மதுரை அபிராமி தியேட்டரில் 'வில்லன் ' படம் முதல் காட்சி ,அன்றைய தினம் தீபாவளி ,முதல் காட்சி பார்த்து விட்டு கூட்டமாக வெளியில் வந்து கொண்டிருந்தோம் ,வெளியில் வரும் பொழுது கண்ணாடி கதவை ஒருவன் தட்டி விட்டு சென்றான் ,அடுத்து வந்தவன் அதே போல் செய்ய ,அதன் பின்னால் வந்த அனைவரும் அதே போல் செய்ய ,அதற்க்கு மேல் தாக்கு பிடிக்காமல் கண்ணாடி உடைய ஆரம்பித்தது ,பின்னர் மொத்தமாக கண்ணாடியை உடைத்து வெளியேறினோம் ( மாமாக்காரர்கள் விரட்டி விரட்டி அடித்தார்கள் என்பது தனிக்கதை )
மதுரை அம்பிகா தியேட்டர் ' ஜி ' படம் முதல் காட்சி . வேலைக்கு மட்டம் போட்டு படம் பார்க்க வந்தேன் ,அப்போது தியேட்டர் முழுவதும் முன்புறமாக கண்ணாடியாக இருக்கும் .கூட்டமாக வெளியில் நின்று கொண்டிருந்தோம் ,'ஏ இன்னம் பெட்டி வரலையாம்டா " எவரோ ஒருவர் கொளுத்தி விட " என்னது இன்னம் பெட்டி வல்லையா எடுரா கல்ல" சர் சர் என்று கற்கள் பறந்தன ,ஒரு ஐந்தாறு கண்ணாடிகள் உடைய ,மீண்டும் மாமாக்காரர்கள் விரட்ட
மதுரை சினிப்ரியா காம்ப்ளக்ஸ் " பில்லா' பட முதல் காட்சி ,திரை அரங்கினுள் ,ஒரு ஐந்து அணுகுண்டுகளை பற்றவைத்து வீசியவன்.முதல் காட்சி முடிந்த பின் பார்த்தால் ஒரு சேர் பாக்கி விடாமல் உடைந்து கிடந்தது
கூட்டத்தில் எவனோ ஒருவன் 'இளைய தளபதி' வாழ்க என்று கூற ,அவன் வாயிலே கூட்டமாக சேர்ந்து மிதித்தார்கள் .இவை போல் இன்னும் எண்ணற்ற சாதனைகள் உண்டு ,ஆனால் அதுவெல்லாம் வேண்டாம்
இவையெல்லாம் பெருமையாக என்னால் கூறமுடியாது .ஆனால் பெருமையாக கூறிகொள்வேன் ,தலயின் 'ஸ்டேட் மென்ட்டை ' படித்த பிறகு
அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தார்க்கும் இந்த அறிக்கை மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும் - சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தை கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை - பார்க்கவும் மாட்டேன். கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும் போதும் என்பதே என் கருத்து.
வருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.
மாறிவரும் காலகட்டத்தில் பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்.
நான்கு பசுமாட்டை தானமாக கொடுத்து விட்டு ,மாட்டின் அருகில் அதற்க்கும் அவருக்கு வித்யாசமே இல்லாமல் நின்று போடோவுக்கு போஸ் கொடுப்பதற்கு இது எவ்வளவோ மேல்
" என் நெஞ்சில் குடியிருக்கும் " என ரசிகர்களை தன சுய நலத்திற்காகவே பயன் படுத்து பவர்களுக்கு மத்தியில்
ஆளுங்கட்சியின் உதவியோடு இது நாள்வரை தன் படத்தை ஓடவிட்டு ,இன்று எதிராக செயல் பட்டாலும் ,ஒருவேளை சமீபத்திய கருத்து கணிப்பின் படி அவர்கள் மீண்டும் ஆட்சிகட்டிலில் அமர்ந்தால் முதல் ஆளாக கலைஞர் அவர்களுக்கு சால்வை போர்த்துபவர் அவரின் அப்பாவாக இருப்பார் 'நான் பரம்பரை தி.மு.க .காரன் என்பார் ,இவர்களுக்கு மத்தியில்
தல நீ தல தான்யா
நேற்று சினிமா சூட்டிங்கில் வாந்தி எடுத்துவிட்டு ,மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு , இன்று வரை 'இந்த வந்துடுவேன் அந்தா வந்துடுவேன் ' என்று ஜு காட்டி கொண்டிருப்பவர்கள் மத்தியில்
தல நீ தல தான்யா
ஒரு தல ரசிகனாக பெருமை படுகிறேன்
|
16 கருத்துகள்:
நானும் தல ரசிகன் தாங்க
தல எப்பவுமே தாளது
தங்களின் திரையரங்களில் படம் பார்த்த அனுபவங்களை தொகுத்து ஒரு பதிவாக போடலாம் போலிருக்கே...
தல என்றும் தல தான் அதனால்தான் திரை முதற்கொண்டு ரசிகர்கள் வரை நல்ல மரியாதையை சம்மாதித்திருக்கிறார்...
அஜித்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
Thala always rocks
தலையுள்ள அனைவரும் தலை இல்லை
தல போல வருமா ?
நான் தல ரசிகன் இல்லை. எனினும் அவரது இந்த முடிவு நிச்சயமாக வரவேற்க கூடியதே. அத்துடன் விஜய் ,ரஜினி போன்ற சுய நலவாதி நடிகர்களுக்கு மத்தியில் நிச்சயமாக பாராட்டப்படகூடியவரே.
HAPPY BIRTHDAY "THALA"....
WE WERE
ARE
WILL BE YOUR FANS....
சகோ, அஜித் படம் பார்க்க முண்டியடித்து ஓடிய நினைவலைகளை மீட்டிப் பார்த்திருக்கிறீர்கள், அஜித்தின் ரசிகர் மன்ற நிலைப்பாடுகள் பற்றியும் விளக்கியுள்ளீர்கள்..
ஒத்துக்கிறேன், நீங்க தல ரசிகன் தான் சகோ.
அஜித்-க்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய ”மே”தின வாழ்த்துகள்
யோவ்... என்னய்யா எல்லாரும் எனக்கு முன்னாடியே பதிவை போட்டு வெறுப்பேத்துறீங்க...
மணி! நீங்க பெரிய்ய ஆளுதான் போல! கலக்கி இருக்கீங்க! :-)
நம்ம தல தான் கிங். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல
வலையுலகில் தலைக்கு இத்தனை ரசிகர்களா?
நீங்க மதுரையில் உடைத்த அதே கண்ணாடி , சேர்களை நாங்க கொஞ்சம் தெக்கால அருப்புக்கோட்டையில உடைப்போம் ...
தலயை புகழ்வதற்கு, தலைவரை இழுக்கவேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் சொல்றேன் தல போல வருமா?
சேரெல்லாம் உடச்சிட்டு தல ரசிகன்னு பெருமை வேறயா? நல்லா சொன்னீங்க போங்க
thala thala dhan... mathadhellam tharudhaladhaan...
Post a Comment