நா குழந்தைய இருக்கறப்பவே மதுரைக்கு வந்துட்டோம் .எங்க அப்பாவுக்கு இங்க தான் வேல .இப்போ நானு நாலாப்பு படிக்கிறேன். அரபரிச்சைலீவுக்கு எங்க அத்த ஊருக்கு போயிட்டு இருக்கேன் .எங்க அத்தபொன்னு ஊர சுத்தி ஒரே மலையா இருக்கும் . பஸ்ல போறப்ப மலை கூடவே வர்ற மாதிரி இருக்கும் .அந்த மலை முடியவே முடியாது .
போன காபரிச்ச லீவுக்கு போனப்ப எங்க அத்த எனக்கு பணியாரம் சுட்டு குடுத்தாங்க .அதை அத்த மகேன் குமரேசன் புடிங்கிட்டு ஓடிட்டான்.எனக்கு அழுகை வர்ற மாதிரி இருந்துச்சு.அப்பறம் ரத்தினம் அதோட பணியாற த்த குடுத்துச்சு .நா பாதி அவ பாதினு கடிச்சு சாப்பிட்டோம் ,ரொம்ப நல்லா இருந்துச்சு ,
அடுத்த நாள் காலைல குளிக்க ஆத்துக்கு போனோம் , நா சின்ன பய்யன் தானே அப்படின்னு எனைய பொம்பளைங்க குளிக்கிற எடத்துக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க ,ரத்தினமும் கூடவே வந்துச்சு ,எங்க அத்த எனைய டிரஸ் கழட்டிட்டு வந்து குளிக்க சொன்னாங்க,நானும் வேக வேகமா ட்ரெஸ்ஸ கழட்டிட்டு குளிக்க போனேன் ,நீ சட்டி போட மாட்டியானு ரத்தினம் எனைய பாத்து விழுந்து விழுந்து சிரிச்சுச்சு ,எனக்கு வெக்கமாவும் அழுகையா வந்துச்சு .ஆனா இந்த வட்டமும் அப்படி ஆககூடதுனு நா புதுசா சட்டி போட்டு வந்துட்டேன்
இப்ப போன உடனே ஏய் ரத்தினம் உம் புருஷன் வந்துட்டான்டி சொல்லுவாங்க .அதுவும் ஓடி வரும் .நாங்க ரெண்டு பெரும் சேந்து வெளயாட போவோம் ஜாலியா இருக்கும்
இந்தா எங்க அத்த வீடு வந்துடுச்சு ,நா எங்க அப்பா கைய ஒதறிட்டு
ரத்தினு ரத்தினு கூப்பிட்டு கிட்டே ஓடறேன்
பளீரென்று முகத்தில் தண்ணீர் பட்டது ,படீரென்று எழுந்தமர்ந்தேன்
என் மனைவி ரத்தினு கையில் கரண்டியுடன் நின்று கொண்டிருந்தாள்
"அடச்சீ எழுந்திரியா உன்னைய எத்தன தடவதான் எழுப்புறது "
"ஏ சனியனே எந்திருச்சு தொலை எப்ப பாத்தாலும் படுக்கைல மூத்திரம் போறதே வேலையா வச்சிருக்கு "என்று மகனை மண்டையில் அடித்து எழுப்பி னாள் பின்பு
"இந்த ஆள கல்யாணம் பண்ணி என்னத்த சொகத்த கண்டேன் " என்று அடுக்களைக்குள் சென்றாள்
ஒரு கனவு கலைக்க பட்டது .
கனவு வாழ்க்கையாகவும் வாழ்க்கை கனவாகவும் இருக்க கூடாதா?
|
14 கருத்துகள்:
ஆஹா! அருமைங்க!
ரொம்பவே ரசிச்சேன்!
ரைடு ஒ சாரி ரைட்டு
எஸ்.கே said...
ஆஹா! அருமைங்க!
ரொம்பவே ரசிச்சேன்!
வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி
karthikkumar said...
ரைடு ஒ சாரி ரைட்டு
என்னபங்காளி கதை நல்லா இருக்கு இல்லியா சொல்லறத விட்டு புட்டு ரைட் ராங் சொல்ரீங்களே
ரொம்ப நல்லாருக்கு நண்பா. நான் இந்த முடிவை எதிர் பார்க்கவே இல்லை. இதேபோல் தொடர்ந்து எழுதுங்கள்.
நாகராஜசோழன் MA said...
ரொம்ப நல்லாருக்கு நண்பா. நான் இந்த முடிவை எதிர் பார்க்கவே இல்லை. இதேபோல் தொடர்ந்து எழுதுங்கள்.
ஊக்கத்திற்கு நன்றி நண்பா
ரொம்ப நல்ல இருக்குங்க
என்னுடைய சொந்த கதையை படித்து போல ஒரு உணர்வு (நானும் அத்தை பொண்ணைத்தான் காதலிக்கிறேன்...) ஆனால் திருமணத்திற்கு பின் என்று ஒரு க்ளைமாக்சை வைத்து என்னை நன்றாக பயமுறுத்திவிட்டீர்கள்...
கத்துக்குட்டி said...
ரொம்ப நல்ல இருக்குங்க
வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி
philosophy prabhakaran said...
என்னுடைய சொந்த கதையை படித்து போல ஒரு உணர்வு (நானும் அத்தை பொண்ணைத்தான் காதலிக்கிறேன்...) ஆனால் திருமணத்திற்கு பின் என்று ஒரு க்ளைமாக்சை வைத்து என்னை நன்றாக பயமுறுத்திவிட்டீர்கள்...
உங்களுடைய சொந்த கதையை போல ஒரு உணர்வு ஏற்ப்பட்ட மைக்கு நன்றிகள் பல ..எனையும் ஏங்க லவர் லிஸ்டுல சேர்க்கிறீங்க .நா ஒன்னும் எங்க அத்த பொண்ண காதலிக்கல.அப்பறம் உங்கள பயமுருத்தலைங்க அதாங்க உண்மை
arumai.
வருகைக்கு நன்றி ரஹீம்
நல்ல கற்பனை.
படிக்க அருமையா இருக்கு.
Post a Comment