தீபாவளிக்கு மிகுந்த எதிர்ப்பாப்புக்குள்ளான படம் ,விஜய் ரசிக பதிவர்களால் மரண மாஸ்(அப்படியென்றால் மரண மொக்கை ) மற்றும் மாஸ் என்டர்டைனர் 'ராம் என புகழப்படும் வேலாயுதம் அது மட்டும் அல்லாமல் சூப்பர் ரஜினிக்கு பிறகு விசை படத்துக்குதான் கூட்டம் அள்ளுதாம்,அப்படிப்பட்ட விஜய் படத்திற்கே தியேட்டர் கிடைக்க விடாமல் செய்த படம் சூர்யாவின் ஏழாம் அறிவு
மதுரையில் பத்து தியேட்டரில் ஓடுகிறது ஏழாம் அறிவு ,ஏதோ போனால் போகிறது என்று விஜய் படத்தை நாலு தியேட்டரில் ஓட்டுகிறார்கள் என்று நினைக்கிறேன் .சரி ஓகே அவர்களுக்காக ஒன்றை ஒத்துகொள்வோம் விஜய் ஒரு 'மாசு'ஹீரோ தான் .
தமிழர்களை தலைநிமிர செய்வதற்காகவே படமெடுத்த இயக்குனர் முருகதாஸ் அவர்களுக்கு நன்றி (படம் பார்த்த எல்லோரும் நன்றி என்று கூறிவிடுங்கள் இல்லையென்றால் நீங்களெல்லாம் தமிழர்களே இல்லையென்று கூறிவிடுவார்கள் )
படத்தின் முதல் இருபது நிமிட காட்சிகளிலே போதி தர்மரின் சுருக்கமான வரலாற்றை காட்டுகிறார்கள் .பார்க்க நன்றாகத்தான் இருந்தது .ராஜமாதா ஆணைப்படி சீனாசெல்லும் போதி தர்மர் சூர்யாவை எட்டி பார்க்கும் அபிநயா அழகாக இருந்தார் . சீனா இந்தியாவில் நிகழ்த்த போகும் பயோ வார் என்னும் ஆபரேஷன் ரெட் .அதை செயல் படுத்துவதற்காகவும் கூட ஸ்ருதிஹாசனை போட்டு தள்ளுவதற்காகவும் இந்தியா வரும் வில்லன் ,மனிதர் சின்ன கண்ணை வைத்து கொண்டு எல்லோரையும் பார்வையாலே சாக அடித்து விடுகிறார் அல்லது சாக வைக்கிறார் அப்படி செய்வதற்கு பெயர்தான் ஹிப்னாடிசமாம் அதாவுது நோக்கு வர்மமாம் .நோக்கியோ
ஸ்ருதிஹாசன் - பாடல்களில் அழகாக தெரிந்தவர் மற்ற காட்சிகளில் தெரிகிறார் ஆனால் என் கண்ணிற்கு அழகாக தெரியவில்லை .ஆனால்ஒரு சந்தேகமும் வந்தது கமல்ஹாசன் அவருக்கு சாப்பாடு ஒழுங்காக போடுவாரா என்று ?.தமிழை அழுத்தம் திருத்தமாக பேசிகிறார் .நன்றாக நடித்திருக்கிறார் ,நன்றாக நடனமாடுகிறார்
சூர்யா இருகதாபாத்திரத்திற்க்கும் பொருந்துகிறார் . ஆனால் போதி தர்மருக்கு கொஞ்சம் யோசிக்க வைக்கிறார் .வில்லனும் சூர்யாவும் கிளைமாக்ஸ் காட்சியில் சண்டைபோடும் போது மரத்தையே முறிக்கிறார்கள் அதை ஆவென்று பார்த்த எனக்கு கழுத்து சுளுக்கி கொண்டது .படத்தின் இரைச்சல் நன்றாக இருந்தது (அதாங்க இசை )
நாம் மறந்து விட்ட ஒரு தமிழரை ஞாபகபடுத்த வரலாற்றையும் அறிவியலையும் புகுத்தி ஒரு படமெடுத்து அதற்க்கு 84 கோடி ரூபாய் செலவழித்து புரியவைத்த தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி அப்படியே உங்கள் தாத்தாவிற்கும் நன்றி ஏனென்றால் அவர்தான் தமிழர்கள் அவரை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகவே மிதப்பார்
படம் நன்றாக இருக்கிறது இல்லை கூறுவதை விட . இவர்கள் செய்த ப்ரோமோசன் வேலைகள் தான் இங்கே இவர்களை இவ்வளவு தூரம் கேள்வி கேட்கவைத்திருக்கிறது .உதயநிதி ஸ்டாலின் ஒருவேளை இப்படி கூறியிருக்கலாம் முருகதாசிடம்
எங்க தாத்தா தமிழர் தமிழர் சொல்லியே வாழ்ந்தவரு நீங்களும் அதே தமிழ் தமிழ் ன்னு சொல்லியே படத்து ஒட்டி குடுத்துடுங்க ஏன்னா படத்துக்கு ரொம்ப செலவளுச்சாச்சு .
எனக்கு உண்மைலே தமிழர்ன்னு சொல்லி இந்த படத்தை பார்த்து பெருமையே வர வில்லை ஆனால் பெருமை வந்தது படம் தொடங்குவதற்கு முன்னாள் தேசியகீதம் இசைத்தார்கள் எல்லோரும் எழுந்து நின்றோம் அந்த இடத்தில் நான் இந்தியன் என் பெருமை அடைந்தேன்