வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

13.1.11

எனது சைக்கிளும் டாக்டர் விஜய்யும்

                             கி.பி 1996  ஆம் வருடம் .உலக சரித்திரத்தில்  ஒரு பொன் நாள் .பள்ளிகளில் ஆண்டு பரிட்ச்சை முடிந்து  விளையாடி கொண்டிருந்த எனக்கு ஒரு சோதனை நண்பன் வடிவில் வந்தது .

டே இவனுக்கு சைக்கிள் இன்னும் ஓட்டத்தெரியாதுடா இதுல இவரு ஏழாப்பு வேற போக போறாரு

வெங்குண்டேன் வேங்கையாய் . முடிவெடுத்தேன் 

அச்சோதனைகளில் வரும் வேதனைகளை துச்சமென கருதி சாதனைகளாக்க சபதமிட்டேன்

இன்னும் இரண்டே நாட்களில் சைக்கிள் ஒட்டி காட்டுவேன்  என்று

முயற்சி திருவினையாக்கும் என்ற அய்யன் திருவள்ளுவரின்  குறளுக்கிணங்க முயற்சியை  மூச்சாய் சுவாசித்தேன்

பிறந்த குழந்தையை அந்த சைக்கிளில்  உட்க்கார வைத்தால்  கால் தரையை தொடும் . மூன்றாம் வகுப்பு படித்த என் தம்பியை அழைத்து

டே கெட்டியா  புடுச்சுக்கோடா அண்ணே கீழ விலுந்துடுவேண்டா

இரண்டே நாளில் ஓட்டி காட்டினேன் . அந்த இரண்டு நாட்களில் எனக்குதான் எவ்வளவு சோதனைகள் அப்பப்பா 

சைக்கிலோடு தெருவோர  சாக்கடையில் விழுந்தேன் .மூழ்கினேன்

அவசரத்தில் முன் பிரேக்கை பிடித்து முன் மண்டையில் காயம் ஆக்கி கொண்டேன்

இந்தளவிற்கு சோதனைகளை சந்தித்த நான் .என் தந்தையிடம் அழுது புலம்பி

இனிமேல் ஸ்கூலுக்கு சைக்கிள் தான் போவேன்

வாங்கி குடுத்தார் .கேப்டன் சைக்கிள் ( அவரு சைக்கிள் இல்லைங்க இது சைக்கிள் கம்பெனி பேரு )

 பாவையர்கள்  கூட்டமாக நடந்து வரும் போது அந்த கூட்டத்திற்குள் மணி அடித்த வாரு
சென்று அவர்களை விலக்குவேன்

எதுத்தார் போல் வரும் பெண்ணின் சைக்கிளை   இடிப்பது போல் சென்று விலகி மிரட்டுவேன்

அப்படித்தான் ஒரு நாள் ஒரு பெண்ணை சைக்கிளில் துரத்தி சென்ற பொழுது அங்கே சிறுகல் வில்லனாக முளைத்து எனது சைக்கிள் டயரை இடறி விட .அது அப்படியே  ஓரமாக நின்ற ஒரு பெண்மணியை மோத நான் ரோட்டில் விழ விட்டிற்குள் இருந்து  ஒருவர்  கட்டை எடுத்து கொண்டு என்னை அடிக்க ஓடிவர

' தல 'யின் படமான தீனா படத்தை முதல் காட்சி பார்ப்பதற்காக சென்ற பொழுது .பெட்டி வர சிறிது தாமதம் ஆகும் என தெரியவர .தியேட்டரில் உள்ள கண்ணாடியை உடைப்பதற்கு ஐந்து கல்கள் பறந்தன .அதில் ஒன்று   நான் விட்டெறிந்த கல் .ஆனால் ஒரு கல்லோ பாதுகாப்பிற்காக வந்த போலிசின் மண்டையை உடைத்தது . இவை எல்லாவற்றையையும் மேன் மாடத்திலிருந்து பார்த்து கொண்டிருந்த தியேட்டர் ஊழியர் ஒருவர் என்னை நோக்கி கை காட்ட .வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் சைக்கிளில் சீறி தப்பித்தேன் (சிக்கிருந்தா செதச்சிருப்பாய்ங்களே )

அப்படி பட்ட வரலாற்று சிறப்பு மிக்க எனது சைக்கிள் .சரியாக 2001  நவம்பர் 15  ஆம் தேதி தியட்டேருக்கு வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்று டிக்கெட் எடுத்து விட்டு வந்து பார்க்கிறேன்

சைக்கிள் நின்று கொண்டிருந்தது

ஆனால் . என் சைக்கிள் மாதிரியே உள்ள வேறொரு சைக்கிள் . என் சைக்கிள் சாவியை போட்டு பார்த்தேன் .சேர்ந்தது . எவரோ மாற்றி எடுத்து சென்று விட்டார் போல என்று காத்திருந்தேன் .சரி வேறு பக்கம் சென்று தேடி  பார்ப்போம் என்று போனேன் .தேடினேன் .கிடைக்கவில்லை .மீண்டும் அதே இடத்திற்கு வந்தேன்

அந்த சைக்கிளையும்  காணவில்லை .பிறகென்ன செய்ய டிக்கெட் எடுத்த மொக்க படத்திற்கே சென்றேன்

அந்த படம்  இளைய தளபதி நடித்த ஷாஜகான் .சைக்கிள் தொலைந்து போன தலைவலியை விட படம் பார்த்த தலைவலி அதிகமாக இருந்தது

சைக்கிள் போச்சே

47 கருத்துகள்:

karthikkumar said...

ஏகப்பட்ட குறும்புத்தனம் செஞ்சிருக்கீங்க போல.. நீங்க சைக்கிள் ஓட்ற மாதிரி கடைசியா ஒரு ஸ்டில் போட்ருக்கீங்க பாருங்க சூப்பருங்க

ஆனந்தி.. said...

ஹ ஹ...செம பீலிங்க்ஸ் ஆப் இந்தியா தான்...என்ன சகோ...இவ்வளவு சேட்டை பண்ணிருக்கிங்களா?? நல்லவேளை..எந்த புண்ணியவானோ சைக்கிளை திருடிட்டு போனான்...:)) அப்புறம் வீட்டில் புதுசு வாங்கி கொடுத்தாங்களா இல்லையா...ஆனாலும் தலைப்பை சரியா கடைசியில் கொண்டு வந்திங்க பாருங்க...நீங்க தான் சகோ...மதுரக்காரன் னு நிருபிச்சிட்டிங்க...
ஹாப்பி பொங்கல் சகோ...(ஊருக்கு கிளம்பிட்டு இருக்கோம் பொங்கல் கொண்டாட.....)

pichaikaaran said...

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரையா ?

Unknown said...

சோதனைகளை, வேதனைகளை, சாக்கடையில் மூழ்கி சைக்கிள் பயின்ற அண்ணலே நீ வாழ்க..

Unknown said...

வீட்டுக்கு போனப்பறம் வாங்குன உதைய மட்டும் சொல்ல மாட்டீங்களே :-)

Unknown said...

கலக்கிறீங்களே நண்பா!
எல்லா தேசத்திலையும் சாஜகானை ஏதோ சோகத்தோடதான் பாத்திருக்காங்க போலிருக்கு!

Anonymous said...

அந்த படம் இளைய தளபதி நடித்த ஷாஜகான் .சைக்கிள் தொலைந்து போன தலைவலியை விட படம் பார்த்த தலைவலி அதிகமாக இருந்தது //
அப்படி சொல்லு மச்சி நச்சுன்னு

அஞ்சா சிங்கம் said...

பரவாயில்ல பாஸ் உங்களுக்காக ஸ்பெசல் சைக்கிள் நம்ம தளத்துல இருக்கு .
முதல் வடை நீங்க தான் வாங்கிருகீங்க ...
அதனால உங்களுக்கு இலவச பைக் குடுக்கிறோம் .................
http://anjaasingam.blogspot.com/2011/01/blog-post_13.html

Unknown said...

எனக்கு ஒரே அழுவாச்சி வந்துடுச்சி!?

சைக்கிள் தொலைஞ்சதுக்கு இல்லைங்கோ

- அந்த பாவம் கொடூரன் சாரி சாஜகான் படத்த பத்தி நெனச்சி பாத்தேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆத்தீ..தியேட்டர்ல போயி கல்லு வீசி இருக்கீங்க.....? ம்ம்ம்ம் அப்போ கொஞ்சம் பாத்துதான் கமெண்ட்டும் போடனும் போல....!

Philosophy Prabhakaran said...

முதலில் பேருந்து பயனத்தில்ன்னு தலைப்பு பார்த்தா மாதிரி இருந்துச்சு.... மாத்தீட்டீங்களா....

Philosophy Prabhakaran said...

// பாவையர்கள் கூட்டமாக நடந்து வரும் போது அந்த கூட்டத்திற்குள் மணி அடித்த வாரு
சென்று அவர்களை விலக்குவேன் //

உங்களை நீங்களே அடிச்சுப்பீங்களா...நீங்க மட்டும்தான் மொக்கை போடுவீங்களா நானும் போடுவேன்...

Philosophy Prabhakaran said...

// சைக்கிள் தொலைந்து போன தலைவலியை விட படம் பார்த்த தலைவலி அதிகமாக இருந்தது //

இந்த டச் தான் சூப்பர்...

Philosophy Prabhakaran said...

சில சமயம் டோக்கன் போட மறந்துட்டா தியேட்டர் காரனே சைக்கிளை ஆட்டையை போட்டுடுவான்...

Sivakumar said...

தலைவா..மணி, தியேட்டர்ல நீங்க கல் அடிச்சி கவுன்சிலர் மண்டை உடைஞ்சதே....இந்த முறை அவர் ஆளும் கட்சில இருக்கார். உங்க நம்பர் சொல்லுங்க..பேசணுமாம்.

THOPPITHOPPI said...

இதுக்கும் டாக்ட்டரா

Madurai pandi said...

இந்த பதிவு என் சைக்கிளை நியபகப்படுதிருச்சுப்பா ... முழு மதுரையையும் என் சைக்கிள்லையே சுத்தி வந்துருக்கேன்... அதெல்லாம் ஒரு காலம்...
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Unknown said...

@karthikkumar


பங்காளி அது நான் இல்ல கூகிள்ல இமேஜ் ல karthikkumar in cycle தேடினேன் இந்த படம்தான் வந்துச்சு

Unknown said...

@ஆனந்தி..


என் சைக்கிள் தொலைந்ததில் உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா . வேற சைக்கிள் வாங்கி குடுக்கிறேன்னு அப்பா சொன்னாரு நாந்தான் வேண்டாம்னு வண்டி தான் வேணும்னு கேட்டேன் .அதுக்கு எங்கப்பா நீ இன்னொருதடவ சைக்கிள் தொலைத்தால் கூட இன்னொரு சைக்கிள் வாங்கி தரமுடியும் .ஆனா வண்டி தொலைத்தால் வாங்கி தரமுடியாதுடா மகனே என்று கூறிவிட்டார்

Unknown said...

@பார்வையாளன்

எங்க இந்த பாட்டுக்கும் கேப்டனுக்கும் தாங்க சம்பந்தம் இருக்கு .கேப்டன் சைக்கிலுக்கு இல்லைங்க .நீங்க மொட்டை தலைக்கும் மொலன்காலுக்கும் முடிச்சு போடுற ஆளா இருப்பீங்க போலேயே

Unknown said...

@பாரத்... பாரதி...


கொஞ்சம் டவுட் தான் இருக்கு ரொம்ப பாராட்டுரீங்களே

Unknown said...

@இரவு வானம்

என்ன நண்பா எல்லாத்தையுமா வெளிய சொல்லுவாங்க

Unknown said...

@ஜீ...


வாங்க ஜி நானே சைக்கிள தொலைச்சிட்டு கலங்கி போய் நிக்கிறேன் .கலக்குறேன் சொல்றீங்களே

ஒரு வேளை நீங்களும் சைக்கிள தொலைச்சிட்டு ஷாஜஹான் படம் பார்த்தீங்களோ

Unknown said...

@ஆர்.கே.சதீஷ்குமார்


//அப்படி சொல்லு மச்சி நச்சுன்னு//


ஆமானே உண்மைலே தலைவலினே

Unknown said...

@அஞ்சா சிங்கம்


எதுக்கு பழுக்கிரதுக்கா

Unknown said...

@விக்கி உலகம்


சேம் பீலிங்

Unknown said...

@பன்னிக்குட்டி ராம்சாமி


அண்ணே என்னனே அதுக்காக உங்களை போய் கல்லால அடிப்பேனா

Unknown said...

@Philosophy Prabhakaran

//முதலில் பேருந்து பயனத்தில்ன்னு தலைப்பு பார்த்தா மாதிரி இருந்துச்சு.... மாத்தீட்டீங்களா....//

ஆஹா இவருக்கு வேலை வெட்டியே கிடையாது போலேயே

Unknown said...

//உங்களை நீங்களே அடிச்சுப்பீங்களா...நீங்க மட்டும்தான் மொக்கை போடுவீங்களா நானும் போடுவேன்...///

அதான் உங்க பதிவ பார்த்தேனே உலக மொக்கடா சாமி

Unknown said...

@Philosophy Prabhakaran



இந்த டச் தான் சூப்பர்..


இந்த டச்சு சூப்பருக்கு நான்வீட்டுல ஏகப்பட்ட 'டிச்சு ' வாங்கினேன்

Unknown said...

@Philosophy Prabhakaran


எங்க ஊருலலாம் டிக்கெட் எடுத்துட்டுதான் சைக்கிள உள்ள போய் நிப்பாட்டி டோக்கன் வாங்குவோம்

ரஹீம் கஸ்ஸாலி said...

அந்த படம் இளைய தளபதி நடித்த ஷாஜகான் .சைக்கிள் தொலைந்து போன தலைவலியை விட படம் பார்த்த தலைவலி அதிகமாக இருந்தது////
இளைய தலைவலியா.....சே....தளபதிய விட மாட்டீங்க போல....

Unknown said...

@சிவகுமார்

ஏதோ உங்களை ஒரு தடவை கொஞ்சம் ஓவரா புகல்ந்துடேன் .அதுக்கு இப்படி ஒவ்வொரு தடவையும் கொலைவெறியோடு கமெண்ட் போடுவது நியாயமா .நான் பாவம் இல்லையா

Unknown said...

THOPPITHOPPI said...

இதுக்கும் டாக்ட்டரா


அவருதாங்க எல்லாருக்கும் ஊறுகாய்

Unknown said...

@Madurai pandi


அது ஒருகாலம்தான் ஆனா உங்க சைக்கிள் தொலைஞ்சிருக்கா .என் சைக்கிள் தொலஞ்சு போச்சே

Unknown said...

@ரஹீம் கஸாலி

இளைய தலைவலியா.....சே....தளபதிய விட மாட்டீங்க போல....///


நீங்க வேற அவரு படத்துக்கு போனாலதாங்க என் சைக்கிள் தொலஞ்சு போச்சு .அவர எப்படிங்க விட முடியும்

Anonymous said...

என்ன மணி, நீங்க உண்மையை கூட சொல்ல விட மாட்டறீங்க...I AM VERY UPSET!!

world said...

உன்னைய எவன் படம் பார்க்க சொன்னான் .உனக்கு தலைவலீ இருந்தா மாத்திரை போடு .

சி.பி.செந்தில்குமார் said...

maNi நீங்க நல்லவர் ஆச்சே, நீங்களூம் டாக்டரை கிண்டல் பண்றீங்க?

அப்புறம் அந்த எலும்புக்கூடு ஸ்டில் சூப்பர்

Unknown said...

@சிவகுமார்

விடமாட்டீங்க போலேயே .சரி சொல்லுங்க காசா பணமா ?

Unknown said...

world said...

உன்னைய எவன் படம் பார்க்க சொன்னான் .உனக்கு தலைவலீ இருந்தா மாத்திரை போடு .///


ஒருவேளை விசை ரசிகரா இருப்பாரோ

Unknown said...

@சி.பி.செந்தில்குமார்

அண்ணே நாஎன்ன அவர கிண்டலா பண்றேன் உண்மைலே அவரு படத்த பாக்க போனப்பதானே என் சைக்கிள் தொலைஞ்சுபோச்சு

Unknown said...

நிறைய குரும்பு பண்ணுவீங்க போல நண்பா.. ம்ம்ம்.. உங்க சைக்கிள் காணாமப்போயிடுச்சுங்கறதை என்னமா சொல்லியிருக்கீங்க..

ரசித்துப் படிச்சேன்.. பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா..

Unknown said...

@பதிவுலகில் பாபு

ரொம்ப குறும்புலாம் இல்ல நண்பா . நண்பர்கள் கூட்டமாகத்தான் இருக்கும் பொழுது கொஞ்சம் தைரியமாக ஆடுவோம்ல அதேதான் .

Sivakumar said...

சந்தோஷம் பொங்கும் பொங்கல் நாளாக அமையட்டும், மணி!!

cheena (சீனா) said...

அன்பின் மணி வண்ணன்

நல்லாவே இருந்திச்சி - இடுகை - படிக்க - ரசிக்க - ஆமா இருப்பது மதுரையா - தொடர்பு கொள்ளலாமே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா - மதுரை.

Unknown said...

cheena (சீனா)

அன்பு cheena (சீனா) அவர்களுக்கு

நான் இருப்பது மதுரைதான் . எனது செல் நம்பர் 9976027191 ,n.p.manivannan1984@gmail.com . உங்களது செல் நம்பர் அல்லது e.mail என்னுடைய செல் நம்பர்க்கு மெசேஜ்செய்யுங்கள் கண்டிப்பாக தொடர்புகொள்கிறேன்

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena