வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

23.11.10

அலோபதி மருத்துவர்களும் மருந்து கம்பனிகளின் வன்முறைகளும்


             மருத்துவம் அதன் முறைகளும் எப்போது தோன்றியது ? ஆதிகாலத்தில் மனிதனுக்கு ஏற்பட்ட  பய உணர்வின் காரணமாக மருத்துவம் தோன்றி இருக்கலாம் .
இன்று ஆலோபதி மருத்துவத்துறை மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது .மருத்துவர்களை கடவுளாக எண்ணுகிறோம் .ஆனால் மருத்துவத்துறை இன்றைக்கு மனிதனை மனிதத்தோடு அணுகி அவனது நோய்களுக்கு தீர்வளிக்கிறதா என்றால் சத்தியமாக இல்லை .இது ஒரு கடுமையான விமர்சனம் . இந்த விமர்சனம்  நல்ல மருத்துவர்களை பற்றி அல்ல
.
சுஜாதாவின் நகரம் சிறுகதையில் மருத்துவர்களை பற்றியும் குறிப்பாக அரசாங்க மருத்துவமனையை  பற்றியும்  எழுதிருப்பார் .அந்த கதையை படிப்பவர்கள் கண்டிப்பாக  கடைசியில் ஒரு சொட்டு கண்ணீர் விடுவார்கள் . இன்றைக்கு மருத்துவர்களை பற்றி  ஜோக்ஸ் எழுத  ஒரு கூட்டமே உள்ளது
.
சமீபத்தில் எனக்கு இருமருத்துவர்களிடம் நேர்ந்த அனுபவம்

முதலாவது . தீபாவளிக்கு இருதினங்களுக்கு முன் கொஞ்சம் கடுமையான காய்ச்சலாக இருந்தது . அருகினில் இருக்கும் டாக்டர் தேடிபார்த்தேன் ஒருவரும் இல்லை .காலையில் முழுவதும் அரசாங்க மருத்துவ மனையில் வேலை  .மாலை சேவை என்ற பேரில் அப்பாவி மக்களிடம் பணம் வசூலித்தல் . அதுவரைக்கும் பொறுக்க முடியாது என்று இரண்டு  பெரசிடாமால் வாங்கி சாப்பிட்டேன் . கொஞ்சம் தெளிவாக இருந்தது .
மாலையில் ஓர அளவிற்கு சரியாகிவிட்டது .இருந்தாலும் டாக்டரிடம் சென்றேன் .
என்னுடைய சுற்று வந்தது போனேன் .மிக சரியாக சொல்லவேண்டுமென்றால் உள்ளே இரண்டே நிமிடம் இருந்திருப்பேன் உள்ளே போனவுடன்.என் உடம்பிற்கு என்ன செய்கிறது கேட்டார் கூறுவதற்குள் செதாஸ் ச்கோப்பை நெஞ்சிலும் முதுகிலும் வைத்துபாத்தார் .பின்பு வாய்க்குள் லைட் அடித்துபார்த்தார் .நர்சை அழைத்தார் .கேலினோவோ   பிளினோவோ  என்றார் .அந்த நர்ஸ் என்னை அடுத்த ரூமிற்கு வரச்சொன்னார் .
நானும் ஆவலுடன் சென்றேன். குப்பற அடித்து படுக்க சொன்னார் .நறுக்கென்று ஒரு சைடில் குத்து குத்தினார் .(டாக்டர் தீபாவளிக்கு போனஸ் குடுக்கவில்லையா என்று கேட்கலாமா என்று நினைத்தேன் )இன்னொரு சைடிலும் போடணும் என்றார் (நல்ல வேளை கேட்ருந்தா என்ன ஆகிருக்கும்)
எனக்கு இங்கே ஒரு சிறு சந்தேகம் .கிளினிக் ,சின்ன மருத்துவ மனைகளில் , வேளை பார்க்கும் நர்சுகள் முறையாக நர்சிங் படித்தவர்கள் இல்லை .அப்படி முறையாக படித்தவர்களை வேலைக்கு  வைத்தால் அவர்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கவேண்டும் .அதனால் 10 ம் வகுப்போ அல்லது 12  ம் வகுப்போ படித்த ஏழை பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு நர்சிங் வேலைகளை மேம்போக்காக சொல்லி கொடுத்து 1000 மோ ,2000 மோ சம்பளம்  நிர்ணைத்து வைத்துகொள்கிறார்கள்.அவர்களும் நோயாளிகளை மேலும் நோயாளிகளாக்கி நர்சிங் படிப்பை படிக்காமலே நர்சிங் தொழிலை கற்று கொள்கிறார்கள் . இது உண்மையா ?

இந்த மருத்துவசிகிச்சைக்கு பீஸ் 200 ருபாய் .இவர்களிடமே மருந்து வாங்க வேண்டும் அதற்க்கு 250  ரூபாய்  .இந்த மருத்துவரிடம் சென்றால் நோய்க்கு  உடனடியாக தீர்வு கிடைக்கும் .அப்படி தீர்வு கிடைத்தால் அவர்கள் நல்ல மருத்துவர்கள் .மக்களின் அறியாமைக்கு ஒரு வழிசொல்லுங்கள் மருத்துவர்களே .அதென்ன உடனடி தீர்வு?

இரண்டாவது  சுமார் ஒரு மூன்று மாதங்களுக்கு முன் ENT ஸ்பெசலிஸ்ட் டாக்டர் பார்க்கநேர்ந்தது .தலைகுத்தலாகவும்  இட காதில் வலி  இருந்தது எனக்கு பொதுவாக இப்படி தலைகுத்தியது கிடையாது (ஏனென்றால் விஜய் படம் பார்ப்பதில்லை) .சரி டாக்டரிடம் சென்று பாப்போம். போனேன் (போகாமலே இருந்திருக்கலாம் ) .
உள்ளே சென்று என்ன பிரெச்சனை  என்று கூறினேன் .பரி சோதித்துப்பார்த்தார்.காதிற்குள் ஒரு கருவியை விட்டார் அது பக்கத்தில் உள்ள டிவி ஸ்க்ரீனில் காதிற்குள் என்ன உள்ளது என்பதை படமாக காட்டியது.ஒன்னும் பிரெச்சனை இல்லை நான் கொடுக்கும் மருந்தினை சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்றார் .reception  ல்
பீஸ் கொடுக்க சொன்னார் .அங்கே சென்றால் மருந்து நீங்கள் இங்கே தான் வாங்க வேண்டும் என்றார்கள். மொத்தம் 800 ரூபாய் கொடுக்க சொன்னார்கள் (ஐயையோ காது வலிபோய் நெஞ்சு வலி வந்துடுச்சே )அதையும் அழுதேன் . 
கடும் மன உளைச்சலாக  இருந்தது

சில நாட்கள்  கழித்து நண்பர் ஒரு வரை சந்தித்தேன் .அவர் மும்பையில்  உள்ள மருந்து கம்பெனிக்கு இங்கே வேலை பார்த்துகொண்டிருந்தார் .அவரிடம் நடந்ததை கூறினேன் .
பொது வாக மருந்து கம்பனிக்களுக்கும் மருத்துவர் களுக்கும் ஒரு உடன் பாடு உண்டு .மருந்து கம்பனிகள் என்ன மருந்து தயாரிக்கிறதோ அதைதான் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும் .அதற்கு மருத்துவர்கள் தனியாக கவனிக்க படுவார்கள் .
அதாவுது வீரியம் உள்ள மருந்தை தயாரித்து கொடுத்தால் நோயாளிகள் விரைவாக குணமாகிவிடுவார்கள் .அதனால் மருந்து விற்பனை பாதிக்கப்படுமாம்.ஆகவே மருந்து கம்பனிகள் எப்போதும் தரம் சற்று குறைவாக உள்ள  மருந்தை தான் தயாரிக்குமாம்
பின்பு ஒரு செய்தி கூறினார் .மிரண்டு போனேன்
எந்த ஊரிலாவுது மருந்து விற்பனை சரியாக இல்லையென்றால் . அங்கே மிக பெரிய கம்பனிகள்(அதாவுது அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற கம்பனிகள் ) காற்று மூலமாக கிருமியை பரப்பி விடுமாம் .பிறகு பன்னிகள் மீதும் பறவைகள் மீதும் பலியை போட்டுவிடுமாம் கேட்பதர்க்கு  கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக தான் இருந்தது . இது ஒரு மருந்து  கம்பனியில் வேலை பார்ப்பவர் கூறியது.
இதுவும் ஒரு வகையில் வன்முறைதானே.

25 கருத்துகள்:

Anonymous said...

நாந்தான் முதல் போணி

Anonymous said...

இது பத்தி எழுத ஆள் இல்லைன்னு நினைச்சேன்..கலக்கிட்டீங்க..இன்னும் இரண்டு பகுதி எழுதுங்க...சூப்பர் மேட்டர்

Anonymous said...

பதிவை பத்தி பிரித்து போடவும் படிக்க சிரமமாக உள்ளது

Anonymous said...

மருந்து கம்பனிகள் என்ன மருந்து தயாரிக்கிறதோ அதைதான் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும் .அதற்கு மருத்துவர்கள் தனியாக கவனிக்க படுவார்கள் //
உண்மைதான் இது பகல் கொள்ளை

Unknown said...

@ஆர்.கே .சதீஷ்குமார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவரே

bandhu said...

//மருந்து கம்பனிகள் என்ன மருந்து தயாரிக்கிறதோ அதைதான் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும் .அதற்கு மருத்துவர்கள் தனியாக கவனிக்க படுவார்கள் //
இந்த வரி சரியாக வரவில்லை. எந்த மருந்து கம்பனியும் தயாரிக்காத மருந்தை எப்படி கொடுக்க முடியும்? எல்லா மருந்தும் ஏதாவது ஒரு கம்பெனி தயாரித்து தான் இருக்கும்.

ஹரிஸ் Harish said...

கடைசி பத்தி தகவல் உண்மையா நண்பா..பயமாயிருக்கு..

ஹரிஸ் Harish said...

பொது வாக மருந்து கம்பனிக்களுக்கும் //மருத்துவர் களுக்கும் ஒரு உடன் பாடு உண்டு //

இது உண்மை தான்..

தொடர்ந்து எழுதுங்கள்..

Philosophy Prabhakaran said...

திடீர்னு சீரியசான டாபிக்கை எடுத்திருக்கிறீர்கள்... என்ன ஆச்சு...?

karthikkumar said...

திடீர்னு சீரியசான டாபிக்கை எடுத்திருக்கிறீர்கள்... என்ன ஆச்சு//
athe davututhaan enakkum

karthikkumar said...

nice post

Unknown said...

@bandu

அந்த வரிக்கான விளக்கம் கீழே கொடுத்துளேன்
சுட்டிக்காட்டியெமைக்கு நன்றி

Unknown said...

ஹரிஸ் said...

கடைசி பத்தி தகவல் உண்மையா நண்பா..பயமாயிருக்கு.


உண்மைதான் என்று என் மருத்துவ பிரதிநிதி நண்பர் கூறுகிறார்

Unknown said...

philosophy prabhakaran said...

திடீர்னு சீரியசான டாபிக்கை எடுத்திருக்கிறீர்கள்... என்ன ஆச்சு...?

அந்த நர்ஸ் ஊசி போட்டது இன்னும் வலிக்குது அதுனாலாதான் இந்த பதிவு

Unknown said...

karthikkumar said...

திடீர்னு சீரியசான டாபிக்கை எடுத்திருக்கிறீர்கள்... என்ன ஆச்சு//
athe davututhaan enakkum


இப்ப டவுட் கிளியர் ஆச்சா

Unknown said...

karthikkumar said...

nice post


நன்றி பங்காளி

THOPPITHOPPI said...

மருத்துவம் என்ற பெயரில் நடக்கும் குற்றங்களை அழகாக சொல்லி இருக்கீங்க. உயிருடன் விளையாடும் இந்த மருத்துவர் மற்றும் இந்த நர்ஸ்களின்மீது ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது.

THOPPITHOPPI said...

ப்ளாக் டெம்ப்ளட் வெள்ளை நிறத்தில் அருமையா இருக்கு

Unknown said...

THOPPITHOPPI said...

மருத்துவம் என்ற பெயரில் நடக்கும் குற்றங்களை அழகாக சொல்லி இருக்கீங்க. உயிருடன் விளையாடும் இந்த மருத்துவர் மற்றும் இந்த நர்ஸ்களின்மீது ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தொப்பி தொப்பி அவர்களே

சாமக்கோடங்கி said...

கலி முற்றி விட்டது...

எல்லாம் சீக்கிரம் முடிஞ்ச வரைக்கும் அக்கிரமங்களைப் பண்ணுங்கப்பா.. மொத்தமா போய்ச சேரலாம்...

Unknown said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாமகோடாங்கி அவர்களே (இவரு என்னைய திட்றாரா இல்ல பொதுவா சொல்றாரா ஒன்னும் புரியலையே )

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

உபயோகமான பதிவு. இதுபோல் பல நற்பதிவுகளை எதிர்பார்க்கிறேன் மணி. இப்படிக்கு nanbendaa.blogspot.com and madrasbhavan.blogspot.com

Unknown said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமார்

போளூர் தயாநிதி said...

paratugal nanbare nalla seythiyay thuninthu pathivu seythu ulleergal parattugal nandri
polurdhayanithi

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena