வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

14.2.11

டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விஜய்

எச்சரிக்கை : இப்பதிவு முழுக்க 'தல ' ரசிகன் பார்வையில் எழுத படுவது

இனிய நட்புகளுக்கு :
                 வணக்கம் , திரு .இளைய தளபதி விஜய் அவர்களின் பிடித்த பத்து படங்கள் தொடர் பதிவிற்கு நண்பர் திரு .பிலாசபி பிரபாகரன் அழைத்திருந்தார் .டாக்டர் விஜய் அவர்களை  பற்றி
அடுத்த முதல்வருக்கான அனைத்து தகுதியும் உள்ள ஒரே தமிழர் என்றால் அது மிகையாகாது ,மேடையில் நமது முதல்வர்கலைஞர்  முன்னிலையில் " எங்களை மிரட்டு கிறார்கள் என்று கூறிய அஜித் எங்கே ,மேடையில் ஏறினாலே புல்ஸ்டாப் ,கமா ,இருக்கும் இன்ன பிற குறி ஈடுகளின் உதவியுடன் பேசும் நமது எதிர்கால முதல்வர் டாக்டர் விஜய் எங்கே ? அரசியல் என்னும் பழத்தை தின்று போட்ட கொட்டைகள் மூலமாக கோட்டையில் அமர்ந்திருக்கும் நமது முதல்வர் ,மதியூக மந்திரி , சிறந்த ராஜதந்திரி என்றெல்லாம் பெயர் பெற்றவர்,இருந்தாலும்  இவரிடம் கண்டிப்பாக படம் கற்று கொள்ள வேண்டும் ,இவருடைய படம்  மொக்க படமாக இருந்தாலும் அதையெல்லாம் முதல் இடத்தில் வைத்து பார்த்த பெருமை சன் டிவி நிருவனத்தாருக்கே சேரும் ,ஏறி வந்த ஏணியை சுலபமாக எட்டி உதைத்து எதிர் அணியில் சரண்டர் ஆனவர் ,இது போல் இன்னும் பல புகழுரைகளை அள்ளி தெளிக்கலாம் ஆனால் பதிவின் நீளம் கருதி ,முடித்து கொள்கிறேன்

ஷாஜகான் :
                          
              இந்த படத்தில் கடைசியாக படம் ஓடிய திரையை ஒரு திரை மூடியது ,அந்த காட்சி உண்மையிலே எனக்கு மிகவும் பிடித்த காட்சி ,அதற்க்கான காரணத்தை எனது முந்தைய பதிவான " எனது சைக்கிளும் டாக்டர் விஜய்யும் " தெரிந்து கொள்ளலாம் , ஹீரோயினை ஓட்டி வருவதற்கு ஒரு மாஸ்டர் பிளான் போடுவது போல் காட்சி வைத்திருப்பார்கள் ,கிளாஸ் .......பின்னர் ரெஜிஸ்டர் ஆபீஸ் வாசலில் தன் கன்னத்தில் பளீர் பளீர் என்று அறைந்து கொண்டு அழும் காட்சியில்  ,நானும் அழுதேன் முடியல ,ஒரு வேளை உண்மையான அனுபவமாக கூட இருக்கலாம் என்று ஐயம் வந்தது .கடைசியில் " உண்மை காதல்னா சொல்லு உயிரையும் கொடுப்பேன் " என்று உரைக்கும் வசனம் காதலர்கள் மத்தியில் கடுப்பேற்றியது

புதிய கீதை :
            இந்த படத்தின் கடைசி காட்சியில் அமரர் மகாகவி பாரதியின் " நல்லதோர் வீணை செய்தே " என்ற பாட்டை இணைத்திருப்பார்கள் ,சூப்பர் .பாரதியார் இருந்திருந்தால் மருந்தை வாங்கி மடக் மடக் என்று குடித்திருப்பார் ,அதாவுது எதற்கு அந்த பாட்டை இணைத்தார்கள் 'தல ' வீங்கும் அளவிற்கு யோசித்தேன் பிறகு தான் தெரிந்தது பாரதியாரும் அல்பாயுசுல புட்டாரு அதே போல இவரும் அந்த படத்துல அல்பாயுசுல போவாரா ,அப்பறம் கடைசில பிழைத்து கொள்வாரா ,காலத்தின் கொடுமைதனை காலனிடம் உரைக்க சென்றேன் ஆனால் நானே காலமாகி போனேன் ,ஐயையோ என்னனென்னமோ உளறுரேனே ,இன்னொரு குவாட்டர் சொல்லுங்கப்பா முடியல

யூத்து :
         இந்த படத்தில் வசனங்கள் அருமையாக இருக்கும் ,குறிப்பெடுத்து என்னால் கூறமுடியவில்லை ,ஏனென்றால் மண்டையில் எதுவும் ஏற வில்லை ,ஜஸ்ட் ஏ மினிட் வந்து விடுகிறேன் .........................................ஒரு சிறு கடமையை முடித்து விட்டு வந்தேன் தொடர்கிறேன் ,என்னை போன்ற யூத்துகள் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான  படம் ,வில்லனிடம் " இத நா உன்னைய பார்க்கிற கடேசி நாளா இருக்கணும் மீறி உன்னைய பார்த்தேன் அது உனக்கு கடேசி நாளா இருக்கும் " என்ற வசனத்தில் டயலாக் டெலிவரி அருமையாக அமைந்திருக்கும் ,அந்த மாடுலசன் சான்சே இல்ல இளைய தளபதிக்கே உண்டான ஒரு ஒரு ஒரு ஒரு ஒரு............... மன்னிக்கணும் என்ன சொல்லறதுனு தெரியல

திருமலை :
       இந்த படத்தில் ஒரு மிக பெரும் புரட்ச்சி செய்திருப்பார் விஜய் அவர்கள் ,நண்பன் தனது காதலியை கல்யாண மண்டப்பதிலிருந்து தள்ளி கொண்டு வாந்தி இருப்பார் ,விஜய் அவர்கள் அந்த நண்பனின் காதலியை தள்ளி கொண்டு மீண்டும் மண்டபத்திற்க்கே சென்று மாப்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க்கவைப்பார் ................................................................................................................................................................................................. மயக்கம் அடைந்து விட்டேன் , தண்ணி அடித்து எழுப்பி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் , மூஞ்சி எல்லாம் ஈரமாக இருக்கிறது

அழகிய தமிழ் மகன் :
      அழுகிப்போன தமிழ் மகன் என்ற படத்தில் மிக மிக மிக அருமையான கட்சி ஒன்று இருக்கும் , ஸ்ரேயா     விஜய் அவர்களை தனது அப்பாவின் அப்பாவின் அப்பாவின் ஐயையோ மறந்து போச்சே ,சரி விடுங்கள் எங்கையோ ஸ்ரேயா அவர்கள் குறிபெடுத்து கொல்லுங்கள் ஸ்ரேயா அவர்கள் விஜய் தள்ளி கொண்டு வந்திர்ப்பார் ,அப்பொழுது நடக்கும் ஒரு களேபரத்தில் ................ யா அவர் ................ அப்ப ........................
மன்னிப்பு ...................        

சாரி இதற்கு மேல் என்னால் தொடர முடியவில்லை வாயெல்லாம் கோனுகிறது , கையெல்லாம் இழுத்து கொள்கிறது ,முன்பு முடித்து வந்த சிறு கடமை இப்பொழுது பெரிய கடமையாகி விட்டது , வயிறெல்லாம் கடமுட என்கிறது , நான் -ஸ்டாப்பாக நிற்காமல் செல்கிறது

அண்ணே  பன்னி குட்டி அண்ணே ....................உங் ......................க நிலைமையும் இதே போல் ஆஐடும்நெ................................. தொடாரதீங்கன்னே

அம்புலன்ஸ் வந்துடுச்சா

தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இப்படி வாழ்க்கையை தொடர முடியாமா பண்ணிட்டாங்களே ....................

எவ்வளோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா
 
                                            
          

34 கருத்துகள்:

sakthistudycentre-கருன் said...

வடை வாங்க வந்துட்டோம்ல....

ரஹீம் கஸாலி said...

present

தனி காட்டு ராஜா said...

Super Comedy :)))))))

விக்கி உலகம் said...

என்னப்பா இப்படி அந்த நிப்புள் வாயன போட்டு தாக்கி புட்டீங்களே........பேசாமஅவன நரசிம்ம ராவி சாரிப்பா நரசிம்ம ராவ் மாதிரி பிரதமராக்கிடலாம தமிழ் நாடாவது தப்பிக்கும்......ஹி ஹி!!

karthikkumar said...

செம நக்கல் ஹி ஹி ........

siva said...

இன்னொரு குவாட்டர் சொல்லுங்கப்பா முடியல
---hahaha

no no i drink only pepusi..miranda.. please order..

பார்வையாளன் said...

ஏன் இந்த கொலை வெறி

Madurai pandi said...

ஏன் இந்த கொலைவெறி !!!

தமிழ்வாசி - Prakash said...

அனேகமா இந்த பதிவை எழுதிட்டு ஒரு புல்லு வாங்கி அடிசிருபிங்க மணி...அப்படித்தானே...

அரசன் said...

தல நீங்க தல தான் ,,,

நல்ல எழுது நடை ....

அரசன் said...

மீதிய அப்புறமா சொல்லுவிங்களோ ?????!!!!!!!!!!

அரசன் said...

தமிழ்வாசி - Prakash said...
அனேகமா இந்த பதிவை எழுதிட்டு ஒரு புல்லு வாங்கி அடிசிருபிங்க மணி...அப்படித்தானே..//


அடிச்சிட்டு தான் பதிவுழுதவே வந்தாராம்

Riyas said...

ஹா ஹா பிரிச்சு மேய்ன்சுட்டிங்க பாவம் விஜய்..

அஞ்சா சிங்கம் said...

சாரி இதற்கு மேல் என்னால் தொடர முடியவில்லை வாயெல்லாம் கோனுகிறது , கையெல்லாம் இழுத்து கொள்கிறது ,முன்பு முடித்து வந்த சிறு கடமை இப்பொழுது பெரிய கடமையாகி விட்டது , வயிறெல்லாம் கடமுட என்கிறது , நான் -ஸ்டாப்பாக நிற்காமல் செல்கிறது...........////////////////////

ஆமா எனக்கு கமண்ட்டு போடும்போதே லேசா நெஞ்சி வலிக்கிற மாதிரி இருக்கு மாபெரும் உழைப்பு ..............

ஜீ... said...

சூப்பர் தல! கலக்குறீங்க! :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொடர்பதிவு எழுதச் சொல்லி ஒரு பேச்சுக்குச் சொன்னா இப்படி விபரீதமா முயற்சி பண்ணிட்டீங்களே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அண்ணே பன்னி குட்டி அண்ணே ....................உங் ......................க நிலைமையும் இதே போல் ஆஐடும்நெ................................. தொடாரதீங்கன்னே//////

அப்பிடியா? எதுக்கும் ரெண்டு பாட்டல் பாலிடாயில் அடிச்சிட்டே எழுத ஆரம்பிக்கிரென், அதாங்க வெசத்த வெசத்தால முறிக்கிரதும்பாங்களே, அந்த் மாதிரி......!

Philosophy Prabhakaran said...

ஒவ்வொரு பத்தியிலும் ஒரு இடத்தில் விலா நோக சிரிச்சேன்...

Philosophy Prabhakaran said...

// படம் ஓடிய திரையை ஒரு திரை மூடியது //

மொதல்ல ஒண்ணுமே புரியல... புரிஞ்சதும் விழுந்து விழுந்து சிரிச்சேன்...

Philosophy Prabhakaran said...

// பாரதியார் இருந்திருந்தால் மருந்தை வாங்கி மடக் மடக் என்று குடித்திருப்பார் //

நல்ல வேலை மனுஷன் இல்ல.... இளைஞன் பட ட்ரைலரில் கூட வறுத்தெடுக்குறானுங்க...

Philosophy Prabhakaran said...

// ஒரு சிறு கடமையை முடித்து விட்டு வந்தேன் //

என்னா கடமை...? வாந்தியா...

Philosophy Prabhakaran said...

// மயக்கம் அடைந்து விட்டேன் , தண்ணி அடித்து எழுப்பி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் , மூஞ்சி எல்லாம் ஈரமாக இருக்கிறது //

செம நக்கல்...

Philosophy Prabhakaran said...

நல்ல ஐடியாவா இருக்கே... எவனையாவது பிடிக்கலைன்னா டாகுடரைப் பற்றி எழுத வச்சிடலாம்...

ஆனந்தி.. said...

அல்பாயுசுல போவாரா!! ,
அப்பறம் கடைசில பிழைத்து கொள்வாரா!!
காலத்தின் கொடுமைதனை காலனிடம் உரைக்க சென்றேன் !!
ஆனால் நானே காலமாகி போனேன் !!

ஐயையோ என்னனென்னமோ
உளறுரேனே//

mani...ha ha...Nice poem..ha ha..

Jayadev Das said...

//மேடையில் நமது முதல்வர்கலைஞர் முன்னிலையில் " எங்களை மிரட்டு கிறார்கள் என்று கூறிய அஜித் எங்கே //ஆனா அடுத்த நாள் கோபாலபுரத்து வீட்டுக்கு "மரியாதை" நிமித்தமான சந்திப்புன்னு போய் நீட்டி காலில் விழுந்தாரே, அதுதான் இவரது நிஜமான தைரியத்தைக் காட்டுகிறது.

! சிவகுமார் ! said...

உங்க பொறுமை கடலினும் பெரிது..நம்மால பாக்க முடியாது!

சி.பி.செந்தில்குமார் said...

இதுவரை யாரும் உங்களை திட்டலையே அது எப்படி? நான் விஜய் பதிவு போட்டா உடனே மிரட்டல் கால்ஸா வருது

Kannan T said...

Don't Mistake to me Dears!!!!!!!!

If you Make a comment, it will take 10 or 20 min....! Right

If you make a movie, it will take minimum 6 months...! Right

So make a comment in positive and negative thoughts of the movie.

In case the movie director is read your comment or the hero is read your comment, they are realize the problem and also correct the mistake.....!

If i make any wrong comment please ignore it also read the nest comment.

போளூர் தயாநிதி said...

வந்துட்டோம்ல....

இராஜராஜேஸ்வரி said...

சிரிப்பாய் சிரிக்க வச்சுட்டீங்க்!

ரஹீம் கஸாலி said...

நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு தமிழ்மணத்தில் வாக்கிட்டு, கருத்துக்களை சொல்லவும்
http://blogintamil.blogspot.com/2011/02/4-friday-in-valaichcharam-rahim-gazali.html

பாரத்... பாரதி... said...

பதிவு முழுவதும் நையாண்டி நிரம்பி வழிகிறது.

பாரத்... பாரதி... said...

//தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இப்படி வாழ்க்கையை தொடர முடியாமா பண்ணிட்டாங்களே ...//

இப்ப எங்க இருக்கீங்க.. சொர்க்கமா? நரகமா?

சீனு said...

என்ன கொடும டாக்டர் இது ,,,! ஹா ஹா ஹா செம கலாய்

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena