வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

14.11.12

போடா போடி


."ஸ்ட்ரிக்ட்லி பார் யூத்ஸ் " டைப்  படம் ,படம் முழுவதும் இளமை துள்ளல் ,முக்கால் வாசி அரங்கமே நிரம்ப படம் தொடங்க நேரமாகியது ,அதிலும் பாதி பேர் தல 'ரசிகர் போல,மனிதக்கடவுள் அஜித் ,அல்டிமேட் ஸ்டார் அஜித் , வாழ்க வாழ்க, இதில் ஹைலைட்டாக டாக்டர் அஜித் குமார் என்று ஒரு பிரகஸ்பதி கூறினார் ,அஜித் எந்த பல்கலைக்கும் சென்று காசு குடுத்து வாங்கியதாக செய்தி வரவில்லையே என்று யோசிக்க முனைந்த போது ,அடுத்த நொடியே அதற்க்கான காரணம் தெரிந்தது ,டாக்டர் அஜித்குமார் ,நர்ஸ் வி............,பெசிகாகவே நான் ரொம்ப நல்லவன் ,ஆனா இந்த ஒரு விசயத்துல மட்டு தரடிக்கெட் ரேஞ்சுக்கு போறோமே ,மனம் சில நேரங்களில்  உறுத்தத்தான் செய்கிறது 
                                                             
 " கொழந்தைக்கு அவ அம்மானா நான் அப்பா .கொழந்தைக்கு அவ தாய்ப்பால் குடுத்திருக்கலாம் ,ஆனா நான் என் குழந்தைக்கு குண்டி கழிவி விட்டிருக்கேன் "என படம் முழுவதும் சிம்புவின் அலப்பறை பல  ,கலாச்சாரத்தை காப்ப்ற்றுகிறேன் பேர்வழியென்று கணவனே மனைவியுடன் நடன நிகழ்ச்சியில் ஆடுவதுதான் "போடா போடி " யின் ஒன்லைன்

,கதைப்படி'போடா போடி'இருவரும் லண்டன் வாழ் தம்ளர்கள்\\/// ச்ச் ச்சே இது தமிழர்கள்  இரண்டு மூன்று சந்திப்புகளிலேயே ,காதல் என தொடங்கி ,கல்யாணம் முடிந்து , மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுப்பது ,(யூடுபில் ஏத்தவா போகிறேன் என்று நக்கல் வேறு) ,இடைவேளை ,குழந்தை பிரிவு ,ஊடல் பிரிவு ,மீண்டும் இணைதல் ,மீண்டும் பிரசவம் ,ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் அபா ,இந்த படத்தை எப்படி அனுகுவதென்றே  தெரியவில்லை ,கலாச்சரீதியாக அணுகுவதா ?ஆனால் கலாச்சாரத்தை பற்றி சிம்பு  வசனமாக பேசுவதுதான் ,பாஸ் தாங்கள் அதற்க்கு இந்த படத்தில் விரலை வைத்து வித்தையாவது  காட்டிருக்கலாம்  ,பொறுத்திருப்போம் ,சிம்புவிற்கு தோதாக வசதியான கேரக்டர்தான் ,கூடவே நடனம் வேறு ,பிரித்து மேய்ந்திருக்கிறார் ,சரத்குமார் மகள் வரலட்சுமி  ,வித்தியாசமான  குரல்,நடிப்பு ,காதல் மோதிரத்தை கழிவறைக்குள் போட்டுவிட்டு கையைவிட்டு தொழாவி எடுத்து நம்மை பரிதாப கொள்ளவைக்கிறார்  ,இவரின் நடனத்திறமைக்காகவே தேர்வு செய்யபட்டிருக்கிறார் போல  , என்ன வாய்தான் கொஞ்சம் அகலம் .இருவருக்குமான வேதியியல் நெருக்கம்  நன்றாக  இருக்கிறதுசிம்புவின் சித்தப்பாவாக கணேஷ் வழக்கம்போல் ,திக்குஇல்லாமல்  அலையும் கதையில் ஓரளவுக்கு நம்மை சிரிக்கவைக்கிறார் ,நீண்ட கால தயாரிப்பில் இருந்ததாலோ என்னவோ இயக்குனருக்கு சலிப்பு தட்டிவிட்டது போல ,பரதநாட்டிய தாரகை சோபனா எதற்கென்றே தெரியவில்லை

லவ் பண்ணலாமா வேணாமா ,லவ் பண்ணலாமா வேணாமா ,லவ் பண்ணலாமா வேணாமா ,(இந்த படத்த தயாரிக்கலாமா வேணாமா ,இந்த படத்த தயாரிக்கலாமா வேணாமா )மிஸ்டர் தயாரிப்பாளர்  இப்படித்தான் யோசித்திருப்பார் ,பாடல்கள் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது ,தனியாக கேட்பதற்கு நன்றாக இருக்குமா என்று தோன்றவில்லை ,பின்னணி இசை பரவாயில்லை ,இதே ரீதியில் போனால் சிம்பு ,பிரசாந்த் ,ஹம்சவிருதன் வகையறாக்களுடன்  இனைந்து விடுவார் என்பது உறுதி .

மொத்தத்தில் போடா போடி -நடனநிகழ்ச்சி 
Read More

6.11.12

I-T ACT SECTION 66 A - தனி மனித உரிமைகளை பறிக்கிறதா???.


முன் குறிப்பு : சமீபத்தில் இணையத்தில் கருத்து தெரிவிப்பவர்களின் மீதான, சில நிகழ்வுகளுக்குப் பிறகுதான் இந்த தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, அதன் உட்பிரிவு 66A நாம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. அதில் இருக்கும் ஷரத்துகள் அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள உரிமைகளை பறிப்பதாக உள்ளதாக ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளதால், பதிவர் திரு தருமி ஐயாவின் கருத்தில் முழு உடன்பாடு கொண்டு,  அந்த சட்டத்தின் 66A பிரிவுக்கான எனது எதிர்ப்பை தெரிவிக்க, நானும் அதை இங்கே பதிவாக இடுகிறேன்.
==================================================================

I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் 
தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில்

 (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி 
கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்
 (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.eceஇக்கருத்தைப்
 பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.


*      இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட 
இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித 
உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு
 வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*      இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் 
துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். 
சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக்
 காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*     முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான 
ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் 
இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட 
வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.
==============================================================================

ட்விட்டர்,முகநூல், கூகுள் பிளஸ்ஸில் நிலைச்செய்தியாக பகிர,

"இந்திய அரசே,தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT 
Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை 
சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்"

நன்றி!

=============================================================================

வேண்டுகோள்:

கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட அனைத்து இணைய ஊடகவியலாளர்களும் இப்பதிவினை பிரதியெடுத்து வெளியிட்டு ஒத்துழைக்க
வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் பதிவிட்ட பின் இடுகையை தருமி
அவர்களின் தளத்தில் இணைக்கவும். நன்றி!
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena