வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

26.10.11

தாத்தா வேலைக்கு செல்கிறார்

                                                                              
மாலை மங்கிய நேரம் .அந்த தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்து ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திய போது, காவலாளி இங்கே வண்டியை நிறுத்தக்கூடாது இன்னும் உள்ளே சென்று நிறுத்தவேண்டும்  என்று எனது அவசரம் புரியாமல் கூறினான் .வசதியாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கிடையில் எனது வண்டியை சொருகினேன் .மருத்துவமனைக்கே உண்டான நெடி மூக்கில் பரவியது .வரவேற்பறையில் ஒரு வெள்ளை சுடிதார் பெண்மணி மிக தீவிரமாக எதையோ எழுதிகொண்டிருந்தாள்.அவளை அணுகியபோது அவளே நிமிர்ந்தாள்.பெத்தம்மாள் என்ற பெயரில் யாரைவுது அனுமதித்திருக்கிறீர்களா என விசாரித்தேன் .அவள் 302  என்று கூறினாள் நோட்டில் எழுதிக்கொண்டே .விடியலிலே ஆசைமாமா போன் செய்திருந்தார்.அம்மாச்சியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறோமென்றுஅம்மா அப்போதே  பதறியடித்தாள் உடனே ராஜபாளையம் செல்ல வேண்டுமென்று .அப்பா என்னையும் கூட போக சொன்னார் ,நான் மதியத்திற்குள் ஒரு முக்கியாமான வேலையை முடிக்க வேண்டும் நீங்கள் முன்னால்  செல்லுங்கள் நான் சாயிந்தரத்திற்க்குள் வந்து விடுகிறேனென்று அம்மாவை மாட்டுத்தாவணியிலிருந்து ராஜபாளையம் பேருந்தில் ஏற்றிவிட்டேன் .மதியம் மூன்றுமணிக்கு மேல்  எனது வண்டியிலே ராஜபாளையம் சென்று விட்டேன் .ராஜபாளையத்தை அடைந்தபோது ஐந்தரை மணி

அது தனியார் மருத்துவமனையாகயிருந்தாலும் கூட்டமாக இருந்தது .நோய்களுக்காக மருந்து கண்டுபிடித்தது போய் மருந்துகளுக்காகவே நோயாளிகள் உருவாக்கபடுகிறார்களோ என்னவோ.என்னுடைய பதினைந்தாவது வயது வரை ராஜபாளையத்தில் பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன் ,பெத்தம்மாள் என் அம்மாவின் அம்மா .எனக்கு அம்மாச்சி , அழைப்பது அம்மாயி .அந்த வார்டில் கடைசியாக இருந்த அறையைநோக்கி நடந்து கொண்டிருந்தேன் ,நான் சரியாக உள்ளே நுழைந்தபொழுது பரமேஸ்வரி அத்தை வெளியில் வந்தார் ,என்னை பார்த்து விட்டு விலகி நின்றார். அறைமுழுவதும் மௌனம் சூழ்ந்திருந்தது ,சுவற்றோமாக இடபட்டிருந்த  கட்டிலில் அம்மாயியை கிடத்திவைத்திருந்தார்கள் .அம்மா கட்டிலின் ஓரமாக உட்கார்ந்திருந்தாள்,அம்மாயி சலனமில்லாமல் இருந்தாள்     அவள் முகம்  நுப்பத்தைந்து வருட உழைப்பின் ரேகைகளாக உருமாறியிருந்தது.சற்று தள்ளி ஒரு பெஞ்சில் தாத்தா கால்களை தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார் .எல்லாவற்றிக்கும் தாத்தாதான்  காரணம் .என்னுடைய ஐந்தாவது வயதிலிருந்து அம்மாயி தான் என்னை வளர்த்தாள்.அவ்வப்போது அம்மா வந்து பார்த்து விட்டு செல்வாள் .வீட்டில் மிகவும் பண  கஷ்டம் என்னை படிக்க வைக்க முடியாது ,தம்பி கை குழந்தை .ஒரு முறை அம்மாயி வீட்டிற்கு  வந்தபோது என்னையும் கூடவே கூட்டி வந்து விட்டார் .ராசு மாமாவும் நானும் வெளியில் வந்தோம் .'ஒழச்ச ஓடா தேஞ்ச ஒடம்பு .தீடீர்னு கையி காலு இலுதுக்கிச்சு பக்கவாதம்னு சொல்றாங்க' .அப்படியே திரும்பி பார்த்தார் தாத்தா மூக்கு பொடியை கடைவாயிக்குள் திணித்து கொண்டிருந்தார் .எல்லாம் இந்த கெழட்டு பயலாலதான் என்றார் மாமா .

எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே தாத்தா வேலைக்கே சென்று பார்த்ததே இல்லை இரண்டு ஆண்பிள்ளைகள் வளர்த்து இரண்டு பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தது எல்லாம் அம்மாயி தான் .அதனால் என்னையும் வளர்த்தது அவளுக்கு மிக பெரிய விஷயம் இல்லை .அப்போதுதான் ஆசை மாமாவிற்கு கல்யாணம் ஆன சமயம்.ராசுமாமவிற்கு கல்யாணம் ஆகவில்லை .ஆசை மாமாவை பக்கத்து தெருவில் வீடெடுத்து குடிவைத்தாள்.நான், அம்மாயி ,ராசு மாமா ,தாத்தா என ஒரு வீட்டில் இருந்தோம் .ராசு மாமா தச்சு வேலைக்கு சென்றுகொண்டிருந்தார் .அவர் என்னை பெரிதாக ஒன்றும் கண்டுகொண்டதில்லை .காலையில் சென்றால் இரவுதான் வருவார் .அம்மாயி ராஜபாளையத்தில் ஒரு பஞ்சாலையில் ஸ்பின்னராக வேலைபார்த்தார் .அந்த பஞ்சாலையில் பஞ்சு பொருக்குபராக சேர்ந்து பின்னர் வேலையை கற்று கொண்டு ஸ்பின்னராக உயர்ந்தாள்  அந்த வருமானத்தில் தான் குடும்பத்தை காப்பாற்றிருக்கிறாள் .இது போக தினமும் தாத்தாவிற்கு தண்ணி அடிப்பதற்கு காசு குடுப்பாள் .அம்மாயி சமைத்து வைத்து விட்டு சென்று விடுவாள் .சாயிந்தரம் ஏழு மனியாவதுஆகும் வருவதற்கு .நான் வெளியில் விளையாட சென்று விடுவேன் .அந்த தெரு பையன்களுடன் சில்லாக்கு விளையாண்டு கொண்டிருக்குபோது பின்னாலே முருங்க குச்சியால் அடிப்பார் .'தொரைய வந்து கூட்டிட்டு போனாதான் சாப்பிடுவீங்களோ நாயி நாயி ' என்று அடித்து இழுத்து செல்வார் .'அப்படிதான் போடு குண்டிலேயே போடு செத்த பொடி மட்ட வாங்கிட்டு வாடான்னா நகலமாட்டேன்ட்டானே  ஒம்ம பேராண்டி '  என்பார் அந்த தெருவின் முக்கு வீட்டு நாயுடு தாத்தா .  சிலசமயம்  நாங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுபோது 'என்னது இது ரசமா என்று அம்மாயி தலையில் ஊற்றிவிடுவார் .எனக்கு நன்றாக இருந்த ரசம் தாத்தாவிற்கு எப்படி நன்றாக இல்லாமல் போனது என்று நான் யோசிப்பேன் .சில சமயம் நகைச்சுவையாக  ஏதாவது சொல்வார் .'இங்கேரு உன் அம்மாயிவச்ச  தேங்க சட்னி எங்கிட்டோ ஓடுது பாரு .புடி புடி' என்பார்

சிறுவயதில் அம்மாயி கூறிய கதைகள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது .குட்டையன் கதை ,காக்கா குருவி கதை , குண்டி மறந்தவன் கதை .என நிறைய கதைகள் கூறுவாள் .தினமும் இரவு தூங்கும் போது கதை கூறுவாள் .அம்மாயி குண்டி மறந்தவன் கதை சொல்லு என்பேன் . சே அது ஆய் கதை அது வேணாம் உனக்கு குட்டையன் கதை சொல்றேன் என்பாள் .இல்ல எனக்கு அந்த கதை வேண்டாம் என்று அடம்பிடிப்பேன் .சரி இந்த ஒரு தடவதான் என்று கூறிவிட்டு அந்த கதையை கூறுவாள் .ஒரு ஊருல ஒருத்தன் இருந்தானாம் அவன் தெனமும் கொல்லைக்கு சொம்புநெறைய தண்ணி  எடுத்துட்டு போவானாம் .அவன் இருந்து' முடுச்சிட்டு கால் கழுவதற்காக சொம்பு எடுக்க கைய கொண்டு போறப்ப ஒரு காக்கா வந்து சொம்ப தட்டி விட்டுடுமாம் .தண்ணியெல்லாம் கொட்டி போயிடுமாம் .தெனமும் அந்த காக்கா இப்படித்தான் பண்ணுமாம் .இவனுக்கு அந்த காக்காமேல ரொம்ப கோபம் .என்னடா தெனமும் இந்த காக்கா  இப்படியே பண்ணுதே இதுக்கு எதாவுது வழி பண்ணனுமே யோசிச்சானாம் .அதே போல அன்னைக்கு சொம்பு நெறைய தண்ணி எடுத்துகிட்டு போனானாம் அதே போல காக்காவும் மரத்து மேல ஒகாந்திருக்கு இவனையே பாத்திட்டிருக்கு  .நேர அவன் வழக்கமா போற மரத்து பின்னால போயி  உக்காரதுக்கு முன்னாடியே கழுவிட்டு உக்காந்தானாம் அப்படியே காக்கைய பாத்து இப்ப என்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ என்றானாம் .என்று கூறிவிட்டு சிரிப்பாள் .எனக்கு அப்போது அந்த கதை புரியாவிட்டாலும் அம்மாயி சிரித்ததற்க்காகவே நானும் சிரிப்பேன்

சற்று பெரியவனான பிறகு ஏன் அம்மாயி உனக்கும் தாத்தாவுக்கும் எப்படி கல்யாணம் ஆச்சு என்பேன் .அதையேன் கேக்குற ,கல்யாணத்துக்கு போனவள புடுச்சு உன் தாத்தனுக்கு கட்டி வச்சிட்டாங்க .கல்யாணத்தன்னைக்கு பார்த்திருக்காங்க அந்த பொம்பளைக்கு நொட்டாங்கையில ஒத்த வெரலு இல்லையாம் .உங்க தாத்தன் நான் கல்யாணம் பண்ணமாட்டேன்னு சண்ட போட்டோடன .என்னைய புடுச்சு கல்யாணம் பண்ணிவச்சுட்டாங்க .அப்பமதுரை ஆரப்பாளையத்துல  உங்க தாத்தாவும் மளிகை கடை வச்சு நடத்திட்டு வந்தாரு .அதுக்கப்பறம் அதலாம் வித்துபுட்டு நான் சினிமா படம் எடுக்க போரன்னேனு எவன் கிட்டையோ மொத்த காசையும் ஏமாந்தாறு .அதுக்கடுத்து இருக்குற வீட்டையெல்லாம் வித்து சீமைக்கு போயி  ஜவுளி வியாபாரம்  பண்றேன்னு அதுலயும் ஏமாந்தாறு .சாப்பாடுக்கே கஷ்டம் ஆயிடுச்சு சரி இதுக்கு மேல இங்கிருக்க வேண்டாம்னு கிருஷ்ணன் கோவிலுக்கே வந்துட்டோம் அப்பலாம் உங்க அம்மாவும் சித்திலாம் வயசுக்கு கூட வரல .எங்க பாத்தாலும் ஒரே பஞ்சம் பட்டினி .ஒரு தடவ அந்த பக்கம் போன ரவை லாரி கவுந்துடுச்சு .மண்ணுல மூட்ட மூட்டையா சரிஞ்சு கெடக்கு
 ஊருக்காரவுங்க எல்லாம் ரவை அள்ளிட்டு வந்து ஒரு பெரிய அண்டாவுல தண்ணியை ஊத்தி அதுல ரவையை  கொட்டி .மன்னுலாம் தண்ணிக்குள  எறங்குனவுடனே ரவையை எடுத்து காய வச்சு வறுத்து மூணுநாளைக்கு  சாப்பிட்டோம் .அப்பதான் ராஜபாளயத்துல பஞ்சாலைக்கு ஆள் எடுக்குறாங்க கேள்வி பட்டு நானும் உங்க தாத்தனும் போனம் .ஆனா உங்க தாத்தேன் கொஞ்சநாள்லே  வேலையே விட்டு வந்துட்டாரு .அதுக்கடுத்து இன்னம் வரைக்கும் உங்க ஒத்த வேலைக்கு போனதில்லை என்பாள்

அம்மாயி நான் கல்யாணம் பண்ணேனா உனைய மாதிரி ஒரு பொன்னா பாத்து கல்யாணம் பண்ணிக்குவேன்.வேலைக்கே போக வேனாம்பாரு ,அம்மாயி புன்னகைப்பாள்

அம்மாயி இந்தியா முழுவதும் சுற்றிபார்த்திருக்கிறாள் .அவள் வேலை பார்த்த பஞ்சாலை நிறுவனம் அங்கு வேலைபாத்த அனைவரையும் ஒருமுறை  சுற்றுலா அழைத்துசென்றிருக்கிறது.நான் பத்தாவதுக்கு மேல் மதுரை வந்துவிட்டேன் .ஆனாலும் அவ்வப்போது ராஜபாளையம் சென்றுவிடுவேன் .அம்மாயி வைக்கும் மீன் குழம்பிற்க்காகவே ஞாயிற்றுக்கிழமையாக பார்த்து செல்வேன் 'மாப்புள வா வீட்டுக்கு போவம் ஆசுபித்திரில யாராச்சும் ஒருத்தர் தான் இருக்கமுடியுமாம் ,அம்மா இங்க இருக்காம் 'என்றார் ராசு மாமா .அம்மாவை பார்த்தேன் இருந்து விட்டு  காலையில் செல்  என்றார் .அதற்கு பின் பத்து நாட்களுக்கு மேல் இருக்கும் நான் மதுரை வந்து விட்டேன் .நடுவில் இரண்டு முறை ராஜபாளையம் சென்று வந்தேன் அம்மா அங்கேயேதான் இருந்தார் .இரண்டு  அத்தைமார்களும் சாப்பாடு மட்டுதான் கொண்டுவந்து தருகிறார்களாம் .அம்மாயியின் கழிவுகளை பார்த்து மூக்கை பிடித்து கொள்கிறார்களாம்.அதற்காகவே அம்மா இருக்கவேண்டியதாகிவிட்டது     .அம்மாயியை வீட்டு அழைத்து வந்து விட்டதாக அறிந்தேன் .அம்மாயி நன்றாக கண்முழித்து பார்க்கிறாளாம் .எப்போது ஒன்றிரண்டு வார்த்தை பேசுகிறாளாம் .அம்மா போனில் கூறினார் .என்னை ஒரு முறை பார்க்கவேண்டும் என்று கூறினாளாம் .போக வேண்டும் .தாத்தா என்ன செய்கிறார் என்று விசாரித்தேன் .சில நாட்களுக்கு முன்னால் மாமாவிடம் பணம் கேட்டிருக்கிறார் .மருமகளுக பொங்கி போடுறத தின்னுபுட்டு வீட்டுல கெடக்குரதுன' கெட .தாத்தா அம்மாயியின் பென்சன் காசை கேட்டிருக்கிறார் .அம்மாயிக்கு அந்த பஞ்சாலைக்கே பிரத்யோகமாக செயல்படும் பாங்கி லிருந்து மாசம் மாசம் பென்சன் என்ற பெயரில் கொஞ்சம் பணம் வரும் .அதற்க்கு மாமாக்கள் இருவரும் அந்த காச வச்சுதான் உன் பொண்டாட்டிக்கு வைத்தியம் பார்த்தது .இன்னும் அதுக்கு மேலதான் செலவாகுது .என்று கூறி மரியாதை இல்லாமல் பேசிருக்கிறார்கள் .தாத்தா கெட்டவார்த்தையாக திட்டி விட்டு வந்திருக்கிறார் .அப்போது எடுத்த முடிவுதான் வேலைக்கு செல்வது என்று .
Read More

25.10.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10

இனிய நட்புகளுக்கு வணக்கம்
                                .
                           வம்சி பதிப்பகத்தாரும் எழுத்தாளர் மாதவ்ராஜும் நடத்தும் சிறுகதை போட்டி .மேலதிக தகவலுக்கு http://www.mathavaraj.com/2011/10/blog-post_02.html

தேர்தெடுக்கப்படும் முதல் சிறந்த சிறுகதைக்கு ரூ.10000/-மும், இரண்டாவது சிறுகதைகள் இரண்டிற்கு தலா ரூ.5000/-மும் கொடுக்க வம்சி பதிப்பகம் முன்வந்திருக்கிறது.பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்
 

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலும் அதன் முடிவுகளும் அ.தி.மு.கவிற்கு சாதகமாக அமைந்துள்ளது .பொதுவாக உள்ளாட்சி முடிவுகள் ஆளும் கட்சிக்கே சாதகமாக அமையும் .இந்ததேர்தலிலும் மிக முக்கியமாக  சாதி கட்சிகளை மக்கள் புறம் தள்ளிவிட்டார்கள் .
                                  தி.மு.க பரவாயில்லை பல இடங்களில் முறையே இரண்டு அல்லது மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறார்கள் .இத்தேர்தலில் பலமான வீழ்ச்சியை தேடிகொண்டது காங்கிரஸ்தான்  .இவர்களெல்லாம் தனித்து நிற்ப்பதை பற்றி யோசிக்கலாமா . கலவர பூமியான சாஸ்த்திரிபவனில் வேட்டிகளை அவிழ்த்து பார்த்து உள்ளாடை நிறுவனம் என்னவென்று பரிசோதிப்பதற்கே    அவர்களுக்கு நேரமில்லை .இந்த தொங்கபாலுவின் மூஞ்சியை சும்மாவே பார்க்க முடியாது . இந்த ஈ.வீ .கே .எஸ் .இளங்கோவனுக்கு  மொத்தமாக வாயில் வைத்து அனுப்பினாலும் அடங்கமாட்டிங்கிறாரே .ஆனாலும் அவரது நேர்மையை நாம் பாராட்டியே ஆகவேண்டும் .அவர்கள் தோல்வியை எதிர்பார்த்தார்களாம் .ஆனால் இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லையாம் .இந்த உதிரி கட்சிகளான பா.மா.க ,விடுதலை சிறுத்தைகள் . தங்களது அட்ரஸ்சை தேடுவதாக கேள்வி .ம.தி.மு.க கூட சில இடங்களில் வெற்றிவாகை சூடி உள்ளனர்

சோப்பு : 
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு

                                                         
ஹலோ யாரு அம்மாங்களா ஏதோ  கொஞ்சம் போதைல அப்படி இப்படி பேசிருப்பேன்.அதலாம் மனுசுல வச்சுக்காதீங்க 



























சீப்பு : 
                        தீபாவளிக்கு   வரவிருக்கும்  படங்களில் பெரிதும் எதிரிபார்ப்பை கிளப்பியிருக்கிறது .சூர்யாவின் 'ஏழாம் அறிவு .அதிகமான விளம்பரம் மற்றும் இயக்குனர் முருகதாசின் பேச்சு என கடுப்பை கிளப்பினாலும் .படம் பார்க்க வேண்டும் என்ற சிறு ஆவல் எழுந்திருக்கிறது .

கிராமத்தில் ஒருநாயன் பால் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் .அவருக்கு ஒரு தங்கச்சி .தங்கச்சியின் என்றால் கொள்ளை பிரியம் .இந்நிலையில் அவரின் மாமா பொண்ணு அவர் மேல் உரசி உரசி காதலிக்கிறார் .பறவை காய்ச்சல் போல் மாட்டு காய்ச்சல் என எவனோ ஒருவன் புரளியை கிளப்பி விட .பால் வியாபாரம் படுத்துவிட .தங்கச்சியின் கல்யாணத்திற்குகாக  சேர்த்து வைத்த காசை அவரின் லட்டு போன்ற தங்கச்சியை விட்டுவிட்டு சிட்பண்ட காரர்கள்  பணத்தை தூக்கி கொண்டு ஓட .அவர்களை துரத்தி பட்டணம் வர .அங்கே ஒரு நாயகி,மற்றும் காதல் .வில்லன்கள் என மோதல் , .ஆங்காங்கே நகைச்சுவை நடிகருடன் காமெடி ,அனல் பறக்கும் பஞ்ச வசனங்கள் ,அறிமுக பாடல் ,இரண்டு நாயகிகளுடன் தலா ஒரு பாடல் ,பிறகு ஒரு குத்து பாடல் ,முடிவில் வில்லனை வீழ்த்துவது .என உலக சினிமாவிற்கு போட்டியாக களமிறக்க பட்டிருக்கும்  படம் தான் எங்க இளைய தலைவலி டாகுட்டார் அவர்களின் வேலாயுதம் 

துத்தேறி வேலாயுதமாவது வெங்காயுதமாவது.இருநூறு நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடும் எங்களது பவர்ஸ்டாரின்    லத்திகாவிற்கு கால் தூசி வருமா
கொல கொலயா முந்திரிக்கா எங்க  பவர் ஸ்டார் அடிச்சா நீ கத்திரிக்கா 

இவன் 
பவர் ஸ்டாரின் பரம பக்தன் 

கண்ணாடி :
தீபாவளி   நினைவுகள் :
               பத்துவருடங்களுக்கு முன்னால் தீபாவளி வருகிறது என்றால் ஒரே கொண்டாட்டம்தான் .புத்தாடைகளை அணிந்து தெருவில் நண்பர்களோடு வளைய வருவது .நீண்ட பத்திகளை வைத்து கொண்டு வெடியை பற்றவைக்க பயப்படும் தாவணி ,சுடிதார், மிடி பெண்கள் முன்னிலையில் சரத்தை கையில் புடித்து பற்றவைத்து தூக்கி எறிவது ,ராக்கெட்டை கையில் புடித்து விடுவது என அலும்புகள் செய்வது .புடிக்காதவர்கள் வீட்டில் வெங்காய வெடியை எரிந்து விட்டு ஓடிவிடுவது .இன்னும் சிறுவயதில் அம்மா தீபாவளிக்காக இரண்டு நாட்களுக்கும் முன்னாள் செய்யும் பலகாரங்களை திருடி தின்று காலிசெய்துவிடுவது, தீபாவளி அன்று மட்டும் என்னைதேய்த்து குளிப்பது . .பிறகு கறிகொளம்புடன் இன்ன பிற பலகாரங்களை ஒரு கை பார்ப்பது .பெரிய வெடிகளை காலையில் வெடிப்பது ,புஸ்வானம் ,சங்குசக்கரம் போன்றவைகளை இரவு வெடிப்பது .கொஞ்சம் வெடிகளை மிச்சம் வைத்து பெரிய கார்த்திகை அன்று வெடிப்பது .ம்ம்ம்ம்ம்ம் நினைவுகள் சுகமானவை

 அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் 


கில்மானந்தாஸ் தத்துவம் -003 :

முடியும் என்றால் முயற்சி செய் ....... முடியாதென்றால்    ம்ம்ம் பயிற்சி செய்

Read More

24.10.11

கஞ்சா- சில குறிப்புகள்

                                                                                   

                     ஒரு மதிய வெயிலில் யாகப்பா நகரின் கடைசியில் உள்ள அம்மன் டீ ஸ்டால் என்ற பெயர்ப்பலகை  தாங்கிய தேநீர் கடையில் சிகுரெட்டை பற்றவைத்து முதல் புகையை வெளியில் விட்டு கொண்டே காளிமுத்து " ஒரு தடவ டோப்பு அடிச்சு பாப்போமா " என்றான் .ரஞ்சித் சோமுவை பார்த்தான் .சோமுவிற்கு ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் அடித்துதான் பார்ப்போமே என்று ஆவலும் எழுந்தது .சரி என்று தலை ஆட்டினான்.மேலும் காளிமுத்து  தான் படிக்கும் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் அடிப்பதை பார்த்திருக்கின்றேன் என்றும் அதை எப்படி பக்குவமாக சிகுரெட்டில் ஏற்ற வேண்டும் என்று தனக்கு தெரியும் என்று கூறினான் . வண்டியூர் சவுராஷ்டிரா புறம் நிறுத்தத்தில் இருந்து உள்ளே செல்லும் அனுமார் கோவில் வழியாக  ஆத்து மண்டபத்தை அடைந்தால் .அங்கே கைலியை கட்டிக்கொண்டு கவட்டை கால்களுக்குள் ஒரு மஞ்ச பையை வைத்து கொண்டு ஒருவன்  சுற்றிகொண்டிருப்பான் .அவனிடம் கஞ்சா கிடைக்கும் என்று கூறினான் காளிமுத்து .மூவரும் அங்கே செல்வதென தீர்மானிக்க பட்டது .காளிமுத்து சோமுவை சைக்கிளில் ஏற்றி கொண்டான் .ரஞ்சித் தனியாக சைக்கிளில்  வந்தான் .
Read More

17.10.11

தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?

இனிய நட்புகளுக்கு வணக்கம் 
        
                                            டெர்ரர் கும்மியில் வந்த தமிழ்மணம் பயங்கர டேட்டாவும் அதை தொடர்ந்து வந்த பெயரிலி என்பவரின் கேவலமான கமென்ட்டுகளும் .இஸ்லாமிய சகோதரர்களின் முகமனை மிக மட்டமான முறையில் கேலிசெய்யும் விதமாக இடப்பட்ட கமெண்ட்டும் கண்டிக்கத்தக்கவை .எனது வன்மையான கண்டங்களை பதிவு செய்கிறேன் 
                                                      
சில வருடத்திற்கு  முன்னால் தான் தமிழ்மணம் பற்றி அறிந்தேன்  .அதன் மூலமாக பலரது பதிவுகள் படிக்கலாம் என்று தெரிந்தது .பின்பு நாமும் வலைப்பூ எழுதலாம் என்று முடிவெடுத்தேன் .தமிழ்மணத்திலும் இணைத்தேன் .அதன் மூலமாக எனது பதிவுகள் நிறைய பேர் படித்தார்கள் .அந்த வகையில் தமிழ்மணத்திற்கு என் நன்றி 

 சில நாட்களுக்கு  முன்னால் தமிழ்மணம் சில நல்ல செயல் செய்திருக்கிறார்கள் என்று எண்ணினேன் ,ஆனால் அதற்க்கெல்லாம் மொத்தமாக திரிஷ்டி பூசணிக்காய் முச்சந்தியில் உடைத்தது போல் ரமணிதரன் என்கிற பெயரிலி பொங்கிய பொங்கலின் தரம் -நிறம் -குணம் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு வேண்டுமானால் செரிக்கலாம் .ஆனால் எங்களுக்கு தமிழ்மணம் என்கிற பொங்கல் வேண்டாம் 

சில நாட்களுக்கு முன்னால் தமிழ்மணம் குலுக்கிய உண்டியலில் காசு சேரவில்லையோ என்னவோ ? அதனால்தான இப்படி பதிவர்கள் மீது  வசை பாடிருக்கிறார்கள் போல .உலகத்திலே நீங்கள் ஒருவர்தான் திரட்டி வைத்து நடத்துகிறீர்கள் போலவும் .வேறு திரட்டிகளே இல்லையா என்ன ?

நீர் என்னையா எங்க வலைப்பூவை நீக்குவது நாங்கள் நீக்குகிறோம் உங்களை .உங்களது சேவை எங்களுக்கு தேவை இல்லை 



Read More

24.9.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -9

இனிய நட்புகளுக்கு வணக்கம்

                           ஐயம் பேக் ,சில தொழில் நுட்ப காரணங்களால் இந்த தளத்தில் எதுவும் பதியாமல் இருந்தேன் , அதை சரி செய்து விட்டேன் ,அதனால் இந்த தளத்திலே இனி எழுதுவேன் என உறுதிகூறுகிறேன்,(நீ எழுதுனா என்ன எழுதாட்டினா எங்களுக்கு என்ன சொல்றீங்களா? சரி விடுங்க ஏதோ தெரியாம எழுத தொடங்கிட்டேன் .நிறுத்த முடியல )பொதுவாகவே செய்த தவறுகள் அப்போதைய நியாயங்களாகவே இருந்து விடுவதால் நாம் தவறுகள் செய்துகொண்டே இருக்கிறோம் .என்னது இது என்று கேட்பவர்களுக்கு கண்ணாடியில் பதில் உண்டு
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena