அப்போது நான் 10 ம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன் .அன்று வழக்கம் போல் ஸ்கூலுக்கு சென்று கொண்டிருந்தேன் .அது ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளி .பள்ளியின் உள்ளே செல்கிறேன் .
" டேய் மாப்ளே என்னடா வண்டில வந்துருக்க " நவீன்
"அண்ணே வண்டி டா ஊருக்கு போய்ட்டான் அதன் கொஞ்சம் கெத்தா இருக்கட்டும்னு வண்டில வந்தேன் "
இன்னொரு நண்பன் விஜய் வருகிறான்
"என்னடா டெய்லி லேட்டா வர்ற அந்த மாநகராட்சி ஸ்கூல் பொண்ண விரட்டிக்கிட்டு போனியாக்கும் "
"டேய் இவன் வேஸ்ட்ரா இவானவுது அந்த பிள்ளையை கரெக்ட் பண்றதாவுது " நவீன்
"டேய் மணி அனிதா போறடா "
"ஏய் அனிதா "
கூபிடுரோம்ல ஒம்பாட்டுக்கு போரவ சரி என்ன சாப்பிட வச்சிருக்கிரவ"
"அதெல்லாம் கொடுக்க முடியாது "அனிதா
"என்னது குடுக்க முடியாதா நேத்து ஓம் பேக்ல பாத்த மேட்டர ஸ்கூல் புல்லா பரப்பி விட்ருவேன் "
கோபமாக என்னிடம் டிபன் பாக்சை குடுத்தாள்
"இன்னிக்கும் அதே வறட்டு சப்பாத்தி தான சரி நி போ நாங்க சாப்பிட்டு கிளாஸ்ல டிபன் வந்து குடுக்கிறோம் "
"என்னடா அது பேக்ல பாத்த " நவீன்
"என்னடா விஜய் சொல்லிடுவோம "
"வேணாம்டா இவன் ஊரெல்லாம் பரப்பி விட்ருவான் "விஜய்
"சும்மா சொல்லுங்கடா "நவீன்
"டேய் அதாண்டா அந்த பொம்பளைங்க சமாச்சாரம்"விஜய்
"ஒ அதுவா "நவீன்
"சரிஇன்னிக்கு முத பிரியட் யாரு "
"அந்த மூக்கு நோண்டி வாத்திடா "விஜய்
"அந்தாளு பொண்டாட்டி ஓடிபோனதுக்கு நம்ம உயிரை வாங்ராண்டா "
"ஏன்டா அந்தாளு பொண்டாட்டி ஓடி போச்சு "விஜய்
"ம்ம் இந்த ஆளு தெனமும் நைட் மூக்க மட்டுமே நோண்டிட்டு இருந்திருக்கான் அதான் ஓடிபோயடுச்சு "
கூட்டாக சிரித்தோம் .கிளாஸ் வந்தது உள்ளே சென்றோம்
இங்கிலீஷ் மாஸ்டர் உள்ளே வந்தார்
boys and girls
next week annual cum public exam ஸ்டார்ட் ஆகா போகுது நல்ல பிரிப்பர் பண்ணீட்டிருக்கீங்களா"
கோரசாக எல்லோரும் எஸ் சார் என்றோம்
"உங்க எல்லோருக்கும் இன்னொரு அனௌன்ஸ் மென்ட் வந்திருக்கு "
"பக்கத்தில இருக்கிற அருள் மலர் கான்வென்ட்தான் உங்க எல்லாத்துக்கும் சென்ட்ரா போட்ருக்கு "
"என்னடா அங்க போட்ருக்காயிங்க"
"டேய் அங்கதாண்டா ஓம் முன்னால் டைவா படிக்குது "விஜய்
"யாருடா "நவீன்
"டேய் எய்த் ஸ்டான்டர்ட்ல படிச்சுச்சுள்ள அதாண்டா ரம்யா "விஜய்
"ஓ அவளா அவ அங்கையா படிக்கிறா அவ அப்பயே ஆளு கும்முன்னு இருப்பா எப்படியாவது கரெக்ட் பண்ணிடனும் இந்த அனிதா படியமாட்டா "
"ஆமாட இந்த பப்ளிக் எக்சாம்ல பாஸ் பண்ணிடுவியா "நவீன்
"அதுனால என்ன நாம ப்ரின்சி கிட்ட காச குடுத்தபோதும் பேப்பர சேஸ் பண்ணி பாஸ் பண்ணி விட்ருவான் "
"நீ பண்ணுவ நாங்கலாம் படிச்சாதான் பாஸ் பண்ண முடியும் "நவீன்
"டேய் அழுகாத டா நா இருக்கேன்ல நா பாத்துக்கிறேன் "
பப்ளிக் எக்ஸாம் தொடங்கியது அருள் மலர் கான்வென்ட்
"டேய் மாப்ள என்னைய அந்த கடேசில தூக்கி போட்டாங்கே டா நீ எங்கடா "நவீன்
"டேய் அதுகெடக்கட்டும்ட எங்கடா அவளா காணோம் "
"டேய் அப்படியே மெதுவா திரும்பி பாரு படில வந்துட்டு இருக்கறா பாரு "விஜய்
நான் மெதுவாக திரும்பி பார்த்தேன் முன்னைக்கு இப்போது கொஞ்சம் பெருத்திருந்தாள்
நான் அவளிடம் நேராக சென்று
"ஹாய் "என்றேன்
அவள் என்னை யாரென்று தெரியாத மாதிரி பார்த்தாள்
"ஹேய் ரம்யா என்னை ஞாபகமில்லையா "
" ஹேய் மணி நீயா இப்ப மீசை வச்சு பெரியாளு மாதிரி இருக்கியா அதான் அடையாளம் தெரியல சரி எங்க ஸ்கூல்ல என்ன பண்ற "ரம்யா
"இங்க தான் எக்ஸாம் செண்டர் "
"ஒ அப்படியா எக்ஸாம் லாம் எப்படி பிரிப்பர் பன்னிரிக்க "ரம்யா
"அது பண்ணீருக்கேன் "
" ஏய் ரம்யா இப்ப முன்ன விட நீ ரொம்ப அழகா இருக்க "
"ம்ம் அப்படியா நா அழகா இருக்கென இல்லியா லாம் எக்ஸாம் ல கேட்டுகிட்டு இருக்க மாட்டாங்க ஒழுங்கா எக்ஸாம் எழுதி பாஸ் பண்ற வழிய பாரு "
"என்ன டா மாமா கிளி சிக்காது போல "நவீன்
"டேய் பொண்ணுங்க எப்பவுமே ஆரம்பத்துல்ல இப்படிதாண்டா பிகு பன்னுவாலுக பாத்துக்குவோம் "
எக்ஸாம் பெல் அடித்தது எல்லோரும் எக்ஸாம் ஹாலுக்கு சென்றோம்
"ரம்யா "
"என்ன "
"நா ஸ்ட்ரைட்டாவே விசயத்துக்கு வரேன் நா உன்னைய லவ் பண்றேன் I LOVE YOU "
"இந்த மாதிரில்லாம் என்கிட்டே பேசாத இதன் உனக்கு லாஸ்ட் வார்னிங் இனிமே இந்த மாதிரி டார்ச்சர் பண்ண எங்க ஸ்கூல்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் "ரம்யா
இரண்டு நாள் ஆனது
"டே நாள களிச்சோட எக்ஸாம் முடியுது அவ என்னடா சொல்றா "விஜய்
"இன்னைக்கு எக்ஸாம் முடியட்டும் "
எக்ஸாம் முடிந்ததது
"டேய் சைக்கிள் எடுற அவ பின்னாடிய போவோம் "
"போயி "நவீன்
"டேய் வாடா தம்மு வாங்கி குடுக்கிறேன் கூட வர்ற ஜெயசங்கரியை வேணும்னா நீ கரெக்ட் பண்ணுடா "
"டேய் என்னக்குனு ஒரு டேஸ்டே இல்லேன்னு நெனச்சிகிட்டியா அதெல்லாம் போய் எவனவுது பாப்பானாடா "நவீன்
"சரி சரி வா அவளுக கெளம்பீட்டாலுக பாரு "
பின் புறமாக சென்றோம் திடிரென்று ரம்யா சைக்கிளை நிறுத்தினாள்
"எதுக்கு ஏன் பின்னாடியே வர்றீங்க " ரம்யா கோபமாக கேட்டாள்
"நீதான் ஓகே சொல்ல மாட்டேன்கிறேல அதான் "
"அதுக்கு இப்படி பின்னாடியே வந்தா ஓகே சொல்லீடுவேனா "
"ஏன் என்னைய உனக்கு புடிக்கைலையா "
"சரி நாளைக்கு எங்க வீட்டுக்கு வா யாரும் இருக்கமாட்டாங்க "போய்விட்டாள்
"டேய் மாப்ள சிக்கீடுச்சுபோல தம்ம மட்டும் வாங்கி கொடுத்து டென்சன் ஆக்காத ஒழுங்கா பீர் வாங்கி குடு "
"சரி வா போவோம் "
அடுத்த நாள்
சுசுகி சமுராய்யில் ஜம்பமாக சென்றேன் அவளது வீட்டின் முன் நிறுத்தி ஹாரன் அடித்தேன் வெளியில் வந்தாள்
கேட்டை திறந்து என்னை உள்ளே அழைத்தாள் அவள் வீட்டு நாய் என்னை பார்த்து குரைத்தது.வீட்டில் யாரும் இல்லையா என்றேன் யாரும் இல்லை என்றாள்.
சோபாவில் அமர சொன்னாள் .அமர்ந்தேன் .
"அப்பறம் என்ன சாப்பிடுற "ரம்யா
" ம்ம் bournvita இருக்கா"
மாடி படியில் இருந்து யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்டது .
"யாரும்மா இது "
"என் கிளாஸ் மேட ப்பா"
"உன் பேரென்னப்பா "
"ம ம ம மணிவண்ணன் அங்கிள் " என் கால்கள் லேசாக நடுங்கியது
"சரி நா வரேம்மா தம்பிக்கு ஏதாவுது சாப்பிட குடு "
"எங்க அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர்" ரம்யா
"வீட்ல யாரும் இல்லைன்னு சொன்னியே "
"ஆமா சொன்னேன் இங்க பாரு எனக்கு அம்மா கிடையாது போன வருசத்தான் இறந்தாங்க .அவுங்களோட ஆசை நா எப்படியவுது படிச்சு நல்ல பெரிய டாக்டர் ஆகணும்க்ரதுதான் .எங்கம்மா ஆசை தான் என் ஆசையும் .உன்ன மாதிரி பொறம்போக்கு எல்லாம் என்னால லவ் பண்ண முடியாது .என்ன புரிஞ்சுச்சா" ரம்யா
"இல்லை ரம்யா என்ன சொல்ல வர்றேனா "
"பொறம்போக்குனு திட்டியும் உனக்கு புத்திவர்லேல அண்ணா"என்றாள்
கடா மாடு மாதிரி ஒருத்தர் உள்ளேருந்து வந்தார்
"இவருதான் எங்க அண்ணா ரமேஷ் மிலிடரிலருந்து லீவுல வந்திருக்கார் "
"அண்ணா இவன் என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கறான் "என்றாள்
வந்தார் என் சட்டையை பிடித்து கொத்தாக தூக்கி கன்னத்தில் மாறிமாறி ஐந்து முறை அடித்தார் .எனக்கு தலை சுற்றுவது போல் இருந்தது ரம்யாவும் அவள் அண்ணனும் எனக்கு மங்கலாக தெரிந்தனர். என் வலது கையை தூக்கினேன் கையோடு சேர்ந்து ஐந்து கை வந்த மாதிரி இருந்தது .ஐந்து நிமிடத்திற்கு பிறகு தெளிந்தேன் .என்னை வெளியில் போக சொன்னாள் .வெளியில் வந்தேன் நாய் குரைத்தது .நல்ல வேளை நாயை விட்டு கடிக்கவிடவில்லை என்று சந்தோசப்பட்டு தலையை தொங்க போட்டு கொண்டு வெளியில் வந்தேன்
===================================================================================
இன்று :
நேற்று பணி நிமித்தமாக வெளியூர் சென்று ஊர் திரும்பி கொண்டிருந்தேன் பஸ்ஸில் இடதுஒரத்தில் அமர்ந்திருந்தேன் .
"டேய் மணி அந்த மாமா பக்கத்துல்ல இடமிருக்கு பாரு அங்க உக்காரு "என்று குரல் கேட்க்க நிமிர்ந்து பார்த்தேன்
"அம்மா நா ஜன்னல் ஓரத்துலதான் உக்காருவேன் "
கையில் ஒரு சிறுவன் இடுப்பில் ஒரு பெண் குழந்தையுடன் ரம்யா நின்றுகொண்டிருந்தாள்
நான் எழுந்தேன்
"நீங்க உக்காருங்க "என்றேன்
"இல்லை வேணாம் நீங்களே உக்காருங்க "
சிறுவன் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துவிட்டான்
"சரி அப்படினா குழந்தையாவது குடுங்க " என்றேன் அந்த பெண் குழந்தை அப்படியே அவள் சாயலில் இருந்தது
அவ்வப்போது என் கண்களும் அவள் கண்களும் சந்தித்து கொண்டன
|
24 கருத்துகள்:
அச்சச்சோ!
நல்லா எழுதியிருக்கீங்க!
"பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே..." பாடல் சத்தம் கேட்கிறது
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எஸ்.கே அவர்களே
83
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமார் அவர்களே
பகிர்ந்துக்கொண்ட உங்க அனுபவம்...ம்ம், நல்லா எழுதி இருக்கிங்க!
@ priya
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Trustworthiness:
ரைட்டு...
நல்லாருக்கு தல..
தொடருங்கள்...
இமேஜ் எல்லாம் பார்க்காமல் வெளிப்படையாக எழுதி இருக்கிறீர்கள்...
@ஹரிஸ்
நன்றி தல
@பிரபா
இமேஜ் எல்லாம் எனக்கு கிடையாதுங்க நா ரெம்ப சின்ன பையன் .நன்றி பிரபா
ezhunga parattugal
polurshayanithi
இமேஜ் எல்லாம் பார்க்காமல் வெளிப்படையாக எழுதி இருக்கிறீர்கள்..///
பசங்களுக்கு ஏதுங்க இமேஜெல்லாம்.
நல்லா எழுதி இருக்கீங்க பங்கு
கொஞ்சம் லேட்டாயிருச்சு
@ polurdhayanithi
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
karthikkumar said...
இமேஜ் எல்லாம் பார்க்காமல் வெளிப்படையாக எழுதி இருக்கிறீர்கள்..///
பசங்களுக்கு ஏதுங்க இமேஜெல்லாம்.
கரெக்ட்டா சொல்லீட்டீங்க பங்காளி
@karthikumar
லேட்டான என்ன பங்காளி நீங்க வந்த மட்டும் போதும்
இதுல "இன்று " மட்டுமே உண்மையான அனுபவம் "அன்று " இல் என்னுடைய அனுபவமும் கொஞ்சம் கற்பனையும் கலந்துள்ளது
அருமை..
இன்னும் கொஞ்சம் பெரிய எழுத்தா போடுங்களேன்..
பாரத்... பாரதி... said...
அருமை..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
பாரத்... பாரதி... said...
இன்னும் கொஞ்சம் பெரிய எழுத்தா போடுங்களேன்..
நீங்க சொன்ன மாதிரியே செய்துவிட்டேன்
சின்ன வயசில ரொம்ப சேட்டகாரான இருந்துருப்பீங்க போலேயே
கத்துக்குட்டி said...
சின்ன வயசில ரொம்ப சேட்டகாரான இருந்துருப்பீங்க போலேயே
ஹி ஹி ஹி கொஞ்சம்
Post a Comment