வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

12.11.10

தமிழக மக்களே தலையில் மண் அள்ளி போட்டு கொள்ள தயாராகுங்கள்

         "தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கிபோட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்துகொள்ளலாம் கவிழ்ந்துவிடமாட்டேன் "
இந்த வார்த்தைக்கு ஒரு மறைமுக அர்த்தம் உள்ளது
அதுதான் இந்த தலைப்பு
தமிழக மக்களே தலையில் மண் அள்ளி போட்டு கொள்ள தயாராகுங்கள்
தமிழக மக்களே தலையில் மண் அள்ளி போட்டு கொள்ள தயாராகுங்கள்
தமிழக மக்களே தலையில் மண் அள்ளி போட்டு கொள்ள தயாராகுங்கள் 

இந்த செயலை யானைகள்தான் செய்யும் என்று கேள்விபட்டிருக்கிறேன் .அந்த வகை யில் பார்த்தால் தமிழர்களும் யானைகளே .
இந்த தேர்தல் பலகட்சிகளுக்கு எதிர்காலத்தில்  இருப்பதும் இல்லாமல்  போவதற்கும் ஒரு சான்றாக இருக்கும்

தி.மு.க:

                இவர்கள் தமிழகத்திற்கு ஒரு புதிய "திருமங்கல கலாச்சாரத்தை " தோற்றுவித்தவர்கள் .இதற்குமுன்னாலும் இந்த கலாச்சாரம் இருந்தாலும் இவர்களால் ஒரு புதிய பரிணாமத்தை  அடைந்தது .இநதியா முழுவதிலும்  ஒரு மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது .இந்த தேர்தலில் இன்னும் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவதற்கு கட்சி நிதியாக 1 .76 லட்சம் கோடி சேர்க்கப்பட்டுள்ளது. இலவசங்களை அள்ளித்தருவதற்கு" குடிமக்கள் " உருவாக்க பட உள்ளனர் .ஆதலால் தமிழக மக்களே கவலை படாதீர்கள் .
அ.தி.மு.க :
             இவர்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல .என்ன ஒன்று அவர்களை போல் கட்சி நிதியை வளர்க்கதெரியா தவர்கள். ஆனாலும் இவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு மிக மிக மிக முக்கியமான தேர்தல் .சூரியனை அஸ்த்தமனம் செய்வதற்கு இவர்களால்  தான் முடியும் கட்சி தலைவி கொடநாட்டில் ஓய்வு எடுக்காமல் கட்சிப்பணி ஆற்றி பிறகு தமிழக "குடிமக்களுக்கு " தொன்றாட்டுவார் என்று நம்புவோமாக . இவர்கள் "மைனாரிட்டியாக" இல்லாமல் மெஜாரிட்டி யாக வருவார்களா பொறுத்திருந்து பாப்போம்
தமிழக காங்கிரஸ் :
   இவர்களுக்கு யார் படத்தை வைப்பதென்றே தெரியவில்லை .இவர்களுக்கு அ.தி.மு.க அம்மையார் அவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார் தி.மு.க வெளியேறினால் .இவர்களுக்கு உரிய பாரம்பரியத்தை என்றோ இழந்து விட்டார்கள் .சமிபத்தில் மதுரையில் தியாகி கக்கனுக்கு விழா கொண்டாடினார்கள். ஒரு திராவிட கட்சிகளை போல் செயல்பட்டார்கள் .மதுரை முழுவதும் இவர்களுடைய படங்கள் ப்ளெக்ஸ் போர்டாக சந்து போந்து இண்டு இடுக்கு எல்லாம் வைத்துதிருந்தார்கள்.கக்கன் சுடுகாட்டில் இருந்து எழுந்து வந்து மருந்தை குடித்திவிட்டு மீண்டும் சுடுகாட்டில் படுத்திருப்பார் என்றே நினைக்கிறேன் .காங்கிரஸ் காரர்களுக்கு ஒரு வேண்டு கோள் .தயவுசெய்து .பெருந்தலைவர் காமராஜர் பெயரை பயன்படுத்தாதீர்கள் .

.
தே.மு.தி.க :
         இந்த கட்சியின்  செயல்பாடுகள்  என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.இவர்கள் கூட்டணி வைப்பார்களா என்றும் என்னால் கணிக்க முடியவில்லை .விருத்தாசலம் மக்களுக்கு தான் இவர்களை பற்றி அதிகம் தெரிந்திருக்கும் அந்த தொகுதியை சேர்ந்தவர்கள் இதை பார்த்தால் கொஞ்சம் அந்த கட்சியின் கட்சி தலைவரையும் பற்றி பின்னூட்டம் இடுங்கள் .மக்களுக்கு உதவியாக இருக்கும் .ஒரு வேளை விருத்தகிரி படம் தேர்தலுக்குள்  வராமல் இருந்தால்  இவர்கள் வெற்றிபெறலாம்
பா.ம.க :
       இவர்கள் ஒரு கட்சி அந்தஸ்த்திற்கு எப்படி வந்தார்கள் என்று தெரியவில்லை .ஆனாலும் இவர்கள் உதவி மற்ற கழகத்திற்கு தேவைப்படும் ஓட்டுக்காக அல்ல கலகம் புரிவதற்கு .இதற்ககு மேல் இவர்களை விமர்சிக்க எழுத்துவர மாட்டேன்கிறது .

மார்க்சிஸ்ட் /கம்யுனிஸ்ட் :
சமீபத்தில் நண்பர் ஒருவரது ப்ளோகில் கம்யுனிசம் காலாவதியாகி போன  ஒன்று என்று கூறியிருந்தார் .இந்த "தோழர்களால்தான் "  அவர் அப்படி எழுதி இருக்ககூடும் .கம்யுனிசத்தில் ஆராயப்படவேண்டிய பல விடயங்கள் உள்ளன .இன்றைய சூழலில் அதனுடைய பரிணாமம்  இந்த போலி கம்யுனிஸ்ட் களால் சிதைந்து விட்டது .இருந்தாலும் கம்யுனிஸ்ட் களின் உதவி இரு  கழகத்திற்குகொஞ்சம் தேவை  படும் 
ச.ம.க :
      இப்படி ஒரு கட்சி இருக்கா .எனக்கு தெரியாதே 
ம.தி.மு.க:
      இவர்களை பற்றி கூறவேண்டுமா
இன்னும் இருக்கிற 
பிற கட்சி பற்றி எழுதுவதால் என் கண்களும் கைகளும் பாதிப் படைய வாய்ப்பிருப்பதால (கொஞ்ச நஞ்ச கட்சியா இருக்கு ) இத்துடன் முடித்துகொள்கிறேன் .

தமிழக மக்களே எந்த கழகம் ஆட்சிக்கு வரவேண்டுமென்று நீங்கள் தீர்மானிக்க போகிறீர்கள் அதாவுது உங்கள் தலையில் மண் அள்ளி போட்டு கொள்ள தயாராகுங்கள் 

பின்குறிப்பு :
நானும் போன தேர்தலில் மண் அள்ளி என் தலையில் போட்டு கொள்ள நேர்ந்தது . ஆனால் இந்த தேர்தலில் நீர் அப்படி செய்யவேண்டாமென்று எலெக்சன் கமிசன் கூறிவிட்டது.வீடு மாறி விட்டால் பெயரை வோட் லிஸ்டில் இருந்து எடுத்துவிடுவார்களாம். இந்த சட்டம் உங்கள் நாட்டிலும் உள்ளதாஎன்று  ஒபாமா விடம் கூட கேட்டிருக்கலாம் . இந்த ஐந்தான்டிற்கு ஒரு முறை நிகழும் அறிய செயலை செய்யவிடாமல் செய்த எலெக்சன் கமிசன் ற்கு ஒரு மிக பெரிய குட்டு வைக்க சொல்லி ஞாநி யிடம் கூற வேண்டும் (ம்ம்ம்  500 ரூபாய் போச்சே )

25 கருத்துகள்:

கத்துக்குட்டி said...

therdhal vimarsanam thodangiyacha

ஹரிஸ் Harish said...

//ஒரு வேளை விருத்தகிரி படம் தேர்தலுக்குள் வராமல் இருந்தால் இவர்கள் வெற்றிபெறலாம் //

இது பன்ஞ்...

ஹரிஸ் Harish said...

ச.ம.க :
இப்படி ஒரு கட்சி இருக்கா .எனக்கு தெரியாதே //

என்ன பாஸ் இப்படி சொல்லிட்டிங்க..கூட்டணியில்லாமலே ஆட்சியை பிடிப்போம்னு சொல்லிருக்காரு நம்ம சரத் சார்..

Philosophy Prabhakaran said...

காமெடி பீஸ் ச.ம.க வையெல்லாம் ஏன் இழுக்குறீங்க... திருமா குருமா எங்கே....?

Unknown said...

கத்துக்குட்டி said...

therdhal vimarsanam thodangiyacha

நன்றி

Unknown said...

ஹரிஸ் said...

//ஒரு வேளை விருத்தகிரி படம் தேர்தலுக்குள் வராமல் இருந்தால் இவர்கள் வெற்றிபெறலாம் //

இது பன்ஞ்...

இந்த படம் வந்தா நமக்கு டிஞ்சு

Unknown said...

ச.ம.க :
இப்படி ஒரு கட்சி இருக்கா .எனக்கு தெரியாதே //

என்ன பாஸ் இப்படி சொல்லிட்டிங்க..கூட்டணியில்லாமலே ஆட்சியை பிடிப்போம்னு சொல்லிருக்காரு நம்ம சரத் சார்..

என்னங்க சொல்றீங்க .கேப்டனே கூட்டணி வைக்கலாம்னு யோசிக்கிறாரு .இவரெல்லாம் கருணாநிதிக்கு சுஜிப்பி

Unknown said...

philosophy prabhakaran said...

காமெடி பீஸ் ச.ம.க வையெல்லாம் ஏன் இழுக்குறீங்க... திருமா குருமா எங்கே....?

இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு பேசுபவர்களை நான் ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை

NaSo said...

நண்பரே உங்களுக்கு ஆட்டோ கன்பார்ம்.

kumar said...

மக்கள் இன்னும் திருந்தவில்லை. எபோதும் வரும் இரண்டு கட்சிகளையும் ஒதுக்கிவிட்டு, புதிய கட்சிகளுக்கு வாய்ப்பு தரலாம் அல்லவா. இரண்டு கட்சிகளும் ஊழல்தான். அதனால் புதிய கட்சிக்கு வாய்ப்பு அளிக்கலாம். தயவுசெய்து அவர்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கும், ஒரு பாட்டில் கோற்றுகும், ஒட்டு போட்டு உங்கள் தலையில் நீங்களே மண்ணை அள்ளி போடாதீர்கள். இலவசம் என்ற பெயரில் உங்களிடம் ஒட்டு கேட்டால் தயவு செய்து மறுத்து விடுங்கள். இலவசம் என்றபெயரில் உங்கள் முதுகில் வில்லைவாசி என்னும் சுமையை ஏற்றி விடுவார்கள். மக்களுக்கு எவர் நல்லது செய்கிறாரோ அவருக்கு மட்டும் வாக்களியுங்கள். மக்களுக்கு நல்லது செய்தால் அரசியல் கட்சி தலைவர்கள் ஏன் பயப்பட வேண்டும், நாம் திரும்பவும் ஆட்சிக்கு வருவோமா இல்லை என்று. எல்லோரும் ஊழல் செய்கிறார்கள் அதனாலதான் நாடே ஊழலில் மூல்கிகிடகிறது. எவர் ஒருவர் மக்களுக்கு நல்லது செய்கிறாரோ அவர் நிச்சயம் பயப்பட தேவையில்லை. மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள், ஊழல் செய்கிறவர்கள், நிச்சயம் ஒருநாள் கடுவுளால் தண்டிக்கபடுவர். இதை அவர்கள் உணரும் வரை ஊழல் ஒழியாது.

இப்படிக்கு

மக்கள் நலம் விரும்பி.

Kumar. V

ஹரிஸ் Harish said...

இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு பேசுபவர்களை நான் ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை//

இங்க எல்லாருமே அப்படித்தான்..

ரஹீம் கஸ்ஸாலி said...

கலக்கல் நண்பா....இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து.....

ரஹீம் கஸ்ஸாலி said...

இதையும் படியுங்க.... http://ragariz.blogspot.com/2010/08/blog-post_10.html

Unknown said...

நாகராஜசோழன் MA said...

நண்பரே உங்களுக்கு ஆட்டோ கன்பார்ம்.

உங்க பங்காளி கள பத்தி சொன்னோன கோவம் வந்துடுச்சா. ஆமா ரொம்ப நாளா ஆளே காணோமே

Unknown said...

@குமார்

வந்தமைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி

Unknown said...

ஹரிஸ் said...

இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு பேசுபவர்களை நான் ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை//

இங்க எல்லாருமே அப்படித்தான்.

அரசியல்வாதிகளின் பிறவி குணம் அது .ஆனா இவரு ரொம்ப ஓவர் .சமீபத்தில் காங்கிரஸ் எதிராக அறிக்கைவிட்டு அதில் பின்வாங்கியவர்

Unknown said...

ரஹீம் கஸாலி said...

கலக்கல் நண்பா....இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து.....

கண்டிப்பாக தொடரும் நண்பா

Unknown said...

ரஹீம் கஸாலி said...

இதையும் படியுங்க.... http://ragariz.blogspot.com/2010/08/blog-post_10.html

இந்தா படிச்சுடுறேன்

செல்வா said...

உங்க பதிவ நான் அப்புறமா வந்து படிக்கிறேன் . அதுக்கு முன்னாடி
//
வம்ப வெலைக்கு வாங்குவோம்ல//
எங்க போய் வம்ப வாங்குவீங்க ..? ஹி ஹி ஹி ..

NaSo said...

http://nagarajachozhan.blogspot.com/2010/11/blog-post_17.html
தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்:)

Unknown said...

ப.செல்வக்குமார் said...

உங்க பதிவ நான் அப்புறமா வந்து படிக்கிறேன் . அதுக்கு முன்னாடி
//
வம்ப வெலைக்கு வாங்குவோம்ல//
எங்க போய் வம்ப வாங்குவீங்க ..? ஹி ஹி ஹி ..

நம்ம நாட்ல வம்ப வெலைக்கு வாங்குவது அப்படி ஒன்னும் கஷ்ட்டமான விஷயம் இல்லீங்க . அப்பறம் வந்து பதிவ படிபீங்களா

Unknown said...

நாகராஜசோழன் MA said...

http://nagarajachozhan.blogspot.com/2010/11/blog-post_17.html
தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்:)

அழைத்தமைக்கு நன்றி கூடியசீக்கிரத்தில் பதிவிடுகிறேன்

Philosophy Prabhakaran said...

குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...

Unknown said...

தி மு க - பில்டப்பு உடரனோ, பீலா உடரனோ நான் தான் டாப்பு (spectrom)

அதிமுக - history னா வரலாறுதானே.

தேமுதிக:
கவுண்டமணி - யாருடா உன்ன இந்த மாதிரி பேச சொல்றது.
------ என் மூளைன்ன!

பாமக - இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டன்.

மதிமுக -
நம்மகிட்ட விலாடறதே இந்த கட்ட(கலைஞர்)துறைக்கு பொழைப்பா போச்சி.

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena