வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

10.12.10

மறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)

                                       தலைப்பை பார்த்து விட்டு ஏதோ "அஜால் குஜால் " கதைகள் போல என்று வருபவர்களுக்கு முதலிலே சொல்லி கொள்கிறேன். உங்கள் ஆவல் பூர்த்தி செய்யப்படும் .அதே போல் ஒரு உறுதிகூறுகிறேன் இதில் எந்த ஒரு கெட்டவார்த்தையும் பயன்படுத்தபடாது
நான் கொஞ்சம் அதிகமாக புத்தகம்,கதைகள் ,நாவல்கள் ,முக்கிய எழுத்தாளர்களின் கட்டுரைகள்  படிப்பவனாக இருந்தேன்  .ஆனால் இப்பொழுது ஆணிகள் காரணமாகவும் நேரமின்மையாலும் படிக்க முடிவதில்லை .இருந்தும் உறங்க செல்லும் முன் சில பக்கங்கள் படிப்பதுண்டு ஆனால் அப்படியே படித்த மாதிரியே தூங்கிவிடுவேன் . அவ்வாறு நான் ரசித்த புத்தகங்கள் ,சிறுகதைகள் , நாவல்கள் , இன்னும் நிறைய ..,    அவைகளில் முதலில் ஒரு புத்தகத்தை  பதிவாக இங்கே பகிர்கிறேன் .உங்கள் ஆதரவை பொறுத்து தொடர்வேன்
            நான் ஒரு கஞ்சன்.  புத்தகங்களை  பணம் குடுத்து வாங்கி படிக்க மாட்டேன் . ஒரு அரசாங்க லைப்ரரிலும் தனியார் லைப்ரரிலும்  கணக்கு வைத்திருக்கிறேன் ,நான் எல்லா "விதமான" புத்தகங்கள் படிப்பேன். மூன்று  மாதத்திற்கு முன் மூன்று புத்தகங்கள் எடுத்தேன் காந்தியின் சுயசரிதையான "சத்தியசோதனை" வாமு கோமு அவர்களின் "கள்ளி "    கி.ராஜநாராயணன், கழனியூரன்  இருவரும் தொகுத்துள்ள" மறைவாய் சொன்ன   கதைகள் " இதில் "மறைவாய் சொன்ன கதைகள் " உடனே படித்துவிட்டேன்  மிச்சமிரண்டு புத்தகத்தில்  காந்தியின் சுயசரிதை "சத்தியசோதனை "முதல் பாகம் வரைக்கும்தான் படித்திருக்கிறேன். இன்னொன்று இன்னும் படிக்கவே ஆரம்பிக்கவில்லை,இந்த"மறைவாய்சொன்னகதைகள் "   குறித்து நீங்கள் முன்பே அறிந்திருக்கலாம் அல்லது படித்திருக்கலாம் . இருந்தும் என்னுடைய பார்வைகள் இங்கே சில வார்த்தைகளாய்
                              

கி.ராஜநாராயணன் ஒரு மூத்த கதை சொல்லி அவரை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை  .நான்  அவரது கதைகளை அதிகம் படித்ததில்லை ஏனென்றால் க்ரைம் கதைகளும் ,காதல்கதைகளும் படித்துகொண்டிருந்த எனக்கு  இரண்டு வருடத்திற்கு முன்தான் இலக்கிய தரமான கதைகளிடமும் கட்டுரைகளிடமும் அறிமுகம் ஏற்ப்பட்டது .ஆனால் இப்பொழுது அவரது கதைகளை அதிகமாக  தேடிகொண்டிருக்கிறேன்

100 நாட்டுப்புறப் பாலியல் கதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு இது! இதில் இடம்பெற்றுள்ள கதைகள், 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'(1992, நீலக்குயில் பதிப்பகம், கி.ரா), 'நாட்டுப்புறப் பாலியல் கதைகள்' (1994, நீலக்குயில் பதிப்பகம், கழனியூரன்) ஆகிய புத்தகங்களிலிருந்தும், 'இறக்கை' மற்றும் 'வாசுகி' இதழ்களில் கழனியூரன் எழுதிய பாலியல் கதைகளில் இருந்தும் தொகுக்கப்பட்டவை.
கிராமங்களில் இருந்த  நம் பாட்டன் முப்பாட்டன்களிடமும் பாட்டி முப்பாட்டிகளிடமும் சர்வசாதாரனமாய்  புழங்கிய உலவிய கதைகள்தான் இவைகள் .பள்ளிகாலங்களிலும் ,கல்லூரிக்காலங்களிலும் பேசி சிரித்த கெட்டவார்த்தை கதைகளுக்கு(ஜோக்ஸ்) முற்பட்டவடிவம் .இது மாதிரியான கதைகள் கிராமங்களில் இயல்பானவை .அந்த கரிசல் கிராமத்திற்கே உரிய எள்ளலும் ,எழுத்தும் அந்த நடையும்  நம்மை அந்த கிராமத்து சூழலுக்கே அழைத்து செல்லும்
சில கதைகள் நமக்கு தெரிந்தவைகளாக இருக்கலாம் .பாலியல் கல்வி அவசியமான ஒரு கல்வி என்று கூறும் இந்த காலத்தில் அது குறித்த ஒரு சிறு விழிப்புணர்வு இந்த கதைகள் ஏற்படுத்தலாம்.
 அதிலிருந்து ஒரு கதையை கூறுகிறேன்  .வெத்தலை ஒரு தேவலோகத்து பொருள் .அது  பூமிக்கு வந்தது எப்படி? அதனுடைய வாசமும் இன்னொன்றின் வாசமும் ஒன்று போல் இருக்குமாம் 
ஒரு முறை இந்திரன் தன் மகனான அர்ஜுனனை தேவலோகத்திற்கு அழைத்து  வந்தானாம் .அவனின் அழகை பார்த்து ரம்பையோ ,திலோதமையோ சரியாக நினைவில் இல்லை .இவர்களில் எவரோஒருவர்  அவனது அழகில் மயங்கி விடுகிறாள் . .அவனிடம் எப்படியாவது உறவு கொள்ளவேண்டும் நினைக்கிறாள் .ஆசையாக அவனிடம் செல்கிறாள் .ஆனால் அவன் மறுக்கிறான் .பின்பு அவன்  பூலோகம் சென்றுவிடுகிறான் .எப்படியாவது .பூலோகத்திற்கு சென்று தன்னுடைய வேட்கையை  தீர்த்து கொள்ளவேண்டும் என்று முடிவெடுக்கிறாள் .அவனை கவர்வதற்கு தேவலோகத்தின் உயரிய பொருளான வெத்தலையை கொண்டுசெல்கிறாள் .ஆனால் வாயிர்காப்போர்கள் கொண்டுசெல்லவிட விடமாட்டார்கள்  ஆடைக்குள் ஒளித்துவைத்தாலும் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் அந்தரங்கமான பகுதிக்குள் ஒளித்து கொண்டுசெல்கிறாள் .அங்கு சென்றும் அவளை அவன் ஏற்காததால் கடுப்பில் அந்த வெத்தலை கொடியை தூக்கி போட்டு விடுகிறாள் .அதை பார்த்த ஒரு விவசாயி அதை பயிரிட ஆரம்பிக்கிறான் .இது தான் வெத்தலை பூமிக்கு வந்த கதையாம் .இதையே அந்த கரிசல் கிராமத்து நடையில் படித்து பாருங்கள.அருமையாக இருக்கும் 
அந்த வெத்தலை வாசமும் இன்னொன்றின் வாசமும் ஒன்றாக இருக்கும் என்று கூறினாயே அது என்ன? என்று கேட்காதீர்கள் .புரிந்துகொள்ளுங்கள் புரிந்தவன்தான் பிஸ்தா

சில கதைகளை நினைத்து நினைத்து சிரிக்கலாம் ,திருவிதாங்கூர் சமஸ்த்தானத்திற்கு உட்டபட்ட அரசாங்கத்தின் உறவினர்கள் அல்லாத பெண்கள் மேலாடை அணியகூடாதாம் . 140  வருடத்திற்கு முன் வரையே இந்த வழக்கம் இருந்ததாக வரலாறு கூறுகிறது  .அது குறித்த ஒரு கதை நம்மை அதிர்ச்சி அடையச்செயலாம் 
வித்தியாசமான ஒரு உருவ அமைப்புள்ள  பெண்ணை திருமனம் செய்து கொள்ள நினைக்கும்  ஒரு இளைஞன் கதை .தன் வயலில் நடக்கும் தவறான செயல்களை தடுக்கஒரு விவசாயி எடுக்கும் நடவடிக்கைகள்

அப்போதே சைவம் வைணவம் குறித்த ஒரு வெகுகிண்டலான ஒரு கதை.
என் பள்ளி காலங்களில்  அதை வேறு ஒரு பரிணாமத்தில் கேட்டிருக்கிறேன் .ஒரு "குருவி" கதையும் உண்டு. அதை நாம் அனைவரும் அறிந்திருப்போம் இருந்தாலும் அந்த கரிசல் நடையில் சுவையாக இருக்கும் .ஆணாதிக்கத்தின் அடக்கு முறையை நகைச்சுவையோடு எழுதி இருப்பார்கள்.
இது போல் இன்னும் நிறைய கதைகள் நம்மை விலா நோக சிரிக்கவைக்கும் 

இந்த மாதிரியான கதைகளை படிப்பதனால் நம் ஒழுக்கம் கெட்டு விடும் என்று நினைத்தால் நாம் பரிதாபத்துக்குரியவர்களே.பாலியல் குறித்த புரிதல்கள் இங்கே வெட்கங்களாகவும் மவுனங்களாவும் இருக்கின்றன
இந்த பதிவுலகத்தில் பல டாக்டர்கள் பதிவர்களாக   உருமாறி தங்கள் பணியை செவ்வனே செய்கிறார்கள் அவர்களுக்கு  என் நன்றியோடு .வணக்கத்தையும் கூறிகொள்கிறேன் .

18 கருத்துகள்:

தேசாந்திரி-பழமை விரும்பி said...

கண்டிப்பாக தொடருங்கள் மணிவண்ணன்.
நான் கூட போன புத்தகத் திருவிழாவில் கி.ரா வின் கதைத் தொகுப்பொன்றை வாங்கினேன். ஆனால், இன்னும் படிக்கவே ஆரம்பிக்க வில்லை.
//பாலியல் குறித்த புரிதல்கள் இங்கே வெட்கங்களாகவும் மவுனங்களாவும் இருக்கின்றன // மிகச் சரி...

உங்கள் எழுத்து நடை மெருகேறிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் எழுத்துப் பிழைகளை பார்த்துக் கொள்ளுங்கள்.
(மகனான அர்ஜுனனை தேவலோகத்திற்கு "அலைத்து" வந்தானாம் . என்பதால் அந்தரங்கமான பகுதிக்குள் "ஒழித்து" கொண்டுசெல்கிறாள் )
வாழ்த்துக்கள்.

ஜீ... said...

நல்ல பகிர்வு! தொடருங்கள்! :-)

பார்வையாளன் said...

உரிய நேரத்தில் வந்த பதிவு இது..
அவர் நாவல் ஒன்றை படிக்க போகிறேன்..
படிக்கும் ஆவலை அதிக படுத்தியது பதிவு

karthikkumar said...

தொடருங்க பங்கு

நா.மணிவண்ணன் said...

@தேசாந்திரி-பழமை விரும்பி said...

கண்டிப்பாக தொடர்கிறேன் தேசாந்திரி அவர்களே இனி பிழைகளை திருத்திகொள்கிறேன் . ஊக்கத்திற்கு பாராட்டியமைக்கு மிக்க நன்றி

நா.மணிவண்ணன் said...

ஜீ... said...

நல்ல பகிர்வு! தொடருங்கள்! :-)

நன்றி ஜி

நா.மணிவண்ணன் said...

@பார்வையாளன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நா.மணிவண்ணன் said...

karthikkumar said...

தொடருங்க பங்கு


ஓகே பங்கு

சிவகுமார் said...

>>> இந்த மாதிரியான கதைகளை படிப்பதனால் நம் ஒழுக்கம் கெட்டு விடும் என்று நினைத்தால் நாம் பரிதாபத்துக்குரியவர்களே...>>> முற்றிலும் சரி மணி!

ரஹீம் கஸாலி said...

நீங்க ரஜினி ரசிகரா அப்படின்னா நம்ம கடைப்பக்கம் கொஞ்சம் எட்டிப்பாருங்க.....http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html

பதிவுலகில் பாபு said...

நேற்று என் பதிவு திருடப்பட்டது.. குறித்து கருத்திட்டு.. இன்னொரு ஆளும் திருடியிருக்கான்னு லிங்க் கொடுத்ததுக்கு நன்றிங்க நண்பரே..

எப்படியெல்லாம் திருடறானுங்க.. தினமலரை விட.. அந்தப் பிளாக்ல என்னோட பதிவைப் பார்த்துட்டு எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு..

நன்றிங்க நண்பரே..

நா.மணிவண்ணன் said...

@சிவகுமார்

நன்றி சிவகுமார்

நா.மணிவண்ணன் said...

@ரஹீம் கஸாலி

இந்தா வந்துடுறேன்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அட்டகாசமா இருக்கு நானும் படிச்சிருக்கேன் கிராமத்து பெருசு மொச்சகொட்டை வாங்க சந்தைக்கு போன கதை படிச்சு இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும் ..இது மாதிரி இன்னும் ரெண்டு கதைகளை அப்பப்போ போட்டு விடுங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அட்டகாசமா இருக்கு நானும் படிச்சிருக்கேன் கிராமத்து பெருசு மொச்சகொட்டை வாங்க சந்தைக்கு போன கதை படிச்சு இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும் ..இது மாதிரி இன்னும் ரெண்டு கதைகளை அப்பப்போ போட்டு விடுங்க

polurdhayanithi said...

அட்டகாசமா இருக்கு

நா.மணிவண்ணன் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தல

நா.மணிவண்ணன் said...

@polurdhayanithi

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena