வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

19.6.11

நெல்லை பதிவர்கள் சந்திப்பு

          நெல்லை பதிவர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெரும்  மகிழ்ச்சி அடைகிறேன் 


எல்லோருக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துகளும் ,நெல்லை பதிவர்கள் இதை முன்னின்று நடத்தி உள்ளார்கள் ,குறிப்பாக உணவுஉலகம் திரு ,சங்கரலிங்கம் அவர்கள் பெரும் முயற்சியில் சாத்தியமானது என்றால் அது மிகை அல்ல .நன்றி சார் 
சீனா அய்யா, பலாபட்டறை சங்கர், தண்டோரா மணிஜி, நாஞ்சில் மனோ, இம்சை அரசன் பாபு,பெயர் சொல்ல விரும்பவில்லை,மனதோடு மட்டும் கௌசல்யா, கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா, நாய் குட்டி மனசு ரூபினா, அறிவியல்-கல்பனா ராஜேந்திரன், சுவாமியின் மன அலைகள் டாக்டர்  கந்தசாமி,ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்துரத்னவேல்நடராசன்,ஜெயவேல்சண்முகவேலாயுதம், ,கோல்ட் சிவம், தமிழ்வாசி பிரகாஷ், ரசிகன் - ஷர்புதீன், அட்ரா சக்க- சிபி செந்தில்குமார், கோமாளி செல்வா, வெடிவால்-சகாதேவன்,உணவுஉலகம்சங்கரலிங்கம்,அன்புடன்அ.மு.ஞானேந்திரன்,
 வெறும்பய-ஜெயந்த்,நிலாஅதுவானத்துமேல!-ஸ்டார்ஜான்,அட மனிதா காதர் அலி ,மற்றும் பலர் 

காலையில் ஐந்தரை மணிக்கு நான் .திரு சீனா ஐயா, திரு தமிழ்வாசி பிரகாஷ் ,மாட்டுதாவணியில் திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறினோம் ,பேருந்து நகர்ந்து சிறிது தூரத்திலே டயர் பஞ்சாராகி தடை அறிவித்தது ,சரி சந்திப்பு தொடங்கி சிறிது நேரம் கழித்துதான்  செல்வோம் என நினைத்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை ,பிறகு பேருந்தில் செல்லும் பொழுது பதிவர்  நிருபன் அவர்கள் தமிழ்வாசி பிரகாஷுக்கு  அலைபேசியில் தொடர்பு கொண்டார் ,என்னிடமும் கதைத்தார். நான் எழுதிய அத்தமக என்று  காவியத்தை குறித்து கேட்டறிந்தார் ,நான் அது உண்மைகதையல்ல அது ஒரு கற்பனை கதை ,அது போக எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று உரைத்தேன் ,அப்படியா நான் வேண்டுமானால் தங்களுக்கு யாழ்ப்பாணத்தில் பெண் பார்கவா என்று கேட்டார் .நான் ம்ம்மம்மம்ம்ம்ம்

இந்த சந்திப்பில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் : கோமாளி செல்வா அவர்கள் நடத்திய நாடகம் ,நான் வேறு அவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன் ,அந்த நாடகம் முடிந்ததிலிருந்தே எனக்கு ஒரு பக்க காது கொஈஈஈஈஈஇ  என்று கேட்க்கிறது ஏன் என்று தெரிவில்லை .

என்னது என்னிடம் சரக்கு தீந்து போச்சா என்று அண்ணன் சி.பி.செந்தில்குமார் ஆக்ரோசமாக பதில் அளிக்கிறார்


சி .பி செந்தில்குமாரின் தன்னிலை விளக்கங்கள் , மன்னிப்பு படலங்கள் தொடங்கியது , எல்லோருமே அவரை  கடுமையாக தாக்கினார்கள் ,தனி ஒருஆளாக பதிலளித்தார் , ஒரு கட்டத்துக்கு மேல் மிக கோவமாக பேச ஆரம்பித்து விட்டார் ,அதுமட்டுமல்லாமல் இதுவரை  தன்னை  தாக்கி எழுதியவர்களை எண்ணி வைத்திருக்கிறேன்  என்ற உண்மையை நவின்றார் ,அதனால் சி.பி யை தாக்கி எழுதுபவர்களே உங்களுக்கு ஒன்று கூறிகொள்கிறேன் ,அவர் பேசிய பேச்சை வைத்து கூறுகிறேன்

அவர் ஒன்றும்  காமெடி பீஸ் அல்ல ( அண்ணே ஓகே வா )

சகோதிரி  ஜோசபின்பாபா- ஜோசபினோடு கதையுங்கள் ,தான் எழுதிய பதிவுகள் குறித்து மிக நன்றாக பேசினார் 

 நாய் குட்டி மனசு ரூபினா மேடம் - தான் எழுதிய பதிவு மூலம் நடந்த நெகிழ்ச்சியாக சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார் 


கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா மேடம் -கருத்து குறித்த தனது கருத்தை எடுத்துரைத்தார் .அனைவராலும் ஏற்றுகொள்ளகூடியதே


நிலாஅதுவானத்துமேல!-ஸ்டார்ஜான்- தான் பதிவு எழுத வந்ததை குறித்தும் பதிவர்கள் தங்களது கருத்தை பிறரது மனம் கோணாதபடி எடுத்துரைக்கவேண்டும் என எடுத்துரைத்தார் 


பெயர் சொல்ல விருப்பமில்லை பதிவர் தனது பெயரை விருப்பத்துடன் கூறினார் ,மற்றும் ஊடாக ஊடாக நகைச்சுவையாக பேசி சந்திப்பை கலகலப்பாக்கினார் 

பலா பட்டறை -  திரு.சங்கர் அவர்கள்  கட் காப்பி பேஸ்ட் பதிவர்கள் பற்றி தனது கருத்தை எடுத்துரைத்தார்


இன்னும் பல நினைவில் நிற்கும் சம்பவங்கள் நிறைய ,பிறகு இத்தனை நேரம் பேசி கலைத்து போனபடியால் .சிறிது வயிற்றுக்கு உணவிட சென்றோம் ,நான் ,பன்னீர் மசாலா ,சாப்பாடு  ,ரசம் ,கொழம்பு ,அப்பளம் ,ஐஸ்கிரீம் மற்றும் பீடா(ஸ்வீட்) என அளவாக உண்டோம் . பிறகு எல்லோரும் ஒன்றாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தோம் ,சி.பி .செந்தில்குமார் குற்றாலத்துக்கு ஆள் தேத்திகொண்டிருந்தார்.என்னையும் அழைத்தார் ,தாங்கள் முழு செலவை ஏற்று கொள்கிறீர்களா என்று கேட்டேன் ,அதற்க்கப்பறம் ஆளே காணவில்லை . .
  


மீண்டும் எல்லோருக்கும் எனது  வணக்கங்களும் ,நன்றிகளும்

32 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா வணக்கம் வணக்கம் நன்றி மக்கா....

ஜீ... said...

வணக்கம் மணி! செம்ம கலக்கலா இருந்திருக்கு சந்திப்பு? :-)

ஜீ... said...

அப்புறம் டெம்ப்ளேட் மாத்திடீங்களா?

அம்பாளடியாள் said...

ஆகா இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா!!!!......
வாழ்த்துக்கள் உறவுகளே உங்கள் சந்திப்பு இன்றுபோல் என்றும் தொடர வாழ்த்துகிறேன்....
பகிர்வுக்கு நன்றி சகோதரரே..

# கவிதை வீதி # சௌந்தர் said...

சந்திப்பு நிறைவாக நடந்ததற்க்கு வாழ்த்துக்கள்..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

வாழ்த்துகள் நண்பரே! :))

சி.பி.செந்தில்குமார் said...

குற்றாலத்துக்கு வர மறுத்ததால் மைனஸ் ஓட்டு போடலாமா?ன்னு யோசிச்சுட்டு இருக்கேன் .. ஹி ஹி

செங்கோவி said...

நல்ல பகிர்வு..நல்லாச் சொல்லி இருக்கீங்க மணி.

தமிழ்வாசி - Prakash said...

சி.பி. ஆட்டத்துல குற்றாலம் கலங்கி போச்சாம்....

N.H.பிரசாத் said...

பதிவர்கள் சந்திப்பை ஒரு லைவ் ஷோவாக எழுதியதற்கும், என்னை மாற்றான் தோட்டத்தில் இணைத்ததற்கும் நன்றி நண்பரே.

ஷர்புதீன் said...

:-)

விக்கியுலகம் said...

நல்ல பகிர்வு!!!!!

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப ஜாலியா இருந்துச்சு போல :)

வாழ்த்துகள்.

நிரூபன் said...

ஓவர் நக்கல் மாப்ளே, அதுவும் பொண்ணு எப்படா பார்த்துத் தருவான் நிரூபன் என்று எதிர்பார்ப்போடு இருக்கீங்க இல்லே,
கூடிய சீக்கிரம் மங்களம் உண்டாகட்டும்,

பதிவர் சந்திப்பினைச் சுவாரஸ்யமாக எழுதியிருக்கீங்க,
எல்லோரும் போட்டோ போடுறீங்க, ஓக்கே,
ஆனால் யார் யார் எங்கே போட்டோவில் நிற்கிறாங்க என்று நம்மளை மாதிரிப் புரியாத பசங்களுக்காக போடமாட்டீங்களா?

நிரூபன் said...

மச்சி, டெம்பிளேட் மாத்தியிருக்கிறீங்க,
கலக்கலா இருக்கு.

சந்ரு said...

பகிர்வுக்கு நன்றிகள்

goma said...

எங்கள் நெல்லையில் பதிவர்கள் சந்திப்பு அறிய சந்தோஷமாக இருந்தது .பகிர்வுக்கு நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தலைவரே நீங்க மதுரைதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நெல்லையிலும் கலக்கிட்டீங்க, அதன் பகிர்விலும் கலக்கிட்டிங்க....!

மாணவன் said...

சந்திப்பு நிகழ்வை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)

siva said...

mikka santhosam annachi..

pagirguvukku nandri

namalum kalanthukonda oru unarvu.

vaalga valamudan.

உலக சினிமா ரசிகன் said...

இந்த சந்திப்புக்கு வர எண்ணி முடியவில்லை.
தங்கள் பதிவு மேலும் ஏக்கத்தை வரவழைத்து விட்டது.
இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த சங்கரலிங்கம் அவர்களது அலைபேசி எண் தெரிவிப்பீர்களா?
எனது எண் 9003917667

அவன் இவன் இயக்கியது எவன்?
என பாலாவுக்கு வேப்பிலை அடித்து ஒரு பதிவெழுதி உள்ளேன்.வருகை தாருங்கள்

சி.பி.செந்தில்குமார் said...

நண்பா.. கடைசியாக போட்டிருக்கும் குரூப்[ ஃபோட்டோவை நீக்கி விடவும், சிலர் தங்கள் முகம் வெளியில் தெரிவதை விரும்பவில்லையாம்.. புரிந்துணர்வுக்கு நன்றி

Anonymous said...

அருமை ... வாழ்த்துகள்

shunmuga said...

நன்றி சி.பி பதிவர்கள் சந்திப்பை விரிவாக வெளியிட்டமைக்கு !
சங்கரலிங்கம் செல் நம்பர் 9442201331

முரளிகண்ணன் said...

ஆவலுடன் கிளம்பினேன். ஆனால் மூன்று மணிக்கு மேல்தான் வரமுடிந்தது. அண்ணன் தண்டோரா மணீஜி, பலா பட்டறை சங்கர் மற்றும் செல்வம் ஆகியோரை மட்டும் சந்திக்க முடிந்தது.

வாழ்த்துக்கள்

! சிவகுமார் ! said...

// ,நான் ,பன்னீர் மசாலா ,சாப்பாடு ,ரசம் ,கொழம்பு ,அப்பளம் ,ஐஸ்கிரீம் மற்றும் பீடா(ஸ்வீட்) என அளவாக உண்டோம் //

தண்ணி குடிக்கலையா?

இரவு வானம் said...

ஹி ஹி சூப்பருங்க....

Rathnavel said...

நல்ல பதிவு.
உங்களது முந்தைய பதிவுகளை அவ்வப்போது படித்து பார்த்து பின்னூட்டம் இடுகிறேன்.
தொடர்பில் இருப்போம்.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

அருமை வாழ்த்துக்கள்.

vidivelli said...

நல்லாயிருக்குங்க...
வாழ்த்துக்கள்

kadhar24 said...

பதிவர் சந்திப்பை சிறப்பாக எழுதி இருக்கிறிர்கள்.வாழ்த்துகள்.

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena