வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

27.1.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -1

  இனிய நட்புகளுக்கு:
                                         வணக்கம் .நேற்று (26 /01 / 2011) நண்பர் மதுரை பதிவர் திரு பால குமாரின் திருமணத்திற்கு அழைத்து மதுரை பதிவர்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த வலைச்சரம் ஆசிரியர்  ஐயா திரு.cheena ( சீனா) அவர்களுக்கு நன்றி
பதிவர்கள் ,நேசமித்தரன் , திரு கா.பா ( பொன்னியின்செல்வன் ) ,மதுரை சரவணன் ,தமிழ்வாசி -prakash ,anbu-openheart, அனைவருக்கும் என் அன்பு , நன்றிகளும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

                                 இந்த வருடம் மே மாதத்தோடு கலைஞர் ஆட்சி முடிவுக்கு வருகிறது .இந்த  தேர்தல் பல கட்சிகள் இருப்பதற்கும் இனி இல்லாமல் போவதற்கும் சான்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

1 )இலங்கை ராணுவத்தால் மீனவ இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்ப்பட்ட சம்பவத்திற்கு தலைவர் கலைஞர் அறிவித்த 500000 /- லட்சம்  நிவாரண தொகை அவர்களை சென்று அடைந்ததா என்று தெரிவவில்லை .ஆனால் எங்கள்  தானைத்தலைவி 'அம்மா ' ஹெலிகாப்ட்டர் மூலமாக வேதாரண்யம் விரைந்து நேரில் அந்த மீனவ குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார் , மீனவர்களுக்கு பாதுகாப்புக்கு இனி 'மாற்று ஆட்சியே ' தேவை என்று சூளுரைத்துள்ளார்

 சோப்பு :
இந்த சோப்புல மீன் வாசம் அடிக்குதுல 
  சீப்பு :                       
2 )             கூட்டணி கதவு திறக்குமா திறக்காதோ என்றபயம் மனத்தில் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் வாய் சொல்லில் பந்தல் அமைத்தார் .கடலூரில் நேற்று நடந்த ஒரு திருமணவிழாவில் மருத்துவர் ஐயோ மன்னிக்கவும் ஐயா,
       இந்தியாவிலேயே பெரிய மாநிலம் உத்தரபிரதேசத்தில், 403 தொகுதிகள் உள்ளன. அங்கு 20 சதவீதமே உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் @சர்ந்த மாயாவதி, ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கிறார். அங்கு அவர்களால் முதல்வராக முடியும் போது, தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு வாழும் வன்னியர்களால் முதல்வராக முடியவில்லை. நமக்குள் ஒற்றுமை இல்லை.
வன்னியர்களை, வன்னியர்களே தோற்கடிக்கும் பழக்கம் உள்ளது. அதனால் தான், விருத்தாசலத்தில் கோவிந்தசாமி தோற்கடிக்கப்பட்டார். மதுரையிலிருந்து வந்த யாரோ ஒருவரை, எம்.எல்.ஏ.,வாக ஏற்றுக் கொண்டனர்.    


    என்ற ரீதியில் ஜாதியை முன்னிறுத்தி பேசி உள்ளார் ,(பாவத்த ஓட்டு போட்டுவிடுங்கப்பா.... அவருக்கும் முதல் அமைச்சர் ஆகணும்னு ஆசை இருக்காதா , இப்படியா ஒரு அரசியல் தலைவரை கெஞ்ச விடுவது )
மகாராஷ்ற்றாவிற்கு ஒரு பால்தாக்கரே போல் தமிழ் நாட்டிக்கு இவர் ,இருவரும் விஷமே
கண்ணாடி :
3 ) முன்பு ஒரு முறை மதுரை வந்த காலம்சென்ற நம் முன்னால் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி  ,அவரை மதுரையில் தெற்குவாசல் என்ற பகுதியில் வைத்து உருட்டு கட்டையால் அடித்து ரத்தகாயம் ஏற்படுத்தினர் தி.மு.க வினர் .அது குறித்து கலைஞர் கூறுகையில் " அந்த அம்மாவிற்கு  மூணுநாள் பிரச்சனையா இருக்கும் " என்றார் .ஆனால் இன்று  அவரின் மூத்த புதல்வர் ,நம் முன்னால் பாரத பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர் குண்டடிபட்டு இறந்த மருத்துமனைக்கு அவரது பெயரை வைக்க போவதாக அறிவித்துள்ள பெருமை நம் பாசத்தலைவனையே சாரும் .காங்கிரஸ் கோஷ்டி  தொண்டர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்

4 ) சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தையை பற்றியெல்லாம் கூறமுடியாது என்று திட்டவட்ட மாக அறிவித்து உள்ளார் நம் நாட்டின் நிதியமைச்சர் ,அதற்கு அவர் கூறும் காரணங்களும் ஏற்றுக்கொள்ளும் படியாகவே உள்ளது

எவ்வளவோ நம்புறோம் இத நம்பமாட்டோமா ,

மீனவ இளைஞர்'களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தாலும் அது பற்றியெல்லாம் ஒரு கணமும் சிந்திக்காத நம் 'தலைவர் ' தனது ' இளைஞனின் ' பட வெற்றி விழாவை பாராட்டு விழாவாக எப்படி மாற்றலாம் என சிந்தித்துகொண்டிருக்கிறார் ,வின்னைத்தாண்டிய விஸ்பரூபவெற்றி , ஹாலிவுட் கே சவால் விடும் திரைக்கதை ,வசனம் என கதறும் சினிமா இயக்குனர்கள் , கலைஞர் இன்னும் இளைஞராகவே இருக்கிறார் என்று கூறும்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு .திருமாவளவன் ( கண்டிப்பாக உங்களுக்கு ஒரு சீட்டு அதிகமா உண்டு )

5 ) செய்தி : பாரதிய ஜனதா தமிழக தேர்தல் 234  தொகுதிகளிலும்   தனித்து போட்டியாம் .

மக்களாகிய நாங்கள் ஏற்றுகொள்கிறோம் ,நீங்களும்  தேர்தல் களத்தில் இருக்கிறீர்கள் என்று .ஆனா அதுக்காக வீட்டு பக்கலாம் வந்து ஓட்டு பிச்சை கேட்டு டார்ச்சர் பண்ணகூடாது ,ஆமா சொல்லிபுட்டோம்

 நேற்றைய முன்தினம் தேசிய வாக்காளர் தினமாம். எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் புதிய வோட்   கார்டு கொடுத்தனர் , ஆனால் வழக்கம் போல் எனது முகம்  நேரில் பார்ப்பதை விட அந்த போட்டோவில் கேவலமாகவே இருந்தது ,தேர்தல் கமிசனிற்கு  ஒரு நன்றி கூறி கொள்வோம்
அப்பறம் இந்த வட்டம் ஓட்டுக்கு 5000 /-  ம் ல ,எங்க வீட்டுல மொத்தம் நாலு ஓட்டுல , மொத்தம்  இருவதாயரம்ல

இப்பொழுதுதான் எங்கள் வீட்டில் இலவச டிவி கொடுப்பதற்கு டோக்கன் கொடுத்துள்ளார்கள் .இன்னும் பதினைந்து நாள் கழித்து இலவசமாக டிவி தருவார்களாம்

வாழ்க ஜனநாயகம்
                                                                                                                   நட்புடன் -
                                                                                                                   நா.மணிவண்ணன்
Read More

20.1.11

என்னது........கவிதையா ?

ஆடு -ஓட்டு  :

போடுங்கம்மா ஓட்டு                                        
-------------------
சின்னத்தை பார்த்து
போடுங்கம்மாஓட்டு 

பண்டைய கால
பண்ட பரிமாற்று முறை
இன்றைய நவீன  சூழலில்
புதிய பரி'நாமமாய்'

 அண்ணே 
உங்க குடும்பத்துக்குத்தானே                                        
எங்க மொத்த 
ஓட்டும் 

கரெக்டாத்தான்யா சொன்னான் 
கசாப்பு கடகாரேன்
ஆடு வெட்ரவணத்தான் 
நம்புமாம்ல 


பாவங்கள் :

வானம் வசைபாட 
ஆரம்பித்தது 
மேகம் மின்னலிடம் 
கோபித்தது                                                             

' என்னையே மீறி 
செயல்படுகிறாயே '

மின்னல் உரைத்தது 

' எமனிற்கு  எவிடென்ஸ் 
சேகரிக்கிறேன் '


உயரம் :

 ' உயர உயர பறந்தாலும் 
ஊர்க்குருவி பருந்தாகாது '
எகத்தாளமிட்டது                                                                 
எவரெஸ்ட்

' செல்லாது 
செல்லாது '
வீராப்பு பேசியது 
விண்ணைமுட்டும் 
விலைவாசி  

  
இங்கிதம் :

' வேண்டாம் ' என்றாள் 
' வேண்டும் ' என்றேன் 
' ச்சிய் ' என்றாள்                                              
' ப்ச் ' என்றேன் 

' இச் ' என்றோம் 

' ச்சே நீங்க ரொம்ப 
மோசம்பா '
மேகத்திற்குள் ஓடி 
ஒழிந்தது
நிலவு


டிஸ்கி : அது என்னமோ கவிதை எழுதனும்னு நெனச்சாலே நிலவு ,வானம் ,மேகம்னு  எழுதுறோமே ஏன் ?


                                                                                                       நட்புடன் நா.மணிவண்ணன்

Read More

19.1.11

கொலையும் கொலைக்கான முடிவுகளும்

               நீங்கள் கொலை செய்திருக்கிறீர்களா . நான் செய்யப்போகிறேன் .ஆம் . எப்படி செய்யலாம் என்று சிந்தித்த வாறே எனது காரை  செலுத்தி கொண்டிருக்கிறேன் . விரல்களால் அவளின் கழுத்தில் கோலமிட்டு   சற்று கீழிறங்கிய எனது கைகளால் அப்படியே ஒரு  " சதக்"  இல்லை அவள் படுத்துறங்கும் தலையணையை எடுத்து அவளது முகத்தில் வைத்து  ஒரே "அமுக் " இல்லை பொட்டிலா அவள் நெற்றியில் எனது  சைலேன்செர் பிஸ்டலால் ரத்த  பொட்டு வைத்து ஒரு 'அழுத்  '


                   
           என்னிடம்  காரியதர்சியாக  சேர்ந்துவிட்டு எனக்கே காரியம் பண்ண நினைப்பவளை,போலீசிடம்  அப்ரூவராக மாறிவிடுவேன் என்று மிரட்டு பவளை தூக்கி வைத்து கொஞ்சவா முடியும் ,கொலைதான் செய்யமுடியும் .கொஞ்சிவளிடம் என்னால் கெஞ்ச முடியாது, மங்களாவை மங்களகரமாக அனுப்பி விடு வோம் என் தீர்மானித்தேன்
         நான் ஏற்றுமதி தொழில் செய்பவன் ,அதன் போர்வையில் சில கள்ளகடத்தல் வியாபாரம் செய்வேன் .ஒரு வியாபாரம் படிந்தது அதன் மூலம் சில வைரங்கள் கிடைத்தன .அந்த வியாபாரத்தில் எனக்கும் சரிசமமான  பங்கு வேண்டும் என்று மிரட்டுகிறாள் . ஒருவேளை என் பரம வைரி சோம்தேவிடம் விலை போய் இருப்பாளோ? , எது எப்படி போனாலும் சரி இவள் கணக்கை தீர்ப்பது சரியாக இருக்க முடியும்
       நேரத்தை பார்த்தேன் சரியாக 12  மணி . வேளச்சேரி ஐந்தாவுது மெயின் ரோட்டில் உள்ளது அவள் வீடு , காரை ஒரு ஓரமாக நிலவொளியில் நிறுத்தினேன் ,சில தெரு  விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது .சத்தமில்லாமல் முகப்பு கதவு தாழ்பாளை நீக்கினேன் , உள்ளே சென்றேன் , காலிங் பெல்லை அழுத்தினேன்
உள்ளே சங்கீதமாக ஒலித்த காலிங் பெல்லின் ஒலி எனக்கு கேட்டது ,
ஒரு         நிமிடம்
இரண்டு நிமிடம்
மூன்று   நிமிடம்
நான்கு    நிமிடம்
ஐந்தாவுது நிமிடம் என் பொறுமையை சோதித்தது .கதவை தட்டினேன் , உடனே திறந்து கொண்டது ,இருட்டாக இருந்தது , தாப்பாள் போடாமலே தூங்கி விட்டாளோ என்னவோ ,இல்லை  ஒரு வேளை வேறு யாரவது உள்ளே இருக்கிறார்களோ , இவளுக்கு துணை என்று சொல்லி கொள்ள யாரும் இல்லையே .இவள் ஒரு டிவோர்சி ஆயிற்றே, எனது பிஸ்டளை கையில் எடுத்து கொண்டேன் , மெல்லமாக அடி எடுத்து வைத்தேன் , நேர சென்று இடது புறம் திரும்பினால் அவள் பெட்ரூம் வந்துவிடும்
        பெட்ரூமிற்குள் நுழைகிறேன் , மெல்லிய இரவு விளக்கில் அவள் தெரிந்தாள் , எனது கையில் கையுறைகளை அணிந்து கொண்டேன் , ட்யுப் லைட் போட்டவுடன் வெளிச்சத்தில் எழுந்துவிடுவாள் என்று ஏமாந்து போனேன் , மீண்டும் ஏமாந்தேன் .எவரோ ,அவளை எனக்கு முன்னமே வந்து  பரலோகத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் ,கழுத்தில் சரியாக கத்தியை பாயச்சிருக்கிறார்கள் ,சற்றுமுன்தான் இந்த கொலை நடந்திருக்க வேண்டும் , இன்னும் ரத்தம் கட்டிலை நனைக்கவில்லை
        சுற்றும்முற்றும் பார்த்தேன் யாராவுது மறைந்திருந்து திடீரென்று தாக்கலாம் .செயல் படத்துவங்கினேன் .இனி ஒவ்வொரு நிமிடமும்  இங்கிருப்பது ஆபத்து. வெளியேறு என்று மூளை கட்டளை இட்டது
அப்போதுமுடிவுகள் :
             1 )பொட்டணத்தில் இருந்த  துவரம் பருப்பை அடுப்பின் மேல் உள்ள பாத்திரத்தில் கொட்டி விட்டு ,அந்த தாளில் உள்ள சிறுகதையை வேகமாக படித்தாள் சிவகாமி .ஆனால் முடிவு தெரியாமல் போனவுடன் தாளை கசக்கி தூக்கி எறிந்தாள்

           2 )கண்ணாடியின்  உதவியால் வேகமாகவாசித்து கொண்டிருந்தான் கேசவன் .சடாரென்று புத்தகம் புடுங்கப்பட்டது . " மருமகக்காரினு கூட பாக்காம அங்க உங்க அம்மா என்ன அந்த கிழி கிழிக்கிறாங்க இங்க என்னடான நீங்க சாவுகாசமா உக்காந்து புத்தகம் படிக்கிறீங்களோ புத்தகம்  " என்று அவன் மனைவியின் கையிலிருந்த புத்தகம் மூலையில் போய் விழுந்தது 
         
           3 ) பின்புறம் வழியாக தன் கழுத்தில் மாலையாக விழுந்த அவளது கைகளை அப்படியே முன்புறமாக இழுத்து மடியில் கிடத்தி அவளின் முகத்தோடு முகம் புதைக்க போகையில் " இன்னும் எவ்வளவு நேரம்தான் இந்த கதையை எழுதிகிட்டே இருப்பீங்க" என்று அந்த கதையை எழுதி கொண்டிருந்த எழுத்தாளனின் இளம் மனைவி சிணுங்கினாள் .அந்த சிணுங்களில் ஒரு அழைப்பு இருந்து ,அந்த அழைப்பிற்கான காரணம் என்னவென்றால்

டிஸ்கி : முடிவு உங்களின் சாய்ஸ் ( மணி எஸ்கேப் ஆயிடு துப்பாக்கிய எடுத்து சுட்டாலும் சுட்டுடுவாங்க )
Read More

13.1.11

எனது சைக்கிளும் டாக்டர் விஜய்யும்

                             கி.பி 1996  ஆம் வருடம் .உலக சரித்திரத்தில்  ஒரு பொன் நாள் .பள்ளிகளில் ஆண்டு பரிட்ச்சை முடிந்து  விளையாடி கொண்டிருந்த எனக்கு ஒரு சோதனை நண்பன் வடிவில் வந்தது .

டே இவனுக்கு சைக்கிள் இன்னும் ஓட்டத்தெரியாதுடா இதுல இவரு ஏழாப்பு வேற போக போறாரு

வெங்குண்டேன் வேங்கையாய் . முடிவெடுத்தேன் 

அச்சோதனைகளில் வரும் வேதனைகளை துச்சமென கருதி சாதனைகளாக்க சபதமிட்டேன்

இன்னும் இரண்டே நாட்களில் சைக்கிள் ஒட்டி காட்டுவேன்  என்று

முயற்சி திருவினையாக்கும் என்ற அய்யன் திருவள்ளுவரின்  குறளுக்கிணங்க முயற்சியை  மூச்சாய் சுவாசித்தேன்

பிறந்த குழந்தையை அந்த சைக்கிளில்  உட்க்கார வைத்தால்  கால் தரையை தொடும் . மூன்றாம் வகுப்பு படித்த என் தம்பியை அழைத்து

டே கெட்டியா  புடுச்சுக்கோடா அண்ணே கீழ விலுந்துடுவேண்டா

இரண்டே நாளில் ஓட்டி காட்டினேன் . அந்த இரண்டு நாட்களில் எனக்குதான் எவ்வளவு சோதனைகள் அப்பப்பா 

சைக்கிலோடு தெருவோர  சாக்கடையில் விழுந்தேன் .மூழ்கினேன்

அவசரத்தில் முன் பிரேக்கை பிடித்து முன் மண்டையில் காயம் ஆக்கி கொண்டேன்

இந்தளவிற்கு சோதனைகளை சந்தித்த நான் .என் தந்தையிடம் அழுது புலம்பி

இனிமேல் ஸ்கூலுக்கு சைக்கிள் தான் போவேன்

வாங்கி குடுத்தார் .கேப்டன் சைக்கிள் ( அவரு சைக்கிள் இல்லைங்க இது சைக்கிள் கம்பெனி பேரு )

 பாவையர்கள்  கூட்டமாக நடந்து வரும் போது அந்த கூட்டத்திற்குள் மணி அடித்த வாரு
சென்று அவர்களை விலக்குவேன்

எதுத்தார் போல் வரும் பெண்ணின் சைக்கிளை   இடிப்பது போல் சென்று விலகி மிரட்டுவேன்

அப்படித்தான் ஒரு நாள் ஒரு பெண்ணை சைக்கிளில் துரத்தி சென்ற பொழுது அங்கே சிறுகல் வில்லனாக முளைத்து எனது சைக்கிள் டயரை இடறி விட .அது அப்படியே  ஓரமாக நின்ற ஒரு பெண்மணியை மோத நான் ரோட்டில் விழ விட்டிற்குள் இருந்து  ஒருவர்  கட்டை எடுத்து கொண்டு என்னை அடிக்க ஓடிவர

' தல 'யின் படமான தீனா படத்தை முதல் காட்சி பார்ப்பதற்காக சென்ற பொழுது .பெட்டி வர சிறிது தாமதம் ஆகும் என தெரியவர .தியேட்டரில் உள்ள கண்ணாடியை உடைப்பதற்கு ஐந்து கல்கள் பறந்தன .அதில் ஒன்று   நான் விட்டெறிந்த கல் .ஆனால் ஒரு கல்லோ பாதுகாப்பிற்காக வந்த போலிசின் மண்டையை உடைத்தது . இவை எல்லாவற்றையையும் மேன் மாடத்திலிருந்து பார்த்து கொண்டிருந்த தியேட்டர் ஊழியர் ஒருவர் என்னை நோக்கி கை காட்ட .வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் சைக்கிளில் சீறி தப்பித்தேன் (சிக்கிருந்தா செதச்சிருப்பாய்ங்களே )

அப்படி பட்ட வரலாற்று சிறப்பு மிக்க எனது சைக்கிள் .சரியாக 2001  நவம்பர் 15  ஆம் தேதி தியட்டேருக்கு வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்று டிக்கெட் எடுத்து விட்டு வந்து பார்க்கிறேன்

சைக்கிள் நின்று கொண்டிருந்தது

ஆனால் . என் சைக்கிள் மாதிரியே உள்ள வேறொரு சைக்கிள் . என் சைக்கிள் சாவியை போட்டு பார்த்தேன் .சேர்ந்தது . எவரோ மாற்றி எடுத்து சென்று விட்டார் போல என்று காத்திருந்தேன் .சரி வேறு பக்கம் சென்று தேடி  பார்ப்போம் என்று போனேன் .தேடினேன் .கிடைக்கவில்லை .மீண்டும் அதே இடத்திற்கு வந்தேன்

அந்த சைக்கிளையும்  காணவில்லை .பிறகென்ன செய்ய டிக்கெட் எடுத்த மொக்க படத்திற்கே சென்றேன்

அந்த படம்  இளைய தளபதி நடித்த ஷாஜகான் .சைக்கிள் தொலைந்து போன தலைவலியை விட படம் பார்த்த தலைவலி அதிகமாக இருந்தது

சைக்கிள் போச்சே

Read More

8.1.11

பாப்பாத்தி அக்கா

                   அந்த செம்மண் சாலையில் புளிதியை கிளப்பியவாறு அந்த மினி பஸ் சென்று கொண்டிருந்தது .அந்த சிற்றுந்துக்குள்  கடைசியில் உள்ளநீளமான  சீட்டிற்கு முன்னால் உள்ள சீட் இல்லாமல் இடம் காலியாக இருந்தது .அந்த இடத்தில் உள்ள  கம்பியில் சாய்ந்தவாறு கண்டெக்டர் டிக்கெட் குடுத்து கொண்டிருந்தார் . சண்முகம் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்திருந்தான் .

" சார் உங்களுக்கு எங்க போகணும் "

" ஒரு சோழவந்தான் " என்றான் சண்முகம்

சன்முகமத்தின் பூர்விகம் சோழவந்தான் தான் . அவன் காலேஜ் படிப்பு முடித்தவுடன் சென்னையில் வேலைகிடைத்தது . பெற்றோர்களையும் தன்னுடன் அழைத்துகொண்டான் .முதலில் அவன் அப்பா மறுத்தாலும் பின்பு பாரலிசிஸ் நோயால் சென்னைக்கே வரவேண்டியதாகி விட்டது . பிறகு அவரும் இறந்து போய் " துக்க வீட்டுல உடனே நல்ல காரியம் நடக்கனும்டா, அப்பதாண்டா  உங்க அப்பா ஆத்மா சாந்தி அடையும் என்று ஆறாவது மாதம் கழித்து தூரத்து சொந்தத்தில் உள்ள சுந்தரேஸ்வரியை அவனுக்கு கல்யாணம் செய்துவைத்து விட்டாள் .
அப்பொழுது அவனுக்கு வயது 25  . ஆயிற்று அந்த தாயும் தூக்கத்திலே போய் சேர்ந்து விட்டாள் .கிராமத்தில் சொந்தம் சொல்லி கொள்ள  என்று ஒரே ஒரு வீடு ஒன்று இருந்தது .இனிமேல் யாரு கிராமத்திற்கு போக போகிறோம் என்று அந்த வீட்டை  விற்று விடுவோம் முடிவிற்கு வந்த  அவன் பால்ய நண்பன் மாரிமுத்து விடம் சொல்லி வைத்திருந்தான் . நீ நேர்ல வந்தா  வீட்டை பேசி முடிச்சிருலாம் உடனே கெளம்பி வான்னு நேற்றிரவு மாரிமுத்து போனில் கூற .அவனும் இரவோடு இரவாக கிளம்பி விட்டான் மதுரைக்கு

" ஏய் பாப்பாத்தி உனக்கு சேர்த்து நானே டிக்கெட் எடுத்துட்டேன் நீ எடுத்துடாத " என்று  பேருந்தினுள் ஒரு குரல் கேட்டது. பாப்பாத்தி இந்த வார்த்தை அவன் நெஞ்சில் முள்ளாய் குத்தியது
பாப்பாத்தி அக்கா நீ எப்படி இருக்கக்கா, பாப்பாத்தி அக்கா ஆஆ
 பேருந்து முன்னோட சண்முகத்தின்   நினைவுகள் பின்னோடியது .
**********************************************************************************************************************************************************
 . பாப்பாத்திஅக்கா  வீடு ஊரெல்லையில் உள்ள  கருப்பனசாமியின் கோயிலில்  இருந்து  ஐநூறுகெஜ தூரத்தில் இருந்தது . சுண்ணாம்பு சுவர்களுக்கு மேலே கிடுகு வேயப்பட்டு  .அது பலநாள் ஆனதால் கன்னங்கரேல் என்றிருந்தது .வெளியே ஒரு பெட்டி கடை மாதிரி திண்ணையில் போடப்பட்டிருந்தது . சண்முகத்திற்கு அங்கு எப்பொழுது சென்றாலும் இலவசமாக பர்பி மிட்டாய் கிடைக்கும் .பாப்பாத்தி அக்காவிற்கு சொந்தம்   என்று சொல்லி கொள்ள ஒரே ஒரு  தாய்வழிபாட்டி இருந்தது .
அந்த பாட்டியும் உயிரை தன் சுருக்கு பை போல்  இழுத்துக்கோ புடிச்சுக்கோ என்று  பிடித்து வைத்திருக்கிறது  . அக்கா காட்டு வேலைக்கும்  , வயல் வேலைக்கும் சென்று அந்த கிழவிக்கு கஞ்சி ஊத்துகிறது . சண்முகம் என்றால் அதுக்கு  ரொம்ப பிடிக்கும் , ஒரு முறை ஊருக்கு கிழக்காமையில் உள்ள பொட்டல் நிலத்தில் பாக்டரி கட்ட பட்டு கொண்டிருந்தது . மணல் லாரி லாரியாக வந்தது . ஊரில் உள்ள  பொட்டு பொடுசுகள் ,வாண்டுகள் , சண்முகம் ,மாரிமுத்து அங்கே ஆட்டம் பொட்டு கொண்டிருந்தனர் . மணலில் பாலம் கட்டி விளையாடி கொண்டிருந்தபொழுது
" டே சம்முகம் ஒரே நாத்தமா  அடிக்கிது நசுக்கி விட்டியா "
" ஏ மாரி சாமி சத்தியமா இல்லடா "
அப்பறம் ஏண்டா இப்படி நத்தம் அடிக்குது " என்றுஇருவரும் எழுந்தார்கள் .
" அடச்சி நீ இவ்வளவு நேரம் அதுமேலே உக்கார்ந்திருக்கடா  அதான்
என்னையெல்லாம் தொட்டுடாத என்னைய தொட்ட ஆயிரம் பாவம் என்னைய தொட்ட ஆயிரம் பாவம் " என்றாவாறு ஓடியேவிட்டான் மாரிமுத்து .
இப்படியே போனால் ஆத்தா வெளக்கமாத்தாலே பூசை நடத்திவிடுமே என்று சிந்தித்தவாறு நடந்துகொண்டிருந்தான் சண்முகம் .நடந்து வந்ததில் பாப்பாத்தி அக்கா வீட்டை சமீபித்திருந்தான்.ஒருவகையில்சண்முகத்தின்  ஆத்தா வழியில்  பாப்பாத்தி அக்கா தூரத்து சொந்தமும் கூட . சரி அக்கா வீட்டிலே கழுவி கொள்ளலாம் என்று அழைத்தான்
" அக்கா ஆஆஆஆஆ "
" ஏ ஏண்டா இப்படி கத்துற ஓம் சத்தத்தில கெழவி செத்துகித்து தொலஞ்சிடபோகுது " என்று கீரையை ஆய்ந்தாவாறு வெளியில் வந்தாள் .கையில் உள்ள சொளகு நிறைய கீரையாக இருந்தது . " என்னடா அந்த ஏட்டு மவன் லெட்டர் குடுத்து அனுப்ச்சானா "
" இல்லக்கா " என்று பின்புறமாக  திரும்பி காட்டினான்
" அட கருமமே எங்கடா போய் இத அப்பீட்டு வந்த "  என்று சொளகை பின்னுக்கு நகர்த்தினாள்
" இப்படியே நா வீட்டுக்கு போனேன் எங்காத்தா மண்டையை ஒடச்சு மாவலக்கு எடுத்துடும்   அதான் கொஞ்சம் தண்ணி குடுக்கா இங்கேயே கழுவிக்கிறேன் "
"  .... கொல்லைக்கு போடா அங்கன தொட்டில தண்ணி இருக்கும் , சுத்தியே வா ,வீட்டுக்குள்ள வந்துடாத
அவன் டவுசரில் இருந்த பம்பரகட்டையை எடுத்து ஓரமாக வைத்து விட்டு கழட்டி அதை சுத்தம் செய்ய சென்ற பொழுது " டே வெளங்காதவனே எவனோ இருந்தத ஊங் கையாள தொட போறீயே வெலகு நா தொவச்சு குடுக்கிறேன் "  என்று காலாலே மிதித்து சுத்தம் செய்து பின்பு நன்றாக துவைத்து குடுத்தாள்
.
" டே  நீ பம்பரம்லாம் விடுவீயா எனக்கு சுத்தி கைலஎடுத்து  குடுடா "  அவனும் ஐந்தாறு முறை  சுற்றி கையில் லாவகமாக எடுத்து அக்காகையில்  எடுத்து குடுத்தான்

" அப்பறம் நீங்க  பட்டனத்து காரைங்க விளையாடுவாங்களே அது பேரு கூட ஆங் கிரிக்கெட்டு அதலாம்  விளயாடமாட்டீங்களா "  என்றாள்

" விளையாடுவேன்க்கா அத வெளையாடுரப்ப எங்க ஆத்தா ஒரு தடவ  பாத்துடுச்சு அடி வெளுத்துடுச்சு  எங்கய்யன் கிட்ட சண்டைக்கே போய்டுச்சு "

" எதுக்குடா "

" நீ செஞ்சுகுடுத்தியே ஒரு கட்ட அத எங்க வச்சு ஆட்டுறான் தெரியுமா
உயிர்நாடிக்கிட்டயா நானே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு ஆம்பிள பிள்ளையை பெத்துவைச்சிருக்கேன் அவனுக்கு மட்டை அடிக்கிறதுக்கு கட்ட செஞ்சுகுடிக்கியோ கட்டேல போரவனேனு   சொல்லி  சண்டைக்கே போய்டுச்சு ,அந்த பேட்டு கட்டையும் அடுப்புல வச்சு எருச்சுடுச்சு "

பாப்பாத்தி அக்கா விழுந்து விழுந்து சிரித்தாள் .பின்பு தலையை  வருடி குடுத்தாள் .
" சாப்பிட்டியா " என்றாள் இல்லை என்றவுடன் " கம்மங்கூழு சாப்பிடுறீயா கரைச்சு கொண்டுவர்றேன் " சண்முகம் தலையாட்டினான்
கடைசியாக அவன் கிளம்பி செல்லும் பொழுது " அந்த ஏட்டு மவன் உன்கிட்ட லெட்டர் குடுத்துவிடைளையாடா " என்றாள்
**********************************************************************************************************************************************************
   
'ற்றியோம் ற்றியோம் ற்றி சத்தியம் நீயே தருமத்தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே ஏ ஏ ' என்று சின்ன  சந்தினுள்  குழாய் ஸ்பீக்கரில் பாட்டுஅலறலாய்  கேட்டுக்கொண்டு இருந்தது .யாருடைய வீட்டிலாவது இருக்கிற  சின்ன பொண்ணுக உட்கார்ந்திருக்கனும் .

" சம்முகம் அவன் கட்டை பாதிதூரம் வந்துடுச்சு இன்னும் கொஞ்சம்தான் ஆக்கர் பார் வந்துடும் "  என்றான்  மாரிமுத்து
சண்முகம் தன் கண்ணிற்கு நேரை பம்பரக்கட்டையின் ஆணியை வைத்திருந்தான் .அதன் வழியாக அந்த மண் தரையில் இருந்த பம்பரக்கட்டையை கூர்மையாக  குறிபார்த்தான் .விர்ர்ர்ர்ர் என்று பம்பரம் வெகு அனாயசமாக சாட்டையில் இருந்துஉருவி அந்த பம்பரக்கட்டையை அடித்து தள்ளியது . மீண்டும் சுற்றிகொண்டிருந்த பம்பரத்தை கைகளில் லாவகமாக  எடுத்து மோதசெய்து செய்து அந்த பம்பரக்கட்டையை கோட்டிற்கு அங்கிட்டு தள்ளினான்

மாரிமுத்து துள்ளி குதித்தான் .நேற்று ஆக்கர் பார் விளையாட்டில் மாரிமுத்து  கட்டையை உடைத்த சிவானாண்டி கட்டையை இன்று அவனது நண்பன்  உடைக்கபோகிறான்  என்றவுடன் அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை . சிவனாண்டி கதறி  அழ .சண்முகம் ஆக்கர் அடித்து பின்பு ஒரு பெரிய கல்லை எடுத்து சரியாக அவன் கட்டையை இரண்டாக  உடைத்த பொழுது .

" டே சம்முகம் வாடா இங்கே " ஏட்டு மகன் மோகனசுந்தரம் அழைத்தான். சோழவந்தான் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக வேலைபார்க்கும் செல்லமுத்துவின் மூத்த மகன் தான் இந்த மோகனசுந்தரம் .எப்படியோ மதுரை சரஸ்வதிநாரயணன் கல்லூரியில் படித்து முடித்து விட்டு .அதை வைத்து சப் -இன்ஸ்பெக்டர்  தேர்வு  எழுதி ரிசல்ட்க்காக காத்துகொண்டிருக்கிறான் .

சண்முகத்திற்கு இது அரபரிட்ச்சை லீவு . ஐந்தாம் வகுப்பு படிக்கிறான் .
" வாடா சண்முகம் , என்னடா அண்ணே கூப்பிட்டு அனுப்பினேன் வரவே இல்லை " என்று அவனை தாஜா செய்வது போல் கேட்டான்
" உன் கூடவே பேச கூடாதுன்னு பாப்பாத்தி அக்கா சொல்லிருக்கு "
மோகனசுந்தரம் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு " என்னடா நீ உதவாம எங்களுக்கு வேற யாருடா உதவுவா .இந்த லெட்டெர மட்டும் அவகிட்ட குடுத்திடு அது போதும் எனக்கு , இந்த அஞ்சு ரூவா வச்சுக்க "  அஞ்சுருவாயா ஆஅ என வாய்பிளந்தான் சண்முகம் சரியென்று ஒத்துகொண்டான்
**********************************************************************************************************************************************************
பாப்பாத்தி அக்கா வீட்டு வாசலில்  கோழி ஒன்று தன் குஞ்சுகளுடன் எதையோ கொத்தி தின்று கொண்டிருந்தது . இவன் குஞ்சுகளை தூக்க வந்திருக்கிறான் போல என்று நினைத்து அவன் காலில் பாதத்திற்கு மேலே  கொத்தியது
ஆஆ வென அலறியவாறு வீட்டிற்குள் ஓடினான் .கிழவி ஒரு ஓரமாக சுருண்டு படுத்திருந்தாள் .அக்கா உலை வைப்பதற்காக அரிசி புடைத்து கொண்டிருந்தாள் 

" அக்கா ஊம் வீட்டு கோழி என் காலிலே கொத்திடுச்சு " என்று மெல்லிய கண்ணீருடன் கூறினான்

" நீ குஞ்சகள தூக்கினியா "

" இல்லை "
" பாரு ஒரு நாள் இல்ல ஒருநாள் அந்த கோழி அடிச்சு கொழம்பு வச்சு திங்கபோறேன் " என்று கூறினான்

" அதுக்கு தாண்டா வளக்கிறேன் இன்னைக்கி அடிச்சு தின்றுவோமா " என்றாள்

 " சரி அக்கா நா போய் எங்க ஆத்தா கிட்ட சொல்லீட்டு வந்துடுறேன் என்று வெளியில் ஓடியவன் ஓடியவேகத்திலே  திரும்பி வந்தான் .வந்து " ஏட்டு மகன் லெட்டர் குடுத்தாங்க அக்கா " என்று அவளிடம் குடுத்து விட்டு ஓடியேவிட்டான்
 அந்த கடிதத்தை படித்து விட்டு கசக்கி  அப்படியே அடுப்பில் போட்டு எரித்தாள்.
**********************************************************************************************************************************************************
போனவன் அவன் ஆத்தாவுடன் திரும்பி வந்தான் .

" வாங்க சித்தி " என்றாள் அக்கா

" எண்ணத்தா எப்படி இருக்க இந்த லெக்குல இருக்கேனுதான் பேரு வீட்டு பக்கம் எட்டி பாக்கமாட்டேங்கிரே "

" வரேன் சித்தி "

" கோழி அறுத்து கொழம்பு வைக்க போறேன்னு சொன்னான் அதான் இந்த மொளகா பொடி கொண்டுவந்தேன் .அப்படியே இவன் இன்னைக்கு ரவைக்கு இங்கே இருக்கட்டும் .அவரு சொந்தத்தில ஒரு கெழவி தவறிடுச்சு .போய் எழவு  கேட்டுட்டு ரவைக்கு அங்கயே தங்கீட்டு  விடியமுன்னே வந்துடுறேன் "

" அதுக்கென சித்தி இருந்துட்டு போகட்டும் "

" உங்க ஆத்தா இருந்தா உனக்கு ஒரு கல்யாணத்த பன்னி பேரன் பேத்தி பார்த்திருப்பா  ம்ம்ம் "

" பச் "

" சரி நா வரேன்த்தா . டே அக்கா   கோழி  கொழும்பு வச்சுகுடுக்கிரானு வளச்சு மாட்டீடாத .அப்பறம் சூட்ட கெளப்பி விட்டுடும் " என சண்முகத்தை எச்சரித்து சென்றாள்
சண்முகம் ரசித்து சாப்பிட்டான் வாஞ்சையாக அவனுக்கு  கொழுப்பில்லாத இளம் கறியாக  எடுத்து வைத்தாள் . பின்பு அவன் வெளியில் வெளையாட சென்றவுடன் இவள் சாயங்காலம் போல காட்டுக்கு சென்றாள்
**********************************************************************************************************************************************************
இரவு முழுவதும் அக்கா அழுது கொண்டே இருந்தாள் .சண்முகத்திற்க்கும் அது தெரிந்தது

" ஏன்க்கா அழுகுர "

" ஒன்னும் இல்லடா நீ தூங்கு "

" அந்த ஏட்டு மவன் ஏதாவுது சொன்னானாக்கா "
" ஒண்ணுமில்ல  நீ தூங்கு " என்றவுடன் அவனும் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டான் .அக்கா தன்வயிற்றில் கையை வைத்தவாறு அழுது கொண்டே அப்படியே தூங்கி போனாள்

சண்முகத்திற்கு முழிப்பு வந்த போது .அவனை பாப்பாத்தி அக்கா தூக்கி கொண்டு அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி கொண்டிருந்தாள் .இவன் சுதாரிக்கும்  முன்னே அக்கா அவனை ஒரு கையால் பிடித்து கொண்டு மறுகையால் ஒரு இரும்பு கம்பு உதவியுடன் அந்த வீட்டில் இருந்த ஒரே ஜன்னலை உடைத்து அவனை அதுவழியாகவீசினாள் .

அவன் மண்ணில் விழுந்து உருண்டவுடன் தான் தெரிந்தது வீடு தீ பிடித்து  பத்தி எரிகிறதென்று . இவனும் அங்கிட்டு இங்கிட்டு கத்தி கொண்டு " அக்கா அக்கா " என ஓடினான் .ஆனால் அக்காவால் வெளியே வரமுடியவில்லை .அந்த கிழவி கட்டையோடுகட்டையாக எப்போதோ  எரிந்திருக்கவேண்டும் .
**********************************************************************************************************************************************************
 மூன்று நாள் கழித்து ஏட்டு மகன் மோகனசுந்தரத்தால் சண்முகம் அழைக்கபட்டான்
கூட்டாளிகளுடன்   பீடி புகைத்து கொண்டிருந்தான்

" என்னனே " என்றான் சண்முகம்
பளீரென்று அவனது தாடையில் மோகனசுந்தரத்தின்  கூட்டாளிகளில்  ஒருவன் வெடித்தான்

" டே நாதான் இதுநாள் வரைக்கும் பாப்பாத்திக்கு லெட்டர் குடுத்திருக்கேன்னு வெளியில சொன்னேன்னு வச்சுக்க  உம் கழுத்த கரகரனு அறுத்து அப்படியே காக்கைக்கு போட்டுடுவேன் . அப்படியே எந்திரிச்சு  ஓடியே போய்டு " என்று ஏட்டு மகன் கூறினான்

சண்முகம் எழுந்து மண்ணை தட்டாமல் அழுது கொண்டே அவர்களை திரும்பி பார்த்துக்கொண்டே சென்றான்  .அய்யன்கிட்டே சொல்லணும் என்று மனத்திற்குள் நினைத்தான்

" என்னடா மோகனு அடுத்து யாரு "

" அடுத்து நம்ம கோயில் பூசாரி மவ உக்கத்துட்டாலாமுள்ள என் அடுத்த குறி அவதான் "

" இவள எதுக்கு கொன்ன "

" என் வயித்துல குழந்தைய குடுத்துபுட்டு  கட்டிக்க மாட்டீங்கிரீயோனு சொல்லி சங்குல கருது அறுக்கிற கத்திய  வச்சுபுட்டா காண்டாரோளிமவ , அப்பயே முடிவு பண்ணிட்டேன் ராவோடராவா இவள உள்ள வச்சு  குடுசையோட எரிச்சுப்புடனும்னு "

" அந்த சுள்ளானும் உள்ளதாண்டா இருந்தான் எப்படி தப்பிச்சானு தெரியல . அப்படியும் ஊருக்குள்ள வத்திவச்சான வையேன் அடிச்சு சாவடுச்சுபுட்டு  முனி அடிச்சுடுச்சுனு புரளியை கிளப்பி விட்டுடுவோம் . குடுசை பத்தி எரிஞ்சப்ப எவனோ பீடிய பாத்த வைச்சுபுட்டு தீகுச்சிய அமத்தாம தூக்கி போட்டுட்டான்போலனு புரளியை கிளப்பீவிடலையா " என்று காரி துப்பினான்

கீழே விழுந்து எழுந்த பொழுது தன்னுடைய டவுசர் பாக்கெட்டில் இருந்த  பம்பரம் விலுந்துருக்கனும் என்று  எண்ணி அதை எடுக்க வந்த சண்முகம் இவை அனைத்தையும் கேட்டான் .அவனுடைய கால் வழியாக ஒன்னுக்கு ஒழுகி  கொண்டிருந்தது . அப்படியே ஓடினவன் தான்
" எலேய் சண்முகம் எதுக்குடா  இப்படி சமஞ்ச கொமரிமாறி  வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கெடக்க " என்று அவன் ஆத்தா கூறி கொண்டிருந்தாள்
**********************************************************************************************************************************************************
ஸ்ஸ்ஸ்ஸ் மினிபஸ்  நின்றது
" சோழன்வந்தான்லாம் எறங்குங்க "  கண்டக்டர் விசில் வாயோடு கூறிகொண்டிருந்தான்
" வாடா சண்முகம் வீட்ல பொண்டாட்டி புள்ளைங்கலாம்   நல்லாருக்காங்களா "
என்று பேசி கொண்டே வந்தான்

" அப்பறம் கேக்கனம்னு நெனைச்சுக்கிட்டே இருந்தேன்  "
" அந்த மோகன சுந்தரம் அதாண்டா நம்மள சின்ன வயசுல மிரட்டுவான்ல அவன் இப்ப தமிழ் நாட்டுக்கே கூடுதல் டி .சி .பி யாம்ல அப்படியா " என்றான் மாரிமுத்து 

இவன் கண்ணீரை பார்த்துவிட்டு ரெம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கான்ல ஊரு மன்ன மிதிச்சோன அவனுக்கு பழைய  ஞாபகம் வந்துடுச்சு போல என்று நினைத்து கொண்டான்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன் நா.மணிவண்ணன் 
Read More

3.1.11

இரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )

                     சென்னை எக்மோர் . கொஞ்சம் வெளிர் வானம் .ஆங்காங்கே மேகங்கள் திட்டு திட்டாய் .எக்மோர் ரயில் ஸ்டேஷனிற்குள் நுழைந்தேன் . பின்னாலே என் மனைவியும் கை குழந்தையும் அவளால் இழுத்து வரப்படும் பிரீப்கேசும் .என் கைகள் பான்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்தபடி வாயில் சூயிங்கம்மை மென்றபடி நடந்தேன் .என் பெயர் சுருக்கமாக முகுந்த் . முழு பெயர் வேண்டாம் அதை சொல்வதற்குள் நான் போகும்  ட்ரைன் சென்றுவிடும் .சரியாக 5 : 25  மணிக்குள்  ஐந்தாவுது பிளாட் பாரத்தில்இருந்து கிளம்பும்   காச்சிகூடா எக்ஸ்பிரஸ்யை புடிக்க வேண்டும் .ஏனென்றால் நான் ஹைதராபாத் போக வேண்டும்
                   என் வாட்சை பார்த்தேன்   5 மணி காட்டியது . நான் ரயில்வே ட்ராக்கை கடந்து செல்லும் படியில் ஏறி மேலிருந்து பார்த்தேன் .என் மனைவி சேலைத்தலைப்பு தடுக்க குழந்தையுடன் கஷ்டப்பட்டு ப்ரீப்கேசுடன் போராடி கொண்டிருந்தாள்
                நான் மேலிருந்து கூவினேன் . ம்ம் சீக்கிரம் வா .என் மனைவி பெயர் சுகந்தி. சரியாக மூன்று வருடம் ஆகிவிட்டது அவளை திருமணம் செய்து .குழந்தை பிறப்பதற்கு முன் அழகாத்தான் இருந்தாள் . குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் கொஞ்சம் கண்ணுக்கு கீழ் கருவளையம் கொஞ்சம் மேடிட்ட வயிறு .முன்பெல்லாம் இரு சிங்கிளாக இருந்தது இப்பொழுது ஒரு சிங்கிள் ஆகிவிட்டது .நான் எதற்கு ஹைதரபாத் செல்கிறேன் என்றால் .அங்கேதான் எனக்கு பணி . இநதியா முழுவதும் கிளைகள் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஹைதராபாத் கிளையில் மேனேஜராக  பணிபுரிகிறேன் .லீவிற்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டு பணிக்கு திரும்பி கொண்டிருக்கிறேன் .
                நான் ஏற வேண்டிய கம்பார்ட்மென்ட் வந்தது .அதில் ஏறி முதலில் என் குழந்தையை வாங்கினேன்.உள்ளே சென்றோம் .நான் ஜன்னல் ஓரமாக அமர்ந்தேன் என் அருகில் என் குழந்தையை படுக்க வைத்தாள் என் மனைவி . எதிர் இருக்கையை காலியாக இருந்தது
                 " புக் எதுவும் வாங்கனுமா " என்றேன்
                 " சரி வாங்கிட்டு வாங்க " என்றாள்
கீழிறங்கி சென்றேன் .புத்தக கடைக்கு சென்று ஆனந்த விகடன் , குமுதம் வாங்கினேன்
ரயில் ஏறி எனது இருக்கைக்கு முன்னேறினேன் . இருக்கையில் அமர்ந்து என் மனைவியிடம் புத்தகங்கள் குடுக்கும் போது எதிரில் பார்த்தேன் .அப்படியே என் கையில் இருந்த புத்தகம் நழுவி இருக்கையில் விழுந்தது
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
                 அவளுக்கு மிஞ்சி போனால் 25 வயது இருக்க முடியும் .ரோஸ் கலரில்  மெலிய ஷிபான் சேலையும் அதற்கு மேச்சாக பிங்க் கலரில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள் .அவள் குனிந்தபோது பிரா பட்டைகள் விலகி தெரிந்தது .அதுவும் ரோஸ் கலர் .ஆஹா .
அப்போது விநோதமான ஒரு ஒலி கேட்டது .அந்த ஒலி அவள் அருகினில் இருந்துதான் வந்தது .வந்த திசையை நோக்கினேன் .ஒரு மனிதன் அமர்ந்திருந்தான் .கொட்டாவி விட்டிருக்கிறான் .ச்சை. முகத்தில் இரண்டு நாள் தாடி ஒரு சோட பட்டி கண்ணாடி .அழகை ரசித்து கொண்டிருக்கும் பொழுதுதான் இடைஞ்சல் தருவார்கள் .அவளைவர்ணித்து  கொண்டிருந்ததை நிறுத்தி விட்டேன் அல்லவா தொடர்கிறேன் . இவள் பிறந்த ஆண்டு படைப்பு கடவுள்  பிரம்மனின் பவள விழா படைப்பாக இவள்  இருக்கவேண்டும் . ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள் .நெற்றியில் மெல்லிய புடைப்பு அதில் செதுக்கி விட்டாற்போல் இரு புருவங்கள் .அதற்கு கீழ் இரு பள்ளங்கள் அந்த பள்ளத்தில் இரு முத்துக்கள் அதற்கு பெயர் கண்கள் .
                " என்னங்க " சடாரென்று திரும்பி முறைத்தேன் என்ன என்பது போல் " குழந்தை ஆய் போய்ட்டான்க கொஞ்சம் சூட் கேசில் இருந்து துணி எடுத்து குடுங்க தொடைக்கணும்" எடுத்து குடுத்தேன்
            எதிரில் அமர்ந்திருந்த மனிதன் எழுந்தான்.அவள் இதழ்கள் பிரிந்து  " எக்கடக்கி " என்றது . ஓ தெலுங்கா அதற்கு அவன் சிறு குழந்தை போல் ஆள்காட்டி விரலை  நீட்டி மற்ற விரல்களை மடக்கி காட்டினான் .அவனை அசூசையாக பார்த்தேன் . அவளை மீண்டும் சுவைக்க ஆரம்பித்தேன் அப்பொழுதான் என்னை பார்த்தாள் . முறைப்பா அல்லது வரவேற்ப்பா என்று தெரியாத ஒரு விழி வருடல் அளித்தாள்.
           ஜன்னல் ஓரம் திரும்பினேன் .ரயில் ரேனிகுன்டாவை நெருங்கி விட்டதாக காட்டியது .இவளை ரசித்து வந்ததில் நேரம் போனதே தெரியவில்லையே . என் மனைவியிடம் திரும்பி " இந்த ஸ்டேஷன் லே ஏதாவுது சாப்பிட வாங்கிவிடலாம் "என்றேன் .தலையாட்டினாள் . .அந்த மனிதன் வந்தான் .அமர்ந்தான் நெட் உயிர்த்தான்
அவளிடம் திரும்பி " நீ மிடில் பெர்த்தில் படுத்துகொள் நான் அப்பர் பெர்த்தில் படுத்து கொள்கிறேன் " என்று தெலுங்கில் உரைத்தான் .நான் என் மனைவியிடம் திரும்பி நீ லோயர் பெர்த்தில் படுத்து கொள் " என்றேன்

              நான் அப்பர் பெர்த்தில் படுத்தவாறு குனிந்து பார்த்தேன் .அவள் இன்னும் தூங்க ஆரம்பிக்க வில்லை .போக போக குளுருவதுபோல் போல் இருந்தது .ஐயையோ காற்றே நீ மட்டும் வீசு ஆனால் குளுரச்செய்யாதே ஒரு வேளை அவள் போர்த்தி கொள்ளலாம் .மானசீகமா காற்றிடம் இறைஞ்சினேன் .அவளது கண் முடி இருந்தது " ஏங்க லைட் ஆப் பண்ணவா " என்றாள் என் மனைவி ." வேண்டாம் நான் கொஞ்சம் நேரம் புத்தகம் படித்து வருவேன் " என்று  தலைகாணி அடியில் இருந்த புக்கை எடுத்தேன் .அவள் தூங்க ஆரம்பித்து விட்டாள் என்று தெரிந்தது .கையை தலைக்கு பின்னால் வைத்த போது அவளுடைய மாராப்பு மெதுவாக விலகியது .நான் குப்பரடித்து படுத்தேன் .அங்கமெலாம் சூடேறியது . அவள் ஒருக்களித்து படுத்தாள் .தொப்புள் தெரிந்தது .தூக்கத்திலும் பெண்களுக்கு இயல்பாகவே தன் உடை விலகுவது குறித்த உணர்வு இருக்கும் போல .அதை சரிசெய்து கொண்டாள். ச்சை
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
              திடீரென்று முழிப்பு வந்தது .மணியை பார்த்தேன் .4:30 .இன்னும் இரண்டரைமணி நேரத்தில் காச்சிகூடா வந்துவிடும் .பாத்ரூம் செல்ல உந்துதல் வந்தது . கீழிறங்கினேன் . என் மனைவியை பார்த்தேன் குழந்தையை அணைத்தவாறு போர்வையை கழுத்துவரை மூடி இருந்தாள் .அவளை பார்த்தேன் அந்த பக்கம் ஒருகளித்தவாறு படுத்திருந்தாள். என் முகத்திற்கு நேரே அவளது முதுகு தெரிந்தது ஆனால் நான் அதை பார்க்கவில்லை வேறொன்றை பார்த்தேன் .
          பாத்ரூம் காலியாக இருந்தது. உள்ளடைந்து கதவை சாத்தினேன் .
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
          வெளியில் வந்து முகத்தை கழுவினேன் . கண்ணாடியை பார்த்து முடியை கோதினேன் .திரும்பினேன் . எனது இருக்கைக்கு முன்னால் கூட்டமாக இருந்தது . முன்னேறினேன் .கூட்டத்தை விலக்கினேன் . உள்ளே என் மனைவி அழுதவாறு அமர்ந்திருந்தாள் . 
-
        மணி சரியாக 5 :30  காட்டியது .அந்த பெண்ணை பார்த்தேன் என் குழந்தையை மடியில் வைத்திருந்தாள் . அவள் கூட அமர்ந்திருந்த மனிதன் அவள் கணவன் . எவனோ ஒரு திருடன் வந்து கத்தி யை காட்டி மிரட்டி என் மனைவியின் நகைகளை கேட்டிருக்கிறான் .அப்போது நடந்த சண்டையில் அவள் கணவனின் தோல்பட்டையில் கத்தி குத்து விழுந்திருக்கிறது . பிறகு சத்தம் கேட்டு எல்லோரும் எழுந்தவுடன் அவன் பயந்து போய் ஓடும் ட்ரைனில்  இருந்து குதித்து தப்பி ஓடி இருக்கிறான்
    அந்த கணவனை ஆழமான கத்தி குத்து இல்லாவிட்டாலும் ரத்த சேதாரம் இருந்தது .அவன் கையை பிடித்து நன்றி கூறினேன்
அதற்கு அவன் தெலுங்கில் " பர்லேது சார் என் சகோதிரியாக இருந்தால் சண்டை போட்டிருக்க மாட்டேனா " என்றான்
" ரயில்வே போலீசில் கம்ப்ளைன் செய்து விடுவோம் " என்றேன்
.ட்ரைன் மெதுவாக சென்று கொண்டிருந்தது .ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பினேன்
சாக்கடை நாற்றம் அடித்தது . அதில் பன்னிகூட்டங்கள் எதையோ போட்டி போட்டு கொண்டு தின்று கொண்டிருந்தது .அதில் ஒரு பன்னி  என்னை நிமிர்ந்து பார்த்தது .அந்த பார்வை " உனக்கு நாங்க எவ்வளவோ தேவலாம்டா " என்பது போல் இருந்தது
ரயில் வேகமெடுத்தது
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
         


Read More

2.1.11

காதலும் கல்யாணமும்

            காதல் என்றால் என்ன ? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும்  ஒரு விதமான ஈர்ப்பு நாளிடைவில் அது ஒரு அன்பாக மாறுகிறது .அதற்கு காதல் என பெயரிடப்படுகிறது .
            கல்யாணம் என்றால் என்ன ? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் ஒரு சமுதாய பந்தம்  .ஒரு புது வாழ்க்கை தொடக்கம்
           "யோவ் இதல்லாம் எங்களுக்கு தெரியாதா ? இதையெல்லாம் ஒரு ஒன்னாம் கிளாஸ் பைய்யன கூப்ட்டு கேட்டா கூட சொல்வானையா " என்று நீங்கள் நினைப்பது புரிகிறது
ஆனா  எனக்கு தெரிந்தவைகளைதானே எழுத முடியும் .ஏனென்றால் நானே ஒன்னாம் கிளாஸ் பைய்யந்தானே ( கொஞ்சம் ஓவர் மொக்கையா  போகுதோ )

 சரி மேட்டருக்கு வருவோம் (  கற்பனை குதிரையை அடக்குங்கள் )

             என்  நண்பர் ஒருவர் சுமார் பத்துவருடங்களாக தெரியும் ..ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறார் . அது போக ஒரு கம்ப்யூட்டர் செனட்டர் வைத்திருக்கிறார். அதுவும் இது ப்ராஜெக்ட் சீசன் .
கல்லூரிகளில் ப்ராஜெக்ட் என்ன லெவெலில் இருக்கிறது என்று பார்க்கபோவதாக கூறி மட்டம் போட்டு ஊர் சுற்றுவதற்குதான்  ப்ராஜெக்ட் கண்டுபிடித்திருப்பார்கள் போல . நல்ல தொழில்  . அந்த நண்பர் ஒரு பெண்ணை காதலிக்கிறார் .அந்த பெண்ணும் தான். ஆனால் பெண் கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர்  .நம் நண்பர்  இந்து மதத்தை சேர்ந்தவர் .விண்ணைத்தாண்டி வருவாயா போல் உள்ளதா . என்ன ஒன்று இங்கு   இந்த காதலுக்கு நம் நண்பரின் தந்தைதான் போர்க்கொடி உயர்த்துகிறார் .
             ஒரு 26  வயதான ஒரு வாலிபன் .நல்ல பணியில் இருக்கிறார் .அது போக சுயமாக தொழில் செய்கிறார் .அந்த கம்ப்யூட்டர் சென்டரில் நான்கு பேர் பணிபுரிகிறார்கள் .அவர்களுக்கு மாத சம்பளம் மட்டுமே 24000 /- ரு செலவாகிறது .ஆனால்  அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்க அவருக்கு அதிகாரம் வழங்க படவில்லை . எளிதாக வீட்டை விட்டு வெளியில் வந்து அவர்களால் கல்யாணம் செய்து கொள்ள முடியும் . ஆனால் அந்த பெண் ஒத்து கொள்ளவில்லை .
            சென்னை திருவெற்றியூரில் உள்ள எனது உறவினர் பெண் .எனக்கு முறை பெண்ணும் கூட .அந்த பெண் சிறுவதில் இருந்தே அவர் வீட்டு அருகினில் இருந்த பையனை காதலித்திருக்கிறார் .அந்தபைய்யன்  பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்ப்பது தெரிந்து  வீடேறி பெண் கேட்டிருக்கிறார் . மறுக்கபட்டிருக்கிறது வெவ்வேறு ஜாதி என்பதால் .அந்த பெண்ணின் பெரியப்பா என் தந்தையிடம்  நடந்தை எடுத்து கூறி எனக்கு மணமுடித்து வைத்துவிடலாம் என்று பார்த்திருக்கிறார் ." அவுங்கம்மா சாப்பாடு  ஊட்டி விட்டாதான் ஒழுங்காவே சாப்பிடுவான் அவனுக்கு போய் கல்யாணமா " என்று நாசூக்காய் தவிர்த்துவிட்டார் என் தந்தை  .இப்பொழுது அந்த பெண்ணை அவர்களது சொந்த ஊரில் வைத்து  அந்த காதலை பிரிக்கும் முயற்சி நடந்து கொண்டிருப்பதாக கேள்வி .
          இன்னொருநண்பர் அவரது  இனத்திலே உள்ள பெண்ணைத்தான் காதலிக்கிறார் .அந்த பெண்ணும் தான் . ஆனால் இந்த காதலில்  நண்பருடைய சம்பளம் தடையாக உள்ளது .அந்த பெண்ணிற்கு பார்த்த மாப்பிள்ளையை  விட நண்பர் குறைவாக சம்பளம் வாங்குகிறார்

         காலங்கள் உருண்டோடினாலும் காதலுக்கு எதிர்ப்பு அவ்வாறே உள்ளது .ஒரு வேளை பெற்றோர் ஆனபின் நானும் இவ்வாறு நடந்து கொண்டாலும் ஆச்சிரிய படுவதற்க்கில்லை . மதம், ஜாதி , பணம் முறையே இதை காரணம் காட்டி தங்களின் கௌரவத்தை சமுதாயத்தில் நிலைநிறுத்தி  கொள்கிறார்கள் பெற்றோர்கள் . அந்த கௌரவத்திற்காக தன் மகனையோ மகளையோ பலி கொடுக்க தயாராக இருக்கிறார்கள்
இந்த மாதிரி காதலும் எதிர் காலத்தில் கள்ள காதலாக மாற வாய்ப்பிருக்கிறது .

 சரி இதையெல்லாம் விடு உன் காதலை பற்றி கூறு என்கிறீர்களா . எனக்கு காதல் பிரச்சனையில்லை காதலிகள் தான் பிரச்சனை. எல்லாம் ஒரு தலை ராகம் .என்ன செய்வது .இது குறித்து கடவுளிடம் அளாவுகையில் " உனக்கு வேறு பல சோதனைகள் உள்ளது இந்த  சோதனைகள் உனக்கு எந்த  ஜென்மத்திலும் நடக்க வாய்பேயில்லை " என்று கூறிவிட்டார்
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena