வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

16.7.11

இது ஒரு காதல் கதை -1

          அய்யாக்களே ,அம்மாக்களே, அண்ணன்களே ,தம்பிகளே ,அக்காக்களே ,தங்கச்சிகளே அப்பறம் குழந்தைகளே எல்லாருக்கும் வணக்கம் ,என் காதல் கதைய சொல்றேன் கேளுங்க ,என்னது கேக்க முடியாது போடா வெண்ணையா ? என்னங்க இப்படி வையிறீங்க நல்ல கதைங்க ,அட சும்மா கேளுங்க காசு பணம்லாம் கேக்கமாட்டேன் .

அப்ப நாங்க குறிஞ்சி தெருவில் குடி இருந்தோம் ,எங்க வீடுதான் குறிஞ்சி தெருவில கடேசி வீடு ,அப்படியேவலது பக்கம் அந்த சந்து திரும்பும் அதுதான் குறிஞ்சி குறுக்கு தெரு ,அந்த குறிஞ்சி குறுக்கு தெருவில்தான் அனிதா அவுங்க அப்பா அம்மாவோட இருந்தா ,அந்த தெருவில ஆரஞ்சு கலரு பெயிண்ட் அடிச்ச வீடு ,
அவளுக்கு ரெண்டு தம்பிங்க அதுவும் ரெண்டு பேரும் ட்வின்ஸ் ,கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருப்பாய்ங்க, சுள்ளானுங்க , அஞ்சாவுதோ ஆராவுதோ படிக்கிறாய்ங்கன்னு  நெனைக்கிறேன் ,எங்க வீட்டு மாடில இருந்து பாத்தா அனிதா வீட்டு மொட்ட மாடி நல்லாவே தெரியும் ,ஏன்னா எங்க வீடு ரெண்டு மாடி ,அவ வீடு ஒரு மாடி ,மாடிலதான்  வந்து துணி காயப்போடுவா ,அப்பறம் தம்பி கூட வெளையாடுவா ,அப்பறம் காலைல சாயந்தரம் நடந்துகிட்டே படிப்பா ,சில சமயம் சுடிதார்ல இருப்பா ,சில சமயம் நைட்டி , சில சமயம் தாவணி.

அனிதா எப்படி இருப்பான்னு இன்னும் சொல்லலல ,சுருக்கமா சொல்லனும்னா சூப்பர் பிகர் ,சூப்பெரா சொல்லனும்னா அஞ்சடி ஒசரத்துல அம்சமா ,தல முடி ரொம்பவும் இல்லாம  கொஞ்சமாவும் இல்லாம ஒரு மீடியமா ,கண்ணு ,காது, மூக்கு, வாயி ,உதடுன்னுஎல்லாம் இருந்தாலும் ஆனா அவளுக்கு மட்டும்  ஸ்பெசலா இருக்கும்னு தான் எனக்கு தோணும் .எனக்கு மட்டும் மட்டும் யுனிவர்சிட்டில இருந்து   பீ.ஹெச் .டி குடுக்கிற அதிகாரத்த குடுத்திருந்தாங்கன்னா அவள படைச்ச ஆணடவன கூப்பிட்டு அவன்ட்ட ஒத்த பைசா வாங்காமா டாக்டர் பட்டத்த"இந்த வச்சுக்கடா ராஜான்னு "
சும்மா தூக்கி குடுப்பேன் ,ஆனா வருஷம் வருஷம் பாஸ் அவுட் ஆகுரவனுக்கெலாம் அந்த மாதிரி அதிகாரத்த குடுக்க முடியாதுன்னு சொல்றாங்க என்ன பண்றது காலத்தின் கோலம் ,அனிதாவ நான் எந்தளவுக்கு லவ் பண்றேன்னு ஒரு மூணு பிளாஷ் பாக் சொல்றேன் ,எங்கவீட்டுக்கு இருந்து நாளாவுது வீடு ராஜா வீடு அவனும் நானும் ஸ்கூல் படிக்கிறப்பலே இருந்தே ஒன்னாதான் கிரிக்கெட் வெளையாடுவோம் ,ஆனா இப்பயும் வந்து வெளையாட கூப்பிடுவான். போடா பேக் .......... ன்னு அடிச்சு வெரட்டிடுவேன் ஆங் அனிதாவ பாக்கணும்ல என்ன நான் சொல்றது ,இப்ப அவன் மேட்டர் எதுக்கு அவன் வீட்டு சைடுல ஒரு சின்ன முட்டு சந்து போகும் ,அந்த சந்துலதான் ரெங்கசாமி நாடார் கடை இருக்கு ,அங்கதான் அந்த தெருவே சாமான் வாங்கணும் ,அந்த கடைக்கு எதுதாப்புல ஒரு பெரிய காம்ப்பௌன்ட் வீடு இருக்கும் ,அந்த காம்ப்பௌன்ட்ல  கடேசி வீடுதான் தான் முருகேஸ்வரி மிஸ்ஸு வீடு ,எல்லாப்பாடத்துக்குமே டியூஷன் எடுப்பாங்க , நானும் அவங்க கிட்ட டென்த் வரைக்கும் படிச்சிருக்கேன் , ஒருநாளுநீ இனிமே டியூஷன் வராதேன்னு சொல்லிட்டாங்க ,ஒரு தடவ நாலாவது தெருல ஒரு பெட்டி கடைல நின்னு தம்மு அடிச்சுட்டு இருந்தத பாத்துட்டாங்க ,அதான்,அதுக்கப்பறம்  குமாரு ,கார்த்தி ,குட்டி ராஜா , தீனா வெல்லாம் கூப்பிட்டு அவன் கூடா சேராதீங்கன்னு சொல்லிட்டாங்க ,அவிங்க சேந்தா என்ன சேராட்டி என்ன அது உங்களுக்கு தேவை இல்லாத மேட்டரு ,நான் எதுக்காக இத சொல்றேன்னா அங்கதான் அனிதாவும் படிச்சா ,அந்த காம்ப்பௌன்ட் வீட்டில்ல முன்னாடி உள்ள ஒரு நாலு வீடு காலியாவே இருக்கும் ,யாருமே குடிவரல ,அங்க வச்சுதான் அனிதாகிட்ட பேசுவேன்

முதல் பிளாஷ் பேக் :

அனிதாதான்  டெய்லி அவுங்க வீட்டுல வாச தெளிச்சு கோலம்  போடுவா ,பொதுவே பொண்ணுகளுக்கு ஒரு பையன் என்ன மாதிரியான பார்வை பாக்குறான்னு ஈஸியா கண்டுபிடுச்சுடுவாளுக, அனிதாவுக்கும் தெரியும் நா அவள எப்படி பாக்குறேன்னு ,அனிதா ஒரு மாதிரியான ரோஸ்  கலர்ல சுடிதாரு போட்டுட்டு அந்த  துப்பட்டாவ ரெண்டு முனையையும் முன்னாடி தொங்க விட்டுட்டு அப்படியே புக்க முன்னாடி புடிச்சுகிட்டு நடந்து வருவா பாருங்க ,நான் என் ரூமுல ஜன்னல் வழியா பாப்பேன் ,அப்படியே டேப்புல " தேவதை தேவதை தேவதை தேவதை  அவள் ஒரு தேவதை " அப்படின்னு  பாட்ட அலறவிடுவேன் ,இனிமே உனக்கு சோறு தண்ணியே கிடையாதுடா அவ நடந்து வர்ற அழக பாத்துட்டே உயிர்  வாழ்ந்துகோன்னு  சொன்ன  கூட சரின்றுவேன்    அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு
முதல அவகிட்ட என் காதல சொல்லணும் என்ன பண்ணலாம்னு யோசிச்சேன் ,விடிய காலம் அஞ்சர  மணிக்கு மேலதான் அவ வாசல் கூட்ட வர்றா . பார்த்தேன் இப்படி பண்ணலாம்னு தோனுச்சு ,நான் நாலு மணிக்கெலாம் எந்திரிச்சேன் ,சிமிழ் விளக்க எடுத்து வச்சு பத்த வச்சுகிட்டேன் ,அப்படி ஒரு பிட்டு பேப்பேர எடுத்து அது மேல காமிச்சேன் அது அப்படியே கருப்பு கலர்ல பெயிண்ட் அடிச்ச மாதிரி ஆச்சு ,அதுல அப்படியே தீக்குச்சிய பின்னாடி திருப்பி வச்சு " I  LOVE  YOU  ANITHA " அப்படின்னு எழுதுனேன் ,அத அப்படியே எடுத்துட்டு போயி அவ வீட்டு காமப்பவுண்டு  செவத்து மேல வச்சு அது மேல ஒரு கல்ல வச்சுட்டேன் ,என்னடா இவன் கேனத்தனமா பன்னிருக்கான்னே பாக்குறீங்களா ,இங்க தான் நீங்க என்னோட ஐடியாவ  புரிஞ்சுக்கல ,நாங்கலாம் எடிசனுக்கே ஏ பீ சி டி சொல்லிதர்றவீங்க ஹே ஹே ஹே ,ஏன்னா  எப்படி பார்த்தாலும் அவ தான் வந்து வாச கூட்டனும் .அப்ப கண்டிப்பா இந்த பேப்பேர  என்னது இதுன்னு  எடுத்தும் பாப்பா .கையில கருப்பா ஓட்டும் ,அத வச்சு நானு அவதான் எடுத்துருக்கானு கண்டுபிடிச்சுக்குவேன்ல ,எப்புடி  எங்க ஐடியா


அஞ்சே முக்காலுக்குள்ள எப்படியும்  அவ வாசதொளிச்சு கோலம் போட்டுடுவா ,சரிதான் இதான் சரியான டைம் அப்படின்னு கெளம்பினேன் ,கடேசி கோலம் முடியிற ஸ்டேஜுல இருந்துச்சுல பக்கத்துல வேப்பமரத்துக்கீழ குப்பையா குமிச்சு வச்சிருந்தா .அதுல பார்த்த என்னோட காதல் கடிதமும் சுக்குநூற கிழிஞ்சு கெடந்துச்சு ,ஒரு கடப்பாறையை நல்ல பழுக்க வச்சு அப்படியே என் நெஞ்சுல ஓங்கி குத்தி கிண்டுனா கூட எனக்கு அப்படி வலிச்சிருக்காது ,ஆனா இந்த வலிய என்னால தாங்க முடியல ,அவள பார்த்தேன் ,அவ என்ன பார்த்தா ,பாத்துக்கிட்டே கோல போடி டப்பாவையும் , வாளியையும் ,வெளக்கமாத்தையும் எடுத்து முறச்சுகிட்டே கதவ சட்டுன்னு சாத்திட்டு போயிட்டா ,நான் அப்படியே தலைய தொங்க போட்டு கிட்டே வந்துட்டேன்
                           
                                                                                                                                       
                                                                                                                                                    -தொடரும்

குறிப்பு : முழுக்க முழுக்க கற்பனை கதையே ,இக்கதையில் வரும் சம்பவகளும் பாத்திரங்களும் யாருடைய வாழ்விலாவது ஒத்து போனால் அது தற்செயலானதே( ஆனா ஊன்னா அனுபவமான்னு கேட்டுடுதுங்க பயபுள்ளைங்க ,எப்படிலாம் தப்பிக்க வேண்டியதிருக்கு )

12 கருத்துகள்:

ஜீ... said...

//ஆனா ஊன்னா அனுபவமான்னு கேட்டுடுதுங்க பயபுள்ளைங்க//
நாங்க கேக்க மாட்டோம்ல! மணி என்ன சொன்னாலும் அதுல உண்மை, நேர்மை, அனுபவம் எல்லாம் கலந்து கட்டி..

ஜீ... said...

//அவள படைச்ச ஆணடவன கூப்பிட்டு அவன்ட்ட ஒத்த பைசா வாங்காமா டாக்டர் பட்டத்த"இந்த வச்சுக்கடா ராஜான்னு "
சும்மா தூக்கி குடுப்பேன்//
சந்தடி சாக்குல டாகுடர வாரிட்டான் பயபுள்ள! :-).

ஜீ... said...

//ஏன்னா எங்க வீடு ரெண்டு மாடி ,அவ வீடு ஒரு மாடி ,மாடிலதான் வந்து துணி காயப்போடுவா ,அப்பறம் தம்பி கூட வெளையாடுவா ,அப்பறம் காலைல சாயந்தரம் நடந்துகிட்டே படிப்பா ,சில சமயம் சுடிதார்ல இருப்பா ,சில சமயம் நைட்டி , சில சமயம் தாவணி//
சூப்பர் ஏரியா மணி! நாங்களும்தான் வாழுறோம் (இதெல்லாம் ஒரு வாழ்க்கை?) நாம எங்க போனாலும் அங்க பொண்ணுங்களே இருக்க மாட்டேங்குது... அதென்ன மாயமோ... மந்திரமோ...!

! சிவகுமார் ! said...

யாரு கிட்ட காது குத்தறீங்க. இது சத்தியமா உங்க சொந்த அனுபவம்தான்.

நிரூபன் said...

அனித்தாவை டாவடித்து விட்டு, கற்பனைக் கதையாம், ஹி...ஹி...

நாங்க நம்பிடுவோமா.

செங்கோவி said...

மணி, என்னை மாதிரி உண்மைக்கதைன்னு சொல்லிட்டு மன்மத லீலை எழுதும்யா..உங்களையெல்லாம் தம்பின்னு சொல்லவே வெட்கமா இருக்கு...ச்சே..ச்சே!

FOOD said...

காதல் ரசம் சொட்டுதே!

FOOD said...

//ஆனா ஊன்னா அனுபவமான்னு கேட்டுடுதுங்க பயபுள்ளைங்க//
கேட்கலை, ஆனா, அதுக்காக நீங்களா சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டோம்.

siva said...

ஆனா ஊன்னா அனுபவமான்னு கேட்டுடுதுங்க பயபுள்ளைங்க ,எப்படிலாம் தப்பிக்க வேண்டியதிருக்கு )//

nambittom

siva said...

என்ன சொல்வது தெரியவில்லை :))

மிக சிரத்தையாக எழுதி இருகீங்க
அனுபவங்கள் ஒரு மனிதனை
நல்ல எழுத்தாளனாக கூட ஆக்கும்
நீங்கள் ஒரு மிக சிறந்த உதாரணம்
வாழ்க வளமுடன்

siva said...

மணி, என்னை மாதிரி உண்மைக்கதைன்னு சொல்லிட்டு மன்மத லீலை எழுதும்யா..//ethuvaraiya..hahaha

siva said...

சந்தடி சாக்குல டாகுடர வாரிட்டான் பயபுள்ள! :-).

// ethai kandithu annan mani avargal thalaimaiyil poratam nadiperum..:)

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena