வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

19.1.11

கொலையும் கொலைக்கான முடிவுகளும்

               நீங்கள் கொலை செய்திருக்கிறீர்களா . நான் செய்யப்போகிறேன் .ஆம் . எப்படி செய்யலாம் என்று சிந்தித்த வாறே எனது காரை  செலுத்தி கொண்டிருக்கிறேன் . விரல்களால் அவளின் கழுத்தில் கோலமிட்டு   சற்று கீழிறங்கிய எனது கைகளால் அப்படியே ஒரு  " சதக்"  இல்லை அவள் படுத்துறங்கும் தலையணையை எடுத்து அவளது முகத்தில் வைத்து  ஒரே "அமுக் " இல்லை பொட்டிலா அவள் நெற்றியில் எனது  சைலேன்செர் பிஸ்டலால் ரத்த  பொட்டு வைத்து ஒரு 'அழுத்  '


                   
           என்னிடம்  காரியதர்சியாக  சேர்ந்துவிட்டு எனக்கே காரியம் பண்ண நினைப்பவளை,போலீசிடம்  அப்ரூவராக மாறிவிடுவேன் என்று மிரட்டு பவளை தூக்கி வைத்து கொஞ்சவா முடியும் ,கொலைதான் செய்யமுடியும் .கொஞ்சிவளிடம் என்னால் கெஞ்ச முடியாது, மங்களாவை மங்களகரமாக அனுப்பி விடு வோம் என் தீர்மானித்தேன்
         நான் ஏற்றுமதி தொழில் செய்பவன் ,அதன் போர்வையில் சில கள்ளகடத்தல் வியாபாரம் செய்வேன் .ஒரு வியாபாரம் படிந்தது அதன் மூலம் சில வைரங்கள் கிடைத்தன .அந்த வியாபாரத்தில் எனக்கும் சரிசமமான  பங்கு வேண்டும் என்று மிரட்டுகிறாள் . ஒருவேளை என் பரம வைரி சோம்தேவிடம் விலை போய் இருப்பாளோ? , எது எப்படி போனாலும் சரி இவள் கணக்கை தீர்ப்பது சரியாக இருக்க முடியும்
       நேரத்தை பார்த்தேன் சரியாக 12  மணி . வேளச்சேரி ஐந்தாவுது மெயின் ரோட்டில் உள்ளது அவள் வீடு , காரை ஒரு ஓரமாக நிலவொளியில் நிறுத்தினேன் ,சில தெரு  விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது .சத்தமில்லாமல் முகப்பு கதவு தாழ்பாளை நீக்கினேன் , உள்ளே சென்றேன் , காலிங் பெல்லை அழுத்தினேன்
உள்ளே சங்கீதமாக ஒலித்த காலிங் பெல்லின் ஒலி எனக்கு கேட்டது ,
ஒரு         நிமிடம்
இரண்டு நிமிடம்
மூன்று   நிமிடம்
நான்கு    நிமிடம்
ஐந்தாவுது நிமிடம் என் பொறுமையை சோதித்தது .கதவை தட்டினேன் , உடனே திறந்து கொண்டது ,இருட்டாக இருந்தது , தாப்பாள் போடாமலே தூங்கி விட்டாளோ என்னவோ ,இல்லை  ஒரு வேளை வேறு யாரவது உள்ளே இருக்கிறார்களோ , இவளுக்கு துணை என்று சொல்லி கொள்ள யாரும் இல்லையே .இவள் ஒரு டிவோர்சி ஆயிற்றே, எனது பிஸ்டளை கையில் எடுத்து கொண்டேன் , மெல்லமாக அடி எடுத்து வைத்தேன் , நேர சென்று இடது புறம் திரும்பினால் அவள் பெட்ரூம் வந்துவிடும்
        பெட்ரூமிற்குள் நுழைகிறேன் , மெல்லிய இரவு விளக்கில் அவள் தெரிந்தாள் , எனது கையில் கையுறைகளை அணிந்து கொண்டேன் , ட்யுப் லைட் போட்டவுடன் வெளிச்சத்தில் எழுந்துவிடுவாள் என்று ஏமாந்து போனேன் , மீண்டும் ஏமாந்தேன் .எவரோ ,அவளை எனக்கு முன்னமே வந்து  பரலோகத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் ,கழுத்தில் சரியாக கத்தியை பாயச்சிருக்கிறார்கள் ,சற்றுமுன்தான் இந்த கொலை நடந்திருக்க வேண்டும் , இன்னும் ரத்தம் கட்டிலை நனைக்கவில்லை
        சுற்றும்முற்றும் பார்த்தேன் யாராவுது மறைந்திருந்து திடீரென்று தாக்கலாம் .செயல் படத்துவங்கினேன் .இனி ஒவ்வொரு நிமிடமும்  இங்கிருப்பது ஆபத்து. வெளியேறு என்று மூளை கட்டளை இட்டது




அப்போது



முடிவுகள் :
             1 )பொட்டணத்தில் இருந்த  துவரம் பருப்பை அடுப்பின் மேல் உள்ள பாத்திரத்தில் கொட்டி விட்டு ,அந்த தாளில் உள்ள சிறுகதையை வேகமாக படித்தாள் சிவகாமி .ஆனால் முடிவு தெரியாமல் போனவுடன் தாளை கசக்கி தூக்கி எறிந்தாள்

           2 )கண்ணாடியின்  உதவியால் வேகமாகவாசித்து கொண்டிருந்தான் கேசவன் .சடாரென்று புத்தகம் புடுங்கப்பட்டது . " மருமகக்காரினு கூட பாக்காம அங்க உங்க அம்மா என்ன அந்த கிழி கிழிக்கிறாங்க இங்க என்னடான நீங்க சாவுகாசமா உக்காந்து புத்தகம் படிக்கிறீங்களோ புத்தகம்  " என்று அவன் மனைவியின் கையிலிருந்த புத்தகம் மூலையில் போய் விழுந்தது 
         
           3 ) பின்புறம் வழியாக தன் கழுத்தில் மாலையாக விழுந்த அவளது கைகளை அப்படியே முன்புறமாக இழுத்து மடியில் கிடத்தி அவளின் முகத்தோடு முகம் புதைக்க போகையில் " இன்னும் எவ்வளவு நேரம்தான் இந்த கதையை எழுதிகிட்டே இருப்பீங்க" என்று அந்த கதையை எழுதி கொண்டிருந்த எழுத்தாளனின் இளம் மனைவி சிணுங்கினாள் .அந்த சிணுங்களில் ஒரு அழைப்பு இருந்து ,அந்த அழைப்பிற்கான காரணம் என்னவென்றால்

டிஸ்கி : முடிவு உங்களின் சாய்ஸ் ( மணி எஸ்கேப் ஆயிடு துப்பாக்கிய எடுத்து சுட்டாலும் சுட்டுடுவாங்க )

17 கருத்துகள்:

Unknown said...

அருமை நண்பா, கதை உண்மையிலேயே நல்லா எழுதறீங்க, பத்திரிகையில டிரை பண்ணுங்க, நல்ல எதிர்காலம் இருக்கு உங்களுக்கு :-)

Unknown said...

ராஜேஷ் குமார் கதை போலவே ஆரம்பம்..

Unknown said...

முதலாவது முடிவு ஓ.கே..

மற்றவை படிப்பவர்களை வெறியாக்கி விடும்..

THOPPITHOPPI said...

என்னங்க பாஸ் முடிவு டேரக்ட்டார் வசந்த் மாறி இருக்கு

Madurai pandi said...

"ச்சே !! இதே கனவு திரும்ப திரும்ப வருதே!!! இந்த கனவுக்கு என்ன காரணமாக இருக்கும் ? யாரிடமாவது கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டே படுக்கையில் இருந்து எழுந்திரித்து பாத்ரூமுக்குள் புகுந்தான்..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Anonymous said...

//அந்த சிணுங்களில் ஒரு அழைப்பு இருந்து ,அந்த அழைப்பிற்கான காரணம் என்னவென்றால்....//
உங்களை மதுரை தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிராக நிற்க சொல்லி ஒரு பிரபல பெண்மணி கதவை தட்டுகிறாள்.....கரெக்டா???

சிவகுமாரன் said...

ஏமாத்திப்புட்டீகளே
நல்லா இருக்குங்க. கற்பகனை குதிரையை இன்னும் கொஞ்சம் தட்டி விட்டுருக்கலாம்.

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
அஞ்சா சிங்கம் said...

கொன்னுடீன்களே ..................
ரஷ் பார்த்து கொண்டிருந்த டைரக்டர் கோபத்துடன் கத்த ஆரம்பித்தார்.
எந்த முட்டாள்யா கண்ட்யுநிட்டீ பார்த்தது பாடில வளையல் கலர் மாறியிருக்கு ..
இத கூட கவனிக்காம சூட் பண்ணிடீன்களே .....................

ரஹீம் கஸ்ஸாலி said...

அந்த நேரம் பார்த்து மின்சாரம் தடை பட்டது.
சே சனியன் பிடிச்ச கரண்டு இந்த நேரத்திலா போயி தொலையனும்ன்னு அலுத்துக்கொண்டாள் அதுவரை சீரியலில் லயித்து போயிருந்த பாட்டி

ஆனந்தி.. said...

ஐயோ....டக்கரு சகோ...உங்க பதிவுகளிலேயே எனக்கு ரொம்ப புடிச்ச பதிவு அண்ட் கதை இது...செம புத்திசாலி தனமான பதிவு...நல்லா கிரைம் நாவல் எழுதலாம் போலே நீங்க...வெரி குட்...:))

pichaikaaran said...

சிறப்பான நடை. இன்னும் கொஞ்சம் யோசித்து இருக்கலாம்

test said...

கலக்கிட்டீங்க நண்பா!
'நான்' என்று எழுதாமல் 'அவன்' என்று எழுதினால் இன்னும் நன்றாயிருந்திருக்கும் என்று நினைக்கிறேன்! (நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம்)
'நான்' என்று வரும்போதே ட்விஸ்ட் வருமென்று முன்பே தெரிந்துவிடுகிறது...!
இருந்தாலும் எனக்கு பாப்பாத்தி அக்கா வீட்டு யன்னல்தான் அதிகமா பிடிச்சிருக்கு!

Philosophy Prabhakaran said...

முதல் முடிவு அருமை...

எல் கே said...

ரொம்ப ஆவலா முடிவை எதிர்பார்த்தால் இப்படியா பண்றது

டக்கால்டி said...

கொலை வெறி என்பது இந்த கதையை படித்த பின் வருவதுங்க...

நல்ல முயற்சி...அருமை நண்பா!

Unknown said...

வருகைதந்து வாசித்து கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிகள்

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena