வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

30.4.11

நான் 'தல' ரசிகன்

             

                                                

மதுரை அபிராமி தியேட்டரில் 'வில்லன் ' படம் முதல் காட்சி ,அன்றைய தினம் தீபாவளி ,முதல் காட்சி பார்த்து விட்டு கூட்டமாக வெளியில் வந்து கொண்டிருந்தோம் ,வெளியில் வரும் பொழுது கண்ணாடி கதவை ஒருவன் தட்டி விட்டு சென்றான் ,அடுத்து வந்தவன் அதே போல் செய்ய ,அதன் பின்னால் வந்த அனைவரும் அதே போல் செய்ய ,அதற்க்கு மேல் தாக்கு பிடிக்காமல் கண்ணாடி உடைய ஆரம்பித்தது ,பின்னர் மொத்தமாக கண்ணாடியை உடைத்து வெளியேறினோம் ( மாமாக்காரர்கள்  விரட்டி விரட்டி அடித்தார்கள் என்பது தனிக்கதை )

           மதுரை அம்பிகா தியேட்டர் ' ஜி ' படம் முதல் காட்சி . வேலைக்கு மட்டம் போட்டு படம் பார்க்க வந்தேன் ,அப்போது தியேட்டர் முழுவதும் முன்புறமாக கண்ணாடியாக இருக்கும் .கூட்டமாக வெளியில் நின்று கொண்டிருந்தோம் ,'ஏ இன்னம் பெட்டி வரலையாம்டா " எவரோ ஒருவர்  கொளுத்தி விட " என்னது இன்னம் பெட்டி வல்லையா  எடுரா கல்ல" சர் சர் என்று கற்கள் பறந்தன ,ஒரு ஐந்தாறு கண்ணாடிகள் உடைய ,மீண்டும் மாமாக்காரர்கள் விரட்ட 

         மதுரை சினிப்ரியா காம்ப்ளக்ஸ் " பில்லா' பட முதல் காட்சி ,திரை அரங்கினுள் ,ஒரு ஐந்து  அணுகுண்டுகளை பற்றவைத்து வீசியவன்.முதல் காட்சி முடிந்த பின் பார்த்தால் ஒரு சேர்  பாக்கி விடாமல் உடைந்து கிடந்தது

கூட்டத்தில் எவனோ ஒருவன் 'இளைய தளபதி' வாழ்க என்று கூற ,அவன் வாயிலே கூட்டமாக சேர்ந்து  மிதித்தார்கள் .இவை போல் இன்னும் எண்ணற்ற சாதனைகள் உண்டு ,ஆனால் அதுவெல்லாம் வேண்டாம்

இவையெல்லாம் பெருமையாக என்னால் கூறமுடியாது .ஆனால் பெருமையாக கூறிகொள்வேன் ,தலயின் 'ஸ்டேட் மென்ட்டை ' படித்த பிறகு

அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தார்க்கும்  இந்த அறிக்கை மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும் - சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தை கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை - பார்க்கவும் மாட்‌டேன். கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்பதே என் கருத்து.
வருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.
மாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்.

 நான்கு பசுமாட்டை தானமாக கொடுத்து விட்டு  ,மாட்டின் அருகில்  அதற்க்கும் அவருக்கு வித்யாசமே இல்லாமல் நின்று  போடோவுக்கு போஸ் கொடுப்பதற்கு இது எவ்வளவோ மேல் 
" என் நெஞ்சில் குடியிருக்கும் " என ரசிகர்களை தன சுய நலத்திற்காகவே பயன் படுத்து பவர்களுக்கு மத்தியில் 

ஆளுங்கட்சியின் உதவியோடு இது நாள்வரை தன் படத்தை  ஓடவிட்டு ,இன்று எதிராக செயல் பட்டாலும் ,ஒருவேளை சமீபத்திய  கருத்து கணிப்பின் படி அவர்கள் மீண்டும் ஆட்சிகட்டிலில் அமர்ந்தால் முதல் ஆளாக கலைஞர் அவர்களுக்கு சால்வை போர்த்துபவர் அவரின் அப்பாவாக இருப்பார் 'நான் பரம்பரை தி.மு.க  .காரன் என்பார் ,இவர்களுக்கு மத்தியில்

தல நீ தல தான்யா 

நேற்று சினிமா சூட்டிங்கில் வாந்தி எடுத்துவிட்டு ,மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு , இன்று வரை 'இந்த வந்துடுவேன் அந்தா வந்துடுவேன் ' என்று ஜு காட்டி கொண்டிருப்பவர்கள் மத்தியில் 

தல நீ தல தான்யா

ஒரு தல ரசிகனாக பெருமை படுகிறேன்  Read More

26.4.11

மஞ்சுளா

பத்மா சித்தி இரவு  காலமாகி விட்டார் என்று செய்தி கிடைத்தவுடன் 'காலைல வெள்ளனமா  எல்லாரும் கழுகுமலைக்கு கெளம்பனும்  " என்று அப்பா கூறினார் ,பத்மா சித்தி அப்பாவின் ஒன்றுவிட்ட தம்பியின் மனைவி ,ஒரு பெண்குழந்தை உண்டு ,ஒன்றாவதோ ,இரண்டாவதோ படிக்கிறாள் என்று நினைக்கிறேன் .முருகன் சித்தப்பாவுக்கு தொழில் 'லேவா தேவி 'அப்பத்தாவிடம் செய்தியை கூற சொன்னார் , ஆனால் அதற்குள் அப்பத்தாவே வந்துவிட்டார் 
" என்ன " 
" அம்மா முருகன் பொண்டாட்டி எறந்து போச்சாம்  " 
" ஐயையோ ஆஸ்பித்திரிலே உயிர் போய்டிச்சாமா    ,அத்த அத்தனு காலையே சுத்தி வருவாளே இம்புட்டு சின்ன வயசுலேயே விதி வந்து போகனுமா " என்று அவரின் நினைவுகளை பற்றி கூற ஆரம்பித்தார் ,அப்போது அம்மா அருகில் வந்து ," செல்லுல அலாரம் வச்சு தூங்கு காலைல எல்லாரும் சேர்ந்து போகணும் " 
" நா எதுக்கு வரணும் ,என்னாளலாம் வர முடியாது .வேணும்னா கருமாதிக்கு வர்றேன் ,வேல கெடக்குதுல,"
" என்னங்க இவன் வரலையாம்  " 


" ஏன்டா " அப்பா 
" அய்யா நல்லதுக்கு போகலைனாலும் கெட்டதுக்கு போகனும்யா" அப்பத்தா
" ஐயையே  சரி வந்து தொலைக்கிறேன் " கழுகுமலைக்கு கோவில்பட்டி சென்று பேருந்து மாற வேண்டும் ,அப்பா,அம்மா ,நான் விடியற் காலை நாலுமணிக்கு கிளம்பினோம் ,சற்றே பணிகாற்றுடன் கூடிய ஜன்னல் பேருந்து பயணம் ,கோவில்பட்டி வந்தடைந்தோம் ,அங்கிருது கழுகுமலை பயணம் .ஊரின் எல்லையில் ஒரு மலை ,ஆனால் கழுகு போல் காட்சியளிக்கவில்லை ,
"ரொம்ப தூரம் நடக்கனுமாப்பா " 
"கொஞ்ச தூரம்தான் "
மிக பெரிய பட்டிக்காடு என்று கூற முடியாது ,இருந்தாலும் கிராமம்தான் .நேரே  நடந்து இடது புற சந்தில் திரும்பிய போது

" அண்ணே மதினி வரலையா " 
" ஆங் சரசாவா திடீர்னு கொரலு கேட்டவொடனே யாரு என்னனு தெரியல , உம் மதினியா அந்தா வர்றா பாரு நடக்க மாட்டாம "என்று அப்பா கூறியபோதுதான் 
அந்த பெண்ணை பார்த்தேன் ,அண்ணே மதினி வரலையா என்று கேட்ட பெண்மணிக்கு பின்னால் பதுங்கிருந்தாள், அவள் பார்வை மின்னல் போல் என் மேல்  வீசி செல்ல ,அதற்குள் என் அம்மா வந்து விட "என்ன மதினி இவ்வளவு மெதுவா நடந்து வர்றீங்க "
"யாரு சரசாவா ,ஆத்தாடி பாத்து எவ்வளவு நாள் ஆச்சு ,நல்லாருக்கியா ,இது யாரு ஓம் மவளா " 
" குசாலம் விசாரிக்க இதுவா நேரம் ,எளவு வீட்டுல வந்துகிட்டு ,நடங்க " என்று அப்பா கோபப்பட்டார் 
நடக்க ஆரம்பித்தோம் ,நான் கடைசியாக நடந்து வந்தேன் ,காலைநேர வெயில் சிறிது சிறிதாக ஏறி கொண்டிருந்தது " நீங்க ரெண்டு பேரும் வானரமுட்டிலருந்து   இப்பதான் வர்றீங்களா ,அண்ணே வரலையா " அம்மா

" அவரா ,அவரு சாராய கடைல முழிச்சுட்டு தான் வருவாரு  " சரசா அத்தை,

அப்படித்தானே நான் கூப்பிட வேண்டும் ,இப்படி ஒரு சொந்தம் இருக்கிறதென்றே எனக்கு இன்று தான் தெரிந்தது ,நான் நெருங்கிய சொந்தங்களின் விஷேசங்களின் தவிர்த்து அவ்வளவாக கலந்து கொண்டதில்லை ,எளவு வீட்டை சமீபித்தோம் ,பெண்கள் ஓலம் ,கிழவிகளின் ஒப்பாரி கேட்டது , கொட்டகை  வேய பட்டிருந்தது ,ஆண்கள் அதிகமாய் பெண்கள் கொஞ்சமாய் பிளாஸ்டிக் ,இரும்பு சேர்களில் அமர்ந்திருந்தனர் ,எல்லோரையும் கும்பிட்டபடி அப்பா முன்னே செல்ல ,முருகன் சித்தப்பாவின்  அம்மா வீட்டின் முகப்பின் உட்கார்ந்து வெத்தலை பாக்கை இடித்து கொண்டிருந்தார் ,மருமகள் இறந்து போன துக்கம் சிறிதும் இல்லை போல  .அம்மாவும் சரசா அத்தையும் அழும் பெண்களோடு சேர்ந்து அழ ஆரம்பித்தனர் அந்த பெண்ணும்  ,நான் சிறிது அங்கேயே நின்று கொண்டிருந்தேன் ,பின்பு வெளியில் வந்து ஒரு சேரை ஆக்கிரமித்தேன் ,சித்தப்பாவின் கையை பிடித்து கொண்டிருந்தார் அப்பா ,நான் ஒவ்வொரு முகங்களாக கவினிக்க ஆரம்பித்தேன் 
நிறைய 'பெருசுகள் ' தென்பட்டார்கள் ,இவர்களின் மனநிலை இப்போது எப்படி இருக்கும் 
" யாரு நாடிமுத்து மவனா " பொடி போட்டு கொண்டே கடம்பூர் தாத்தா என்னருகில் அமர்ந்தார் 
" ஆ ஆமா தாத்தா " 
" யாரு யாரு வந்தீங்க " 
" அப்பா ,அம்மா வந்திருக்காங்க " 
" அப்பத்தா வல்லையா  ,கெதியா இருக்கா " 
" ம்ம் அதலாம் நல்லாருக்காங்க பஸ்ல வந்து போறது சேர மாட்டீங்குது அதான் அவுங்கள கூட்டிட்டு வரல " அப்போது அப்பா வந்துவிட பொடி போட்டு கொண்டே அப்பாவிடம் பேச்சை வளர்க்க ஆரம்பித்தார் கடம்பூர் தாத்தா 
" காப்பி எடுத்துக்கோங்க " என்ற குரல் கேட்டக நிமிர்ந்தேன் ,சரசா அத்தையின் மகள் ,நன்றாக அப்போதுதான் அவளை கவனிக்க முடிந்தது ,நடு வகுடெடுத்து படிய வாரிய தலை ,சாந்து பொட்டு நெற்றியில் ,பிரவுன் கலரில் தாவணி ,அதற்க்கு மேட்ச்சாக ஜாகெட் ,மாநிறம் , இன்னும் அழுத்தமாக அவள் அழகை விமர்சிக்க வேண்டுமென்றால் 'அவள் ஒரு கிராமத்து தேவதை .கிராமத்து பைங்கிளி ,கிராமத்து சிட்டு '
" காப்பி ஆறிடும் " அவளை அப்படி கவனித்ததை உணர்ந்திருப்பாளோ,பெயர் என்னவாக இருக்கும்
பட்டுகோட்டை பெரியப்பா " நீர்மாலை எடுக்குறதுக்கு பொம்பளை ஆள் வாங்க " பிறகு கடைசியாக " நீர்மாலை எடுக்குற பொம்பளைங்களாம் கண்டிப்பா கருமாதிக்கு வந்துடனும் " என்று கூற முடிக்க எழுந்த பாதி பெண்கள் அமர்ந்து விட்டனர்.பட்டுகோட்டை பெரியப்பா அனேக சொந்தங்களின் நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டு ,அவராகவே தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு கட்டளை பிறப்பித்து கொண்டிருப்பார்.பிணத்தை எடுத்து செல்வதற்கான முஸ்த்தீபுகள் ஆரம்பமானது ,
" நீனும் வர்றியா ஊர்வலத்துக்கு  " 
" நா வல்லப்பா " 
"சரி அப்படினா வா சரசா வீட்டுக்கு போவம் ,அவ இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு வர்றாம போரீங்கலேன்னு சடைக்கிறா "அம்மா 
" சரி நீயும் அம்மாவும் போயிட்டு வர்றீங்களா " அப்பா " அங்கேயே குளுச்சுடுங்க " என்றார்
சரசா அத்தை வீட்டில் நுழைந்ததுதான் தாமதம் ,என்னை என்னமோ மறுவீட்டுக்கு அழைத்து வந்ததுபோல் கவனிக்க ஆரம்பித்தனர் ,வேக வேக தேநீர் தயாரிக்க பட்டது ,சேர் எடுத்து போடப்பட்டு தூசி தட்டப்பட்டது ,பேன் மற்றும் தமிழக அரசின் இலவச டிவிக்கு  மின்சாரம் ஊட்டப்பட்டது ,எனக்கு ஏதோ புரிவது போல் இருந்தது 
" நானும் ஒங்கமாவும் சின்ன வயசுல ஒன்னாத்தான் வளந்தோம் ,பக்கத்து பக்கத்து வீடுதான் ,கடலைகாட்டுக்கு கடலை பறிக்க போவம் ,கமலைல குளிப்போம் ,உங்கப்பாலாம்  அந்த கமலைல மேல நின்னு தண்ணிக்குள்ள பொத்துன்னு  குதிப்பாரு ,ஒங்கமா நானும் படி வழியா எறங்கி போயி போனில மோந்து  குளிப்போம் " 
" அது ஒரு காலம் என்ன மதினி " 
" அடிபபோடி இப்ப போய் அதலாம் ஞாபக படுத்திகிட்டு , ஆமா எங்க இன்னும் ரெண்டு பிள்ளைங்கள  காணோம் .
" அதுக ரெண்டும் பள்ளி கொடத்துக்கு போயிருக்குக ,இவளுக்கு எளையவ பத்து படிக்கிறா ,சின்னவன் எட்டு.
" மஞ்சுளா என்ன படிச்சிருக்கா " மஞ்சுளாவா இவளது பெயர் மங்கள கரமான பெயர் .என் பெயரை மஞ்சுளாவின் பெயருக்கு பின்னால் இணைத்து பார்த்தேன் ,நல்லாத்தான் இருக்கு 
" அவள பனன்டோட நிறுத்திட்டேன் ,போதும் போதும் அவ படிச்சு கிழிச்சது " நான் எழுந்தேன் " என்னப்பா " 
"இல்ல பாத்ரூம் போகணும் " 
" இந்தா பின்னாடி வழியா போயா " 
வெகு நேரமாக அடக்கி வைத்திருந்த காரணத்தினால் வேகமாக சென்றேன் ,அந்த நேரத்தில் அவளும் உள்ளே வர ,திருப்பத்தில் மோதிக்கொண்டோம் 
" ஸாரி" 
" இல்ல பரவாயில்ல நீங்க போங்க " ஒதுங்கி நின்றாள் .எனக்கும் பெண் பார்த்துகொண்டிருக்கிறார்கள் ,இநத பெண்ணையே பேசி முடிக்க சொல்ல வேண்டும் .நான் மீண்டும் உள்ளே நுழைந்த பொழுது 
" நல்ல சமைப்பா மதினி " என்ற குரல் கேட்டது 
" மஞ்சு மஞ்சு செத்த அந்த விசிறி கட்டையை எடுத்துட்டு வாமா,பாவி பயலுக கரனட்ட புடுங்கிவிட்டாணுக " மஞ்சு வர 
"  மாமாட்ட குடுமா ,கரண்ட்டு வர கொள்ள நேரம் ஆகும் விசிறி கோங்க தம்பி " 
" இல்ல அத்த இருக்கட்டும் நா வெளில காத்தாட நடந்துட்டு வர்றேன் " 
" நீங்க வாட்டுக்குவெளிலகிளில  சாப்பிட்டு வந்துடாதீங்க ,மதியானம் இங்கதான் சாப்பாடு ,சொல்லுங்க மதினி " 
" ஏ சாப்பாட்டுக்கு இங்க வந்துடு " நான் சரி என்று தலையாட்டினேன் 
" தம்பி வாய தெரக்கிறதுக்கு காசு கேப்பாப்புல  போல  " என்று அத்தை கூறுவது கேட்டது நான் வெளியேறிய போது
நல்ல மணக்க மணக்க சாம்பார் ,உருளைக்கிழங்கு ,கத்திரிக்க கூட்டு ,அப்பளம் ,மோர் ,ஊறுகாய் 
:" கொஞ்ச காய் எடுத்து வை மஞ்சு " 
" இல்ல போதும் போதும் அத்த " 
" அட சும்மா சாப்பிடுங்க தம்பி ,வராதவுங்க வந்திருக்கீங்க " 
நானும் அம்மாவும் கிளம்பினோம் 
" சரி வர்றேன் சரசா ,மஞ்சுளா போயிட்டு வரவா " அம்மா
" சரி போய்ட்டுவர்றேன்  அத்த " மஞ்சுளாவை பார்த்தேன் ,கண்களால் விடைபெற்றோம் 
இரவாகிவிட்டது வீட்டிற்கு  வர ,வந்தவுடன் என்னறைக்கு சென்று விட்டேன்
அன்று முதல் பதினாறாம் நாள் என்று வரும் என்று காத்து கொண்டிருந்தேன் ,மீண்டும் அவளை பார்க்கலாம் அல்லவா
அந்த நாளும் வந்தது ,அன்று மதியம் .நான் என்னறையில் இருந்தேன் 
" ஏங்க நாளைக்கு கருமாதிக்கு நீங்க மட்டும் போயிட்டு வந்துடுரீங்களா இல்ல நானும் வரணுமா " அம்மா 
ஐயையோ அப்ப நம்மள கூப்பிட மாட்டாங்களா .மஞ்சுளாவை பார்க்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தேனே 
" ஆமாமா நீயும் எதுக்கு வெட்டியா ,அதான் அன்னைக்கே குடும்பத்தோட போயிட்டு வந்துட்டோம்ல " என்னை கண்டிப்பாக அழைக்க மாட்டார்கள் என்று உறுதியாக தெரிந்தது 
" ஏங்க சரசா மக இருக்கால " 
" ஆமா இருக்கா இப்ப அவளுக்கு என்ன " 
" அவ வீட்டுக்காரர் கிட்ட  அவ மகளை நமக்கு கேட்டு பாருங்களேன் ,அவளுக்கும் அந்த எண்ணம் இருக்குங்க " 
" யாரு மஞ்சுளாவையா அது ஏற்கனவே பேசிமுடிச்சுட்டாங்கலேடி " அதிர்ந்தேன் .மஞ்சுளா மனதிற்குள் வந்து போனாள் ,இதற்க்கு பதிலாக என் மனதை கோடாரியை வைத்து பிளந்திருக்காலாம்
" என்னங்க சொல்லறீங்க ,யாருக்குங்க பேசி முடிச்சாங்க " 
" முருகனுக்கு " 
" உங்க தம்பிக்கா ,ரெண்டாதாரமா வா ,இருக்காதுங்க .நான் வேணும்னா சரசா கிட்ட கேக்குறேன் " 
"
 :"கூறுகெட்டவளே நான்தான்   சொல்றேன்ல சரசா புருசேன் ஏகப்பட்ட கடன் முருகன் கிட்ட வாங்கிருக்கானாம் ,அதான் சின்னமா  கெழவி அவன்கிட்ட போய் கேட்டிருக்கு 

உன்னால எந்தகாலத்திலையும் இநத கடன திருப்பி குடுக்க  முடியாதுடா ,நீ அதுக்கு பதிலா பேசாம ஓம்  பொண்ண குடுத்துடு சொல்லிருக்கு 

அவனும் சரின்னுட்டான் ,குடிகாரப்பய " 
நான் என்னறையில் இருந்து வெளியில் வந்தேன் 

" நீ என்கூட வர்ரீயாடா  நாளைக்கு "  அப்பா

" இல்லப்பா  நா வரல " 

Read More

17.4.11

நித்யா -சில நினைவலைகள் -2

                  நித்யா மீதான வெறுப்பு கூடிகொண்டே தான் சென்றது ,அன்று அதிகாலையில் பால் வாங்க சென்றேன் ,அவள் வீட்டை கடந்து தான் செல்ல வேண்டும் ,நித்யாவின் அம்மா வாசலை பெருக்கி கோலமிட்டு கொண்டிருந்தார் ,திரும்பி வரும்போது கோலத்தை சிறிது காலால்  மிதித்து  அழித்தேன் சற்று தள்ளி  ,ஏதோ ஒரு வாகனத்தால் நசுக்க பட்டு இறந்து கிடந்தது ஒரு தவளை ,தூக்கினேன் ,ஓடு போல் இருந்தது , சுற்றும் முற்றும் பார்த்தேன் . நடு வீட்டில் விழுவதுபோல்  விட்டெறிந்தேன் ,திரும்பிப்பார்க்காமல் ஓடிவந்தேன் வீட்டிற்கு ,நெஞ்சு திக் திக்கென அடித்து கொண்டது ,யாரும் துரத்தி வருகிறார்களோ

ஆட்கள் அதிகமாக இருந்தால் இரண்டு டீமாக பிரிந்துகொள்வோம் 
"அண்ணே நானும் வெளையாட வர்றேனே " என்றான் குட்டி நித்யாவின் தம்பி
"உப்புக்கு சப்பாணியா  சேத்துக்குவோம்   கீப்பிங் நிக்கட்டும் " சேகர்


சரி என்று தலையாட்டினேன் வாடா வா "ரெண்டு டீம்ளையும் மூணுமூணு பால் போடுவோம் "

முதலில் சேகர் டீம் பேட்டிங் செய்தது .அவர்கள் ஆள் அவுட் ஆனபின் .குட்டிக்கு மூணு பால் போட வேண்டும் ,சந்தோசமாக பேட்டை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு  வந்தான் ,குமாரிடம் பந்தை பிடிங்கினேன் " நா போடுறேன் "
முதல் பந்திலே வேகமாக எறிந்தேன் 'புல் டாஸாக' குறிப்பாக 'அந்த'  இடத்தை நோக்கி " அம்மா " என்று இரண்டு கைகளையும் கவட்டைக்குள் அழுத்தி பிடித்து கொண்டு அமர்ந்தான்.பிளாஸ்டிக் பந்தானாலும் வலி அதிகமாகவே இருக்கும்.அனுபவித்திருக்கிறேன் .

" டே ஏண்டா இப்படி வேகாமா எருஞ்ச" ராஜா.
இவை எல்லாவற்றையும் மாடியில் இருந்து பார்த்திருப்பாள் போல
நித்யா வேகமாக வந்தாள் நைட்டியுடன் 'குட்டி குட்டி "
" ஏன் இப்படி வேகமா பந்த   எரிஞ்ச " என்றாள்  என்னிடம்
" ஆங் வெலயாட்டுன அடிபடத்தான் செய்யும் அப்பண்ணா வெலாடா வந்திருக்க கூடாது ,நாங்கலா  அவன கூப்டோம் அவனாதான் 'அண்ணே நானும் வர்றேனே நானும் வர்றேனேனு வந்தான் " என்று அவளை மேலிருந்து கீழாக கண்களை உருட்டி பார்த்தேன்
கணநேர முறைப்புக்கு பின் " எங்கப்பா வரட்டும் " என எச்சரித்தாள்
" ஒங்கப்பா வந்தா மட்டும் " என கூறுவதற்குள் குட்டியை கூட்டிக்கொண்டு சென்று விட்டாள்
" டே ஏண்டா இப்படி பண்ண பாவண்டா சுள்ளானா போயி " ராஜா
" டே நீ போய்டுவ அவுங்கப்பேன் எங்க தாத்தாட்ட போட்டு குடுத்துடுவாண்டா " குமார்
" விடுங்கடா பாப்போம் "
அன்று டியூஷனிலும் அவளை சீண்டி பார்க்க வேண்டும் என முடிவெடுத்தேன்
" டே ஆரிப்பு அன்னைக்க்கெனடானா போட்டு குடுக்கிற "
" எங்க வீட்டுக்கு வந்துடுவேன் சொன்னாங்கடா மிஸ்ஸு"
" ஆங் அப்படியா " கையை மடக்கி விரல் முட்டியால் நடு முதுகில் குத்தினேன் .சில நொடிகள் மூச்சை புடிக்கும் ,திருப்பி அடிக்க மாட்டான் என்று எனக்கு தெரியும் ,அப்படி அடித்தானென்றால் டியூஷன் விட்டு வீட்டிற்கு செல்கையில்


நித்யா புத்தக பையை ஓரமாக வைத்து விட்டு அமர்ந்தாள் பாவடையை மொட்டிங்காலுக்கு கீழ் இழுத்துவிட்டு கொண்டாள் .

" நாளைக்கு யார் யாருக்கு டெஸ்ட் இருக்கு "
" எங்க ரெண்டு பேருக்கும் டெஸ்ட் இருக்கு மிஸ் ஸ்கூல்ல " என்றான் ஆரிப் கையை தூக்கி கொண்டே
" ஒழுங்கா அவன் கூட ஒக்காந்து படி ,மார்க் மட்டும் கம்மியா வாங்கிட்டு வந்த அடி வெளுத்துடுவேன் " என்றார் மிஸ் என்னிடம். எல்லாம் அம்மாவால் வந்தது
" கண்ண மட்டும் விட்டுடுங்க எங்க வேணாலும் அடிங்க ,ஒழுங்காவே  படிக்கிறது இல்ல ஒரே சேட்டை " என்று ஆறாவது படிக்கும்போதே தள்ளி விட்டார் டியூஷன் மிஸ்ஸிடம் அன்று ஆரம்பித்தது . எட்டாவது வந்தும் தொடர்கிறது
நித்யா பிசிக்ஸ் புத்தகத்தை எடுத்து வேகமாக படிக்க ஆரம்பித்தாள் ,இப்போது ஜென்சி வேறு சேர்ந்திருக்கிறாள் ஒன்றாக ஒரே ஸ்கூலில் படிக்கிறவர்கள் ,அவ்வப்போது நித்யா அவள் காதில் ஏதோ கிகிசுக்கிறாள் ,சிரிக்கிறாள்  ,இன்னைக்கெதாவுது செய்யணுமே ,இவளை அழ வைக்கணுமே

" மிஸ் பாத்ரூம் போயிட்டு வந்துடுறேன் மிஸ்  " என்று கூறிவிட்டு வெளியில் வந்தேன் ,ஏழு மணி இருட்டு பரவி இருந்தது ,அவளது பாத அணிகலனை ஒன்றை தூக்கி குப்பை தொட்டிற்க்குள் எரிந்து விட்டு .

"சரி எல்லாரும் கெளம்புங்க " மிஸ்
" தாங்க்கியூ  மிஸ் "
 " மிஸ் என்னோட ஒரு செருப்ப காணோம் " நித்யாவின் குரல் கேட்டது ,நான் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்  ,அவளை அதற்க்கு பின் ஒரு மாதம் கழித்து தான் பார்த்தேன் ,அவளிடம் ஏதோ ஒரு மாற்றம்

                                                                                                               - தொடரும்


Read More

11.4.11

நித்யா-சில நினைவலைகள்

நித்யாவை நான் முதன் முதலாக பார்த்தது அப்படித்தான் ,என் நண்பன் குமார் வீட்டின் சுவற்றில் மூன்று ஸ்டும்புகள் கரியால் வரைந்து கிரிகெட் விளையாடி கொண்டிருந்தோம் ,நான்தான் பாட்டிங் .ஆப்ஸ்பின்னாக வந்த பிளாஸ்டிக் பந்தை அப்படி லெக்கில் வளைத்து சுழற்றி அடித்தேன்.அது அப்படியே காற்றை எதிர்த்து நாங்கள் பௌன்றிகளாக வகுத்த எல்லையை நோக்கி 'விர்ரென ' பறந்தது .ஆனால் காற்றின் போக்கில் திடீரென மாற்றம் ஏற்ப்பட பந்து 'ஏர் ஸ்விங்காகி ' ஓரமாக நடந்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் முதுகில் அடித்தது .செவென் சாட் ,எறிபந்து விளையாடும் போது பந்தினால் அடிபட்ட வலியை எனக்கு அது  உணர்த்தியது ,சிறிது நேரம் என்னையும் ,எங்களையும் உற்றுநோக்கியது அவள் கண்கள் ,நான் பக்கத்தில் சென்று மன்னிப்பு கேட்டு பந்தை வாங்கலாமா என்று நினைத்தேன் ,ஆனால் அதற்குள் அவள் பந்தை கூடைக்குள் எடுத்து போட்டு விட்டு நடக்க ஆரம்பித்து விட்டாள்,அப்படியே அந்த ஏரியாவின் சங்க தலைவர் வீட்டின் எதிர்த்தாற்போல் உள்ள வீட்டில் நுழைந்து மறைந்தாள்
" பந்த அடிச்சவந்தான் போய் வாங்கணும் " ராஜா
" சாக்கடைக்குள அடிசிருந்தாலாவுது சேகர் எடுத்திட்டு வருவான் ...என்னடா சேகர் " கார்த்திக்கை முறைத்தான் சேகர் ,கல்லெடுக்க குனிந்தான் 

" சார் .........அண்ணே என்று கூப்பிட நினைத்தேன் அங்கிள் .......சரியான செவுட்டு குடும்பமா இருப்பாய்ங்க   போல "

முண்டா பனியன் கைலியுமாக முன்புற வழுக்கையுமாக புல் புல் தார் மீசையுமாக  ஒருவர் காட்சி அளித்தார்
" என்ன ' என்றார் கடுப்பாக
" சார் பந்த எடுத்துவந்துட்டாங்க சார் "
" ஆங் மேல அடிச்சா ..........ஆள் பாத்து வெளியாட முடியாதா "
" சாரி சார் " என்றவுடன் குட்டி குட்டி என்று அழைக்க ஆரம்பித்தார் ,அவளின் செல்ல பெயராக இருக்கும் போல ,ஆனால் வந்ததோ ஒரு சிறுவன் ,அவளின் தம்பி போல

" இவனுக்கு கொஞ்ச நேரம் பால் போட்டுட்டு பால் வாங்கிட்டு போ "
கொஞ்ச நேரம் அதிக நேரமாகியது குட்டிக்கு உருட்டிவிட்டால்தான் அடிக்க தெரிந்தது ,சரியாக ஐந்து ஓவர் போட்டபின்தான் "குட்டி போதும்பா பந்த குடுத்துடுவோமா " அவன் சரியான தலையாட்டினான் ,கடைசியாக கேட்டை மூடி செல்கையில் நித்யா எட்டி பார்ப்பதை  பார்த்தேன்

ஆனால் அவளின் பெயர் நித்யா என்று அன்று மாலைதான் தெரிந்தது ,மாத்ஸ் டியூஷனில் ஆரிப்புடன் அமர்ந்து வெகு சிரத்தையாக மிஸ் குடுத்த கணக்கை காப்பி செய்து கொண்டிருந்தேன்

" ஆரிப் இது என்னடா பைவா எய்ட்டா" கோகுல் சாண்டல் பெளடரின் வாசம் அரை முழுவதும் நிறைத்ததால் நிமிர்ந்தேன் நித்யா சிவப்பு கலர் மிடி என்று நினைக்கிறேன்ஆங்காங்கே கண்ணாடி ஜொலித்தது ,ரெட்டை சடை , கூடவே மாத்ஸ் மிஸ், பின்னால்  புல் புல்தார் மீசை

" சரி வரேன் டீச்சர்  " என்று கிளம்பினார் புல் புல்தார் மீசை
" நீ அந்த பக்கமா போய் ஒக்காருமா " அப்படியே என்னிடம் வந்தார் நோட்டை வாங்கி பார்த்தார் " நீ இந்த கணக்க இன்னும் முடிக்கலையா " நறுக்கென்று ஒரு கொட்டு ஆஅ .நித்யா குனிந்து சிரிப்பதை பார்த்தேன் .அவளை அழவைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன் .அவளின் பக்கத்தில் புத்தம் புதிய ஜாமென்றி பாக்ஸ்,சிரிக்கிறியா

"டே சுகுமார் அண்ணகிட்ட குடுத்த வித்து குடுத்திடுவாருடா " ராஜா
" யாருட்டடா ஆட்டைய போட்ட " கார்த்திக்
" டே புத்தம் புதுசா இருக்குடா ஜாமென்றி பாக்ஸு" சேகர்
நான் எங்கே ஒளித்து வைக்கலாம் என்று சிந்தித்தேன்

அன்று ஆரிப் வழக்கமாக அமரும் இடத்திலிருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்தான்
" இங்க வாடா "
" வேணாம் வேணாம் "
" ஏண்டா " டியூஷன் மிஸ் வர மௌனமானேன் ,கையில் ஸ்டீல் ஸ்கேல் .
" நித்யாவோட புது ஜாமென்றி பாக்ஸ்சை யாரு எடுத்தது " அனைவரும் அமைதியாக இருந்தனர்
" எடுத்தது யாருன்னு எனக்கு தெரியும் ,உண்மைய ஒத்துகிட்டா நல்லது " நித்யா நிறைய அழுதிருக்கிறாள் ,முகம் வீங்கிருந்தது ,மனத்திற்குள் சந்தோசத்தை உணர்ந்தேன் ,படிக்கிற பாவனையை ஏற்படித்தி கொண்டேன்
சுளீர் சுளீர் சுளீர் சுளீர்
" ஜாமென்றி பாக்ஸ் எங்க ம்ம்ம் சொல்லு "
" ஸ் ஸ் ஸ் ஸ் ஆஅ மிஸ் நா எடுக்கல மிஸ் "
" ஆரிப் சொல்லிட்டான் எங்க வச்சிருக்கேன் சொல்லு இல்ல ஒங்க அம்மா கூட்டிட்டு வா போபோ "
" மிஸ் நெஜமா எடுக்கல மிஸ் "
" பொய் சொல்ற பொய் சொல்ற " சுளீர் சுளீர் சுளீர்
கண்ணீரை கட்டு படுத்த நினைத்தாலும் " போ எங்க வச்சிருக்க போ எடுத்துட்டு வா " கண்ணீரை துடைத்து கொண்டே வெளியேறினேன்
ஜாமென்றி பாக்ஸ்சை  நித்யாவிடம் நீட்டினேன் ,வாங்கிகொண்டாள்

" திருடவா செய்யற ,மொட்டிங் கால் போட்டு படி அப்பதான் உனக்கு புத்திவரும் ,எல்லாம் சரியா இருக்காமா "
" மிஸ் டிவைடர் இல்ல " திரும்பவும் ஸ்கேல் " மிஸ் நா அதில இருந்து எதுவும் எடுக்கல " என்றேன்

" மிஸ் மிஸ் உள்ள இருக்கு மிஸ் " உஸ் அப்பாடி அடிப்பட்ட இடம் வலித்தது கூடவே மொட்டிங் கால் வேறு ,ஆரிப்பை பார்த்தேன் அவன் என்னை கவனித்ததாகவே தெரியவில்லை ,நித்யா என்னை பார்த்தாள் ,முறைத்தேன்

                                                                                                                            ---- தொடரும்

டிஸ்கி : சிறுகதையாகத்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் தொடர்கதையாவிட்டது ,மன்னிக்கவும்


Read More

9.4.11

மாப்பிள்ளை -திரைவிமர்சனம்

 மாப்பிள்ளை -திரைவிமர்சனம்

"அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க "

நேற்று மாலை காட்சியாக மாப்பிள்ளை படம் பார்க்க நேர்ந்தது ,டிக்கெட் டின் விலை நூறு ரூபாய் ,நானும் எனது நண்பரும் சென்றோம் ,நாங்கள் மிக சீக்கிரமே சென்று விட்டோம் போல ,அரங்கில் கூட்டமே இல்லை ,பின்னர் சிறு துளி பெரு வெள்ளமாக கூட்டம் சேர ஆரம்பித்தது ,முதலில் விளம்பரமாக போட்டு தாளித்தார்கள் ,சிறிது நேரத்தில் தேசிய கீதம் இசைக்க பட போவதாகவும் எல்லோரும் எழுந்து நிற்க்கும்மாறு அறிவுறுத்த பட்டது ,சிலர் எழுந்திருக்கவில்லை
                                                             

 மாப்பிள்ளை என்ற எழுத்து பாறையை மடார் மடார் என்று உடைத்து கொண்டு வந்தது,படம் தொடங்கியது ,முதல் காட்சியில் விவேக்கை காட்டுகிறார்கள் ,ஒரு கால் மணி நேரம் அவரைத்தான் காட்டினார்கள் நமீதா ரசிகர் மன்ற தலைவனாக , அதன் பிறகு தனுஷ் ஆர்பாட்டம் இல்லாமல் முருக கடவுளின் அறிமுக பாடலோடு அறிமுகமாகிறார் ,ஆனால் அசட்டு தனமான பன்ச்சு டயலாக்கள் நிறைய ,  பொதுவாக தமிழ் படங்களில் அறிமுக பாடல்களில் முருக கடவுளையே அதிகமாக பயன்படுத்துகிறார்கள் ,ஏன் விநாயகரை பயன் படுத்த வேண்டியதானே , சில காட்ச்சிக்கு பிறகு நமது நாயகி ஹன்சிகா மோத்வாணி அறிமுகம் (குட்டி குஸ்புவாம்ல)
                                                          

நல்ல 'பிரெஷ் பீசான ' கொடைக்கானல் ப்ளம்ஸ் பழம் போல் இருக்கிறார் ,கொலு கொலு மற்றும் கொல கொல வென இருக்கிறார் ,இதே ரீதியில் போனால் சொத சொத வென ஆகி விடுவார் . தனுஷை விரட்டி விரட்டி காதலிக்கிறார் (கடுப்பா இருக்கு )
                                                              
அவர் விலகி செல்கிறார் ,சில பல மொக்கை காட்சிகளுக்கு பிறகு தனுஷ் இவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் இவர்களின் காதலுக்கு விவேக் மறைமுகமாக பயன்படுத்த படுகிறார் ,விவேக் இந்த படத்தில் வடிவேலை போல் நன்றாக அடிவாங்குகிறார் ,வடிவேல் பிரச்சாரத்திற்கு சென்று விட்ட காரணத்தினால் அவர் வேலையை இவர் செய்கிறார் போலும் ,

இந்த நேரத்தில் வெளிநாடுக்கு சென்று திரும்பி வருகிறார் ,'டெலபோன் மணி போல் சிரிப்பவள் இவள ' கதாநாயகிக்கு அம்மாவாம் (பாட்டி என்று கூறி இருக்கலாம் ) தயாரிப்பாளாருக்கும் மேக்அப் மேனுக்கும் பிரச்சனையை என்று நினைக்கிறேன் .மனிதர் மனிஷா கொய்ரால முகத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார் . இவர்களின்காதலை  ஏற்கிறார் ,பின்பு மறுக்கிறார் ,அப்போது பிளாஷ் பேக்  என்று ஒன்று காட்டினார்கள் ,தனுஷை பீடியுடன் ,ஐயோ கொடுமைடா சாமி 

தனுஷ் உங்க மாமனாரு கிட்ட ட்ரைனிங் எடுத்து இந்த படத்தில் நடித்திருக்கலாம் ,அந்த பழைய மாப்பிள்ளையில் உங்க மாமனாரு அப்படியே சிகுரெட்டை நாக்கில் வைத்து மடித்து ,உள்ளே செலுத்தி ,மீண்டும் வெளியை எடுத்து புகையை விடுவார் ,அட அட 

தனுஷ்க்கு பீடியை கூட புடிக்க தெரியவில்லை ,அப்படியே கும்பகோணம் புது பஸ்ஸ்டாண்டில் ஒரு குத்தாட்டம் ,கூடையுடன் ஒரு குத்தாட்ட நடிகை எசகு பிசகாக உடை அணிந்து கொண்டு வருகிறார் மற்றும் ஆடுகிறார் ,தனுஷ் ஊரில் சில பிரச்சனைகள் காரணமாக சென்னை வருகிறார் .வந்து அக்கா வீட்டில் தங்குகிறார்  

அந்த பிளாஷ் பேக்கில் தனுஷின் அப்பாவான 'பட்டி மன்ற ராஜா' நெஞ்சு வலி வருவது போல் காட்டுவார்கள் (ஆத்தாடி ) 
ஆங் அப்படியே முழு கதையை சொல்லுவேன் நெனச்சீங்களா ,போயி தியேட்டருல படத்த பாருங்க ,நானே கடுப்புல இருக்கேன் ,பழைய 'மாப்பிளையை ' பத்து தடவ போட்டாலும் ஒக்காந்து பாக்காலாங்க ,அந்த 'மூக்கு மேல வெரல வச்சுட்டா ',சீன், ஒரு காட்சியில் கூட சிரஞ்சீவி வருவார் ,வந்து ஒரு பைட்டை போட்டு விட்டு செல்வார்    இந்த புது 'மாப்பிளைய' ம்ம்ம்ம்ம்ம்ம் ,அந்த ஒரு மாப்பிள முறுக்கு இல்ல

ஒரு காட்ச்சியில் தியேட்டர் விழுந்து சிரித்தது
விவேக் தனுஷின் தங்கையிடம் இரண்டு இழுப்பு இழுக்கிறியா  என்பார்

மனோபாலாவை நித்தியானந்தா மேட்டருக்கு இல்லை நித்தியானந்தா காரெக்ட்டேருக்கு


பாதி டவ்செர் கலண்ட நிலையில் இருக்கும் ,தேர்தலுக்கு பிறகு ஒரு வேளை தி .மு.க வெற்றி பெற்றால் மீதியையும் கலட்டி விடுவார்களே என்ற பயத்தில் இருக்கும் அதாங்க ,      நம்ம சின்ன டாக்டர் ஒரு படத்தில் கூட மாமியாரின் முதுகில் சோப்பு போடுவார் ,ஆனால் தனுஷ் ஒரு படி மேலேயே போய் பின் புறமாக வந்து மாமியாரை கட்டி  அணைப்பார் ,பின்ன மனைவியுடானான சாந்தி முகூர்த்தத்தை தகர்த்தால் அப்படித்தான் செய்வார்கள்

இடைவேளைக்கு பின்  மாமியாருக்கு  மருமகன் ஆப்பு அடிக்கிறார் ,மாமியார் மருமகனுக்கு ஆப்பு அடிக்கிறார் ,நாம் ஆப்பாகி அமர்ந்திருக்கிறோம் .கிளைமேக்ஸ்சில் வில்லன் கூட காமெடி அடிக்கிறார்

"அடியாள் இல்லாத வில்லன் ஆயட்டேண்டா "
                                               
 

மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை துப்பின கருவப்பிள்ளை 

இந்த படத்துக்கு நூறு ரூவா டிக்கெட்டு ,இடைவேளைல பிங்கர் சிப்ஸ்  வித் ஜாஸ் அறுவது ரூபா ,ஒரு வெண்ணிலா கப் ஐசு  நுப்பத்தஞ்சு ரூவா ,வண்டி டோக்கனு அஞ்சு ரூவா 
மொத்தம் எரநூறு  ரூவா தண்டம்
                                                          

டிஸ்கி : நம்ம ப்ளோகில் எப்பவும் ஹீரோயின் படம் மட்டுமே அனுமதிக்க படும் ,ஹீரோ படம் அனுமதி கிடையாது ,இல்லை நாங்க ஹீரோவை பார்க்க வேண்டுமென்றால் அப்படியே மேலே சென்று  வலது புறம் பார்க்கவும்

ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும்
Read More

6.4.11

பீடி குடித்த வரலாறு

                          இழுத்து மூடியிருந்த போர்வையை வெறுப்புடன் விலக்கி "என்ன " என்றேன் என் அம்மாவிடம் 
" சனியனே எந்திரிச்சு தொல காப்பி தண்ணி ஆறி அலமலந்து போச்சு , ஒழுங்கா குடுச்சிடு ஓயாமலாம் சூடு பண்ணி குடுக்க முடியாது "
காலை நேரக்கதிரவன் ஜன்னல் வழியாக உள்ளே வந்து என் கண்ணில் ஒளியை அடித்து "அண்ணே எந்திரிங்கன்னே" என்றான் ,அப்படியே வலது பக்கம் திரும்பி பார்த்தேன்  சிறிது தூரத்தில் மெதுவாக  ஆடிகொண்டிருந்த தூளியில் அக்கா மகன் விக்னேஷ் ஒன்னுக்கு இருந்துது தரையில் உலக வரைபடம் போல் காட்சி அளித்தது ,"ஏ அங்கயர்க்கண்ணி ,அங்கையர் ,அங்க பாரு ஓம் மவன் மூத்திரம் பேஞ்சுவச்சிருக்கான் ,போய் வேற ஜட்டி மாத்தி விட்டு தூளில தூங்க போடு " என்றாள் அம்மா ,இவனுக்கு வேற வேலக்களுதையே இல்ல ,தொட்டில போட்டோனதான் மோண்டுவைப்பான் " என்ற வாறு அடுக்களைக்குள் இருந்து வந்தாள்அக்கா தொட்டிலிக்குள் எட்டி பார்த்தாள் ,விக்னேஷ் சிரித்திருப்பான் போல "  ச்சி சிப்பானிய பாரு நாயி தூங்கிறமாதிரி நடிக்கவா செய்ற " என்று கூறிக்கொண்டே குழந்தையை தூக்கி முத்த மழை பொழிந்தாள்.  இரண்டாம் பேரு காலத்திற்கு வீட்டிற்கு வந்து இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிறது ,அவ்வப்போது மாமா வந்து பார்த்து விட்டு செல்வார் ,அக்காவிற்கு மூத்தது மகள் ,அதோ அந்த கதவின் தாப்பாளை போட்டு ஆட்டி கொண்டிருக்கிறாள் ," தனுமா தாப்பாளை ஆட்ட கூடாது " என எச்சரித்தாள் அக்கா ,அப்பனா எனக்கு பேனா வேணும் என அடம்பிடித்தாள் , " "சின்ன மாமாட்ட  போய் கேளு ,குடுப்பான் ,தாப்பாளை ஆட்ட கூடாதும செல்லம் ,வீட்டுக்கு ஆகாதுமா " என்று கூறியவாறே திரும்பினாள் என் அம்மா ,நான் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு 
" டே நீ இன்னும் எழுந்திருக்கலையா ,எந்திர்டா " 
நான் எழுந்தமர்ந்தேன் ,காப்பி தண்ணியை எடுத்து குடித்தேன் ,ஆறிப்போன சுடுதண்ணி போல் இருந்தது ,அப்பா எங்காவது தென்படுகிறாரா என்று பார்த்தேன் ,இருந்திருந்தால் ,எப்படித்தான் இந்த ஊத்தவாயோட காப்பி குடிக்கிதோ மூதி என்றிருப்பார் 

" எம்மோய் நீ சொல்றது கரக்ட்டுதான் ,காப்பி 'தண்ணி' சூப்பர் ,அதில் உள்ள நக்கலை புரிந்து கொண்டாள் போல அம்மா 

" ஏன்டா பேச மாட்ட வேள வேளைக்கி வடிச்சு கொட்ரேன்ல ,நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலையும் பேசுவ ,உனக்கு எட்டு குத்துக்கு எலையவேன் அவன் வேலைக்கு போய் சம்பாரிக்கிறான் " 
தம்பியை பார்த்தேன் ,அவன் அக்கா மகளோடு விளையாடி கொண்டிருந்தான் 
எனக்கு கோவம் தலைக்கு சுள்ளென்று ஏறியது ,அப்படியே காப்பி குடித்து முடித்த டம்ப்ளரை வீசி எறிந்தேன் ,அது டங்கு டங்கென்று ஓசை எழுப்பி ,சுவற்றில் மோதி ,பறந்து போய் ,தம்பி அயர்ன் செய்து வைத்திருந்த சட்டை மீது விழுந்து .காப்பி ஆங்காங்கே சிதறியது ,நான் கைலியை மடித்து கட்டியவாறு வெளியில் வந்தேன் .


பாய் டீ கடையில் இரண்டு பேர் டீ குடித்து கொண்டிருந்தனர் ,சோமு கட்ட பெஞ்ச்சில் அமர்ந்து தினத்தந்தியை தீவிரமாக வாசித்து கொண்டிருந்தான் ,நான் பின்புறமாக சென்று அப்படி என்னதான் வாசிக்கிறான் என்று பார்த்தேன் ,அவன் வாசிக்கவில்லை ,ரசித்துகொண்டிருந்தான் ,இளம் நடிகையின்  இடையை இன்ச் இன்ச்சாக ,முதுகில் ஓங்கி அறிந்தேன் ,திடுக்கிட்டு திரும்பியவன் 
                                            


"நீ தான சு....... "
"தம்பி காலைல பொம்பளைங்க காப்பி வாங்க வருவாங்கப்பா ,கொஞ்சம் பாத்து பேசுங்க "
"சரி விடுங்க பாய் பொம்பளைங்கள பாத்தே  பேசிடுவோம் "
பாய் தலையில் அடித்து கொண்டு "கொஞ்சம் உள்ள தள்ளியாவுது ஒக்காந்து பேசுங்கப்பா "
"என்னடா ஓம் மாப்ள டோப்பு கேசுல உள்ள போய்ட்டான் போல ,எப்படி சிக்குனான் ,இல்ல ஒழுங்கா மாமாக்காரைங்களுக்கு மாமுல் குடுக்கலையா  "
" அதலாம் ஒழுங்காத்தான் குடுத்தாய்ங்க ,ஏதோ பிரச்சன போல அதான் போட்டு பார்த்துட்டாய்ங்க "
"சரி எப்படி ஓம் மாப்ள செண்ட்ரல் ஜெயிலுக்குலாம் சப்பளை பண்ணா "
"ஏ வெளியகிளிய சொல்லிடாதடா  ,ரப்பர் பந்து இருக்குல அத கிழிச்சு உள்ள பொட்டணத்த வச்சு காம்ப்பவுண்டு பக்கத்துல போயி விட்டெருஞ்சுட்டு ஓடிடுவாய்ங்க ,இது போக ஏகப்பட்ட வழில கொண்டுபோவாய்ங்க "
"மூளக்காரண்ட ஊம் மாப்ள " 
"பாய் மூணு பில்டரு" என்று சத்தம் திரும்பினேன் ,குமார் நின்றுகொண்டிருந்தான் 
"டே பேக்கூ............எங்க கூடத்தானட கைலிய கட்டிக்கிட்டு சுத்திக்கிட்டிருந்த ,இப்ப பாரு பாண்ட்டு ,டையி ,ஷூவு , இதலாம் பாக்கணும்னு எங்க தலைஎழுத்து " என்றான் சோமு 
"டே அதுக்கெல்லாம் ஒரு நேரம் வரணும்டா "
"ஆனா உனக்கு எந்தகாலத்திலையும் நேரம் வரும்னு நெனச்சிடாத " என்றான் என்னிடம் 
" ஒரு தம்ம  வாங்கி குடுத்துட்டு ஓம் பவுச காட்டுறியா "
" என்ன மாப்ள கோவிச்சுகிட்டியா ,எங்க கம்பெனில ஒருத்தன் தெறிச்சு ஓடுறான் ,நீ அந்த எடத்துக்கு வந்துடு நா ஒன்னைய சேர்த்து விடுறேன் ,ஆனா  நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும் "
" என்ன வேல " 
"ஆங் அவுங்க மேனேஜருக்கும் ரிசப்சனிஸ்ட்டுக்கும் வெளக்கு புடிக்கனுமா " சோமு 
" டே மாப்புள அவன் கெடக்காண்ட ,என்னைய நம்புடா ,நல்ல வேலடா "
" என்னா  உதவி பண்ணனும் "
" ஒன்னும் இல்ல உங்க வீட்டு மாடில டெய்லி காலைல ஏகப்பட்ட புறா வரும்னு சொல்லுவியே ,அதுல ரெண்ட புடிச்சு எனக்கு குடு "
"ஏன் ஊம் ஆளுக்கு புறாவிடுதூது விட போறியா " சோமு 
"இல்ல அவளுக்கு நாளைக்கு பெறந்தனாலு வருது ,ஏதாவுது கிப்ட்டு பாக்சுக்குள்ள புறாவ அடைச்சு வச்சு குடுத்தோம்னா ,அவ ஓபன் பண்ணி பாத்தான்னு வையேன் ,புறா பறந்தோடும் ,சூப்பெரா இருக்கும்ல "
" ஏன்டா உங்களுக்கு இந்த மானகெட்ட பொழப்பு ,ஒங்க லவ்வுக்கு புறாவ  போயி ஏன்டா இந்த பாடுபடுத்திறீங்க ,டே சங்கரு வேணாம்ட ,இந்த வேலைய பார்த்துதான் நீ அந்த வெளக்கு புடிக்கிற வேலைக்கு போகனுமா " சோமு 
"சோமு வேணாம் சும்மாரு , இது எனக்கு அவனுக்கு உள்ள டீலிங்கு"
"போகங்கடா பொசகெட்டப்.........."
"டே அவன் போகட்டும் விடுடா ,நீ என்ன சொல்ற "
"சரி புடிச்சு தர்றேன் வேலை கண்டிப்பா கெடச்சிடும்ல  " 
"கண்டிப்பாடா மாப்புள "
"வேலைக்கு போகலைனா பெத்தவைங்கள விட சொந்தக்காரைங்க ரொம்ப கேவலபடுத்துராய்ங்கடா, அன்னைக்குலாம் ஒரு மாமேங்காரேன் என் தம்பிய வந்து மாப்புள கேக்குராய்ங்க "
வீடு வந்தது ,"சரி நீ போயி புடுச்சு வையி ,நா இப்ப வந்துடுறேன் ,அப்படியே நாம ரெண்டு பெரும் சேந்து போவோம் "
ஒரு நீண்ட கயரை எடுத்து கொண்டேன் ,அதன் முனையில் ஒரு சிறு குச்சியை கட்டினேன் ,ஒரு மூங்கில் கூடையும் தட்டு நிறைய கம்பும் எடுத்து கொண்டேன் ,வீட்டில் விநோதமாக பார்த்தார்கள் ,மாடிக்கு விரைந்தேன் ,தட்டில் இருந்த தானியங்களை ஒரு ஓரமாக கொட்டினேன் ,அப்படியே அதை கூடையை வைத்து சாய்வாக மூடி கயிற்றில் கட்டிய குச்சியால் அண்ட குடுத்தேன் .புறா வந்து தானியங்களை உண்ணும் பொழுது ,அண்ட குடுத்த குச்சியை கயிறு மூலமாக இழுத்துவிடுவேன் ,உடனே மூங்கில் கூடை வேகமாக மூடி விடும் ,புறா சிக்கி விடும் 
காத்திருந்தேன் ஒரு கருப்பு புறா வந்தது ,சரியாககூடைக்குள்  உள்ளே நுழைந்தது . சில வினாடிகளில் கயிறை இழுத்தேன் ,புறா சிக்கியது 
அடுத்து ஒரு வெள்ளை புறா ,அதே போல் சிக்கியது ,இரண்டு புறாவையும் ஒரு கூண்டுக்குள் அடைத்தேன் ,புறாக்கள் பரிதாபமாக நோக்கியது ,கவலைப்படாதீர்கள் நாளை விடுதலை கிடைத்து விடும் 
சரியாக ஒன்பது மணிக்கு குமார் வந்தான் ,நான் கிளம்பி தயாராக இருந்தேன் ,புறாவை பார்த்தான் "மாப்புள கலக்கிட்டடா ,சரி கெளம்பவா "
"டே என் ஆளு எனக்காக வெயட்டிங்க்டா ,நா ஆபீஸ் போயிட்டு உனக்கு கால் பண்றேன் வந்துடு " 
பாக்கெட்டில் பத்து ரூபாய் இருந்தது .சிகுரெட்டும் டீயும் அடிக்க வேண்டும் போல் இருந்தது ,வேண்டாம் ,ஒரு வேளை குமார் போன்செய்து எவருடைய நம்பராவது குடுத்து பேச சொன்னான் என்றால் ,ஒன் ருப்பீ காயின் போன் இருந்து பேச வேண்டும் ,அது நன்றாக இருக்காது ,பேசாமல் இந்த பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து விடுவோம் ,ரீசார்ஜ் செய்துவிட்டு காத்திருந்தேன் ,நேரம் நகன்று ஓடியது ,சரி நாமே அழைத்த் பேசுவோம் 


பூம் பூம் பூம் பூம் பூம் 


"டே என்னடா கால் பண்றேன "
"ஆங் சொன்னேன்ன்ல .வேலைக்கா ,அந்த கூ ....... யான் வேலையைவிட்டு இப்போதைக்கு நிக்க மாட்டேன்ட்டான் ,நா உனக்கு வேற வேல பாத்து சொல்றேன்........ ஆபீஸ்ல இருக்கேன் வைச்சுடவா .அப்பறம் கூப்பிடுறேன் ம்ம் "


" டே டே "
ஒரே எரிச்சலாக இருந்தது .அப்படியே பாய் கடைக்கு சென்றேன் ,இந்தாளு சிகுரெட்டு கடன் குடுக்க மாட்டானே ,என்ன செய்யலாம் ,தம் அடிக்கணும் போல இருக்கே .
"பாய் ஒரு டீ போடுங்க பாய் " என்றவனை பார்த்தேன் ,முண்டா பனியனும் ,அருணா கயறின் உதவியில் இழுத்து கட்ட பட்ட கைலியும் ,வெளியே தெரிந்த டவுசெரும் 
அந்த இத்து போன டவுசரில் இருந்து ஒரு கட்டு பீடியை எடுத்து அதில் ஒன்றை எடுத்து பற்றவைத்தான் 


"அண்ணே ஒரு பீடி குடுங்கண்ணே " என்றேன் 

Read More

1.4.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -5

இனிய நட்புகளுக்கு வணக்கம்

                                    இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி எட்டியுள்ளது ,ஆனால் மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் (17 சதவிகிதம் )குறைந்துள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது 

                                         அடுத்து அம்மாவா ,அய்யாவா (மன்னிக்கவும் ) தாத்தாவா என்று  தீர்மானிக்கும் அதிகாரம் நம்மிடம் இருக்கிறது .முதலில் எங்கள் தொகுதியில் தலைக்கு ஐய்யாயிரம் குடுப்பார்கள் என்றார்கள் ,அதன் பிறகு இரண்டாயிரம் என்றார்கள் .இப்பொழுது வெறும் ஆயிரம் ரூபாய் என்கிறார்கள் ,ஒரே குழப்பமாக இருக்கிறது .அவ்வபோது இரவு பத்து மணிக்கு மேல் பவர் கட் செய்யப்படுகிறது ,அந்த நேரத்தில் அரசியல் அதிகாரிகள் மூலமாக பணம் ஈயப்படும் என்றார்கள் .இன்று வரை வந்த பாடு இல்லை .சிலர்  நம் தொகுதியில் காங்கிரஸ் நிற்பதால் பணம் எதிர்பார்க்க முடியாது என்கின்றனர் ,பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டு பழகி விட்டது ,என்ன செய்வது என்று தெரிய வில்லை

சோப்பு :

ரிஷிவந்தியம்:""தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னைகளுக்காக பாளையங்கோட்டையை தவிர, அனைத்து சிறைகளுக்கும் சென்றுள்ளேன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்

நானும் அரசியல் ரௌடிதான் ,ஜெயிலுக்கு போயிருக்கேன் ஜெயிலுக்கு போயிருக்கேன் 
        
ஐயா தமிழ்குடிதாங்கி சும்மா மைக் கெடச்சிடுச்சுனுட்ரதுக்காகலாம் எதையாவது பேசக்கூடாது ,வேற ஏதாவுது பிட்ட போடுங்க 

               தமிழகம் பல மாநிலங்களுக்கு முன்னோடி : கனிமொழி எம்.பி.

                  
அப்படிங்களா இருக்கும் இருக்கும்(ஆமாங்க இந்த ராசா .........சரி எதுக்கு வம்பு  )

சீப்பு :
உங்களலாம் பார்த்தா பாவமா இருக்கு 

   ங்கொய்யால வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா

                           இந்தாளுக்கு இப்ப பாத சனி நடக்குது. ஒரு வழி பண்ணாம விடாது. தப்பு தப்பாதான் பேச சொல்லும். நடக்க சொல்லும்.


                             

கண்ணாடி :
          

பொதுநலன் :

                        அவசரமாக பணம் எடுப்பதற்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்  சென்றேன் ,கார்டை உள்ளே செலுத்தி காத்திருந்த நேரத்தில் பின்னாலே திரும்பி  பார்த்தேன் ,வெளியில் ஒரு காலேஜ் போகிற  வயதில் பெண் நின்று கொண்டிருந்தாள் .பணம் வருவதற்குள் கொஞ்சம் ஸ்டைல் காட்டுவோமே என்று தலை முடியை கோதினேன் அப்படி இப்படி என்று சீன் போட்டு திரும்பி பார்க்கிறேன் அந்த பெண் இல்லை ,சரி பணத்தை எடுப்போம்  ,அப்படியே கீழே பார்த்தேன் பணம் வெளியில் வந்திருந்தது ,பணத்தை எடுக்க கையை கொண்டு சென்று தொடத்தான் செய்திருப்பேன் .பணம் பழைய படி உள்ளே சென்று விட்டது ,மீண்டும் கார்டை உள்ளே செலுத்தி அக்கௌன்ட் கணக்கை பார்த்தால் ,பணம் பத்தாயிர ரூபாய் குறைந்ததாக காட்டுகிறது ,பிறகு வங்கி அதிகாரியிடம் முறையிட்டேன் ,அவர் என்னமோ நான் லோஓஓஓஓ ன் கேட்டு வந்ததுபோல் முறைத்தார் .பணத்தை திரும்ப பெறுவதற்கான  வழிமுறைகளை கூறினார் .பணம் திரும்ப பெறுவதற்கு பத்து நாள் ஆகும் என்றார் 

பத்து செகண்ட்ல பத்தாயிர ரூவா பணம் போச்சே 

நீதி :ஏ.டி.எம் லிருந்து பணம் வந்த 30 செகண்டிற்க்குள் எடுத்து விட வேண்டும் ,இல்லை என்றால் பணம் பழைய படி உள்ளே சென்று விடும்

-------------------------------------------------------------------------------------------------------------

சிவகாசியில் நண்பர் ஒருவர்  ஹோம் அப்லையன்ஸ் பிசினஸ் செய்து வருகிறார் ,வீடு வீடாக சென்றும் விற்ப்பார் , "உங்ககிட்ட வாங்குனா காசு அவுங்ககிட்ட வாங்குனா ஓசி " என்று விரட்டுகிறார்களாம் அந்த மக்கள்

இப்படி ரெண்டு பேரும் பொழப்புல லாரிலாரியா மண்ணள்ளி கொட்டிட்டாங்களே என்று புலம்புகிறார்

மக்களோட குடிய கெடுக்கிறதே  இவுங்களுக்கு வேலைய போச்சு

-------------------------------------------------------------------------------------------------------------


பூனம் பாண்டே


ஒரு வரலாற்று செய்தி :


                         இந்தியா  உலககிண்ண போட்டியில் கிண்ணத்தை வென்றால் மேலே இருப்பவர் 'ஷேம் ஷேம் பப்பி ஷேமாக ' ஓடத்தாயராம் 
ஜெயிப்பாய்ங்களா?
                                                  
                      
                                                                                         
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena