வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

30.8.10

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்

 தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினருக்கும் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் தொடர்பான வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாயினர்.
ஆனால், இந்த வழக்கை அதிமுக அரசு இழுத்தடித்தது. வழக்கில் தொடர்புடைய அதிமுகவினரை காக்க, பலியான மாணவிகளின் குடும்பத்தினரை மிரட்டுவது போன்ற செயல்களில் அதிமுக ஆட்சி ஈடுபட்டது.மேலும் வழக்கை நடத்த போலீஸாரும் ஒத்துழைப்பு தரவில்லை. இதையடுத்து வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் மாற்றியது.

எல்லா பிரச்சனைகளையும் மீறி இந்த வழக்க விசாரணை நடந்தது. இதில் வழக்கில் 28 அதிமுகவினர் மீது வழக்குத் தொடரப்பட்டு நெடு என்ற நெடுஞ்செழியன் , மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து சேலம் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.

தண்டனையை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதில் 25 பேரின் 7 ஆண்டு தண்டனை 2 ஆண்டாக குறைக்கப்பட்டது. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து 28 பேரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் தங்களது மனுவில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்கக் கோரியிருந்தனர்.

மற்ற 25 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள தங்களது தீ்ர்ப்பில், பஸ்ஸை எரித்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இவர்கள் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

அதே போல தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரிய மற்ற 25 அதிமுகவினரின் மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் உறுதி செய்து தீ்ர்ப்பளித்தனர்.
Read More

26.8.10

தமிழக முதல்வர் கருணாநிதி (மன்னிக்கவும் ) கலைஞர் அவர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்

Read More

எங்க நாடுல இதுல்லாம் சாதார்ணம்பா !

ஐதராபாத்: சட்டத்துறை தொடர்பான தேர்வில் காப்பி அடித்த 5 நீதிபதிகள் கையும், களவுமாக பிடிபபட்டனர். தொடர்ந்து 5 பேரையும் சஸ்பெண்ட் செய்ய ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதி , நேர்மை ,காக்க வேண்டிய நீதிபதிகள் இப்படி நடந்து கொண்ட விதம் ஆந்திரா மாநில சட்டத்துறைக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.
மாஸ்டர் ஆப் லா ( எம். எல்.எம்., ) தேர்வு வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கக்காத்தியா பல்கலை.,யில் நடந்தது. இந்த தேர்வில் வக்கீல்கள், நீதிபதிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு அறையில் இருந்த 5 நீதபதிகள் பிட் அடிப்பதற்காக பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகத்தை தேர்வுத்தாள் கீழ்புறம் வைத்து காப்பி அடித்தனர்.
 
நீதிபதிகள் மல்லுக்கட்டினர்: தேர்வு அறைக்கு திடீரென வந்த கல்வி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 5 நீதிபதிகள் காப்பி அடித்து கையும் , களவுமாக பிடிப்பட்டனர். வினாத்தாள் மற்றும் பிட் அடிக்கும் புத்தகத்தை அதிகாரிகள் பறிக்கும்போது அதனை கொடுக்காமல் நீதிபதிகள் மல்லுக்கட்டினர். தொடர்ந்து அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தேர்வு ஹாலில் பரபரப்பாக காணப்பட்டது.

நீதிபதிகள் யார் ?  யார் ?  : காப்பி அடித்த நீதிபதிகள் யார் என்ற விவரம் வருமாறு: அஜீத்சிம்மாராவ்( சீனியர் சிவில் ஜட்ஜ்) , விஜயேந்திரரெட்டி ( செகண்ட் அடிசினல் டிஸ்டிரிக்ட் ஜட்ஜ் ) , கிஸ்தாப்பா ( சீனியர் சிவில் ஜட்ஜ் ஆனந்த்பூர்) , சீனிவாச்சாரி ( சீனியர் சிவில் ஜட்ஜ் , பப்தாலா), ஹனுமந்தராவ் ( அடிசினல் ஜூனியர் சிவில் ஜட்ஜ் , வாரங்கல்) . இந்த 5 பேரும் காப்பி அடித்த விவகாரத்தின் முதல்கட்ட அறிக்கையை பெற்று ஆந்திர ஐகோர்ட் நீதிபதி நிசார்முகம்மது , நீதிபதிகள் 5 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இந்த விஷயம் குறித்து முழு விவரத்தை தமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நீதி,நேர்மை , கண்ணியம், ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டிய நீதிபதிகள் பிட் அடித்த விவகாரம் குறித்து ஆந்திராவில் ஊர் சிரிக்கிறது . நீதிபதிகள் தேர்வு அறையில் நடந்து கொண்ட விதம் வீடியோ ஆதாரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
Read More

24.8.10

எந்திரனின் தந்திர பேச்சு

சென்னையில் பையனூர் என்ற இடத்தில் நடந்த திரைப்பட நடிகர்,நடிகைகளுக்கான நகரை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இடத்தை திரைப்பட கலைஞர்களுக்காக முதல்வர் கருணாநிதி வழஙகினார்.
இதற்கான அடிக்கல் விழாவில் நடிகர் ரஜனிகாந்த பேசினார்.' என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தமிழ்மக்களுக்கு நன்றி.தாசரி நாராயணா தெலுங்கில் பேசினார். தமிழ்மக்களுக்கு அது புரியுமா என்றனர். தமிழர்களுக்கு தெரியாத விஷயமே இல்லை. தமிழ் மக்கள் மனதை ஜெயித்து விட்டால் அவர்களிடம் பாராட்டு பெற்று விட்டால் இந்தியாவிலேயே பெயர் வாங்கிவிடலாம். இது சினிமாவுக்கு மட்டுமல்ல. அரசியல் உள்பட எல்லா தொழிலுக்கும் பொருந்தும்.

இங்கு திரைப்பட நகர் திட்டம்ட சீககிரம் நடக்கும்னு எதிர்பார்க்கலை.கலைஞர் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா அது முடிவு தான். ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் மும்பை,பெங்களுர்,டெல்லினு நிறைய நகரங்களுக்கு போறேன். அங்கெல்லாம் கலைஞர் பற்றி தான் பேசுறாங்க. இந்த வயதில் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பு அவரை பார்க்கும் போது ஒரு புத்தகத்தில் மகான் சொன்னது தான் ஞாபகம் வருது. சுயநலத்துக்காக உழைக்கறவங்க சீக்கிரத்துல சோர்ந்து போயிட்றாங்க.பொதுநலத்துக்காக உழைக்கறவங்க சோர்வடையமாட்டாங்க. கலைஞர் பொதுநலத்துக்காக உழைப்பதால் சோர்வடையிறதில்ல. இந்த விழாவில் உங்களுக்காக அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

யாராவது நிலம் வாங்க போய் அதை பார்த்து விட்டு வேண்டாம் என்று திரும்பி வந்தால்,மூதேவி போறான் பாரு.இவனுக்கு நிலம்,வீடு கிடைக்காது என்று அவைகள் சொல்லும். எனவே வீடு,நிலத்தை வேண்டாம் என்று சொல்லக்கூடாது.பாங்கியில் பணம் கிடைக்க இங்கேயே உத்தரவு போட்டாச்சு. பெரியார் சமத்துவபுரம் என்பார்கள். இது கலைஞரின் சமத்துவபுரமாக இருக்கும்'
இப்படி ரஜினி பேசியதாக அறியவருகிறது.


 
Read More

காவல் துறையா இல்லை களங்கத்துறையா ?

மாற்றுத்திறன் படைத்த சாதனை வீரர்களை வருத்திய போலீசார்சென்னை :அரசு வேலை கேட்டு உண்ணாவிரதம் துவங்கிய மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்களை, மனிதாபிமானமே இல்லாமல் போலீசார், குற்றவாளிகள் போல் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம் சென்னையில் நடந்தது.

"ஊனம் உடலில்தான்; எங்கள் மனதில் இல்லை' என்று தன்னம்பிக்கையோடு, மாற்றுத் திறன் படைத்தோர் பல்வேறு துறைகளிலும் சாதித்து வருகின்றனர். விளையாட்டுத் துறையிலும் சாதித்து நாட்டுக்கு பெருமை சேர்த்தோர் ஏராளம்.தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை குவித்து, நாட்டுக்கு பெருமை சேர்த்த மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்கள், தமிழகத்தில்  நூற்றுக்கும் மேற்பட்டோர்  உள்ளனர். இவர்கள், தங்களுக்கு அரசு நிரந்தர வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.இந்த கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாததால், மாற்றுத் திறன் படைத்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள், நேற்று காலை சென்னை அண்ணா சதுக்கம் அருகே, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினர்.

இதையறிந்த அண்ணா சதுக்கம் போலீசார் மாற்றுத் திறனாளிகளிடம் பேசினர்."மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரிகள் வந்து பேசினால், எங்கள் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு, கலைந்து செல்கிறோம்' என வீரர்கள் கூறினர். அதை காதில் வாங்காத போலீசார், "உடனடியாக இங்கிருந்து கிளம்புங்கள்; இல்லாவிட்டால் அவ்வளவுதான்...' என எச்சரித்தனர்.திடீரென அவர்கள் வைத்திருந்த உண்ணாவிரத பேனரை பறித்து வீசினர். தடுத்த விளையாட்டு வீரர்களை பிடித்து கீழே தள்ளினர். துணையாக விளங்கும் "வீல் சேர்', கைப்பிடிகளை எல்லாம் பறித்தனர்.போராட்டத்தைக் கைவிட மறுத்த, வீரர்களை குற்றவாளிகளைப் போல் குண்டுக் கட்டாக தூக்கியும், தரதரவென இழுத்துச் சென்றும் வேனில் ஏற்றினர். போலீசாரின் இந்த மனிதாபிமானமற்ற செயல், தன்னம்பிக்கையோடு சாதிக்கும் வீரர்களை வெறுப்படைய வைத்தது.

வீரர்கள் கூறும்போது, "சாதிப்பதற்காக பிற நாட்டு வீரர்களை போராடி ஜெயித்தோம். இன்று எங்கள் உரிமைக்காக போராடி, நம் போலீசாரிடம் ஜெயிக்க முடியலையே...' என புலம்பினர். போலீசாரின் செயலைப் பார்த்த பொதுமக்கள், "மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அமைச்சகத்தை துவக்கிய முதல்வர், பல்வேறு துறைகளிலும் வேலை அளித்து வருகிறார். ஆனால், போலீசார் மனிதாபிமானமே இல்லாமல், கொடூரமாக நடந்து கொள்கிறார்களே' என திட்டித் தீர்த்தனர்.
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena