வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

11.4.11

நித்யா-சில நினைவலைகள்

நித்யாவை நான் முதன் முதலாக பார்த்தது அப்படித்தான் ,என் நண்பன் குமார் வீட்டின் சுவற்றில் மூன்று ஸ்டும்புகள் கரியால் வரைந்து கிரிகெட் விளையாடி கொண்டிருந்தோம் ,நான்தான் பாட்டிங் .ஆப்ஸ்பின்னாக வந்த பிளாஸ்டிக் பந்தை அப்படி லெக்கில் வளைத்து சுழற்றி அடித்தேன்.அது அப்படியே காற்றை எதிர்த்து நாங்கள் பௌன்றிகளாக வகுத்த எல்லையை நோக்கி 'விர்ரென ' பறந்தது .ஆனால் காற்றின் போக்கில் திடீரென மாற்றம் ஏற்ப்பட பந்து 'ஏர் ஸ்விங்காகி ' ஓரமாக நடந்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் முதுகில் அடித்தது .செவென் சாட் ,எறிபந்து விளையாடும் போது பந்தினால் அடிபட்ட வலியை எனக்கு அது  உணர்த்தியது ,சிறிது நேரம் என்னையும் ,எங்களையும் உற்றுநோக்கியது அவள் கண்கள் ,நான் பக்கத்தில் சென்று மன்னிப்பு கேட்டு பந்தை வாங்கலாமா என்று நினைத்தேன் ,ஆனால் அதற்குள் அவள் பந்தை கூடைக்குள் எடுத்து போட்டு விட்டு நடக்க ஆரம்பித்து விட்டாள்,அப்படியே அந்த ஏரியாவின் சங்க தலைவர் வீட்டின் எதிர்த்தாற்போல் உள்ள வீட்டில் நுழைந்து மறைந்தாள்
" பந்த அடிச்சவந்தான் போய் வாங்கணும் " ராஜா
" சாக்கடைக்குள அடிசிருந்தாலாவுது சேகர் எடுத்திட்டு வருவான் ...என்னடா சேகர் " கார்த்திக்கை முறைத்தான் சேகர் ,கல்லெடுக்க குனிந்தான் 

" சார் .........அண்ணே என்று கூப்பிட நினைத்தேன் அங்கிள் .......சரியான செவுட்டு குடும்பமா இருப்பாய்ங்க   போல "

முண்டா பனியன் கைலியுமாக முன்புற வழுக்கையுமாக புல் புல் தார் மீசையுமாக  ஒருவர் காட்சி அளித்தார்
" என்ன ' என்றார் கடுப்பாக
" சார் பந்த எடுத்துவந்துட்டாங்க சார் "
" ஆங் மேல அடிச்சா ..........ஆள் பாத்து வெளியாட முடியாதா "
" சாரி சார் " என்றவுடன் குட்டி குட்டி என்று அழைக்க ஆரம்பித்தார் ,அவளின் செல்ல பெயராக இருக்கும் போல ,ஆனால் வந்ததோ ஒரு சிறுவன் ,அவளின் தம்பி போல

" இவனுக்கு கொஞ்ச நேரம் பால் போட்டுட்டு பால் வாங்கிட்டு போ "
கொஞ்ச நேரம் அதிக நேரமாகியது குட்டிக்கு உருட்டிவிட்டால்தான் அடிக்க தெரிந்தது ,சரியாக ஐந்து ஓவர் போட்டபின்தான் "குட்டி போதும்பா பந்த குடுத்துடுவோமா " அவன் சரியான தலையாட்டினான் ,கடைசியாக கேட்டை மூடி செல்கையில் நித்யா எட்டி பார்ப்பதை  பார்த்தேன்

ஆனால் அவளின் பெயர் நித்யா என்று அன்று மாலைதான் தெரிந்தது ,மாத்ஸ் டியூஷனில் ஆரிப்புடன் அமர்ந்து வெகு சிரத்தையாக மிஸ் குடுத்த கணக்கை காப்பி செய்து கொண்டிருந்தேன்

" ஆரிப் இது என்னடா பைவா எய்ட்டா" கோகுல் சாண்டல் பெளடரின் வாசம் அரை முழுவதும் நிறைத்ததால் நிமிர்ந்தேன் நித்யா சிவப்பு கலர் மிடி என்று நினைக்கிறேன்ஆங்காங்கே கண்ணாடி ஜொலித்தது ,ரெட்டை சடை , கூடவே மாத்ஸ் மிஸ், பின்னால்  புல் புல்தார் மீசை

" சரி வரேன் டீச்சர்  " என்று கிளம்பினார் புல் புல்தார் மீசை
" நீ அந்த பக்கமா போய் ஒக்காருமா " அப்படியே என்னிடம் வந்தார் நோட்டை வாங்கி பார்த்தார் " நீ இந்த கணக்க இன்னும் முடிக்கலையா " நறுக்கென்று ஒரு கொட்டு ஆஅ .நித்யா குனிந்து சிரிப்பதை பார்த்தேன் .அவளை அழவைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன் .அவளின் பக்கத்தில் புத்தம் புதிய ஜாமென்றி பாக்ஸ்,சிரிக்கிறியா

"டே சுகுமார் அண்ணகிட்ட குடுத்த வித்து குடுத்திடுவாருடா " ராஜா
" யாருட்டடா ஆட்டைய போட்ட " கார்த்திக்
" டே புத்தம் புதுசா இருக்குடா ஜாமென்றி பாக்ஸு" சேகர்
நான் எங்கே ஒளித்து வைக்கலாம் என்று சிந்தித்தேன்

அன்று ஆரிப் வழக்கமாக அமரும் இடத்திலிருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்தான்
" இங்க வாடா "
" வேணாம் வேணாம் "
" ஏண்டா " டியூஷன் மிஸ் வர மௌனமானேன் ,கையில் ஸ்டீல் ஸ்கேல் .
" நித்யாவோட புது ஜாமென்றி பாக்ஸ்சை யாரு எடுத்தது " அனைவரும் அமைதியாக இருந்தனர்
" எடுத்தது யாருன்னு எனக்கு தெரியும் ,உண்மைய ஒத்துகிட்டா நல்லது " நித்யா நிறைய அழுதிருக்கிறாள் ,முகம் வீங்கிருந்தது ,மனத்திற்குள் சந்தோசத்தை உணர்ந்தேன் ,படிக்கிற பாவனையை ஏற்படித்தி கொண்டேன்
சுளீர் சுளீர் சுளீர் சுளீர்
" ஜாமென்றி பாக்ஸ் எங்க ம்ம்ம் சொல்லு "
" ஸ் ஸ் ஸ் ஸ் ஆஅ மிஸ் நா எடுக்கல மிஸ் "
" ஆரிப் சொல்லிட்டான் எங்க வச்சிருக்கேன் சொல்லு இல்ல ஒங்க அம்மா கூட்டிட்டு வா போபோ "
" மிஸ் நெஜமா எடுக்கல மிஸ் "
" பொய் சொல்ற பொய் சொல்ற " சுளீர் சுளீர் சுளீர்
கண்ணீரை கட்டு படுத்த நினைத்தாலும் " போ எங்க வச்சிருக்க போ எடுத்துட்டு வா " கண்ணீரை துடைத்து கொண்டே வெளியேறினேன்
ஜாமென்றி பாக்ஸ்சை  நித்யாவிடம் நீட்டினேன் ,வாங்கிகொண்டாள்

" திருடவா செய்யற ,மொட்டிங் கால் போட்டு படி அப்பதான் உனக்கு புத்திவரும் ,எல்லாம் சரியா இருக்காமா "
" மிஸ் டிவைடர் இல்ல " திரும்பவும் ஸ்கேல் " மிஸ் நா அதில இருந்து எதுவும் எடுக்கல " என்றேன்

" மிஸ் மிஸ் உள்ள இருக்கு மிஸ் " உஸ் அப்பாடி அடிப்பட்ட இடம் வலித்தது கூடவே மொட்டிங் கால் வேறு ,ஆரிப்பை பார்த்தேன் அவன் என்னை கவனித்ததாகவே தெரியவில்லை ,நித்யா என்னை பார்த்தாள் ,முறைத்தேன்

                                                                                                                            ---- தொடரும்

டிஸ்கி : சிறுகதையாகத்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் தொடர்கதையாவிட்டது ,மன்னிக்கவும்


20 கருத்துகள்:

விக்கி உலகம் said...

அய்யோ அய்யோ!........ஒரு பய கூட அமைதயானவனா தெரியலையே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

touching touching......! nice story! waiting for next part

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

டிஸ்கி : சிறுகதையாகத்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் தொடர்கதையாவிட்டது ,மன்னிக்கவும்

hi.......hi....hi......!!

அப்பாவி தங்கமணி said...

திருவிளையாடல் ஆரம்பம் போல இருக்கே... மொதல் பின் காதல்னு வருமோ? பார்ப்போம்... எழுதின விதம் நல்லா இருக்குங்க...:)

# கவிதை வீதி # சௌந்தர் said...

சூப்பர் தொடக்கம்..
இங்கயே முடிங்கன்னா தொடருமா..
அதுக்கு அப்புறம் வருணுமா..

சரி.. சரி..

சி.பி.செந்தில்குமார் said...

மணிவண்ணன் நல்லவருன்னு நினச்சேன்.. பழகினேன்.. அவரும் ராம்சாமி மாதிரி பல......ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணம் ஓட்டு போட முடில.. என்ன பாருங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நித்யான்ன உடனே நித்யானந்தாவப் பத்தித்தான் எழுதி இருப்பீங்கன்னு நெனச்சு வ்ந்தேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்ப் படம் மாதிரியே போகுது, நல்லா ரசிச்சு எழுதி இருக்கீங்க, உண்மைச் சம்பவமா?

ஜீ... said...

நல்லா இருக்கு மணி! கலக்குங்க! :-)

Raja=Theking said...

Good story . . Waiting for next part

Chitra said...

Good going.....

cheena (சீனா) said...

அன்பின் மணி

மலரும் நினைவுகளை - அசை போட்டு ஆனந்தித்து இடுகையாக இட்டது நன்று. நகைச்சுவையுடன் தொடர் கதையாக எழுத முனைந்தது சூப்பர். தொடர்க் - வாழ்க வளமுடன். நட்புடன் சீனா

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... தமிழ்ப் படம் மாதிரியே போகுது, நல்லா ரசிச்சு எழுதி இருக்கீங்க, உண்மைச் சம்பவமா?........//////////////
////////////////////
இருக்கலாம் மாப்பிள இந்த ஆளு அந்த மாதிரிதான் .........
அதுக்கு சரியா வரமாட்டான் ..................

இரவு வானம் said...

திரிஷா கிடைக்கலேன்னா திவ்யா, திவ்யா கிடைக்கலேன்னா நித்யாவா பாஸ்?

நா.மணிவண்ணன் said...

வருகைபுரிந்து கருத்துரைத்த அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்

ஆனந்தி.. said...

எல்லாம் சரி ...நித்யாவை பார்க்கும்போது எத்தனை வயசுன்னு குரிப்பிடலையே..ஒரு மூணு ..நாலு வயசு இருக்குமா...:)))

ஆனந்தி.. said...

என்ன மணி..இன்டிலியில் உங்களுக்கு வோட்டு இணைக்கவே முடியலை..ஏதோ error மெசேஜ் வந்துட்டே இருக்கு...

ஆனந்தி.. said...

There is someproblem in your link mani..i could not put the vote in tamilmanam as well as indili..

! சிவகுமார் ! said...

அற்புதமா எழுதி இருக்கீங்க மணி. புல் புல் தாரா இப்ப எங்க இருக்கார்.

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena