வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

2.11.11

வேலாயுதம் -The jumb


 வேலாயுதம் -படம் பார்த்தவர்களுக்கான விமர்சனம்         

பொதிகை மலை சாரலிலே 
வசந்த மோகன வேளையிலே 
கண்டேன்-வேலாயுதம்
                                                                 
வேலாயுதம் -அநீதியை அளி'க்க பிறந்தவன் 

மக்களாகிய நமக்கு எப்பொழுதுமே ஒரு பேராசை உண்டு .
'எல்லோரும் சிரிக்க நினைத்தால் சிரிக்கிறோம் ,அழுகை வந்தால அழுகிறோம் ,கோபம் வந்தால் மட்டும் ஏன் அதை வெளிப்படுத்த இன்னொருவன் வர வேண்டும் என்று நினைக்கிறோம் ' என்று நமக்குள் இருக்கும் அநீதிகளுக்கு எதிரான கோபத்தை தூண்டி விடுவதற்கான ஆயுதமாக மாறிய இளைய தளபதி விஜய்யின் படம் தான் வேலாயுதம்

உங்களுக்குளும் வேலாயுதம் இருக்கிறான் என்று வில்லனை சூரசம்ஹாரம் செய்துவிட்டு வசனம் வாசித்தார் பாருங்கள் .அப்படியே தறிக்கெட்டு ஓடிவந்தவன்தான். ஆனாலும் எனக்குள்ளும் ஒரு வேலாயுதம் என்பதை ஒத்துகொள்ளதான் வேண்டும் .ஆமாம் .மழையினால் மேடு பள்ளங்களை தாவி குதித்து ஓடி வந்ததின் பயனாக உணர்ந்தேன் 

எஸ் ஐயம் ஆல்சோ எ வேலாயுதம் (பெசமா தூக்குல தொங்கிடுவோமா )

வாயில் அருவாளை கவ்விக்கொண்டு ரயிலில் இடத்தை பிடிப்பதற்காக ஓடி தாவி தவ்வி குதிப்பது என தொடங்கும் டாக்டர் விஜய்யின் ஜம்பலக்கடி பம்பா வேலைகள் அடுத்து படம் முழுவதும் ஒரே ஜம்பு ஜம்பு ஜம்பு ஜம்பு ஜம்பு தான் 

இந்த இடத்தில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் .  தமிழ்த்தாயின் மூத்த மகனின் பேரனை எண்பத்து நாலு கோடி செலவு செய்ய வைத்து மறத்தமிழரான  
ஏ.ஆர் .முருகதாஸ் தனது ஆறாம் அறிவை பயன் படுத்தாமல் எடுத்த படமான ஏழாம் அறிவு  நமக்கு உணர்த்த முயற்சிப்பதென்ன ?  அந்த முயற்ச்சியில் வெற்றி கண்டாரா ?இல்லை .ஆனால் ல் ல் ல் ல் ல் ல் ல் .

எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் அந்த பணியை  தனி ஒரு மனிதனாக செய்து முடித்தது டாக்டர் தான் என்றால் மிகையாகாது.ஸ்ப்ரிங் இல்லாமல் குதித்து ,தவ்வி .தாவி .என நமக்கு முன்னோரை நினைவு படுத்துகிறார் .நம் அறிவியல் தமிழ் என்ன கூறுகிறது .நாம் எந்த இனத்தில் இருந்து பிரிந்து வந்தோம் .அந்த வகையில் ஹாட்ஸ் ஆப் டு விஜய் 

நம் முன்னோர்
படம் பார்ப்பதற்கான செலவு = 100  ருபாய்
அதை ஈடு செய்தது நமது தங்க தலைவி வாரி வழங்கிய நான்கு பிட்டுகள் ,அம்முனிங்க அம்முனிங்க கொஞ்சம் அளவா சாப்புடுங்க  ஓவரா வெயிட்டு போட்டீங்கன்னா ஒங்களையும் ஜாக் பாட் எடுக்க விட்ருவாய்ங்க. உங்களுக்காக இங்கு எத்தனை பெயர் காத்து கொண்டிருக்கிறோம் (ரசிகனாக )

ரசகுல்லா இனிப்பா இருக்குமாமே சாப்பிட்டு பார்க்கணும்
 அடுத்து என்ன கேட்டீர்கள் ஆங் ஜெனிலியாவா .எனக்கு காய்களிலே          பிடிக்காத காய் வெண்டாக்காய் 
                                                              
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ,குழந்தை தொழிலாளர் (உதவி அண்ணன் :திரு செங்கோவி ) சரண்யா மோகன் .




 
Read More

30.10.11

குமார காவியம்

                         
                                         அன்று குமாரன் துயில் எழுந்தபொழுது சூரியன் முந்திகொண்டது .குமாரனுக்கு அது விடுமுறை நாள் ஞாயிற்று கிழமை.ஆண்டு பரீட்சை முடிந்து பள்ளிகள் விடுமுறை  முடிந்து குமாரனுக்கு  ஒன்பதாம் வகுப்புகள் தொடங்கி ஒரு வாரமே ஆகி இருந்தது .குமாரன் அதே வழக்கமான காலை கடன்கள் முடித்தல் ,பல்விலக்குதல் ,மிகவும் எரிச்சல் பட்டு குளித்தல் ,அதன் பிறகு ஆவலாதியாக காலை உணவருந்துதல் .கடைசியாக  தனது தம்பியை அடித்து அழவைத்துவிட்டு வீட்டை  விட்டு ஓடிவிடுதல் போன்று பணிகளை செய்துவிட்டு கூட்டாளிகளுடன் விளையாட சென்று விடுவான்  .அவர்கள் இருந்த வீடு ஒரு தொகுப்பு வீடு .அந்த தொகுப்பு வீடுகளில் முதல் வீட்டில் இருந்தது தனபுஷ்பம் .அவளது தந்தையார் அரசாங்க காரியாலயத்தில் பணிபுரிகிறார் .தற்போது மாற்றலாகி வந்திருக்கிறார் .தன்புஷ்பமும் திருக்குமாரனும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் வெவேறு பிரிவுகளில் படிக்கிறார்கள் .குமாரன் தனபுஷ்பம் வீட்டை தாண்டி செல்லும் பொழுது .தனபுஷ்பமும் சரியாக வெளியில் வருகிறாள் .இருவரும் புன்னகை புரிகிறார்கள் .
ஏ எங்கே போகிறாய் 

நான் விளையாடசென்றுகொண்டிருக்கிறேன் 
கணக்கு ஆசிரியர் குடுத்த வீட்டு பாடத்தை முடித்து விட்டாயா 
இல்லை மாலைதான் செய்ய வேண்டும் .எனக்கு நேரமாயிற்று நண்பர்கள் காத்து கொண்டிருப்பார்கள் நான் வருகிறேன் 

அன்று அவர்கள் விளையாட தேர்ந்தெடுத்த இடம் ,அந்த தெருவில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருந்த ஒரு வீட்டை .அந்த வீடு நான்கு மாடியாக கட்ட பட்டு கொண்டிருந்தது .குமாரனும் அவனது நண்பர்களும் ஒவ்வொரு மாடியாக ஏறி மேலிருந்து கீழே கொட்டி கிடக்கும் ஆற்று மணலில் குதிப்பார்கள் .அப்படி குதித்து குதித்து மூன்றாவது மாடியை எட்டி இருந்தார்கள் .மூன்றாவது மாடியிலிருந்து முதலில் குமரான் குதிப்பதென முடிவெடுக்க பட்டது .குமாரன் மாடி படிகளில் ஏறி கொண்டிருந்தான் .குமாரனுக்கு  இரண்டாவது மாடியிலிருந்து குதித்தபோதே சற்று பீதியாகத்தான் இருந்தது .இருந்தும் முயன்று பார்ப்போம் .அவன் மூன்றாவது மாடி விளிம்பிலிருந்து கீழே பார்த்தான் .குதிப்பதற்கு தயக்கமாக இருந்தது .குதிப்பதற்கு முன் எதேச்சையாக இடது புறம் திரும்பி பார்த்தான்.அங்கே ஒரு புத்தகம் கொட்டி வைக்க பட்ட செங்கற்கற்க்களுக்குள் தினத்து வைக்க பட்டிருப்பதைப்பார்த்தான் 

அந்த புத்தகத்தை வேக வேகமாக திருப்பி பார்த்தான் .முழுவதும் நடிகைகளின் அந்தரங்க ஆடைகளின் அணிவகுப்பாக இருந்தது .கீழே இருந்து நண்பர்கள் குமாரனை கத்தி அழைத்து கொண்டிருந்தார்கள் .தான் குதிக்கவில்லை என்பதால் நண்பர்கள் மேலே வந்துவிடுவார்கள் .அது மட்டுமில்லாமல் நண்பர்கள் இப்புத்தகத்தை பார்த்தால் தனக்கு ஒரு பக்கம் கூட கிடைக்காது .ஆதலால் இங்கிருந்து உடனே செல்ல வேண்டும் என தீர்மானித்தான்

அந்த புத்தகத்தை  அவனது கணக்கு புத்தகத்திற்குள்  ஒளித்துவைத்தான்.விதியும் உள்ளே சென்று ஒளிந்து கொண்டதை   அவன் அறியவில்லை  .வீட்டில் சூழ்நிலை சரியில்லை .அன்று முழுவது பல முறை முயன்றும் அந்த புத்தகத்தை பார்க்க முடியவில்லை .கையில் ஆப்பத்தை குடுத்து விட்டு வாயை அடைத்த போட்டு விட்ட கதையாகி போனது
மறுநாள் திங்கட்கிழமை .குமாரனும் வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல பள்ளி பேருந்திற்காக தனது தம்பியுடன் பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தான் .தனபுஷ்பம் அவள் தாயாருடன் வந்தாள். அவளது தாயார் அவனை பார்த்து புன்னகைத்தார் .
அன்று குமாரனுக்கு மூன்றாவது பாட வேளை விளையாட்டு பாடம்.நான்காவது  பாடவேளையாக கணக்கு வகுப்பு .குமாரன் மூன்றாவது பாடவேளையில் விளையாட சென்றான் .அப்பொழுது எட்டாம் வகுப்பு ஆ பிரிவிற்கும் விளையாட்டு பாட வேளை .அந்த வகுப்பை சேர்ந்த மாணவர்களான ஆள்வார்,பேள்வார் இருவரும் குமாரனின் வகுப்பை அடைந்தார்கள் .இங்கு ஆள்வார் மற்றும் பேள்வார் பெயர்களின் காரணங்களை அறிந்து கொள்வோம் .அவர்கள் இருவரும் இரட்டையர்கள் .குமாரனின் பக்கத்து தெருவில் வசித்து வந்தார்கள் .குமாரன் சிறுவயதில் மட்டை பந்து விளையாடும் பொழுது பேள்வாரும் விளையாட வருவான் .பேள்வாரின் இயற் பெயர் ரமேஷ் .அவனால் இரண்டு'க்கு வருவதை அடக்க முடியாது .அவன் விளையாட வந்தான் என்றால் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்கப்படும் 'போய் விட்டு வந்தாயா 'என்று .அவனும் தலையாட்டுவான் .சில சமயம் எதுவும் செய்ய மாட்டான்,ஆனால் பல சயங்களில் அந்த விளையாட்டு மைதானத்தையே அசிங்கம் செய்துவிட்டு ஓடிவிடுவான் .அதன் பிறகு அவனின் அண்ணனான் சுரேஷை மண்டையிலேயே அடித்து இழுத்து வருவார்கள் .உன் தம்பி செய்த அசிங்கத்தை பார் அதை சுத்த செய் என்பார்கள் .அப்படி சுத்தம் செய்வதன் மூலம் சுரேஷ் அள்வார் என்ற பெயரை பெற்றான் .அப்பெயர் நாளிடைவில் ஆள்வார் என்ற பெயாராக உருமாறியது .அது மட்டுமில்லாமல் இந்த பெயர்களை பள்ளிகளில் பரப்பிய பெருமை குமாரனையே சாரும்.
ஆனால் அவர்கள் இன்று குமாரனின் வகுப்பிற்கு வந்த காரணமே வேறு .எந்த வகுப்பில் ஆள் இல்லையோ அந்த வகுப்பிற்கு சென்று .மதிய உணவுகளும் ,கொறிப்பதற்கு வைத்திருப்பதை திருடி தின்பது .பலரது புத்தக பைகளை வேக வேகமாக பிரித்து வகுப்பரையையே அலங்கோலமாக்கி உணவுகளை தின்று விட்டு சென்றனர் .அப்படி தின்று விட்டு சென்றதில் குமாரனின் மதியவுணவும் அடக்கம் .
நான்காவது பாட வேளை தொடங்குகிறது .வகுப்பறைக்குள் நுழைந்ததுமே எல்லோரும் கண்டிபிடித்து விடுகிறார்கள் உணவுகள் களவாடபட்டுவிட்டதென்று.கணக்கு ஆசிரியர் உள்ளே வருகிறார் .மாணவர்கள் முறையிடுகிறார்கள் .நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறார் .கணக்கு ஆசிரியர் வளைய வருகிறார் குமாரனின் மேசைக்கு மேல் கணக்கு புத்தகம் இருக்கிறது .புத்தகத்திற்க்குள்ளே உள்ளே இருப்பது
                                                             

தொடரும் ..............          
Read More

29.10.11

வெங்காயுதமும் தோலுரியாத பதிவர்களும்

எச்சரிக்கை : இந்த பதிவு தீவிர அஜித் ரசிகனால் எழுத படுவது .அப்பறம் படித்துவிட்டு குயோ மியோ என குதிக்காதீர்கள் .ஏன்னா நாங்கலாம் ஏறுனா ரயிலு எறங்குனா ஜெயிலு .வெளில வரது பெயிலு .

நானும் எழுத வேணாம்ன்னு வேணாம்னு தான் பார்த்தேன் .ஆனா நீங்கதான் வேணும் வேணும்னு எழுத வச்சுட்டீங்க 

சில இடங்களில் நான் குஜியை  (மன்னிக்கவும் டங்கு சிலுப்பிங் போல வெரலு சிலுப்பிங் ப்ரோப்ளம் ) டாக்டர் குஜையை வைத்து ஒரு வரம்பு மீறிய பதிவாகவே எழுதபோகிறேன் .எழுதபோகிறேன் என்பதை விட எழுத வைத்துவிட்டீர்கள் என்பதுதான் உண்மை

தமிழகத்தில் பெய்த பலத்த மழைக்கு ஊடாக வெளியாகி வெற்றிகரமாக படம்பார்க்கவந்தர்களை ஓடவைத்து கொண்டிருக்கும் டாக்டர் குஜய் அவர்களின் வெங்காயுதம் எந்த மாற்று கருத்தும் இல்லாமல்  சக்கை போடு போடுகிறது

மாப்புள எங்க வீட்டு பக்குத்துல உள்ள மாடு சானிய சக்க சக்கையா  போடுதுடா 


யே பதிவு எழுதறப்ப இம்சைய  கூட்டாதடா ,அப்பறம் பேசுவோம் 

டாக்டர் குஜய்   அவர்களின் வெங்காயுதம் படம் வெற்றி பெற விடாமல் செய்வதற்கு பல பதிவர்கள் கங்கணம் கட்டி அலைந்தார்கள் .ஆனால் அவர்களின் நிலைமை இன்று பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது . அவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்  கூறிகொள்கிறேன் .டாக்டர் குஜையை  வைத்து பதிவெழுதி பல ஹிட்ஸ்கள் வாங்கி அதான் மூலம் பணம் சம்பாரித்து, பலவீடுகள் கட்டி ,பல பொண்டாட்டிகளை கட்டி, பல குழந்தைகளை பெற்று, தெருவோர பிச்சை காரர்களிடம் பிச்சை எடுத்து சாப்பிடுகிறீர்கள் .
இந்த நிலை யாரால் உங்களுக்கு வந்தது டாக்டர் குஜய் அவர்களும் அவர்களின் படமும்தான் என்பதை நினைவில் கொள்ள்ளுங்கள்


மாப்ள வயிறு வலிக்குதுடா 


யே சும்மா இருக்க மாட்டியா நீயி .....சும்மருடா பதிவு எழுதிகிட்டுஇருக்கேன்ல

வெங்காயுதம் தமிழ்சினிமாவின் சரித்திர (மன்னிக்கவும்) தரித்திர வருசையில் இனைய போகிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா .அடுத்து டாக்டர் குஜய்   அவர்களுக்கு நடிக்க தெரியாது என்று கூறுகிறீர்கள் .யாரை பார்த்து இப்படி கூறுகிறீர்கள் அவர் நடித்த பல படங்களின் தயாரிப்பாளர்கள் நட்டாத்தில் விட பட்டுளார்கள்,அவர்கள் கையில் நெளிந்த அலுமினிய டப்பா உள்ளது ,அதில் அவ்வப்போது சில்லறைகள் விழுகிறது .இதற்க்கெல்லாம் யார் காரணம் எங்கள் டாக்டர் குஜய் அவர்கள் நடித்ததால் தானே அவர்கள் இநத நிலைமைக்கு சென்றுள்ளார்கள் .

உங்களை போன்ற பதிவர்களுக்கு பாம்பு போல் தோல் உரியவேண்டாம் என்றால் இனிமேல் டாக்டர் குஜையை பற்றி எழுதாதீர்கள் .அதையும் மீறி  எழுதினால் தோல் உரியத்தான் செய்யும் , தோல் உரிவதால் சொரிவீர்கள் ,அதன் மூலம் சிரங்கு வரும் .அப்பறம்  இனிமேல் சிரங்கு வத்தி பதிவர்கள்  என்று அழைக்கபடுவீர்கள் என்று இறுதி எச்சரிக்கையாக கூறி கொள்கிறேன் .கடைசியாக
உங்களுக்கெல்லாம்  ஒன்று சொல்லிகொள்கிறேன்

காரித்துப்புனா  அது   பேரு                                            எச்ச்சி
சாயிங்காலாம் டீ கடைல சுடுவாங்க                       பச்ச்சி
எங்க கணக்கு வாத்தியாரு கைல இருக்கு             குச்ச்சி
எப்பவுமே அவருதான்(குஜய் )  எங்களுக்கு            மச்ச்சி மச்ச்சி மச்ச்சி

டே அவசரமா போகனும்டா 


டே உனக்கு என்னதாண்டா வேணும் எழுத விடாம இம்மசை கூட்டிக்கிட்டு


டே நேத்து ராத்திரி வெங்காயுதம் படம் பார்த்தேண்டா அதுல இருந்தே 


அதுல இருந்தே 

வயிறு ..... இந்த இந்தா வந்து சொல்றேன் 


ம்ம்ம் கக்கூஸ நாரடிக்குரதுக்குன்னே வர்றாய்ங்க.போகாதீங்கடான்னா  கேக்கணும் .இப்ப அனுபவிங்க 
                                                                 

டிஸ்கி : நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது .
Read More

28.10.11

மாநகர பேருந்தில்



                                                


அந்த சூழல் அவனுக்கு அற்ப்பமானதாய் இருந்தது .பேருந்தின் கடைசி முன் இருக்கைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான் .முகமறியா முகங்களின் முகரேகைகளை படித்து கொண்டிருந்தான் .அந்த பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது .ஒரு பள்ளி மாணவனாக இருக்க வேண்டும் ,ஏறி படிக்கட்டில் நின்று கொண்டான்
" அண்ணே இந்த பஸ் வாணி மஹால் போகுமா "


" எனக்கு தெரியாது " என்றான் அவன்

அவனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த பெரியவர் சற்று முன்னால் வந்து



" தம்பி இந்த பஸ் அதுக்கு முன்னால பாண்டி பஜார்ரோட கட்டாயிடுமே"

" ஐயையோ அப்படியா அங்க எறங்கி ரொம்ப தூரம் நடக்கணுமா சார் "
" இல்லப்பா பக்கந்தான் ......நீ என்ன பண்ற பாண்டி பஜாருல எறங்கி அப்படியே நெட்டுக்க நடந்தேனா ஒரு ப்ளை ஓவர் வரும் அந்த எடத்துலாதான் இருக்கு வாணிமஹால் "
" சரி சார் ,சரி சார் " என்று தலை ஆட்டினான்



பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது. பிறர் ஏறுவதற்காக படிகளில் இருந்து கீழிறங்கினான் அந்த பள்ளி மாணவன் .அப்படியே ஜன்னல் பக்கம் வந்து நின்று கொண்டான் , அவன் மூலமாக அந்த பெரியவரை அழைக்க வைத்தான் ,பெரியவர் அந்த மாணவனை ஜன்னல் வழியாக குனிந்து  நோக்கினார்



" பெருசு வர்ட்டா ,இங்க பக்கத்துல தான் எங்க வூடு அடுத்த ஸ்டாப்பிங்க்காக அஞ்சுரூவா குடுக்கனுமேனு பாத்தேன் ,அதான்........நாடகம் நல்லாருக்கா  " என்றவாறு திரும்பி  ஓடினான் ,பெரியவர் நிமிர்ந்து எல்லாரது முகத்தையும் பார்த்தார் ,சிலர்  பல்லை காட்டி கொண்டும் ,பல பேர் பல்லை மறைத்து கொண்டும் சிரித்து கொண்டனர் ,அவனாலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை ,கண்டக்டர் அமர்ந்தவாறு அப்படியே வாசல் வழியே தலையை நீட்டி

" ங்கோ......... பாடு நீ மட்டும் கையில கெடச்ச டாருதாண்டி மவனே "
இவன் நின்று கொண்டிருந்தஇடத்துக்கு  பக்கத்துக்கு இருக்கை காலியாகி விட்டிருந்தது,அமரலாம என்று நினைத்தான் , வேண்டாம் பிறகு பெண்மணிகள் வந்து ," இது லேடீஸ் சீட் " என்று எழுத்திரிக்க சொல்லுவார்கள் ,எதற்கு  நின்று கொண்டே வந்தான் ,மேல்புறம் கம்பிகளை பிடித்து கொண்டே வந்ததாலே என்னவோ அவனுக்கு கை வலித்தது ,கையை மாற்றி மாற்றி பிடித்து கொண்டான்




" excuse me "

அவன் திரும்பினான் ,அவள் இவன் விலகுவதற்காக நின்று கொண்டிருந்தாள் , இவன் விலக காலியாக இருக்கையை நிரப்பினாள் . அடர் கருப்பு ரசக்களியில்   வெளுத்த தேவதையாக தெரிந்தாள் ,அவ்வப்போது முன் புறம் விழுந்த சில முடிகற்றைகளை காதோரமாக ஒதுக்கி திருப்பி விட்டாள் ,இவன் சில நிமிடம் அவளையே பார்த்தவண்ணம் இருந்தான் ,வெகு எதேச்சையாக அவளும் அவனை அசுவாரசியத்தோடு பார்த்தாள் ,இவன் சட்டென்று திரும்பி கொண்டான் ,பேருந்து அடுத்தடுத்து நிறுத்தங்களில் நின்று நின்று சென்றது ,பின்புறத்தில் கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது
" பின்னாடி இருக்கரவுங்கலாம் டிக்கெட் வாங்குங்க " என்ற கண்டக்டரின் ஒலியை பேருந்தின் ஜன்னல் வழியாக நுழைந்த காற்று தள்ளி கொண்டு அனைவரது காதுகளிலும் சேர்த்தது
இவனுக்கு அருகில் ஒரு செம்பட்டை தலையன் நின்று கொண்டிருந்தான் ,அவனிடமிருந்து பாண் பராக் வாடை எரிச்சலை குடுத்தது இவனுக்கு, அந்த செம்பட்டை  தலையனுக்கு அருகில் ஒரு கனத்த சரீரத்துடன் ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தாள்



கொஞ்ச காற்றுவந்தையும் மனித கூட்டங்கள் நிரம்பியதால் காற்று கோபித்து கொண்டு சென்று விட்டததோ என்று நினைத்தான் அவன்  , வெக்கையினால் புழுக்கம் அதிகரித்தது  ,கண்டக்டர் நீண்ட விசில் ஊத பேருந்து ஒரு ஓரமாக அந்த பிரதான சாலையில் ஒதுங்கி நின்றது



" டிக்கெட் எடுக்காதவங்கலாம் டிக்கெட் எடுத்துக்கோங்க ,பாஸ் பன்னி விட்டாவுது எடுத்துகோங்க ,அப்பறம் செக்கிங் வந்தா என்னைய சொல்லகூடாது "  என்று கண்டக்டர் கூறியவுடன் தான் எடுத்து டிக்கெட் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டான்



" excume  me "

 இவன் திரும்பினான் , அவள் ஐம்பது ரூபாயை நீட்டி " ஓன்  தேனாம்பேட்  ப்ளீஸ் " இவனுக்கு அது புதியதாய் இருந்தது ஒரு பெண் அவனிடம் பேசி டிக்கெட் வாங்க சொல்வது .அந்த பணத்தை வாங்கினான் ,பாஸ் பண்ணு வதற்கு அந்த செம்பட்டை தலையணை அணுகலாம என்று நினைத்தான்  ,அவன் மறுத்து விட்டால் அசிங்கமாகி விடுமே என்று நினைத்தான்
இவனே கூட்டத்திற்குள்  முண்டியடித்து முன்னேறினான் ,கண்டக்டரிடம் ஐம்பது ரூபாயை நீட்டி " ஒரு தேனாம்பேட்டை " என்றான்  
" அஞ்சு ஓவா டிக்கெட்டுக்கு அம்பது ரூவாய நீட்டுற ,சில்லறையா குடுயா  "
" இல்ல னே " 
" அதுக்கு நா என்ன பண்ண முடியும் " என்றவாறே டிக்கெட் கிழித்து குடுத்து " மிச்ச சில்லரைய    கொஞ்ச நேரம் கழிச்சு வந்து வாங்கிக்கோ "



இவன் திரும்பி வந்து அவளிடம் டிக்கெட்டை நீட்டினான் ,மெலிதாக புன்னைகத்தாள் .அந்த புன்னகையில் இளக்காரம் தெரிந்தது அவனுக்கு ,அப்பொழுதான் தோன்றியது நாம் வெகுவேகமாக வேலைசெய்துருக்கிறோம் என்று .டிக்கெட்டை  வாங்கி வைத்து கொண்டு   " பாலன்ஸ் " என்றாள்

" தர்றேன்னு சொல்லீர்க்காரு "
" ஐயையோ அடுத்த ஸ்டாப்பிங்ல   நா எறங்கனுமே " என்று அழகாக வாயை சுளித்தாள்
வேகமாக அவனது பர்சை எடுத்தான் ,அதில் ஐந்து ஆயிரம் ரூபாய்  தாள்களும் சில நூறு ரூபாய்களும் ,சில பத்துரூபாய் தாள்களும் இருந்தது
சரியாக நாப்பது ரூபாயும் ,ஒரு ஐந்து ரூபாய் காசையும் எடுத்து குடுத்தான்
" நா அவருக்கிட்ட வாங்கிக்கிறேன்  "என்றான் 
" தாங்க்ஸ் " என்றாள் இவன் புன்னைகையோடு அமோதித்தான்
இவன் பக்கத்திலிருந்த செம்பட்டை தலையன் அருகினில் இருந்த பெண்மணியை இடித்திருப்பான் போல
" அப்பயே புடிச்சு நானும்  பாத்துகிட்டே இருக்கேன் இடிச்சு கிட்டே இருக்க ,கொஞ்சம் தள்ளி நில்லுயா  " என்றாள்
" அய்யே உன்னிய போய் எவன் இடிப்பான், பாட்டிக்கும் பாவனாக்கும் வித்தியாசம் தெர்யாத எனக்கு ,வந்துட்டா அங்க இருந்து பெருசா ஆட்டிக்கிட்டு " என்றான் செம்பட்டை தலையன்
இந்த சம்பவம் குறித்து  யாரும் எதுவும் உரைக்காதது அவனுக்கு வியப்பாய் இருந்தது .செம்பட்டை தலையனின் முரட்டு உருவம் காரணமாக இருக்கலாம் என்று நினைத்தான்.அப்போது  .அந்த ரசக்களி பெண்ணை பார்த்தான் ,அவளும் இவனை பார்த்தாள் ,பேருந்து நின்றது ,கண்டக்டர் " தேனாம்பேட்டைலாம் எறங்கிக்கோ " அவள் இவனை கடந்து படிகளில் இறங்கி சென்றாள் ,மறைந்தாள்



அந்த இருக்கையில் ஒரு கிழவி சென்று அமர்ந்து " வா ராசா ஒக்காரு சும்மா ஒக்காரு " என்றாள் .இவன் அந்த பெண் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தான் . அந்த ரசக்களி பெண் அமர்ந்திருந்த சூட்டை இவன் உணர்ந்தான் ,அப்படியே ஜன்னலை நோக்கினான் ,எதிர்த்த பிளாட் பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாள்ரசக்களி பெண் ,பேருந்து கிளம்பியது



தீடீரென்று தான் இன்னும் மிச்ச சில்லரை வாங்கவில்லை என்பது உரைத்தது அவனுக்கு  ,முன்னேறி  சென்று கண்டக்டரிடம் " மிச்ச்ச சில்லரை " என்றான்.  கண்டக்டர் சில வினாடிகள் இவனை உற்றுநோக்கி விட்டு "எவ்வளுவு தரனும் " என்றார்.


" நாப்பத்தஞ்சு ரூபா " அவன் அந்த சில்லறையை வாங்கியபொழுது ஒரு ஐந்து ரூபாய் காயினை தவற விட்டான் ,அந்த கூட்டத்தினுள் விழுந்த காசை தேடிஎடுப்பதற்க்கு மிகவும் சிரம  பட்டான்  ,மீண்டும் அதே இடத்தில் அமரலாம் என்று வந்தான் ,வேறு ஒரு பெண்மணி அமர்ந்திருந்ததை  கண்டான்.



பேருந்து நிறுத்தத்தில் நின்றது ,அந்த செம்பட்டை தலையன் இறங்கி சென்றான் ,பேருந்து கிளம்பியது ,ஒவ்வொரு நிறுத்ததிலும் பேருந்து நின்று செல்ல கூட்டம் குறைய ஆரம்பித்தது ,நன்றாக காற்றும் வர ஆரம்பித்தது ,இவனுக்கு ஜன்னல் ஓர சீட் கிடைத்தது அங்கு சென்று அமர்ந்தான்



சிறிது நேரத்தில் " லாஸ்ட் எல்லாரும் எறங்குங்க " என்றார் கண்டக்டர்

எல்லோரும்  இறங்கினார்கள் .இவன் அந்த கனத்த பெண்மணியின்  பின்னாலே இறங்கினான் , அவன் இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இந்தியன் பாங்க் இருப்பதை கண்டான் .அம்மாவிற்கு பணம் அனுப்பி வெகு நாட்களாக ஆகிவிட்டதை உணர்த்தியது .வெகு இயல்பாக அவனது கைகள் பின் பாக்கெட்டிற்கு சென்றது ,ஆனால் பை கிழிந்து தொங்கியது ,சைடு பாக்கெட்டிற்குள் கைகளை விட்டு பார்த்தான் ,பிறகு சட்டை பாக்கெட்டிற்குள் விட்டு பார்த்தான் ,வெறும் நாற்ப்பது ரூபாயும் ஒரு ஐந்து ரூபாய் காயினும் வந்தது ,கண்களை மூடி திறந்தான் , பேருந்தினில் விழுந்த ஐந்து ருபாய் காயினை எடுப்பதற்கு குனிந்து நிமிர்ந்த போது பின் புறத்தில் அந்த செம்பட்டை தலையன் நின்று கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது 


................................................

மீள்பதிவு
.................................................


Read More

27.10.11

ஏழாம் அறிவு

                     தீபாவளிக்கு மிகுந்த எதிர்ப்பாப்புக்குள்ளான படம் ,விஜய் ரசிக பதிவர்களால் மரண மாஸ்(அப்படியென்றால் மரண மொக்கை ) மற்றும் மாஸ் என்டர்டைனர் 'ராம் என புகழப்படும் வேலாயுதம் அது மட்டும் அல்லாமல் சூப்பர் ரஜினிக்கு பிறகு விசை படத்துக்குதான் கூட்டம் அள்ளுதாம்,அப்படிப்பட்ட விஜய்   படத்திற்கே தியேட்டர் கிடைக்க விடாமல் செய்த படம் சூர்யாவின் ஏழாம் அறிவு 
                                                               


மதுரையில் பத்து தியேட்டரில் ஓடுகிறது ஏழாம் அறிவு ,ஏதோ போனால் போகிறது என்று விஜய் படத்தை நாலு தியேட்டரில் ஓட்டுகிறார்கள்   என்று நினைக்கிறேன் .சரி ஓகே அவர்களுக்காக ஒன்றை ஒத்துகொள்வோம் விஜய் ஒரு 'மாசு'ஹீரோ தான் .

தமிழர்களை தலைநிமிர செய்வதற்காகவே படமெடுத்த இயக்குனர் முருகதாஸ் அவர்களுக்கு நன்றி (படம் பார்த்த எல்லோரும் நன்றி என்று கூறிவிடுங்கள் இல்லையென்றால் நீங்களெல்லாம் தமிழர்களே இல்லையென்று கூறிவிடுவார்கள் )

படத்தின் முதல் இருபது நிமிட காட்சிகளிலே போதி தர்மரின் சுருக்கமான வரலாற்றை காட்டுகிறார்கள் .பார்க்க நன்றாகத்தான் இருந்தது .ராஜமாதா ஆணைப்படி சீனாசெல்லும்   போதி தர்மர் சூர்யாவை  எட்டி பார்க்கும் அபிநயா அழகாக  இருந்தார் . சீனா  இந்தியாவில் நிகழ்த்த போகும்  பயோ வார் என்னும் ஆபரேஷன் ரெட்  .அதை செயல் படுத்துவதற்காகவும் கூட ஸ்ருதிஹாசனை போட்டு தள்ளுவதற்காகவும் இந்தியா வரும் வில்லன் ,மனிதர் சின்ன கண்ணை வைத்து கொண்டு எல்லோரையும் பார்வையாலே சாக அடித்து விடுகிறார் அல்லது சாக வைக்கிறார் அப்படி செய்வதற்கு பெயர்தான் ஹிப்னாடிசமாம் அதாவுது நோக்கு வர்மமாம் .நோக்கியோ 
                                                       

ஸ்ருதிஹாசன் - பாடல்களில் அழகாக தெரிந்தவர் மற்ற காட்சிகளில் தெரிகிறார் ஆனால் என் கண்ணிற்கு அழகாக தெரியவில்லை .ஆனால்ஒரு  சந்தேகமும் வந்தது கமல்ஹாசன் அவருக்கு சாப்பாடு ஒழுங்காக போடுவாரா என்று ?.தமிழை அழுத்தம்  திருத்தமாக பேசிகிறார் .நன்றாக நடித்திருக்கிறார் ,நன்றாக நடனமாடுகிறார் 


சூர்யா இருகதாபாத்திரத்திற்க்கும் பொருந்துகிறார் . ஆனால் போதி தர்மருக்கு கொஞ்சம் யோசிக்க வைக்கிறார் .வில்லனும் சூர்யாவும் கிளைமாக்ஸ் காட்சியில் சண்டைபோடும் போது மரத்தையே முறிக்கிறார்கள் அதை ஆவென்று பார்த்த எனக்கு கழுத்து சுளுக்கி கொண்டது .படத்தின் இரைச்சல் நன்றாக இருந்தது (அதாங்க இசை )

நாம் மறந்து விட்ட ஒரு தமிழரை ஞாபகபடுத்த  வரலாற்றையும் அறிவியலையும் புகுத்தி ஒரு படமெடுத்து அதற்க்கு 84  கோடி ரூபாய் செலவழித்து  புரியவைத்த தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி அப்படியே உங்கள் தாத்தாவிற்கும் நன்றி ஏனென்றால் அவர்தான் தமிழர்கள் அவரை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகவே மிதப்பார் 

படம் நன்றாக இருக்கிறது இல்லை கூறுவதை விட . இவர்கள் செய்த ப்ரோமோசன் வேலைகள் தான் இங்கே இவர்களை இவ்வளவு தூரம் கேள்வி கேட்கவைத்திருக்கிறது .உதயநிதி ஸ்டாலின் ஒருவேளை இப்படி கூறியிருக்கலாம் முருகதாசிடம் 


எங்க தாத்தா தமிழர் தமிழர் சொல்லியே வாழ்ந்தவரு நீங்களும் அதே தமிழ் தமிழ் ன்னு சொல்லியே படத்து ஒட்டி குடுத்துடுங்க ஏன்னா படத்துக்கு ரொம்ப செலவளுச்சாச்சு .
எனக்கு உண்மைலே தமிழர்ன்னு சொல்லி இந்த படத்தை  பார்த்து பெருமையே வர வில்லை ஆனால் பெருமை வந்தது  படம் தொடங்குவதற்கு முன்னாள் தேசியகீதம் இசைத்தார்கள் எல்லோரும் எழுந்து நின்றோம் அந்த இடத்தில் நான் இந்தியன் என் பெருமை அடைந்தேன் 



Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena