வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

31.10.10

சுஜாதாவும் எந்திரனும்

ஷங்கர் எந்திரன் கதையை திருடி அது  சுஜாதாவிடம் ஒப்படைக்கப்பட்டு ,பின்பு மெருகேற்ற பட்டுஇருக்கிறது என்பது உண்மையா அல்லது பொய்யா .சுஜாதா தொடாத துறையே இல்லை எனும் அளவிற்கு அவருடைய கதைகளும் ,கட்டுரைகளும், நாவல்களும் வந்துள்ளன .அதுவும் இன்றைய காலத்தில் சயின்ஸ் பிக்ஸ்சன் கதைகளுக்கு அவர் ஒரு முன்னோடி .
சமிபத்தில் அவருடைய சொர்கத்தீவு நாவல் படித்தேன் .இது எழுதப்பட்ட ஆண்டு 1973 .
கிட்டத்தட்ட ஒரு ரோபோ போவைபோல் ஆக்க பட்டமனித  கூட்டம். அந்த  தீவில் தாங்கள் ஒரு அடிமை என்றே தெரியாத அளவிற்கு அடிமையாக  வாழ்ந்த்துகொண்டிருக்கும் மனிதர்களை பற்றிய கதை .அந்த கூட்டத்தில் சகலமும் சிந்திக்க தெரிந்த மனிதன் வந்தால் என்ன ஆகும் .இது தான் கதை.
1973 ல் கம்ப்யூட்டர் பற்றிய சங்கதிகளை தெளிவாக விளக்கி இருப்பார் .இந்த கதைக்காக அவர் எழுதிருக்கும் முன்னுரையே எந்திரன் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கமாகவும் எடுத்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .நீங்கள் ?
அந்த முன்னுரை :

           இந்த கதை தொடர்கதையாக வந்த போது "ஜார்ஜ் ஆர்வெல்லின் " '1984 ' போல  இருக்கிறது என்று ஒருவர் எழுதி இருந்தார் .இன்னொருவர்  'ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ' 'பிரேவ்  நியூ வேர்ல்ட் ' என்றார் .பிறிதொரு பெண்மணி ஐராலேவிணின் ' திஸ் பெர்பெக்ட் டே ' என்றார் .இவர்கள் எல்லோரும் சொல்கிறபடி நான் காப்பி அடிக்கவேண்டுமென்றால்  ஒரு லைப்ரரி யையே  அடித்திருக்க வேண்டும் .பின் அவர்கள் சொன்ன குற்றசாட்டுகளில்
அர்த்தமில்லையா ? பார்க்கலாம் .
நான் மேற்சொன்ன நாவல் கலை எல்லாம் படிக்கவே இல்லை என்று சொல்வது சிறுபிள்ளைத்தனம் .மேற்சொன்ன புத்தகங்கள் என்ன, நிறைய சயின்ஸ் பிக்ஸ்சன்  புத்தகங்கள் படித்திருக்கிறேன் .என் நண்பர்களுக்கு நான் சில ஆசிரியர்களைச் சிபாரிசு செய்கிறேன் 
arthur clarke ,ray bradbury ,hendry slesar ,The odore sturgeon ,anthony burgess .
பெரும்பாலும் எல்லா சயின்ஸ் பிக்ஸ்சன்  கதைகளிலும் சில பொதுவான அம்சங்கள் உள்ளன 
அவை 
1 .எதிர்காலத்தை பற்றி அவை சொல்லும் 
2 . இன்றைய சமுதாய அமைப்புக்கு பதிலாக ,மாறுதலாக ஒரு புதிய அமைப்பை - ஒரு utopia  அவைகளில் சொல்வார்கள் .
3 . அந்த புதிய அமைப்புக்கு எதிராக ஒருவன் முயற்சி செய்வான் .
'1984 ' என்கிற நாவல் மிக அதீதமான யுத்த பயத்தின் அடிப்படையில் பீடிக்கப்பட்ட மனிதர்கள் விழித்துகொண்டே வாழும் கெட்ட சொப்பனம் போன்ற வாழ்கையைப் பற்றியது .இதில் சரித்திரம் தினம் தினம் மாற்றி எழுதபடுகிறது .உண்மை என்பது மணிக்கு மணி மாறுகிறது .இந்த அமைப்பை எதிர்த்த ஒருவனின் தோல்வியைப் பற்றியது 
ஹக்ஸ்லியின் 'பிரேவ் நியூ வேர்ல்ட் ' விஞ்ஞான முறைப்படி டெஸ்ட் டியுப் களில் சுத்தமாக நிர்ணயிக்கப்படும்  புதிய வர்ணாச்ரம் தர்மத்தை பற்றியது .இதையும் ஒருத்தன் எதிர்க்கிறான் .
ஐரா லேவின்னின்  'திஸ் பெர்பெக்ட் டே ' என்பதில் அகிலம் முழுவைதயும் ஒரு ராட்சசக் கம்ப்யூட்டர் ஆள்கிறது .ஒரே ஒரு பிரேதேசத்தில் மட்டும் மக்கள் அகதிகளாக தப்பித்து கொண்டு பழைய வாழ்கை ,அதன் சுகதுக்கங்கள் சகிதம் கூட்டமாக வாழ்கிறார்கள் .கதாநாயகன் ஆள் திரட்டி கொண்டு கம்ப்யூட்டர் ஆட்சியை எதிர்க்க செல்கிறான் .அவனுக்கு அங்கே ஒரு ஆச்சிரியம் காத்திருக்கிறது .அவன் வாழ்ந்த அந்த சுதந்திர ப்ரேதேசம்கூடக்  கம்ப்யூட்டர்  ரின்  ப்ரோக்ராம்களின் சாகசங்களின் ஒன்று அவன் தப்பித்து திரும்ப வருவது எல்லாமே முன்பே நிர்ணயிக்க பட்ட விஷயம் .
இப்போது சொல்லுங்கள் .  Am  i  cleared ?
ஆனால் நான் படித்த நாவல்களின் பாதிப்பு சொர்கத்தீவில் இல்லவே  இல்லை என்று சூடம் அணைத்துச் சத்தியம் பண்ணுவதற்கு நான் தயாராக இல்லை .நிச்சியம் இருக்கிறது .ஹக்ஸ்லியின் போக்கனாவ்ச்கி முறையைப் பற்றி ஒரு அத்தியாய த்தில் குறிப்பிட்டிருக்கிறேன் .லெவின் ஒரு வயது எல்லைக்கு பின்மக்கள் கொல்லப்படுவதை தன் புத்தகத்தில் சொல்லி இருக்கிறார் 
சொர்கத்தீவு  ஒரு மானசீக தீவு .ஒரு எதிர்கால்த்தீவு .என் அபிப்பிராயத்தில்  எலெக்ட்ரா னிக்ஸ்   எதிர்காலத்தில் நம் அந்தரங்க வாழ்க்கையில் மிகவும்  குறுக்கிட போகிறது .நான் ஒரு எலெக்ட்ரானிக்ஸ்  engineer   என்பதனால் இதை சொல்லவில்லை .1948 -இல் கண்டு பிடிக்கப்பட்ட   டிரான்சிஸ்டர் இன்றும் நம் கிராமங்களில் , பரவி இருக்கிறது .சிம்னி விளக்கை அணைத்துவிட்டு குடுசைக்குள்  இருட்டில் பக்கத்தில் தேடுபவர்களை நிரோத்  உபயோகிக்க பாட்டரி சக்தியில் வற்புறுத்துகிறது . அச்சடித்த வார்த்தைகளை சாசுவத சாத்தியங்களாக ,தெய்வ வாக்காக நாம் ஏற்று கொள்கிறோம் .
நாளைக்கே செய்தித்தாள் ,ரேடியோ ,தொலைக்காட்சி  எல்லாம் சேர்ந்து ஒரு அந்தரங்க சதியாக மூன்றாம் உலக யுத்தம் துவங்கி விட்டது .மேற்க்கத்திய நாடுகள் போட்டி இட்டு கொண்டு அணு ஆயுதங்களை வெடித்து தர்மோ  ந்யுக்ளியர்  தாண்டவம்  ஆடுகின்றன  என்று அறிவித்தால் நாம் நம்பத்தான் போகிறோம் .எனவே communication media வைக் கட்டுப்படுத்துபவகள் உலகை கட்டுபடுத்த முடியும் .(எவ்வளவு உண்மையான வார்த்தை )
இன்னும் இருக்குது எழுத முடியல கை வலிக்குது 
5 கருத்துகள்:

பிரியமுடன் ரமேஷ் said...

சரியான விளக்கம்... நன்று.. நன்றி..

philosophy prabhakaran said...

சுஜாதாவின் சொர்க்கத்தீவு நாவலின் மின் பதிப்பை வைத்திருந்தால் எனக்கு மெயிலில் அனுப்ப முடியுமா...? மின் பதிப்பு இல்லையெனில் பரவாயில்லை... பதிப்பகத்தின் பெயரை மட்டுமாவது குறிப்பிடுங்கள்...

நா.மணிவண்ணன் said...

பிரியமுடன் ரமேஷ் said...சரியான விளக்கம்... நன்று.. நன்றி..


நன்றி

நா.மணிவண்ணன் said...

philosophy prabhakaran said...

சுஜாதாவின் சொர்க்கத்தீவு நாவலின் மின் பதிப்பை வைத்திருந்தால் எனக்கு மெயிலில் அனுப்ப முடியுமா...? மின் பதிப்பு இல்லையெனில் பரவாயில்லை... பதிப்பகத்தின் பெயரை மட்டுமாவது குறிப்பிடுங்கள்...

மின் பதிப்பு இல்லை . விசா publications

அருண்மொழிவர்மன் said...

சொர்க்கத்தீவு மின்புத்தகமாக http://www.writersujatha.com/catalog/என்ற முகவரியில் கிடைக்கின்றது

சுஜாதா நிறைய படைப்புகள் அந்த தளத்தில் கிடைக்கின்றன்

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena