வேணாம்டா ,நம்ம செவலாயி மக சிங்காரி நல்ல ஓங்குதாங்குன்னு இருக்கா , அவள கட்டிகடானேன் கேட்டியா, அது சரி இப்ப அத பத்தி பேசி என்ன செய்ய "
சண்முகம் அம்பது பத்திரிக்கைகளை  ஒரு மஞ்சள் பையில் எடுத்து வைத்து கொண்டான் , அவர்கள் இருவரும் கிளம்பும் பொழுது

" ஏலே சண்முகம் இந்தா இந்த  தட்ட வச்சுக்க ,சமந்தகாரவுங்களுக்கு பத்திரிக்கை குடுக்குரப்ப பணம்பாக்கு வச்சு குடு "
" நான் பாத்துக்கிறேன்க்கா " என்றான் ராசேந்திரன்

பாலமேட்டில்    இருந்து பெரியார்நிலையம் நோக்கி பேருந்து விரைந்து கொண்டிருந்தது . அந்த சாலையில் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப மக்கள் குலுங்கி கொண்டிருந்தனர் ,பேருந்தின் கடைசி இருக்கையில் சண்முகம் அமர்ந்திருந்தான் அருகே அவன் மாமா ராசேந்திரன்

" என்ன மாப்புள ஓ ஓனரூ  உன் கல்யாணத்துக்கு என்ன பண்ணுவாரு ... என்ன ஒரு அஞ்சு பவுணுல சங்கிலி போடுவாரா  "
" அவ்வளவுலாம் பண்ண மாட்டாரு மாமா "
" என்ன மாப்புள இப்படி சொல்ற ,தொழில் பழகுனதிலிருந்தே அந்தாளு கிட்டதான வேல பாக்குற "

" அட ஏன் மாமா அதுக்காக இப்பும்புட்டு பண்ண முடியுமா "
" ஒரு நாலு கான்ட்ட்ராக்ட்டு கிடச்சொடனே இவிங்கலாம் ஓனர் ஆயிட்றாய்ங்க அதுக்கப்பறம் இவிங்க கிட்ட சம்பளத்துக்கு நாமா தொங்க வேண்டியாதா இருக்கு , இந்த ஓனர் வாயிலெல்லாம் ஓ ......"

" சிக்கந்தர் சாவடிலாம் எறங்குங்க "  " மாப்புள வா எறங்குவோம் ஒரு சின்ன வேல இருக்கு " " எதுக்கு மாமா அயைய.."
" மாப்புள நீ வா சொல்றேன் " நேராக ராசு ஒரு மெடிக்கல் ஸ்டாரை நோக்கி நடந்தான் ,எதுக்கு இந்த இந்தாளு இங்க போறான் ,எதையோ வாங்கி தன் சட்டை பையில் திணித்தான் ,வேஷ்டியை மடித்து கட்டி கொண்டே இவனை நோக்கி நடந்து வந்தான்

" மாப்புள வா இங்க பக்கத்துல ஒரு வீட்டு வரைக்கும் போயிட்டு வந்துடுவோம் "
 " பக்கத்துல என்ன " " வா சொல்றேன் " " வேல கெடக்கு மாமா " " கொஞ்ச நேரம்தான் வா "  இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள் ,மாமா சந்து சந்தாக கூட்டி சென்றது சண்முகத்திற்கு எரிச்சலாக இருந்தது ,தீடிரென அவனது கூட்டாளி சிக்கந்தர் சாவடியை பற்றி முன்னமே கூறியது நினைவிற்கு வந்தது ,மாமாவும் டப்பா மாதிரி எதையோ சட்டை பையில் திணித்தது நினைவிற்கு வந்தது ,நடந்து கொண்டே வந்தவன் நின்றான்
" என்ன மாப்புள "
" நீ எங்க போற மொதலா அத சொல்லு "
" ஒன்னும் இல்ல மாப்புள சும்மா வா "
" யோவ் நீ ராக்கு வீட்டுக்குத்தான போற " ராசு திகைத்தான்
" மாப்புள எ.... எ..... முன்னாடியே வந்திருக்க போல "
" போயாங்க தெனமும் இந்த பக்கம்தான் வேலைக்கு போயிட்டு வர்றேன் இது எங்களுக்கு தெரியாது " என்று வேகமாக திரும்பி நடந்தான் ,ராசு அவன் கையை புடித்து இழுத்து நிறுத்தினான்

" யோவ் மாமேன் கூட பாக்க மாட்டேன் கேவலமா திட்டி விட்டுடுவேன் ,உங் கூட அனுப்புச்சு வச்சுச்சு பாரு ஆத்தா அத சொல்லணும் "
" என்ன மாப்ள இப்படி பேசுற எல்லாம் உனக்காகதான் ,கல்யாணம் ஆக போகுது உனக்கு ,வர்ரவட்ட போயி பே பே நின்னேன்னா  உன்னைய காரி துப்ப மாட்டாளா "
" யோவ் நா எதுக்கு அப்படி நிக்க போறேன், அதலாம் எங்களுக்கு எல்லாம் தெரியும் ,நீ மொதலா ஆள விடு "
" மாப்ள இவளுக மாதிரி ஆளுக கிட்டதான் நல்லா பழகிக்க முடியும் ,அதுவும் புதுசா நாளு  ஜாரி எறக்கிருக்காளாம் ராக்கு ,சும்மா பாத்தொடனே ஜிவ்வுன்னு  தூக்குதாம் ,எல்லாம் ஆந்திரா கேரளா டிக்கெட்டு  தானாம் ,எல்லாம் உன் நன்மைக்குதான் சொல்றேன் மாமா .... சும்மா வா ... நல்லா கத்துகுடுப்பாளுக   "
" நீ எனக்கு மாமாங்கரத நிருபிக்கிறியேயா "
" சரி நீ வர வேணாம் சும்மா வந்து வெளில ஒக்காந்திரு "
" உன்னோட இம்சையா சரி வந்துத்தொல " அவர்கள் இருவரும் அந்த வீட்டை சமீபித்திருந்தார்கள் ,சுற்று சுவர்கள் உயரமாக இருந்தது ,பீங்கான் பதிக்க பட்டிருந்தது ,முகப்பில உள்ள கேட்டில் நெருக்கநெருக்கமாக ஈட்டி போல் வடிவமைக்க பட்டிருதது
" நா இந்த கடைல இருக்கேன் நீ போயிட்டு வா "

ராசு தனியே சென்றான் ,உள்ளே சென்றவன் இரண்டு நிமிடம் கழித்து வெளியில் வந்து கேட் அருகே நின்று கொண்டு ,இவனை கையை வீசி அழைத்தான் ,இவன் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே என்ன என்ன என்றான் ,அவன் சைகை மூலமாக ஒரு நிமிஷம் வந்துவிட்டு போ என்றான் ,இவனும் அந்த வீட்டை நோக்கி நடந்தான் ,இவன் அந்த கேட் அருகே வந்தவுடன் அவன் மாமா வீட்டிற்குள்ளே  வேகமாக சென்றான் ,இவன் தயங்கி தயங்கி உள்ளே சென்றான்  ,என்ன மாமா என்றான் ,அந்த பெண்மணி சோபாவில் அமர்ந்திருந்தாள் ,நல்ல தாட்டியான பெண்மணி ,கொஞ்சம் தள்ளி நான்கு பெண்கள் நின்றுகொண்டிருந்தார்கள்
" மாப்ள ஒரு ஆயரூவா மட்டும் குடு "
" குடு நா வீட்டுக்கு வந்து குடுக்குறேன் " சண்முகத்திடம் இருந்து வாங்கி ராசு எண்ணி அந்த பெண்மணியிடம் குடுத்தான் ,குடுத்து விட்டு சண்முகத்திடம் ஒரு டப்பாவை திணித்தான் ,சண்முகம் அது என்னவென்று  பார்த்தான் ,காண்டம்

ராசுவை முறைத்தான் ,அவன் அதை பற்றி எந்த கவலையும் படாமல் ," நிக்கரதுள்ள எந்த டிக்கெட்டு புடிச்சிருக்கோ கூட்டிட்டு பக்கதுல இருக்குற ரூமுக்கு போ , " என்று காதருகே கிசுகிசுத்தான் ,  அவனிடமிருந்த மஞ்சள் பையை வாங்கி சோபாவிற்கு அருகே வைத்தான் ராசு ,இவனை நோக்கி மீண்டும் கண்ணசைத்தான் ,ம்ம் போ ,சண்முகம் செலுத்த பட்டவன் போல் அந்த பெண்களை நோக்கி முன்னேறினான் ,முதலில் நின்று கொண்டிருந்த பெண்னருகே தயங்கினான் ,அந்த தாட்டியான பெண்மணி " சுந்தரி தம்பிய உள்ள கூட்டிட்டு போ " என்றாள்,  சுந்தரி என்பவள் இவனுக்கு முன்னே நடந்தாள் ,இவன் பின்னே

அந்த அறை முழுவதும் மனமாக இருந்தது ,கூடவே அவளின் தலையில் இருந்த மல்லிகை பூவின் மனமும் அந்த அறை முழுவதும் நிறைத்தது ,சுந்தரி நேராக சென்று கட்டிலில் அமர்ந்தாள் ,சண்முகம் சற்று தள்ளி அமர்ந்தான் ,சில நிமிடங்கள் ஆனது , அவள் அணித்திருந்த கண்ணாடி வளையல் ஒலி அவ்வப்போது சண்முகத்தை ஏதோ செய்தது ,சண்முகம் அவளை நிமிர்ந்து பார்த்தான் ,சற்றே பெரிய கண்கள் ,சின்ன மூக்கு ,செதுக்க பட்ட உதடு , சரிந்த கூந்தலில் சரிந்த மல்லிகை ,சேலை விலகலில் தெரிந்த இடை இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை,அவள் க்ளிக்கென புன்னகைத்தாள்
"  புதுசா "
இவன் தலையாட்டினான்
" பாதுகாப்புக்கு வச்சிருக்கீங்கள்ள "
இவன் இருக்கு என்று தலையாட்டினான்
" பழக வந்துட்டு இப்படி சும்மா ஒக்காந்திருந்தா எப்படி , தொடங்க வேண்டியதுதானே " அவள் கட்டிலில் மல்லாந்து படுத்தாள்

அவன் சட்டையை அணிந்து கொண்டிருந்த போது அவள் எழுந்து நின்று உடையை சரி செய்து கொண்டிருந்தாள்.
" உங்களுக்கு கல்யாணம் ஆக போகுதா " என்றாள்
சண்முகம் திரும்பினான்
" உங்க கூட வந்தவரு அக்காகிட்ட சொல்லிக்கிட்டுருன்தாரு  நீங்க பழக வந்திருக்கீங்கன்னு ,அதான் கேட்டேன் ,அவரு இங்க நெறைய தடவ இங்க வந்திருக்காரு "
சண்முகம் வேகமாக சட்டை பொத்தானை மாட்டினான் " அந்த பொண்ணு பேரு என்ன " என்றாள்
" எந்த பொண்ணு " என்றான் சண்முகம்
" அதான் உங்கள கட்டிக்க போற பொண்ணு "
" அது ,, அது என்று தயங்கி கொண்டே " ஈஸ்வரி " என்றான்
" நல்ல பேரு ,என்னைய விட அழகா இருப்பாங்களா " சிரித்தாள் , " உங்கள மாதிரியே அவுங்களும் எங்கையாவுது பழகிட்டு வந்தா என்ன பன்னுவீக " என்றாள்
அவன்  வேகமாக அந்த அறையை விட்டு வெளியில் வந்தான் ,அந்த தாட்டியான பெண்மணி " இப்படி உக்காருங்க அவரு இப்ப வந்துடுவாரு " என்றாள் பக்கத்து அறையை பார்த்து கொண்டே ,சண்முகம் அந்த மஞ்சள் பையை எடுத்து கொண்டு பதிலேதும் கூறாமல் விடுவிடுவென அந்த வீட்டை  வெளியில் வந்தான் ,சூரியன் சுட்டெரித்தது ,காற்று விலகி செல்வது போல் இருந்தது ,அந்த திருமண பத்திரிக்கை நிறைந்த  மஞ்சள் பை அவனுக்கு கனமாக தெரிந்தது




                                        

15 கருத்துகள்:

செங்கோவி said...

//அவன் சட்டையை அணிந்து கொண்டிருந்த போது..//

கழட்டும்பபோதே இதைக் கேட்டிருக்கலாம்ல?

Prabu Krishna said...

அருமை. முகத்தில் அடிக்கும்படியான முடிவு.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உங்கள மாதிரியே அவுங்களும் எங்கையாவுது பழகிட்டு வந்தா என்ன பன்னுவீக " என்றாள் //
நச் !

N.H. Narasimma Prasad said...

கதை மிகவும் அருமை. குறிப்பாக ஈஸ்வரி, சண்முகத்திடம் கடைசியாக கேட்கும் 'அந்த' கேள்வி சூப்பர்.

Unknown said...

kalakiteenga machi..super..

cheena (சீனா) said...

அன்பின் மணி வண்ணன் - அருமை ரௌமை - கதை - கருத்து - நடை - வட்டார வழக்கு - நச்சென்ற முடிவு - சாட்டையடிக் கேள்வி இறுதியில் ..... பெரிஅ கதாசிரியராக ஆகி வருகிறாய் - மேன் மேலும் முன்னேற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

மாப்ள அட்டகாசமான படைப்பு...
மனசாட்சியை தட்டி எழுப்பும் பதிவு கலக்கல்யா.....நன்றி!

test said...

சூப்பர் மணி! 'பாப்பாத்தி அக்கா வீட்டு யன்ன'லுக்கு அப்புறம் கிராமிய ஸ்டைலில் அசத்தலான கதை!

test said...

>>>>செங்கோவி said...
//அவன் சட்டையை அணிந்து கொண்டிருந்த போது..//

கழட்டும்பபோதே இதைக் கேட்டிருக்கலாம்ல?<<<<<

எப்பூடி? அண்ணன் கேட்டாம்பாரு கேள்வி!
பெரிய மனுஷன் பெரிய மனுஷந்தான்!

போளூர் தயாநிதி said...

அருமை.

பாலா said...

மொதல்லையே அந்த கேள்விய கேட்டிருக்கலாம். ஆனால் என்ன பன்றது? தொழில் முக்கியம் இல்லையா? இந்த கேள்வியா ஒவ்வொருத்தனும் தன்னை பார்த்தே கேட்டுக்கணும்.

Sivakumar said...

உங்களுக்கு கல்யாணமா? சொல்லவே இல்ல. கூடாநட்பு.

Unknown said...

வருகை புரிந்து கருத்துரைத்த அனைவருக்கும் என் நன்றி

vidivelli said...

வாசிக்கத்தூண்டிய எழுத்தோட்டம்..
நல்ல கேள்விதான் கேட்டிருகிறார்....
பதிவுக்கு வாழ்த்துக்கள்

selva said...

மணி எச்செல்லேன்ட் நீ எப்போ ஏளுத்தாலன் ஆனா ?

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena