வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

3.3.12

அரவான்

                            தமிழ் மரபில் அரவான் பற்றி மிக நீண்ட விளக்கங்கள் உள்ளன .அரவான் என்பவர்  களத்தில் பலியிடுவதற்காக உருவாக்கப்பட்டவர் . அது போன்ற ஒரு அரவானின் வரலாற்றையும் அத்தோடு கள்ளர் மரபையும் அவர்களுடைய குலத்தொழிலான கன்னம் வைத்து திருடுவதும் .பதினெட்டாம் நூற்றாண்டின் கள்ளர் சமுதாயத்தையும் ,ஒரு அறிய தொகுப்பாகவும் ,ஆவணமாகவும் காவல் கோட்டம் ' ச .வெங்கடேசன் உதவியுடன் கூடுதல் கதை அமைத்து இயக்கியிருக்கும் வசந்த பாலனுக்கு வாழ்த்துகள்
                                                        
 
பதினெட்டாம் நூற்றாண்டில் கதை தொடங்குவதாக காட்டபடுகிறது .பசுபதி வேம்பூர் கிராமத்தின் தலைமை திருடனாக செயல்பட்டு அக்கிராமத்திற்க்கே படி'அளக்கிறார் .ஒரு கட்டத்தில் மகாராணியின் வைர அட்டிகை களவு செய்யபடுகிறது .அதை தொடர்ந்த காட்சியில் ஆதியின் அறிமுகமும் ,பசுபதி ஆதியின் நட்பும் ,பசுபதியின் தங்கை ஆதியின் மேல் கொண்ட காதலும் என தொடரும் கதையில் தொய்வு ஏற்படுவது இரண்டாம் பாதியில்தான் ,நீளத்தை கொஞ்சம் கத்திரித்து திரைக்கதியில் கொஞ்சம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து .
 
இடைவேளை வரை பசுபதியின் ஆட்டம்தான் .இடைவேளைக்கு பிறகுதான் ஆதி குடுத்த பணியை செவ்வனே செய்திருக்கிறார் .வில்லனாக கரிகாலன் ,ரீஎன்ட்ரி .என் சிறுவயதில் பார்த்த படம் சோலையம்மா ' தனுஷின் அப்பா கஸ்துரி ராஜா இயக்கிய படம் என்று நினைக்கிறேன் ,ஒரு ஆஜால் குஜால் பாட்டு கூட ஒன்று வரும் 'தாமிர பரணி ஆறு நீ தரையில் நடக்கும் தேரு'.கரிகாலன்தான் அந்த படத்தின் வில்லன் ,மனிதர் கவட்டையை ஒன்று வைத்துகொண்டு அந்த ஊரில் உள்ள பெண்களை தினமும் ஒரு பெண்ணாக 'மார்க் செய்வார் ' மறுப்பவர்களை வலுகட்டாயமாக ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .மனிதரை மிக டெர்ராராய் காட்டியிருப்பார்கள் ,சமட்டியை கொண்டு நெஞ்சில் அடிப்பார்கள் (எக்ஸ்சர்சைசாம்),அண்டா அண்டாவாக பால் குடிப்பார் ,சண்டையில் ஈட்டியை கூட வைத்து குத்துவார்கள் ,ஈட்டி மடங்கிவிடும் ,அப்படி பட்ட மனிதரை அந்த படத்தின் நாயகி சுகன்யா கடைசியில் வில்லனை வதம் புரிவார் சோற்றில் விஷம் வைத்து .'இப்படிலாம் கூட வில்லைங்க இருப்பாய்ங்களா' என பயந்த காலகட்டம் அது . அப்படிப்பட்டவர் இந்த படத்தில் கூமுட்டை குடித்த முகபாவனைகளுடனே வலம் வருகிறார் .ஆனால் பயம் தான் வரமாட்டேன் என்கிறது .ஒரு வேளை நான் வளர்ந்த குழந்தை ஆகிவிட்ட காரணமாகவும் இருக்கலாம் (இந்த அளவிற்கான விமர்சனம் ஏன் வைக்கிறேன் என்றால் மதுரை நகர் முழுவதும் கரிகாலனை முன்னிறுத்தி சுவரொட்டிகள் ஒட்டபட்டிருந்தது)
                                                 
 இதில இன்னொரு வில்லானாக 'ராஜா' .கதாபாத்திரம் .சீரியாசாக சென்ற படத்தில் சிங்கம்புலி வந்தவுடன்தான் கொஞ்சம் ரிலாக்சாக முடிந்தது ,நட்புக்காக பரத் ,அஞ்சலி ,ரதிநிர்வேதம் புகழ் ஸ்வேதா மேனனும் ,இன்னும் நிறைய கேரக்டர்கள் 
                                                            
 
                        இப்பொழுதான் நம்ம ஐட்டம் வரபோகிறது.இந்த படத்தில் நடித்த அனைத்து பெண்களும் ஆல் பாரதிராஜா டைப் ஹீரோயின்ஸ்  " Full sleeve less" லே வலம்  வருகிறார்கள் இல்லை இல்லை அவ்வாறு காட்ட படுகிறார்கள் .நாயகியும் அவ்வாறே .நண்பர்களை டிக்கெட் எடுத்து கொண்டிருக்க நான் திரை அரங்கின் வெளியில் உள்ள தள்ளு வண்டியில் "கப்ப கிழங்கு " வாங்கி சாப்பிட்டேன் .என்ன செய்வது இது போன்ற கப்ப கிழங்குகளை மட்டுதான் சாப்பிட முடிகிறது  இட்ஸ் ஓகே ,பரவாயில்லை நாயகி தன்சிகாவிற்க்கு நடிப்பு வருகிறது .இருந்தாலும் அந்த "கப்ப கிழங்கில் ஒரு சுவை இருந்தது .அந்த கிழங்கில் மாவு சத்து அதிகம் என்று நினைக்கிறேன் ,நன்றாக மாவுமாவாக இருந்தது .இன்னொரு கிழங்கு வாங்கி சாப்பிட்டேன் ஆனால் அந்தளவிற்கு சுவை இல்லை ,ஆங் சொல்ல மறந்து விட்டேன் இதில் இன்னொரு நடிகையும் இருக்கிறார் பெயர் ஏதோ அர்ச்சனாவோ ,கவியோ ,இருந்தாலும் அந்த முதலில் சாப்பிட்ட கப்ப கிழங்கு .................................(கடேசி வரைக்கு கப்ப கிழங்கு தான் சாப்பிட முடியும் போல ) 
 
                                                              
அரவான் -தரம் 
                                          
                                                                    
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena