வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

25.5.11

காட்டு தர்பார்-1

    
காட்டு  தர்பார் 
  ஓநாய் சேவகர்கள் முகமன் கூற சிங்க ராஜா தர்பாரை நோக்கி நடந்து வர ,மந்திரி நரி ,புலவர்கள் கரடி ,தளபதி சிறுத்தை என அவையோரில் உள்ள அனைவரும் எழுந்து நிற்க ,சிங்கராஜா தனது சிம்மாசனத்தில் அமர்கிறார் ,எல்லோரையும் அமரசொல்கிறார் ,

சிங்கராஜா : ம்ம்ம் மந்திரி அவர்களே 

மந்திரி நரி : மன்னர்மன்னா 



சிங்கராஜா : மாதம் மும்மாரி பொழிகிறதா 

மந்திரி நரி : ம்ம்ம் (பொழியிது பொழியிது ) 

சிங்கராஜா : என்ன சொல்கிறீர்கள் 

மந்திரி நரி :  பொழிகிறது மன்னா ,தங்கள் ஆட்சி அல்லவா 

சிங்கராஜா : ம்ம்ம் நிரம்ப சந்தோஷம் ,நிரம்ப சந்தோஷம் ....... ம்ம்ம் தர்பார் கூடியதற்கான காரணம் என்ன

மந்திரி நரி : தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு நம் காட்டில் நிறைய பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன 

சிங்கராஜா : அதற்க்கும் நமக்கும் என்ன சம்பந்தம் ,தமிழகத்தில்  இப்போது யார் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள் 

மந்திரி நரி : ஓயாமல் ஓய்வு எடுத்து கொண்டிருந்தவர் ஆட்சியை பிடித்திருக்கிறார் ,ஓயாமல்  தமிழக மக்களுக்காக உழைக்கிறேன் என்று 
 ஓயாமல் கூறிகொண்டிருந்தவரை தமிழக  மக்கள் இன்று ஓய்வெடுக்க வைத்திருக்கிறார்கள் 

சிங்கராஜா : அப்படியா ....காமெடி பீஸ் கடிவேலு என்ன ஆனார் 

மந்திரி நரி : அதற்குதான் நமக்கு கேப்டன் குஜைகாந்திடமிருந்து செய்தி வந்துள்ளது 

சிங்கராஜா : என்னவாம் 

மந்திரி நரி : பன்னிபோல் போல் வேடமிட்டு இங்கு பதிங்கிருக்கலாம் என்று செய்தி கூறுகிறது 

சிங்கராஜா : விசாரித்தீர்களா 

மந்திரி நரி : இரவோடு இரவாக தளபதியார் சிறுத்தை விசாரித்து விட்டார் மன்னா அப்படி ஏதுமில்லை 

சிங்கராஜா : அப்படியா பாவம் கைப்புள்ள ,சரி தமிழக முன்னாள் முதல்வரின் மகளை சிறையில் அடைத்து விட்டார்களாமே ,அப்படியா 

மந்திரி நரி : ஆமாம் மன்னா ,நேற்று கூட மகளை  சிறையில் சென்று சந்தித்து ,கலங்காதே கலைமகளே என்று ஆறுதல் கூறி வந்திருக்கிறார் ,அவர்கள் வம்சத்தில் உள்ள ஓவ்வொரு குடும்பமும் குடும்பம் குடும்பமாக சந்தித்து கொண்டிருக்கிறார்கள் 

சிங்கராஜா : கண்கள் பனித்தன இதயம் புளித்தன என்று தலைப்பு மாறி இருக்கிறது ,சரி இந்த பக்ட்ரம்  ஊழலை பற்றி என்ன பேசி கொள்கிறார்கள் தமிழக மக்கள் 

மந்திரி நரி : அதுவா மன்னா ,என்னதான் சி .பீ .ஐ  விசாரித்தாலும் பக்ட்ரம்  ஊழலில் கூசா அடித்த காசு  கவுண்டமணி வடக்குபட்டி ராமசாமியிடம் குடுத்த காசுபோல் ஊ ஊ ஊ ஊ என்று பேசி கொள்கிறார்கள் மன்னா 

சிங்கராஜா : ம்ம் தெளிவான மக்கள்தான் 

மந்திரி நரி : ஆமாம் மன்னா ,அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஐந்து வருடத்துக்கொருமுறை மாற்றி குத்துவது 

சிங்க ராஜா : வேறு என்ன செய்தி

மந்திரி நரி : தமிழக தேர்தல் தொடங்கியதிலிருந்தே நம் காட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை வந்துவிட்டது இப்போது இன்னும் அதிகமாகி விட்டது 

சிங்கராஜா : அப்படியா என் ஆட்சியிலா ,அப்படியென்ன பிரச்சனை 

மந்திரி நரி : ஆங்காங்கே குரங்குகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றன 

சிங்கராஜா : ஏன் 

மந்திரி நரி : குரங்குகளை எல்லாவற்றையும் மீதி மிருகங்கள் டாக்டர் குஜை ,எஸ் .எ .பொந்திரசேகர் என்று அழைக்கின்றனவாம் அதனால் மனமுடைந்த சில குரங்குகள் மருந்தை குடித்தும் ,தூக்கு போட்டும் தற்கொலை செய்துகொள்கின்றனவாம்

சிங்கராஜா : ஆஅ  என்ன செய்யலாம் ,இனி அப்படி கேலி பேசுபவர்களை சிறையில் அடையுங்கள் ,save the  monkey  என்று பிரச்சாரம் செய்யுங்கள் 

மந்திரி நரி : அப்படியே ஆகட்டும் மன்னா ,ஆனால் இன்னொரு பிரச்சனை வந்துள்ளது மன்னா 

சிங்கராஜா : என்ன 

மந்திரி நரி : பச்சோந்தி இனத்தலைவர் தங்களுக்கு ஒரு ஓலை அனுப்பி உள்ளார் 

சிங்கராஜா : ம்ம் படியுங்கள் 

மந்திரி நரி :பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா எடுக்க போகிறார்களாம் 
 அதற்க்கு தாங்கள்தான் தலைமை தாங்க வேண்டுமாம் 

சிங்கராஜா : அவர்தான் இப்போது ஆட்சியில் இல்லையே 

மந்திரி நரி : அவருக்கு இல்லை மன்னா டாக்டர் குஜைக்கு ,அதுவும் நீங்கள்தான் 
அவருக்கு பட்டம் கொடுக்க வேண்டுமாம் 

சிங்கராஜா : என்ன பட்டம் 

மந்திரி நரி : பச்சோந்தி பகலவன் 

சிங்கராஜா : ஐயகோ அவருக்கு அது சரியான பட்டம்தான் ,ஆனால்  நாம்  அப்படி கலந்து கொள்ளாவிட்டால் 

மந்திரி நரி :  அடுத்த ஆட்சிக்கு புலியை ஆட்சிகட்டிலில் ஏற்றுவதற்கு துணை போவார்களாம் 

சிங்கராஜா : ஆகா எப்படியெல்லாம் மிரட்டுகிறார்கள் ,அப்படி கலந்து கொண்டால் குரங்குகள் ஒட்டு சிதறுமே 

மந்திரி நரி : அவர்களை விட  இவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள் 

சிங்கராஜா : அப்படியா சரி கலந்து கொள்கிறேன் என்று ஓலை அனுப்பிவிடுங்கள் 

மந்திரி நரி : ஆகட்டும் மன்னா 

சிங்கராஜா : அரசவை கலையட்டும் மீண்டும் சந்திப்போம் ,ம்ம்ம் யாரங்கே அந்தப்புரத்தில் ராணிகளை தயாராக இருக்க சொல்லுங்கள்





20 கருத்துகள்:

Unknown said...

காட்டுத்தர்பார் ஒண்ணா??

Unknown said...

ரெண்டு எப்போ??

Unknown said...

மூணு அடுத்த நாளா??

Unknown said...

// அப்படியா ....காமெடி பீஸ் கடிவேலு என்ன ஆனார் //
ஹஹா

Unknown said...

விஜயகாந்த் பாவம் ஹிஹி

Unknown said...

//கவுண்டமணி வடக்குபட்டி ராமசாமியிடம்//
எது அங்கயும் ராமசாமியா??

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காட்டு தர்பார் களைகட்டுகிறது..
ம்.. தொடரட்டும்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

மணி...தர்பார் செமையா களை கட்டி இருக்குது.

test said...

கலக்குறப்பா மணி! :-)
ஆனா அங்கயும் டாகுடர் வந்துட்டாரே! :-)

Chitra said...

:-)))))))))

Unknown said...

:))))))))))

Philosophy Prabhakaran said...

செல்வினோட கான்செப்ட்டை சுட்டுவிட்டீர்கள் போலும்...

Unknown said...

டர்டர்டர்டர்டர்டர்!

போளூர் தயாநிதி said...

naan enna sollattum samiyov mmmmmmmmmmmmm thala ezuththu

சி.பி.செந்தில்குமார் said...

வம்பை சும்மாவே வாங்கிட்டீக. ஹா ஹா

பாலா said...

பாவம் குரங்குகள். அசிங்கமா திட்டி இருந்தா கூட தாங்கிக்கலாம். குஜைனு சொன்ன தற்கொல பண்ணிக்காம என்ன செய்யும்?

Anonymous said...

நீங்கள் அஜித் ரசிகர்னு தெரியும். அதுக்காக இப்படியா? விஜய்யை ரொம்ப நக்கல் அடிச்சி இருக்கீங்க.

நிரூபன் said...

தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு நம் காட்டில் நிறைய பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன//

அப்,ஷக்...பசக்...சிக்...டப்...

அருமையாக இருக்கிறது காமெடி கலாட்டா.

நிரூபன் said...

ஓயாமல் ஓய்வு எடுத்து கொண்டிருந்தவர் ஆட்சியை பிடித்திருக்கிறார் ,ஓயாமல் தமிழக மக்களுக்காக உழைக்கிறேன் என்று
ஓயாமல் கூறிகொண்டிருந்தவரை தமிழக மக்கள் இன்று ஓய்வெடுக்க வைத்திருக்கிறார்கள்//

இந்தக் குத்து குத்துறீங்களே,...

நிரூபன் said...

சம கால நரசியலை நற நற என்று நறுக்கியிருக்கிருக்கிறீர்கள். அருமை சகோ.

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena