வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

30.10.11

குமார காவியம்

                         
                                         அன்று குமாரன் துயில் எழுந்தபொழுது சூரியன் முந்திகொண்டது .குமாரனுக்கு அது விடுமுறை நாள் ஞாயிற்று கிழமை.ஆண்டு பரீட்சை முடிந்து பள்ளிகள் விடுமுறை  முடிந்து குமாரனுக்கு  ஒன்பதாம் வகுப்புகள் தொடங்கி ஒரு வாரமே ஆகி இருந்தது .குமாரன் அதே வழக்கமான காலை கடன்கள் முடித்தல் ,பல்விலக்குதல் ,மிகவும் எரிச்சல் பட்டு குளித்தல் ,அதன் பிறகு ஆவலாதியாக காலை உணவருந்துதல் .கடைசியாக  தனது தம்பியை அடித்து அழவைத்துவிட்டு வீட்டை  விட்டு ஓடிவிடுதல் போன்று பணிகளை செய்துவிட்டு கூட்டாளிகளுடன் விளையாட சென்று விடுவான்  .அவர்கள் இருந்த வீடு ஒரு தொகுப்பு வீடு .அந்த தொகுப்பு வீடுகளில் முதல் வீட்டில் இருந்தது தனபுஷ்பம் .அவளது தந்தையார் அரசாங்க காரியாலயத்தில் பணிபுரிகிறார் .தற்போது மாற்றலாகி வந்திருக்கிறார் .தன்புஷ்பமும் திருக்குமாரனும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் வெவேறு பிரிவுகளில் படிக்கிறார்கள் .குமாரன் தனபுஷ்பம் வீட்டை தாண்டி செல்லும் பொழுது .தனபுஷ்பமும் சரியாக வெளியில் வருகிறாள் .இருவரும் புன்னகை புரிகிறார்கள் .
ஏ எங்கே போகிறாய் 

நான் விளையாடசென்றுகொண்டிருக்கிறேன் 
கணக்கு ஆசிரியர் குடுத்த வீட்டு பாடத்தை முடித்து விட்டாயா 
இல்லை மாலைதான் செய்ய வேண்டும் .எனக்கு நேரமாயிற்று நண்பர்கள் காத்து கொண்டிருப்பார்கள் நான் வருகிறேன் 

அன்று அவர்கள் விளையாட தேர்ந்தெடுத்த இடம் ,அந்த தெருவில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருந்த ஒரு வீட்டை .அந்த வீடு நான்கு மாடியாக கட்ட பட்டு கொண்டிருந்தது .குமாரனும் அவனது நண்பர்களும் ஒவ்வொரு மாடியாக ஏறி மேலிருந்து கீழே கொட்டி கிடக்கும் ஆற்று மணலில் குதிப்பார்கள் .அப்படி குதித்து குதித்து மூன்றாவது மாடியை எட்டி இருந்தார்கள் .மூன்றாவது மாடியிலிருந்து முதலில் குமரான் குதிப்பதென முடிவெடுக்க பட்டது .குமாரன் மாடி படிகளில் ஏறி கொண்டிருந்தான் .குமாரனுக்கு  இரண்டாவது மாடியிலிருந்து குதித்தபோதே சற்று பீதியாகத்தான் இருந்தது .இருந்தும் முயன்று பார்ப்போம் .அவன் மூன்றாவது மாடி விளிம்பிலிருந்து கீழே பார்த்தான் .குதிப்பதற்கு தயக்கமாக இருந்தது .குதிப்பதற்கு முன் எதேச்சையாக இடது புறம் திரும்பி பார்த்தான்.அங்கே ஒரு புத்தகம் கொட்டி வைக்க பட்ட செங்கற்கற்க்களுக்குள் தினத்து வைக்க பட்டிருப்பதைப்பார்த்தான் 

அந்த புத்தகத்தை வேக வேகமாக திருப்பி பார்த்தான் .முழுவதும் நடிகைகளின் அந்தரங்க ஆடைகளின் அணிவகுப்பாக இருந்தது .கீழே இருந்து நண்பர்கள் குமாரனை கத்தி அழைத்து கொண்டிருந்தார்கள் .தான் குதிக்கவில்லை என்பதால் நண்பர்கள் மேலே வந்துவிடுவார்கள் .அது மட்டுமில்லாமல் நண்பர்கள் இப்புத்தகத்தை பார்த்தால் தனக்கு ஒரு பக்கம் கூட கிடைக்காது .ஆதலால் இங்கிருந்து உடனே செல்ல வேண்டும் என தீர்மானித்தான்

அந்த புத்தகத்தை  அவனது கணக்கு புத்தகத்திற்குள்  ஒளித்துவைத்தான்.விதியும் உள்ளே சென்று ஒளிந்து கொண்டதை   அவன் அறியவில்லை  .வீட்டில் சூழ்நிலை சரியில்லை .அன்று முழுவது பல முறை முயன்றும் அந்த புத்தகத்தை பார்க்க முடியவில்லை .கையில் ஆப்பத்தை குடுத்து விட்டு வாயை அடைத்த போட்டு விட்ட கதையாகி போனது
மறுநாள் திங்கட்கிழமை .குமாரனும் வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல பள்ளி பேருந்திற்காக தனது தம்பியுடன் பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தான் .தனபுஷ்பம் அவள் தாயாருடன் வந்தாள். அவளது தாயார் அவனை பார்த்து புன்னகைத்தார் .
அன்று குமாரனுக்கு மூன்றாவது பாட வேளை விளையாட்டு பாடம்.நான்காவது  பாடவேளையாக கணக்கு வகுப்பு .குமாரன் மூன்றாவது பாடவேளையில் விளையாட சென்றான் .அப்பொழுது எட்டாம் வகுப்பு ஆ பிரிவிற்கும் விளையாட்டு பாட வேளை .அந்த வகுப்பை சேர்ந்த மாணவர்களான ஆள்வார்,பேள்வார் இருவரும் குமாரனின் வகுப்பை அடைந்தார்கள் .இங்கு ஆள்வார் மற்றும் பேள்வார் பெயர்களின் காரணங்களை அறிந்து கொள்வோம் .அவர்கள் இருவரும் இரட்டையர்கள் .குமாரனின் பக்கத்து தெருவில் வசித்து வந்தார்கள் .குமாரன் சிறுவயதில் மட்டை பந்து விளையாடும் பொழுது பேள்வாரும் விளையாட வருவான் .பேள்வாரின் இயற் பெயர் ரமேஷ் .அவனால் இரண்டு'க்கு வருவதை அடக்க முடியாது .அவன் விளையாட வந்தான் என்றால் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்கப்படும் 'போய் விட்டு வந்தாயா 'என்று .அவனும் தலையாட்டுவான் .சில சமயம் எதுவும் செய்ய மாட்டான்,ஆனால் பல சயங்களில் அந்த விளையாட்டு மைதானத்தையே அசிங்கம் செய்துவிட்டு ஓடிவிடுவான் .அதன் பிறகு அவனின் அண்ணனான் சுரேஷை மண்டையிலேயே அடித்து இழுத்து வருவார்கள் .உன் தம்பி செய்த அசிங்கத்தை பார் அதை சுத்த செய் என்பார்கள் .அப்படி சுத்தம் செய்வதன் மூலம் சுரேஷ் அள்வார் என்ற பெயரை பெற்றான் .அப்பெயர் நாளிடைவில் ஆள்வார் என்ற பெயாராக உருமாறியது .அது மட்டுமில்லாமல் இந்த பெயர்களை பள்ளிகளில் பரப்பிய பெருமை குமாரனையே சாரும்.
ஆனால் அவர்கள் இன்று குமாரனின் வகுப்பிற்கு வந்த காரணமே வேறு .எந்த வகுப்பில் ஆள் இல்லையோ அந்த வகுப்பிற்கு சென்று .மதிய உணவுகளும் ,கொறிப்பதற்கு வைத்திருப்பதை திருடி தின்பது .பலரது புத்தக பைகளை வேக வேகமாக பிரித்து வகுப்பரையையே அலங்கோலமாக்கி உணவுகளை தின்று விட்டு சென்றனர் .அப்படி தின்று விட்டு சென்றதில் குமாரனின் மதியவுணவும் அடக்கம் .
நான்காவது பாட வேளை தொடங்குகிறது .வகுப்பறைக்குள் நுழைந்ததுமே எல்லோரும் கண்டிபிடித்து விடுகிறார்கள் உணவுகள் களவாடபட்டுவிட்டதென்று.கணக்கு ஆசிரியர் உள்ளே வருகிறார் .மாணவர்கள் முறையிடுகிறார்கள் .நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறார் .கணக்கு ஆசிரியர் வளைய வருகிறார் குமாரனின் மேசைக்கு மேல் கணக்கு புத்தகம் இருக்கிறது .புத்தகத்திற்க்குள்ளே உள்ளே இருப்பது
                                                             

தொடரும் ..............          
Read More

29.10.11

வெங்காயுதமும் தோலுரியாத பதிவர்களும்

எச்சரிக்கை : இந்த பதிவு தீவிர அஜித் ரசிகனால் எழுத படுவது .அப்பறம் படித்துவிட்டு குயோ மியோ என குதிக்காதீர்கள் .ஏன்னா நாங்கலாம் ஏறுனா ரயிலு எறங்குனா ஜெயிலு .வெளில வரது பெயிலு .

நானும் எழுத வேணாம்ன்னு வேணாம்னு தான் பார்த்தேன் .ஆனா நீங்கதான் வேணும் வேணும்னு எழுத வச்சுட்டீங்க 

சில இடங்களில் நான் குஜியை  (மன்னிக்கவும் டங்கு சிலுப்பிங் போல வெரலு சிலுப்பிங் ப்ரோப்ளம் ) டாக்டர் குஜையை வைத்து ஒரு வரம்பு மீறிய பதிவாகவே எழுதபோகிறேன் .எழுதபோகிறேன் என்பதை விட எழுத வைத்துவிட்டீர்கள் என்பதுதான் உண்மை

தமிழகத்தில் பெய்த பலத்த மழைக்கு ஊடாக வெளியாகி வெற்றிகரமாக படம்பார்க்கவந்தர்களை ஓடவைத்து கொண்டிருக்கும் டாக்டர் குஜய் அவர்களின் வெங்காயுதம் எந்த மாற்று கருத்தும் இல்லாமல்  சக்கை போடு போடுகிறது

மாப்புள எங்க வீட்டு பக்குத்துல உள்ள மாடு சானிய சக்க சக்கையா  போடுதுடா 


யே பதிவு எழுதறப்ப இம்சைய  கூட்டாதடா ,அப்பறம் பேசுவோம் 

டாக்டர் குஜய்   அவர்களின் வெங்காயுதம் படம் வெற்றி பெற விடாமல் செய்வதற்கு பல பதிவர்கள் கங்கணம் கட்டி அலைந்தார்கள் .ஆனால் அவர்களின் நிலைமை இன்று பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது . அவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்  கூறிகொள்கிறேன் .டாக்டர் குஜையை  வைத்து பதிவெழுதி பல ஹிட்ஸ்கள் வாங்கி அதான் மூலம் பணம் சம்பாரித்து, பலவீடுகள் கட்டி ,பல பொண்டாட்டிகளை கட்டி, பல குழந்தைகளை பெற்று, தெருவோர பிச்சை காரர்களிடம் பிச்சை எடுத்து சாப்பிடுகிறீர்கள் .
இந்த நிலை யாரால் உங்களுக்கு வந்தது டாக்டர் குஜய் அவர்களும் அவர்களின் படமும்தான் என்பதை நினைவில் கொள்ள்ளுங்கள்


மாப்ள வயிறு வலிக்குதுடா 


யே சும்மா இருக்க மாட்டியா நீயி .....சும்மருடா பதிவு எழுதிகிட்டுஇருக்கேன்ல

வெங்காயுதம் தமிழ்சினிமாவின் சரித்திர (மன்னிக்கவும்) தரித்திர வருசையில் இனைய போகிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா .அடுத்து டாக்டர் குஜய்   அவர்களுக்கு நடிக்க தெரியாது என்று கூறுகிறீர்கள் .யாரை பார்த்து இப்படி கூறுகிறீர்கள் அவர் நடித்த பல படங்களின் தயாரிப்பாளர்கள் நட்டாத்தில் விட பட்டுளார்கள்,அவர்கள் கையில் நெளிந்த அலுமினிய டப்பா உள்ளது ,அதில் அவ்வப்போது சில்லறைகள் விழுகிறது .இதற்க்கெல்லாம் யார் காரணம் எங்கள் டாக்டர் குஜய் அவர்கள் நடித்ததால் தானே அவர்கள் இநத நிலைமைக்கு சென்றுள்ளார்கள் .

உங்களை போன்ற பதிவர்களுக்கு பாம்பு போல் தோல் உரியவேண்டாம் என்றால் இனிமேல் டாக்டர் குஜையை பற்றி எழுதாதீர்கள் .அதையும் மீறி  எழுதினால் தோல் உரியத்தான் செய்யும் , தோல் உரிவதால் சொரிவீர்கள் ,அதன் மூலம் சிரங்கு வரும் .அப்பறம்  இனிமேல் சிரங்கு வத்தி பதிவர்கள்  என்று அழைக்கபடுவீர்கள் என்று இறுதி எச்சரிக்கையாக கூறி கொள்கிறேன் .கடைசியாக
உங்களுக்கெல்லாம்  ஒன்று சொல்லிகொள்கிறேன்

காரித்துப்புனா  அது   பேரு                                            எச்ச்சி
சாயிங்காலாம் டீ கடைல சுடுவாங்க                       பச்ச்சி
எங்க கணக்கு வாத்தியாரு கைல இருக்கு             குச்ச்சி
எப்பவுமே அவருதான்(குஜய் )  எங்களுக்கு            மச்ச்சி மச்ச்சி மச்ச்சி

டே அவசரமா போகனும்டா 


டே உனக்கு என்னதாண்டா வேணும் எழுத விடாம இம்மசை கூட்டிக்கிட்டு


டே நேத்து ராத்திரி வெங்காயுதம் படம் பார்த்தேண்டா அதுல இருந்தே 


அதுல இருந்தே 

வயிறு ..... இந்த இந்தா வந்து சொல்றேன் 


ம்ம்ம் கக்கூஸ நாரடிக்குரதுக்குன்னே வர்றாய்ங்க.போகாதீங்கடான்னா  கேக்கணும் .இப்ப அனுபவிங்க 
                                                                 

டிஸ்கி : நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது .
Read More

28.10.11

மாநகர பேருந்தில்                                                


அந்த சூழல் அவனுக்கு அற்ப்பமானதாய் இருந்தது .பேருந்தின் கடைசி முன் இருக்கைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான் .முகமறியா முகங்களின் முகரேகைகளை படித்து கொண்டிருந்தான் .அந்த பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது .ஒரு பள்ளி மாணவனாக இருக்க வேண்டும் ,ஏறி படிக்கட்டில் நின்று கொண்டான்
" அண்ணே இந்த பஸ் வாணி மஹால் போகுமா "


" எனக்கு தெரியாது " என்றான் அவன்

அவனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த பெரியவர் சற்று முன்னால் வந்து" தம்பி இந்த பஸ் அதுக்கு முன்னால பாண்டி பஜார்ரோட கட்டாயிடுமே"

" ஐயையோ அப்படியா அங்க எறங்கி ரொம்ப தூரம் நடக்கணுமா சார் "
" இல்லப்பா பக்கந்தான் ......நீ என்ன பண்ற பாண்டி பஜாருல எறங்கி அப்படியே நெட்டுக்க நடந்தேனா ஒரு ப்ளை ஓவர் வரும் அந்த எடத்துலாதான் இருக்கு வாணிமஹால் "
" சரி சார் ,சரி சார் " என்று தலை ஆட்டினான்பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது. பிறர் ஏறுவதற்காக படிகளில் இருந்து கீழிறங்கினான் அந்த பள்ளி மாணவன் .அப்படியே ஜன்னல் பக்கம் வந்து நின்று கொண்டான் , அவன் மூலமாக அந்த பெரியவரை அழைக்க வைத்தான் ,பெரியவர் அந்த மாணவனை ஜன்னல் வழியாக குனிந்து  நோக்கினார்" பெருசு வர்ட்டா ,இங்க பக்கத்துல தான் எங்க வூடு அடுத்த ஸ்டாப்பிங்க்காக அஞ்சுரூவா குடுக்கனுமேனு பாத்தேன் ,அதான்........நாடகம் நல்லாருக்கா  " என்றவாறு திரும்பி  ஓடினான் ,பெரியவர் நிமிர்ந்து எல்லாரது முகத்தையும் பார்த்தார் ,சிலர்  பல்லை காட்டி கொண்டும் ,பல பேர் பல்லை மறைத்து கொண்டும் சிரித்து கொண்டனர் ,அவனாலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை ,கண்டக்டர் அமர்ந்தவாறு அப்படியே வாசல் வழியே தலையை நீட்டி

" ங்கோ......... பாடு நீ மட்டும் கையில கெடச்ச டாருதாண்டி மவனே "
இவன் நின்று கொண்டிருந்தஇடத்துக்கு  பக்கத்துக்கு இருக்கை காலியாகி விட்டிருந்தது,அமரலாம என்று நினைத்தான் , வேண்டாம் பிறகு பெண்மணிகள் வந்து ," இது லேடீஸ் சீட் " என்று எழுத்திரிக்க சொல்லுவார்கள் ,எதற்கு  நின்று கொண்டே வந்தான் ,மேல்புறம் கம்பிகளை பிடித்து கொண்டே வந்ததாலே என்னவோ அவனுக்கு கை வலித்தது ,கையை மாற்றி மாற்றி பிடித்து கொண்டான்
" excuse me "

அவன் திரும்பினான் ,அவள் இவன் விலகுவதற்காக நின்று கொண்டிருந்தாள் , இவன் விலக காலியாக இருக்கையை நிரப்பினாள் . அடர் கருப்பு ரசக்களியில்   வெளுத்த தேவதையாக தெரிந்தாள் ,அவ்வப்போது முன் புறம் விழுந்த சில முடிகற்றைகளை காதோரமாக ஒதுக்கி திருப்பி விட்டாள் ,இவன் சில நிமிடம் அவளையே பார்த்தவண்ணம் இருந்தான் ,வெகு எதேச்சையாக அவளும் அவனை அசுவாரசியத்தோடு பார்த்தாள் ,இவன் சட்டென்று திரும்பி கொண்டான் ,பேருந்து அடுத்தடுத்து நிறுத்தங்களில் நின்று நின்று சென்றது ,பின்புறத்தில் கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது
" பின்னாடி இருக்கரவுங்கலாம் டிக்கெட் வாங்குங்க " என்ற கண்டக்டரின் ஒலியை பேருந்தின் ஜன்னல் வழியாக நுழைந்த காற்று தள்ளி கொண்டு அனைவரது காதுகளிலும் சேர்த்தது
இவனுக்கு அருகில் ஒரு செம்பட்டை தலையன் நின்று கொண்டிருந்தான் ,அவனிடமிருந்து பாண் பராக் வாடை எரிச்சலை குடுத்தது இவனுக்கு, அந்த செம்பட்டை  தலையனுக்கு அருகில் ஒரு கனத்த சரீரத்துடன் ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தாள்கொஞ்ச காற்றுவந்தையும் மனித கூட்டங்கள் நிரம்பியதால் காற்று கோபித்து கொண்டு சென்று விட்டததோ என்று நினைத்தான் அவன்  , வெக்கையினால் புழுக்கம் அதிகரித்தது  ,கண்டக்டர் நீண்ட விசில் ஊத பேருந்து ஒரு ஓரமாக அந்த பிரதான சாலையில் ஒதுங்கி நின்றது" டிக்கெட் எடுக்காதவங்கலாம் டிக்கெட் எடுத்துக்கோங்க ,பாஸ் பன்னி விட்டாவுது எடுத்துகோங்க ,அப்பறம் செக்கிங் வந்தா என்னைய சொல்லகூடாது "  என்று கண்டக்டர் கூறியவுடன் தான் எடுத்து டிக்கெட் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டான்" excume  me "

 இவன் திரும்பினான் , அவள் ஐம்பது ரூபாயை நீட்டி " ஓன்  தேனாம்பேட்  ப்ளீஸ் " இவனுக்கு அது புதியதாய் இருந்தது ஒரு பெண் அவனிடம் பேசி டிக்கெட் வாங்க சொல்வது .அந்த பணத்தை வாங்கினான் ,பாஸ் பண்ணு வதற்கு அந்த செம்பட்டை தலையணை அணுகலாம என்று நினைத்தான்  ,அவன் மறுத்து விட்டால் அசிங்கமாகி விடுமே என்று நினைத்தான்
இவனே கூட்டத்திற்குள்  முண்டியடித்து முன்னேறினான் ,கண்டக்டரிடம் ஐம்பது ரூபாயை நீட்டி " ஒரு தேனாம்பேட்டை " என்றான்  
" அஞ்சு ஓவா டிக்கெட்டுக்கு அம்பது ரூவாய நீட்டுற ,சில்லறையா குடுயா  "
" இல்ல னே " 
" அதுக்கு நா என்ன பண்ண முடியும் " என்றவாறே டிக்கெட் கிழித்து குடுத்து " மிச்ச சில்லரைய    கொஞ்ச நேரம் கழிச்சு வந்து வாங்கிக்கோ "இவன் திரும்பி வந்து அவளிடம் டிக்கெட்டை நீட்டினான் ,மெலிதாக புன்னைகத்தாள் .அந்த புன்னகையில் இளக்காரம் தெரிந்தது அவனுக்கு ,அப்பொழுதான் தோன்றியது நாம் வெகுவேகமாக வேலைசெய்துருக்கிறோம் என்று .டிக்கெட்டை  வாங்கி வைத்து கொண்டு   " பாலன்ஸ் " என்றாள்

" தர்றேன்னு சொல்லீர்க்காரு "
" ஐயையோ அடுத்த ஸ்டாப்பிங்ல   நா எறங்கனுமே " என்று அழகாக வாயை சுளித்தாள்
வேகமாக அவனது பர்சை எடுத்தான் ,அதில் ஐந்து ஆயிரம் ரூபாய்  தாள்களும் சில நூறு ரூபாய்களும் ,சில பத்துரூபாய் தாள்களும் இருந்தது
சரியாக நாப்பது ரூபாயும் ,ஒரு ஐந்து ரூபாய் காசையும் எடுத்து குடுத்தான்
" நா அவருக்கிட்ட வாங்கிக்கிறேன்  "என்றான் 
" தாங்க்ஸ் " என்றாள் இவன் புன்னைகையோடு அமோதித்தான்
இவன் பக்கத்திலிருந்த செம்பட்டை தலையன் அருகினில் இருந்த பெண்மணியை இடித்திருப்பான் போல
" அப்பயே புடிச்சு நானும்  பாத்துகிட்டே இருக்கேன் இடிச்சு கிட்டே இருக்க ,கொஞ்சம் தள்ளி நில்லுயா  " என்றாள்
" அய்யே உன்னிய போய் எவன் இடிப்பான், பாட்டிக்கும் பாவனாக்கும் வித்தியாசம் தெர்யாத எனக்கு ,வந்துட்டா அங்க இருந்து பெருசா ஆட்டிக்கிட்டு " என்றான் செம்பட்டை தலையன்
இந்த சம்பவம் குறித்து  யாரும் எதுவும் உரைக்காதது அவனுக்கு வியப்பாய் இருந்தது .செம்பட்டை தலையனின் முரட்டு உருவம் காரணமாக இருக்கலாம் என்று நினைத்தான்.அப்போது  .அந்த ரசக்களி பெண்ணை பார்த்தான் ,அவளும் இவனை பார்த்தாள் ,பேருந்து நின்றது ,கண்டக்டர் " தேனாம்பேட்டைலாம் எறங்கிக்கோ " அவள் இவனை கடந்து படிகளில் இறங்கி சென்றாள் ,மறைந்தாள்அந்த இருக்கையில் ஒரு கிழவி சென்று அமர்ந்து " வா ராசா ஒக்காரு சும்மா ஒக்காரு " என்றாள் .இவன் அந்த பெண் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தான் . அந்த ரசக்களி பெண் அமர்ந்திருந்த சூட்டை இவன் உணர்ந்தான் ,அப்படியே ஜன்னலை நோக்கினான் ,எதிர்த்த பிளாட் பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாள்ரசக்களி பெண் ,பேருந்து கிளம்பியதுதீடீரென்று தான் இன்னும் மிச்ச சில்லரை வாங்கவில்லை என்பது உரைத்தது அவனுக்கு  ,முன்னேறி  சென்று கண்டக்டரிடம் " மிச்ச்ச சில்லரை " என்றான்.  கண்டக்டர் சில வினாடிகள் இவனை உற்றுநோக்கி விட்டு "எவ்வளுவு தரனும் " என்றார்.


" நாப்பத்தஞ்சு ரூபா " அவன் அந்த சில்லறையை வாங்கியபொழுது ஒரு ஐந்து ரூபாய் காயினை தவற விட்டான் ,அந்த கூட்டத்தினுள் விழுந்த காசை தேடிஎடுப்பதற்க்கு மிகவும் சிரம  பட்டான்  ,மீண்டும் அதே இடத்தில் அமரலாம் என்று வந்தான் ,வேறு ஒரு பெண்மணி அமர்ந்திருந்ததை  கண்டான்.பேருந்து நிறுத்தத்தில் நின்றது ,அந்த செம்பட்டை தலையன் இறங்கி சென்றான் ,பேருந்து கிளம்பியது ,ஒவ்வொரு நிறுத்ததிலும் பேருந்து நின்று செல்ல கூட்டம் குறைய ஆரம்பித்தது ,நன்றாக காற்றும் வர ஆரம்பித்தது ,இவனுக்கு ஜன்னல் ஓர சீட் கிடைத்தது அங்கு சென்று அமர்ந்தான்சிறிது நேரத்தில் " லாஸ்ட் எல்லாரும் எறங்குங்க " என்றார் கண்டக்டர்

எல்லோரும்  இறங்கினார்கள் .இவன் அந்த கனத்த பெண்மணியின்  பின்னாலே இறங்கினான் , அவன் இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இந்தியன் பாங்க் இருப்பதை கண்டான் .அம்மாவிற்கு பணம் அனுப்பி வெகு நாட்களாக ஆகிவிட்டதை உணர்த்தியது .வெகு இயல்பாக அவனது கைகள் பின் பாக்கெட்டிற்கு சென்றது ,ஆனால் பை கிழிந்து தொங்கியது ,சைடு பாக்கெட்டிற்குள் கைகளை விட்டு பார்த்தான் ,பிறகு சட்டை பாக்கெட்டிற்குள் விட்டு பார்த்தான் ,வெறும் நாற்ப்பது ரூபாயும் ஒரு ஐந்து ரூபாய் காயினும் வந்தது ,கண்களை மூடி திறந்தான் , பேருந்தினில் விழுந்த ஐந்து ருபாய் காயினை எடுப்பதற்கு குனிந்து நிமிர்ந்த போது பின் புறத்தில் அந்த செம்பட்டை தலையன் நின்று கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது 


................................................

மீள்பதிவு
.................................................


Read More

27.10.11

ஏழாம் அறிவு

                     தீபாவளிக்கு மிகுந்த எதிர்ப்பாப்புக்குள்ளான படம் ,விஜய் ரசிக பதிவர்களால் மரண மாஸ்(அப்படியென்றால் மரண மொக்கை ) மற்றும் மாஸ் என்டர்டைனர் 'ராம் என புகழப்படும் வேலாயுதம் அது மட்டும் அல்லாமல் சூப்பர் ரஜினிக்கு பிறகு விசை படத்துக்குதான் கூட்டம் அள்ளுதாம்,அப்படிப்பட்ட விஜய்   படத்திற்கே தியேட்டர் கிடைக்க விடாமல் செய்த படம் சூர்யாவின் ஏழாம் அறிவு 
                                                               


மதுரையில் பத்து தியேட்டரில் ஓடுகிறது ஏழாம் அறிவு ,ஏதோ போனால் போகிறது என்று விஜய் படத்தை நாலு தியேட்டரில் ஓட்டுகிறார்கள்   என்று நினைக்கிறேன் .சரி ஓகே அவர்களுக்காக ஒன்றை ஒத்துகொள்வோம் விஜய் ஒரு 'மாசு'ஹீரோ தான் .

தமிழர்களை தலைநிமிர செய்வதற்காகவே படமெடுத்த இயக்குனர் முருகதாஸ் அவர்களுக்கு நன்றி (படம் பார்த்த எல்லோரும் நன்றி என்று கூறிவிடுங்கள் இல்லையென்றால் நீங்களெல்லாம் தமிழர்களே இல்லையென்று கூறிவிடுவார்கள் )

படத்தின் முதல் இருபது நிமிட காட்சிகளிலே போதி தர்மரின் சுருக்கமான வரலாற்றை காட்டுகிறார்கள் .பார்க்க நன்றாகத்தான் இருந்தது .ராஜமாதா ஆணைப்படி சீனாசெல்லும்   போதி தர்மர் சூர்யாவை  எட்டி பார்க்கும் அபிநயா அழகாக  இருந்தார் . சீனா  இந்தியாவில் நிகழ்த்த போகும்  பயோ வார் என்னும் ஆபரேஷன் ரெட்  .அதை செயல் படுத்துவதற்காகவும் கூட ஸ்ருதிஹாசனை போட்டு தள்ளுவதற்காகவும் இந்தியா வரும் வில்லன் ,மனிதர் சின்ன கண்ணை வைத்து கொண்டு எல்லோரையும் பார்வையாலே சாக அடித்து விடுகிறார் அல்லது சாக வைக்கிறார் அப்படி செய்வதற்கு பெயர்தான் ஹிப்னாடிசமாம் அதாவுது நோக்கு வர்மமாம் .நோக்கியோ 
                                                       

ஸ்ருதிஹாசன் - பாடல்களில் அழகாக தெரிந்தவர் மற்ற காட்சிகளில் தெரிகிறார் ஆனால் என் கண்ணிற்கு அழகாக தெரியவில்லை .ஆனால்ஒரு  சந்தேகமும் வந்தது கமல்ஹாசன் அவருக்கு சாப்பாடு ஒழுங்காக போடுவாரா என்று ?.தமிழை அழுத்தம்  திருத்தமாக பேசிகிறார் .நன்றாக நடித்திருக்கிறார் ,நன்றாக நடனமாடுகிறார் 


சூர்யா இருகதாபாத்திரத்திற்க்கும் பொருந்துகிறார் . ஆனால் போதி தர்மருக்கு கொஞ்சம் யோசிக்க வைக்கிறார் .வில்லனும் சூர்யாவும் கிளைமாக்ஸ் காட்சியில் சண்டைபோடும் போது மரத்தையே முறிக்கிறார்கள் அதை ஆவென்று பார்த்த எனக்கு கழுத்து சுளுக்கி கொண்டது .படத்தின் இரைச்சல் நன்றாக இருந்தது (அதாங்க இசை )

நாம் மறந்து விட்ட ஒரு தமிழரை ஞாபகபடுத்த  வரலாற்றையும் அறிவியலையும் புகுத்தி ஒரு படமெடுத்து அதற்க்கு 84  கோடி ரூபாய் செலவழித்து  புரியவைத்த தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி அப்படியே உங்கள் தாத்தாவிற்கும் நன்றி ஏனென்றால் அவர்தான் தமிழர்கள் அவரை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகவே மிதப்பார் 

படம் நன்றாக இருக்கிறது இல்லை கூறுவதை விட . இவர்கள் செய்த ப்ரோமோசன் வேலைகள் தான் இங்கே இவர்களை இவ்வளவு தூரம் கேள்வி கேட்கவைத்திருக்கிறது .உதயநிதி ஸ்டாலின் ஒருவேளை இப்படி கூறியிருக்கலாம் முருகதாசிடம் 


எங்க தாத்தா தமிழர் தமிழர் சொல்லியே வாழ்ந்தவரு நீங்களும் அதே தமிழ் தமிழ் ன்னு சொல்லியே படத்து ஒட்டி குடுத்துடுங்க ஏன்னா படத்துக்கு ரொம்ப செலவளுச்சாச்சு .
எனக்கு உண்மைலே தமிழர்ன்னு சொல்லி இந்த படத்தை  பார்த்து பெருமையே வர வில்லை ஆனால் பெருமை வந்தது  படம் தொடங்குவதற்கு முன்னாள் தேசியகீதம் இசைத்தார்கள் எல்லோரும் எழுந்து நின்றோம் அந்த இடத்தில் நான் இந்தியன் என் பெருமை அடைந்தேன் Read More

26.10.11

தாத்தா வேலைக்கு செல்கிறார்

                                                                              
மாலை மங்கிய நேரம் .அந்த தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்து ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திய போது, காவலாளி இங்கே வண்டியை நிறுத்தக்கூடாது இன்னும் உள்ளே சென்று நிறுத்தவேண்டும்  என்று எனது அவசரம் புரியாமல் கூறினான் .வசதியாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கிடையில் எனது வண்டியை சொருகினேன் .மருத்துவமனைக்கே உண்டான நெடி மூக்கில் பரவியது .வரவேற்பறையில் ஒரு வெள்ளை சுடிதார் பெண்மணி மிக தீவிரமாக எதையோ எழுதிகொண்டிருந்தாள்.அவளை அணுகியபோது அவளே நிமிர்ந்தாள்.பெத்தம்மாள் என்ற பெயரில் யாரைவுது அனுமதித்திருக்கிறீர்களா என விசாரித்தேன் .அவள் 302  என்று கூறினாள் நோட்டில் எழுதிக்கொண்டே .விடியலிலே ஆசைமாமா போன் செய்திருந்தார்.அம்மாச்சியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறோமென்றுஅம்மா அப்போதே  பதறியடித்தாள் உடனே ராஜபாளையம் செல்ல வேண்டுமென்று .அப்பா என்னையும் கூட போக சொன்னார் ,நான் மதியத்திற்குள் ஒரு முக்கியாமான வேலையை முடிக்க வேண்டும் நீங்கள் முன்னால்  செல்லுங்கள் நான் சாயிந்தரத்திற்க்குள் வந்து விடுகிறேனென்று அம்மாவை மாட்டுத்தாவணியிலிருந்து ராஜபாளையம் பேருந்தில் ஏற்றிவிட்டேன் .மதியம் மூன்றுமணிக்கு மேல்  எனது வண்டியிலே ராஜபாளையம் சென்று விட்டேன் .ராஜபாளையத்தை அடைந்தபோது ஐந்தரை மணி

அது தனியார் மருத்துவமனையாகயிருந்தாலும் கூட்டமாக இருந்தது .நோய்களுக்காக மருந்து கண்டுபிடித்தது போய் மருந்துகளுக்காகவே நோயாளிகள் உருவாக்கபடுகிறார்களோ என்னவோ.என்னுடைய பதினைந்தாவது வயது வரை ராஜபாளையத்தில் பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன் ,பெத்தம்மாள் என் அம்மாவின் அம்மா .எனக்கு அம்மாச்சி , அழைப்பது அம்மாயி .அந்த வார்டில் கடைசியாக இருந்த அறையைநோக்கி நடந்து கொண்டிருந்தேன் ,நான் சரியாக உள்ளே நுழைந்தபொழுது பரமேஸ்வரி அத்தை வெளியில் வந்தார் ,என்னை பார்த்து விட்டு விலகி நின்றார். அறைமுழுவதும் மௌனம் சூழ்ந்திருந்தது ,சுவற்றோமாக இடபட்டிருந்த  கட்டிலில் அம்மாயியை கிடத்திவைத்திருந்தார்கள் .அம்மா கட்டிலின் ஓரமாக உட்கார்ந்திருந்தாள்,அம்மாயி சலனமில்லாமல் இருந்தாள்     அவள் முகம்  நுப்பத்தைந்து வருட உழைப்பின் ரேகைகளாக உருமாறியிருந்தது.சற்று தள்ளி ஒரு பெஞ்சில் தாத்தா கால்களை தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார் .எல்லாவற்றிக்கும் தாத்தாதான்  காரணம் .என்னுடைய ஐந்தாவது வயதிலிருந்து அம்மாயி தான் என்னை வளர்த்தாள்.அவ்வப்போது அம்மா வந்து பார்த்து விட்டு செல்வாள் .வீட்டில் மிகவும் பண  கஷ்டம் என்னை படிக்க வைக்க முடியாது ,தம்பி கை குழந்தை .ஒரு முறை அம்மாயி வீட்டிற்கு  வந்தபோது என்னையும் கூடவே கூட்டி வந்து விட்டார் .ராசு மாமாவும் நானும் வெளியில் வந்தோம் .'ஒழச்ச ஓடா தேஞ்ச ஒடம்பு .தீடீர்னு கையி காலு இலுதுக்கிச்சு பக்கவாதம்னு சொல்றாங்க' .அப்படியே திரும்பி பார்த்தார் தாத்தா மூக்கு பொடியை கடைவாயிக்குள் திணித்து கொண்டிருந்தார் .எல்லாம் இந்த கெழட்டு பயலாலதான் என்றார் மாமா .

எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே தாத்தா வேலைக்கே சென்று பார்த்ததே இல்லை இரண்டு ஆண்பிள்ளைகள் வளர்த்து இரண்டு பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தது எல்லாம் அம்மாயி தான் .அதனால் என்னையும் வளர்த்தது அவளுக்கு மிக பெரிய விஷயம் இல்லை .அப்போதுதான் ஆசை மாமாவிற்கு கல்யாணம் ஆன சமயம்.ராசுமாமவிற்கு கல்யாணம் ஆகவில்லை .ஆசை மாமாவை பக்கத்து தெருவில் வீடெடுத்து குடிவைத்தாள்.நான், அம்மாயி ,ராசு மாமா ,தாத்தா என ஒரு வீட்டில் இருந்தோம் .ராசு மாமா தச்சு வேலைக்கு சென்றுகொண்டிருந்தார் .அவர் என்னை பெரிதாக ஒன்றும் கண்டுகொண்டதில்லை .காலையில் சென்றால் இரவுதான் வருவார் .அம்மாயி ராஜபாளையத்தில் ஒரு பஞ்சாலையில் ஸ்பின்னராக வேலைபார்த்தார் .அந்த பஞ்சாலையில் பஞ்சு பொருக்குபராக சேர்ந்து பின்னர் வேலையை கற்று கொண்டு ஸ்பின்னராக உயர்ந்தாள்  அந்த வருமானத்தில் தான் குடும்பத்தை காப்பாற்றிருக்கிறாள் .இது போக தினமும் தாத்தாவிற்கு தண்ணி அடிப்பதற்கு காசு குடுப்பாள் .அம்மாயி சமைத்து வைத்து விட்டு சென்று விடுவாள் .சாயிந்தரம் ஏழு மனியாவதுஆகும் வருவதற்கு .நான் வெளியில் விளையாட சென்று விடுவேன் .அந்த தெரு பையன்களுடன் சில்லாக்கு விளையாண்டு கொண்டிருக்குபோது பின்னாலே முருங்க குச்சியால் அடிப்பார் .'தொரைய வந்து கூட்டிட்டு போனாதான் சாப்பிடுவீங்களோ நாயி நாயி ' என்று அடித்து இழுத்து செல்வார் .'அப்படிதான் போடு குண்டிலேயே போடு செத்த பொடி மட்ட வாங்கிட்டு வாடான்னா நகலமாட்டேன்ட்டானே  ஒம்ம பேராண்டி '  என்பார் அந்த தெருவின் முக்கு வீட்டு நாயுடு தாத்தா .  சிலசமயம்  நாங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுபோது 'என்னது இது ரசமா என்று அம்மாயி தலையில் ஊற்றிவிடுவார் .எனக்கு நன்றாக இருந்த ரசம் தாத்தாவிற்கு எப்படி நன்றாக இல்லாமல் போனது என்று நான் யோசிப்பேன் .சில சமயம் நகைச்சுவையாக  ஏதாவது சொல்வார் .'இங்கேரு உன் அம்மாயிவச்ச  தேங்க சட்னி எங்கிட்டோ ஓடுது பாரு .புடி புடி' என்பார்

சிறுவயதில் அம்மாயி கூறிய கதைகள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது .குட்டையன் கதை ,காக்கா குருவி கதை , குண்டி மறந்தவன் கதை .என நிறைய கதைகள் கூறுவாள் .தினமும் இரவு தூங்கும் போது கதை கூறுவாள் .அம்மாயி குண்டி மறந்தவன் கதை சொல்லு என்பேன் . சே அது ஆய் கதை அது வேணாம் உனக்கு குட்டையன் கதை சொல்றேன் என்பாள் .இல்ல எனக்கு அந்த கதை வேண்டாம் என்று அடம்பிடிப்பேன் .சரி இந்த ஒரு தடவதான் என்று கூறிவிட்டு அந்த கதையை கூறுவாள் .ஒரு ஊருல ஒருத்தன் இருந்தானாம் அவன் தெனமும் கொல்லைக்கு சொம்புநெறைய தண்ணி  எடுத்துட்டு போவானாம் .அவன் இருந்து' முடுச்சிட்டு கால் கழுவதற்காக சொம்பு எடுக்க கைய கொண்டு போறப்ப ஒரு காக்கா வந்து சொம்ப தட்டி விட்டுடுமாம் .தண்ணியெல்லாம் கொட்டி போயிடுமாம் .தெனமும் அந்த காக்கா இப்படித்தான் பண்ணுமாம் .இவனுக்கு அந்த காக்காமேல ரொம்ப கோபம் .என்னடா தெனமும் இந்த காக்கா  இப்படியே பண்ணுதே இதுக்கு எதாவுது வழி பண்ணனுமே யோசிச்சானாம் .அதே போல அன்னைக்கு சொம்பு நெறைய தண்ணி எடுத்துகிட்டு போனானாம் அதே போல காக்காவும் மரத்து மேல ஒகாந்திருக்கு இவனையே பாத்திட்டிருக்கு  .நேர அவன் வழக்கமா போற மரத்து பின்னால போயி  உக்காரதுக்கு முன்னாடியே கழுவிட்டு உக்காந்தானாம் அப்படியே காக்கைய பாத்து இப்ப என்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ என்றானாம் .என்று கூறிவிட்டு சிரிப்பாள் .எனக்கு அப்போது அந்த கதை புரியாவிட்டாலும் அம்மாயி சிரித்ததற்க்காகவே நானும் சிரிப்பேன்

சற்று பெரியவனான பிறகு ஏன் அம்மாயி உனக்கும் தாத்தாவுக்கும் எப்படி கல்யாணம் ஆச்சு என்பேன் .அதையேன் கேக்குற ,கல்யாணத்துக்கு போனவள புடுச்சு உன் தாத்தனுக்கு கட்டி வச்சிட்டாங்க .கல்யாணத்தன்னைக்கு பார்த்திருக்காங்க அந்த பொம்பளைக்கு நொட்டாங்கையில ஒத்த வெரலு இல்லையாம் .உங்க தாத்தன் நான் கல்யாணம் பண்ணமாட்டேன்னு சண்ட போட்டோடன .என்னைய புடுச்சு கல்யாணம் பண்ணிவச்சுட்டாங்க .அப்பமதுரை ஆரப்பாளையத்துல  உங்க தாத்தாவும் மளிகை கடை வச்சு நடத்திட்டு வந்தாரு .அதுக்கப்பறம் அதலாம் வித்துபுட்டு நான் சினிமா படம் எடுக்க போரன்னேனு எவன் கிட்டையோ மொத்த காசையும் ஏமாந்தாறு .அதுக்கடுத்து இருக்குற வீட்டையெல்லாம் வித்து சீமைக்கு போயி  ஜவுளி வியாபாரம்  பண்றேன்னு அதுலயும் ஏமாந்தாறு .சாப்பாடுக்கே கஷ்டம் ஆயிடுச்சு சரி இதுக்கு மேல இங்கிருக்க வேண்டாம்னு கிருஷ்ணன் கோவிலுக்கே வந்துட்டோம் அப்பலாம் உங்க அம்மாவும் சித்திலாம் வயசுக்கு கூட வரல .எங்க பாத்தாலும் ஒரே பஞ்சம் பட்டினி .ஒரு தடவ அந்த பக்கம் போன ரவை லாரி கவுந்துடுச்சு .மண்ணுல மூட்ட மூட்டையா சரிஞ்சு கெடக்கு
 ஊருக்காரவுங்க எல்லாம் ரவை அள்ளிட்டு வந்து ஒரு பெரிய அண்டாவுல தண்ணியை ஊத்தி அதுல ரவையை  கொட்டி .மன்னுலாம் தண்ணிக்குள  எறங்குனவுடனே ரவையை எடுத்து காய வச்சு வறுத்து மூணுநாளைக்கு  சாப்பிட்டோம் .அப்பதான் ராஜபாளயத்துல பஞ்சாலைக்கு ஆள் எடுக்குறாங்க கேள்வி பட்டு நானும் உங்க தாத்தனும் போனம் .ஆனா உங்க தாத்தேன் கொஞ்சநாள்லே  வேலையே விட்டு வந்துட்டாரு .அதுக்கடுத்து இன்னம் வரைக்கும் உங்க ஒத்த வேலைக்கு போனதில்லை என்பாள்

அம்மாயி நான் கல்யாணம் பண்ணேனா உனைய மாதிரி ஒரு பொன்னா பாத்து கல்யாணம் பண்ணிக்குவேன்.வேலைக்கே போக வேனாம்பாரு ,அம்மாயி புன்னகைப்பாள்

அம்மாயி இந்தியா முழுவதும் சுற்றிபார்த்திருக்கிறாள் .அவள் வேலை பார்த்த பஞ்சாலை நிறுவனம் அங்கு வேலைபாத்த அனைவரையும் ஒருமுறை  சுற்றுலா அழைத்துசென்றிருக்கிறது.நான் பத்தாவதுக்கு மேல் மதுரை வந்துவிட்டேன் .ஆனாலும் அவ்வப்போது ராஜபாளையம் சென்றுவிடுவேன் .அம்மாயி வைக்கும் மீன் குழம்பிற்க்காகவே ஞாயிற்றுக்கிழமையாக பார்த்து செல்வேன் 'மாப்புள வா வீட்டுக்கு போவம் ஆசுபித்திரில யாராச்சும் ஒருத்தர் தான் இருக்கமுடியுமாம் ,அம்மா இங்க இருக்காம் 'என்றார் ராசு மாமா .அம்மாவை பார்த்தேன் இருந்து விட்டு  காலையில் செல்  என்றார் .அதற்கு பின் பத்து நாட்களுக்கு மேல் இருக்கும் நான் மதுரை வந்து விட்டேன் .நடுவில் இரண்டு முறை ராஜபாளையம் சென்று வந்தேன் அம்மா அங்கேயேதான் இருந்தார் .இரண்டு  அத்தைமார்களும் சாப்பாடு மட்டுதான் கொண்டுவந்து தருகிறார்களாம் .அம்மாயியின் கழிவுகளை பார்த்து மூக்கை பிடித்து கொள்கிறார்களாம்.அதற்காகவே அம்மா இருக்கவேண்டியதாகிவிட்டது     .அம்மாயியை வீட்டு அழைத்து வந்து விட்டதாக அறிந்தேன் .அம்மாயி நன்றாக கண்முழித்து பார்க்கிறாளாம் .எப்போது ஒன்றிரண்டு வார்த்தை பேசுகிறாளாம் .அம்மா போனில் கூறினார் .என்னை ஒரு முறை பார்க்கவேண்டும் என்று கூறினாளாம் .போக வேண்டும் .தாத்தா என்ன செய்கிறார் என்று விசாரித்தேன் .சில நாட்களுக்கு முன்னால் மாமாவிடம் பணம் கேட்டிருக்கிறார் .மருமகளுக பொங்கி போடுறத தின்னுபுட்டு வீட்டுல கெடக்குரதுன' கெட .தாத்தா அம்மாயியின் பென்சன் காசை கேட்டிருக்கிறார் .அம்மாயிக்கு அந்த பஞ்சாலைக்கே பிரத்யோகமாக செயல்படும் பாங்கி லிருந்து மாசம் மாசம் பென்சன் என்ற பெயரில் கொஞ்சம் பணம் வரும் .அதற்க்கு மாமாக்கள் இருவரும் அந்த காச வச்சுதான் உன் பொண்டாட்டிக்கு வைத்தியம் பார்த்தது .இன்னும் அதுக்கு மேலதான் செலவாகுது .என்று கூறி மரியாதை இல்லாமல் பேசிருக்கிறார்கள் .தாத்தா கெட்டவார்த்தையாக திட்டி விட்டு வந்திருக்கிறார் .அப்போது எடுத்த முடிவுதான் வேலைக்கு செல்வது என்று .
Read More

25.10.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10

இனிய நட்புகளுக்கு வணக்கம்
                                .
                           வம்சி பதிப்பகத்தாரும் எழுத்தாளர் மாதவ்ராஜும் நடத்தும் சிறுகதை போட்டி .மேலதிக தகவலுக்கு http://www.mathavaraj.com/2011/10/blog-post_02.html

தேர்தெடுக்கப்படும் முதல் சிறந்த சிறுகதைக்கு ரூ.10000/-மும், இரண்டாவது சிறுகதைகள் இரண்டிற்கு தலா ரூ.5000/-மும் கொடுக்க வம்சி பதிப்பகம் முன்வந்திருக்கிறது.பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்
 

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலும் அதன் முடிவுகளும் அ.தி.மு.கவிற்கு சாதகமாக அமைந்துள்ளது .பொதுவாக உள்ளாட்சி முடிவுகள் ஆளும் கட்சிக்கே சாதகமாக அமையும் .இந்ததேர்தலிலும் மிக முக்கியமாக  சாதி கட்சிகளை மக்கள் புறம் தள்ளிவிட்டார்கள் .
                                  தி.மு.க பரவாயில்லை பல இடங்களில் முறையே இரண்டு அல்லது மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறார்கள் .இத்தேர்தலில் பலமான வீழ்ச்சியை தேடிகொண்டது காங்கிரஸ்தான்  .இவர்களெல்லாம் தனித்து நிற்ப்பதை பற்றி யோசிக்கலாமா . கலவர பூமியான சாஸ்த்திரிபவனில் வேட்டிகளை அவிழ்த்து பார்த்து உள்ளாடை நிறுவனம் என்னவென்று பரிசோதிப்பதற்கே    அவர்களுக்கு நேரமில்லை .இந்த தொங்கபாலுவின் மூஞ்சியை சும்மாவே பார்க்க முடியாது . இந்த ஈ.வீ .கே .எஸ் .இளங்கோவனுக்கு  மொத்தமாக வாயில் வைத்து அனுப்பினாலும் அடங்கமாட்டிங்கிறாரே .ஆனாலும் அவரது நேர்மையை நாம் பாராட்டியே ஆகவேண்டும் .அவர்கள் தோல்வியை எதிர்பார்த்தார்களாம் .ஆனால் இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லையாம் .இந்த உதிரி கட்சிகளான பா.மா.க ,விடுதலை சிறுத்தைகள் . தங்களது அட்ரஸ்சை தேடுவதாக கேள்வி .ம.தி.மு.க கூட சில இடங்களில் வெற்றிவாகை சூடி உள்ளனர்

சோப்பு : 
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு

                                                         
ஹலோ யாரு அம்மாங்களா ஏதோ  கொஞ்சம் போதைல அப்படி இப்படி பேசிருப்பேன்.அதலாம் மனுசுல வச்சுக்காதீங்க சீப்பு : 
                        தீபாவளிக்கு   வரவிருக்கும்  படங்களில் பெரிதும் எதிரிபார்ப்பை கிளப்பியிருக்கிறது .சூர்யாவின் 'ஏழாம் அறிவு .அதிகமான விளம்பரம் மற்றும் இயக்குனர் முருகதாசின் பேச்சு என கடுப்பை கிளப்பினாலும் .படம் பார்க்க வேண்டும் என்ற சிறு ஆவல் எழுந்திருக்கிறது .

கிராமத்தில் ஒருநாயன் பால் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் .அவருக்கு ஒரு தங்கச்சி .தங்கச்சியின் என்றால் கொள்ளை பிரியம் .இந்நிலையில் அவரின் மாமா பொண்ணு அவர் மேல் உரசி உரசி காதலிக்கிறார் .பறவை காய்ச்சல் போல் மாட்டு காய்ச்சல் என எவனோ ஒருவன் புரளியை கிளப்பி விட .பால் வியாபாரம் படுத்துவிட .தங்கச்சியின் கல்யாணத்திற்குகாக  சேர்த்து வைத்த காசை அவரின் லட்டு போன்ற தங்கச்சியை விட்டுவிட்டு சிட்பண்ட காரர்கள்  பணத்தை தூக்கி கொண்டு ஓட .அவர்களை துரத்தி பட்டணம் வர .அங்கே ஒரு நாயகி,மற்றும் காதல் .வில்லன்கள் என மோதல் , .ஆங்காங்கே நகைச்சுவை நடிகருடன் காமெடி ,அனல் பறக்கும் பஞ்ச வசனங்கள் ,அறிமுக பாடல் ,இரண்டு நாயகிகளுடன் தலா ஒரு பாடல் ,பிறகு ஒரு குத்து பாடல் ,முடிவில் வில்லனை வீழ்த்துவது .என உலக சினிமாவிற்கு போட்டியாக களமிறக்க பட்டிருக்கும்  படம் தான் எங்க இளைய தலைவலி டாகுட்டார் அவர்களின் வேலாயுதம் 

துத்தேறி வேலாயுதமாவது வெங்காயுதமாவது.இருநூறு நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடும் எங்களது பவர்ஸ்டாரின்    லத்திகாவிற்கு கால் தூசி வருமா
கொல கொலயா முந்திரிக்கா எங்க  பவர் ஸ்டார் அடிச்சா நீ கத்திரிக்கா 

இவன் 
பவர் ஸ்டாரின் பரம பக்தன் 

கண்ணாடி :
தீபாவளி   நினைவுகள் :
               பத்துவருடங்களுக்கு முன்னால் தீபாவளி வருகிறது என்றால் ஒரே கொண்டாட்டம்தான் .புத்தாடைகளை அணிந்து தெருவில் நண்பர்களோடு வளைய வருவது .நீண்ட பத்திகளை வைத்து கொண்டு வெடியை பற்றவைக்க பயப்படும் தாவணி ,சுடிதார், மிடி பெண்கள் முன்னிலையில் சரத்தை கையில் புடித்து பற்றவைத்து தூக்கி எறிவது ,ராக்கெட்டை கையில் புடித்து விடுவது என அலும்புகள் செய்வது .புடிக்காதவர்கள் வீட்டில் வெங்காய வெடியை எரிந்து விட்டு ஓடிவிடுவது .இன்னும் சிறுவயதில் அம்மா தீபாவளிக்காக இரண்டு நாட்களுக்கும் முன்னாள் செய்யும் பலகாரங்களை திருடி தின்று காலிசெய்துவிடுவது, தீபாவளி அன்று மட்டும் என்னைதேய்த்து குளிப்பது . .பிறகு கறிகொளம்புடன் இன்ன பிற பலகாரங்களை ஒரு கை பார்ப்பது .பெரிய வெடிகளை காலையில் வெடிப்பது ,புஸ்வானம் ,சங்குசக்கரம் போன்றவைகளை இரவு வெடிப்பது .கொஞ்சம் வெடிகளை மிச்சம் வைத்து பெரிய கார்த்திகை அன்று வெடிப்பது .ம்ம்ம்ம்ம்ம் நினைவுகள் சுகமானவை

 அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் 


கில்மானந்தாஸ் தத்துவம் -003 :

முடியும் என்றால் முயற்சி செய் ....... முடியாதென்றால்    ம்ம்ம் பயிற்சி செய்

Read More

24.10.11

கஞ்சா- சில குறிப்புகள்

                                                                                   

                     ஒரு மதிய வெயிலில் யாகப்பா நகரின் கடைசியில் உள்ள அம்மன் டீ ஸ்டால் என்ற பெயர்ப்பலகை  தாங்கிய தேநீர் கடையில் சிகுரெட்டை பற்றவைத்து முதல் புகையை வெளியில் விட்டு கொண்டே காளிமுத்து " ஒரு தடவ டோப்பு அடிச்சு பாப்போமா " என்றான் .ரஞ்சித் சோமுவை பார்த்தான் .சோமுவிற்கு ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் அடித்துதான் பார்ப்போமே என்று ஆவலும் எழுந்தது .சரி என்று தலை ஆட்டினான்.மேலும் காளிமுத்து  தான் படிக்கும் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் அடிப்பதை பார்த்திருக்கின்றேன் என்றும் அதை எப்படி பக்குவமாக சிகுரெட்டில் ஏற்ற வேண்டும் என்று தனக்கு தெரியும் என்று கூறினான் . வண்டியூர் சவுராஷ்டிரா புறம் நிறுத்தத்தில் இருந்து உள்ளே செல்லும் அனுமார் கோவில் வழியாக  ஆத்து மண்டபத்தை அடைந்தால் .அங்கே கைலியை கட்டிக்கொண்டு கவட்டை கால்களுக்குள் ஒரு மஞ்ச பையை வைத்து கொண்டு ஒருவன்  சுற்றிகொண்டிருப்பான் .அவனிடம் கஞ்சா கிடைக்கும் என்று கூறினான் காளிமுத்து .மூவரும் அங்கே செல்வதென தீர்மானிக்க பட்டது .காளிமுத்து சோமுவை சைக்கிளில் ஏற்றி கொண்டான் .ரஞ்சித் தனியாக சைக்கிளில்  வந்தான் .
Read More

17.10.11

தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?

இனிய நட்புகளுக்கு வணக்கம் 
        
                                            டெர்ரர் கும்மியில் வந்த தமிழ்மணம் பயங்கர டேட்டாவும் அதை தொடர்ந்து வந்த பெயரிலி என்பவரின் கேவலமான கமென்ட்டுகளும் .இஸ்லாமிய சகோதரர்களின் முகமனை மிக மட்டமான முறையில் கேலிசெய்யும் விதமாக இடப்பட்ட கமெண்ட்டும் கண்டிக்கத்தக்கவை .எனது வன்மையான கண்டங்களை பதிவு செய்கிறேன் 
                                                      
சில வருடத்திற்கு  முன்னால் தான் தமிழ்மணம் பற்றி அறிந்தேன்  .அதன் மூலமாக பலரது பதிவுகள் படிக்கலாம் என்று தெரிந்தது .பின்பு நாமும் வலைப்பூ எழுதலாம் என்று முடிவெடுத்தேன் .தமிழ்மணத்திலும் இணைத்தேன் .அதன் மூலமாக எனது பதிவுகள் நிறைய பேர் படித்தார்கள் .அந்த வகையில் தமிழ்மணத்திற்கு என் நன்றி 

 சில நாட்களுக்கு  முன்னால் தமிழ்மணம் சில நல்ல செயல் செய்திருக்கிறார்கள் என்று எண்ணினேன் ,ஆனால் அதற்க்கெல்லாம் மொத்தமாக திரிஷ்டி பூசணிக்காய் முச்சந்தியில் உடைத்தது போல் ரமணிதரன் என்கிற பெயரிலி பொங்கிய பொங்கலின் தரம் -நிறம் -குணம் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு வேண்டுமானால் செரிக்கலாம் .ஆனால் எங்களுக்கு தமிழ்மணம் என்கிற பொங்கல் வேண்டாம் 

சில நாட்களுக்கு முன்னால் தமிழ்மணம் குலுக்கிய உண்டியலில் காசு சேரவில்லையோ என்னவோ ? அதனால்தான இப்படி பதிவர்கள் மீது  வசை பாடிருக்கிறார்கள் போல .உலகத்திலே நீங்கள் ஒருவர்தான் திரட்டி வைத்து நடத்துகிறீர்கள் போலவும் .வேறு திரட்டிகளே இல்லையா என்ன ?

நீர் என்னையா எங்க வலைப்பூவை நீக்குவது நாங்கள் நீக்குகிறோம் உங்களை .உங்களது சேவை எங்களுக்கு தேவை இல்லை Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena