வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

10.2.11

மாநகர பேருந்தில்

                     அந்த சூழல் அவனுக்கு அற்ப்பமானதாய் இருந்தது .பேருந்தின் கடைசி முன் இருக்கைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான் .முகமறியா முகங்களின் முகரேகைகளை படித்து கொண்டிருந்தான் .அந்த பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது .ஒரு பள்ளி மாணவனாக இருக்க வேண்டும் ,ஏறி படிக்கட்டில் நின்று கொண்டான்
" அண்ணே இந்த பஸ் வாணி மஹால் போகுமா "

" எனக்கு தெரியாது " என்றான் அவன்
அவனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த பெரியவர் சற்று முன்னால் வந்து

" தம்பி இந்த பஸ் அதுக்கு முன்னால பாண்டி பஜார்ரோட கட்டாயிடுமே"
" ஐயையோ அப்படியா அங்க எறங்கி ரொம்ப தூரம் நடக்கணுமா சார் "
" இல்லப்பா பக்கந்தான் ......நீ என்ன பண்ற பாண்டி பஜாருல எறங்கி அப்படியே நெட்டுக்க நடந்தேனா ஒரு ப்ளை ஓவர் வரும் அந்த எடத்துலாதான் இருக்கு வாணிமஹால் "
" சரி சார் ,சரி சார் " என்று தலை ஆட்டினான்

பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது. பிறர் ஏறுவதற்காக படிகளில் இருந்து கீழிறங்கினான் அந்த பள்ளி மாணவன் .அப்படியே ஜன்னல் பக்கம் வந்து நின்று கொண்டான் , அவன் மூலமாக அந்த பெரியவரை அழைக்க வைத்தான் ,பெரியவர் அந்த மாணவனை ஜன்னல் வழியாக குனிந்து  நோக்கினார்

" பெருசு வர்ட்டா ,இங்க பக்கத்துல தான் எங்க வூடு அடுத்த ஸ்டாப்பிங்க்காக அஞ்சுரூவா குடுக்கனுமேனு பாத்தேன் ,அதான்........நாடகம் நல்லாருக்கா  " என்றவாறு திரும்பி  ஓடினான் ,பெரியவர் நிமிர்ந்து எல்லாரது முகத்தையும் பார்த்தார் ,சிலர்  பல்லை காட்டி கொண்டும் ,பல பேர் பல்லை மறைத்து கொண்டும் சிரித்து கொண்டனர் ,அவனாலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை ,கண்டக்டர் அமர்ந்தவாறு அப்படியே வாசல் வழியே தலையை நீட்டி
" ங்கோ......... பாடு நீ மட்டும் கையில கெடச்ச டாருதாண்டி மவனே "
இவன் நின்று கொண்டிருந்தஇடத்துக்கு  பக்கத்துக்கு இருக்கை காலியாகி விட்டிருந்தது,அமரலாம என்று நினைத்தான் , வேண்டாம் பிறகு பெண்மணிகள் வந்து ," இது லேடீஸ் சீட் " என்று எழுத்திரிக்க சொல்லுவார்கள் ,எதற்கு  நின்று கொண்டே வந்தான் ,மேல்புறம் கம்பிகளை பிடித்து கொண்டே வந்ததாலே என்னவோ அவனுக்கு கை வலித்தது ,கையை மாற்றி மாற்றி பிடித்து கொண்டான்


" excuse me "
அவன் திரும்பினான் ,அவள் இவன் விலகுவதற்காக நின்று கொண்டிருந்தாள் , இவன் விலக காலியாக இருக்கையை நிரப்பினாள் . அடர் கருப்பு ரசக்களியில்   வெளுத்த தேவதையாக தெரிந்தாள் ,அவ்வப்போது முன் புறம் விழுந்த சில முடிகற்றைகளை காதோரமாக ஒதுக்கி திருப்பி விட்டாள் ,இவன் சில நிமிடம் அவளையே பார்த்தவண்ணம் இருந்தான் ,வெகு எதேச்சையாக அவளும் அவனை அசுவாரசியத்தோடு பார்த்தாள் ,இவன் சட்டென்று திரும்பி கொண்டான் ,பேருந்து அடுத்தடுத்து நிறுத்தங்களில் நின்று நின்று சென்றது ,பின்புறத்தில் கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது
" பின்னாடி இருக்கரவுங்கலாம் டிக்கெட் வாங்குங்க " என்ற கண்டக்டரின் ஒலியை பேருந்தின் ஜன்னல் வழியாக நுழைந்த காற்று தள்ளி கொண்டு அனைவரது காதுகளிலும் சேர்த்தது
இவனுக்கு அருகில் ஒரு செம்பட்டை தலையன் நின்று கொண்டிருந்தான் ,அவனிடமிருந்து பாண் பராக் வாடை எரிச்சலை குடுத்தது இவனுக்கு, அந்த செம்பட்டை  தலையனுக்கு அருகில் ஒரு கனத்த சரீரத்துடன் ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தாள்

கொஞ்ச காற்றுவந்தையும் மனித கூட்டங்கள் நிரம்பியதால் காற்று கோபித்து கொண்டு சென்று விட்டததோ என்று நினைத்தான் அவன்  , வெக்கையினால் புழுக்கம் அதிகரித்தது  ,கண்டக்டர் நீண்ட விசில் ஊத பேருந்து ஒரு ஓரமாக அந்த பிரதான சாலையில் ஒதுங்கி நின்றது

" டிக்கெட் எடுக்காதவங்கலாம் டிக்கெட் எடுத்துக்கோங்க ,பாஸ் பன்னி விட்டாவுது எடுத்துகோங்க ,அப்பறம் செக்கிங் வந்தா என்னைய சொல்லகூடாது "  என்று கண்டக்டர் கூறியவுடன் தான் எடுத்து டிக்கெட் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டான்

" excume  me "
 இவன் திரும்பினான் , அவள் ஐம்பது ரூபாயை நீட்டி " ஓன்  தேனாம்பேட்  ப்ளீஸ் " இவனுக்கு அது புதியதாய் இருந்தது ஒரு பெண் அவனிடம் பேசி டிக்கெட் வாங்க சொல்வது .அந்த பணத்தை வாங்கினான் ,பாஸ் பண்ணு வதற்கு அந்த செம்பட்டை தலையணை அணுகலாம என்று நினைத்தான்  ,அவன் மறுத்து விட்டால் அசிங்கமாகி விடுமே என்று நினைத்தான்
இவனே கூட்டத்திற்குள்  முண்டியடித்து முன்னேறினான் ,கண்டக்டரிடம் ஐம்பது ரூபாயை நீட்டி " ஒரு தேனாம்பேட்டை " என்றான் 
" அஞ்சு ஓவா டிக்கெட்டுக்கு அம்பது ரூவாய நீட்டுற ,சில்லறையா குடுயா  "
" இல்ல னே "
" அதுக்கு நா என்ன பண்ண முடியும் " என்றவாறே டிக்கெட் கிழித்து குடுத்து " மிச்ச சில்லரைய    கொஞ்ச நேரம் கழிச்சு வந்து வாங்கிக்கோ "

இவன் திரும்பி வந்து அவளிடம் டிக்கெட்டை நீட்டினான் ,மெலிதாக புன்னைகத்தாள் .அந்த புன்னகையில் இளக்காரம் தெரிந்தது அவனுக்கு ,அப்பொழுதான் தோன்றியது நாம் வெகுவேகமாக வேலைசெய்துருக்கிறோம் என்று .டிக்கெட்டை  வாங்கி வைத்து கொண்டு   " பாலன்ஸ் " என்றாள்
" தர்றேன்னு சொல்லீர்க்காரு "
" ஐயையோ அடுத்த ஸ்டாப்பிங்ல   நா எறங்கனுமே " என்று அழகாக வாயை சுளித்தாள்
வேகமாக அவனது பர்சை எடுத்தான் ,அதில் ஐந்து ஆயிரம் ரூபாய்  தாள்களும் சில நூறு ரூபாய்களும் ,சில பத்துரூபாய் தாள்களும் இருந்தது
சரியாக நாப்பது ரூபாயும் ,ஒரு ஐந்து ரூபாய் காசையும் எடுத்து குடுத்தான்
" நா அவருக்கிட்ட வாங்கிக்கிறேன்  "என்றான்
" தாங்க்ஸ் " என்றாள் இவன் புன்னைகையோடு அமோதித்தான்
இவன் பக்கத்திலிருந்த செம்பட்டை தலையன் அருகினில் இருந்த பெண்மணியை இடித்திருப்பான் போல
" அப்பயே புடிச்சு நானும்  பாத்துகிட்டே இருக்கேன் இடிச்சு கிட்டே இருக்க ,கொஞ்சம் தள்ளி நில்லுயா  " என்றாள்
" அய்யே உன்னிய போய் எவன் இடிப்பான், பாட்டிக்கும் பாவனாக்கும் வித்தியாசம் தெர்யாத எனக்கு ,வந்துட்டா அங்க இருந்து பெருசா ஆட்டிக்கிட்டு " என்றான் செம்பட்டை தலையன்
இந்த சம்பவம் குறித்து  யாரும் எதுவும் உரைக்காதது அவனுக்கு வியப்பாய் இருந்தது .செம்பட்டை தலையனின் முரட்டு உருவம் காரணமாக இருக்கலாம் என்று நினைத்தான்.அப்போது  .அந்த ரசக்களி பெண்ணை பார்த்தான் ,அவளும் இவனை பார்த்தாள் ,பேருந்து நின்றது ,கண்டக்டர் " தேனாம்பேட்டைலாம் எறங்கிக்கோ " அவள் இவனை கடந்து படிகளில் இறங்கி சென்றாள் ,மறைந்தாள்

அந்த இருக்கையில் ஒரு கிழவி சென்று அமர்ந்து " வா ராசா ஒக்காரு சும்மா ஒக்காரு " என்றாள் .இவன் அந்த பெண் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தான் . அந்த ரசக்களி பெண் அமர்ந்திருந்த சூட்டை இவன் உணர்ந்தான் ,அப்படியே ஜன்னலை நோக்கினான் ,எதிர்த்த பிளாட் பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாள்ரசக்களி பெண் ,பேருந்து கிளம்பியது

தீடீரென்று தான் இன்னும் மிச்ச சில்லரை வாங்கவில்லை என்பது உரைத்தது அவனுக்கு  ,முன்னேறி  சென்று கண்டக்டரிடம் " மிச்ச்ச சில்லரை " என்றான்.  கண்டக்டர் சில வினாடிகள் இவனை உற்றுநோக்கி விட்டு "எவ்வளுவு தரனும் " என்றார்
" நாப்பத்தஞ்சு ரூபா " அவன் அந்த சில்லறையை வாங்கியபொழுது ஒரு ஐந்து ரூபாய் காயினை தவற விட்டான் ,அந்த கூட்டத்தினுள் விழுந்த காசை தேடிஎடுப்பதற்க்கு மிகவும் சிரம  பட்டான்  ,மீண்டும் அதே இடத்தில் அமரலாம் என்று வந்தான் ,வேறு ஒரு பெண்மணி அமர்ந்திருந்ததை  கண்டான்.

பேருந்து நிறுத்தத்தில் நின்றது ,அந்த செம்பட்டை தலையன் இறங்கி சென்றான் ,பேருந்து கிளம்பியது ,ஒவ்வொரு நிறுத்ததிலும் பேருந்து நின்று செல்ல கூட்டம் குறைய ஆரம்பித்தது ,நன்றாக காற்றும் வர ஆரம்பித்தது ,இவனுக்கு ஜன்னல் ஓர சீட் கிடைத்தது அங்கு சென்று அமர்ந்தான்

சிறிது நேரத்தில் " லாஸ்ட் எல்லாரும் எறங்குங்க " என்றார் கண்டக்டர்
எல்லோரும்  இறங்கினார்கள் .இவன் அந்த கனத்த பெண்மணியின்  பின்னாலே இறங்கினான் , அவன் இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இந்தியன் பாங்க் இருப்பதை கண்டான் .அம்மாவிற்கு பணம் அனுப்பி வெகு நாட்களாக ஆகிவிட்டதை உணர்த்தியது .வெகு இயல்பாக அவனது கைகள் பின் பாக்கெட்டிற்கு சென்றது ,ஆனால் பை கிழிந்து தொங்கியது ,சைடு பாக்கெட்டிற்குள் கைகளை விட்டு பார்த்தான் ,பிறகு சட்டை பாக்கெட்டிற்குள் விட்டு பார்த்தான் ,வெறும் நாற்ப்பது ரூபாயும் ஒரு ஐந்து ரூபாய் காயினும் வந்தது ,கண்களை மூடி திறந்தான் , பேருந்தினில் விழுந்த ஐந்து ருபாய் காயினை எடுப்பதற்கு குனிந்து நிமிர்ந்த போது பின் புறத்தில் அந்த செம்பட்டை தலையன் நின்று கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது




24 கருத்துகள்:

Anonymous said...

>>> மணி, உங்க சொந்த அனுபவமா??

ஐயையோ நான் தமிழன் said...

என்ன பாஸ் மாநகர பேருந்தில பறி குடுத்தது நீங்களா?.......

புனைவு சூப்பரா இருக்கு கற்பனைதானா இல்லை நிஜமா.......

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல முயற்சி தல.. கதையை இன்னும் கொஞ்சம் அடர்த்தி ஆக்கி இருக்கலாம்.. அதே மாதிரி நிறைய எழுத்துப் பிழைகள்.. கொஞ்சம் என்னன்னு பாருங்க..

பொன் மாலை பொழுது said...

கதையா ?? உண்மைசம்பவம் மாதிரிதான் இருக்கு. சென்னை பஸ்களில் சாதாரணமாக நிகழும் நிகழ்வுகள் .

சக்தி கல்வி மையம் said...

சொல்ல வந்த விசயத்தை தெளிவாகவும் ரத்தின சுருக்கமாகவும் சொல்லியிருக்கீங்க....

Unknown said...

கத மட்டுமில்ல இது நிஜமும் கூட ............

நல்ல வேல அறுத்தவன் பேக்கட்ட மட்டும் அறுத்தான்.......பின்னாடி எதுவும் கிழிக்கலயே......என்னா சென்னைல ஒரு முறை இப்படி பேக்கட்ட அடிச்சவன் கிழிச்சிட்டு போயிட்டான் என் நண்பன் தோல......ரொம்ப நாலு நண்பன் கஷ்டப்பட்டான்..........

பாரி தாண்டவமூர்த்தி said...

இது கதை மாதிரி இல்லையே..... சொந்த அனுபவம் மாதிரியே இருக்கே.... உண்மையிலே இது உங்க கதை தானே....

Anonymous said...

அனுபவமா தல?

மாணவன் said...

ரொம்ப சுவாரசியமா சொல்லியிருக்கீங்க சூப்பர் பாஸ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யதார்த்தமான சம்பவங்களா இருக்கே....? இன்னும் ஒரு கிளைகாக்ஸ் ட்விஸ்ட் வெச்சிருக்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கிளமாக்ஸ்

எஸ்.கே said...

உண்மையாலுமே ரொம்ப நல்லா இருந்தது! இது மாதிரி சம்பவங்கள் நடக்கிறதுதானே!

cheena (சீனா) said...

அன்பின் மணி - கதை நல்லாவே இருக்கு - நிகழ்வுகள் அழகாக விவரிக்கப்பட்டு உள்ளன. நடை இயல்பாகச் செல்கிறது. உட்கார்ந்த உடன் அவளின் சூட்டினை உணர்ந்தது வெகு இயல்பு. தொடர்க திறமையினை. வாழ்க வளமுடன்.

test said...

அருமை பாஸ்! அனுபவம் மாதிரியே இருக்கு! :-)

அஞ்சா சிங்கம் said...

நல்ல வேளை பணத்த பின் பாகெட்டுல வச்சிருந்தீங்க ஒரு வேளை முன் பாகெட்டுல வச்சிருந்தா?
ப்ளேடு படாத எடத்துல பட்டிருக்கும் நல்ல வேளை கேரெக்டர காப்பத்திடீங்க ...............

டக்கால்டி said...

Nalla irukkunga...

டக்கால்டி said...

antha ecchi thuppura dicchi vaayan thaan purse adichaannu solreengala?

ஆனந்தி.. said...

சகோ..உங்க சுயசரிதை மாதிரியே இருக்கே...விவரிக்கும் ஸ்டைல் நல்ல எதார்த்தமா இருக்கு சகோ...

Unknown said...

வருகைபுரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல

இதில் சில சம்பங்கள் தவிர்த்து முழுக்க முழுக்க கற்பனையே

pichaikaaran said...

realistic

Unknown said...

realistic //

thanks

Philosophy Prabhakaran said...

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்... பங்காளி சிவா கால் பண்ணி அளப்பரையை போட்டாராமே... அந்த அனுபவத்தை பத்தி ஒரு பதிவு போடுங்கப்பு...

MANO நாஞ்சில் மனோ said...

கலக்குற சந்த்ரு.....

Madurai pandi said...

இதுக்கு பதில் நீ ஆரம்பத்துலையே அந்த சீட் ல உட்கார்ந்து இருக்கலாம்.. :)

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena