வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

18.12.10

நண்பேன்டா

             ஏரியா டீக்கடையில் நானும் என் நண்பன் விஜய்யும் தேநீர் பருகிகொண்டிருந்தோம்.

" டே நவீன் வர்றாண்டா " விஜய்

"வாடா மச்சான்  ஒரு  தம்மு சொல்றா " நான்

"டே வாங்க டா சரக்கே வாங்கித்தரேன் " நவீன்
நேரம் காலை 10 மணி .வெயில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்தது

"என்னடா செழும்பா இருக்க  போல " நான்

" உங்கப்பாரு பைய்ல அதிகமா அடிச்சிட்டியோ " விஜய்

" இல்லடா எக்ஸாம் பீஸ்னு எக்ஸ்ட்ராவா மீட்று போட்டேன் " நவீன்
ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்தோம்


" என்ன பீர் சொல்லலாம் " நவீன்

" அதுக்கு பதிலா மு ................... குடிக்கலாம் , எதுவாது ஹாட் சொல்லு " நான்

" அவ்வளவு காசு இல்லடா " நவீன்

" அவ்வளவு காசு இல்லைனா என்ன வெளக்கனைக்குடா  எங்கள தள்ளீட்டு வந்த " நான்

" சரி விடுறா இதையே அடிச்சுட்டு போவோம் " விஜய்
ஆளாளுக்கு ஒவ்வொரு பீர் வந்தது . அடிக்க ஆரம்பித்தோம்

" டே மணி பக்கத்து டேபிளுக்கு அடியில பாரு ஒரு குவாட்டர் இருக்கு " விஜய்

" மணி எவனையும் ஆளக்காணோம் எடுத்து சீக்கிரம் பாகெட்டுக்குல வச்சுக்க வெளிய போய் அடிச்சுக்குவோம் " நவீன்

அதே போல் செய்தேன்

பீர் அடித்து முடிக்கும் தருவாயில் பக்கத்து டேபிளுக்கு ஒரு வந்தான் ,நல்ல கட்டுமஸ்தான உடம்பு ,டேபிளுக்கு அடியில் கையை அலைத்தான்.
" தம்பிகளா இங்க ஒரு குவாட்டர் இருந்துச்சு பாத்தீங்களா "

" அண்ணே இவன் தானே பாக்கெட்ல எடுத்துவச்சான் " நவீன்

கைநடுக்கத்துடன் அவனிடம் எடுத்து குடுத்தேன்

" காக்கா தூக்கிட்டு போயிடுமேன்னு தாண்ணே பாக்கெட்ல எடுத்துவச்சேன் "
" காக்கா தூக்கிட்டு போறதுக்கு இதென்ன வடையா குட்றா முதல  நானே என் பொண்டாட்டி பக்கத்து வீட்டுகாறேன் கூட ஓடி போய்ட்டாளேனு கடுப்புல இருக்கேன் "

வெளியில் வந்தோம்
" ஏண்டா நாக்க தொங்க வந்தேன் பாரு என் புத்திய செருப்பாலே அடிக்கனும்டா" நான்

" சரி வாடா கோவிச்சுக்காதடா அந்தாள பாத்தேலஅதான்  பயத்துல உண்மைய உளறிட்டேன் "நவீன்

"வாட போறவரைக்கும் என்னால வீட்டுக்கு போகமுடியாது வா வேற எங்கியாவது போவோம் " நான்

 "சரி வாங்க என் ஆளு இப்ப டியுசன் விட்டு வர்ற நேரம்தான் அங்க போவோம் " நவீன்


" என்னது ஆளா யாருடா " நான்

" வாங்கடா காட்டுறேன் " நவீன்

" நா வல்லப்பா நா வீட்டுக்கு போறேன் " விஜய்

" டே அவன் கெடக்காண்டா வாடா நம்ம போவோம் " நவீன்
சந்து சந்தாக கூட்டிசென்றான் , ஒரு மரநிழலில் நின்றோம்

" டே என்னடா அரை மணிநேரமா நிக்கிறோம் ஆளையே காணோம் " நான்

" இந்த இப்ப வந்துடுவாடா " நவீன்
வந்தாள் லேடி பேர்ட் சைக்கிளில். எங்கள் இருவரையும்  கடந்து சென்றாள் ,மெலிதான ஒரு புன்னகை சிந்துனமாதிரியும் சிந்தாதமாதிரியும் இருந்தது

" எப்படி  இருக்கு " நவீன்

" பாத்தாச்சுல வா வீட்டுக்கு போவம் "

நண்பனின் வீடு வந்தது "சரி சாய்ங்காலம்  பாப்போம் " நவீன்

என் வீட்டை நோக்கி நடந்தேன் , அந்த மரநிழலை தாண்டி சென்றுகொண்டிருந்தேன்
ஒருவர் என்னை  கை மறைத்து  அழைத்தார்
" தம்பி கொஞ்சம் வாங்களேன் ஒரு கையி கொறையுது ,ஒன்னு தூக்கணும் "

" என்னது தூக்கணும் " நான்

" பீரோ "

" அப்படியா சரி வாங்க போவோம் " நான்
அந்த வீடு வந்தது வீட்டிற்கு வெளியில் நாலைந்து ஆண்களும் இரண்டு பெண்களும் நின்றுகொண்டிருந்தார்கள் .
" என்னனே அதான் இவ்வளவு பேரு இருக்கீங்களே அப்பறமெதுக்கு என்னைய கூப்பிட்டீங்க " நான்

" இரு தம்பி "

" அண்ணே  இவன்தானாம்னே "நின்றுகொண்டிருந்தா ஆண்களில் ஒருவன் கூறினான்

" ஏன்டா ரோட்ல தனியா போற பொண்ண கைய வா  புடுச்சா இழுக்கிற " என் அழைத்து வந்தவர் கூறினார்

அதன் பின்
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம் 
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம்
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம் 

தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம்
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம்

கூட்டம் விலகியது அந்த லேடி பேர்ட் பெண் தெரிந்தாள்

" எந்திருச்சு ஓட்ரா அடுத்து உன்ன இந்த ஏரியா வுல பாத்தேன் " எழுதமுடியாத கெட்டவார்த்தையாக  கூறினார் .

அடிச்ச போதைஎல்லாம் எறங்கி போச்சே ஐயையோ ஒத்த கால் செருப்ப வேற காணோம்
நடந்து கொண்டே திரும்பிப்பார்த்தேன் ,ஜன்னலில் அவள் தெரிந்தாள்
அடிப்பாவி நா வாட்டுக்க ஓரமாத்தானடி நின்னுட்ருந்தேன்

அடுத்தநாள் நண்பன் நவீன் வீட்டிற்கு வந்தான்

" டே எனக்கே இப்பதான் டா மேட்டர் தெரியும் விஜயை இப்பதாண்ட வழியில பார்த்தேன்
அடி ரொம்ப ஓவராடா "  நவீன்

" பரவால்லடா நீயும் வந்திரு தேனா அடி பிரிச்சிருப்பாயிங்க ஏதோ  என்னோட போச்சுல விடு

" டே சாரிடா சரி வா சரக்கடிக்க  போவம் ,அடிச்சா கொஞ்சம் வலி  தெரியாது " நவீன்

" ஆமாடா ரொம்ப ஒடம்பு வலிக்குது   " சந்தோசத்துடன் எழுந்தேன்
அதே ஒயின் ஷாப்

" அப்பறம் மாப்ள என்ன சொல்ல " நவீன்


" ஏதாவுது சொல்றா " நான்
அடித்தோம் முடித்தோம்
வெளியில் வந்தோம்

" மச்சான் பக்கத்துல போலீஸ் குவாட்டர்ஸ் இருக்குல அங்க வரைக்கும் போயிட்டு வந்துடுவோம் "  நவீன்

" ஏன்டா தெரிஞ்ச போலீஸ் எவனும் இருக்காங்களா கம்ப்ளைன் லாம் ஒன்னும் குடுக்கவேண்டாம்டா " நான்


" டே கம்ப்ளைன் குடுக்க இல்லடா "

" அப்பறம் "    நான்

" அங்க புதுசா ஒரு பிகர இப்போ தான் ரூட்டு விட்ருகேன் ,கொஞ்சம் கூட மட்டும் வாடா " நவீன்

" என்னாது "

43 கருத்துகள்:

karthikkumar said...

vadai

karthikkumar said...

நல்ல நண்பன்

karthikkumar said...

அடி வாங்கி கொடுத்தாலும் அதுக்கு பதிலா மறுபடியும் சரக்கு வாங்கி கொடுத்தார் பாருங்க. அங்க நிக்குறார் உங்க பிரெண்ட்.

இரவு வானம் said...

மறுபடியும் மொதல்ல இருந்தா? அவ்வ்வ்வ்வ்வ், கதை நல்லா இருக்குங்க

பார்வையாளன் said...

enjoyed

THOPPITHOPPI said...

கலக்கல் கதைங்கோ

விக்கி உலகம் said...

என்ன கொடும இது!?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல அனுபவமா வெச்சிருக்கீங்க... அப்புறம் போலீசு அடி வாங்கினிங்களா இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
அடி வாங்கி கொடுத்தாலும் அதுக்கு பதிலா மறுபடியும் சரக்கு வாங்கி கொடுத்தார் பாருங்க. அங்க நிக்குறார் உங்க பிரெண்ட்./////

நல்லா நிக்கிறாரு...

ஜீ... said...

nice! :-)

பதிவுலகில் பாபு said...

நல்லாயிருக்குங்க..

அடி பலமோ... :-)

அரசன் said...

அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா...
இருந்தாலும் நீங்க ரொம்ப நல்லவருங்க ....

நல்லா இருக்குங்க ... வாழ்த்துக்கள்

வானம் said...

அங்கயும் போக வேண்டியதுதானே. ஜெயிலுக்கு போயித்தான் காந்தித்தாத்தா சுயசரிதையே எழுதுனாராம்.

வானம் said...

சரி லூஸ்ல விடுங்க,30வருசத்துக்கு முன்னாடி நடந்த்தையெல்லாம் இப்ப எழுதிக்கிட்டு..........

philosophy prabhakaran said...

// சரி லூஸ்ல விடுங்க,30வருசத்துக்கு முன்னாடி நடந்த்தையெல்லாம் இப்ப எழுதிக்கிட்டு.... //

Repeattu...

philosophy prabhakaran said...

பீரை விட ஹாட் காஸ்ட்லியா என்ன...?

பாரத்... பாரதி... said...

உண்மையில நீங்க வம்ப விலைக்கு வாங்கும் ஆளுக- தாங்க..

ரைட்டு நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்...

நா.மணிவண்ணன் said...

@karthikkumar

ஸ்டார்டிங் லாம் நல்லாத்தான் இருக்கு பங்காளி நம்ம நண்பன்கிட்ட ஆனா பினிஷிங் சரியில்லையே

நா.மணிவண்ணன் said...

@இரவு வானம்


.ஆமாங்க இரவுவானம் . நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது

நா.மணிவண்ணன் said...

@பார்வையாளன்

எது நா அடிவாங்கினதையா

நா.மணிவண்ணன் said...

THOPPITHOPPI said...

கலக்கல் கதைங்கோ

நன்றிங்க

நா.மணிவண்ணன் said...

விக்கி உலகம் said...

என்ன கொடும இது!?

என்ன கொடும பாத்தீங்களா ஒரு அப்பாவி பையன போட்டு என்ன அடி அடிச்சுருக்க்காயிங்க

நா.மணிவண்ணன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல அனுபவமா வெச்சிருக்கீங்க... அப்புறம் போலீசு அடி வாங்கினிங்களா இல்லியா?


அடி அப்ப வாங்கல ஆனா கொஞ்ச நாள் கழிச்சு வேறா ஒரு விசயத்துக்காக வாங்கினேன் . என்னா அடி .போலீஸ் அடினா என்னனு அப்பதானே தெரிஞ்சுகிட்டேன்

நா.மணிவண்ணன் said...

ஜீ... said...

nice! :-)


நீங்களுமா . வருகைக்கு நன்றிங்க

நா.மணிவண்ணன் said...

பதிவுலகில் பாபு said...

நல்லாயிருக்குங்க..

அடி பலமோ... :-)

லைட் டா

நா.மணிவண்ணன் said...

அரசன் said...

அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா...
இருந்தாலும் நீங்க ரொம்ப நல்லவருங்க ....

நல்லா இருக்குங்க ... வாழ்த்துக்கள்


ஹி ஹி ஹி . நா அடிவாங்குனதுக்கு வாழ்த்துக்களா?

நா.மணிவண்ணன் said...

வானம் said...

அங்கயும் போக வேண்டியதுதானே. ஜெயிலுக்கு போயித்தான் காந்தித்தாத்தா சுயசரிதையே எழுதுனாராம்.


வானம் நீங்க யாருங்க ஒரு அப்பாவி பையன ஜெயிலுக்கு போகசொல்றீங்க

நா.மணிவண்ணன் said...

வானம் said...

சரி லூஸ்ல விடுங்க,30வருசத்துக்கு முன்னாடி நடந்த்தையெல்லாம் இப்ப எழுதிக்கிட்டு..........


wrong question .நா 30 வருசத்துக்கு முன்னால பிறக்கவே இல்ல

நா.மணிவண்ணன் said...

philosophy prabhakaran said...

// சரி லூஸ்ல விடுங்க,30வருசத்துக்கு முன்னாடி நடந்த்தையெல்லாம் இப்ப எழுதிக்கிட்டு.... //

Repeattu...


again wrong question and repeatation

நா.மணிவண்ணன் said...

philosophy prabhakaran said...

பீரை விட ஹாட் காஸ்ட்லியா என்ன...?


வரலாறு தெரியாமல் பேசக்கூடாது பிரபா
சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னாள் ஒரு பீர் 50 ரூபாய்தான் மொத்தம் மூன்று பேர் அடித்தோம் snacks உடன் 170 ருபாய் வந்தது .அதுவே ஹாட் அடித்துருந்தோமானால் ஒரு குவாட்டர் விலை 60 மூன்று பேருக்கு 180 அது போக வாட்டர் பாக்கெட் ,மிக்ஸ்சிங் கலரு மற்றும் snacks என்று அதுவே 250 ருபாய் வரைக்கும் போயிருக்கும் . இது அல்லாமல் ஒரு வேளை போதை நன்றாக ஏறிவிட்டால் மீண்டும் ஒரு குவாட்டர் அடிக்க சொல்லும் அப்படி என்றால் செலவு என்னாகிறது

அது போக
கதைக்கு எப்பவும் கால் கிடையாது

நா.மணிவண்ணன் said...

பாரத்... பாரதி... said...

உண்மையில நீங்க வம்ப விலைக்கு வாங்கும் ஆளுக- தாங்க..

ரைட்டு நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க

மதுரை பாண்டி said...

Good friend.. Machi!! oru quarter sollen!!!

நா.மணிவண்ணன் said...

மதுரை பாண்டி said...

Good friend.. Machi!! oru quarter sollen!!!ஓகே சொல்லீட்டா போச்சு .வருகைக்கு நன்றி நண்பா

ஐயையோ நான் தமிழன் said...

நல்ல நண்பர்கள்..................
ஆமா................அந்த ஃபிகரோட.........
அட்ரஸ் கிடைக்குமா?......
நீங்கதான் மறக்கம ஞாபகம் வச்சிருப்பீங்கல்ல அதான் கேட்டேன்.
என்னடா சம்பந்தமே இல்லாம ஒருத்தன் நுழையறானேன்னு யோசிக்காதிங்க.... நான் பதிவுலகத்துக்கு புதுசு.......................

நா.மணிவண்ணன் said...

ஏங்க ஐயோ நான் தமிழன் நீங்க பதிவுலகத்துக்கு புதுசா இருக்கலாம் ஆனா அதுக்காக

என் தொழிலே மாத்த பாக்குறீங்களே

பாரத்... பாரதி... said...

//என்னா அடி .போலீஸ் அடினா என்னனு அப்பதானே தெரிஞ்சுகிட்டேன்//

கற்றது கையளவு..

rajvel said...

மறுபடியும் மொதல்ல இருந்தா? நல்லாயிருக்குங்க..

நா.மணிவண்ணன் said...

பாரத்... பாரதி... said...

//என்னா அடி .போலீஸ் அடினா என்னனு அப்பதானே தெரிஞ்சுகிட்டேன்//

கற்றது கையளவு..///

கல்லாதது உலகளவு

பழமொழியை பினிஷ் பண்ணிட்டோம்ல

நா.மணிவண்ணன் said...

rajvel said...

மறுபடியும் மொதல்ல இருந்தா? நல்லாயிருக்குங்க..///

வருகைக்கு கருத்துக்கு நன்றிங்க

ஐயையோ நான் தமிழன் said...

"ஏங்க ஐயோ நான் தமிழன் நீங்க பதிவுலகத்துக்கு புதுசா இருக்கலாம் ஆனா அதுக்காக

என் தொழிலே மாத்த பாக்குறீங்களே"


ஹ....ஹ...ஹா....
நீங்கதான் யாரும் எதிரி இல்லை எல்லோரும் அறிமுகமில்லா நண்பர்கள் தான்னு சொல்றீங்களே நண்பனுக்காக இதை கூடவா செய்ய மாட்டீங்க

மண்டையன் said...

philosophy prabhakaran said...

பீரை விட ஹாட் காஸ்ட்லியா என்ன...?/////////////////////////

ஐயையையையோ..............எம்மஎம்மா ..............எப்பேப்பேப்பா .....................

பச்சை புள்ளமாதிரி பேசுறான் சார்....................................

நா.மணிவண்ணன் said...

ஐயையோ நான் தமிழன் said...

"ஏங்க ஐயோ நான் தமிழன் நீங்க பதிவுலகத்துக்கு புதுசா இருக்கலாம் ஆனா அதுக்காக

என் தொழிலே மாத்த பாக்குறீங்களே"


ஹ....ஹ...ஹா....
நீங்கதான் யாரும் எதிரி இல்லை எல்லோரும் அறிமுகமில்லா நண்பர்கள் தான்னு சொல்றீங்களே நண்பனுக்காக இதை கூடவா செய்ய மாட்டீங்க


ஐயோ நான் தமிழன் ஒத்துக்கிறேன் நீங்க உண்மைலே தமிழன்தான்னு

நா.மணிவண்ணன் said...

மண்டையன் said...

philosophy prabhakaran said...

பீரை விட ஹாட் காஸ்ட்லியா என்ன...?/////////////////////////

ஐயையையையோ..............எம்மஎம்மா ..............எப்பேப்பேப்பா .....................

பச்சை புள்ளமாதிரி பேசுறான் சார்....................................


சரி விடுங்க மண்டையன் அவரு "பாலகன்தானே"

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena