வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

14.11.12

போடா போடி


."ஸ்ட்ரிக்ட்லி பார் யூத்ஸ் " டைப்  படம் ,படம் முழுவதும் இளமை துள்ளல் ,முக்கால் வாசி அரங்கமே நிரம்ப படம் தொடங்க நேரமாகியது ,அதிலும் பாதி பேர் தல 'ரசிகர் போல,மனிதக்கடவுள் அஜித் ,அல்டிமேட் ஸ்டார் அஜித் , வாழ்க வாழ்க, இதில் ஹைலைட்டாக டாக்டர் அஜித் குமார் என்று ஒரு பிரகஸ்பதி கூறினார் ,அஜித் எந்த பல்கலைக்கும் சென்று காசு குடுத்து வாங்கியதாக செய்தி வரவில்லையே என்று யோசிக்க முனைந்த போது ,அடுத்த நொடியே அதற்க்கான காரணம் தெரிந்தது ,டாக்டர் அஜித்குமார் ,நர்ஸ் வி............,பெசிகாகவே நான் ரொம்ப நல்லவன் ,ஆனா இந்த ஒரு விசயத்துல மட்டு தரடிக்கெட் ரேஞ்சுக்கு போறோமே ,மனம் சில நேரங்களில்  உறுத்தத்தான் செய்கிறது 
                                                             
 " கொழந்தைக்கு அவ அம்மானா நான் அப்பா .கொழந்தைக்கு அவ தாய்ப்பால் குடுத்திருக்கலாம் ,ஆனா நான் என் குழந்தைக்கு குண்டி கழிவி விட்டிருக்கேன் "என படம் முழுவதும் சிம்புவின் அலப்பறை பல  ,கலாச்சாரத்தை காப்ப்ற்றுகிறேன் பேர்வழியென்று கணவனே மனைவியுடன் நடன நிகழ்ச்சியில் ஆடுவதுதான் "போடா போடி " யின் ஒன்லைன்

,கதைப்படி'போடா போடி'இருவரும் லண்டன் வாழ் தம்ளர்கள்\\/// ச்ச் ச்சே இது தமிழர்கள்  இரண்டு மூன்று சந்திப்புகளிலேயே ,காதல் என தொடங்கி ,கல்யாணம் முடிந்து , மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுப்பது ,(யூடுபில் ஏத்தவா போகிறேன் என்று நக்கல் வேறு) ,இடைவேளை ,குழந்தை பிரிவு ,ஊடல் பிரிவு ,மீண்டும் இணைதல் ,மீண்டும் பிரசவம் ,ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் அபா ,இந்த படத்தை எப்படி அனுகுவதென்றே  தெரியவில்லை ,கலாச்சரீதியாக அணுகுவதா ?ஆனால் கலாச்சாரத்தை பற்றி சிம்பு  வசனமாக பேசுவதுதான் ,பாஸ் தாங்கள் அதற்க்கு இந்த படத்தில் விரலை வைத்து வித்தையாவது  காட்டிருக்கலாம்  ,பொறுத்திருப்போம் ,சிம்புவிற்கு தோதாக வசதியான கேரக்டர்தான் ,கூடவே நடனம் வேறு ,பிரித்து மேய்ந்திருக்கிறார் ,சரத்குமார் மகள் வரலட்சுமி  ,வித்தியாசமான  குரல்,நடிப்பு ,காதல் மோதிரத்தை கழிவறைக்குள் போட்டுவிட்டு கையைவிட்டு தொழாவி எடுத்து நம்மை பரிதாப கொள்ளவைக்கிறார்  ,இவரின் நடனத்திறமைக்காகவே தேர்வு செய்யபட்டிருக்கிறார் போல  , என்ன வாய்தான் கொஞ்சம் அகலம் .இருவருக்குமான வேதியியல் நெருக்கம்  நன்றாக  இருக்கிறதுசிம்புவின் சித்தப்பாவாக கணேஷ் வழக்கம்போல் ,திக்குஇல்லாமல்  அலையும் கதையில் ஓரளவுக்கு நம்மை சிரிக்கவைக்கிறார் ,நீண்ட கால தயாரிப்பில் இருந்ததாலோ என்னவோ இயக்குனருக்கு சலிப்பு தட்டிவிட்டது போல ,பரதநாட்டிய தாரகை சோபனா எதற்கென்றே தெரியவில்லை

லவ் பண்ணலாமா வேணாமா ,லவ் பண்ணலாமா வேணாமா ,லவ் பண்ணலாமா வேணாமா ,(இந்த படத்த தயாரிக்கலாமா வேணாமா ,இந்த படத்த தயாரிக்கலாமா வேணாமா )மிஸ்டர் தயாரிப்பாளர்  இப்படித்தான் யோசித்திருப்பார் ,பாடல்கள் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது ,தனியாக கேட்பதற்கு நன்றாக இருக்குமா என்று தோன்றவில்லை ,பின்னணி இசை பரவாயில்லை ,இதே ரீதியில் போனால் சிம்பு ,பிரசாந்த் ,ஹம்சவிருதன் வகையறாக்களுடன்  இனைந்து விடுவார் என்பது உறுதி .

மொத்தத்தில் போடா போடி -நடனநிகழ்ச்சி 
Read More

6.11.12

I-T ACT SECTION 66 A - தனி மனித உரிமைகளை பறிக்கிறதா???.


முன் குறிப்பு : சமீபத்தில் இணையத்தில் கருத்து தெரிவிப்பவர்களின் மீதான, சில நிகழ்வுகளுக்குப் பிறகுதான் இந்த தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, அதன் உட்பிரிவு 66A நாம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. அதில் இருக்கும் ஷரத்துகள் அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள உரிமைகளை பறிப்பதாக உள்ளதாக ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளதால், பதிவர் திரு தருமி ஐயாவின் கருத்தில் முழு உடன்பாடு கொண்டு,  அந்த சட்டத்தின் 66A பிரிவுக்கான எனது எதிர்ப்பை தெரிவிக்க, நானும் அதை இங்கே பதிவாக இடுகிறேன்.
==================================================================

I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் 
தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில்

 (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி 
கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்
 (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.eceஇக்கருத்தைப்
 பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.


*      இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட 
இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித 
உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு
 வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*      இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் 
துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். 
சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக்
 காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*     முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான 
ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் 
இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட 
வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.
==============================================================================

ட்விட்டர்,முகநூல், கூகுள் பிளஸ்ஸில் நிலைச்செய்தியாக பகிர,

"இந்திய அரசே,தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT 
Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை 
சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்"

நன்றி!

=============================================================================

வேண்டுகோள்:

கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட அனைத்து இணைய ஊடகவியலாளர்களும் இப்பதிவினை பிரதியெடுத்து வெளியிட்டு ஒத்துழைக்க
வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் பதிவிட்ட பின் இடுகையை தருமி
அவர்களின் தளத்தில் இணைக்கவும். நன்றி!
Read More

3.3.12

அரவான்

                            தமிழ் மரபில் அரவான் பற்றி மிக நீண்ட விளக்கங்கள் உள்ளன .அரவான் என்பவர்  களத்தில் பலியிடுவதற்காக உருவாக்கப்பட்டவர் . அது போன்ற ஒரு அரவானின் வரலாற்றையும் அத்தோடு கள்ளர் மரபையும் அவர்களுடைய குலத்தொழிலான கன்னம் வைத்து திருடுவதும் .பதினெட்டாம் நூற்றாண்டின் கள்ளர் சமுதாயத்தையும் ,ஒரு அறிய தொகுப்பாகவும் ,ஆவணமாகவும் காவல் கோட்டம் ' ச .வெங்கடேசன் உதவியுடன் கூடுதல் கதை அமைத்து இயக்கியிருக்கும் வசந்த பாலனுக்கு வாழ்த்துகள்
                                                        
 
பதினெட்டாம் நூற்றாண்டில் கதை தொடங்குவதாக காட்டபடுகிறது .பசுபதி வேம்பூர் கிராமத்தின் தலைமை திருடனாக செயல்பட்டு அக்கிராமத்திற்க்கே படி'அளக்கிறார் .ஒரு கட்டத்தில் மகாராணியின் வைர அட்டிகை களவு செய்யபடுகிறது .அதை தொடர்ந்த காட்சியில் ஆதியின் அறிமுகமும் ,பசுபதி ஆதியின் நட்பும் ,பசுபதியின் தங்கை ஆதியின் மேல் கொண்ட காதலும் என தொடரும் கதையில் தொய்வு ஏற்படுவது இரண்டாம் பாதியில்தான் ,நீளத்தை கொஞ்சம் கத்திரித்து திரைக்கதியில் கொஞ்சம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து .
 
இடைவேளை வரை பசுபதியின் ஆட்டம்தான் .இடைவேளைக்கு பிறகுதான் ஆதி குடுத்த பணியை செவ்வனே செய்திருக்கிறார் .வில்லனாக கரிகாலன் ,ரீஎன்ட்ரி .என் சிறுவயதில் பார்த்த படம் சோலையம்மா ' தனுஷின் அப்பா கஸ்துரி ராஜா இயக்கிய படம் என்று நினைக்கிறேன் ,ஒரு ஆஜால் குஜால் பாட்டு கூட ஒன்று வரும் 'தாமிர பரணி ஆறு நீ தரையில் நடக்கும் தேரு'.கரிகாலன்தான் அந்த படத்தின் வில்லன் ,மனிதர் கவட்டையை ஒன்று வைத்துகொண்டு அந்த ஊரில் உள்ள பெண்களை தினமும் ஒரு பெண்ணாக 'மார்க் செய்வார் ' மறுப்பவர்களை வலுகட்டாயமாக ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .மனிதரை மிக டெர்ராராய் காட்டியிருப்பார்கள் ,சமட்டியை கொண்டு நெஞ்சில் அடிப்பார்கள் (எக்ஸ்சர்சைசாம்),அண்டா அண்டாவாக பால் குடிப்பார் ,சண்டையில் ஈட்டியை கூட வைத்து குத்துவார்கள் ,ஈட்டி மடங்கிவிடும் ,அப்படி பட்ட மனிதரை அந்த படத்தின் நாயகி சுகன்யா கடைசியில் வில்லனை வதம் புரிவார் சோற்றில் விஷம் வைத்து .'இப்படிலாம் கூட வில்லைங்க இருப்பாய்ங்களா' என பயந்த காலகட்டம் அது . அப்படிப்பட்டவர் இந்த படத்தில் கூமுட்டை குடித்த முகபாவனைகளுடனே வலம் வருகிறார் .ஆனால் பயம் தான் வரமாட்டேன் என்கிறது .ஒரு வேளை நான் வளர்ந்த குழந்தை ஆகிவிட்ட காரணமாகவும் இருக்கலாம் (இந்த அளவிற்கான விமர்சனம் ஏன் வைக்கிறேன் என்றால் மதுரை நகர் முழுவதும் கரிகாலனை முன்னிறுத்தி சுவரொட்டிகள் ஒட்டபட்டிருந்தது)
                                                 
 இதில இன்னொரு வில்லானாக 'ராஜா' .கதாபாத்திரம் .சீரியாசாக சென்ற படத்தில் சிங்கம்புலி வந்தவுடன்தான் கொஞ்சம் ரிலாக்சாக முடிந்தது ,நட்புக்காக பரத் ,அஞ்சலி ,ரதிநிர்வேதம் புகழ் ஸ்வேதா மேனனும் ,இன்னும் நிறைய கேரக்டர்கள் 
                                                            
 
                        இப்பொழுதான் நம்ம ஐட்டம் வரபோகிறது.இந்த படத்தில் நடித்த அனைத்து பெண்களும் ஆல் பாரதிராஜா டைப் ஹீரோயின்ஸ்  " Full sleeve less" லே வலம்  வருகிறார்கள் இல்லை இல்லை அவ்வாறு காட்ட படுகிறார்கள் .நாயகியும் அவ்வாறே .நண்பர்களை டிக்கெட் எடுத்து கொண்டிருக்க நான் திரை அரங்கின் வெளியில் உள்ள தள்ளு வண்டியில் "கப்ப கிழங்கு " வாங்கி சாப்பிட்டேன் .என்ன செய்வது இது போன்ற கப்ப கிழங்குகளை மட்டுதான் சாப்பிட முடிகிறது  இட்ஸ் ஓகே ,பரவாயில்லை நாயகி தன்சிகாவிற்க்கு நடிப்பு வருகிறது .இருந்தாலும் அந்த "கப்ப கிழங்கில் ஒரு சுவை இருந்தது .அந்த கிழங்கில் மாவு சத்து அதிகம் என்று நினைக்கிறேன் ,நன்றாக மாவுமாவாக இருந்தது .இன்னொரு கிழங்கு வாங்கி சாப்பிட்டேன் ஆனால் அந்தளவிற்கு சுவை இல்லை ,ஆங் சொல்ல மறந்து விட்டேன் இதில் இன்னொரு நடிகையும் இருக்கிறார் பெயர் ஏதோ அர்ச்சனாவோ ,கவியோ ,இருந்தாலும் அந்த முதலில் சாப்பிட்ட கப்ப கிழங்கு .................................(கடேசி வரைக்கு கப்ப கிழங்கு தான் சாப்பிட முடியும் போல ) 
 
                                                              
அரவான் -தரம் 
                                          
                                                                    
Read More

6.2.12

நான் கண்ட மெரீனா

              சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் ,வந்தேறிகளின் நகரம் ,கெட்டும் பட்டணம் போய் சேர் என்ற பழமொழிகேற்ப ,ஒரு ஐந்து வருடத்துக்கு முன்னால் மதுரையை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை மட்டும் அறிந்த
நான் ,காய்ந்த ஒரு மாலை பொழுதினில் சென்னை சென்று வேலை தேடுவதென முடிவெடுத்தேன் 

" டே அங்கையா போறே தவிச்ச வாய்க்கு தண்ணி குடுக்கமாட்டாய்ங்க டா ,"

என நண்பர்கள் வாழ்த்த ,பேருந்தில் பயணித்தேன் சென்னைக்கு .

சினிமா ஏற்படுத்திய சென்னை மாய பிம்பங்கள் விட  சென்னையை அடைந்த போது  அந்த பிரமாண்டம் என்னை பயமுறுத்தவே செய்தது , அதனால் என்னவோ தெரியவில்லை ,இல்லை பயண களைப்பினாலோ   நண்பனது அறையில் பேதியாகி கிடந்தேன் ,பேதியினால் காய்ச்சல் ,அருகிலிருந்த மருத்துவரை அணுகினேன் ,சோதனை செய்யப்பட்டது ,பின்புறம் ஊசி( நான் வேண்டாம் வேண்டாம் என மறுக்க நர்ஸ் கட்டாய படுத்தினார் ) ,சிறிது தேவலாம் போல் இருந்தது , நண்பனது அறையை அடைந்தேன் ,வீட்டுக்கார அம்மா என்னை அனுமதிக்கவில்லை ,நண்பன் வேறொரு நண்பன் அறைக்கு அழைத்து சென்றான் , அங்கு இரவு பதினொரு மணி தொடங்கி காலை ஏழு மணி வரை தான் எனக்கு தங்க அனுமதி ,இப்படியே ஒரு வாரம் கழிந்தது ,பிறகு அதற்க்கும் ஆப்பு . வேறொரு நண்பன் மூலமாக காரப்பாக்கத்தில் அவனது நண்பர்கள் அறையில் தங்கினேன் ,அங்குதான் கிட்டத்தட்ட இரண்டு வருடம் களித்தேன் , ஒரு மாதம்தான் எனக்கு சென்னை பழகி விட்டது


              காலையில் தொடங்கி இரவு வரை ஒரு மனிதன் எதையுமே நான் வாங்க மாட்டேன் என்று இருக்க முடியாது .வாழ்க்கையின் மிக எளிமையான சூத்திரம் விற்பதும் வாங்குவதும் .

கிட்ட தட்ட இது போன்ற நிலையில் இருக்கும் மனிதர்களே 'எதாவுது செஞ்சு பொலச்சுக்குலாம்யா'  என்று சென்னையை நோக்கி படை எடுக்க தொடங்கிறார்கள் .

சரியாக ஒரு மாதம் இருக்கும் 
காலையில் ஒன்பது மணிக்கு மெரினாவை அடைவது இரவு பத்து மணிவரை கடலின் மணலோடு மணலாக படுத்து கிடப்பது .பிறகு நண்பனது அறையை அடைவது .மீண்டும் காலையில் மெரினாவை அடைவது ......................'

இருந்தும் சலிப்புற்றதில்லை .கடல் அலைகள் என பொய் சொல்ல விரும்பவில்லை .பல்வேறு நிலைகளில் இருக்கும் காதலர்களும் காரணமாய் இருக்கலாம்

அடேங்கப்பா என்னமா லவ்வு பண்றாய்ங்க

மொட்ட  வெயில்லயும் முக்காடு போட்டுக்கிட்டு அப்படி என்னதாண்டா உள்ள பண்றாய்ங்க

எப்படித்தான் மடக்குறாய்ங்களோ

ஒக்காமக்கா

ஆஆஆஆஆ

யே என்னடா லட்டு லட்டா திரியிறாலுக


யே அங்க பாருடா மவுத் கிஸ்ஸ போடுறாயிங்க

 யே இதுகளோட அப்பன் ஆத்தா பார்த்த அப்படியே கடல்ல குதிச்சு தற்கொல பண்ணிக்கிவாய்ங்கடி

என்று உள்ளுக்குள் புழங்கிய காலங்கள் அவை.(ஒரு மாசம் சுத்தியும் ஒன்னும் சிக்கலல)

 மெரினா _ சென்னையை அடையாளபடுத்துவது ,,'மெயின் ரோட்டுல இருந்து கடல தொடுரதற்க்கு ஒரு கிலோமீட்டர் நடக்கனும்டா '.ஊர்களிலிருந்து ஓடிவரும்  சிறுவர்கள் தங்கள் பிழைப்புக்காக சுண்டல் ,வாட்டர் பாக்கெட்கள் விற்பது ,தன் மகனையும்  மருமகளையும் அவமான படுத்துவதற்க்காக பிச்சைடுக்கும் பெரியவர் ,பின்னர் திருந்தி சிறுவர்களிடம் அழுவது .குதிரை ஒட்டி , 'பீச்ச வாடகைக்கு விற்றுக்கேன் ' என்று தன்னை அறிமுகபடுத்தி கொள்ளும் மனநிலை சரியில்லாதவர் .இவர்களோடு சிவகார்த்திகேயன் ஓவியா காதல் என மெரீனா முழுவதும் நம்மை பயணிக்க வைத்திருக்கிறார் 

வெளியில் சொல்ல முடியாத பல காரியங்கள் நடந்து கொண்டிருக்கும் மெரினாவில் அவற்றையெல்லாம்  படத்தில் காட்ட முடியாததுதான் .அதனால்தான் என்னவோ படம் பார்த்து விட்டு எழுந்தால் தட்டி விடவேண்டிய அளவிற்கு  மண் ஒட்டவில்லை 

மெரினா -பசங்க அளவில் ஒரு பரிணாமத்தை ஏற்ற முடியாது ,ஆனாலும் பார்க்கலாம் 
                                                               
 டிட்பிட்ஸ் : இடைவேளையில் மரணம் என்னை துரத்துது  சாரு என் முப்பொழுதும்  உன் கற்பனைகள் ட்ரைலர் ஓடிகொண்டிருந்தது அதில் பலபேர் சாருவை துரத்தி கொண்டிருந்தார்கள் ,நானும் துரத்துறேன் ,துரத்தி நைட்டு போறேன் ,போயி (i mean to say when the film is release i will go night show why this english means on that day also i had seen film nanban (night show) the sathyan character resemblance has overcome me so that i am also going to search kosaki pasapupugazh (என்ன பேருடா இது )
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena