ஏரியா டீக்கடையில் நானும் என் நண்பன் விஜய்யும் தேநீர் பருகிகொண்டிருந்தோம்.
" டே நவீன் வர்றாண்டா " விஜய்
"வாடா மச்சான் ஒரு தம்மு சொல்றா " நான்
"டே வாங்க டா சரக்கே வாங்கித்தரேன் " நவீன்
நேரம் காலை 10 மணி .வெயில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்தது
"என்னடா செழும்பா இருக்க போல " நான்
" உங்கப்பாரு பைய்ல அதிகமா அடிச்சிட்டியோ " விஜய்
" இல்லடா எக்ஸாம் பீஸ்னு எக்ஸ்ட்ராவா மீட்று போட்டேன் " நவீன்
ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்தோம்
" என்ன பீர் சொல்லலாம் " நவீன்
" அதுக்கு பதிலா மு ................... குடிக்கலாம் , எதுவாது ஹாட் சொல்லு " நான்
" அவ்வளவு காசு இல்லடா " நவீன்
" அவ்வளவு காசு இல்லைனா என்ன வெளக்கனைக்குடா எங்கள தள்ளீட்டு வந்த " நான்
" சரி விடுறா இதையே அடிச்சுட்டு போவோம் " விஜய்
ஆளாளுக்கு ஒவ்வொரு பீர் வந்தது . அடிக்க ஆரம்பித்தோம்
" டே மணி பக்கத்து டேபிளுக்கு அடியில பாரு ஒரு குவாட்டர் இருக்கு " விஜய்
" மணி எவனையும் ஆளக்காணோம் எடுத்து சீக்கிரம் பாகெட்டுக்குல வச்சுக்க வெளிய போய் அடிச்சுக்குவோம் " நவீன்
அதே போல் செய்தேன்
பீர் அடித்து முடிக்கும் தருவாயில் பக்கத்து டேபிளுக்கு ஒரு வந்தான் ,நல்ல கட்டுமஸ்தான உடம்பு ,டேபிளுக்கு அடியில் கையை அலைத்தான்.
" தம்பிகளா இங்க ஒரு குவாட்டர் இருந்துச்சு பாத்தீங்களா "
" அண்ணே இவன் தானே பாக்கெட்ல எடுத்துவச்சான் " நவீன்
கைநடுக்கத்துடன் அவனிடம் எடுத்து குடுத்தேன்
" காக்கா தூக்கிட்டு போயிடுமேன்னு தாண்ணே பாக்கெட்ல எடுத்துவச்சேன் "
" காக்கா தூக்கிட்டு போறதுக்கு இதென்ன வடையா குட்றா முதல நானே என் பொண்டாட்டி பக்கத்து வீட்டுகாறேன் கூட ஓடி போய்ட்டாளேனு கடுப்புல இருக்கேன் "
வெளியில் வந்தோம்
" ஏண்டா நாக்க தொங்க வந்தேன் பாரு என் புத்திய செருப்பாலே அடிக்கனும்டா" நான்
" சரி வாடா கோவிச்சுக்காதடா அந்தாள பாத்தேலஅதான் பயத்துல உண்மைய உளறிட்டேன் "நவீன்
"வாட போறவரைக்கும் என்னால வீட்டுக்கு போகமுடியாது வா வேற எங்கியாவது போவோம் " நான்
"சரி வாங்க என் ஆளு இப்ப டியுசன் விட்டு வர்ற நேரம்தான் அங்க போவோம் " நவீன்
" என்னது ஆளா யாருடா " நான்
" வாங்கடா காட்டுறேன் " நவீன்
" நா வல்லப்பா நா வீட்டுக்கு போறேன் " விஜய்
" டே அவன் கெடக்காண்டா வாடா நம்ம போவோம் " நவீன்
சந்து சந்தாக கூட்டிசென்றான் , ஒரு மரநிழலில் நின்றோம்
" டே என்னடா அரை மணிநேரமா நிக்கிறோம் ஆளையே காணோம் " நான்
" இந்த இப்ப வந்துடுவாடா " நவீன்
வந்தாள் லேடி பேர்ட் சைக்கிளில். எங்கள் இருவரையும் கடந்து சென்றாள் ,மெலிதான ஒரு புன்னகை சிந்துனமாதிரியும் சிந்தாதமாதிரியும் இருந்தது
" எப்படி இருக்கு " நவீன்
" பாத்தாச்சுல வா வீட்டுக்கு போவம் "
நண்பனின் வீடு வந்தது "சரி சாய்ங்காலம் பாப்போம் " நவீன்
என் வீட்டை நோக்கி நடந்தேன் , அந்த மரநிழலை தாண்டி சென்றுகொண்டிருந்தேன்
ஒருவர் என்னை கை மறைத்து அழைத்தார்
" தம்பி கொஞ்சம் வாங்களேன் ஒரு கையி கொறையுது ,ஒன்னு தூக்கணும் "
" என்னது தூக்கணும் " நான்
" பீரோ "
" அப்படியா சரி வாங்க போவோம் " நான்
அந்த வீடு வந்தது வீட்டிற்கு வெளியில் நாலைந்து ஆண்களும் இரண்டு பெண்களும் நின்றுகொண்டிருந்தார்கள் .
" என்னனே அதான் இவ்வளவு பேரு இருக்கீங்களே அப்பறமெதுக்கு என்னைய கூப்பிட்டீங்க " நான்
" இரு தம்பி "
" அண்ணே இவன்தானாம்னே "நின்றுகொண்டிருந்தா ஆண்களில் ஒருவன் கூறினான்
" ஏன்டா ரோட்ல தனியா போற பொண்ண கைய வா புடுச்சா இழுக்கிற " என் அழைத்து வந்தவர் கூறினார்
அதன் பின்
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம்
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம்
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம்
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம்
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம்
கூட்டம் விலகியது அந்த லேடி பேர்ட் பெண் தெரிந்தாள்
" எந்திருச்சு ஓட்ரா அடுத்து உன்ன இந்த ஏரியா வுல பாத்தேன் " எழுதமுடியாத கெட்டவார்த்தையாக கூறினார் .
அடிச்ச போதைஎல்லாம் எறங்கி போச்சே ஐயையோ ஒத்த கால் செருப்ப வேற காணோம்
நடந்து கொண்டே திரும்பிப்பார்த்தேன் ,ஜன்னலில் அவள் தெரிந்தாள்
அடிப்பாவி நா வாட்டுக்க ஓரமாத்தானடி நின்னுட்ருந்தேன்
அடுத்தநாள் நண்பன் நவீன் வீட்டிற்கு வந்தான்
" டே எனக்கே இப்பதான் டா மேட்டர் தெரியும் விஜயை இப்பதாண்ட வழியில பார்த்தேன்
அடி ரொம்ப ஓவராடா " நவீன்
" பரவால்லடா நீயும் வந்திரு தேனா அடி பிரிச்சிருப்பாயிங்க ஏதோ என்னோட போச்சுல விடு
" டே சாரிடா சரி வா சரக்கடிக்க போவம் ,அடிச்சா கொஞ்சம் வலி தெரியாது " நவீன்
" ஆமாடா ரொம்ப ஒடம்பு வலிக்குது " சந்தோசத்துடன் எழுந்தேன்
அதே ஒயின் ஷாப்
" அப்பறம் மாப்ள என்ன சொல்ல " நவீன்
" ஏதாவுது சொல்றா " நான்
அடித்தோம் முடித்தோம்
வெளியில் வந்தோம்
" மச்சான் பக்கத்துல போலீஸ் குவாட்டர்ஸ் இருக்குல அங்க வரைக்கும் போயிட்டு வந்துடுவோம் " நவீன்
" ஏன்டா தெரிஞ்ச போலீஸ் எவனும் இருக்காங்களா கம்ப்ளைன் லாம் ஒன்னும் குடுக்கவேண்டாம்டா " நான்
" டே கம்ப்ளைன் குடுக்க இல்லடா "
" அப்பறம் " நான்
" அங்க புதுசா ஒரு பிகர இப்போ தான் ரூட்டு விட்ருகேன் ,கொஞ்சம் கூட மட்டும் வாடா " நவீன்
" என்னாது "