வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

10.4.13

பத்தினி தினசரி பக்கங்கள் தீர்ந்த பிறகு சிறிது நேரம் மாடியில் உலாத்தலாம் என்று எழுந்தேன் .காலை காபியும் சிறிது நேர நடையும் வயிற்று சங்கடங்களை தீர்க்க வல்லது.  ஐந்து குடித்தனங்கள்  இருக்கும் காம்பௌன்ட் வீட்டில் அதிகாலை வெயிலேரத்தொடங்கியது.

"நீ தேவ...........ங் கொம்மா தேவ........ உன் குடும்பமே தேவ............... குடும்பம்டி,.....
 நா தேவ............. வா,நா தேவ............. வா ம்ம் அப்பறம் என்ன மயித்துக்குயா என் வயித்துல புள்ளைய குடுத்த ,ஆட்டோக்காரன் குடும்பம் காலையிலே ஹாரன் அடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க போல.முதலில் வீட்டை மாத்தணும்

மாடி திருப்பத்தில் சுடிதார் டாப்சும் தலையில் கொண்டையுமாக கையில் பிளாஸ்டிக் வாளியுடன் ஒதுங்கி நின்ற தீபிகாவை பார்த்து மனத்தில் எழுந்த எண்ணத்தையும் மற்றதையும் அடக்க கஷ்டப்பட்டேன். கடைசி வீட்டு அரசாங்க பேருந்து கண்டக்டரின்  மூத்த பெண் ,என்னை விட கொஞ்சம் உயரம். சற்றே கருப்பு என்றாலும் கவர்ச்சியான முகவெட்டு ,அடிக்கடி  வீட்டு வாசலில் வந்து நின்று ,அண்ணா அத்தையை கூப்பிடுங்களேன் ,என புதிய உறவுமுறையை உருவாக்குபவள்.

பல் விளக்குதல் ,குளித்தல் , காலை உண வருந்துதல் என இத்தியாதி கடமைகளை முடித்தபொழுது ,மணி பதினொன்றுனென அறிவித்தது .கண்ணாடியை பார்த்து தடவியதில் நான்கு நாள் கன்னம் சொர சொரத்தது ,என்ன பொன்னா பாகக போறோம் .செல்போன் சங்கர் அழைப்பதாக  சிணுங்கியது .
"சொல்றா போலிசு "
"எங்க இருக்க "
"வெளிய வா "
வெளியில் வந்தேன் மாமனார் வீட்டு சீதனத்தை முறுக்கி கொடிருந்தான் .அவனது வண்டியில் பின்னால் அமர்ந்தேன் " இன்னிக்கு லீவா " என்ற படியே  வண்டியை முறுக்கினான் .நேராக தமிழ்நாடு பாரில்  நிறுத்தினான்
"ஏ காலைலே வா "
"இன்னிக்கு லீவுதானே "
"அதுக்காக..... சாயிங்காலம் வருவோம்டா "
"டெண்சென்டா "
"உன் டெண்சன்பு ..............காலைலே அடிக்க முடியுமாடா   "
"அடேங்கப்பா  இதுவரைக்கும் காலைல குடுச்சதே இல்லாத மாதிரி நாடகக்கூ .........போடாத "
மெல்லிய குளிர் பரவ ,அந்த வேளையிலும் இரண்டு டேபிள்களில் சிலர் ஒதிங்கிருந்தார்கள் .சர்வர் "என்ன சாப்பிடுறீங்க "
"உனக்கு என்ன வேணும் "
"ஏதாவுது சொல்றா "
"எரிக்ஸ்டப் இருக்கா ?நாலு லார்ஜ் ,ரெண்டு டானிக் வாட்டர் ,கூலிங் இல்லாத வாட்டர் கேன் ஒன்னு ,அப்பறம் ஸ்நாக்ஸ்ல பொறி மட்டும் கொஞ்சம் ஜாஸ்த்தியா கொண்டு வாங்க
"தண்ணியே அடிக்காதவன்  மாறியே  வெளியே ஆகட்ட போட்டு எப்படி ஆர்டர் பண்ற "
"அதுக்காக மோந்து பாத்துட்டா போக முடியும் "

சங்கரை பற்றி இங்கே ஒன்றை சொல்லியேயாக வேண்டும் ,சங்கர் ஆண்ட்டிகளை மடுக்குவதில் தீரன்  ,ஆண்ட்டிகளை மடக்கி என்ன செய்வான் என்று நீங்கள்  யோசித்திதால் அப்படியே பின்வாங்கி கொள்ளுங்கள். .ஒரு முறை லிப்ட் கேட்டு வந்த ஆண்ட்டியை முள்ளு முருங்க  காட்டில் வைத்து  முடித்'தவன் .சங்கர் தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ்சில்  பணிபுரிகிறான் .ஆண்ட்டிகளை மடக்குவதில் ஒரு வகையான டெக்னிக் கையாள்பவன்.சிறு சிறு காகிதங்களை வெட்டி வைத்து கொண்டு அதில் அவனுடைய  செல் நம்பரை எழுதி வைத்திருப்பான் ,மடக்கப்பட வேண்டிய ஆண்ட்டிகளிடம் அவை தரப்படும் .ஆண்ட்டிகள் மிக இயல்பானவர்கள் ,தேவயானி போல் ஒரு குடும்பத்தலைவியாக என்னை உணரவைப்பது என்று 'பொம்மிஸ்' அணிந்தவராக இருக்கலாம் , அல்லது நைட்டியுடன் மேலே துண்டை போட்டு கொண்டு   காலையில் பால்பாக்கெட் வாங்க வருபவர்களாக இருக்கலாம் .

காலேஜுக்கு போகிற பெண்களை விட கல்யாணமான பெண்களை மடக்குவது மிக எளிது என்பது அவன் சித்தாந்தம் .

 இரண்டு லார்ஜ் அடித்து முடித்திருந்தோம் "என்னா டென்சன் உனக்கு அப்படி "என்றேன் .மேலும் ஒருலார்ஜில் மிக்சிங் செய்து ஒரே கல்பாக அடித்து விட்டு ,"ங்கொம்மா............. நம்ம்பி போனேண்டா  ஏமாத்தி அனுப்ச்சுட்டா "

"யாரு "
"எங்க வீட்டு சைடுல ஒருத்தி இருந்தாள ,நான் கூட சொல்லிருகேன்ல ,ஆளு கூட முத்துன சதா மாதிரி இருப்பான்னு "
"அவளா? ஆமஆமா  , என் புருசனகூட விட்டுட்டு உங்ககூட ஓடியாந்திறேன் சொன்னவதானே , அன்னைக்கு சிவகங்கைக்கு ஜென்டானவந்தானே  நீ "

"ஆமாமா அவளேதான் "

"ஏன் ரீஎன்ட்ரி வொர்க் ஆகலையா "

"அட்ரஸ் லாம் கண்டுபுடுச்சு விசாரிச்சு வீட்டுக்கே போயிட்டேன் .கதவ தொரன்தவ கொஞ்சம் அதிர்ச்சியாகிட்டா ,அப்படியே நைசா கதவ பூட்டிட்டு கட்டுலு வரைக்கும் கூட்டிட்டு போயிட்டேன் .முதுக தடவுனேன் பாரு
ச்ச்ச்சச்ச்ஸ் உதட்ட கடிச்சிகிட்டே ஒதுங்கி போனா "

'ஆஆங் "

"எந்திரிச்சு போயி முந்தானைய இழுக்கலாம்னு போனேன் பாரு .நீங்க தயவு செஞ்சு போயிடுங்க,நா இப்பலாம் அப்படி கெடையாது ,என் புருஷன் கூட உண்மையா சந்தோசமா இருக்கேன் .திரும்பவும் என் வாழ்க்கைல கொழப்பத்த ஏற்ப்படுத்தாதீங்க கெஞ்சுனா .

"அப்பறம் "

"அப்பறம் என்ன பண்ண அப்படியே மூஞ்சிய தொங்க போட்டு வந்துட்டேன் "

"இதலாம் ஒரு கதைன்னு வேற வெக்க பொச்சு இல்லாம வேற சொல்றியேடா .முதல்ல என்னைய வீட்டுல கொண்டு போயி விடுடா ......."

மதிய மூன்று மணி வீட்டிற்கு வரும்போது .என்னை இறக்கி விட்டு யு டர்ன் அடித்தான்

"ஏன் யு டர்ன் அடிக்கிற  இப்படியே போக வேண்டியதுதானே "

"தெற்க்குவாசளுக்கு போறேன்  ,பொண்டாட்டி முத பிரசவத்துக்கு போனது இன்னும் வீட்டுக்கு கூட்டிட்டு வல்லைலே ,கொழந்தையும் பாத்து நாலு நாள் இருக்கும் அதான் "

"ஓ ரொம்ப நாளா சூட்ட தணிக்க முடியாம அவதி பட்டிருக்க ,அதான் சான்ஸ் கெடச்ச அவள மறுபடியும் அமைக்கலாம்னு பாத்திருக்க ....க்காளி.... அவ உன்  மூஞ்சில எச்சி காரி துப்பாத கொறையா "

"சரி இன்னொரு நாளைக்கு பாப்போம் "என அவசரமாக அகன்றான்

வீட்டு காம்பவுண்டிற்குள் நுழைந்தேன் ".இங்காரு ஒங்கொப்பேன் மாறியே கத்திகிட்டே கெடந்த ,வெயில்ல தூக்கி படுக்க போட்டுடுவேன் ,கத்தாம கெடடா " என்று ஆட்டோ காரரின் மனைவி தன ஆறு மாத குழந்தைய கொஞ்சிக்கொண்டிருந்தாள் .
Read More

25.2.13

உள்ளே/ வெளியே -1

                                      செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் என்று கூறுவார்கள் .சேமிப்பின் மகத்துவம் கையில் காலணா காசு இல்லாதபோதுதான் உணர முடிகிறது . செலவழித்தது போக மிஞ்சியதை சேமிப்போம் என்று நினைத் தீர்களானால் எந்த காலத்திலும் சேமிக்க முடியாது .சேமித்தது போக மிஞ்சியதை செலவழித்தால் நீங்களும் ஒரு கோடீஸ்வரன்தான்..சும்மாவா பாடி வைத்திருக்கிறார்கள் 

கைக்கு கைமாறும் பணமே 
உனை கைப்பற்ற நினைக்குது மனமே 
நீ தேடும் போது வருவதுண்டோ 
விட்டு போகும்போது சொல்வதுண்டோ 

சேமிப்பு ஓர் உற்ற நண்பன் 

உள்ளே :

                          நேற்று நண்பர் ஒருவரின் இல்ல விழாவிற்கு சென்றிருந்தேன் ,உண்மையிலே அந்த விழாவிற்கு பெயர் இல்ல விழாதான் .ஏதும் புதிதாக வீடு கட்டியிருக்குறீர்களா? என்று விசாரித்தேன் .இல்லை என்றார் .சுமார் ஐந்தாயிரம் பத்திரிக்கை கொடுத்திருப்பதாக கூறினார் .உறவினர்களின் விசேசங்களுக்கு  செய்த மொய்யை வரவழைத்து வசூலிப்பது தான் விழாவின் முக்கிய நோக்கம் 

ஏங்க உங்க  சொந்தக்கரவுங்க மொய் எழுதுவாங்க ,நீங்க செஞ்சிருப்பீங்க , நா எப்படிங்க மொய் எழுத முடியும் 

யோவ் மொயஎல்லாம் எழுத வேணா ,சும்மா வந்து சாப்பிட்டு போயா 

அப்ப சரி 

மண்டபத்தின் நுழைவுவாயிலில் ,குடும்ப உறுப்பினர்களுடன் நண்பர் வரவேற்றார் .அந்த இடத்திலேயே அவர்களுடன் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க படுகிறது .முதல் வேலையாக 'போய் சாப்பிடுங்க 'என்று அன்போடு உபசரிக்க பட்டேன் .சாப்பாடு கூடத்தில் பதினெட்டு பட்டியும் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தனர் .காதில் தண்டட்டி அணிந்த பாட்டி ஒருவர் எலும்பை கடித்து அனாயசமாக மென்று கொண்டிருந்தார் .ஒருவர் சாப்பிடும் நாற்காலிக்கு பின்னால் நின்று கொள்ளவேண்டும் .அவர் எழுந்தவுடன் மியூசிக்கல் சேரில் அமர்வது  போல அமரவேண்டும் .இது தெரியாமல் ஒரு சிறுவனிடம் ஏமாந்தேன் .

கீழே நடன  நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது .முதல் மரியாதை சிவாஜியாக 'மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல ' என்றார் .நீ தூக்க மாத்திரையும் சேத்து  வாங்கிருக்கணும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன் .சுமார் ஐந்து மணிநேரம் இது போன்று நிகழ்ச்சி நடக்குமாம் .வெளியில் வந்தால் நீளமான மேஜை பின்னே ஐந்து பேர் நாற்காலியில் .

ஈச்சம்பட்டியெல்லாம் இங்க வாங்க , உசிலம்பட்டியெல்லாம் அங்கிட்டு போங்க ,ஒருவர் ஏப்பம் விட்டு  கொண்டே ,பத்தாயிரத்தி ஒன்னு ,ஒரு கை மீசையை முறுக்கி கொண்டிருந்தது .எங்கே இவர்களாகவே பாக்கெட்டிற்குள் கையை விட்டு பணத்தை எடுத்து மொய்யாக எழுதிகொள்வார்களோ என்று பயந்து நண்பரிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துவிட்டேன்.யோசித்து பார்த்தால் இவர்களுடைய பணம் மொய் என்ற பெயரில் உறவினர்கள் கூட்டத்துக்குளே சுற்றி கொண்டிருக்கும் ,அதுவும் வட்டியில்லா கடனாக .ஐந்தாயிரம் பேராவது கண்டிப்பாக வருவார்கள் என்றார் நண்பர் .தலைக்கு ஆயிரம் ரூபாய் வைத்தால் கூட ,அடங்கொக்க மக்கா அம்பது லட்சம்யா அம்பது லட்சம்

வெளியே :

                    சமீபத்தில் இரண்டு புத்தகங்கள் படித்தேன் .ஒன்று 'மயக்கம் என்ன' .  ஜூனியர் விகடனில் வெளியான தொடர் .இரண்டு பாரதி மணியின் 'பலநேரங்களில் பல மனிதர்கள் '.

எஸ்.கே.எஸ் மணியாக இருந்தவர் பாரதி படத்தில் பாரதியாராக நடித்த சாயாஜி சிண்டேவுக்கு தந்தையாக நடித்ததால் பாரதி மணியாக உயர்ந்தவர் .மணிரத்னத்தின் கடல் படத்தில் துவக்க காட்சிகளில் பாதிரியாராக வருபவர் .இவை எல்லா வற்றையும் விட கா.நா.சு வின் மருமகபிள்ளை .மிக அசுவாரஸ்யமாகத்தான் படிக்க தொடங்கினேன் .ஐம்பது ஆண்டு கால டில்லி வாசமும் ,பல மதிப்பு மிக்க மனிதர்களுடனான அனுபவங்களின் கட்டுரை தொகுப்பே இப்புத்தகம் .இவரை பற்றி மதிப்புரைகளில் குறிப்பிட்டது போல உண்மையிலேயே இவர் தகவல் கிடங்குதான் .இன்னும் இவரிடம் வெளிவராத பல தகவல்கள் இருக்கிறது என்று இவரே கூறிகிறார் .இந்த வயதில் திகார் சிறை வாசம் தனக்கு ஒத்து வராது என்பதாலே என்கிறார் .எவ்வித தயக்கமும் இல்லாமல் தான் ஒரு குடியனாக இருந்ததை ஒத்துகொள்கிறார் .இவர் ஒரு மிக சிறந்த நாடக நடிகரும் கூட ,அமரர் சுஜாதா இவரது 'நிகோம்போத் சுடுகாடு ' கட்டுரை பற்றி எப்போதாவுதுதான் இது போன்ற கட்டுரைகள் படிக்க முடிகிறது என்று குறிப்பிடுகிறார் .நாடாண்டவர்களின் மகன்கள் அதிகார மீறலுக்கு ,'காந்தி பாய் தேசாய் ' கட்டுரை ஒரு எடுத்துக்காட்டு .காந்தி பாய் தேசாய் ,மொராஜி தேசாயின் மகன் .மொராஜி ஆண்ட காலத்தில் இவர் விரும்பியருந்தும் விஸ்கியை தடை செய்ய முயன்றாராம் . அதை இவ்வாறு குறிப்பிடுகிறார்

"you drink your pisky, let me drink my whisky; cheers"
ரசனையான குடிகாரர் ,அன்னை தெரசாவுடனான அனுபவங்கள் ,சுஜாதா சில நினைவலைகள் ,பூர்ணம் விஸ்வனாதனுடனான  அனுபவங்கள் .சர்தாஜிகள் பற்றிய கட்டுரை முக்கியமானவை .அதிலும் குஷ்வந்தசிங் ' குறும்பான பேச்சை ' போகிற போக்கில் பதிவு செய்துவிட்டு போகிறார்
                                                                                   

ஒரு மனிதருக்கு எப்படி இவ்வளவு அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்று ஆச்சிரியபட்டுகொண்டிருக்கிறேன் .எது எப்படியோ தமிழ் சூழலில் மிக முக்கியமாக படிக்கப்பட வேண்டிய புத்தகம்


நா.மணிவண்ணன் 
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena