வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

19.11.10

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் 10 படங்கள்

                        ரஜினியின் மகளாக நடித்து ,அதே நடிகை ரஜினிக்கு ஜோடியாக நடித்து ,இப்போது இளம் ஹீரோக்களுக்கு அக்காவாக நடித்து கொண்டிருக்கிறார் .ஆனாலும் இன்னும் நம்ம சூப்பர் ஸ்டார் ஒரு ஹீரோ தான் .அதே நடிகை ரஜினிக்கு அம்மாவாகவோ இல்லை மாமியாராகவோ நடித்தாலும் நான் ஆச்சிரியபடமாட்டேன் .அதாங்க ரஜினியோட மாஸ் .
   நான் ஸ்கூலில் படிக்கும் போது வருடம் வருடம் நடக்கும் ஆண்டுவிழாவில் கடைசி பாட்டாக கண்டிப்பாக ரஜினி பாட்டு இருக்கும் ,அதில்   பணக்கார வீட்டு பிள்ளைகள் ஹீரோ ஹீரோயனியாக டான்ஸ்   ஆடுவார்கள்  ,என்னை போன்ற அடிபொடிகள் ஹீரோவாக ஆடுபவருக்கு  பின்னால் ஆடுவோம் , ப்ராக்டிஸ் ல சொல்லி குடுத்தமாதிரி ஆடலனா அடி பின்னி எடுத்துவிடு வாரு அந்த ஆளு (டான்ஸ் மாஸ்டர்),ஒழுங்கா படிக்கலனாகூட பிற வாத்தியார்கள் இந்த மாதிரி அடித்திருக்கமாட்டார்கள் ,தூணில் முட்டவைப்பார் ,காலால் எட்டி உதைப்பார் ,கெட்டவார்த்தையால் திட்டுவார் ,இப்படியெல்லாம் அடிவாங்கி சூப்பர் ஸ்டார்  பாட்டுக்கு ஒரு ஓரமாக ஆடிய என்னை ரஜினியின் பிடித்த படங்கள் தொடர் பதிவுக்கு அழைத்த அஞ்சா சிங்கம் ,நாயை ஏமாற்றி தேங்காய் தின்றாலும் தமிழக மக்களை ஏமாற்றாத தன்மான சிங்கம் அம்மாவாசை என்கிற நாகராஜாசோழன்  M .A அவர்களுக்கு நன்றியுரைத்துவிட்டு பதிவிற்குள் செல்கிறேன் (நீங்களும் வாங்க )


சூப்பர் ஸ்டாரின் சூப்பர் 10  படங்கள் :
 










10 . பாபா :
ரஜினி என்கிற மந்திரத்துக்காக இந்த படத்தை நான் நான்கு தடவை பார்த்தேன் .காமா சோமா வென்று மேக்கப் , அழுத்தமில்லாத கதை , இருந்தாலும் சூப்பர் ஸ்டாருக்காக சூப்பரா இருக்கு சொல்லி திரிந்தவன் .காருக்குள் வில்லனிடம் பேசும் காட்சி ரெம்ப பிடிக்கும் .சாயாஜிஷிண்டே பேசும் வசனங்கள் எல்லாம் ரஜினி எழுதி கொடுத்தது என்று கேள்வி .காலால் கடப்பாறையை வளைப்பது சூப்பராக இருக்கும் .ரம்யா கிருஷ்ணன் டைம் கேட்க்கும் காட்சியும் மகா அவதார் பாபாவுடானான காட்சியும் எனக்கு பிடித்தவைகள் (இந்த படத்தை போய் பிடிக்கும் என்று கூறுகிறானே இப்படி நிறைய பேர் நினைக்கலாம் .பொதுவாக ரசனைகள் ஒவ்வொருவருக்கும் வேறு படும் என்று மிக தாழ்மையுடன் கூறி கொள்கிறேன் )
 












9 . சந்திரமுகி :        
லகலக லக லக , வேட்டையனுக்காகவே இந்த படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம் .திருமதி ஜோதிகாவின் நடிப்பும் ,வடிவேலு வின் வெடி சிரிப்பும் படத்தின் வெற்றிக்கு உதவின . நயன்தாராவை பேகால் பேக்கில் இடித்துவிட்டு செல்லும் கட்சி ரொம்ப புடிக்கும் (பிரபு தேவா மன்னிப்பாராக ). எங்கள் ஊரில் இந்த படமும்  விஜய்யின் சச்சின் ஒன்றாக ஒரே தியட்டரில் ரிலீஸ் செய்யபட்டது ரஜினி கட் அவுட் விட விஜய் கட் அவுட் டை விட  பெரிதாக இருந்ததை கண்டு கொதிப்படைந்த ரஜினி
ரசிகர்கள் விஜய் கட் அவுட் டையும்,டிக்கட்டையும்கிழித்து  விஜய் ரசிகர்களை விரட்டி அடித்தனர் .அன்று ரொம்ப சந்தோசமாக இருந்தேன் .


  










 8 . எங்கேயோ கெட்ட குரல்:
ரஜினியை எனக்கு ஒரு நல்ல நடிகனாக உணர்த்தியபடம் இந்த படத்தில் நடிகை அம்பிகா தான் ஓடிபோனாலும்  சோரம் போகவில்லை என்னை மன்னிபீர்களா என்று கேட்கும் காட்சிகளில்  ரஜினியின் நடிப்பு அபாரமாக இருக்கும் . அந்த தளர்ந்த நடையும் கடைசியில் அம்பிகாவை பிணமாக தூக்கி செல்லும் காட்சியும் அருமையாக இருக்கும் .இந்த படத்தில் நடிகை மீனா ரஜினியின் மகளாக நடித்திருப்பார். நடிகை ராதா குழந்தை மீனாவுக்கு சூடுபோட்டு விடுவார் அதற்கு ரஜினி உன் குழந்தை யாக இருந்தால் இப்படி செய்வாயா கேட்டும் இடம் அருமையானது




 








7 . சிவாஜி 
பாஸ் மொட்ட பாஸ் இந்த கடைசி நிமிட காட்சிகளுக்காகவே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் .இந்த காட்சி சென்னை உள்ள காரப்பாக்கம் அருகில் ஒரு காலேஜில் நடத்தப்பட்டது .அதன் அருகினில்தான் தங்கி இருந்தேன்.சூட்டிங்கை பார்க்கலாம் என்று சென்ற எனக்கு கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் தான் கிடைத்தது (அத்தனையும் சினிமா கள்ளநோட்டுங்க )ஏவிஎம் செய்த விளம்பரகளுக்காக  படம் வெற்றி பெற்றது என்று எழுத்தாளர் ஞாநி கூறினார் .ஷ்ரேயா வுடனான காதல் காட்சிகள் காதலுக்காக ரயில்வே தண்டவாளத்தில் நிற்பதும் ,ஷ்ரேயா தன் தாவணியை கழற்றி ரயிலை நிறுத்துவதும்,அப்போது ரஜினி செய்யும் எக்ஸ்ப்ரஷன் கலக்கல் .விவேக்குடன் சேர்ந்து காமெடி பிரித்து மேய்ந்திருப்பார் .
 










6 . தில்லு முள்ளு :
இது ஒரு ரீமேக் படமான பாலசந்தர் படம் . ஒரு முழுநீள காமெடி படம் .டிவியில் எத்தனை முறை போட்டாலும் உட்கார்ந்து பார்ப்பேன் .மீசை இல்லாத காரக்டர் ரஜினி தேங்காய் சீனி வாசனை பார்க்கவரும் பொழுது காலால் கேட்டை திறக்கும் காட்சி ரொம்ப பிடிக்கும் .அதில்  ஒரு ஸ்டைல் இருக்கும் .கிளைமாக்ஸ் காட்சியில் கமல் வருவது .ரசித்து பார்க்கும் கட்சிகள் .அது மட்டும் அல்லாமல் இதில் மாதவி மிகவும் அழகாக இருப்பார் .அந்த பெரிய கண்களும் ராகங்கள் பதினாறு என்ற பாட்டும்  ,அப்போதுசென்னையில் உள்ள  தியட்டர் பெயர்களை ராகங்கள் பெயராக கூறி தேங்காய் ஸ்ரீனிவாசனை ஏமாற்றும் காட்சி அருமை யாக இருக்கும் .
 














5 . அண்ணாமலை :
இந்த படத்தில் இருந்துதான் ரஜினிக்கு படம் பெயர் போடுவதற்கு முன்னால் சூப்பர் ஸ்டார் என்று ஒரு விதமான ஒலியுடன் கூடிய ரஜினி என்று ஆங்கிலத்திலும் பின்பு தமிழிலும் வரும் அந்த ஒலிகலவை போட பட்டது . குஷ்பு ரஜினி யிடம்  அட்ரஸ் கேட்டு துரத்தும் காட்சியும் பின்பு நடக்கும் சண்டை காட்சியும்  பாம்பு காட்சியும் அதை தொடர்ந்து நடக்கும் குஷ்பு உடனான கிளு கிளு குழு குழு காட்சியும்.மிகவும் ரசிக்கத்தக்கவை .சரத்பாபுவை கடத்திவிட்டார்கள் என்று கூறும் மனோரமா வை தொடர்ந்து வரும் பின்னணி இசையும் ரஜினி ஸ்லோ மோசனில் எழுதிருக்கும் காட்சியும் புல்லரிக்க வைப்பவை.இந்த படத்திற்கு சென்று மூன்று முறை டிக்கெட் கிடைக்காமல் வந்த அனுபவமும் உண்டு .












 4.எந்திரன் :
இந்த  மாதிரியான தொழில்நுட்பம் நிறைந்த படம் தமிழ் பட உலகிற்கு புதியது .அதற்காகவே இதை நாம் வரவேற்கலாம்.வேறு ஒரு ஹீரோவை கற்பனையே செய்து பார்க்க முடியாதவாறு   ரஜினி  நடித்திருப்பார் .அப்படி கற்பனை செய்து பார்க்க  வேண்டுமானால் விஜயை கற்பனை செய்து பாருங்கள் .(கடும் சீத பேதிக்கு ஆளானால் நான் பொறுப்பல்ல)ரஜினி  உடனான காதல்காட்சிகளில்  ஐஸ்வர்யாவின் எக்ஸ்பிரசன் கேவலமாக இருந்து என்று ஒரு பிரபல எழுத்தாளர் கூறினார். ஒரு வேளை அவர் ஆடியுள்ள பாட்டிற்கு ஐஸ்வரியாவை ஆடவைத்திருந்தால் இப்படி கூறி இருக்க மாட்டார் போலும் .கொஞ்சம் சயின்ஸ் பிக்சனும் அதிகம் கமர்சியல் நிறைந்த  படம் .
 














3 .  பாட்சா :
ஒரு முழு நீள கமர்சியல் படம் ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி போன்ற ரஜினி பன்ச்கள் இந்த படத்தில் இருந்து தான் தொடங்கியது , உண்மைய சொன்னேன்என்ற காட்சியும் பிளாஷ் பாக்கிற்கு முன்னால் வரும் சண்டை காட்சியில் உள்ளே போ என்று கூறும் காட்சியும்,எனக்கு பிடித்த காட்சிகள் ,நீ நடந்தால் நடை அழகு என்ற பாட்டில் பல கெட்டப்களில் ரஜினி வருவார் என்னுடைய  சிறுவயதில் ரசித்துபார்த்த  காட்சிகள் ,ரகுவரனுடன் போனில் பேசும்பொழுது யா யா யா என்று கூறுவது அருமையாக இருக்கும் ,நக்குமா உடனான் காதல் காட்சிகள் சலிப்பை தருபவை என்றாலும் சூப்பர் ஸ்டார் ருக்காகவே கணக்கிலாமல் பல தடவை   பார்த்திருக்கிறேன்
 















2 .  தளபதி :
ரஜினி நடிப்பிற்கு ஒரு  சான்று.ஷோபனா உடனான காட்சிகளில் ஊம் பின்னால  நானாடி சுத்துனேன் என்று அங்கிருந்து போக சொல்லுவார் அந்த காட்சியும் ,அரவிந்த சாமி தன் தம்பி என்று தெரிந்தவுடன் நா உங்களுக்கு ஒரு அண்ணன் மாதிரி  நீங்கள் இங்கிருந்து போக வேண்டும் என்று கூறும் காட்சியும் ,மம்முட்டி யிடம்  ஏன்னா நீ  என் நண்பன் என்று கூறும் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தவை . காட்டுக்குள்ளே மனசுக்குள்ளே என்ற பாட்டில் ஒருபாட்டியிடம் இடி வாங்கி விழும் காட்சி ரசித்த காட்சிகள், சின்ன தாய் அவள் பாட்டில்  ஸ்ரீவித்யா பின் தொடர்ந்து மறைந்து பார்க்கும் காட்சிகள் அருமையானவை ,இந்த படமும்  கமலின் குணா படமும்  ஒரே தியட்டரில் ரிலீஸ் ஆனது .இந்த படம் பார்க்க நாங்கள் குடும்பத்துடன் சென்றோம் .ஆனால் படம் பார்க்கவில்லை இரண்டு பேரின் ரசிகர்களும் சண்டையிட்டு கொண்டிருந்தார்கள் .பின்பு ரொம்ப நாள் கழித்து தான் பார்த்தேன்
 










1 . படையப்பா:
 இந்த படம் வந்தபொழுதுநான் படித்த  ஸ்கூல் அருகில்  நடந்த சம்பவம் . இதில் ரஜினி கையை சுழற்றி வணக்கம் போடும் ஸ்டைலை  நான் ஒரு பொண்ணு முன்னால் சைக்கிள் அதுவும்இரண்டு  கையை விட்டு அந்த ஸ்டை லை செய்தேன் .அந்த நேரம் பார்த்து பின்னால் ஒரு போலீஸ் மப்டியில் வந்தார்.என்னை அழைத்தார் நானும் எவனோ ஒருத்தன் கூப்பிடுகிறான் என்ற தெனா வெட்டில் சென்றேன் .பளிரென்று ஒரு அரை விட்டார் .அதன் பின்தான் உணர்தேன் அவர் ஒரு போலீஸ் காரர் என்று .அதோடு விட்டாரா 15  உக்கி போட விட்டார் .பின்பு ஸ்டைல் பண்ற மூஞ்ச பாரு என்று கூறி ஓட்ரா என்றார் .எடுத்தேன் சைக்கிளில் ஓட்டம் .அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் என்று ஞாபகம் சரியாக தெரியவில்லை .சரி படத்திருக்கு வருவோம் 
ரம்யா கிருஷ்ணனிடம் உங்களை பிடிக்கவில்லை என்று கூறும் பொழுது அவர் கண்ணாடியை கலட்ட இவர் கண்ணாடியை மாட்டுவார் .மணிவண்ணனிடம் பேசும் வசனம் . என்வழி தனி வழி என்று கூருவதிலாகட்டும் சான்சே இல்லை 
ரஜினி ரஜினி தான்

இது போக இன்னும் நிறைபயபடங்கள் எனக்கு பிடித்தவை .பொது வாக படங்களில் வரும் பாட்டுக்களை அப்போது பார்ப்பதோடு சரி பெரிய அளவில் ரசிப்பதில்லை ,ஆனாலும் 


ஆல் டைம் பேவரைட் : அடுத்த வாரிசில் வரும் " ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா"


இந்த தொடர் பதிவுக்கு நான் அழைக்கும் பதிவர் 
பலநாள் பதிவு போடாமல் டகால்ட்டி வேலை காட்டிகொண்டிருப்பவர் 
முறைமாமன் 
(இவருடைய கருத்துக்கும் கொள்கைக்கும் இந்த பதிவு சரியானதல்ல இவர் படலாம் பார்ப்பாரா என்று சந்தேகமாக உள்ளது  )
இருந்தாலும் எனக்கு யாரை அழைப்பதென்று தெரியவில்லை நண்பா
பப்ளி ஹரிஸ்
மூன்றாவதாக யாரை அழைக்கலாம், வேண்டாம் .இவர் இப்போது வேறு மாதிரியான உலக சினிமாக்கள் பார்க்கிறார்   
நண்பர்களே என் அழைப்பை ஏற்றுகொள்வீர்களா?


















































































20 கருத்துகள்:

எஸ்.கே said...

உங்கள் தொகுப்பும் மிக நன்றாக உள்ளது!

Unknown said...

வருகைக்கு கருத்திட்டமைக்கும்
நன்றி எஸ்.கே

அருண் பிரசாத் said...

உங்கள் அனுபவத்தையும், ரஜினி படத்தின் காட்சிகளையும் கல்ந்து கட்டி கொடுத்து இருக்கிறீர்கள். நல்லா இருக்குது...

தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி

NaSo said...

//அஞ்சா சிங்கம் ,நாயை ஏமாற்றி தேங்காய் தின்றாலும் தமிழக மக்களை ஏமாற்றாத தன்மான சிங்கம் அம்மாவாசை என்கிற நாகராஜாசோழன் M .A //

எனக்கு புகழ்ச்சியெல்லாம் பிடிக்காது.

NaSo said...

//அப்படி கற்பனை செய்து பார்க்க வேண்டுமானால் விஜயை கற்பனை செய்து பாருங்கள் .(கடும் சீத பேதிக்கு ஆளானால் நான் பொறுப்பல்ல)//

யோவ் உனக்கு மனசாட்சியே இல்லையா? அந்த மாதிரி நினைத்து எனக்கு ஏதாவது ஆகிருந்தா என்னோட MLA கனவு என்னாகிறது?

NaSo said...

நகைச்சுவையுடன் சொந்த அனுபவங்களையும் சேர்த்து நல்ல நடையில் சொல்லியிருக்கிறீர்கள். தொடர் பதிவை தொடர்ந்தமைக்கு நன்றி மணிவண்ணன்!!

karthikkumar said...

எழுதிருவோம் பங்காளி நன்றி

Unknown said...

அருண் பிரசாத் said...

உங்கள் அனுபவத்தையும், ரஜினி படத்தின் காட்சிகளையும் கல்ந்து கட்டி கொடுத்து இருக்கிறீர்கள். நல்லா இருக்குது...

தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி

இதற்கு மேலும் நண்பர்களுடன் சென்று பார்த்த ரஜினி படம் அனுபவம் நிறைய உள்ளது .வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி

Unknown said...

நாகராஜசோழன் MA said...

//அஞ்சா சிங்கம் ,நாயை ஏமாற்றி தேங்காய் தின்றாலும் தமிழக மக்களை ஏமாற்றாத தன்மான சிங்கம் அம்மாவாசை என்கிற நாகராஜாசோழன் M .A //

எனக்கு புகழ்ச்சியெல்லாம் பிடிக்காது.

அரசியல்வாதிகளை புகழ்வது தமிழனின் அடிப்படை குணம் .

Unknown said...

நாகராஜசோழன் MA said...

//அப்படி கற்பனை செய்து பார்க்க வேண்டுமானால் விஜயை கற்பனை செய்து பாருங்கள் .(கடும் சீத பேதிக்கு ஆளானால் நான் பொறுப்பல்ல)//

யோவ் உனக்கு மனசாட்சியே இல்லையா? அந்த மாதிரி நினைத்து எனக்கு ஏதாவது ஆகிருந்தா என்னோட MLA கனவு என்னாகிறது?

என்னாகும் கனவு கனவாவே போய் இருக்கும்

Unknown said...

நாகராஜசோழன் MA said...

நகைச்சுவையுடன் சொந்த அனுபவங்களையும் சேர்த்து நல்ல நடையில் சொல்லியிருக்கிறீர்கள். தொடர் பதிவை தொடர்ந்தமைக்கு நன்றி மணிவண்ணன்!!

நன்றி

Unknown said...

karthikkumar said...

எழுதிருவோம் பங்காளி நன்றி

சரி பங்காளி

ஹரிஸ் Harish said...

நிறைய தகவல்களோடு தொகுத்துள்ளீர்கள்..அருமை..

ஹரிஸ் Harish said...

தொடர்பதிவிற்க்கு அழைத்ததற்க்கு நன்றி..

//இவருடைய கருத்துக்கும் கொள்கைக்கும் இந்த பதிவு சரியானதல்ல//

ஹி.ஹி..இப்படில்லாம் கலாய்க்க கூடாது..

//இவர் படலாம் பார்ப்பாரா என்று சந்தேகமாக உள்ளது//

நிறையவே பார்பேன்..எழுதுகிறேன்..

Philosophy Prabhakaran said...

// மூன்றாவதாக யாரை அழைக்கலாம், வேண்டாம் .இவர் இப்போது வேறு மாதிரியான உலக சினிமாக்கள் பார்க்கிறார் //
நான்தானே இது...

Unknown said...

ஹரிஸ் said...

நிறைய தகவல்களோடு தொகுத்துள்ளீர்கள்..அருமை..

வருகைக்கு கருத்திட்டமைக்கும் நன்றி

Unknown said...

Blogger philosophy prabhakaran said...

// மூன்றாவதாக யாரை அழைக்கலாம், வேண்டாம் .இவர் இப்போது வேறு மாதிரியான உலக சினிமாக்கள் பார்க்கிறார் //
நான்தானே இது...
அப்படிதான்னு நினைக்கிறேன்

Unknown said...

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


www.ellameytamil.com

சேர்த்தாச்சு

Anonymous said...

பாபா படம் பற்றி விமர்சனம் கலக்கல் தலைவரே

Unknown said...

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கு நன்றி தலைவரே

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena