தீபாவளிக்கு மிகுந்த எதிர்ப்பாப்புக்குள்ளான படம் ,விஜய் ரசிக பதிவர்களால் மரண மாஸ்(அப்படியென்றால் மரண மொக்கை ) மற்றும் மாஸ் என்டர்டைனர் 'ராம் என புகழப்படும் வேலாயுதம் அது மட்டும் அல்லாமல் சூப்பர் ரஜினிக்கு பிறகு விசை படத்துக்குதான் கூட்டம் அள்ளுதாம்,அப்படிப்பட்ட விஜய் படத்திற்கே தியேட்டர் கிடைக்க விடாமல் செய்த படம் சூர்யாவின் ஏழாம் அறிவு
மதுரையில் பத்து தியேட்டரில் ஓடுகிறது ஏழாம் அறிவு ,ஏதோ போனால் போகிறது என்று விஜய் படத்தை நாலு தியேட்டரில் ஓட்டுகிறார்கள் என்று நினைக்கிறேன் .சரி ஓகே அவர்களுக்காக ஒன்றை ஒத்துகொள்வோம் விஜய் ஒரு 'மாசு'ஹீரோ தான் .
தமிழர்களை தலைநிமிர செய்வதற்காகவே படமெடுத்த இயக்குனர் முருகதாஸ் அவர்களுக்கு நன்றி (படம் பார்த்த எல்லோரும் நன்றி என்று கூறிவிடுங்கள் இல்லையென்றால் நீங்களெல்லாம் தமிழர்களே இல்லையென்று கூறிவிடுவார்கள் )
படத்தின் முதல் இருபது நிமிட காட்சிகளிலே போதி தர்மரின் சுருக்கமான வரலாற்றை காட்டுகிறார்கள் .பார்க்க நன்றாகத்தான் இருந்தது .ராஜமாதா ஆணைப்படி சீனாசெல்லும் போதி தர்மர் சூர்யாவை எட்டி பார்க்கும் அபிநயா அழகாக இருந்தார் . சீனா இந்தியாவில் நிகழ்த்த போகும் பயோ வார் என்னும் ஆபரேஷன் ரெட் .அதை செயல் படுத்துவதற்காகவும் கூட ஸ்ருதிஹாசனை போட்டு தள்ளுவதற்காகவும் இந்தியா வரும் வில்லன் ,மனிதர் சின்ன கண்ணை வைத்து கொண்டு எல்லோரையும் பார்வையாலே சாக அடித்து விடுகிறார் அல்லது சாக வைக்கிறார் அப்படி செய்வதற்கு பெயர்தான் ஹிப்னாடிசமாம் அதாவுது நோக்கு வர்மமாம் .நோக்கியோ
ஸ்ருதிஹாசன் - பாடல்களில் அழகாக தெரிந்தவர் மற்ற காட்சிகளில் தெரிகிறார் ஆனால் என் கண்ணிற்கு அழகாக தெரியவில்லை .ஆனால்ஒரு சந்தேகமும் வந்தது கமல்ஹாசன் அவருக்கு சாப்பாடு ஒழுங்காக போடுவாரா என்று ?.தமிழை அழுத்தம் திருத்தமாக பேசிகிறார் .நன்றாக நடித்திருக்கிறார் ,நன்றாக நடனமாடுகிறார்
சூர்யா இருகதாபாத்திரத்திற்க்கும் பொருந்துகிறார் . ஆனால் போதி தர்மருக்கு கொஞ்சம் யோசிக்க வைக்கிறார் .வில்லனும் சூர்யாவும் கிளைமாக்ஸ் காட்சியில் சண்டைபோடும் போது மரத்தையே முறிக்கிறார்கள் அதை ஆவென்று பார்த்த எனக்கு கழுத்து சுளுக்கி கொண்டது .படத்தின் இரைச்சல் நன்றாக இருந்தது (அதாங்க இசை )
நாம் மறந்து விட்ட ஒரு தமிழரை ஞாபகபடுத்த வரலாற்றையும் அறிவியலையும் புகுத்தி ஒரு படமெடுத்து அதற்க்கு 84 கோடி ரூபாய் செலவழித்து புரியவைத்த தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி அப்படியே உங்கள் தாத்தாவிற்கும் நன்றி ஏனென்றால் அவர்தான் தமிழர்கள் அவரை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகவே மிதப்பார்
படம் நன்றாக இருக்கிறது இல்லை கூறுவதை விட . இவர்கள் செய்த ப்ரோமோசன் வேலைகள் தான் இங்கே இவர்களை இவ்வளவு தூரம் கேள்வி கேட்கவைத்திருக்கிறது .உதயநிதி ஸ்டாலின் ஒருவேளை இப்படி கூறியிருக்கலாம் முருகதாசிடம்
எங்க தாத்தா தமிழர் தமிழர் சொல்லியே வாழ்ந்தவரு நீங்களும் அதே தமிழ் தமிழ் ன்னு சொல்லியே படத்து ஒட்டி குடுத்துடுங்க ஏன்னா படத்துக்கு ரொம்ப செலவளுச்சாச்சு .
எனக்கு உண்மைலே தமிழர்ன்னு சொல்லி இந்த படத்தை பார்த்து பெருமையே வர வில்லை ஆனால் பெருமை வந்தது படம் தொடங்குவதற்கு முன்னாள் தேசியகீதம் இசைத்தார்கள் எல்லோரும் எழுந்து நின்றோம் அந்த இடத்தில் நான் இந்தியன் என் பெருமை அடைந்தேன்
|
18 கருத்துகள்:
லேட் தீபாவளி நல வாழ்த்துக்கள்!///// தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!அப்படியே உங்கள் தாத்தாவிற்கும் நன்றி.ஏனென்றால் அவர்தான் தமிழர்கள் அவரை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகவே மிதப்பார்!//// விமரிசனம் அருமை!அதிலும் தாத்தா பற்றி.....................சொல்லவே வேணாம்,போங்க!
விமர் - சனம் அருமை ஹிஹி!
அது என்ன ஜெய்கிந்த் !
எனக்கு உண்மைலே தமிழர்ன்னு சொல்லி இந்த படத்தை பார்த்து பெருமையே வர வில்லை ஆனால் பெருமை வந்தது படம் தொடங்குவதற்கு முன்னாள் தேசியகீதம் இசைத்தார்கள் எல்லோரும் எழுந்து நின்றோம் அந்த இடத்தில் நான் இந்தியன் என் பெருமை அடைந்தேன்
Awesome boss pinnetinga
வேலாயுதம் விமர்சனத்த போடுங்க சீக்கிரம்.
supper machi..
romba sothapitanugaloo..:(
ஏழாம் அறிவு - அடப்பாவமே...
சந்தடிசாக்கில் கலைஞரையும் செமையா குட்டு போட்டுட்டீங்க ஹா ஹா ஹா ஹா ரசிச்சேன்....ஜெயஹிந்த்.....
உங்களின் இடுகைகள் இன்னமும் தமிழ்மணத்தால் திரட்டப்படுகிறது. அதன்மூலமே இவ்விடுகைக்கு வந்தேன் என்பதை உங்களுக்கு அறியத் தருகிறேன்.
/// அவர்களுக்காக ஒன்றை ஒத்துகொள்வோம் விஜய் ஒரு 'மாசு'ஹீரோ தான் .///
அண்ணே.......... மாசுபடுத்திட்டீங்களே.....!
////// (படம் பார்த்த எல்லோரும் நன்றி என்று கூறிவிடுங்கள் இல்லையென்றால் நீங்களெல்லாம் தமிழர்களே இல்லையென்று கூறிவிடுவார்கள் )//////
நான் படம் பார்க்கல இருந்தாலும் நானும் நன்றி சொல்லிக்கிறேன்....
//////ஏழாம் அறிவு -எட்டாம் அறிவு இருப்பவர்களுக்கு /////
அய்யய்யோ அப்போ நாட்ல ஏகப்பட்ட அஞ்சறிவு தறுதலைகள் இருக்கே.... ? பரவால்ல விடுங்க, அவங்கள்லாம் ’மாசு’படுத்திக்கிட்டு இருப்பாங்க......
>>
ஸ்ருதிஹாசன் - பாடல்களில் அழகாக தெரிந்தவர் மற்ற காட்சிகளில் தெரிகிறார் ஆனால் என் கண்ணிற்கு அழகாக தெரியவில்லை .ஆனால்ஒரு சந்தேகமும் வந்தது கமல்ஹாசன் அவருக்கு சாப்பாடு ஒழுங்காக போடுவாரா என்று ?.தமிழை அழுத்தம் திருத்தமாக பேசிகிறார் .நன்றாக நடித்திருக்கிறார் ,நன்றாக நடனமாடுகிறார்
குட் ரிவ்யூ!!!!!!!!!!!!!!
மீண்டும் வணக்கம்! நேற்று இந்தப்படம் பார்த்தேன்!பலர் எதிர்பார்த்தது "எதுவும்"இந்தப்படத்தில் இல்லையென்பதால் அவர்களுக்கு பிடிக்காமல் போயிருக்கக்கூடும்!படம் விறுவிறுப்பாக,தொய்வின்றி(ஒருசில இடங்கள் தவிர)செல்கிறது.கவரும்,கவரலாம்,கவர வேண்டும்!
நண்பரே நானும் படம்பார்த்தேன். எப்போதுமே பதிவர் என்ற முறையில் எந்த படத்தையும் நான் பார்ப்பது கிடையாது. ஏனென்றால் அப்போதுதான் படத்தில் இருக்கும் நோட்டை நொள்ளைகள் கண்ணுக்கு தெரிகின்றன. நிறைய குடும்பங்கள் வந்திருந்தன. அவர்களைப்பார்த்த போது, நல்ல என்டர்டெனர் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. படம் முடிந்ததும் அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து, அவர்களை படம் திருப்தி படுத்தி இருக்கிறது என்றும் தெரிந்தது.
@Yoga.S.FR
கருத்துரைத்ததற்கு மிக்க நன்றி
///!பலர் எதிர்பார்த்தது "எதுவும்"இந்தப்படத்தில் இல்லையென்பதால் அவர்களுக்கு பிடிக்காமல் போயிருக்கக்கூடும்!///
அந்த பலரில் நானும் ஒருவன்.பொதுவாக ரசனைகள் வெவ்வேறானவை
.தங்களுக்கு படம் பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி
@பாலா
கருத்துரைத்ததற்கு நன்றி நண்பரே
தாங்களும் ஐயா Yoga.S.FR அவர்களுக்கும் ஏழாம் அறிவு -எட்டாம் அறிவு இருப்பவர்களுக்கு என்று விமர்சித்ததில் உடன் பாடு இல்லை என தெரிகிறது .எதிர்பார்த்து சென்ற ஏமாற்றத்திலும் ஒரு கோபத்திலும் எழுதி விட்டேன் .மன்னிக்கவும் நீக்கி விடுகிறேன்
லேபிளில் விமர்சனம் என்று போட்டிருக்கிறேனே தவிர இது விமர்சனமே அல்ல .இன்னும் சொல்லபோனால் பதிவுலகத்தில் திரைவிமர்சனம் சிறப்பாக எழுதுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .பல பேர் விமர்சனம் எழுதினாலும் அது விமர்சனம் ஆகாது என்பதை நான் அறிவேன் .அதனால் அந்த லிஸ்டில் என்னை சேர்க்காதீர்கள் அதற்க்கு எனக்கு எள்ளளவும் தகுதி கிடையாது .
படத்தை ப்ரொமோட் செய்கிறேன் என்று இவர்கள் தமிழனை' தலை சொரிய வைத்து கூத்துக்கள்தான் கொஞ்சம் கடுப்படித்தது .மற்றபடி தங்களின் கருத்தோடு ஒத்துபோகிறேன்
எனக்கு படம் பிடிக்கவில்லை என் நண்பனுக்கு படம் பிடித்திருந்தது .அவ்வளவுதான்
Post a Comment