வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

27.1.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -1

  இனிய நட்புகளுக்கு:
                                         வணக்கம் .நேற்று (26 /01 / 2011) நண்பர் மதுரை பதிவர் திரு பால குமாரின் திருமணத்திற்கு அழைத்து மதுரை பதிவர்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த வலைச்சரம் ஆசிரியர்  ஐயா திரு.cheena ( சீனா) அவர்களுக்கு நன்றி
பதிவர்கள் ,நேசமித்தரன் , திரு கா.பா ( பொன்னியின்செல்வன் ) ,மதுரை சரவணன் ,தமிழ்வாசி -prakash ,anbu-openheart, அனைவருக்கும் என் அன்பு , நன்றிகளும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

                                 இந்த வருடம் மே மாதத்தோடு கலைஞர் ஆட்சி முடிவுக்கு வருகிறது .இந்த  தேர்தல் பல கட்சிகள் இருப்பதற்கும் இனி இல்லாமல் போவதற்கும் சான்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

1 )இலங்கை ராணுவத்தால் மீனவ இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்ப்பட்ட சம்பவத்திற்கு தலைவர் கலைஞர் அறிவித்த 500000 /- லட்சம்  நிவாரண தொகை அவர்களை சென்று அடைந்ததா என்று தெரிவவில்லை .ஆனால் எங்கள்  தானைத்தலைவி 'அம்மா ' ஹெலிகாப்ட்டர் மூலமாக வேதாரண்யம் விரைந்து நேரில் அந்த மீனவ குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார் , மீனவர்களுக்கு பாதுகாப்புக்கு இனி 'மாற்று ஆட்சியே ' தேவை என்று சூளுரைத்துள்ளார்

 சோப்பு :
இந்த சோப்புல மீன் வாசம் அடிக்குதுல 
  சீப்பு :                       
2 )             கூட்டணி கதவு திறக்குமா திறக்காதோ என்றபயம் மனத்தில் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் வாய் சொல்லில் பந்தல் அமைத்தார் .கடலூரில் நேற்று நடந்த ஒரு திருமணவிழாவில் மருத்துவர் ஐயோ மன்னிக்கவும் ஐயா,
       இந்தியாவிலேயே பெரிய மாநிலம் உத்தரபிரதேசத்தில், 403 தொகுதிகள் உள்ளன. அங்கு 20 சதவீதமே உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் @சர்ந்த மாயாவதி, ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கிறார். அங்கு அவர்களால் முதல்வராக முடியும் போது, தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு வாழும் வன்னியர்களால் முதல்வராக முடியவில்லை. நமக்குள் ஒற்றுமை இல்லை.
வன்னியர்களை, வன்னியர்களே தோற்கடிக்கும் பழக்கம் உள்ளது. அதனால் தான், விருத்தாசலத்தில் கோவிந்தசாமி தோற்கடிக்கப்பட்டார். மதுரையிலிருந்து வந்த யாரோ ஒருவரை, எம்.எல்.ஏ.,வாக ஏற்றுக் கொண்டனர்.    


    என்ற ரீதியில் ஜாதியை முன்னிறுத்தி பேசி உள்ளார் ,(பாவத்த ஓட்டு போட்டுவிடுங்கப்பா.... அவருக்கும் முதல் அமைச்சர் ஆகணும்னு ஆசை இருக்காதா , இப்படியா ஒரு அரசியல் தலைவரை கெஞ்ச விடுவது )
மகாராஷ்ற்றாவிற்கு ஒரு பால்தாக்கரே போல் தமிழ் நாட்டிக்கு இவர் ,இருவரும் விஷமே
கண்ணாடி :
3 ) முன்பு ஒரு முறை மதுரை வந்த காலம்சென்ற நம் முன்னால் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி  ,அவரை மதுரையில் தெற்குவாசல் என்ற பகுதியில் வைத்து உருட்டு கட்டையால் அடித்து ரத்தகாயம் ஏற்படுத்தினர் தி.மு.க வினர் .அது குறித்து கலைஞர் கூறுகையில் " அந்த அம்மாவிற்கு  மூணுநாள் பிரச்சனையா இருக்கும் " என்றார் .ஆனால் இன்று  அவரின் மூத்த புதல்வர் ,நம் முன்னால் பாரத பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர் குண்டடிபட்டு இறந்த மருத்துமனைக்கு அவரது பெயரை வைக்க போவதாக அறிவித்துள்ள பெருமை நம் பாசத்தலைவனையே சாரும் .காங்கிரஸ் கோஷ்டி  தொண்டர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்

4 ) சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தையை பற்றியெல்லாம் கூறமுடியாது என்று திட்டவட்ட மாக அறிவித்து உள்ளார் நம் நாட்டின் நிதியமைச்சர் ,அதற்கு அவர் கூறும் காரணங்களும் ஏற்றுக்கொள்ளும் படியாகவே உள்ளது

எவ்வளவோ நம்புறோம் இத நம்பமாட்டோமா ,

மீனவ இளைஞர்'களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தாலும் அது பற்றியெல்லாம் ஒரு கணமும் சிந்திக்காத நம் 'தலைவர் ' தனது ' இளைஞனின் ' பட வெற்றி விழாவை பாராட்டு விழாவாக எப்படி மாற்றலாம் என சிந்தித்துகொண்டிருக்கிறார் ,வின்னைத்தாண்டிய விஸ்பரூபவெற்றி , ஹாலிவுட் கே சவால் விடும் திரைக்கதை ,வசனம் என கதறும் சினிமா இயக்குனர்கள் , கலைஞர் இன்னும் இளைஞராகவே இருக்கிறார் என்று கூறும்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு .திருமாவளவன் ( கண்டிப்பாக உங்களுக்கு ஒரு சீட்டு அதிகமா உண்டு )

5 ) செய்தி : பாரதிய ஜனதா தமிழக தேர்தல் 234  தொகுதிகளிலும்   தனித்து போட்டியாம் .

மக்களாகிய நாங்கள் ஏற்றுகொள்கிறோம் ,நீங்களும்  தேர்தல் களத்தில் இருக்கிறீர்கள் என்று .ஆனா அதுக்காக வீட்டு பக்கலாம் வந்து ஓட்டு பிச்சை கேட்டு டார்ச்சர் பண்ணகூடாது ,ஆமா சொல்லிபுட்டோம்

 நேற்றைய முன்தினம் தேசிய வாக்காளர் தினமாம். எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் புதிய வோட்   கார்டு கொடுத்தனர் , ஆனால் வழக்கம் போல் எனது முகம்  நேரில் பார்ப்பதை விட அந்த போட்டோவில் கேவலமாகவே இருந்தது ,தேர்தல் கமிசனிற்கு  ஒரு நன்றி கூறி கொள்வோம்
அப்பறம் இந்த வட்டம் ஓட்டுக்கு 5000 /-  ம் ல ,எங்க வீட்டுல மொத்தம் நாலு ஓட்டுல , மொத்தம்  இருவதாயரம்ல

இப்பொழுதுதான் எங்கள் வீட்டில் இலவச டிவி கொடுப்பதற்கு டோக்கன் கொடுத்துள்ளார்கள் .இன்னும் பதினைந்து நாள் கழித்து இலவசமாக டிவி தருவார்களாம்

வாழ்க ஜனநாயகம்
                                                                                                                   நட்புடன் -
                                                                                                                   நா.மணிவண்ணன்

31 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் said...

கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ...

arasan said...

தல கலக்கல் பதிவு ...
தேர்தல் நேரத்தில் இன்னும் கலக்கணும் தல

Unknown said...

சூப்பர்! நாட்டுநடப்பை நக்கல்,நையாண்டியோட....
கலக்குறீங்களே பாஸ்!

karthikkumar said...

நல்லா நக்கல் விடறீங்க... :)

ரஹீம் கஸ்ஸாலி said...

அருமையான கதம்பம். தேர்தல் அடுத்த வருஷம் வந்திருந்தாள் அடுத்த வருஷம் தான் உங்களுக்கு டி.வி.க்கான டோக்கன் கிடைத்திருக்கும். அனைத்திலும் வாக்களித்துவிட்டேன் நண்பா...

மாணவன் said...

செம்ம கலக்கல் நண்பரே

தொடர்ந்து கலக்குங்க.....

எஸ்.கே said...

நல்லா நகைச்சுவையா இருக்குங்க!

ஆனந்தி.. said...

//ஆனால் வழக்கம் போல் எனது முகம் நேரில் பார்ப்பதை விட அந்த போட்டோவில் கேவலமாகவே இருந்தது//
same blood..ha ha...:)

Anbu said...

கலக்கல் அண்ணே..

Unknown said...

டிவி கிடைக்க போகுதா, ஓகே சரக்குக்கு காசு ஆச்சு :-)

cheena (சீனா) said...

அன்பின் மணி வண்ணன் - நாட்டு நடப்பையும் - நேற்று நடந்த பதிவர் சந்திப்பினையும் அழகாக எழுதியமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அந்நியன் 2 said...

நகைச்சுவையா இருக்கு....எழுத்தில் நாட்டு நடப்பை நல்லா நக்கல் விடறீங்க..

தொடர்ந்து கலக்குங்க.....

Philosophy Prabhakaran said...

என்னது பதிவர் சந்திப்பா... சொல்லவே இல்லை... அதுபற்றி தனிப்பதிவு போடுங்களேன்...

Unknown said...

கலக்கல் மணி

அஞ்சா சிங்கம் said...

செய்தி : பாரதிய ஜனதா தமிழக தேர்தல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியாம் ......./////

இருயா சிரிச்சிட்டு வந்திடுறேன் ...........

அஞ்சா சிங்கம் said...

பட் அந்த தன்னம்பிக்கை பிடிச்சிருக்கு யாருமே இல்லாத ஊருல யாருக்குப்பா டீ ஆத்துற ..............

கார்த்திகைப் பாண்டியன் said...

:-))))

போளூர் தயாநிதி said...

அருமையான கதம்பம்.நக்கல்,நையாண்டியோட....
கலக்குறீங்களே நல்லா நகைச்சுவையா இருக்குங்க!தொடர்ந்து கலக்குங்க.....

Riyas said...

நல்ல தொகுப்பு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பிடிப்போடுங்கப்பு!

மதுரை சரவணன் said...

பதிவு அருமை..வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

பதிவு அருமை..வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

தேர்தலுக்கு இன்னும் நிறைய கிடைக்கும் மணி.

bandhu said...

//அது குறித்து கலைஞர் கூறுகையில் " அந்த அம்மாவிற்கு மூணுநாள் பிரச்சனையா இருக்கும் " என்றார் //
அதெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சுக்கிட்டு இருக்கீங்க? இப்போ அவங்க 'நண்பேன்டா'

Anonymous said...

இந்த தேர்தல்ல மதுரைல 'முக்கிய' புள்ளிக்கு எதிரா உங்களை நிறுத்தியே தீருவோம். அஞ்சாசிங்கம் மணி வாழ்க. இப்படிக்கு - மணி அண்ணனின் விழுதுகள்

தாராபுரத்தான் said...

சோப்பு நல்லாவே இருக்குங்கு.

Unknown said...

வருகைதந்து வாசித்து கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி

Chitra said...

சூப்பர்! பதிவு நல்லா இருக்குதுங்க.

Madurai pandi said...

ரொம்ப நக்கல்!!

சக்தி கல்வி மையம் said...

இதையும்..
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_02.html

Unknown said...

வணக்கங்களும்,வாக்குகளும்...

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena