வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

19.7.11

சொல்லால் அடித்த சுந்தரி


அந்த காலை நேர காற்று ஓட்டு வீட்டு ஜன்னல் வழியாக பிரவேசித்து சண்முகத்தை தழுவியது ,ஆனால் சண்முகம் இன்னும் பத்து நாள் கழித்து முதல் இரவில் ஈஸ்வரியை  தழுவலாம் என்று நினைத்து கொண்டான் . பொண்ணு பார்க்க சென்ற பொது அவள் நடந்து வந்த அழகும் ,அந்த கருமை நிறகூந்தலும், மாநிறமாக இருந்தாலும் சட்டென திரும்பி பார்க்க வைக்கும் அந்த கலையான முகமும் அவனை  கிறங்கடித்தன ,நமக்கு இது போதும் என்று நினைத்து கொண்டான் ,சில சமயம் இவளே நமக்கு அதிகம் என்று கூட தோன்றியது ,அந்த கிறக்கதோடே வெளியில் வந்தான் ,அவன் ஆத்தா பாண்டியம்மா முற்றத்தில் பாத்திரங்களை பரப்பி போட்டு சாம்பலை வைத்து விளக்கி கொண்டிருந்தாள்
Read More

16.7.11

இது ஒரு காதல் கதை -1

          அய்யாக்களே ,அம்மாக்களே, அண்ணன்களே ,தம்பிகளே ,அக்காக்களே ,தங்கச்சிகளே அப்பறம் குழந்தைகளே எல்லாருக்கும் வணக்கம் ,என் காதல் கதைய சொல்றேன் கேளுங்க ,என்னது கேக்க முடியாது போடா வெண்ணையா ? என்னங்க இப்படி வையிறீங்க நல்ல கதைங்க ,அட சும்மா கேளுங்க காசு பணம்லாம் கேக்கமாட்டேன் .

அப்ப நாங்க குறிஞ்சி தெருவில் குடி இருந்தோம் ,எங்க வீடுதான் குறிஞ்சி தெருவில கடேசி வீடு ,அப்படியேவலது பக்கம் அந்த சந்து திரும்பும் அதுதான் குறிஞ்சி குறுக்கு தெரு ,அந்த குறிஞ்சி குறுக்கு தெருவில்தான் அனிதா அவுங்க அப்பா அம்மாவோட இருந்தா ,அந்த தெருவில ஆரஞ்சு கலரு பெயிண்ட் அடிச்ச வீடு ,
Read More

15.7.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -8

இனிய  நட்புகளுக்கு வணக்கம்
                                                   தொடர் வேலைகள் பலரது பதிவுகளுக்கு வர முடியவில்லை ,இதை விட தொடர்ந்து பதிவுகள் எழுதவும் முடியவில்லை ,உண்மையை சொல்ல வேண்டுமென்றால் " சரக்கு தீந்து போச்சு " ,

ஆடி மாசமே சீக்கிரம் வருக ,பின்ன ...மொய்,செய்முறை
செஞ்சு மாளல ,அண்ணன் கல்யாணம் ,மாமா பொண்ணு வயசுக்கு வந்துடுச்சு ,அக்கா பொண்ணுக்கு காதுகுத்து ,இது பத்தாதுன்னு ஏதாவுது சொந்தத்தில்லுள்ள   பெருசுக அப்பப்ப  மண்டைய போட்டுதுக, (நீயும் ஒருநாள் கெழட்டு பயலாவன்னு வயதானவர்கள் மனத்திற்குள் வைகிறீர்கள்  ... . மன்னிக்கவும் ) ம்ம்ம்ம்ம்ம்ம் முடியல ,வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் சொல்றாங்க , ஆனா ஆயிரம் ஆயிரமாக அல்லவா செலவழிகிறது ,சரி வாருங்கள் நாட்டு நடப்பிற்கு செல்வோம்

சோப்பு :

" அன்பே  "
" சுவாமி "
" நம் பகைவர்களை பழி வாங்குவதற்கு சரியான நேரம் "
" ஆமாம் சுவாமி நானும் இதற்க்காகதான் காத்திருந்தேன் ,நானே இது குறித்து உங்களிடம் விவாதிக்கலாம்மென்று இருந்தேன்  "
" இங்கு வைத்து வேண்டாம்  எனது மஞ்சத்திற்கு வா,நாம் இது குறித்து சயன நிலையில் விவாதிப்போம் "

லைட்ஸ் ஆப்,நோ கேமரா
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena